- உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் எது?
ஆசியா
- ஆசியா உலகின் பரப்பளவில் எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது?
30%
- ஆசியா உலகின் மக்கள் தொகையில் எத்தனை சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது ?
60%
- ஆசியாவின் பெரும்பாலான நிலப்பரப்பு எந்த கோளத்தில் பரவியுள்ளது?
வட அரைக்கோளம்
- நாகரீகங்களின் தொட்டில்கள் என அழைக்கப்படுபவை ?
ஆற்றுப் பள்ளத்தாக்குகள்
- ஆசியாவின் அட்சப் பரவல் என்ன ?
10° 11′ தெற்கு அச்சத்தில் இருந்து 81° 12′ வடக்கு அட்சம்வரை
- ஆசியாவின் தீர்க்கப் பரவல் என்ன ?
26° 2′ கிழக்கு தீர்க்கம் முதவ் 169° 40′ மேற்கு தீர்க்கம் வரை
- ஆசியாவின் மொத்த பரப்பளவு என்ன ?
44 மில்லியன் கிலோமீட்டர்²
- ஆசியாவின் எல்லைகள் என்னென்ன?
வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், கிழக்கில் பசிபிக் பெருங்கடல் ,தெற்கில் இந்திய பெருங்கடல், மேற்கில் காகசஸ் மலைகள், செங்கடல் மத்தியதரைக்கடல் காஸ்பியன் கடல் மற்றும் யூரல் கருங்கடல்
- எந்த கால்வாய் ஆசியாவை ஆபிரிக்காவிடமிருந்து பிரிக்கின்றது?
சூயஸ் கால்வாய்
- எந்த நீர்ச்சந்தி ஆசியாவை வட அமெரிக்காவிலிருந்து பிரிக்கின்றது?
பேரிங் நீர்சந்தி
- ஆசியாவில் எத்தனை நாடுகள் நிலத்தால் சூழப்பட்டு உள்ளது?
12
- ஆசியாவில் எத்தனை நாடுகள் உள்ளன?
48 நாடுகள்
- ஆசியா நாடுகளின் நிலத்தோற்றம் மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?
கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா
- ஆசியாவின் இயற்கை அமைப்பினை எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், அவை என்னென்ன ?
ஐந்து பிரிவுகள் : வட க்ஷ தாழ்லங்கள் ,மத்திய உயர் நிலங்கள், தெற்கு பீடபூமிகள், பெரும் சமவெளிகள் ,தீவுக்கூட்டங்கள்
- ஆசியாவிலேயே மிகவும் பரந்து காணப்படும் தாழ்நிலம் எது?
சைபீரிய சமவெளி
- வட தாழ்நிலங்கள் எங்கு பரவி காணப்படுகிறது?
யூரல் மலைகளிலிருந்து கிழக்கே வெர்கோயான்ஸ்க் மலைத்தொடர் வரை
- மத்திய உயர் நிலங்கள் எதுவரை பரந்து காணப்படுகிறது?
துருக்கியிலிருந்து பேரிங் நீர்சந்தி வரை
- ஆசியாவில் எத்தனை மலை முடிச்சுகள் காணப்படுகின்றன?
இரண்டு: பாமீர் முடிச்சு, ஆர்மீனியன் முடிச்சு
- பாமீர் முடிச்சிலிருந்து பரவிக் காணப்படும் மலைத்தொடர்கள் என்னென்ன?
இந்துகுஷ் மலைத்தொடர்,சுலைமான் மலைத்தொடர், இமயமலை தொடர் மற்றும் டியான் ஷன் மலைத்தொடர்
- இந்துகுஷ் மலைத்தொடர் மேற்குப் பகுதியில் என்ன மலைத் தொடராக நீண்டு காணப்படுகிறது?
எல்பர்ஸ்
- சுலைமான் மலைத்தொடர் தென்மேற்குப் பகுதியில் என்ன மலைத் தொடராக நீண்டு காணப்படுகிறது?
ஜாக்ரோஸ்
- எல்பர்ஸ் மற்றும் ஜாக்ரோஸ் எந்த முடிச்சில் ஒன்றிணைகிறது?
ஆர்மீனியன் முடிச்சு
- எந்த மலைத்தொடர்கள் ஆர்மீனியன் முடிச்சிலிருந்து பரவிக் காணப்படுகின்றது?
தாரஸ் மற்றும் போன்டைன்
- ஆர்மீனியன் முடிச்சு பகுதிகளில் காணப்படும் முக்கிய மலைத்தொடர்கள் என்னென்ன?
பெரிய கிங்கன்,அல்டாய்,வெர்கோயான்ஸ்க்,அரக்கன்யோமா
- மலைத்தொடர்கள் கூடும்/ பிரியும் இடங்களுக்கு பெயர் என்ன ?
முடிச்சு
- உலகின் உயரமான மலைத் தொடர் எது?
இமயமலைத் தொடர்கள்
- உலகின்/ ஆசியாவின் உயர்ந்த சிகரம் எது?
எவரெஸ்ட் சிகரம்
- எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
8848மீ
- உலகின் தாழ்வான பகுதி எங்கு உள்ளது?
ஆசியாவின் சாக்கடல்
- இமயமலைத் தொடர்களில் காணப்படும் மலையிடை பீடபூமிகள் என்னென்ன?
அனடோலியா பீடபூமி (போன்டைன்-தாரஸ்மலை),ஈரான் பீடபூமி(எல்பர்ஸ்-ஜாக்ரோஸ்), திபெத்திய பீடபூமி (குன்லுன்-இமயமலை)
- உலகின் கூரை என அழைக்கப்படுவது எது?
திபெத்
- மூன்றாம் துருவம் என அழைக்கப்படுவது எது?
திபெத்
- கைபர் கணவாய் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது ?
சுலைமான் மலைத்தொடர்
- போலன் கணவாய் எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது ?
டோபா காகர் மலைத்தொடர்
- தெற்கு பீடபூமிகளில் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு பீடபூமிகள் என்னென்ன?
அரேபிய பீடபூமி (சவுதி அரேபியா ),தக்காண பீடபூமி (இந்தியா), சான் பீடபூமி (மியான்மர்), யுனான் பீடபூமி (சீனா)
- தெற்கு பீடபூமிகளில் மிகப் பெரியது எது ?
அரேபிய பீடபூமி
- ஆசியாவின் முக்கிய ஆறுகளினால் உருவாக்கப்படும் பெரும் சமவெளிகள் என்னென்ன?
மேற்கு சைபீரியா சமவெளி (ஓப் மற்றும் எனிசி), மஞ்சூரியன் சமவெளி(அமூர்), சீனப்பெரும் சமவெளி (யாங்சி மற்றும் சிகியாங்) , சிந்து கங்கைச் சமவெளி (சிந்து மற்றும் கங்கை), மெசபடோமியா சமவெளி (யூப்ரடிஸ் மற்றும் டைகிரிஸ்), ஐராவதி சமவெளி(ஐராவதி)
- ஆசியாவின் முக்கியமான தீர்வுகள் என்னென்ன ?
குரில், தைவான், சிங்கப்பூர் மற்றும் போர்னியா
- ஆசியாவின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்கள் என்னென்ன ?
பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் இந்தோனேசியா
- இந்திய பெருங்கடலில் காணப்படும் சிறிய தீவுக் கூட்டங்கள் என்னென்ன?
அரபிக் கடலில் உள்ள மாலத்தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைன்
- இலங்கைத் தீவு எங்கு அமைந்துள்ளது?
வங்காளவிரிகுடா
- ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தீவுக்கூட்டம்
- மிகப்பெரிய தீவுக்கூட்டம் எது?
இந்தோனேஷியா
- ஆசியாவின் பெரும்பான்மையான ஆறுகள் எங்கு தோன்றுகின்றன?
மத்திய உயர் நிலங்கள்
- ஓப்,எனிசி,லேனா ஆகிய முக்கிய ஆறுகள் வடக்கு நோக்கி பாய்ந்து எந்தக் கடலில் கலக்கின்றன?
ஆர்க்டிக் பெருங்கடல்
- தெற்காசியாவில் பாயும் ஆறுகளான பிரம்மபுத்திரா ,சிந்து ,கங்கை,ஐராவதி ஆகிய வற்றாத ஆறுகள் எங்கு தோன்றுகின்றன ?
பனிபடர்ந்த உயர்ந்த மலைகளில்
- யூப்ரடீஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகள் எங்கு பாய்கின்றன ?
மேற்கு ஆசியா
- அமூர்,ஹோவாங்கோ,யாங்சி மற்றும் மீகாங் ஆகிய ஆறுகள் ஆசியாவில் எங்கு பாய்கின்றன ?
தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில்
- ஆசியாவின் மிக நீளமான ஆறு எது?
யாங்சி
- முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கமானது எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
யாங்சி ஆறு
- உலகின் மிகப் பெரிய நீர்த்தேக்கம் எது?
முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்
- முப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் சீனாவின் மின்சார தேவையில் எத்தனை சதவீதத்தை பூர்த்தி செய்கிறது?
10%
- யாங்சி ஆற்றின் பிறப்பிடம் எது?
திபெத் பீடபூமி
- யாங்சி ஆற்றின் சேருமிடம் எது?
கிழக்கு சீனக்கடல்
- யாங்சி ஆற்றின் நீளம் எவ்வளவு?
6350 கி.மீ
- ஹோவாங்கோ ஆற்றின் பிறப்பிடம் எது?
திபெத் பீடபூமி
- ஹோவாங்கோ ஆற்றின் சேருமிடம் எது?
போகாயா வளைகுடா
- ஹோவாங்கோ ஆற்றின் நீளம் எவ்வளவு?
5464 கி.மீ
- மீகாங் ஆற்றின் பிறப்பிடம் எது?
திபெத் பீடபூமி
- மீகாங் ஆற்றின் சேருமிடம் எது?
தென்சீனக் கடல்
- மீகாங் ஆற்றின் நீளம் எவ்வளவு?
4350 கி.மீ
- எனிசி ஆற்றின் பிறப்பிடம் எது?
தானுவாலா மலை
- எனிசி ஆற்றின் சேருமிடம் எது?
ஆர்டிக் பெருங்கடல்
- எனிசி ஆற்றின் நீளம் எவ்வளவு?
4090 கி.மீ
- ஓப் ஆற்றின் பிறப்பிடம் எது?
அல்டாய் மலை
- ஓப் ஆற்றின் சேருமிடம் எது?
ஓப் வளைகுடா
- ஓப் ஆற்றின் நீளம் எவ்வளவு?
3650 கி.மீ
- பிரம்மபுத்திரா ஆற்றின் பிறப்பிடம் எது?
இமயமலை
- பிரம்மபுத்திரா ஆற்றின் சேருமிடம் எது?
வங்காள விரிகுடா
- பிரம்மபுத்திரா ஆற்றின் நீளம் எவ்வளவு?
2900 கி.மீ
- சிந்து ஆற்றின் பிறப்பிடம் எது?
இமயமலை
- சிந்து ஆற்றின் சேருமிடம் எது?
அரபிக் கடல்
- சிந்து ஆற்றின் நீளம் எவ்வளவு?
3610 கி.மீ
- அமூர் ஆற்றின் பிறப்பிடம் எது?
சிகா,ஆர்கன்,ஆறுகளின் சங்கமம்
- அமூர் ஆற்றின் சேருமிடம் எது?
டாடார் நீர்சந்தி
- அமூர் ஆற்றின் நீளம் எவ்வளவு?
2824 கி.மீ
- கங்கை ஆற்றின் பிறப்பிடம் எது?
இமயமலை
- கங்கை ஆற்றின் சேருமிடம் எது?
வங்காள விரிகுடா
- கங்கை ஆற்றின் நீளம் எவ்வளவு?
2525 கி.மீ
- ஐராவதி ஆற்றின் பிறப்பிடம் எது?
வடக்கு மியான்மர்
- ஐராவதி ஆற்றின் சேருமிடம் எது?
வங்காள விரிகுடா
- ஐராவதி ஆற்றின் நீளம் எவ்வளவு?
2170 கி.மீ
- உலகின் மிக ஈரப்பதம் வாய்ந்த / அதிக மழை பெறும் பகுதி எது?
இந்தியாவில் உள்ள மௌசின்ராம்
- இந்தியாவில் உள்ள மௌசின்ராம் ஆண்டுக்கு எவ்வளவு மழை பொழிவை பெறுகிறது?
11871 மி.மீ
- ஆசியாவில் பாலைவனங்கள் எந்த கடற்கரையோரமாக காணப்படுகின்றன?
மேற்கு கடற்கரையோரம்
- ஆசியாவில் காணப்படும் மிக வெப்பமான பாலைவனம் எது?
அரேபிய பாலைவனம் (சவுதி அரேபியா) மற்றும் தார் பாலைவனம்( இந்தியா மற்றும் பாகிஸ்தான்)
- ஆசியாவில் காணப்படும் மிகவும் குளிர்ந்த பாலைவனங்கள் எது ?
கோபி மற்றும் தக்லாமக்கன்
- ஆசியாவின் மிகப்பெரிய பாலைவனம் எது?
அரேபிய பாலைவனம்
- ஆசியாவில் எத்தனை வகையான பாலைவனங்கள் உள்ளன?
இரண்டு: வெப்ப பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனம்
- உலகின் மிக தொடர்ச்சியான மணற்பாங்கான பாலைவனம் எது?
ரூப -அல்- காலி பாலைவனம்
- ரூப -அல்- காலி பாலைவனம் எங்கு உள்ளது?
சவுதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதி
- ஆசியாவில் அதிக வெப்பநிலை ,அதிக மழைப்பொழிவு காலநிலையை கொண்டுள்ள இருப்பிடம் எது ?
இந்தோனேசியா, மலேசியா ,சிங்கப்பூர், இலங்கை
- ஆசியாவில் அதிக வெப்பநிலை ,அதிக மழைப்பொழிவு காலநிலையை கொண்டுள்ள இடத்தில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன ?
பசுமைமாறா தாவரங்கள் -மகோகனி, இரப்பர்,செம்மரம்,சால் போன்றவைகள்
- ஆசியாவில் அதிக வெப்பநிலை ,அதிக மழைப்பொழிவு காலநிலையை கொண்டுள்ள இடத்தில் காணப்படும் விலங்கின வகைகள் என்னென்ன ?
காண்டாமிருகம் ,உராங்குட்டான், கோமோடோ டிராகன், புலி ,பாபிரூஸா
- ஆசியாவில் கோடை கால மழை ,வறண்ட குளிர்காலம் ஆகிய கால நிலைகளைக் கொண்ட இருப்பிடம் எது?
இந்தியா ,வியட்நாம், தெற்கு சீனா ,கம்போடியா, தாய்லாந்து
- ஆசியாவில் கோடை கால மழை ,வறண்ட குளிர்காலம் ஆகிய கால நிலைகளைக் கொண்ட இருப்பிடங்களில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன ?
இலையுதிர் காடுகள் -தேக்கு ,சந்தனம், மூங்கில்
- ஆசியாவில் கோடை கால மழை ,வறண்ட குளிர்காலம் ஆகிய கால நிலைகளைக் கொண்ட இருப்பிடங்களில் காணப்படும் விலங்கினவகைகள் என்னென்ன ?
புலி ,யானை ,இந்திய நாகப்பாம்பு, விரியன் பாம்பு
- ஆசியாவில் தீவிரமான காலநிலை உள்ள இருப்பிடங்கள் என்னென்ன?
அரேபிய பாலைவனம், வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா
- ஆசியாவில் தீவிரமான காலநிலை உள்ள இருப்பிடங்களில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன ?
சப்பாத்திக்கள்ளி, பேரிச்சை மரங்கள் (பாலைவனச்சோலை ),முட்புதர்கள், கருவேலமரம்
- ஆசியாவில் தீவிரமான காலநிலை உள்ள இருப்பிடங்களில் காணப்படும் விலங்கின வகைகள் என்னென்ன ?
பாக்டீரியன் ஒட்டகம், மண் கௌதாரி ,பாலைவன மான்
- ஆசியாவில் வறண்ட குளிர் காலம் ,மிதவெப்ப கோடை காலம் ஆகிய காலநிலை காணப்படும் பகுதிகள் என்னென்ன?
கிழக்கு சீனா, ஜப்பான், வட மற்றும் தென் கொரியா
- ஆசியாவில் வறண்ட குளிர் காலம் ,மிதவெப்ப கோடை காலம் ஆகிய காலநிலை பகுதிகளில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன?
செர்ரி, ஆப்ரிகாட் பிளம்
- ஆசியாவில் வறண்ட குளிர் காலம் ,மிதவெப்ப கோடை காலம் ஆகிய காலநிலை பகுதிகளில் காணப்படும் விலங்கின வகைகள் என்னென்ன? பெரிய பாண்டா கரடி ?
ஜப்பானிய மகாக்யூ
- ஆசியாவில் மிதவெப்ப கோடைகாலமும் ,குளிர்கால மழைப்பொழிவும் காணப்படும் இடங்கள் என்னென்ன?
இஸ்ரேல் ,லெபனான் ,துருக்கி ,சிரியா
- ஆசியாவில் மிதவெப்ப கோடை காலமும் குளிர்கால மழை பொழிவும் காணப்படும் இடங்களில் உள்ள தாவர வகைகள் என்னென்ன?
அத்தி ,ஆலிவ் ,சிட்ரஸ் பழங்கள்
- ஆசியாவில் மிதவெப்ப கோடை காலமும் குளிர்கால மழை பொழிவும் காணப்படும் இடங்களில் உள்ள விலங்கின வகைகள் என்னென்ன?
லிங்க்ஸ்,ஜேக்முயல்
- ஆசியாவில் நீண்ட வறண்ட குளிர்காலம், குறுகிய குளிர்ச்சியான கோடைகாலம் காணப்படும் பகுதிகள் என்னென்ன?
சைபீரியா இமயமலை
- ஆசியாவில் நீண்ட வறண்ட குளிர்காலம், குறுகிய குளிர்ச்சியான கோடைகாலம் காணப்படும் பகுதிகளில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன?
ஊசியிலைக் காடுகள் : பைன்,ஃபிர்,ஸ்புரூஸ்
- ஆசியாவில் நீண்ட வறண்ட குளிர்காலம், குறுகிய குளிர்ச்சியான கோடைகாலம் காணப்படும் பகுதிகளில் காணப்படும் விலங்கின வகைகள் என்னென்ன?
சைபீரிய புலி, பழுப்பு கரடி, ஓநாய்
- ஆசியாவில் நிரந்தர பணி படர்வு பகுதிகளில் காணப்படும் தாவர வகைகள் என்னென்ன?
லிச்சன், பாசிகள்,புல்
- ஆசியாவில் நிரந்தர பணி படர்வு பகுதிகளில் காணப்படும் விலங்கின வகைகள் என்னென்ன?
பனிக்கரடி, லெம்மிங், ஆர்டிக் நரி, கலைமான்
- உலகின் மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் எங்கிருந்து கிடைக்கப் பெறுகின்றது?
ஆசியா
- மேற்காசிய நாடுகளிலேயே எங்கு குறிப்பிடத்தக்க அளவில் கனிமவளங்கள் காணப்படுகின்றது?
ஈரான்
- உலகிலேயே மிக அதிகமான இரும்புத்தாது வளத்தை எது கொண்டுள்ளது?
ஆசியா
- ஆசியாவில் அதிக இரும்புத்தாது உள்ள நாடுகள் என்னென்ன?
சீனா மற்றும் இந்தியா
- உலகிலேயே எங்கு அதிக அளவு நிலக்கரி இருப்பு உள்ளது ?
ஆசியா
- ஆசியாவில் எந்த நாடுகள் அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யும் நாடுகளாக திகழுகின்றன?
சீனா மற்றும் இந்தியா
- ஆசியாவின் எந்த பகுதிகளில் அதிக அளவில் பெட்ரோலிய இருப்புகள் காணப்படுகிறது?
தென்மேற்கு ஆசியா
- பெட்ரோலிய உற்பத்தி செய்யும் மேற்காசிய நாடுகள் என்னென்ன?
சவுதி அரேபியா ,குவைத், ஈரான்,பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு குடியரசு
- பாக்சைட் கனிம வளம் எந்த ஆசிய நாடுகளில் காணப்படுகின்றது?
இந்தியா மற்றும் இந்தோனேசியா
- உலகிலேயே அதிகளவில் மைக்காவினை உற்பத்தி செய்யும் நாடு எது?
இந்தியா
- ஆசியாவின் எந்த நாடுகளில் தகரம் காணப்படுகிறது?
மியான்மர் ,தாய்லாந்து, ,மலேசியா மற்றும் இந்தோனேசியா
- ஆசியாவின் மொத்த பரப்பளவில் சுமார் எத்தனை சதவீதம் மட்டுமே வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக காணப்படுகிறது?
18%
- ஆசியாவிலேயே மிக அதிகமான பயிர் செய்ய ஏற்ற நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு எது?
இந்தியா
- ஆசியாவின் முக்கிய உணவு பயிர்கள் எது?
நெல் மற்றும் கோதுமை
- உலகிலேயே மிக அதிகமாக நெல் உற்பத்தி செய்யும் நாடுகள் எது?
சீனா மற்றும் இந்தியா
- தென்கிழக்கு ஆசியாவின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படுவது எது ?
தாய்லாந்து
- பனாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம் எந்த மக்களால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது?
இப்கௌஸ் என்ற பிலிப்பைன்ஸ் மக்கள்
- கோதுமை ஆசியாவின் எந்த கால நிலைப்பகுதிகளில் விளைகின்றது?
மிதவெப்ப மண்டல பகுதிகள்
- ஆசியாவில் எந்த நாடுகள் அதிக அளவு கோதுமையை உற்பத்தி செய்கின்றன ?
ரஷ்யா ,இந்தியா ,சீனா ,பாகிஸ்தான்
- ஆசியாவின் வறண்ட பகுதிகளில் என்ன திணை பயிர்கள் பயிரிடப்படுகின்றன ?
கம்பு ,கேழ்வரகு ,சோளம் ,மக்காச்சோளம்
- உலகின் மூன்றில் ஒரு பங்கு பருத்தி எங்கு விளைகின்றது ?
ஆசியா
- ஆசியாவில் அதிக பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகள் என்னென்ன?
சீனா, இந்தியா ,ரஷ்யா மற்றும் கஜகஸ்தான்
- ஆசிய நாடுகளில் எந்த நாடுகள் அதிக அளவில் சணல் உற்பத்தி செய்கின்றன?
இந்தியா ,பாகிஸ்தான், சீனா மற்றும் வங்காளதேசம்
- எந்த ஆசிய நாடுகள் அதிகமான அளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றன?
இந்தியா ,இந்தோனேசியா ,பிலிப்பைன்ஸ்
- காபி ,தேயிலை ,ரப்பர்,பனை மற்றும் கொக்கோ ஆகிய முக்கியமான தோட்டப்பயிர்கள் எந்தெந்த நாடுகளில் வளர்க்கப்படுகின்றது?
இந்தியா ,இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ,மலேசியா மற்றும் இந்தோனேசியா
- எந்த நாடுகள் இயற்கை ரப்பர் உற்பத்தியில் முதன்மையாக விளங்குகின்றன ?
மலேசியா மற்றும் தாய்லாந்து
- எந்த நாடு உலகிலேயே பேரீச்சம்பழங்களை அதிகளவு உற்பத்தி செய்கின்றது?
ஈரான்
- ஆசியாவின் எந்த நாடு மீன்பிடித் தொழிலில் முன்னணி நாடுகளாக திகழ்கின்றன?
சீனா மற்றும் ஜப்பான்
- உலகின் மிகச்சிறந்த நன்னீர் மீன்பிடி ஏரி எங்குள்ளது ?
டோன்லே சாப் ,கம்போடியா
- இந்தியாவின் முக்கிய தொழில் பிரதேசங்கள் என்னென்ன?
மும்பை ,அகமதாபாத், கோயம்புத்தூர் ,பெங்களூரு, சோட்டா நாக்பூர்
- ஆசியாவில் காணப்படும் மிகப் பொதுவான போக்குவரத்து எது ?
சாலை போக்குவரத்து
- ஆசிய நெடுஞ்சாலை நான்கு திசைகளில் எந்த இடங்களை இணைக்கின்றது?
கிழக்கில் டோக்கியோ ,மேற்கில் துருக்கி ,வடக்கில் ரஷ்யா, தெற்கில் இந்தோனேஷியா(1,41,000 கி.மீ)
- ஆசிய நெடுஞ்சாலை எத்தனை நாடுகளின் வழியே கடந்து செல்கின்றது?
32 நாடுகள்
- ஆசிய நெடுஞ்சாலைகள் அமைப்பிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை எது ?
ஆசிய நெடுஞ்சாலை 1(AH1) (20557 கிலோமீட்டர் )
- ஆசிய நெடுஞ்சாலை 1(AH1) எதை இணைக்கிறது?
டோக்கியோவை துருக்கியுடன்
- ஆசிய நெடுஞ்சாலை 43(AH43) இந்தியாவில் உள்ள எந்த பகுதியை இணைக்கின்றது ?
ஆக்ராவிலிருந்து இலங்கையிலுள்ள மதாரா வரை செல்கிறது(3024 கி.மீ)
- உலகிலேயே நீண்ட இருப்புப்பாதை வழித்தடம் எது ?
டிரான்ஸ் -சைபீரியன் இருப்புப்பாதை (9258 கிலோமீட்டர்)
- டிரான்ஸ் -சைபீரியன் இருப்புப்பாதை எந்தப் பகுதிகளை இணைக்கின்றது ?
லெனின்கிரேட் மற்றும் விளாடிவாஸ்டாக்
- டிரான்ஸ்- ஆசியா இருப்புப்பாதை எந்த பகுதியை இணைக்கின்றது ?
சிங்கப்பூர் – துருக்கியில் உள்ள இஸ்தான்புல்
- ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ இடையில் பயணிக்கும் உலகப்புகழ் வாய்ந்த அதிவிரைவு புல்லட் ரயில் எது?
சின்கான்வென் (352 கி.மீ/மணி)
- ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய இருப்புப்பாதை போக்குவரத்து வலையமைப்பு எங்கு காணப்படுகிறது ?
இந்தியா
- எந்த கால்வாய் ஐரோப்பாவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் இணைக்கின்றது ?
சூயஸ் கால்வாய்
- ஆசியாவின் முக்கிய துறைமுகங்கள் என்னென்ன ?
டோக்கியோ ,ஷாங்காய் ,சிங்கப்பூர், ஹாங்காங், சென்னை, மும்பை ,கராச்சி மற்றும் துபாய்
- உலகில் சுமார் பத்தில் ஆறு பங்கு மக்கள் தொகை எங்கு காணப்படுகிறது?
ஆசியா
- உலக மக்கள் தொகையில் எத்தனை பங்கு மக்கள் சீனா மற்றும் இந்தியாவில் வசிக்கின்றனர்?
ஐந்தில் மூன்று பங்கு
- ஆசியாவின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு?
143 நபர்கள்
- அங்கோர்வாட் சூரிய கோவில் கம்போடியாவில் யாரால் கட்டப்பட்டது?
இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1100)
- உலகின் மிகப்பெரிய கோயில் எது?
அங்கோர்வாட்
- அங்கோர்வாட் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது அதன் பொருளென்ன?
கெமர் மொழி ,(பொருள்-கோயில்களின் நகரம்)
- மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் சீன நாகரிகம் ஆகிய மூன்று நாகரீகங்களின் பிறப்பிடம் எது?
ஆசியா
- கிழக்காசியாவில் புகழ்பெற்ற நடனங்கள் என்னென்ன?
யாங்கி டிராகன் நடனம்,கபாகி
- ராம் தாய் எந்த நாட்டில் ஆடப்படும் நடனம் ?
தாய்லாந்து
198.பாங்க்ரா,கதக் மற்றும் பரதநாட்டியம் ஆகியவை எந்த நாட்டில் காணப்படும் முக்கிய நடனங்கள்?
இந்தியா
- பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் எது?
டினிக்லிங்
- வேற்றுமையின் இருப்பிடம் என அழைக்கப்படும் கண்டம் எது?
ஆசியா
6TH GEOGRAPHY STUDY NOTES |ஆசியா மற்றும் ஐரோப்பா| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services