TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- பூமியானது காற்றால் ஆன ஒரு மிகப்பெரிய மேல் உறையால் மூடப்பட்டுள்ளது இது எவ்வாறு அழைக்கப்படும்?
வளிமண்டலம்
- வளி மண்டலமானது புவிப் பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் பரந்து விரிந்துள்ளது?
800 கிலோ மீட்டர்
- சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கக் கூடிய பெரும்பாலான கதிர்களில் இருந்து நம்மை பாதுகாப்பது எது?
வளி மண்டலம்
- வளிமண்டலம் புவிக்கு அருகில் மிக அதிகமாகவும் மேலே செல்ல செல்ல குறைவாகவும் காணப்படுவதற்கு காரணம் என்ன?
புவியீர்ப்பு விசை
- வளி மண்டலமானது எத்தனை அடுக்குகளால் ஆனது ?
ஐந்து
- வளிமண்டலத்தின் அடுக்குகள் என்னென்ன?
அடி வளிமண்டலம் (troposphere),அடுக்கு வளிமண்டலம் (stratosphere),இடைவெளி மண்டலம் (mesosphere),அயனி மண்டலம்( ionosphere), புற வளிமண்டலம் (exosphere)
- பூமிக்கு அருகில் உள்ள நாம் வாழும் அதற்கு என்ன பெயர்?
அடிவளி மண்டலம்
- அடி வளிமண்டலம் புவி மேற்பரப்பில் இருந்து எத்தனை கிலோமீட்டர் உயரம் வரையிலானது?
16 கிலோமீட்டர்
- காற்றின் இயக்கம் எந்த அடுக்கில் நடைபெறும் ?
அடிவளி அடுக்கு
- எந்த அடுக்கில் உள்ள நீராவி தான் மேகங்கள் உருவாக காரணமாக இருக்கிறது ?
அடிவளி அடுக்கு
- பூமியில் நாம் அனுபவிக்கும் நிலைக்கு எந்த அடுக்கு காரணமாகிறது?
அடிவளி அடுக்கு
- வலுவான காற்று மற்றும் மாறுபாடான வானிலேயை தவிர்ப்பதற்காக எந்த அடுக்குக்கு மேல் வானூர்திகள் பறக்கின்றன?
அடிவளி அடுக்கு
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் காற்று வீசும் திசையை கண்டறிய எது பயன்படுகிறது?
காற்று திசைகாட்டி
- அடி வளிமண்டலத்திற்கு மேலே அமைந்துள்ள மண்டலம் எது ?
அடுக்கு வளிமண்டலம்
- எந்த அடுக்கில் ஓசோன் படலம் அமைந்துள்ளது?
அடுக்கு வளிமண்டலம்
- சூரியனிலிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் படலம் எது?
ஓசோன் படலம்
- “காற்று என்பது ஒரு அடிப்படை பொருள் அல்ல ஆனால் அது பல வாயுக்கள் அடங்கிய ஒரு கலவை “எனக் கூறியவர் யார் ?
ஜோசப் பிரிஸ்ட்லி(1774)
- ஆக்சிஜனைக் கண்டறிந்தவர் யார்?
ஜோசப் பிரிஸ்ட்லி
- நிறமற்ற அதிக வினைத்திறன் கொண்ட வாயுவிற்கு ஆக்சிஜன் என பெயரிட்டவர் யார்?
அண்டனி லவாய்சியர்
- அண்டனி லவாய்சியர் எந்த நாட்டு வேதியியலாளர்?
பிரெஞ்சு
- எரிதல் நிகழும்போது பெரும்பாலான ஆக்சிஜன் என்னவாக மாற்றப்படுகிறது?
கார்பன்-டை-ஆக்சைடு
- 1730 முதல் 1799 வரை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்துவதற்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை நிரூபித்தவர் யார்?
இன்ஜென்ஹவுஸ்
- எரிவதால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்பட்டு மாசடையும் காற்றினை தாவரங்கள் ஒளிச்சேர்க்கை புரிந்து ஆக்சிஜனை வெளியிட்டு தூய்மைப்படுத்துகிறது எனக் நிருபித்தவர் யார்?
இன்ஜென்ஹவுஸ்
- நைட்ரஜனை கண்டறிந்தவர் யார்?
டேனியல் ரூதர்போர்டு
- டேனியல் ரூதர்போர்டு எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?
ஸ்காட்லாந்து
- கார்பன் டையாக்சைடு எந்த நீரில் பால் போல மாறும்?
சுண்ணாம்பு நீர்
- காற்றில் எத்தனை பங்கு நைட்ரஜன் வாயு உள்ளது?
ஐந்தில் நான்கு பங்கு
- காற்றில் இரண்டாவதாக உள்ள பெரும் பங்கு வாயு எது?
ஆக்சிஜன்
- காற்றில் ஆக்சிஜன் எத்தனை பங்கு உள்ளது தோராயமாக?
ஐந்தில் ஒரு பங்கு
- காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?
78%
- காற்றில் ஆக்சிஜன் எத்தனை சதவீதம் உள்ளது?
21%
- காற்றில் கார்பன் டை ஆக்சைடு ஆர்கான் நீராவி மற்றும் பிற வாயுக்கள் எத்தனை சதவீதம் உள்ளன?
1 சதவீதம்
- தொழிற்சாலை அதிகம் உள்ள நகரங்களில் உலவும் காற்றில் மற்ற இடங்களில் உள்ளதைவிட அதிக அளவு எந்த வாயு இருக்கும் ?
கார்பன் டை ஆக்சைடு
- கடலோர பகுதிகளில் உள்ள காற்றில் மற்ற இடங்களை விட அதிகளவு எது அடங்கியிருக்கும் ?
நீராவி
- காற்றோட்டம் உள்ள இடங்களில் உள்ள காற்றில் அதிக அளவு எது காணப்படும்?
தூசு பொருள்கள்
- வீச்சின் சமன்பாடு என்ன?
அதிகபட்ச அளவு – குறைந்தபட்ச அளவு
- ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் பொழுது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்விற்கு என்ன பெயர்?
எரிதல்
- ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
உள்ளெரிதல்
- தாவரங்கள் வளிமண்டல காற்றுடன் நிகழ்த்தும் வாயுப் பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள க்ஷ எந்த மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது?
ஸ்டொமட்டா
- தாவரங்கள் அவற்றிற்கான உணவினை எதன் மூலம் உற்பத்தி செய்கின்றன?
ஒளிச்சேர்க்கை
- ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஒளியை உறிஞ்சப் பயன்படும் பெரும்பாலான தாவரங்களில் காணப்படும் நிறமி எது?
பச்சையம்
- நாம் சுவாசிக்கும் பொழுது அதில் உள்ள ஆக்சிஜன் செரிக்கப்பட்ட உணவு பொருட்களுடன் வேதிவினை புரிந்து எவற்றை உருவாக்குகிறது?
கார்பன் டை ஆக்சைடு ,நீராவி மற்றும் ஆற்றல்
- உணவுப் பொருளுடன் ஆக்சிஜன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்விற்கு என்ன பெயர் ?
சுவாசம்
- நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் எந்த வாயுவைத் தவிர மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்?
நைட்ரஜன்
- நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 78% ஆக உள்ள நைட்ரஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
78%
- நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 21% ஆக உள்ள ஆக்ஸிஜன் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
16%
- நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.03% ஆக உள்ள கார்பன் டையாக்சைடு வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
4%
- நாம் காற்றை உள்ளிழுக்கும் பொழுது 0.95% ஆக உள்ள மந்த வாயுக்கள் வெளியேற்றும் பொழுது எவ்வளவாக இருக்கும்?
0.95%
- கார்பன் டையாக்சைடு எந்த வெப்பநிலையில் குளிருவிக்கும் பொழுது அவை திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறுகின்றது?
-57°C
- கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையை அடையாமல் நேரடியாக திட நிலைக்கு மாறியப்பின் எவ்வாறு அழைக்கப்படும் ?
உலர் பனிக்கட்டி
6TH CHEMISTRY STUDY NOTES |காற்று| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services