- மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான தொடர்பு மற்றும் தாவரங்களின் பொருளாதார பயன்பாடு ஆகியவற்றை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவின் பெயர் என்ன?
பொருளாதார தாவரவியல்
- தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
நான்கு: உணவுத் தாவரங்கள் ,நறுமணப் பொருள் தரும் தாவரங்கள், மருத்துவ தாவரங்கள், நார்த்தரும் தாவரங்கள்
- உணவு தரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உணவுத் தாவரங்கள்
- உணவுத் தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
மூன்று: காய்கறிகள் ,தானியங்கள், பருப்பு வகைகள்
- தாவரத்தின் வேர்களில் இருந்து கிடைக்கும் காய்கறிகள்?
பீட்ரூட் கேரட்
- தாவரத்தின் இலைகளில் இருந்து கிடைக்கும் உணவு?
கீரைகள், முட்டைக்கோஸ் ,கருவேப்பிலை
- தாவரங்களின் தண்டிலிருந்து கிடைக்கும் உணவு?
கரும்பு ,உருளைக்கிழங்கு ,கருணைக்கிழங்கு
- தாவரத்தின் மலர்களில் இருந்து கிடைக்கும் உணவு வகைகள் ?
வாழைப்பூ, காலிஃப்ளவர்
- தாவரங்களின் கனிகளிலிருந்து கிடைக்கும் உணவு?
நெல்லி ,கொய்யா மற்றும் இதர கனிகள்
- தானியங்கள் என்பவை எந்த வகை தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருளாகும்?
புல் வகை தாவரங்கள்
- அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் உள்ள உண்ணக்கூடிய விதைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பருப்புகள்
- பருப்புகள் எதனுள் வளர்கின்றன ?
கனி உறை
- உலகளவில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
இரண்டாமிடம்
- உலக உணவு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
அக்டோபர் 16
- தாவரங்களில் நமது நோய்களை குணப்படுத்த பயன்படும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
மருத்துவ தாவரங்கள்
- நெல்லி தாவரத்தின் பயன்படும் பாகம் எது ?
கனி
- நெல்லிக்கனிய் மருத்துவ பயன்கள் என்ன?
வைட்டமின் சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் ,மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்
- துளசி தாவரத்தின் பயன்படும் பாகம் ?
இலை மற்றும் விதை
- துளசி தாவரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன?
இருமல் ,சளி, மார்புச்சளி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியை குணப்படுத்தும்
- சோற்றுக்கற்றாழையின் எந்த பாகம் மருந்தாக பயன்படுகிறது?
இலைகள்
- சோற்றுக் கற்றாழையின் மருத்துவ பயன் என்ன ?
மலமிளக்கியாக ,காயத்தை குணப்படுத்த, தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த
- வேம்பு தாவரத்தின் மருந்தாக பயன்படும் பாகம் எது?
மரப்பட்டை இலை மற்றும் விதைகள்
- வேம்பு தாவரத்தின் மருத்துவ பயன்கள் என்னென்ன?
கிருமிநாசினியாக தோல் நோய்களுக்கு மருந்தாக
- மஞ்சள் தாவரத்தின் எந்த பகுதி மருந்தாக பயன்படுகிறது?
தரைக்கீழ் தண்டு
- மஞ்சளின் மருத்துவ பயன் என்னென்ன?
கிருமிநாசினியாகவும் சிறிய காயம் பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும்
- எந்த தவறுகளிலிருந்து நமக்கு தேவையான நார்கள் பெறப் படுகின்றனவோ அந்த தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
நார்தரும் தாவரங்கள்
- நார்த் தரும் தாவரங்களிலிருந்து பெறப்படும் நார்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
இயற்கை நார்கள்
- நார்த் தரும் தாவரங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று நெசவு நார்கள், கயிறு நார்கள்& நிரப்பும் நார்கள்
- நார்த் தாவரங்கள் கிடைக்கப்பெறும் தாவரப் பாகங்களின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
நான்கு : விதைகளின் மேற்புறத் தூவி நார்கள், தண்டு அல்லது தண்டிழை நார்கள், இலை நார்கள், உரிமட்டை நார்கள்
- விதைகளின் மேற்புறத்தூவி நார்களுக்கு எடுத்துக்காட்டு?
பருத்தி
- தண்டு அல்லது தண்டிலை நார்களுக்கு எடுத்துக்காட்டு?
ஆளி,சணல்
- இலை நார்களுக்கு எடுத்துக்காட்டு ?
கற்றாழை
- உரிமட்டை நார்களுக்கு எடுத்துக்காட்டு?
தேங்காய்
- நூல் இலைகளிலிருந்து நூலை உருவாக்கும் முறைக்கு என்ன பெயர் ?
நூல் நூற்றல்
- இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது?
ஏழு
- இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகிறது?
மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ,ஒரிசா ,பீகார், உத்தரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா
- எந்த மாநிலம் இந்திய சணல் உற்பத்தியில் 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது?
மேற்குவங்காளம்
- வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அதன் அடரத்தியின் அடிப்படையில் என்னவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
வன்கட்டைகள் மற்றும் மென்கட்டைகள்
- நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் எனும் மிகப்பெரிய பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து எந்த வகை மரக்கட்டைகள் பெறப்படுகின்றன?
வன்கட்டைகள்
- வன்கட்டைகளுக்கு எடுத்துக்காட்டு?
தேக்கு ,பலா
- பூக்கா தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து பெறப்படும் கட்டைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மென் கட்டைகள்
- மரக் கட்டைகளில் இருந்து மெல்லியதாக சீவி எடுக்கப்படுகின்ற மர தகடுகளை உரிய வகையில் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி ஒட்டி உருவாக்கப்படுவதற்கு என்ன பெயர்?
ஒட்டுப்பலகை
- அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன?
அலங்கார தாவரங்கள்
- பட்டுப்புழுக்கள் எந்த இலையை உணவாக எடுத்துக் கொள்கின்றன?
மல்பெரி இலை
- எது வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது?
நீலப்பச்சைப்பாசி & பாக்டீரியா சூடோமோனாஸ்
- CDRI ன் விரிவாக்கம் என்ன?
Central drug research institute
- Central drug research institute எங்கு உள்ளது?
லக்னோவ்
- மூட்டு முடக்குவாதத்திற்கு எதிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் நானோ உருவாக்கத்தின் மூலம் மருந்தினை உருவாக்கியுள்ளனர் ?
பாலக்கீரை
- எந்த எண்ணெய் பூசப்பட்ட யூரியா நைட்ரஜனை மெதுவாக வெளியிடுகிறது ?
வேப்பெண்ணெய்
- வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியாவினை எந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்?
இந்தியா
6TH BOTANY STUDY NOTES |அன்றாட வாழ்வில் தாவரங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services