TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE

TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK 14,000+ : CLICK HERE


---------------------------------------------------------------------------------------------------------------------------

DOWNLOAD APP NOW :  DOWNLOAD APP/download/button

[ PLEASE USE OUR OFFICIAL APP FOR OVERALL RANK,SOLUTIONS AND FOR BETTER EXPERIENCE ]

---------------------------------------------------------------------------------------------------------------------------

 ANSWER KEY : CLICK HERE 



 1. தொடக்க கால பல்லவ அரசர்கள் யாரின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்?

a) பாண்டியர்கள்

b) சாளுக்கியர்கள்

c) சாதவாகனர்கள்

d) இராஷ்டிரகூடர்கள்


2. களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர் யார்?

a) முதலாம் சிம்மவர்மன் 

b) சிம்ம விஷ்ணு 

c) இரண்டாம் சிம்மவர்மன் 

d) முதலாம் நரசிம்மவர்மன்


3. இரண்டாம் நரசிம்மவர்மன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?

a) சிம்மவிஷ்ணு 

b) மாமல்லன் 

c) ராஜசிம்மன்

d) அவனிபசேகரன்


4. கடைசி பல்லவ மன்னர் யார்?

a) தந்திவர்மன்

b) இரண்டாம் மகேந்திரவர்மன்

c) நிருபதுங்கவர்மன்

d) அபாரஜித்தன்



5. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. தொடக்க கால பல்லவரசர்கள் சாளுக்கியர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர்.

2. களப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் இரண்டாம் சிம்மவர்மன்.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


6. எந்த காலகட்டத்தில் களப்பிரர்களை அழித்து ஒரு வலுவான பல்லவ அரசு உருவாக்கப்பட்டது?

a) கி.பி 520 வாக்கில்

b) கி.பி 530 வாக்கில்

c) கி.பி 540 வாக்கில்

d) கி.பி 550 வாக்கில்


7. முதலாம் மகேந்திரவர்மனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?

a) முதலாம் நரசிம்மவர்மன் 

b) இரண்டாம் மகேந்திரவர்மன் 

c) பரமேஸ்வரவர்மன்

d) நந்திவர்மன்



8. பரஞ்சோதி யாருடைய படைத்தளபதி?

a) ராஜசிம்மன்

b) மாமல்லன்

c) சிம்மவிஷ்ணு

d) பரமேசுவரவர்மன்


9. நாயன்மார்களில் முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதியாக இருந்தவர் யார்?

a) சக்திநாயனார்

b) சிறுதொண்டர்

c) சண்டேசுவர நாயனார்

d) சடையநாயனார்


10. பரஞ்ஜோதி எந்த படையெடுப்பில் பல்லவர் படைக்கு தலைமையேற்று நடத்தினார்?

a) வாதாபி

b) கல்யாணி

c) பட்டாடக்கல்

d) அய்கோல்


11. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. மாமல்லன் என அழைக்கப்படுபவர் இரண்டாம் நரசிம்மவர்மன்.

2. சிறுதொண்டர் ராஜசிம்மனின் படைத்தளபதி ஆவார்.



a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு




12. மகேந்திரவர்மன் தொடக்ககாலத்தில் என்ன சமயத்தை பின்பற்றினார்?

a) சமணம்

b) பௌத்தம்

c) ஆசீவகம்

d) சைவம்




13. மகேந்திரவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார்?

a) திருஞானசம்பந்தர் 

b) திருநாவுக்கரசர்

c) சுந்தரர்

d) மாணிக்கவாசகர் 




14. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1.திராவிட கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர் மகேந்திரவர்மன்.

2.மகேந்திரவர்மன் அறிமுகம் செய்த கட்டிடக்கலைக்கு பெயர் "மகேந்திரபாணி"

a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



15. "மத்தவிலாசப்பிரகசனம்" எனும் நூலை எழுதியவர் யார்?

a) சிம்ம விஷ்ணு 

b) முதலாம் மகேந்திரவர்மன் 

c) முதலாம் நரசிம்மவர்மன்

d) இரண்டாம் மகேந்திரவர்மன்



16. "மத்தவிலாசப்பிரகசனம்" எந்த மொழியில் எழுதப்பட்ட நூல்?

a) சமஸ்கிருதம்

b) பாலி

c) வடமொழி

d) பிராகிருதம் 




17. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1.மத்தவிலாசப்பிரகசனம் என்பது பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.

2.மத்தவிலாசப்பிரகசனம் என்பதன் பொருள் குடிமக்களின் மகிழ்ச்சி.

3.மத்தவிலாசப்பிரகசனம் என்னும் நாடகம் பௌத்தத்தை இழிவு படுத்தும் வகையில் உள்ளது.


a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 3 மட்டும் 

d) அனைத்தும் சரி 


18. தவறான கூற்றை ஆராய்க:

a) மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் வாதாபியை தலைநகராகக் கொண்ட மேலைச் சாளுக்கியரோடு தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப்பட்டன.

b) மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசிக்கும் தொடர்ந்து போர்கள் நடைபெற்றன.

c) இருவருக்கும் இடையே நடைபெற்ற போர்களில் ஒன்று இரண்டாம் புலிகேசி மகேந்திரவர்மனை வெற்றி கொண்டு நாட்டின் வடக்கின் பெரும் பகுதியை கைப்பற்றியதாக தெரிகிறது.

d) மகேந்திரனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன் சாளுக்கியரின் தலைநகரமான வாதாபியை கைப்பற்றினார்.




19. தனது தந்தையின் மரணத்திற்காக இரண்டாம் புலிகேசியை கொன்றவர் யார்?

a) ராஜசிம்மன்

b) மாமல்லன்

c) பரமேசுவரவர்மன்

d) இரண்டாம் மகேந்திரவர்மன்


20. சீன நாட்டிற்கு தூது குழுக்களை அனுப்பிய பல்லவரசர் யார்?

a) முதலாம் நரசிம்மவர்மன் 

b) முதலாம் மகேந்திரவர்மன் 

c) சிம்ம விஷ்ணு 

d) இரண்டாம் நரசிம்மவர்மன்


21. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

a) முதலாம் நரசிம்மவர்மன் 

b) முதலாம் மகேந்திரவர்மன் 

c) இரண்டாம் நந்திவர்மன் 

d) இரண்டாம் நரசிம்மவர்மன்


22. கீழ்க்கண்ட கூற்றுக்களை தவறானது எது?

1.ஒப்பிட்டளவில் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் அரசியல் பிரச்சனைகள் அதிகம் இல்லாததால் அவரால் கோவில்கள் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது.

2.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர் இரண்டாம் நரசிம்மவர்மன்



a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


23. "அவனிசிம்மர்" என அழைக்கப்படுபவர் யார்?

a) சிம்ம விஷ்ணு

b) முதலாம் மகேந்திரவர்மன் 

c) முதலாம் நரசிம்மவர்மன் 

d) இரண்டாம் நரசிம்மவர்கள்


24. தவறான இணை?

a) சிம்ம விஷ்ணு - அவனிசிம்மர்

b) முதலாம் நரசிம்மவர்மன் -சங்கீரணாஜதி

c) முதலாம் நரசிம்மவர்மன் -விசித்திரசித்தன்

d) முதலாம் நரசிம்மவர்மன் -வாதாபி கொண்டான்



25. "குணபாரன்" என்ற பட்டம் கொண்டவர்?

a) முதலாம் நரசிம்மவர்மன் 

b) முதலாம் மகேந்திரவர்மன் 

c) சிம்ம விஷ்ணு 

d) இரண்டாம் நரசிம்மவர்மன்

 


26. முதலாம் மகேந்திரவர்மன் பற்றிய பட்டங்களுள் தவறானது எது?

a) சங்கீரணஜதி

b) மாமல்லன்

c) மத்தவிலாசன்

d) சித்திரக்காரபுலி


27. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

1. வராகர் குகை பல்லவ கட்டடக் கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டு.

2.பாறைக் குடைவரை கோவில்கள் மாமல்லனின் பாணி.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



28. எப்போது யுனெஸ்கோ மாமல்லபுரத்தை உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் சேர்த்தது?

a) 1964

b) 1974

c) 1984

d) 1986



29. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்பங்களும் யாருடைய கட்டிடக்கலை பாணி?

a) மகேந்திரவர்மன் பாணி

b) மாமல்லன் பாணி 

c) ராஜசிம்மன் பாணி 

d) சிம்மவிஷ்ணு பாணி


30. பாறைக்குடைவரைக் கோவில்கள் யாருடைய பாணி?

a) மகேந்திரவர்மன் பாணி

b) மாமல்லன் பாணி 

c) ராஜசிம்மன் பாணி 

d) சிம்மவிஷ்ணு பாணி


31. கட்டுமான கோவில்கள் யாருடைய பாணியிலானது?

a) ராஜசிம்மன் & நந்திவர்மன்

b) மாமல்லன் & நந்திவர்மன்

c) மகேந்திரவர்மன் & மாமல்லன்

d) சிம்ம விஷ்ணு & நந்திவர்மன்


32. திருச்சிராப்பள்ளி ,வல்லம், சியாமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கோவில் கட்டிடக்கலை பாணி யாருடையது? 

a) மகேந்திரவர்மன்

b) முதலாம் நரசிம்மவர்மன்

c) இரண்டாம் நரசிம்மவர்மன்

d) நந்திவர்மன்



33. கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?

a) மாமல்லனின் கட்டடக்கலை பாணியில் மிகவும் முக்கியமானது மகாபலிபுரத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கம்.

b) உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப்பெரியது மாமல்லபுரம்.

c) மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் என பிரபலமாக அழைக்கப்படும் ஐந்து ரதங்கள் ஐந்து வகையான கோவில் கட்டடப் பாணியை உணர்த்துகின்றன.

d) மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ,திருமூர்த்தி மண்டபம், வராக மண்டபம் ஆகியவை ராஜசிம்மன் கட்டியுள்ள பிரபலமான மண்டபங்கள் ஆகும்.



34. கீழ்கண்ட கூற்றுக்களை தவறானது எது?

1.ராஜசிம்மன் பெருங்கற்களை கொண்டு கட்டுமான கோவில்களை கட்டினார்.

2.கட்டுமான கோவில் கலைப்பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில்.

3.இக்கோவில்கள் கடினமான பாறைக்கற்களால் கட்டப்பட்டவையாகும்.


a) 1,2 மட்டும்

b) 2 மட்டும்

c) 1 மட்டும்

d) 3 மட்டும்




35. காஞ்சி கைலாசநாதர் கோவில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

a) ராஜராஜேஸ்வரம் 

b) ராஜசிம்மேஸ்வரம்

c) தட்சிணசித்திரம்

d) தட்சிணமேரு


36. காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் யாருடைய கட்டுமான கோவில்கள் பாணிக்கு எடுத்துக்காட்டு?

a) முற்காலப் பல்லவர்கள்

b) பிற்காலப் பல்லவர்கள்

c) இடைக்காலப் பல்லவர்கள் 

d) முற்கால சாளுக்கியர்கள்




37. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதை கவனிக்க:

1. பல்லவரசர்கள் பௌத்த சமண சமயங்களை ஆதரித்தனர். 

2.பல்லவ அரசர்கள் வேத சமயத்தையும் ஆதரித்தனர்.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



38. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. பல்லவர் காலத்தில் அப்பரும், மாணிக்கவாசகரும் ,நம்மாழ்வாரும், ஆண்டாளும் சைவ ,வைணவ மதத்தை போதித்தனர்.

2. பல்லவர் காலத்தில் பக்தி மார்க்கத்தில் தமிழை விட சமஸ்கிருதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

3.பல்லவர் காலத்தில் சமய கூட்டங்களில் பங்கேற்க பெண்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.


a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 3 மட்டும்

d) அனைத்தும் தவறு 


39. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான தட்சிண சித்திரம் யாருடைய காலத்தில் தொகுக்கப்பட்டது?

a) முதலாம் மகேந்திரவர்மன் 

b) முதலாம் நரசிம்மவர்மன் 

c) இரண்டாம் மகேந்திரவர்மன்

d) இரண்டாம் நரசிம்மவர்மன்


40. மாபெரும் சமஸ்கிருத அறிஞரான தண்டி யாருடைய அவையில் இருந்தார்?

a) முதலாம் மகேந்திரவர்மன் 

b) முதலாம் நரசிம்மவர்மன் 

c) இரண்டாம் மகேந்திரவர்மன்

d) இரண்டாம் நரசிம்மவர்மன்

41. "தசகுமாரசரிதம்" என்னும் நூலை எழுதியவர் யார்?

a) மகேந்திரவர்மன் 

b) தண்டின்

c) பாரவி

d) காளிதாசர்


42. பாரவி எந்த மொழி அறிஞர்?

a) சமஸ்கிருதம்

b) பாலி

c) பிராகிருதம்

d) தமிழ்


43. பாரவி யாருடைய காலத்தில் வாழ்ந்த அறிஞர்?

a) முதலாம் மகேந்திரவர்மன் 

b) முதலாம் நரசிம்மவர்மன் 

c) இரண்டாம் மகேந்திரவர்மன்

d) சிம்ம விஷ்ணு 


44. தவறான கூற்று எது?

a) பாரவி எழுதிய நூல் கிராதார்ஜூனியம்.

b) கிராதார்ஜூனியம் ஒரு வடமொழி நூல்.

c) பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம்.

d) மகாபாரதத்தை பாரத வெண்பா என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் பெருஞ்சித்திரனார்.


45. பெருந்தேவனார் எந்த அரசரால் ஆதரிக்கப்பட்டார்?

a) முதலாம் நரசிம்மவர்மன்

b) இரண்டாம் நரசிம்மவர்மன்

c) முதலாம் நந்திவர்மன் 

d) இரண்டாம் நந்திவர்மன்


46. பல்லவர் காலத்து இசை குறித்த கல்வெட்டுகள் எந்த இடங்களில் காணப்படுகிறது?

a) குடுமியான்மலை , திருமயம்

b) மண்டகப்பட்டு,மகேந்திரவாடி

c) தளவானூரா,திருச்சி

d) திருக்கழுக்குன்றம்,சியாமங்கலம்


47. புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராச்சாரியார் யாருடைய காலத்தில் வாழ்ந்தவர்?

a) முதலாம் மகேந்திரவர்மன்

b) இரண்டாம் மகேந்திரவர்மன்

c) முதலாம் நரசிம்மவர்மன்

d) இரண்டாம் நந்திவர்மன்


48. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1.சாளுக்கியர்கள் தென்னிந்தியாவின் மத்தியிலும் மேற்கிலும் மராத்திய நாட்டை உள்ளடக்கிய பெரும் பகுதியை ஆண்டனர்.

2.சாளுக்கியர்களின் தலைநகரம் பதாமி


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


49. சாளுக்கியர்களில் வெவ்வேறு ஆனால் நெருங்கிய தொடர்புடைய எத்தனை சுதந்திர அரச மரபுகள் இருந்தன?

a) இரண்டு 

b) மூன்று

c) நான்கு

d) ஐந்து


50.    கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

a) வெங்கிச் சாளுக்கியர்கள் கீழைச்சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர்.

b) கல்யாணி சாளுக்கியர்கள் மேலைச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர்.

c) சாளுக்கியர்களின் எல்லையாக வடக்கே ஹர்ஷரின் பேரரசு திகழ்ந்தது.

d) சாளுக்கியர்களின் எல்லைகளாக கிழக்கே பல்லவ நாடும், தெற்கே கலிங்கமும் இருந்தன.


51. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1. வாதாபி குகை கல்வெட்டு மங்களேசனுடையது.

2.அய்கோல்  கல்வெட்டு இரண்டாம் புலிகேசியினுடையது.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



52. பீஜப்பூர் மாவட்டம் பட்டடக் கல்லில் குறுநில மன்னராக இருந்த சாளுக்கிய அரசர் யார்?

a) முதலாம் புலிகேசி

b) இரண்டாம் புலிகேசி

c) முதலாம் ஜெயசிம்மன்

d) இரண்டாம் தைலப்பா


53. எப்போது முதலாம் புலிகேசி வாதாபி மலைக்கோட்டையை கைப்பற்றி அதனை சுற்றி மதில் சுவர் எழுப்பினார்?

a) கி.பி.453

b) கி.பி.543

c) கி.பி.435

d) கி.பி.534


54. ஐகோல் கல்வெட்டு எங்குள்ளது ?

a) கர்நாடகா 

b) தெலுங்கானா 

c) ஆந்திரா பிரதேசம் 

d) மத்திய பிரதேசம்


55. ஐகோல் கல்வெட்டு என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?

a) பாலி

b) சமஸ்கிருதம்

c) பிராகிருதம்

d) தமிழ் 



56. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1.ஐகோல் கல்வெட்டை எழுதியவர் ரவி கீர்த்தி

2. ரவி கீர்த்தி முதலாம் புலிகேசி யின் அவைக்கள புலவர்.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



57. முதலாம் கீர்த்திவர்மன் யாருடைய மகன்?

a) முதலாம் புலிகேசி 

b) இரண்டாம் புலிகேசி 

c) முதலாம் தைலப்பா 

d) இரண்டாம் தைலப்பா



58. வாதாபி சாளுக்கிய வம்சத்தின் மிகவும் வலிமை பெற்ற அரசர் யார்?

a) முதலாம் புலிகேசி 

b) இரண்டாம் புலிகேசி 

c) முதலாம் கீர்த்திவர்மன் 

d) இரண்டாம் கீர்த்திவர்மன்


59. பாரசீக அரசர் இரண்டாம் குஸ்ரூ யாருடைய அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தார்?

a) முதலாம் புலிகேசி 

b) இரண்டாம் புலிகேசி 

c) முதலாம் கீர்த்திவர்மன் 

d) இரண்டாம் கீர்த்திவர்மன்


60.    ஹர்ஷர் மற்றும் இரண்டாம் புலிகேசி  இருவரும் ஒப்புக்கொண்ட புரிதலின்படி இருவருக்கும் இடையிலான எல்லையாக எந்த நதி வரையறை செய்யப்பட்டது?

a) நர்மதை நதி 

b) தபதி நதி 

c) துங்கபத்தரை நதி 

d) கோதாவரி நதி


61. எப்போது வெங்கி அரசை இரண்டாம் புலிகேசி கைப்பற்றினார்?

a) கி.பி. 624

b) கி.பி.641

c) கி.பி.647

d) கி.பி.655

62. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

1. வெங்கி அரசை கைப்பற்றிய பின்னர் இரண்டாம் புலிகேசி அதை தனது சகோதரர் விஷ்ணுவர்தனுக்கு வழங்கினார்.

2.முதல் கீழை சாளுக்கிய அரசர் விஷ்ணுவர்தன்


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு



63. எந்த காலப்பகுதியில் பல்லவர்கள் தக்காணத்தை சூறையாடி வாதாபியைக் கைப்பற்றினர்?

a) கி.பி-641-647

b) கி.பி-643-649

c) கி.பி-645-648

d) கி.பி-641-645


64. பல்லவர்களால் கைப்பற்றப்பட்ட வாதாபியை எந்த ஆண்டு சாளுக்கியர் மீட்டனர்?

a) கி.பி-655

b) கி.பி-666

c) கி.பி-654

d) கி.பி-667


65. முதலாம் விக்கிரமாதித்தனுடைய ஆட்சி காலம் என்ன?

a) கி.பி.645-கி.பி.660

b) கி.பி.635-கி.பி.670

c) கி.பி.639-கி.பி.653

d) கி.பி.655-கி.பி.680


66. இராஷ்டிரக்கூடர் வம்ச அரசை நிறுவியவர் யார்?

a) தந்திதுர்க்கா

b) அமோகவர்ஷர்

c) முதலாம் கிருஷ்ணர்

d) இரண்டாம் கிருஷ்ணர்


67. தந்திதுர்க்கர் எந்த சாளுக்கிய அரசரை தோற்கடித்தார்?

a) முதலாம் கீர்த்திவர்மன்

b) இரண்டாம் கீர்த்திவர்மன்

c) முதலாம் விக்கிரமாதித்தன் 

d) இரண்டாம் விக்ரமாதித்தன்


68. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

a) வாதாபிச் சாளுக்கியரின் வழித்தோன்றல்கள் கல்யாணி மேலே சாளுக்கியர் ஆவர்.

b) இவர்கள் கல்யாணியை  தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர்.

c) கல்யாணி தற்போதைய பசவ கல்யாண் எனப்படுகிறது.

d) இரண்டாம் கிருஷ்ணர் என்பவர் ராஷ்டிரக்கூடர்களின் சிற்றரசராக பீஜெபூர் பகுதியை ஆண்டு வந்தார்.


69. கி.பி.973ல் யார் மாளவரசர் பராமரை தோற்கடித்து கல்யாணியை கைப்பற்றினார்?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் தைலப்பர் 

d) முதலாம் சோமேஸ்வரர்


70. கல்யாணி மேலைச்சாளுக்கியர் யாருடைய ஆட்சி காலத்தின் போது பேரரசாக வளர்ச்சி பெற்றது?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் தைலப்பர் 

d) முதலாம் சோமேஸ்வரர்


71. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. சாளுக்கிய காலத்தில் "வெசாரா" பாணி கோவில் விமானங்களை கட்டும் முறை வளர்ச்சி பெற்றது.

2.வெசாரா பாணி தென்னிந்திய மற்றும் வட இந்திய கட்டட பாணிகளின் கலப்பு ஆகும்.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


72. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. சாளுக்கியரின் கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் உள்ள இடங்கள் ஐகோவில் உள்ள விஷ்ணு கோவில், பீஜப்பூர்  மாவட்டம் பட்டடக்கல் உள்ள விருப்பாக்ஷா கோவில்.

2.சாளுக்கியரின் குகை கோவில்கள் உள்ள இடங்கள் அஜந்தா, எல்லோரா,நாசிக்.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


73. வாதாபியில் உள்ள விஷ்ணு கோவில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த எந்த அரசரால் கட்டப்பட்டது?

a) முதலாம் ஜெயசிம்மன்

b) முதலாம் கிருஷ்ணர்

c) மங்களேசன்

d) இரண்டாம் புலிகேசி


74. பொருத்துக:

I. லக்கண்டி-1.மல்லிகார்ஜூனா கோவில்

II. குருவட்டி-2.காசி விஸ்வேஸ்வரர் கோவில் 

III. பகலி-3.மகாதேவர் கோவில் 

IV. இட்டகி-4.கள்ளேஸ்வரர் கோவில்


a) 1 2 3 4

b) 3 1 2 4

c) 2 1 4 3

d) 4 1 3 2


75. ஓவியங்களில் சாளுக்கியர்கள் யாருடைய பாணியை பின்பற்றினர்?

a) வாகடகர்கள்

b) சாதவாகனர்கள்

c) நாகர்கள்

d) திராவிடர்கள்


76. பாரசீக தூது குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்று ஒரு காட்சியை எந்த ஓவியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது?

a) அஜந்தா ஓவியங்கள் 

b) எல்லோரா ஓவியங்கள் 

c) நாசிக் ஓவியங்கள் 

d) பாகல்கோட் ஓவியங்கள்


77. பட்டடக்கல் என்னுமிடத்தில் எத்தனை கோவில்கள் உள்ளன?

a) 8

b) 6

c) 10

d) 12



78. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

1. பட்டடக்கல்லில் உள்ள பத்து கோவில்களில் நான்கு தென்னிந்திய திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளன

2.பட்டடக்கல்லில் உள்ள பத்து கோவில்களில் ஆறு வட இந்திய பாணியான நகரா பாணியில் கட்டப்பட்டுள்ளன.


a) கூற்று 1 மட்டும்

b) கூற்று 2 மட்டும்

c) இரண்டும் சரி

d) இரண்டும் தவறு


79. திராவிட‌ பாணியில்‌ கட்டப்பட்டுள்ள சாளுக்கியரின் கோவில் எது?

a) விருபாஷா கோவில்

b) பாப்பநாதர் கோவில்

c) காசி விஸ்வேஸ்வரர்

d) மல்லிகார்ஜுனா கோவில்



80. நகரா பாணியில்‌ கட்டப்பட்டுள்ள சாளுக்கியரின் கோவில் எது?

a) விருபாஷா கோவில்

b) பாப்பநாதர் கோவில்

c) காசி விஸ்வேஸ்வரர்

d) மல்லிகார்ஜுனா கோவில்



81. விருப்பாக்ஷா கோவில் எந்தக் கோவிலை மாதிரியாக கொண்டு கட்டப்பட்டுள்ளது?

a) காஞ்சி கைலாசநாதர் கோயில்

b) காசி விஸ்வேஸ்வரர் கோவில் 

c) மல்லிகார்ஜுனார் கோவில் 

d) கள்ளேஷ்வரர் கோவில்


82. இராஷ்டிரக்கூடர்களின் ஆட்சிக்காலம்?

a) ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை

b) எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை

c) ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை

d) எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை


83. இராஷ்டிரக்கூடர்களின் தாய்மொழி என்ன?

a) கன்னடம்

b) தெலுங்கு

c) சமஸ்கிருதம்

d) பிராகிருதம்


84. இராஷ்டிரக்கூடர் வம்சத்தை நிறுவிய தந்திதுர்கர் யாரிடம் உயர் அதிகாரியாக பணியாற்றினார்?

a) கல்யாணி சாளுக்கியர்கள்

b) வாதாபி சாளுக்கியர்கள் 

c) சாதவாகனர்கள்

d) பல்லவர்கள்


85. தந்திதுர்கரை அடுத்து பதவி ஏற்றவர்?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) அமோகவர்ஷர்


86. எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) அமோகவர்ஷர்


87. இராஷ்டிரக்கூட அரசர்களில் தலைசிறந்த அரசர் யார்?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) அமோகவர்ஷர்


88. மான்யகேட்டா/மால்கெட் என்னும் இடத்தில் தனது புதிய தலைநகரை உருவாக்கிய இராஷ்டிரக்கூட அரசர் யார்?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) முதலாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) அமோகவர்ஷர்



89. அமோகவர்ஷர் ஜினசேனர் என்னும் துறவியால் எந்த சமயத்தை தழுவினார்?

a) பௌத்தம் 

b) சமணம் 

c) ஆசீவகம்

d) வைணவம்


90. அமோகாவர்ஷருக்கு பிறகு பதவியேற்ற அவருடைய மகன் யார்?

a) முதலாம் தைலப்பர் 

b) இரண்டாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) மூன்றாம் கிருஷ்ணர்


91. இரண்டாம் கிருஷ்ணர் எந்த சோழ அரசனால் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்?

a) ராஜராஜ சோழன் 

b) பராந்தக சோழன் 

c) ஆதித்த கரிகாலன் 

d) விஜயாலய சோழன்


92. எப்போது இரண்டாம் கிருஷ்ணர் பராந்தக சோழனால் வல்லம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார்?

a) கி.பி.906

b) கி.பி.912

c) கி.பி.914

d) கி.பி.916


93. இராஷ்டிரக்கூட வம்சத்தின் தலைமை வாய்ந்த கடைசி அரசர் யார்?

a) மூன்றாம் கோவிந்தர் 

b) இரண்டாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) மூன்றாம் கிருஷ்ணர்


94. சோழர்களை தக்கோலம் போர்க்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றிய இராஷ்டிரக்கூட அரசர் யார்?

a) அமோகவர்ஷர் 

b) இரண்டாம் தைலப்பர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) மூன்றாம் கிருஷ்ணர்


95. மூன்றாம் கிருஷ்ணர் எங்கு கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டினார்?

a) கன்னியாகுமரி 

b) இராமேஸ்வரம்

c) திருநெல்வேலி

d) மதுரை 


96. எந்த அரசருக்கு பின் இராஷ்டக்கூடர் வம்சம் வீழ்ந்தது?

a) முதலாம் கிருஷ்ணர் 

b) மூன்றாம் கோவிந்தர் 

c) இரண்டாம் கிருஷ்ணர் 

d) இரண்டாம் கோவிந்தர்



97. கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானது எது?

1. கன்னட மொழியின் முதல் கவிதை நூல் கவிராஜ மார்க்கம்.

2.கவிர்ஜமார்க்கம் என்னும் நூலை எழுதியவர் அமோகவர்ஷர்.

3.கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் என கருதப்படுபவர்கள் ஆதிக்கவி பம்பா,ஸ்ரீ பொன்னா,ரன்னா


a) 1 மட்டும்

b) 2 மட்டும்

c) 3 மட்டும்

d) மேற்கூறிய எதுவுமில்லை 


98. விக்கிரமார்ஜூன விஜயம் எனும் நூலை எழுதியவர் யார்?

a) ஆதிக்கவி பம்பா

b) ஶ்ரீ பொன்னா

c) ரன்னா

d) அமோகவர்ஷர்


99. யாருடைய வாழ்க்கையை ஆதிபுராணம் சித்தரிக்கின்றது?

a) முதலாம் தீர்த்தங்கரர் ரிஷபதேவர்

b) இரண்டாம் தீர்த்தங்கரர் அஜிதநாவர்

c) மூன்றாம் தீர்த்தங்கரர் சம்பவநாதர்

d) நான்காம் தீர்த்தங்கரர் அபிநந்தநாதர்




100. தவறான கூற்றை காண்க:

a) எல்லோராவில் கைலாசநாதர் கோவிலின் விமானத்தின் உயரம் 90 அடிகள்.

b) எல்லோரா கைலாசநாதர் கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலின் சாயலை பெற்றுள்ளது.

c) எலிபெண்டா தீவின் இயற்பெயர் ஸ்ரீபுரி

d) ஸ்ரீபுரி தீவு உள்ளூர் மக்களால் காரபுரி என அழைக்கப்படுகிறது 


101.   ஶ்ரீபுரி தீவிற்க்கு யார் எலிபெண்டா தீவு என பெயரிட்டனர்?

a) ஆங்கிலேயர்கள்

b) போர்த்துக்கீசியர்கள்

c) டேனிஷ்காரர்கள்

d) பிரெஞ்சுக்காரர்கள்


Post a Comment

புதியது பழையவை