TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE

TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE

---------------------------------------------------------------------------------------------------------------------------

 

  • புறநூல்
  • 400 பாடல்கள்
  • அகவற்பா
  • 158 புலவர்கள்
  •  தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை
  •  புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என்ற வேறு பெயர்களும் உண்டு
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துச் சிவனைப் பற்றியது
  • அறம், பொருள், வீடு என்ற மூன்றையும் பாடும் நூல் புறநானூறு
  • பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லை
  • பெண்கள் உடன் கட்டை ஏறினர் - பூதப்பாண்டியன் மனைவி கோப்பெரும் பெண்டு உடன்கட்டஏறினாள்
  • பெண்கள் கைம்மை நோன்பு இருந்தனர்

அடையாளப் பூ
  • சேரன் - போந்தை (பனை)
  •  சோழன் - ஆர் (அத்தி)
  • பாண்டியன் - வேம்பு

அடையாளக் கொடி
  • சேரன் - வில்
  • சோழன் - புலி
  • பாண்டியன் - கெண்டை (மீன்)

 தலை நகரம்
  • சேரன் -வஞ்சி
  • சோழன் - உறையூர் (உறைந்தை)
  • தஞ்சாவூர்(தஞ்சை) உறையூருக்குக் 'கோழி' என்ற பெயரும் உண்டு
  •  பாண்டியன் - மதுரை
  • பல்லவன் - காஞ்சிபுரம் (காஞ்சி)
 
துறைமுகங்கள்
  • சேரன் - முசிறி, தொண்டி (ஐங்குறுநூறு)
  •  சோழன் - காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார், புகார்)
  •  பாண்டியன் - கொற்கை, தொண்டி (அகநானூறு)
  •  பல்லவன் - மாமல்லபுரம் (மல்லை )

வேறுபெயர்கள்
  •  சேரன் - குட்டுவன், கடுங்கோ , வானவன், வானவரம்பன், கோதை, கோக்கோதை, இரும்பொறை
  •  சோழன்- வளவன், கிள்ளி, செம்பியன்
  • பாண்டியன் - செழியன், மாறன், வழுதி, மீனவன், தமிழர் பெருமான், கவுரியர் 
  • கரிகாலன் போர்செய்த இடம் வெண்ணிப் பரந்தலை நெடுஞ்செழியன் போர் செய்த இடம் தலையாலங் கானம்.
  • சேரநாட்டு பார் மாந்தை
  • நந்தர்களின் பார் பாடலிபுத்திரம்
  • பல்யானை செல்கெழு குட்டுவனுக்குக்குரியது உம்பர்க்காடு
  • பாரதப் போரில் சோறு கொடுத்தவன் உதியஞ்சேரல்
  • சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித்த இடம் வல்லம்
  • பாரிக்கு உரியது பரம்புமலை
  • பேகனுக்கு உரியது பழனிமலை
  • ஓரிக்கு உரியது கொல்லிமலை
  • ஆய்க்கு உரியது பொதிகைமலை
  •  அதியமானுக்கு உரியது தகடூர்
  • நன்னனுக்கு உரியது நவிரமலை
  • கபிலரை ஆதரித்தவர் பாரி
  • ஔவையாரை ஆதரித்தவன் அதியமான்
  • பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன்
  • குமணன் பல மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன்
  • பிசிராந்தையாரிடம் நட்புக் கொண்டவன் கோப்பெருஞ்சோழன்
  • அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றவர் -ஒளவையார்
  • கோப்பெருஞ் சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் -புல்லாற்றூர் எயிற்றியனார்.
  • நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர்- கோவூர்கிழார்.
  • கண்ணகிக்காகப் பேகனைப் பாடியவர்கள் அரிசில் கிழார், கபிலர், பரணர், பெருங்குன்றூர்கிழார்
  •  இளங்குமணனின் மனத்தை மாற்றியவர் பெருந்தலைச் சாத்தனார் 
  • சேரனுக்கும் சோழனுக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்தவர் முடமோசியார்
  • கழாத்தலையார் என்ற புலவரைப் பாடியவர் கபிலர்
  • கபிலரைப்பாடிய புலவர் நப்பசலையார்
  • பொத்தியார் என்ற புலவரைப் பாடியவர் பிசிராந்தையார்
  • மோசி என்ற புலவரைப் பற்றிப் பாடிய புலவர் - பெருஞ்சித்திரனார்
  •  புறநானூறு காட்டும் நான்கு பெருந்தெய்வங்கள் சிவன் - கண்ணன், பலதேவன், முருகன்
  • பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்வி செய்தமை குறித்து வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன
  •  ஆநிரைகளைக் கவர்வோர் குடும் பூ வெட்சிப்பூ
  • ஆநிரைகளை மீட்போர் குடும் பூ கரந்தைப்பூ
  •  மண்ணாசை கொண்டு போர் எடுப்போர் குடும் பூ வஞ்சிப்பூ
  • போர் தடுப்போர் குடும் - காஞ்சிப்பூ
  • மதிலைக்காப்பர் சூடும் பூ நொச்சிப்பூ
  • மதிலை முற்றுகையிடுவோர் குடும் – உழிஞைப்பூ
  • பெரும்போரில் இருபெரு வேந்தரும் குடும் பூ தும்பைப்பூ
  • நிலையாமையைக் கூறும் திணை காஞ்சித்திணை
  • நடுகல்லைப் பற்றிக் கூறும் தொல்காப்பியத் திணை வெட்சி
  • நடுகல்லைப் பற்றிக் கூறும் புறப்பொருள் வெண்பா மாலையின் திணை பொதுவியல்.

 

 மேற்கோள்

"இறைஞ்சுக பெருமதின் சென்னி, சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' – காரிகிழார்

 

 'வழிபடுவோரை வல்லறி தீயே

 பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே"

- பன்பொதி பசுங்குடையார்

 

'அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல்

மறவை ஆயின் போரொடு திறத்தல்'

- கோவூர்கிழார்

 

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"

-மதுரை இளநாகனார்

 

 'ஒருவளை ஒருவன் அடுதலும் தொலைதலும்

 புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை'

- இடைக்குன்றூர்க் கிழார்

 

 'வரிசை அறிதலோ அரிதே, பெரிதும்

ஈதல் எனிது

- கபிலர்

 

 'புற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே'

- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

 

 'உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே"

- குடபுலவியனார்

 

 'யாதும் ஊரே யாவரும் கேளிர்  தீதும் நன்றும் பிறர்தர வாரா'

- கணியன் பூங்குன்றனார்

 

"செல்வக் காலை நிற்பினும்

 அல்லற் காலை நில்லலன் மன்னே

- கோப்பெருஞ் சோழன்

 

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

வேல்வடித்துக் கொடுத்தல் வேந்தற்குக் கடனே

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

- பொன்முடியார்

 

உண்பது நாழி உடுப்பவை இரண்டே - நக்கீரர்

 

செல்வத்துப் பயனே ஈதல் - நக்கீரர்

 

'வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை"

- ஔவையார்

 

Post a Comment

புதியது பழையவை