TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE

TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE

TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE

TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE

---------------------------------------------------------------------------------------------------------------------------


  • பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகையுள் ஒன்று.
  • பரிபாடலின் சிற்றெல்லை 25அடி. பேரெல்லை 400 அடி
  • தொல்காப்பியர் பரிபாட்டு அகப்பொருளில் வரும் என்று கூறுகிறார்.
  • பாவகையால் பெயர்பெற்ற நூல் பரிபாடல்
  •  எட்டுத் தொகை நூல்களிலே அகத்திற்கும் புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
  • பொருட்கலவை நூல் என்று கூறப்படுவது பரிபாடல்.
  •  தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
  • எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்
  • எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு, 1) பரிபாடல் 2) கலித்தொகை
  • பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல்.
  • பரிபாடல் என்ற நூல் எழுபது பாடல்களைக் கொண்டதாக இருக்கும். –
  • திருமாலுக்கு 8, முருகள் 34 காடுகிழாள் (காளி) 4 வையை 26, மதுரை 4 (8+31+1+26+4F 70 - இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடலில் 22 பாடல்கள் மட்டும் உள்ள ன. திருமால் 6, முருகன் 8, வையை 8. (6+8+8= 22)
  • பரிபாடலைப் பாடிய புலவர்கள் 13 பேர்  
  • நல்லச்சுதனார், நன்னாகனார், கேசவனார், கண்ணாகனார், பித்தாமத்தர் போன்றோர் பரிபாடலுக்கு இசை வகுத்துள்ளனர்.
  • வையைப் பற்றிய பாடல்கள் அகம் சார்ந்தன.
  • கடவுள் வாழ்த்துப் பற்றிய பாடல்கள் புறம் சார்ந்தன.
  • பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
  • பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
  •  முதலில் பதிப்பித்தவர் உ.வே. சாமிநாதையர்.
  • எட்டுத்தொகை நூல்களில் பரிபாடலில் மட்டுமே நான், போன்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. - "நல்லாள் கரைநிற்ப நான் குளித்த பைந்தடத்து" (6:87)
  •  கின்று' என்ற காலம் காட்டும் இடைநிலை முதன் முதலில் பரிபாடலில்தான் காணப்படுகிறது.
  • பலதேவனுக்கு உரியன: பனைக் கொடியும், நாஞ்சில் படையும் –
  • தொல்காப்பியர் பனைக் கொடிக்குத் தனிவிதி கூறியுள்ளார்.
  • அம்பா ஆடல் என்பது தைநீராடல் ஆகும்.
  • தை நீராடல் இன்று மார்கழி நோன்பாக மாறியுள்ளது என்பர். –
  • நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பன நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும். (தனிப்பாடல் திரட்டு 'தோழம்' என்ற ஒன்றையும் கூறுகிறது)
  • இருங்குன்றம் என்பது திருமால் இருஞ்சோலை, தண்பரங்குன்றம் என்பது திருப்பரங்குன்றம், திருவரை என்பது அழகர்மலை.
  • திருமால் இருஞ்சோலையில் உள்ள ஆறு சிலம்பாறு (சின்னாறு என்று வழங்குகிறது.)
  • திருவாதிரைக்கு உரிய தெய்வம் சிவபெருமான்.
  • பாற்கடல் கடைந்தது, கருடன் தன் தாயின் துயர் களைக் பிரகலாதன் கதை, முருகன் பிறப்பு, அவன் போர்க்கம் பெற்றது, அகலிகை சாபம் போன்ற செய்திகள் முதன்முதலில் பரிபாடலில்தான் காண முடிகிறது. இக் கருத்துகள் பிற தொரை நூல்களில் இல்லாதவை ஆகும்.
  • உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்
  • பதிற்றுப்பத்தில் பண் இல்லை
  • பரிபாடலில் தாளம் இல்லை .

 

மேற்கோள்

"பொன்னும் பொருளும் போகமும் அல்ல, நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதாரோயே' -

- கடுவன் இளவெயினனார்

 "மாயோன் கொப்பம் மலர்ந்த தாமரைப் பூவோடு புரையும் சீரூர்; பூவின் இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல்கோயில் தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்'

- புறத்திரட்டு, மதுரை பற்றிய பரிபாடல்

 


Post a Comment

புதியது பழையவை