TAMIL ONLINE TEST SERIES FOR ALL TNPSC EXAMS : CLICK HERE
TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : CLICK HERE
TNPSC TAMIL PREVIOUS YEAR QUESTIONS : CLICK HERE
TNPSC HISTORY PYQ BANK [ 3000Q ] ONLINE TEST SERIES : CLICK HERE
---------------------------------------------------------------------------------------------------------------------------
- அகதூல்
- 400 பாடல்கள்
- ஆசிரியப்பாவால் ஆனது
- பாடியவர்கள் 145
பேர்
- தொகுத்தவர் உருத்திர சன்மனார்
- தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
- கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
- அகநானூற்றின் கடவுள் வாழ்த்து சிவனைப் பற்றியது
- மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
- 1-120 பாடல் களிற்றியானை நிறை (120 பாடல்கள்)
- 121-300 பாடல்
- மணிமிடைபவளம் (180 பாடல்கள்)
- 301-400 பாடல் - நித்திலக் கோவை (100 பாடல்கள்)
- சிற்றெல்லை 13
அடி பேரெல்லை 31 அடி
- இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு
- பாயிரம் பாடியவன் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்
- ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் அகநானூறு
- அவ் ஒழுங்கு முறை வருமாறு
- 1, 3, 5, 7... - பாலை -200
- 2, 8, 12, 18... – குறிஞ்சி-80
- 4, 14, 24... - முல்லை – 40
- 6, 16, 26... - மருதம் – 40
- 10, 20, 30.... - நெய்தல் – 40
- முதலில் பதிப்பித்தவர் வே. ராசகோபால ஐயங்கார்
- நூல் முழுவதும்
உரை எழுதியவர்கள் நா.மு. வேங்கடசாமி நாட்டார், இரா.
வேங்கடாசலம் பிள்ளை
- குடவோலைத் தேர்தல் குறித்துக் கூறும் நூல் அகநானூறு
- சங்க இலக்கியத்துள் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகச் கூறும் அகநூல் அகநானூறு.
- வடநாட்டுச்
செய்திகள் (நந்தர்கள், மோரியர் படையெடுப்பு,
மோரியர்க்கு வடுகர்துணை) கூறும் நூல் அகநானூறு.
- வரலாற்றுச்
செய்திகளை மிக அதிகமாகக் கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்
- சோழ நாட்டு வருவாய் குடந்தையில் வைத்துக் காக்கப்பட்டது
- பண்டைத் தமிழர்
திருமணம் குறித்துக் கூறும் நூல் (86, 136) அகநானூறு
- திங்கள் ரோகிணியுடன் கூடிய நன்நாளில் திருமணம் நடந்தது
- கந்து என்பது வழிபாட்டிற்குரிய மரத்தூண்
- பங்குனி விழா நடைபெற்றது
'பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குரீஇக் கங்கை
நீர்முதல் கரந்த
நிதியம் கொல்லோ ' – மாமூலர்
"நந்தன் வெறுக்கை எய்தினும்
மற்றவண்
தங்கலர் வாழி தோழி
- மாமூலர்
'பவனர்
தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்"
- எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
'தாததுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்'
- குறுங்குடி
மருதனார்
'யாமே,
பிரிவின்றி இயைந்த துவரா நட்பின்
இருதலைப்புள்ளின்
ஒருயிர் அம்மே" - கபிலர்
"தமிழ்கெழு
மூவர் காக்கும் நிலம்" - மாமூலர்
கருத்துரையிடுக