இணைந்துக் கொள்ளுங்கள்


TELEGRAM : CLICK HERE

WhatsApp : CLICK HERE

·         கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும். பன்னெடுங்காலமாக முன்னோர்களால் வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் கல்வியின் முதன்மை நோக்கமான, தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல்' என்னும் சீரிய பணியில் தமிழகம் கடந்து வந்த பாதை போற்றுதலுக்குரியது.

·         கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொண்டு வருவதால் 'கல்லுதல்' என்ற பொருளின் அடிப்படையில் கல்வி என வழங்கலாயிற்று. “கல்” என்ற சொல்லுக்குத் “தோண்டு” என்பது பொருள்

·         பண்டைய தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கல்லாதவன் மனது "இருளின் உறைவிடம்" எனவும், கற்பதற்கான காலமாக இளமைப் பருவமும் கருதப்பட்டன.

 

 

தமிழ் இலக்கியங்களில் கல்வி

·         கல்வி என்ற சொல்லும் அது தொடர்பான பல கருத்துகளும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பதிவாகியுள்ளன. கல்விக்கு அடிப்படையான நூலியல், உரையியல் சிந்தனைகள் தொல்காப்பியத்தில் காணப்படுவதும் கல்வியியல் சிந்தனையாகக் கருதத் தோன்றுகிறது.

·         பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை ஓதற்பிரிவு (தொல்.அகத். 25) எனக் குறிப்பதோடு எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு, 'பெருமிதம்' தோன்றும் (தொல்.மெய். 9) என்றும் கூறுகிறது.

·         தொல்காப்பியமும் நன்னூலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களை வகுத்துள்ளன.

·         உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" (புறம் 183, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்) என்ற புறநானூற்று அடிகள் பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதைச் சிறப்புடன் குறிக்கின்றன.

·         தமிழ் அற நூலான நாலடியார் "மிகுதியான நூல்களை ஆண்கள் சேகரித்து படிப்பது அவர்கள் வீடு முழுக்க ஒலித்தது" என குறிப்பிடுகிறது.

 

கல்வியின் சிறப்பு

துணையாய் வருவது தூயநற் கல்வி -திருமந்திரம்.

கல்வி அழகே அழகு - நாலடியார்

இளமையில் கல் - ஔவையார்

 

·         "சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது; தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது" என்னும் மா. இராசமாணிக்கனாரின் கருத்து, தமிழகத்தில் அன்று நிலவிய கல்விமுறையின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறது.

 

·         சங்கம் என்ற அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது.

·         இதுதவிர, மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பௌத்தப் பள்ளி போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைத் தமிழகத்தில் செய்து வந்துள்ளன.

·         மன்னராட்சிக் காலத்தில் போர்ப்பயிற்சிகளைத் தருவதும் முக்கியமான கல்வியாகக் கருதப்பட்டது.

·         கற்பிக்கும் ஆசிரியர்களும் மூவகைப் பிரிவினராக இருந்தனர். இவர்களிடம் கற்ற மாணவர்களை முறையே சிறுவன், மாணவன், கேட்போன் என்று வகைப்படுத்தினர்.

 

கணக்காயர் -எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர்.

ஆசிரியர் பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்.

குரவர் சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்.

பள்ளிகள் கலைகள், கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கின.

மன்றம் கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது.

சான்றோர் அவை- செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.

 

·         கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப்

“பள்ளி” என்று பெரிய திருமொழியும் ,

“ஓதும் பள்ளி” என்று திவாகர நிகண்டும் ,

“கல்லூரி” என்று சீவக சிந்தாமணியும் குறித்துள்ளன.

·         கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயரிட்டு அழைத்தனர். முன் மூன்றும் ஓலைக்கற்றையையும் பின்னிரண்டும் உட்பொருளையும் சிறப்பாகக் குறித்தன.

·         சமண, பௌத்தப் பள்ளிகள் கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்.

·         சமணத்தைச் சேர்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கினர். அவர்கள் தங்களின் தங்குமிடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்குப் கற்பித்தனர்.

·         'பள்ளி' என்ற சொல்லுக்குப் 'படுக்கை' என்று பொருள். அவர்களின் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று. பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும்.

·         பயின்ற சமணப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றித் திருச்சி மலைக்கோட்டையிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகுமலையிலும் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

·         இன்று தமிழர்கள் பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் பட்டி மண்டபம் என்ற கலைவடிவம் சமயத் துறையிலிருந்து தோன்றியது

·         பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று மணிமேகலையில் சுட்டப்படுகின்றது.

·         'ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என்று அந்நூல் பேசுகிறது.

·         தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த சீனப்பயணி யுவான் சுவாங், அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கிச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார் என்ற செய்தி பௌத்தமும் சமணமும் தமிழகத்தின் கல்வி வரலாற்றுக்குச் செய்த பெரும்பங்கினை விளக்குகிறது.

·         சமணப் பள்ளிகளிலும் புத்த விகாரைகளிலும் இருந்த நூலகங்கள் மக்களிடையே மேம்பட்ட கல்வியைப் பெற உதவின. சங்க இலக்கியங்கள் மக்களின் அனைத்துப் பிரிவினரும், பெண்களும் முழு கல்வியறிவுபெற்று தகுதியானவர்களாக இருந்ததைக் காட்டுகின்றன, பழங்கால நாகரீகங்களில், பெண்கல்வியறிவு மிகுந்த மக்களாக தமிழர் விளங்கியுள்ளனர்.

 

 

 

 

 

பெண்களும் கல்வியும்

·         சங்க கால பெண்களுக்கு இலக்கியம், இசை, நாடகம் போன்றவற்றில் நல்ல பயிற்சி வழங்கப்பட்டது. அக்காலத்தில் பல பெண்கள் இசையிலும், பிற கலைகளிலும் புகழ்பெற்று விளங்கியதை சங்க இலக்கியச் சான்றுகள் சுட்டுகின்றன.

·         சங்ககால கவிஞர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். பெண்பாற் புலவர்களான ஔவையார், காக்கைப் பாடினியார், முடத்தாமக் கண்ணியார்போன்ற புலவர்கள் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர்.

·         வந்தவாசி அருகிலுள்ள வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

·         பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவியிருந்தார்.இவை, சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.

 

சங்க காலத்தில் இருமொழிக் கல்வி

·         மொழிக் கல்வி: கல்வி என்பது தாய்மொழிக் கல்வியைக் குறிக்கும். இடைக்காலத்தில் பிற மொழி கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் இருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதன் ஆணிவேராகச் சங்க காலத்திலும் வடமொழி அதாவது சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் அறிந்தவர்கள் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

·         அதன் உச்சகட்டமாகத்தான் செய்யுள் ஈட்டச் சொற்களில் வட சொல்லைத் தொல்காப்பியர் சேர்த்திருப்பதும் (இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே(எச்சவியல்.1) குறிப்பிடத்தகுந்தது. அதாவது, சங்க காலத்தில் இருமொழிக் கல்வி இருந்தது என்பதற்கு அதை ஒரு சான்றாகக் கொள்ளலாம்.

·         அதற்கு மேலாக, நூலின் வகைகளாக முதல் நூல், வழி நூல் என்று இரண்டு வகையைக் குறிப்பிட்டு(மரபியல்.95) வழி நூலின் வகைகளில் ஒன்றாக "மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்' என்று கூறுவது(மரபியல்.99) இன்று நாம் வழங்கும் மொழிபெயர்ப்பு நூல்களே.

 

கல்வி நிலை

·         "கல்வி நிலை' என்பது அடிப்படைக் கல்விக்குப் பிறகு தானே விரும்பும் நூலைப் படித்து அத்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல். அது பற்றியும் பழந்தமிழ் நூல்கள் பதிவு செய்துள்ளன. தொல்காப்பியர் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாக "நோக்கு' என்பதைக் கூறி(செய்.1) அதை பதிவு செய்துள்ளார்.

·         உயர் கல்வி கற்க வேண்டியிருப்போர், கடிகை அல்லது கல்லூரிகளில் பயின்றனர்

·         காஞ்சிபுரம் “கல்வியில் சிறந்த காஞ்சிமாநகர்” என்றழைக்கப்பட்டது.

 

 

 

சங்கம் மருவிய காலத்தில் கல்வி

பல்லவர் காலம்:

·         பிராகிருதத்தையும், சமசுகிருதத்தையும் ஆதரித்தனர்.

·         அவர்கள் சமசுகிருதப் பள்ளிகளை காஞ்சியிலும், சிலவற்றை புதுச்சேரியிலும் நிறுவினர். இவை தமிழகத்திலும் தென்னகத்தின் பிற பகுதியிலிருந்தும் சிறந்த மாணவர்களை கவர்ந்தன. அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு சிறந்த மாணவர்களை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஈர்க்கக் கூடியதாக பௌத்தம் இருந்தது.

·         இதில் போதி தருமன் குறிப்பிடத்தக்கவராவார். இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் சரிவு கண்டன, என்றாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்கள் படைக்கப்பட்டன. இந்தக் காப்பியங்கள் சங்க அக இலக்கிய மரபுகளான பாத்திரத்தின் பெயரையோ அல்லது அவர்களைப் பற்றிய குறிப்பையோ குறிப்பிடாத தன்மையிலிருந்து மாறத் துவங்கியதைக் காட்டின, இவை சமசுகிருதத்தின் செல்வாக்கு வளர்ந்து வருவதைக் காட்டின.

·         காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் அக்காலத்தில் பொது ஆவணகாப்பகமாகவும் இருந்துள்ளது

·         யுவாங் சுவாங் என்னும் சீனப்பயணி நரசிம்மவர்ம பல்லவர் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகைபுரிந்தார்

·         நாளந்தா பல்கலைக் கழகத்தின் வேந்தராக இருந்த தர்மபாலர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

·         யுவான் சுவாங் தன்னுடைய குறிப்புகளில் காஞ்சிபுரத்தை பற்றி பின்வருமாறு தெரிவிக்கிறார்:

·         காஞ்சிபுரம் என்ற நகரம் “கற்றலின் மையமாக விளங்குகிறது”

 

சோழர் காலம்

·         சங்க காலத்துக்குப் பிறகு, தமிழகத்தில் பிராமணர் குடியேற்றமும் அவர்களுக்கு வேதங்களை கற்பிக்கும் காலமும் தோன்றியது. பிராமணர்கள் பல சலுகைகளை பெறத் துவங்கினர். குரு சிஷ்ய பாரம்பரியம் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த கட்டத்தில் பொது மக்கள் மத்தியில் இருந்த பெண்களின் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்தது. சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படும் சூழலை கீழ்காணும் மனுஸ்ருமிதி உத்தரவுகள் கூறுகின்றன,

·         தமிழ்வழிக் கல்வியானது கோயில் மற்றும் சமயத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தது.

·         மக்களுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டது. கலைத்திட்டமும் பாடத்திட்டமும் தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டிருந்தது.

·         அக்கால கல்வெட்டுகளிலிருந்து ஆசிரியர்களின் தகுதிகள், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் பள்ளிகளுக்கு அளித்த நிலங்கள் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ளமுடிகிறது.

·         இராஜராஜன் சதுர்வேதி மங்கலம் (எண்ணாயிரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்திருந்தது) புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது.இக்கல்லூரியில் 340 மாணவர்களும் 14ஆசிரியர்கள் பணியாற்றினர்.

·         1048ல் திருபுவனையில் (பாண்டிச்சேரியில் உள்ளது) வேதக் கல்லூரி செழித்தோங்கியது.

·         1061ல் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள  திருமுக்கூடலில் ஒரு வேதக் கல்லூரி செழித்தோங்கியது.

·         திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றியும், வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு மருத்துவப் பள்ளி பற்றியும் குறிப்பிடுகிறது.

·         எண்ணாயிரம், திருபவணி மற்றும் குன்றத்தூர் ஆகிய இடங்கள் பிற்காலச் சோழர்கள் காலத்தில் காணப்பட்ட கல்விக்கூடங்கள் ஆகும்.

 

பாண்டியர்கள் காலம்:

·         பாண்டிய மன்னர்கள் சமஸ்கிருதத்தை ஆதரித்ததை அவர்களின் செப்புத் தகடுகளின் மூலம் அறியலாம்.

·         பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் கடிகை, சாலை மற்றும் வித்யாசாதனம் என அழைக்கப்பட்டது.

·         ஆசிரியர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அவ்வகை நிலங்கள் சாலபோகம் என்றழைக்கப்பட்டது.(எ.கா: கன்னியாகுமரியிலுள்ள வல்லப பெருஞ்சாலை) பாண்டியர்கள் காலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது. கல்வியை மேம்படுத்துவதில் மடங்கள் முக்கியப் பங்கு வகித்தன.

 

·         தமிழை வளர்க்கவும் மகாபாரதத்தை மொழி பெயர்க்கவும் ஒரு கலைக்கலகம் அமைக்கபட்டதாக ஒரு செப்பேடு கூறுகிறது.

·         பாண்டியர்கள் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள காந்தளூர்ச் சாலை மற்றும் பார்திபசேகரபுரம் ஆகிய இடங்களில் கல்வி நிலையங்களை அமைத்தனர்.

 

மராத்தியர் கால கல்வி

 

·         ஒரு அச்சகத்தை நிறுவுவது தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னன் இரண்டாம் சரபோஜியின் நவீனத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. (இதுவே மராத்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளுக்கான முதலாவது அச்சகமாகும்).

·         சரஸ்வதி மஹால் நூலகத்தை மேம்படுத்துவதும் அவரது திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அவரது அரசவை மூலம் நவீனப் பொதுப் பள்ளிகளை நிறுவி ஆங்கிலம் மற்றும் பிரதேச மொழிகளில் பாடங்கள் இலவசமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது அதிநவீனத் திட்டமாக இருந்தது.

·         சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் 1820ம் ஆண்டு சரஸ்வதி மகால் என்னும் நூலகமாக தஞ்சாவூரில் நிறுவினார்.

·         மராத்திய அரசவையின் அன்றாட அலுவல்கள், 18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு- மராத்தியர் இடையே நடந்த கடிதப்போக்குவரத்து ஆகியன மோடி எழுத்துவடிவ ஆவணங்களாக அமைந்துள்ளன.

·         மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன. அவர் காலத்தில் வாழ்ந்த தரங்கம்பாடி சமய பரப்புக்குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ். ஜான் என்பவரைக் கல்வித் துறையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.

·         ஜான், கல்வித் துறையில் புதிய பரிசோதனைகளையும் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார்.

·         பாடத்திட்டம் மற்றும் கல்விப்பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு உறைவிடப்பள்ளி முறையை அறிமுகம் செய்தார்.

·         1812இல் ஆங்கிலேய காலனி அரசுக்கு அவர் சமர்ப்பித்த முக்கியத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இந்திய மாணவர்களுக்கு இலவசப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கிறித்தவர் அல்லாத மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி கிடைக்காத சூழல் நிலவிய காலகட்டம் அதுவாகும்.

·         சென்னை ஆளுநர் மன்றோ 1820ஆம் ஆண்டில் தொடக்கப் பொதுப்பள்ளிகளுக்கான ஒரு திட்டத்தை யோசனையாக கூறினார். ஆனால் கம்பெனி அரசு 1841ஆம் ஆண்டு வரை நவீனப் பள்ளிகளை உள்ளூர் குழந்தைகளுக்காகச் சென்னையில் ஏற்படுத்தவேவில்லை.

·         இதற்கு மாறாக ஜெர்மானிய சமயப்பரப்புக்குழு ஆங்கில வழி மற்றும் வட்டார மொழிப்பள்ளிகள் பலவற்றைத் தெற்கு மாகாணங்களில் 1707ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளனர்.

·         சரபோஜி, சமயபரப்புக்குழு மற்றும் காலனி அரசுக்கு முன்னோடியாக 1803ஆம் ஆண்டிலேயே தஞ்சாவூரில் கிறித்தவர்கள் அல்லாத உள்ளூர் குழந்தைகளின் கல்விக்காக முதலாவது நவீனப் பொதுப்பள்ளிகளை நிறுவினார். உயர் கல்வி நிறுவனங்களை இந்திய அரசர்கள் நடத்திய போதிலும் அவர்கள் தொடக்கப் பள்ளிகளை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

·         ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு எனத் தஞ்சாவூர் மற்றும் இதர அண்டை இடங்களில் இலவச தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை நிறுவி நிர்வகித்தது மன்னர் சரபோஜியின் மிக முக்கியமான முன்முயற்சியாகும்.

·         அனைத்து நிலைகளிலான பள்ளிகள், நன்கொடைப் பள்ளிகள், கல்லூரிகள், சமஸ்கிருத உயர் கல்விக்கான பாடசாலைகள் ஆகியன அவற்றில் அடங்கும்.

·         ஆளுநர் மன்றோவின் கல்விக் கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட 1823ஆம் ஆண்டின் அறிக்கைப்படி தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக 21 இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன. சமயப் பரப்பாளர்கள் 19 பள்ளிகளையும், ஆலய நிர்வாகம் ஒரு பள்ளியையும் நடத்தின. ஆசிரியர்கள் தாங்களாகவே இலவசமாக மூன்று பள்ளிகளை நடத்தினார்கள். மிக முக்கியமான புனிதத்தல வழித்தடங்களில் அமைந்திருந்த பதிமூன்று சத்திரங்கள் மூலமாக யாத்ரிகர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவும் உறைவிட வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.

·         அனைவருக்கும் இந்தப் பள்ளிகள் சேவை புரிந்தன. புதிய அல்லது நவீன கல்வி முறைக்காக 'நவவித்யா' முறையை அரசவை நடத்திய இந்தப் பள்ளிகளில் அறிமுகம் செய்தது மற்றொரு முக்கிய முன்முயற்சியாகும்.

·         1803இல் நிறுவப்பட்ட முக்தாம்பாள் சத்திரம் அரசரின் விருப்பமான அன்ன சத்திரமாகும். அங்கு 1822 ஆம் ஆண்டில் இரண்டு வகுப்பறைகளில் காலையும் மாலையும் 15 ஆசிரியர்கள் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மொத்தம் 464 மாணவர்களுக்குக் கற்பித்தனர்.

·         மதப்பரப்பாளர்கள் கண்ணந்தன்குடியில் நடத்திய ஏழைக் கிறித்தவ மாணவர்களுக்கான பள்ளியையும் சரபோஜி ஆதரித்தார். அவரது வள்ளல் தன்மைக்குச் சான்றாக ஆதரவற்றோருக்கான பள்ளி விளங்கியது.

 

மரபுவழிக் கல்வி முறைகள்

 

(அ) குருகுலக் கல்விமுறை

இம்முறையில் மாணவர்கள் ஆசிரியர்களை அணுகி அவருடன் பல

ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்படும் பணிகளைச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக

வாழ்தல் என்ற அடிப்படையில் இக்குருகுலக் கல்விமுறை அமைந்திருந்தது. இம்முறை, போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக்

கட்டமைப்பதில் சிறப்பானதாக விளங்கியது.

 

 

 (ஆ) உயர்நிலைக் கல்விமுறை

தனி நிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர் நிலைக் கல்வி முறை என்ற வகைமைக்குள் இக்கல்வி முறை அடங்கும்.(எ.கா) திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதர்

 

(இ) திண்ணைப் பள்ளிகள்

·         ரெவரெண்ட் பெல் என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார்.

·         இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் 'மெட்ராஸ் காலேஜ்' என்னும் பெயரில் நிறுவினார். அங்கு இக்கல்விமுறை

·         மெட்ராஸ் சிஸ்டம், பெல் சிஸ்டம்மற்றும் மானிடரி சிஸ்டம் என்றும் அழைக்கப்பட்டது.

·         19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஊர்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பள்ளிகள் இருந்தன. அவற்றினைத் தெற்றிப்

·         பள்ளிகள் என்றும் அழைத்தனர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்கள் கணக்காயர்கள் என்றே அழைக்கப்பட்டனர். அக்காலக் கல்வி முறை, திண்ணைப் பள்ளி முறை என்றே தமிழகத்தில் அழைக்கப்பட்டது.

·         இப்பள்ளிகள் ரேமாதிரியான வரன்முறையுடன் செயல்படவில்லை. எனவே, ஆங்கிலேயர்கள், திண்ணைப் பள்ளிகள், பாட சாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற கல்வி அமைப்புகளை நாட்டுக்கல்வி (Indigeneous Education) என்று அழைத்தனர்.

·         இப்பள்ளிகளில் பாடத்திட்டம், பள்ளி நேரம், பயிற்றுவிக்கும் முறை ஆகியன ஆசிரியரின் விருப்பப்படியே அமைந்திருந்தன. ஆயினும்

·         பொதுமக்களுடைய கல்வித்தேவையை இப்பள்ளிகள் ஓரளவேனும் நிறைவு செய்தன.

·         சென்னை மாகாணத்தில் 12,498 திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது என்றும் தாமஸ் மன்றோ 1822ல் காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

·         இக்காலகட்டத்திற்குப் பிறகுதான் ஆங்கிலேய அரசு தற்போது புழக்கத்தில் உள்ள பள்ளி என்ற மேலைநாட்டுக் கல்விமுறையை தமிழகத்தில் புகுத்தியது. அதன் பிறகே கிறித்தவ மறைபணியாளர்களாலும், அரசினாலும் தற்போதுள்ள முறையில் பள்ளிகள் அறிமுகப்படுத்தின.

 

தமிழகத்தில் ஐரோப்பியர்களின் கல்விப்பணி :

·         1453 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டவரான ஜான் கூட்டன்பர்க் (John Gutenberg) வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று.

·         கி.பி. 1706 ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன்முதலாகக் கல்விப் பணியில் ஈடுபட்டது. தரங்கம்பாடியில்

·         முதன் முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்சடித்தனர். இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழே ஆகும். டச்சுக்காரர்கள் அறப்பள்ளிகளை (Missionaries) நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் அமைத்தனர்.

·         பதினாறாம் நூற்றாண்டில் முதன் முதலில் போர்ச்சுக்கீசியர்கள் தமிழ்நாட்டில் சமயத் தொண்டினை ஆரம்பித்தனர்.

·         அவர்கள் ஏசுசங்கம் என்ற அமைப்பபை ஏற்படுத்தினர். அச்சங்க பாதிரிமார்களுள் அருட்தந்தை பெர்ணான்டஸ் (Father Fernandas) என்பவர் முக்கியமாவார்.

·         அருட்தந்தை பெர்ணான்டஸ் வீரப்ப நாயக்கர் பதவியில் இருக்கும் போது மதுரைக்கு வருகை புரிந்தார்.

·         இவர் 1567-ல் புன்னக்காயல் என்னுமிடத்தில் ஒரு தேவாலயத்தையும், பள்ளியையும் நிறுவினார்.

·         மதுரை சமயப்பரப்புக்குழு (Madura Mission) கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கதாகும்.

·         சிறந்த அறிவாற்றல் கொண்ட ராபர்ட்-டி-நோபிலி என்ற பாதிரியார் 1605 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். 1606ஆம் ஆண்டு முத்துகிருஷ்ணப்பநாயக்கர் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தார்.

·         அவர் தமது சமய பரப்புப் பணிகளை தென் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் ஆரம்பித்தார்.

·         அவர் ஓர் இந்து சமயத்துறவியைப் போல தன்னை மாற்றிக்கொண்டு இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, கிறித்துவ சமயக் கொள்கைகளை மக்களிடம் பரப்பினார்.

·         மதுரை சமய பரப்புக்குழுவின் மற்றொரு தனித்தன்மை வாய்ந்த சிறப்புக்குரிய அருட்தந்தை ஜான் டி-பிரிட்டோ ஆவார்.

·         அவர் கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டைக்கு சென்றார்.

·         சி.எஸ்.ஜான் தரங்கம்பாடியில் 20 இலவச பள்ளிகளை துவங்கினார்.

·         ஜான் கிர்ணான்டர் இவஞ்சிலிஸ்டிக் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இந்த அமைப்பு கிருத்துவர் அல்லாதவர்களுக்கு கல்வி வழங்கிய அமைப்பாக இருந்தது.

·         வீரமாமுனிவர் என்று பெருமையுடன் அறியப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப்பெஸ்கி இந்தக் குழுவில் 1711 ஆம் ஆண்டு முதல் 1742 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

·         மேலும் இவர் தமிழில் இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதியுள்ளார்.

·         அமெரிக்க யாழ்ப்பாண சமய பரப்புக்குழு என்ற அமைப்பு 1834 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

·         இந்த அமைப்பு மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பல பள்ளிக் கூடங்களை நிறுவியது.

·         ஆற்காடு சமய பரப்புக்குழு 1853 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்கட்டர் சகோதரர்களால் (Scudder Brothers) ஆரம்பிக்கப்பட்டது.

·         அவர்கள் மருத்துவமனைகளையும், தர்மஸ்தாபனங்களையும் மற்றும் பள்ளிகளையும் நிறுவி அடித்தட்டு மக்களிடையே பிரசித்திப் பெற்றார்கள்.

·         ஆற்காடு மாவட்டத்தில் ஊரீஸ் கல்லூரியையும் மற்றும் பல பள்ளிகளையும் நிறுவினார்கள்.

·         இக்னேசியஸ் லயோலா என்ற சமய பரப்புக்குழு சென்னையில் லயோலா கல்லூரியை நிறுவியது.

·         தாம்பரத்தில் சென்னைக் கிறித்துவக் கல்லூரி, நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரி, மதுரையில் அமெரிக்கன் கல்லூரி, திருச்சியில் புனித ஜோஸப் கல்லூரி, பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரி மற்றும் சென்னையில் பெண்கள் கிறித்துவக் கல்லூரி போன்றவை கல்வி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டன.

·         செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல கல்லூரிகளும், பள்ளிகளும் நிறுவப்பட்டன.

·         பிராடஸ்டண்ட் குருமார்கள் சென்னை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் கல்லூரிகளையும் பள்ளிகளையும் அமைத்தனர்.

·         பேசல் சமயபரப்புக் குழு (Basel Mission)பயிற்சி பெற்ற அநாதைகளுக்கு வேலை வாய்ப்பளித்தது.

·         லண்டன் சமயபரப்புக்குழு நாகர்கோவில், நெய்யூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தன் கவனத்தைச் செலுத்தியது.

·         இந்த அமைப்பு கல்வி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தியது.

·         தமிழ்நாட்டில் கிறித்துவ சங்கங்கள் மேலை நாட்டுக்கல்வி முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தின.

·         1813ஆம் ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

·         இதைத் தொடர்ந்து பள்ளிக்கூட புத்தக சங்கம் (School Book Society) 1819 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

·         1820 ஆம் ஆண்டு தாமஸ்மன்றோ சென்னை மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

·         அவர் கல்வி திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை என்றும் அழிவில்லாதது என வாதிட்டார்.

·         அதைத்தொடர்ந்து 1822 ஆம் ஆண்டு கல்விக்குழு (Education Commission) ஒன்று அமைக்கப்பட்டது.

·         பொதுக்கல்வி வாரியம் (Board of Public Instruction) ஒன்று 1826-ல் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகள் நிறுவப்பட்டன. மேலும் வட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டன.

·         மன்றோவின் முயற்சியினால் சென்னை மாகாணத்தில் ஏறத்தாழ 70 பள்ளிகள் நிறுவப்பட்டன.

·         மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகள் நிறுவப்பட்டன. மேலும் வட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டன.

·         மன்றோவின் முயற்சியினால் சென்னை மாகாணத்தில் ஏறத்தாழ 70 பள்ளிகள் நிறுவப்பட்டன.

 

1854 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குனரகம் அமைக்கப்பட்டது.

·         ஏ.ஜே.அர்புத்நாட் என்பவர் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

·         1854 - ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பொதுக் கல்வி இயக்குனரகத்தின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

·         1861-62 -ல் மெட்ராஸ் பல்கலை கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

·         1867 - ல் மெட்ராஸ் மாகாணத்தின் தலைமை செயலாளராக பணியாற்றினார்.

 

·         1830 ஆம் ஆண்டு, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி கீழ்நோக்கி பரவும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

·         அதன்படி கல்வி மேல்மட்ட பிரிவைச் சார்ந்த மக்களுக்கு மட்டும் முதலில் அளிக்கப்பட்டது.

·         அவர்கள் தாம் பெற்ற அக்கல்வி அறிவை பொதுமக்களுக்கு அளிக்கவேண்டும்.

·         மேல்மட்ட மக்களிடமிருந்து கல்வியானது பொதுமக்களை சென்றடையாத காரணத்தினால் இம்முறை தோல்வியில் முடிவடைந்தது.

·         1835-ம் ஆண்டு மெக்கல்லே கல்விக்குழு உருவாக்கப்பட்டது. மெக்கல்லே ஆங்கில வழி கல்வியை ஆதரித்தார்.

·         சென்னை மருத்துவக்கல்லூரி (1835), சென்னை மாநிலப்பள்ளி (1836) சென்னைக் கிறித்துவப்பள்ளி (1840), சென்னை பச்சையப்பன் பள்ளி (1841) ஆகிய பள்ளிகள் செல்வந்தர்கள் மற்றும் உயர்குடியினரின் தேவையை நிறைவேற்றியது.

·         நகரப்பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டன.

 

·         பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கல்வி சீராக வளரத்தொடங்கியது. மேல்நிலைக் கல்வி நிலையான வடிவினைப் பெற்றது.

·         மாநிலப்பள்ளி மாநிலக் கல்லூரியாக உருப் பெற்றது. அது நிலப்பிரபுக்களும், அரசகுமாரர்களும் படிக்கும் கல்லூரியாக காணப்பட்டது.

·         1857 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

·         1859 ஆம் ஆண்டிற்குள் அது முழுவளர்ச்சி பெற்ற பல்கலைக்கழகமாக வளர்ந்தது.

·         பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் பாளையங்கோட்டை வரிய இடங்களில் கல்லாரிகள் நிறுவப்பட்டன

·         அக்காலத்தில் இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத் தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் கீழைத்தேயவாதிகள் (Orientalists) என்று அழைக்கப்பட்டனர்.

·         மாறாக, மேற்கத்தியப் பாணிக் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் மேற்கத்தியவாதிகள் (Anglicists) என்று அழைக்கப்பட்டனர்.

 

 

கல்விக் குழுக்கள்

மெக்காலே கல்வி முறை

·         1834-ல் மெக்காலே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த பென்டிங் பிரபு, மெக்காலேவை “பொது போதனை துறை” (Public instruction) எனும் கல்வித் துறையின் தலைவராக நியமனம் செய்தார். நான்கு மாதங்கள் இந்தியாவின் கல்வி முறையை ஆய்வு செய்த மெக்காலே, MACAULAY’S MINUTES(மெக்காலே குறிப்புகள்) எனும் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

 

·         மெக்காலேவின் நோக்கம் “வர்ணாஸ்ரம தர்மத்தை” கடைப்பிடித்து வந்த இந்திய பாரம்பரியக் கல்வி முறையை மாற்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதாக இருந்தது.

·         “நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கிய பணி, நமக்கும் நாம் ஆளுகின்ற மக்களுக்கும் இடையே நல்லெண்ணத் தூதுவராக செயல்படவேண்டிய புதிய வர்க்கம் ஒன்றைக் கல்வியின் மூலம் தோற்றுவிப்பது ஆகும். இவர்கள் ரத்தத்தால், நிறத்தால் இந்தியர்கள். ஆனால் உணர்வால், நிலைப்பாட்டால் நடத்தையால், எண்ணத்தால், விருப்பு வெறுப்பால் ஆங்கிலேயர்கள்” என்றார்.

 

·         1835ஆம் ஆண்டில் மெக்காலே கல்விக்குழு உருவாக்கப்பட்டது.

·         லார்டு மெக்காலேவின் மூலம் மனப்பாடக் கல்வி முறை உருவாக்கப்பட்டது. இக்காலக் கல்வியின் மற்றொரு பெயர் குமாஸ்தாக் கல்வி முறை எனலாம். இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வெற்றுப் படிப்பாளிகளும், வீணான பட்டதாரிகளும் உருவாயினர், இவர்கள் எத்தனை பட்டங்கள் பெற்றிருந்த போதிலும், தங்களால் சுயமாக எதுவும் செய்ய இயலாத வெறும் படிப்பாளிகளாய் இருந்தனர்.

 

·         “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்” என்று பாடிய தமிழகத்தில் எத்தொழிலும் தெரியாத பல்லாயிரம் படித்தவர்களை உருவாக்கியதே மெக்காலே கல்வி முறையின் சிறப்பு எனலாம்.

 

வுட் நடவடிக்கை

·         இந்த வுட் நடவடிக்கை இந்திய கல்வியின் “MAGNA CARTA” என்று அழைக்கப்படுகிறது. 1853-ல் இங்கிலாந்து கல்விக் கட்டுப்பாட்டு குழுமத்தின் (The Board of Control of Education) தலைவராக இருந்த சார்லஸ் உட் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. “கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்திலிருந்து கல்வி அதிகாரத்தை பிடுங்கி நேரடியாக பிரிட்டிஷ் அரசே அதை மேற்கொள்வது சாத்தியமா?” என்பதை ஆராய்ந்து அறிவதே இக்குழுவின் நோக்கம்.

 

·         இந்தக் குழு தான் ஆரம்பக் கல்வியை பிராந்திய மொழிகளிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளிலும், பட்டப்படிப்புகளை ஆங்கில மொழியில் மட்டும் வழங்கவும் வழி செய்தது. மேலும் இந்தியாவில் பெண்கள் கல்வி பெறுவதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கல்விக்கான முதல் இயக்குநரகத்தை தோற்றுவித்தது. இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் தொடங்க வழி செய்தது.

·         1854 ஆம் ஆண்டு சார்லஸ் வுட் தலைமையிலான குழுவின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு, தற்காலக் கல்வியும் தேர்வுமுறையும் உருவெடுத்தன.

·         சார்லஸ் வுட்டின் அறிக்கை, 'இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்' என்று போற்றப்படுகிறது. கி.பி. 1882 ஆம் ஆண்டு உருவான ஹண்டர் கல்விக்குழு சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி

·         போன்றவற்றைக் கட்டாயமாக்கியது. மேலும், புதிய பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கும் வழங்கப்

·         பரிந்துரைத்தது.

 

ஹன்டர் கமிஷன் (HUNTER COMMISION)

·         1882-ஆம் ஆண்டு வில்லியம் ஹன்டர் என்பவர் தலைமையில் ஒரு கல்விக் கமிஷனை இங்கிலாந்து அரசு நியமனம் செய்தது. இது இந்திய கல்விக் குழு(INDIAN EDUCATION COMMISION) என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் ஆரம்பக் கல்வியின் தரத்தினை ஆராய்வதற்காக இக்குழு அமைக்கப்பட்டது.

 

·         நமது வகுப்பறைகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மற்றும் மாதாந்திரத் தேர்வுகளும் இக்குழு மூலமாகத் தான் அறிமுகமாயின. மேலும், பள்ளிகளில் சீருடைகளை அறிமுகப்படுத்தியதும், பிராந்திய மொழி கல்வியை, பரவலாக்கியதும் இக்குழுவின் சாதனைகள். அதிகமான மாணவர்கள் ஆரம்பக் கல்விக்குள் நுழையவும் இக்குழு வழிவகுத்தது.

·         1882-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஹண்டர்குழு கல்வி வளர்ச்சியில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.அதன் மூலம், ஆரம்ப நிலைக்கல்வி அதிக அளவில் புறக்கணிக்கப்பட்டுவிட்டதை கண்டுபிடித்தது.

·         இந்தியாவில் மற்ற பகுதிகளைப் போல தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் கல்வி புறக்கணிக்கப்பட்டதால் ஆரம்பக்கல்வி மிகுந்த பாதிப்புக்குள்ளானது.ஆகவே ஹண்டர் குழு கல்விப் பொறுப்பை நகராட்சி மற்றும் மாவட்ட மையங்களிடம் பிரித்துக்கொடுக்க சிபாரிசு செய்தது.

·         1890 ஆம் ஆண்டு சென்னை ஆளுநர் கன்னிமாராபிரபு,கன்னிமாரா பொது நூலகத்தை உருவாக்கினார்.

·         1891 ஆம் ஆண்டு சென்னையில் சட்டக் கல்லூரி அமைக்கப்பட்டது.

·         1929 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப் பட்டது.

·         இப்பல்கலைக் கழகத்தில் ஆழ்கடல் உயிரியல் துறை (Marine Biology) உட்பட பல துறைகள் தொடங்கப்பட்டன..

·         இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டது.

·         பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

·         1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி கல்வி மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

·         1944-ல் சர் ஜான் சார்ஜண்ட்டின் ஆலோசனைப் படி, 6 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு இலவசக் கட்டாயக்கல்வி வழங்கப்பட்டது.

 

காந்தியக் கல்வி

·         சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்த மாகாணங்களின் அமைச்சர்களைக் கூட்டி 1937 ஆம் ஆண்டு வார்தாவில் கல்வி மாநாடு ஒன்று நடந்தது.அந்த மாநாட்டில் சில கல்விக் கொள்கைகளை அந்தக் கட்சி முன்வைத்தது.

 

·         6 வயது முதல் 14 வயது வரை விலையின்றி இலவசமாகக் கட்டாயக் கல்வி வழங்கப்பட வேண்டும்

·         தொடக்கக் கல்வி கட்டாயமாகத் தாய்மொழியில் இருக்க வேண்டும்.

·         ராட்டை உட்பட பள்ளியில் மாணவர்கள் வாழ்க்கைத் தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும்

·         தன் சொந்தக் காலில் நிற்க சுயக் கட்டுப்பாடு மிக்க குழந்தைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்என்று இந்த மாநாடு முன்மொழிந்தது.

·         இந்தியா விடுதலை அடைந்தபோது வெறும் 15 சதவீதத்தினரே கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். இந்த நிலை மாற சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பல குழுக்களை உருவாக்கினார். இந்த முதல் கல்வி கமிஷனுக்கு அப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய, அதன் பின்னர் இந்திய துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

 

லட்சுமணசாமி முதலியார் குழு

·         டாக்டர் ராதாகிருஷ்ணன் குழுவில் இருந்த லட்சுமணசாமி முதலியார் தலைமையில் 1952 ஆம் ஆண்டு ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இரண்டு பரிந்துரைகளை முன்வைத்தது.

·         பெண்களுக்கான தனி பள்ளிகளை அங்கீகரித்தல்.

·         முழுக்க முழுக்க அந்தந்த பிராந்திய மொழிக் கல்வியை வளர்த்தெடுத்தல்.

·         நேரு அவர்கள் 1964-ல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் டி.எஸ் கோத்தாரி அவர்களின் தலைமையில் ஒரு கல்விக் குழுவை நியமித்தார். அதில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இடம் பெற்றனர். நாட்டு நலத்திட்டம், விளையாட்டு ஆசிரியர், ஓவிய ஆசிரியர் போன்ற செயல்பாடுகள் இக்குழுவின் பரிந்துரைகளால் தான் நிறைவேற்றப்பட்டன

·         அதன்பிறகு சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்களுக்கு வழங்க திரு.ராஜீவ் காந்தி அவர்கள் ஆட்சியில் “நவோதயா பள்ளிகள்” நாடு முழுவதும் திறக்கப்பட்டன

·         திரு.வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆன பிறகு 2002ஆம் ஆண்டு 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கவும், 8 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கவும், மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தடுத்திடவும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினை (SARVA SHIKSHA ABHIYAN) செயல்படுத்தினார்.

·         இவ்வாறாக இந்திய கல்வித் துறை பல மாற்றங்களுக்கு உள்ளாகி, நம் தேசத்தின் கல்வியறிவை 76 சதவீதமாக உயர்த்த வழி செய்துள்ளது.

 

 

·         கோத்தாரிக் கல்விக்குழு, டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் கல்விக்குழு, இராதா கிருஷ்ணன் கல்விக் குழுக்களின் மூலம் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டதோடு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஒரு பள்ளி என்ற அளவிலாவது பள்ளிகள் உருவாக்கப்பட்டு கல்வி கற்றோர் தொகை அதிகரிக்கப்பட்டது. தற்போதைய தமிழகத்தில் சுமார் 75 சதவீதம் மக்கள் கல்வி கற்றவர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

 

கல்வி சுதந்திரத்திற்கு பின், நமது  நாட்டில் நிலவிய கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மாறி வரும் சூழலுக்குகேற்ப நமது நாட்டு மக்களின் எண்ணங்களுக்கேற்ற கல்வி முறையை கொண்டு வர நமது அரசு பல்வேறு கல்விக்குழுக்களை அமைத்தது. அவற்றில் முக்கியமானவை :

 

·         பல்கலைக்கழக மான்யக்குழு

·         இடைநிலைக் கல்விக்குழு

·         கோத்தாரிக் கல்விக்குழு

·         புதிய கல்விக்கொள்கை

·         தேசிய கல்விக்கொள்கை

 

பல்கலைக்கழக மான்யக் குழு (1948) :

·         டாக்டர்இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இந்திய அரசாங்கம் 1948ல் பல்கலைக்கழக மான்யக்குழுவை அமைத்தது. இக்குழு உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

·         டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

·         இந்திய அரசியலமைப்பின் 45வது பிரிவு 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வி அளிக்க உத்திரவாதம் அளிக்கிறது.

 

,

இடைநிலைக்கல்விக்குழு (1953) :

·         1953 -ஆம் ஆண்டு டாக்டர் A.லட்சுமணசாமி முதலியார் அவர்களின் தலைமையில் இடைநிலைக்கல்விக் குழு அமைக்கப்பட்டது.

·         இடைநிலைக்கல்வி அளவில் குழந்தைகள் அனைத்து திறன்களிலும் முழுவளர்ச்சி பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியது. அதுமட்டுமின்றி இடைநிலைக்கல்வியானது உயர்கல்விக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் இருக்கவேண்டுமென்று ஆலோசனை வழங்கியது.

 

 

கோத்தாரிக் கல்விக்குழு (1964)

·         தேசிய கல்விக்குழு என்று அழைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு 1964 ஆம் ஆண்டு டாக்டர் D.S.கோத்தாரி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு 1966 ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையானது 10+2+3 கல்வி முறையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

·         அதுமட்டுமின்றி தொழிற்கல்வி, அறிவியல், தொழில் நுட்பகல்வி போன்றவற்றை வலியுறுத்தியது. 1965 ஆம் ஆண்டு ஆண்டு தமிழகத்தில் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 

 

 

தேசிய கல்விக்கொள்கை (1968) :

·         தேசத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிப்பது, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை நிலை நிறுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும்.

·         1976 - ஆம் ஆண்டு 42-வது சட்டத்திருத்ததின் அடிப்படையில் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

 

புதிய கல்விக்கொள்கை (1986) :

·         1986 ஆம் ஆண்டு ஏற்பட்ட புதிய கல்விக்கொள்கை மனித வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்,

·         ஊனமுற்றோர், சிறுபான்மையினர் முதலானோருக்கு கல்வி வழங்குதலில் மிகுந்த கவனம் செலுத்திசமூக வேற்றுமைகளை நீக்குவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தது. மேலும் இக்கல்விக்கொள்கையானது நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அளிப்பதை வலியுறுத்தியது. மேலும் இக்கல்விக் கொள்கையானது இயற்கை வளங்களையும் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவதையும் வலியுறுத்தியது.

 

 

 

தேசியக் கல்விக் கொள்கை (1992) :  

·         இக்கல்விக் கொள்கையானது பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, 'கரும்பலகைத்திட்டம்' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது.

·         மேலும் முறைசாராக் கல்வி மூலம் கல்லாமையைப் போக்கும் தேசிய எழுத்தறிவு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்வி கொள்கை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளை அகற்றுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

 

ஆரம்பக்கல்வி வளர்ச்சி :

·         ஆரம்பக்கல்வி வளர்ச்சியில் நம் மாநிலம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. 1949-50 ஆம் வருடங்களில் 15,303 ஆரம்ப பள்ளிகள் இருந்தன. துவக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது 2016-17 நிதி அறிக்கையின்படி 35,414 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.(source: ssa.tn.nic)

·         ஆரம்பக்கல்வி அளவில் இடைநிற்றலை (Dropout) தவிர்க்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும் இந்திய அரசு “சர்வ சிக்ஷ அபியான்” (எல்லோருக்கும் கல்வி, SSA) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் தமிழ் நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

·         2019-ன் படி பள்ளிக்கல்வி தரவரிசைப்பட்டியலில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது

 

இடைநிலைக்கல்வி வளர்ச்சி :

·         இடைநிலைக்கல்வியானது ஆரம்பக்கல்விக்கும் உயர்கல்விக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது,

·         நமது தேசிய கல்விக் கொள்கை (1992) தொழிற்கல்வியின் தேவையை வலியுறுத்தியது. இக்கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு 1978 ஜீன் மாதத்தில் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தியது. தற்போது, விவசாயம், மனையியல், பொறியியல் போன்ற பல்வேறு தொழிற் பாடப்பிரிவுகள் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

 

உயர்கல்வி வளர்ச்சி :

·         இந்தியா சுதந்திரமடைந்த பிறகு உயர்கல்வி வளர்ச்சி

·         நம் நாட்டில் நல்ல சிறப்பு பெற்றது. உயர் கல்வி     கிட்டத்தட்ட 1,75,000 என்ற உயர் அளவிலான பொறியியல் பட்டதாரிகளைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது. இது பல மென்பொருள் நிறுவனங்களைத் தங்களது அலுவலகங்களைத் தென்னிந்தியாவில் அமைத்திட ஈர்க்கிறது.

 

உயர்கல்வியை பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

பொதுக்கல்வியானது கலை, அறிவியல், வணிகவியல் பிரிவுகளை உள்ளடக்கியது.

·         தொழிற்கல்வியானது பொறியியல், மருத்துவம், விவசாயம் போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது.

·         வளர்ந்து வரும் மாணவர்களின் தேவைக்கேற்ப தமிழகத்தில் இவ்விரண்டு பிரிவுகளுக்காக பல்வேறு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

·         தமிழகத்தில் பல அறிவியல் கலைக்கல்லூரிகளும் பல பல்கலைக்கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1970 ஆம் ஆண்டு பயிற்று மொழியாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

சமச்சீர்க் கல்வி:

·         சமச்சீர்க் கல்வி என்பது தமிழ்நாட்டில் 2010-11 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி முறையாகும்.

·         தமிழ்நாட்டில் இதுவரை செயல்பட்டு வந்த 4 தொடக்கக்கல்வி அமைப்புகளான மாநில அரசு கல்வி முறை, மெட்ரிகுலேசன் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன் கல்வி முறை மற்றும் ஓரியண்டல் கல்வி முறை ஆகிய நான்கு கல்வி முறைகளையும் ஒன்றாக இணைத்து, அனைத்து

·         வகைப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டத்தை வழங்கும் நோக்கில் சமச்சீர்க் கல்வி முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

·         இக்கல்வி முறையைக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு 2007-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

·         அக்குழு தனது பரிந்துரையை ஜுலை 2007-இல் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

·         109 பரிந்துரைகளில் 4 மட்டுமே ஏற்றுக்கொள்ளபட்டது

·         மேற்கண்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அனைவருக்கும்  கல்வி இயக்கத்தின் முன்னாள் மாநில திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஓர் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

·         மேற்கண்ட இரு பரிந்துரைகளையும் விவாதித்து, ஆய்வு செய்தபின் தமிழகத்தில் சமச்சீர்க்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த 2009-ஆம் ஆண்டில் அரசு முடிவு செய்தது.

·         தமிழ்நாடு சமச்சீர்ப் பள்ளிக்கல்வி முறைச் சட்டம்-2010 என அறிவிக்கப்பட்ட இச்சட்டத்தின்படி, சமச்சீர்க் கல்வித்திட்டம் 2010-11 கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் செயல்படுத்தப்பட்டது.

·         இரண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் 2011-12 கல்வியாண்டில் சமச்சீர்க் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

·         சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக பள்ளிக் கல்விக்கான மாநில பொதுக்கல்வி வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்து.

 

மாவட்ட வாரியான எழுத்தறிவு வீதம் (2011 தரவு)

·         12வது  ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகம் சுமார்  19,608 கோடி கல்விக்காக ஓதிக்கீடு செய்துள்ளது.

·         தமிழகத்தின் கல்வியறிவு சதவீதமானது 80.09% ஆக உள்ளது(2011 கணக்கெடுப்பின்படி).(2013ன் படி இது -83.0% ஆகஉள்ளது )

·         ஆண்கள் கல்வியறிவு சதவீதம் – 86.77%(2.8 கோடி கல்வியறிவு பெற்றுள்ளனர்)

·         பெண்கள் கல்வியறிவு சதவீதம் – 73.44%(2.3 கோடி கல்வியறிவு பெற்றுள்ளனர்)

·         மாவட்டவாரியாக தமிழகத்தின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி (92.14%). குறைந்தபட்சம் தர்மபுரி (64.71%)

 

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்    

·         தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் 1910ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கல்வித் துறையினால் ஏற்படுத்தப்பட்டது.

·         தமிழ்நாடு பள்ளித் தேர்வுகளுக்கான மாநில வாரியம் மாணவர்களின் முன்னேற்றத்தை இரண்டு (2) பொதுத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் கணக்கிடுகிறது. இதில் ஒன்று 10ஆம் வகுப்பின் இறுதியிலும் (இடைநிலைக் கல்வி இறுதி வகுப்புச் சான்றிதழ்; Secondary school leaving certificate; SSLC) மற்றொன்றை 12ஆம் வகுப்பின் இறுதியிலும் (மேல்நிலைக் கல்வி இறுதி வகுப்புச் சான்றிதழ்; Higher secondary school leaving certificate; HSC) நடத்துகிறது. இதில் 12ஆம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு மதிப்பெண்கள் மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவதற்கு உதவுகின்றன.

·         1978ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடைநிலைக்கல்வியின் வடிவமைப்பாளர் எனப் போற்றப்படும் எச்.எச்.எஸ்.லாரன்ஸ் அந்த வாரியத்தின் இயக்குனராகப் பணிபுரிந்தபோது தமிழ்நாட்டின் கல்வித்திட்டங்களை ஆய்வு செய்து அனைத்திந்தியாவிலும் தற்போது கடைபிடிக்கப்படும் 10+2+3 முறைமையைத் தோற்றுவித்தார்.

 

 

 

தர நிர்ணயம்

அனைத்து அங்கீகரிப்பட்ட பள்ளிகளும் பின்வரும் ஏதேனும் ஒரு அமைப்பின் அங்கீகாரத்தைப் பெற்றவையாக உள்ளன:

·         நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் - அனைத்து நிலை படிப்பிற்கும்

·         தமிழ்நாடு மாநில வாரியம் - அனைத்து நிலை படிப்பிற்கும்

·         இடைநிலைக் கல்விகான இந்தியச் சான்றிதழ் - அனைத்து நிலை படிப்பிற்கும்

·         பதின்நிலைப் பள்ளிகள் இயக்ககம் - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை. 11, 12 ஆகியவை மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

·         மாண்டிசொரி முறையில் இயங்கும் பள்ளிகளுக்கும் அமெரிக்க முறையில் இயங்கும் பள்ளிகளுக்கும் இவ்விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இயக்ககங்கள்

·         கல்வித் துறை அமைச்சரே மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்வி நிலைகளுக்கும் உறுப்பினர் ஆவார். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பின்வறும் இயக்ககங்கள் உள்ளன.

 

·         தொடக்கக் கல்வி இயக்ககம்

·         மாநிலத் திட்ட இயக்ககம், மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம்

·         பள்ளிக் கல்வி இயக்ககம்

·         அரசுத் தேர்வு இயக்ககம்

·         மாநிலக் கல்வியியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

·         முறைசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம்

·         பொது நூலகங்கள் இயக்ககம்

·         ஆசிரியர் தேர்வு வாரியம்

·         தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்

 

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

·         தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக் கல்லூரி) மூலம் பட்டயப் படிப்புகள், பின்பட்டயப் படிப்புகள், பட்டப் படிப்புகள், முதுநிலைப் பட்டப்படிப்புகள், ஆய்வுப் பட்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது.

·         தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைகளுக்கான கல்விச் சான்றிதழ்களை ஆய்வு செய்து, சேர்க்கைகளுக்கான அனுமதிகளை ஒழுங்குபடுத்தி அனுமதி அளிக்கிறது. இது தவிர தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்காளம் முதலிய கணக்கிடல் சார் படிப்புகளையும் சீர்ப்படுத்துகிறது.

 

 

தமிழ்நாடு அரசால் பல திட்டங்கள் பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.

 

மதிய உணவுத் திட்டம்

·         முதன்முதலில் நீதி கட்சி காலத்தில்\ சென்னை மாகாணத்தில் சில இடங்களில் அறிமுகப்படுத்தபட்டது.

·         காமராஜர் ஆட்சிகாலத்தில் மதிய உணவு திட்டமாக மாறியது.(எட்டயபுரத்தில் தொடங்கப்பட்டது).

அங்கன்வாடித் திட்டம்

·         1975ம் ஆண்டு ஒருங்கிணைந்த  குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டதின் கீழ் தொடங்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி (IED)

தொடக்க நிலையில் பெண்களுக்கான தேசியக் கல்வித் திட்டம் (NPEGEL)

கஸ்தூரிபாய் காந்தி பால்க வித்யாலயா (KGBV)

கல்விச் செயற்கைக்கோள் (EDUSAT)

·         Gsat-3 என்று அழைக்கபடும் இச்செயற்கைக்கோள் பிரத்யேகமாக கல்விக்காக 2004 ஏவப்பட்டது.

இலவசப் பாடநூல் வழங்கல் 2012-13

இலவச புத்தகபை  2012-13

இலவச அட்லஸ் (வரைபடம்)-2012-13 6 முதல் 10ம் வகுப்பு வரை

இலவச கணித உபகரணப் பெட்டி-2012-13 6 முதல் 8ம் வகுப்பு வரை

இலவச மடிக் கணினி- 2011-12

இலவச சீருடை வழங்கல் 1985-1986

தமிழகப் பள்ளிகளில் தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை

·         தமிழகப் பள்ளிகளில் மதிப்பெண்ணுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறையே தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை (கிரேடு முறை) எனப்படும்.

·         2012-13 கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரை தரப்படுத்தல் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளிலும் இந்த தரப்படுத்தல் முறை கிரேடு முறை படுத்தப்பட்டுள்ளது.

 

மூன்று பருவங்கள்

ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. முப்பருவ முறையும் 2012-13 கல்வியாண்டில் இருந்து அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் பருவம்  

சூன் முதல் செப்டம்பர் வரை

இரண்டாம் பருவம்   

அக்டோபர் முதல் டிசம்பர் வரை

மூன்றாம் பருவம்     

சனவரி முதல் ஏப்ரல் வரை

 

 

பள்ளிக் கல்வி அமைச்சகம் (தமிழ்நாடு)

 

·         தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி அமைச்சகம் 13 மே 2006 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

·         இந்த அமைச்சகத்தின் கீழ் 6 துறைகளும் 2 தன்னாட்சி அமைப்புகளும் 3 வாரியங்களும் செயல்படுகின்றன. பள்ளிக் கல்வி அமைச்சர் இவ்வமைச்சகத்தின் கொள்கை முடிவுகளுக்கு பொறுப்பேற்கிறார். அமைச்சரவைக் கூட்டத்திலும் சட்டமன்றத்திலும் அவற்றை எடுத்துரைக்கிறார்.

·          இதன் நிர்வாகத் தலைவராக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் பணியாற்றுகிறார். ஒவ்வொரு துறைக்கும் அந்தந்தத் துறை இயக்குநர்களும் தன்னாட்சி பெற்ற அமைப்புகளுக்கு தலைவர் - மேலாண்மை இயக்குர்களும் தலைமையேற்கின்றனர்.

http://www.tn.gov.in/departments/sed.html

http://www.tn.gov.in/schooleducation/ http://www.tnschools.gov.in/

·         இந்திய விடுதலைக்கு முன்னரும் பின்னரும் அமைந்த ஒவ்வொரு அமைச்சரவையிலும் பள்ளிக் கல்வி, உயர்கல்வி ஆகிய அனைத்து நிலைகளும் இணைந்த கல்வி அமைச்சகமே உருவாக்கப்பட்டது.

·          2006 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்த அமைச்சரவையில் பள்ளிக் கல்விக்கு என தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டது. தனியாக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். முதன்மைச் செயலர் (Principal Secretary) தகுதியுடைய ஒருவர் அமைச்சகச் செயலராக நியமிக்கப்பட்டார்.

·         பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் நோக்கமானது சமுதாயத் தேவையின் அடிப்படையில் அவ்வப்பொழுது கொள்கைகள், சட்டங்கள், ஒழுங்காறுகள், பல்வேறு திட்டங்களை பின்வரும் இலக்குகளை அடைவதற்காக வகுப்பதே ஆகும்:

·         பள்ளிகள் இல்லாத சிற்றூர்களுக்கு தொடக்கப்பள்ளிகளை வழங்குதல்.

·         ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வியை வழங்குதல்.

·         பள்ளி இடைவிலகலை ஒழித்தல்

·         பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்

·         பாடத்திட்டத்தை மேம்படுத்துதலும் உயர்த்துதலும்

·         கல்வியின் தரத்தை உயர்த்துதல்

·         படிப்பறிவு இன்மையை ஒழித்தல்

·         தரமான பாடநூல்களை நியாயமான விலையில் உரிய நேரத்தில் வழங்குதல்

·         5000மும் அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள இடங்களில் கிளை நூலகங்களைத் தொடங்குதல்

·         தொழிற்பயிற்சிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்

·         பள்ளிகளில் நலவாழ்வுக் கல்வியை ஊக்குவித்தல்

·         பெருமளவில் பெற்றோர்களை பள்ளி மேலாண்மையில் ஈடுபடுத்தல்.

 

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் துறைகள் இயங்குகின்றன:

 

·         பள்ளிக் கல்வித் துறை (Department of School Education)

·         பதின்ம பள்ளிக் கல்வித் துறை (Department of Matriculation Schools)

·         தொடக்கக் கல்வித் துறை (Department of Elementary Education)

·         ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி ஆராய்ச்சித் துறை – மாநில கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி அவை (Department of Teacher Education, Research and Training – State Council of Education Research and Training)

·         முறைசாரா – முதியோர் கல்வித் துறை (Department of Non-formal and Adult Education)

·         பொது நூலகத் துறை (Department of Public Libraries)

 

தன்னாட்சி அமைப்புகள்    

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் தன்னாட்சி அமைப்புகள் இயங்குகின்றன:

·         தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (Tamilnadu Text Book Society)

·         தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் (Tamilnadu Parent Teachers Association)

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் வாரியங்கள் இயங்குகின்றன:

 

·         அரசுத் தேர்வு வாரியம் (Board of Government Examination)

·         ஆசிரியர் பணியமர்த்தல் வாரியம் (Teacher Recruitment Board)

·         இடைநிலைக் கல்வி வாரியம் (Board of Secondary Education)

 

பள்ளிக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பின்வரும் செயல்படுத்தப்படுகின்றன:

 

·         அனைவருக்கும் கல்வி இயக்கம் (The Educationa for All Movement)

·         மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் ( District Primary Education Programme)

·         இடைநிலைக் கல்வித் திட்டம் (Universalisation of Secondary Education Project)

·         தளிர்த் திறன் திட்டம் (Thalir Thiran Thittam)

 

 

தமிழகப் பல்கலைக்கழகங்கள்

* சுதந்திரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை மாகாணம்) சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் இருந்தன.

* ஆனால் இன்று தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன.

* மத்திய அரசினால் நிறுவப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழுவுடன் தமிழ்நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

* அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மாநில ஆளுநரே வேந்தராக இருக்கிறார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒரு துணைவேந்தர் தலைமையில் இயங்குகிறது.

* மாநில கல்வியமைச்சர் பல்கலைக்கழகங்களின் இணை வேந்தராக இருப்பார்.

 

சென்னைப் பல்கலைக்கழகம் - சென்னை :

·         தமிழ்நாட்டின் முதல் பல்கலைக்கழகமான இது, 1857 – இல் கானிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த போது இந்தியாவில் தொடங்கப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - சிதம்பரம்:

·         தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகமான இது 1929-ஆம் ஆண்டு ராஜா சர். அண்ணாமலைச் செட்டியாரால் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது.

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - மதுரை:

·         1966-இல் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரை முதல் துணைவேந்தராகக் கொண்டு மதுரைப் பல்கலைக்கழகமாக உருவாகியது.

·         விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இது, இந்தியாவில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற முதல் பல்கலைக்கழகமும் இதுதான்.

·         1976-ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்:

·         தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனும் பெயரில் 1971, ஜூன் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.

·         இது, தமிழ்நாட்டில் வேளாண்மைக்காகத் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம். கோயம்புத்தூரில், 1990-இல் ஜி.டி.நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பின் 1992-இல் மீண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்று பழையபடியே பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

 

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் - திண்டுக்கல்

·         காந்தியடிகள் முன்வைத்த புதிய கல்விச் சிந்தனையான நய்தலீம் என்பதன் அடிப்படையில், இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

·         இந்தியக் குடியரசுத் தலைவர் இதன் வேந்தராவார்.

 

அண்ணா பல்கலைக்கழகம்-சென்னை

·         கிண்டி பொறியியல் கல்லூரி,மெட்ராஸ் தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 1978இல் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

·         இந்தியாவில் பொறியியல்துறைக்காக அமைக்கபட்ட முதல் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்:

·         சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் முதுநிலை மையமே 1982 இல் பாரதியார் பல்கலைக்கழகமாக மாறியது.

 

பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சி:

·         சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமே 1982, ஏப்ரல் 30-ஆம் நாள் பாரதிதாசன் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.

 

தமிழ்ப்பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் :

·         தமிழ்மொழி, பண்பாடு, சுவடியியல், மொழியியல் போன்ற துறைகளில் உயர் ஆய்வு மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு, 1981 - ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உருவாக்கப்பட்டது.

 

 

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் - வேலூர் :

·         வேலூரில் 2002, அக்டோபர் 16-அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

 

 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் - கொடைக்கானல் :

·         தமிழகத்தில் மகளிருக்காகத் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இது 1984-இல் கொடைக்கானலில் தொடங்கப்பட்டது.

 

 

அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி :

·         சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1985-இல் அழகப்பா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

·         டாக்டர் அழகப்பச் செட்டியாரால் 1947-இல் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி, 1950-இல் தொடங்கப்பட்ட கல்வியியல் கல்லூரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் - சென்னை:

·         தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து 1989-இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

·         இது 1991 முதல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்  என அழைக்கப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் - சென்னை:

·         தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த சென்னை கால்நடைக் கல்லூரி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிஆகியவற்றை ஒருங்கிணைத்து, 1989-இல் சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2014-ம் ஆண்டு மீன்வள கல்லூரிகளை பிரித்து டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அவர்களால் நாகப்பட்டினத்தில் மீன்வளப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

 

பெரியார் பல்கலைக்கழகம் - சேலம்:

·         பெரியார் பல்கலைக்கழகம், 1997, செப்டம்பர் 17-அன்று சேலத்தில் தொடங்கப்பட்டது.

 

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்

·         2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.

·         பெரியார் மணியம்மை மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியானது உலகின் முதலாவது மகளிர் பொறியியல் கல்லூரி எனும் தனிச்சிறப்பைப் பெற்றது.

 

 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - திருநெல்வேலி :

·         மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செப்டம்பர் 7,1990-இல் உருவாக்கப்பட்டது.

·         ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கென அமைக்கப்பட்ட கஜேந்திரகட்கர் குழுவின் பரிந்துரைப்படி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தென்பகுதிக் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் - சென்னை :

·         சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் முதலிய இடங்களில் செயல்பட்டு வந்த சட்டக் கல்லூரிகளை இணைத்து 1996 நவம்பர் 14 அன்று டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சென்னையில் உருவாக்கப்பட்டது.

·         இந்தியாவின் முதலாவது சட்டப் பல்கலைக்கழகம் இதுவே.

 

தமிழ் இணையக் கல்விக்கழகம் - சென்னை :

·         உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும், அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் பிப்ரவரி 17, 2001-இல் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சென்னையில் நிறுவப்பட்டது.

·         இது தற்போது தமிழ் இணையக் கல்வி கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - சென்னை:

·         தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2002-இல் சென்னையில் தொடங்கப்பட்டது,

·         பல்வேறு காரணங்களால் பள்ளிக்கல்வியையும், உயர்க்கல்வியையும் தொடர முடியாமல் இருப்பவர்களுக்கு பயன்தரும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் - சென்னை:

·         உடற்கல்வியியல், விளையாட்டுத் துறைகளுக்கென பிரத்தியேகமாக தமிழ்நாடு அரசு 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.

·         இதுவே இந்தியாவில் விளையாட்டுக் கல்விக்காக அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகமாகும்.

 

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் - சென்னை:

·         தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசானது 2008-இல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை சென்னையில் நிறுவியது.

 

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் - சென்னை:

·         இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Maritime University)2008- ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் நாள் மத்திய அரசால் நிறுவப்பட்டது.

·         இது கடல்சார் போக்குவரத்துக்கான கல்வித்திட்டங்களை வழங்கும் ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாகும்.

 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் - திருவாரூர்:

·         தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய நாடாளுமன்ற சட்டப்படி 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

 

.

 

தமிழ்நாட்டில் பல புகழ் பெற்ற மத்திய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.

 

·         இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்.) திருச்சியில் அமைந்துள்ளது.

·         இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.) சென்னையில் அமைந்துள்ளது.

·         தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.) திருச்சியில் அமைந்துள்ளது.

·         இந்திய கடல்சார் கல்வி பல்கலைக்கழகம், சென்னையில் அமைந்துள்ளது மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (CLRI) சென்னையில் அமைந்துள்ளது

·         மத்திய கடல் உயிரினங்கள் ஆராய்ச்சி நிலையம் சென்னையில் அமைந்துள்ளது

·         மத்திய கடல் சார் உயிரினங்களின் வளர்ப்பு நிறுவனம் மண்டபம் கேம்ப்

·         தேசிய கடல் தொழில் நுட்ப நிலையம் (NIOT) சென்னையில் அமைந்துள்ளது

·         மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) காரைக்குடியில் அமைந்துள்ளது

·         காடு ஆராய்ச்சி நிறுவனம் கோயம்புத்தூர்யில் அமைந்துள்ளது

·         சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஜவுளி மேலாண்மை  கல்வி நிறுவனம் கோயம்புத்தூர்ல் அமைந்துள்ளது

·         தேசிய காசநோய் ஆராய்ச்சி நிலையம் சென்னையில் அமைந்துள்ளது

 

 

Post a Comment

புதியது பழையவை