- உடல் ,மனம் மற்றும் சமூக அளவிலான முழுமையான நல்வாழ்வுக்கான நிலை என எதை WHO வரையறுக்கிறது?
உடல்நலம்
- உடலில் அல்லது மனதில் ஏற்படும் கோளாறுகள் அல்லது குறைகள் என்பது யாது ?
நோய்கள்
- நோயின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள்.
- ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தொற்று நோய்கள் அல்லது பரவும் நோய்கள் (communicable disease)
- தொற்றுநோய்கள் எவற்றின் மூலமாக பரவுகின்றன?
காற்று, நீர் ,உணவு ,உடல் தொடர்பு, மற்றும் நோய் கடத்திகள்.
- தொற்று நோய்களில் நோயூகிகளாக செயல்படுபவை யாவை?
வைரஸ், பாக்டீரியா ,பூஞ்சை ,புரோட்டோசோவா ஒட்டுண்ணிகள் ,மற்றும் புழுவின ஒட்டுண்ணிகள்.
- எவ்வகையான நோய்கள், நோய் தொற்றிய நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு எந்த நிலையிலும் பரவதவையாக இருக்கின்றன ?
தொற்றா நோய்கள்.
- மனிதரில் நச்சுப்பொருட்களை வெளியிட்டு நோயுண்டாக்கும் பாக்டீரியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நோயூக்கி பாக்டீரியங்கள்.
- எந்த சோதனையின் மூலம் டைபாய்டு காய்ச்சல் உறுதிப்படுத்தப்படுகிறது?
வைடால் சோதனை ( widal test).
- குடலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஷிஜில்லோசிஸ் (பேசில்லரி சீதபேதி) பாக்டீரியா நோய்க்கான நோய்க்காரணி எது?
ஷிஜெல்லா சிற்றினம்.(shigella sp)
- நிணநீர் முடிச்சுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் ( கருப்பு மரணம்) பாக்டீரியா நோய்க்கான நோய் காரணி எது?
எர்சினியா பெஸ்டிஸ் (Yersinia pestis)
- குரல்வளை ,தோல் ,சுவாசம் மற்றும் இனப்பெருக்க பாதையில் டிப்தீரியா என்ற பாக்டீரியா நோயை நோய்க்காரணி என்ன?
கோரினிபாக்டிரியம் டீப்த்தீரியே(croyneactium diphtheriae)
- குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் காலரா என்ற பாக்டீரியா நோய்க்கான நோய் காரணி எது?
விப்ரியோ காலரே (vibrio cholerae)
- டெட்டனஸ் (அசையா தாடை) நோய்க்கான நோய்காரணி என்ன?
கிளாஸ்ட்ரியம் டெட்டனி(clostridium tetani)
- குடல் பகுதியில் டைபாய்டு என்னும் பாக்டீரியா நோய் உண்டாகும்நோய்க்காரணி எது?
சால்மோனெல்லா டைஃப்பி (salmonella typhi)
- நுரையீரலை நிமோனியா என்னும் பாக்டீரியா நோய் உண்டாக்கும் நோய்க்காரணி எது?
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே(streptococcus pneumoniae)
- நுரையீரலில் காசநோய் உண்டு பண்ணும் நோய்க் காரணி எது?
மைக்கோ பாக்டீரியம் டியூபார்குளோசிஸ்(Mycobacterim tuberculosis)
- உயிருள்ள செல்களுக்குள் இனப்பெருக்கம் செய்கின்ற,சிறிய அகச்செல் நிலை மாற ஒட்டுண்ணி எது?
வைரஸ்
- சாதாரண சளியை (common cold) ஏற்படுத்தும் வைரஸ் எது? ரைனோ வைரஸ்.
- உடல் உறுப்புகளில் தோன்றும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ள நான்கு வகையான வைரஸ் நோய்கள் யாவை ?
சுவாச நோய்கள், தோல் நோய்கள் ,உள்ளுறுப்பு நோய்கள், நரம்பு நோய்கள்.
- விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் வைரஸ் வகை என்ன ?
zoonotic
- எப்போது பன்றிக் காய்ச்சல் தொற்று நோயாக அங்கீகரிக்கப்பட்டது?
1919
- பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ் எது?
H1N1
- நீர் திவலைகள் மூலம் சுவாசப் பாதையில் தோன்றும் சாதாரண சளிக்கு காரணமான வைரஸ் எது?
ரைனோ வைரஸ்.
- உமிழ்நீர் மற்றும் நீர் திவலைகள் மூலம் உமிழ் நீர் சுரப்பியில் தோன்றும் புட்டாலம்மை (MUMPS) காரணமான வைரஸ் காரணி எது?
மம்ப்ஸ் வைரஸ்.
- பெற்றோர் வழிஅல்லது ரத்தப் பரிமாற்றம் மூலம் கல்லீரலில் ஏற்படும் கல்லீரல் அழற்சிக்கு காரணமான வைரஸ் எது?
ஹெப்படைடிஸ்- வைரஸ்
- நீர்த்திவலைகள் மற்றும் நேரடி தொடர்பு மூலமாக சுவாசப்பாதை, தோல் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றில் ஏற்படும் சின்னம்மைக்கு காரணமான வைரஸ் எது?
வேரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் ( DNA VIRUS)
- நீர்த்திவலைகள் மற்றும் வாய்வழி மலதொற்று மூலமாக குடல் ,மூளை, தண்டுவடம் ஆகியவற்றில் ஏற்படும் இளம்பிள்ளை வாதத்திற்கு காரணமான வைரஸ் எது?
போலியோ வைரஸ் .
- எத்தனை புரோட்டோசோவா மனித உடலில் ஒட்டுநி களாக வாழ்ந்து நோயை ஏற்படுத்துகின்றன ?
15 புரோட்டோசோவாகள் .
- அமீபியாசிஸ் என்னும் அமீபிக் சீதபேதி அல்லது அமீபிக்பெருங்குடல் அலர்ஜி நோய்க்கு காரணமான புரோடோசோவா எது?
எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா.(Entamoeba histolytica)
- டிரோபோசோய்ட் எனும் நோய் நிலையை உண்டாக்கும் புரோடோசோவா ஒட்டுண்ணி எது?
எண்டமீபா ஹிஸ்டோலைட்டிகா.(Entamoeba histolytica)
- ஆப்பிரிக்க தூக்க வியாதிக்கு காரணமான புரோடோசோவா எது?
டிரிப்பனோசோமா சிற்றினம்.
- மனிதரில் தூக்க வியாதியை ஏற்படுத்தும் டிரிப்பனோசோமாவின் மூன்று சிற்றினங்கள் யாவை?
டி. கெம்பியன்ஸ், டி. ரோடிசியன்ஸ், டி. குரூசி.
- மத்திய ஆப்பிரிக்க தூக்க வியாதி அல்லது கேம்பியன் காய்ச்சலை ஏற்படுத்தும் புரோடோசோவா எது?
டி. கெம்பியன்ஸ்(கடத்தி- கிளாசின பல்பாலிஸ்.)
- ரோடீசியன் அல்லது கிழக்கு ஆப்பிரிக்கா தூக்க வியாதியை ஏற்படுத்தும் புரோடோசோவா எது?
டி. ரோடிசியன்ஸ்(கடத்தி- கிளாசினா மோர்சிடன்ஸ்)
- சாகாஸ்அல்லது அமெரிக்க தூக்க வியாதியை ஏற்படுத்தும் புரோடோசோவா எது?
டி. குரூசி( கடத்தி- டிரையடோமா மெஜிஸ்டா)
- காலா -அசார் அல்லது வயிற்றை லீஸ்மேனியாசிஸ்என்ற நோய்க்கு காரணமான புரோட்டோசோவா எது?
லீஸ்மேனியா டோனிவானி ( கடத்தி- மணல் பூச்சி)
- மலேரியா நோய்க்கு காரணமான புரோடோசோவா வகைகள் யாவை ?
பி. வைவக்ஸ் பி. ஓவெல், பி. மலேரியே, பி. பால்சிபாரம்
- பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் காணப்படும் மூன்று நிலைகள் யாவை ?
ஷைசோகோனி (schizogony), ஸ்பொரோகோனி (sporogony), கேமோகோனி (gamogony).
- பி. வைவக்ஸ்(வைவக்ஸ் மலேரியா) -ன் சிவப்பணு சுழற்சி காலம் எவ்வளவு?
48 மணி நேரம்.
- பி. மலேரியே (குவர்டன் மலேரியா )சிவப்பணு சுழற்சி காலம் எவ்வளவு?
72 மணி நேரம்.
- பி. ஓவெல்(மிதமான டெர்ஷியன் மலெரியா) -ன்சிவப்பணு சுழற்சி காலம் எவ்வளவு?
48 மணி நேரம்.
- பி. பால்சிபாரம் (வீரியம் டெர்ஷியன் மலெரியா) சிவப்பணு சுழற்சி காலம் எவ்வளவு?
- மணி நேரம்.
- ஊசிஸ்ட்டுகள் குன்றல் பகுப்பு முறையில் பிளவுற்று ஸ்போரோசோயிட்டுகளை உருவாக்குகின்றன. இந்நிகழ்விற்கு என்ன பெயர்?
ஸ்போரோகோனி (Sporogony).
- மலேரியாவின் அடைகாப்புக்காலம் எத்தனை நாட்கள்?
12நாட்கள்
- 2015 வரை மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி எது?
RTS, S (மஸ்குரிக்ஸ்).
- RTS, S (மஸ்குரிக்ஸ்) திறன் எத்தனை சதவீதம் ?
(26-50%)
- அதிகமாக பரவலாகக் காணப்படும் புழுவின நோய்கள் யாவை?
உருளைப்புழு நோய் (Ascariasis) ,யானைக்கால் நோய் (Filariasis) .
- குடலில் அக ஒட்டுண்ணிகளாக வாழும்எந்த புழுவால் உருளை புழு நோய் உண்டாகிறது?
அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்ஸ் (Ascaris lumbricoides) .
- ஒற்றை விருந்தோம்பியை (monogenic) கொண்டஒட்டுண்ணி எது?
அஸ்காரிஸ் .
- யானைக்கால் நோய்க்கு காரணமான ஒட்டுண்ணி எது?
யானைக்கால் புழு (Filarial worm) என்னும் உச்சரீரியா பான்கிராஃப்டி (Wuchereria bancrofti)
- யானைக்கால் புழு (Filarial worm) என்னும் உச்சரீரியா பான்கிராஃப்டி (Wuchereria bancrofti) எங்கு காணப்படுகிறது?
நிணநீர் நாளங்கள் ,நிணநீர்முடிச்சுகள்
- பெண் யானைக்கால் புழு தோற்றுவிக்கும் இளம் உயிரி எது?
மைக்ரோ பைலரியே
- இளம் உயிரியான மைக்ரோபைலரியே எங்கு முதிர்ச்சி அடைகின்றன ?
நிணநீர் முடிச்சுகளில் .
- பொதுவாக வரையறையின்றி பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் எவை?
ஒஃபியாய்டுகள் (Ophioids), கேனபினாய்டுகள் (Cannabinoids), கோகா-அல்கலாய்டுகள் (Coca-alkaloids), பார்பிசுரேட்டுகள் (Barbiturates), ஆம்ஃபிடமைன்கள் (Amphetamines) மற்றும் எல்.எஸ்.டி ( LSD- Lysergic adiethylamidmided
- டைஅசிட்டைல் மார்ஃபின் என்ற வெள்ளை நிற மணமற்ற மற்றும் கசப்பான படிகநிலையிலுள்ள கூட்டுப்பொருள் எது?
ஹெராய்ன்(Heroin)
- அறுவைசிகிச்சையின்பொழுது பயன்படுத்தப்படும் வலிமையான வலி நீக்கி மருந்து எது?
மார்ஃபின்
- இந்திய சணல் (Hemp plant) செடியிலிருந்து பெறப்படுகின்ற கூட்டு வேதிப்பொருள் எது?
கேனபினாய்டுகள்.
- எரித்ரோசைலம் கோகா (Erythroxylum coca) எனும் தாவரப் பெயர் கொண்ட கோகா தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படுகின்ற வெள்ளை நிற பொடி எது?
கோக்கைன்.
- கோக்கைன் பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது? கோக்(Coke) அல்லது கிராக் (Crack)
- மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற மன மனநோயாளிகளை குணப்படுத்த அடிக்கடி பயன்படும் மருந்துகள் யாவை? மெத்தாம்ஃபிட்டமின்கள்(Methamphetamines) ஆம்ஃபிட்டமின்கள் (Amphetamines), பார்பிசுரேட்டுகள், (Barbiturates) அமைதியூக்கிகள் (Tranquilizers) மற்றும் எல்.எஸ்.டி.
- புகயிலையில் அடங்கியுள்ள, இதயம் , நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும் போதை மருந்துகள் யாவை?
நிகோடின், கார்பன் மோனாக்சைடு மற்றும் தார்.
- ஒரு நபர் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஆல்கஹால் போன்ற போதைப் பொருள்களைஎடுத்துக்கொள்வோ அல்லது பயன்படுத்தவோ தூண்டும் உடல் சார்ந்த அல்லது உளவியல் ரீதியான தேவை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
பழக்க அடிமைப்பாடு.
- தொடர்ச்சியானகட்டுப்படுத்ப்பட முடியாத அளவு போதை மீது எற்படும் ஏக்க உனர்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மகிழ்ச்சி உணர்வு (Euphoria)
- போதை மருந்து அல்லது மதுவைஎடுத்துக்கொள்வதை திடீரென நிறுத்தும் போது, அந்த நபருக்கு தோன்றும் அறிகுறி எவ்வாறுகுறிப்பிடப்படுகிறது?
“விலகல் அறிகுறிகள்” (Withdrawal symptoms)
- நீண்டகாலமாக கொழுப்பு சேர்வதாலும் அதிக அளவில் மது அருந்துவதாலும் எவ்வுறுப்பின் அழிக்கப்படுகின்றன?
கல்லீரல் செல்கள்.
- கல்லீரல் செல்கள் அழிக்கப்டுவதால் உருவாகும் வடு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
“கல்லீரல் சிதைவுநோய்” (Liver cirrhosis).
- மதுவைஅதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் கடுமையான நினைவு குறைபாடு எது?
“கொர்சகாஃப் நோய் (Korsakoff syndrome)
- மதுவின் மீது ஏற்பட்ட உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த சார்பு நிலையின்காரணமாக மது குடிப்பதை கட்டுப்படுத்த முடியாத நிலை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
ஆல்கஹாலிசம் அல்லது மிதமிஞ்சிய மதுப்பழக்கம்.
- சுய மரியாதையுடன் கூடிய நல்ல மன நிலையைக் குறிக்கும் சொல் ?
மன நலம்
- உடற்பயிற்சியானது உடலைத் தூண்டி எந்தெந்த நரம்புணர்வு கடத்திகளை சுரக்க செய்கிறது?
செரடோனின் (Serotonin) மற்றும் எண்டார்ஃபின்களை (Endorphins).
- ‘அனாமதேய குடிகாரர்கள்’ எனும் அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1935
- உலக சுகாதார நிறுவனம் ஆனது ,வாழ்க்கை முறை தொடர்பான குறைபாடுகளால் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு மக்கள் இறக்கின்றனர் என நம்புகிறது ?
30-60 மில்லியன்
- வாழ்க்கைமுறை குறைபாடுகளால் ஏற்படும் இதய நோய்களால் உலகில் எத்தனை சதவீதம் இழப்பு ஏற்படுகிறது?
31%
- உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையானது எந்த விட்டமின் குறைபாட்டை ஏற்படுத்துகிறது?
வைட்டமின்-D
- பாக்டீரியா தொற்றான சிறுநீர்ப்பாதை தொற்றின் காரணமாக ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் இறக்கும் மக்கள் எண்ணிக்கை எவ்வளவு ?
150 மில்லியன்.
- உலக மலேரியா தினம்?
ஏப்ரல்25
- உலகில் கொசு இல்லாத நாடுகள் எவை ?
ஐஸ்லாந்து (Iceland) மற்றும் ஃபரோ தீவுகள் (Faroe islands)
- பூச்சிகளை மலடாக்கும் தொழில் நுட்பம் (SIT) மூலம் ஒரு நிலப்பரப்பிலிருந்துவெற்றிகரமக நீக்கப்பட்டதீங்குயிரிஎது?
(SIT) திருகுப்புழு (Screw – worm fly)
- மூளை புற்று நோய்க்கு எதிரான அறுவை சிகிச்சை ஆயுதமாக பயன்படும் வைரஸ் எது?
ஸிகா வைரஸ் (Zika virus).
12TH ZOOLOGY STUDY NOTES | மனித நலன் மற்றும் நோய்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services