TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- “ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் மனித இனத்தின் இனப்பெருக்கத் திறன் மீண்டும் பிறக்கிறது எனக் கூறியவர் ?
ஜேம்ஸ் அகீ
- முதன்மை இனப்பெருக்க உறுப்புகளானா விந்தகமும் அண்டமும் விந்து செல்மற்றும் அண்டசெல்களை உருவாக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இனசெல் உருவாக்கம் ( gametogenesis)
- ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கருவுறுதல் ( fertilization)
- ஒற்றை செல்லாக கருமுட்டையில் விரைவாக மறைமுக செல் பிரிதல் நடந்து பல செல்களை உடைய கருக்கோளமாக மாறுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பிளவிப்பெருகல்
- கருப்பையின் உட்சுவரில் கருக்கோளம் பதிதல் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கரு பதித்தல்
- வளர் கருவிற்கும் ,தாயின் கருப்பை சுவருக்கும் இடையில் ஏற்படும் நெருக்கமான பிணைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தாய் சேய் இணைப்புத் திசு ( placentation)
- மூன்று மூல இனச்செல் அடுக்குகளில் இருந்தும் சிறப்பு திசுக்கள், உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் உருவாதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உறுப்பாக்கம்( organogenesis)
- இரண்டாம் நிலை பால் பண்புகளை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது?
பிட்யூட்டரி சுரப்பி மற்றும் முதன்மை இனப்பெருக்க உறுப்புகள்
- ஆண் இனப்பெருக்க மண்டலத்தின் உறுப்புகள் யாவை?
ஓரிணை விந்தகங்கள் ,துணை நாளங்கள், சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் .விதைப்பையானது2°c-3°c
- குறைவான வெப்பநிலையை விந்தகங்களுக்குஅளிப்பதால் எவ்வாறு செயல்படுகிறது ?
வெப்ப நெறிப்படுத்தி ( thermo regulator)
- ஒவ்வொரு விந்தகமும் எத்தன்மை கொண்ட வெளிப்புற உறையால் மூடப்பட்டுள்ளது?
டியூனிகா அல்புஜினீயா ( Tunica albugeinea)
- ஒவ்வொரு விந்தகமும், தடுப்பு சுவர்களால் எத்தனை கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
200-250 கதுப்புகள்.
- ஒவ்வொரு கதுப்பும் எத்தனை நுண் குழல்களை (seminiferous tubules)கொண்டுள்ளன?
2-4
- விந்தகங்களுள் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ விதைப்பையினுள் இறக்காமல் உடலுக்கு உள்ளேயே தங்கிவிடும் நிகழ்வுக்கு என்ன பெயர் ?
மறை விந்தகம் (விந்தக உள் தங்கல்)(cryptorchism)
- விந்தகநுண்குழலில் காணப்படும் இரு வகை செல்கள் யாவை?
செர்டோலி செல் அல்லது செவிலிசெல்., விந்து உற்பத்தி செல்.
- விந்துகள் முதிர்ச்சி அடையும் வரை அவற்றிற்கு உணவுவூட்டம் அளிக்கும் செல் எது?
பிரமிடு வடிவம் கொண்ட செர்டோலி செல்.
- இன்ஹிபின் (inhibin) என்னும் ஹார்மோனை சுரந்து எதிர்மறை பின்னூட்ட கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் செல் எது?
செர்டோலி செல்.
- விந்து நுண்குழல்களை சூழ்ந்துள்ள மென்மையான இணைப்புத்திசுவினுள்பொதிந்து காணப்படும் செல்கள் யாவை?
இடையீடு செல் ( interstitial cell) , லீடிக் செல் ( leydig cells)
- எந்த செல்கள் டெஸ்டோஸ்டீரான் (testosterone)என்னும் ஆண் இன ஹர்மோனைச்(androgen)சுரக்கிறது?
இடையீடு செல், லீடிக் செல்
- ஆண் இனப்பெருக்க மண்டலத்துடன் தொடர்புடைய துணை நாளங்கள் யாவை?
ரீட் டெஸ்டிஸ் ( rete testis), விந்து நுண் நாளங்கள் (vasa efferentia), விந்த்க மேல் சுருண்ட குழாய், விந்து நாளங்கள் (vas deferens).
- விந்தகத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள நுண்நாளங்களாலான வலைப்பின்னல் போன்ற அமைப்பைக் கொண்ட நாளம் எது?
ரீட் டெஸ்டிஸ் ( rete testis)
- விந்தக மேல் சுருண்ட குழலில் முடிவு பகுதி எங்கு திறக்கிறது?
விந்து நாளத்திக்குள்.
- விந்துப்பைகள் சுரக்கும் காரத்தன்மையுள்ள திரவம் எது?
செமினல் பிளாஸ்மா ( seminal plasma).
- செமினல் பிளாஸ்மாவில் காணப்படும் விந்து திரவத்தை உறைய வைக்கும் நொதி எது?
வெஸிகுலெஸ்(vesiculase)
- புரோஸ்டேட்சுரப்பி, பல்போரியுதல் இருந்து சுரக்கும் விந்துக்கள் மற்றும் செமினல் பிளாஸ்மா ஆகியவற்றைக் கொண்ட பால் போன்ற வெண்மையான திரவம் எது?
விந்து திரவம் ( semen or seminal fluid)
- விந்து செல்களுக்கு உணவூட்டம் அளிக்கவும், விந்து செல்களைக் கடத்தும் ஊடகமாகவும், இயக்கத்திற்கு தேவையான வேதிப் பொருட்களையும் கொண்டுள்ள திரவம் எது ?
விந்து திரவம்.
- பெண் இனப்பெருக்க மண்டலத்தில் உள்ள உறுப்புகள் யாவை?
ஓரிணை அண்டகங்கள் ,( ovaries),ஓரிணை அண்ட நாளங்கள்(oviducts), கருப்பை (uterus), பெண் கலவி கால்வாய் (vagina) .
- அண்டகம் எந்த வடிவத்தில் உள்ளது ?
2-4 cm நீளம் கொண்ட நீள்வட்ட வடிவம்
- ஒவ்வொரு அண்டகமும் எவற்றால் ஆன இனசெல் எபிதீலியத்தால் சூழப்பட்டுள்ளது?
கனசதுர வடிவ எபிதீலியம் செல்களால் .
- எந்த தசை நாரினால், அண்டமானது இடுப்புப சுவர்பகுதியுடனும் கருப்பையுடனும் இணைக்கப்பட்டுள்ளது?
மீசோவேரியம் (mesovarium).
- ஃபெலாப்பியன் குழாயின் முன் முனைபகுதியில் காணப்படும் புனல் போன்ற அமைப்பு எது?
இன்ஃபன்டிபுலம் (புனலுரு)
- ஆம்புலவையும், புனலுருவையும் ,கருப்பையுடன் இணைப்பது எது?
இஸ்த்மஸ் (isthumus)
- கருப்பை எந்த வடிவத்தில் காணப்படுகிறது ?
பேரிக்காய்
- கருப்பையின் பெரும்பாலான பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உடல்
- கருப்பையின் மேற்புற கோள வடிவ பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குவி முகடு (fundus)
- கருப்பை வாயினுள் காணப்படும் வெற்றிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கருப்பை வாய் கால்வாய் ( cervical canal)
- கருப்பை கால்வாய், கலவை கால்வாய் இரண்டும் சேர்த்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிறப்பு கால்வாய் ( birth canal)
- கருப்பை சுவரின் மூன்று அடுக்குகள் யாவை?
வெளியடுக்கு- பெரிமெட்ரியம்
நடு அடுக்கு- மயோமெட்ரியம்
உற்புறஅடுக்கு-எண்டோமெட்ரியம்
- மாதவிடாய் சுழற்சியின் போது பலசுழற்சி மாற்றங்களுக்கு உள்ளாகும் கருப்பை சுவர் அடுக்கு எது?
எண்டோமெட்ரியம்
- கருப்பை வாய்ப் பகுதியில் இருந்து வெளிப்புறம் வரை நீண்டுள்ள தசைநாரிழைகளாலான பெரிய குழாய்எவ்வாறுஅழைக்கப்படுகிறது?
கலவி கால்வாய்
- பெரிய வெஸ்டியூபிலார் சுரப்பிகள் என்பது என்ன?
பர்தோலின் சுரப்பிகள்.
- ஆண்களில் உள்ள பல்போயூரிதல் சுரப்பிகளுக்கு ஒப்பாக பெண்களில் உள்ள சுரப்பி எது?
பர்தோலின் சுரப்பிகள்
- செயற்பாட்டில் ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிகளுக்கு ஒப்பாக பெண்களில் உள்ள சுரப்பி எது?
ஸ்கீன்ஸ் சுரப்பி
- ஆண், பெண் இருபாலரிலும் காணப்படும் மாறுபாடடைந்த வியர்வை சுரப்பியாக இருப்பது எது?
பால் சுரப்பிகள் ( mammary glands)
- ஒவ்வொரு பால் சுரப்பின் உட்புறத்திலும் கொழுப்பு மற்றும் இணைப்புத் திசுக்களில் பிரிக்கப்பட்ட எத்தனை கதுப்புக்கள் காணப்படுகின்றன?
2-25 கதுப்புக்கள்( lobes)
- ஒவ்வொரு நுண் கதுப்புகளிலும் உள்ள எபிதீலியம் செல்களால் சூழப்பட்ட கதுப்புகள் யாவை?
மீச்சிறு கதுப்புகள்.
- இனச்செல் உருவாக்கத்தில் எந்த செல்பகுப்பு நடைபெறுகிறது ?
குன்றல் பகுப்பு
- விந்தக நுண் குழலின் உட்பகுதியில் முதிராத விந்து செல்கள் எவ்வாறு உருவாகின்றன?
ஸ்பர்மட்டோகோனிய அல்லது விந்து தாய்.
- ஸ்பேர்மாடிகள் , முதிர்ந்த முழுமையான விந்துசெல் ஆக மாறும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஸ்பர்மியோஜனேசிஸ்( spermiogenesis )
- முதிர்ந்த விந்து செல்கள் நுண் குழலின் முதிர்ந்த விந்து செல்கள் விடுவிக்கப்படும் நிகழ்ச்சிக்கு என்ன பெயர்?
விந்து செல் வெளியேற்றம் .
- விந்து செல் உருவாக்க நிகழ்ச்சி முழுவதுமாக நடந்து முடிக்க எத்தனை நாட்களாகின்றன?
64 நாட்கள்.
- ஒவ்வொரு நாளும் உருவாகும் விந்து செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
200 மில்லியன்
- GnRH ஹார்மோனானது முன் பிட்யூட்டரி மீது செயல்படும் போது வெளியிடும் இரண்டு கொனாடோட்ரோப்க்ஹார்மோன்கள் யாவை?
FSH ( நுண்பைசல் தூண்டும் ஹார்மோன்),LH(லூடினைசின் ஹார்மோன்)
- இடையீட்டு செல்கள் மீது செயல்பட்டு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன் எது ?
LH ஹார்மோன்
- விந்து செல்லில் காணப்படும் மூன்று பகுதிகள் யாவை ?
தலை, கழுத்து, வால்.
- அக்ரோசோம் தன்னுள் கொண்டுள்ள புரத செரிப்பு நொதிஎது?
ஹயலூரோனிடெஸ் .
- விந்து செல்லின் உட்கரு என்ன வடிவம் கொண்டது ?
தட்டையான முட்டை வடிவம்.
- விந்து செல்லின் நடுப்பகுதியில் அச்சு இழையை சுற்றி திருகு போன்ற மைட்டோகாண்ட்ரியாகள் அமைந்துள்ளன இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மைட்டோகாண்ட்ரியல்திருகு அல்லதுநெபன்கென் ( nebenkern)
- ஆக்சோனியம் எனப்படும் மைய அச்சு இலையும் அதைச் சூழ்ந்துள்ள புரோட்டோபிளாசம் உறையும் எங்கு காணப்படுகிறது?
விந்துவின் வால் பகுதிகள்
- பெண்களின் பூப்பெய்துதல் போது ஒவ்வொரு அண்டத்திலும் எத்தனை நுண்பை செல்கள் மட்டும் எஞ்சி இருக்கும் ?
60,00-80,000
- மூன்றாம் நிலை நுண்பைசெல் முதிர்ந்து எவ்வாறு மாற்றம் அடைகிறது ?
கிராபியன் ஃபாலிகில்கள்அல்லது முதிர்ந்த நுண் பை செல்லகளாக.
- மனித செல்களில் மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய செல் எது?
விந்து செல் மற்றும் அண்ட செல்
- அண்ட செல்லில் சைட்டோபிளாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஊபிளாசம்(ooplasan)
- ஊபிளாசத்தினுள் உள்ள பெரிய உட்கரு எவ்வாறு அழைக்கப்படுகிது?
வளர்ச்சிபை (germinal vesicle)
- மாதவிடாய் சுழற்சி அல்லது அண்டக சுழற்சி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது ?
28 அல்லது 29
- மாதவிடாய் சுழற்சியில், “மாதவிடாய் நிலை” எத்தனை நாட்கள் வரையில் இருக்கும்?
3-5
- மாதவிடாய் சுழற்சியில், எந்த நிலையில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது?
ஃபாலிகுலார் அல்லது பெருகு நிலை.
- மாதவிடாய் சுழற்சியின் மைய நாளில் அதிக அளவில் LH ஹார்மோன் உற்பத்தியாவதை எவ்வாறு அறியப்படுகிறது?
LH எழுச்சி
- அண்டசெல்லானது அண்டசுவரின் வழியாக வெளியேற்றப்பட்டு வயிற்று குழியைஅடையும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அண்டம் விடுபடுதல்
- மாதவிடாய் சுழற்சியின் லூட்டியல்அல்லது சுரப்பு நிலையில் கிராஃப்பியன் நுண்பை எவ்வாறு மாற்றம் அடைகிறது?
கார்பஸ் லூட்டியம் (corpus luteum)
- கருவுறுதல் நிகழாவிட்டால் கார்ப்பஸ் லூட்டியம் முற்றிலுமாக சிதைவுற்று எவ்வாறு உருவாகிறது?
கார்பஸ் அல்பிகன்ஸ் என்னும் வடுவாக.
- மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கும் குறைவாக இருந்தால் அந்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பல மாதவிடாய் நிலை ( polymenorrhoea)
- நீண்ட நாட்களுக்கு தொடரும் மாதவிடாய் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மாதவிடாய் மிகைப்பு (menorrhagia)
- பெண்களில் “மாதவிடாய் நிறைவு” எந்த வயதில் நிறைவுபெறுகிறது?
45-50
- கருவுற்று 72 மணி நேரத்திற்கு பிறகு தளர்வாக இணைக்கப்பட்ட 16 அல்லது 16க்கும் மேற்பட்ட செல்களை கொண்ட செல்பகுப்பு உருவாகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மோருலா (Morula)
- ஒரே கர்ப்பத்தில் உருவாகும் இரண்டு சிசுக்கள் எவ்வாறு அறியப்படுகிறது?
இரட்டைக் குழந்தைகள் (twins)
- இரு கருமுட்டைகள் உருவாகும் இரட்டையர்கள் எவ்வாறு அறியப்படுகின்றன?
உருவம்மாறுபட்ட அல்லது இரு கருமுட்டை இரட்டையர்கள்.
- சியாமிஸ் என்பது எவ்வகை இரட்டையர்கள்?
ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்கள் .
- கருவானது ஏறத்தாழ 100 செல்களை கொண்ட ஒரு உள்ளீடற்ற பந்து போன்ற அமைப்புக்கு என்ன பெயர்?
கருக்கோளம்
- கருவுற்ற அண்டம் கருப்பைக்கு வெளியே பதிந்து வளரும் நிகழ்வு என்ன ?
இடம் மாறிய கர்ப்பம் ( ectopic pregnancy)
- வளர்க்க கரு உலர்ந்து போகாமல் பாதுகாத்தல், இயக்க அதிர்வு தாங்குதல், ஊட்டச் சத்துப் பொருட்களை உறிஞ்சுதல் போன்ற பணிகளை செய்யும் கரு சூழ்புறபடலங்கள் யாவை?
ஆம்னியான், கோரியான், கருவுணவு பை, ஆல்ன்டாய்ஸ்
- தொப்புள் கொடியின் அடிப்படை அமைப்பான எது கருவை தாய் சேய் இணைப்பு திசுவோடு இணைக்கிறது?
ஆல்ன்டாய்ஸ்,
- கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக உருவாக்கப்படும் நாளமில்லா சுரப்பி எது?
தாய் சேய் இணைப்புத் திசு
- மனிதரின் கருவளர்ச்சி காலம் (கர்ப்ப காலம்) எத்தனை நாட்கள்?
280 நாள்கள் or 40 வாரங்கள்.
- கர்ப்ப காலத்தில், உறுப்பு உருவாக்கத்திற்கான முக்கிய காலம் எது ?
முதல் முப்பருவம்
- கர்ப்பகாலத்தின் எந்த பருவத்தில் , முகம் நன்கு வளர்ச்சி அடைந்தும் எலும்புகள் கடினமாகவும் மாறுகின்றன?
இரண்டாம் பருவம்.
- மகப்பேறின் போது குழந்தை பிறத்தலை எளிதாக்கும் ஹார்மோன் எது?
ரிலாக்ஸ்ன்
- 3அங்குல நீளமும் 2அங்குல அகலமும் கொண்ட கருப்பை கர்ப்ப காலத்தில் எத்தனை மடங்கு பெரிதாகிறது ?
20 மடங்கு
- கர்ப்ப காலத்தில் கருப்பை ஏற்படுத்தும் லேசான மற்றும் வலிமையான சுருக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிராக்ஸ்டர்ஹிக்ஸ் சுருக்கங்கள்.
- சீம்பாலில் காணப்படும் எதிர் பொருள் எது?
IgA
12TH ZOOLOGY STUDY NOTES | மனித இனப்பெருக்கம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services