TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- நம்முள் உறைந்துள்ள இயற்கை ஆற்றலை உண்மையான நோய் குணப்படுத்த ஆகும் எனக் கூறியவர் ?
இப்போக்கரேடேஸ்.
- நோய் தடைக்காப்பு மண்டலம் பற்றிய படிப்பு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
நோய் தடைகாப்பியல்
- நோயை உண்டாக்கும் நோயூக்கிகளுக்கு எதிரான உடலின்ஒட்டுமொத்த செயல்திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நோய் தடைக்காப்பு
- தடைக்காப்பு துலங்கலை ஏற்படுத்தும் திறன் பெற்ற எந்தவொரு பொருளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர்ப்பொருள் தூண்டி (Antigen).
- நோய் தடைக்காப்பின் இருபெரும் பிரிவுகள் யாவை?
இயல்பு நோய் தடைக்காப்பு, பெறப்பட்ட நோய் தடைக்காப்பு
- உயிரினங்களில இயற்கையாகவே காணப்படும், தொற்றுக்கு எதிரானநோய்ய்த்தடுக்கும் ஆற்றல் எவ்வாறு குறிப்பிடபடுகிறது?
இயல்பு நோய்தடைகாப்பு .
- இயல்பு நோய் தடைக்காப்பு வேறு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
இலக்கு தன்மையற்ற நோய்த்தடைக்காப்பு அல்லது இயற்கையான நோய்த்தடைக்காப்பு இயல்பு நோய்தடைகப்பில் உடல் அமைப்புச் சார்ந்த தடைகள் (Anatomical barriers)?
தோல், கோழைபடலம்
- இயல்பு நோய்தடைகப்பில் உடற்செயலியல் சார்ந்த தடைகள் (Physiological barriers)?
உடல் வெப்பநிலை, குறைந்த pH, வேதிய நடுவர்கள், செல் விழுங்குதல் சார்ந்த தடைகள் ,வீக்கம் சார்ந்த தடைகள்.
- வயிற்று சுரப்பிகளில் சுரக்கும் எந்த அமிலம் நாம் உட்கொள்ளும் உணவுகளுடன் சேர்ந்து வரும் நுண்ணுயிரிகள் கொல்கிறது?
HCL
- பாக்டீரியாவின் எதிர்ப்புக் காரணியாக செயல்பட்டு பாக்டீரியாவின் செல்சுவரைத் தகர்க்கும் வேதிய நடுவர் எது?
லைசோசைம்.
- தொற்றில்லா செல்களில் வைரஸ் எதிர்ப்பை தூண்டும் வேதிய நடுவர் எது?
இன்டர்ஃபெரான்கள்.
- வெள்ளையணுக்களால் உருவாக்கப்படும் எந்த வேதிய நடுவர் நோயூக்கி நுண்கிருமிகளை சிதைக்கின்றன அல்லது செல் விழுங்குதலை எளிதாக்குகின்றன.?
நிரப்பு பொருட்கள்.
- செல்விழுங்குதல் சார்ந்த தடைகளில் (Phagocytic barriers) நுண்ணுயிரிகளை விழுங்கி செரிக்கும் செல்கள் யாவை?
மோனோசைட்டுகள், நியூட்ரோபில்கள், திசுவில் உள்ள மேக்ரோஃபேஜ்கள்.
- ஒரு உயிரினம், பிறந்த பிறகு, தன் வாழ்நாளில் பெறும் நோய்தடைப் காப்பு எவ்வாறு குறிப்பிடபடுகிறது?
பெறப்பட்ட நோய் தடைக்காப்பு (Acauired immunity)
- பெறப்பட்ட நோய்த் தடைகாப்பில் உள்ள இரண்டு கூறுகள் யாவை ?
செல்வழி நோய் தடைக்காப்பு , திரவ வழி நோய் தடைக்காப்பு.
- எதிர்ப்பொருள்களின் உதவியின்றி, செல்களினாலேயே நோயூக்கிகள் அழிக்கப்படுவது எவ்வாறு அழைக்கபடுகிறது?
செல்வழி தடைகாப்பு.
- செல்வழி நோய் தடைக்காப்பு உதவி செய்யும் செயல்கள் யாவை?
T- செல்கள் மேக்ரோஃபேஜ்கள் மற்றும் இயற்கைக் கொல்லி
- எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்து அதன்வழியாக நோயூக்கிகளை அழிக்கும் முறைக்கு என்ன பெயர்?
எதிர்ப்பொருள்வழி நோய்த்தடைகாப்புஅல்லது திரவவழி நோய்த்தடைகாப்பு .
- பெறப்பட்ட நோய்த்தடைகாப்பின் இருபெரும் பிரிவுகள் யாவை ?
செயலாக்க நோய்த்தடைகாப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு .
- உடலில், எதிர்ப்பு பொருளை உருவாக்குவதன் மூலம் ஏற்படும் நோய் தடைக்காப்பு சார்ந்த எதிர்ப்புத் திறன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
செயலாக்க நோய்த் தடைகாப்பு.
- முதல் நிலை தடைக்காப்பு துலங்கல்களின் எதிர்ப் பொருளின் செறிவு எத்தனை நாட்களில் உச்சநிலையை அடைகிறது?
7-10 days
- இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்களில் எதிர்ப்பொருள் செறிவு எத்தனை நாட்களில் உச்ச நிலையை அடைகிறது?
3-5 days
- எலும்பு மஜ்ஜையில் இரத்த செல்கள் உருவாகும் செயல்முறைகள் ?
ஹீமட்டோபாயசிஸ்(Haematopoiesis)
- எந்த நோய்தடை காப்பு துலங்கல் மந்தமாகவும், குறுகிய காலம்மட்டும்செயல்படக்கூடியதாகவும் உள்ளன?
முதல் நிலை தடை காப்பு துலங்கல்.
- ஊக்கி துலங்கல (Booster response) என அழைக்கப்படும் நோய் தடைக்காப்பு துலங்கல் எது ?
இரண்டாம் நிலை .
- பணியின் அடிப்படையில் நிணநீரிய உறுப்புகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
முதல்நிலை அல்லது மைய நிணநீரிய உறுப்புகள் (Primary or central lymphoid organs) மற்றும் இரண்டாம் நிலைஅல்லதுபுறஅமைப்புநீணநீரியஉறுப்புகள் (secondary or peripheral lymphoid organs) .
- லிம்போசைட்டுகளின்தோற்றம் முதிர்ச்சி மற்றும் பெருக்கம் ஆகியவற்றில்பங்கேற்கும் உறுப்புகள் உறுப்புகள் எவ்வாறு என அழைக்கப்படுகின்றன?
நிணநீரிய உறுப்புகள்.
- லிம்போசைட்களின்முதிர்ச்சக்கு தேவையான சூழலை வழங்குவது எது?
முதல் நிலை நிணநீர் உறுப்பு.
- பறவைகளின் முதல்நிலை நிணநீரிய உறுப்பாக செயல்படும் உறுப்பு எது?
ஃபேப்ரீசியஸ் பை (Bursa of Fabaricius)
- தைமஸிலிருந்து உற்பத்தியாகும் மிக முக்கிய ஹார்மோன் எது?
தைமோசின்
- எலும்பின் பஞ்சு போன்ற பகுதியினுள்வைக்கப்பட்டுள்ள நிணநீரிய திசு எது?
எலும்பு மஜ்ஜை.
- எலும்பு மஜ்ஜையில் காணப்படும் தண்டு செல்கள் (Stem cells) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குருதியாக்க செல்கள் (Haematopoietic cells)
- இரண்டாம் நிலை நிண நீரிய உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
மண்ணீரல், நிணநீர் முடிச்சுகள், குடல்வால், வயிற்றுக்குடல்பாதையில் உள்ள பேயர் திட்டுகள், டான்சில்கள், அடினாய்டுகள்,MALT(கோழைபட லம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள்) GALT (குடல் சார்ந்தநிணநீரிய திசுக்கள்) BALT (மூச்சுக்குழல்சார்ந்த நிணநீரிய திசுக்கள்)
- நிணநீர் முடிச்சு எந்த வடிவத்தை உடையது?
சிறிய அவரை விதை.
- எந்தெந்த வெள்ளையனுக்களால்நிணநீர் முடிச்சுநிரம்பியுள்ளது?
மாக்ரோஃபேஜ்கள்மற்றும்லிம்போசைட்டு
- உடலில்உள்ள நூற்றுக்கணக்கான நிணநீர் முடிச்சுக்கள் எவற்றால் இணைக்கப்பட்டுள்ளன ?
நிணநீர் நாளங்கள்.
- தெளிவான ஒளி ஊடுருவக்கூடிய, நிறமற்ற, ஓடக்கூடிய மற்றும் செல்லுக்கு வெளியேகாணப்படும் திரவ இணைப்பு திசு எது?
நிணநீர்
- நிணநீர் முடிச்சுகள் உள்ள மூன்று அடுக்குகள் யாவை?
கார்டெக்ஸ், பாராகார்டெக்ஸ்மற்றும்மெடுல்லா
- வெளி அடுக்கான கார்டெக்ஸில் காணப்படும் செல்கள் யாவை?
B-லிம்போசைட்டுகள், மேக்ரோ பேஜ்கள், நுண்பை டென்டிரைட்டிக் செல்கள்.
- அடிக்கடிவீங்கும் நிணநீர் முடிச்சுகள் எங்கு உள்ளன?
கழுத்து, கீழ்தாடை, கக்கங்கள் (armpits) மற்றும் தொடை இடுக்கு
- கோழைபடலம் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (MALT) எங்கு பரவியுள்ளன ?
உணவு மண்டலம், சுவாசமண்டலம் மற்றும் சிறுசீரக இனப்பெருக்கபாதை.
- கோழைப்படலம் சார்ந்த நிணநீரியத்திசுக்களின் ஒரு பகுதியாக உள்ள திசுக்கள் யாவை?
குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (GALT) மற்றும் மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (BALT)
- குடலில் நுழையும் நுண்ணுயிர் கிருமிகளில் (எதிர்பொருள் தூண்டிகள்) இருந்து உடலை பாதுகாக்கும் அமைப்பாக செயல்படும் திசு எது?
குடல்சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (GALT).
- நுகர்ச்சி குழிகளில் இருந்து நுரையீரல் வரையுள்ள சுவாசப் பதையின் கோழைப் படலத்தில் காணப்படும் திசு எது?
மூச்சுக்குழல் சார்ந்த நிணநீரியத் திசுக்கள் (BALT).
- சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள்ஆகிய அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்ற செல் எது?
தண்டு செல்.
- எந்த செல்லானது எலும்பு மஞ்சையிலேயேயே தங்கி வளர்ந்து முதிர்ச்சி அடைந்து B- லிம்போசைட்டாக மாறுகிறது ?
T-லிம்போசைட்.
- T- செல்களில் காணப்படும் இரு பெரும் வகைகள் என்ன ?
உதவி T- செல்கள் ,T- கொல்லி செல்கள்.
- முதிர்ச்சி அடைந்த மோனோசைட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மேக்ரோஃபேஜ்கள்.
- தடைக்காப்பு துலங்கல்களை தூண்டக்கூடிய ஒரு மூலக்கூறு எது?
தடைக்காப்புதூண்டி(Immunogn
- எதிர்ப்பொருள் தூண்டிக்கெதிரானதடைக்காப்பு துலங்கல்களை அதிகரிக்க செய்கின்ற வேதிப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
துணையூக்கிகள்(Adjuvants)
- தடைகாப்பு துலங்கலைத் தூண்டாத, ஆனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட குறிப்பிட்ட எதிர்ப்பொருளுடன் வினைபுரியக்கூடியது எது?
ஹாப்டென்கள் (Haptens) .
- எதிர்பொருள் தூண்டியின் செயல்மிகு பகுதியாக உள்ளது எது?
எபிடோப் (Epitope) .
- எதிர்ப்பொருள் தூண்டி பிணையும் பகுதியாக உள்ளது எது?
பாராடோப் (Paratope)
- உருவாக்கத்தின் அடிப்படையில்எதிர்பொருள் தூண்டிகளை எத்தனை வகையில் பிரிக்கலாம்?
2- ‘புறந்தோன்றி எதிர்ப்பொருள் தூண்டிகள்’மற்றும் ‘அகந்தோன்றி எதிர்ப்பொருள் தூண்டிகள்’.
- ஒரு எதிர்ப்பொருள் தூண்டி ஒரு குறிப்பிட்ட தடைக்காப்பு துலங்கலால் உருவான எதிர்ப்பொருளுடன் வினைபுரிய அனுமதிக்கும் பண்பு என குறிப்பிடப்படுவதுஎது?
எதிர்ப்பொருள்உருவாக்கும்திறன்(Antigenicity).
- வெளிச்சூழலில் இருந்து விருந்தோம்பியின் உடலில் நுழைவதால் நுண்ணுயிரி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புறந்தோன்றிஎதிர்பொருள் தூண்டிகள்.
- தனி உயிரியின்உடலுக்குள்ளே உருவாகும்எதிர்ப்பொருள் தூண்டிகள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
அகந்தோன்றி எதிர்பொருள்
- எதிர்ப்பொருள் தூண்டிகளுக்கு எதிராக உற்பத்தி செய்யப்படும் புரத மூலக்கூறுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
எதிர்ப்பொருட்கள் அல்லது இம்யூனோளோபுலின் .
- உடற்செயலியமற்றும் உயிர்வேதியபண்புகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பொருட்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
IgG (காமா), IgM (மியு), IgA (ஆல்ஃபா), IgD (டெல்டா) மற்றும் IgE (எப்சிலான்) .
- 1950களில் யார்யாருடைய சோதனைகளின் முடிவில், இம்யுனோகுளோபினின் அடிப்படை அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது?
போர்டெர் (Porter) , ஈடெல்மென் (Edelmen)
- Y-வடிவ அமைப்புடன் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டஎதிர்ப்பொருள்எது?
இம்யூனோளோபுலின்.
- கனமானசங்கிலிகள் ((H சங்கிலிகள்) மூலக்கூறு எடை எவ்வளவு?
50,000 டால்டன் மூலக்கூறு(450 அமினோ அமிலம்).
- இலகுவான சங்கிலிகளின் மூலக்கூறு எடை எவ்வளவு?
50,000 டால்டன் மூலக்கூறு ( 450 அமினோ அமிலம்)
- பாலிபெப்டைடு சங்கிலிகள் எந்த பிணைப்பால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன?
டை-சல்பைடு (-S-S)
- நடுப்பகுதியில், அசையும் கீல் (Hinge)அமைப்பினை எந்த சங்கிலிகள் பெற்றுள்ளன?
கன சங்கிலிகள்.
- ஒவ்வொரு சங்கிலியும் (L மற்றும் H) எத்தனை முனைகளை கொண்டுள்ளது? அவை யாவை?
2 முனைகள்,C முனை,N – முனை or அமினோ முனை.
- இம்யுனோகுளோபின் பணிகள் என்ன?
திரிபடைய செய்தல் (Agglutination), வீழ்படிவாக்குதல் (Precipitation), அவற்றின் நச்சை சமநிலைபடுத்தல் (Neutralization) மற்றும்எதிர்பொருள் தூண்டிகளின் மீது மேல்பூச்சு செய்தல் (Opsonisation) .
- எதிர்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள்களுக்கிடையான வினை எத்தனை நிலைகளில் நடைபெறுகின்றது?
3(1-தூண்டி-எதிர்ப்பொருள் கூட்டமைப்பு,2- திரிபடைய செய்தல்மற்றும் வீழ்படிவாதல்,3-எதிர்ப்பொருள் தூண்டிகளை அழித்தல்அல்லது நச்சை சமநிலைப்படுத்துதல் .)
- எதிர்பொருள் தூண்டியையும் எதிர்ப்பொருளையும் பிணைக்ககூடிய பிணைப்பு எந்த பண்பை கொண்டுள்ளது ?
சக பிணைப்பில்லாத பண்பு .
- ஒரு எதிர்ப்பொருள் தூண்டியின் நிர்ணயக்கூறுகளுக்கும் ஒரு எதிர்ப்பொருளின் பிணைப்பிடத்திற்கும் இடையேயான வினைகளின் வலிமை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
எதிர்ப்பொருள் ஈர்ப்பு .
- கரையக்கூடிய எதிர்ப்பொருள் தூண்டி மற்றும் எதிர்ப்பொருள் ஆகியவற்றுக்கிடையேயான வினைகள் மூலம்காணக்கூடிய வீழ்படிவு உருவாகும் வினை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
வீழ்படிவாக்க வினை (Precipitinreaction).
- எதிர்பொருள் தூண்டியுடன் வினைபுரிந்து வீழ்படிவுகளை உருவாக்கும் எதிர்ப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
எதிர்பொருள் வீழ்படிவாக்கிகள் (Precipitins)
- ஒரு துகள்தன்மை கொண்ட எதிர்ப்பொருள் தூண்டி எதிர்ப்பொருளுடன் வினைபுரியும் போதுஅத்துகள் எதிர்ப்பொருள் தூண்டிகள் திரிபடைகின்றன . இது என்ன வினை?
திரட்சி அடைதல் (Agglutation)
- திரிபடைதலை உருவாக்கும் எதிர்ப்பொருள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
திரளி (அக்ளூட்டினின்).
- நடுநிலையாக்கம் வினையில் (Neutralization) எதிர் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நச்சு எதிர்பொருட்கள்(Anti toxins)
- ஒரு குறிப்பிட்ட நோய்கெதிரான செயல்திறனுள்ள, பெறப்பட்ட நோய்த்தடைக்காப்பினைத் தரக்கூடிய உயிரியத்தயாரிப்பு எவ்வாறுகுறிப்பிடப்படுகிறது?
தடுப்பு மருந்து.
- வீரியம் இழந்த உயிர் உள்ள தடுப்பு மருந்து எந்தெந்த நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது?
தட்டம்மை ,புட்டாளம்மை மற்றும் ரூபெல்லா (MMR) மற்றும்சின்னம்மை (வேரிசெல்லா).
- முறிந்த நச்சு தடுப்பு பொருள் எந்தெந்த நோய்க்கு எதிராகப் பயன்படுத்தபடுகிறது?
முத்தடுப்பு மருந்து (DPT) (தொண்டை அடைப்பான், கக்குவான் – இருமல் மற்றும் இரணஜன்னி).
- நோய்யூக்கிகளின் புறப்பரப்பு எதிர்ப்பொருள் தூண்டிகளை கொண்ட இரண்டாம் தலைமுறை தடுப்பு மருந்து எதற்கான மருந்தாகும் ?
கல்லீரல் அழற்சி B.
- செயற்கையாக தயாரிக்கப்பட்ட தூய்மையான ஆற்றல் மிக்க தடுப்பு மருந்து எந்த வகை தடுப்பு மருந்தாகும்?
மூன்றாம் நிலை தடுப்பு மருந்து.
- சுற்றுபுறத்தில் காணப்படும் சில நோய்எதிர்ப்பு தூண்டிகளை நமது உடல்எதிர்கொள்ளும்போது நமது தடைக்காப்புமண்டலம் மிகை துலங்கலை ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஒவ்வாமை.
- வரம்புமீரிய தடைகாப்பு துலங்கலுக்குக் காரணமான பொருட்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
ஒவ்வாமை தூண்டிகள் (Allergens)
- ஒவ்வாமை தூண்டிகளுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?
மகரந்த துகள்கள்,தூசுகளில் உள்ள சிற்றுண்ணிகள் (Mites) மற்றும் பூச்சிகளில் காணப்படும் சிலவகை நச்சு புரதங்கள்.
- ஒவ்வாமைக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?
வைக்கோல் காய்ச்சல் (hay fever), ஆஸ்துமா.
- அதி தீவிர ஒவ்வாமை வினை எது?
அனாபைலாக்சிஸ்.
- தடைக்காப்பு மண்டலத்தின் ஒன்றுஅல்லது அதற்கு மேலான ஆக்கக் கூறுகளின்செயலிழப்பால் எந்த நோய் ஏற்படுகிறது?
தடைக்காப்பு குறைவு நிலை.
- முதல்நிலை தடைக்காப்பு குறைபாடுகள் எந்த காரணங்களால் ஏற்படுகிறது?
மரபியல் குறைபாட்டு காரணங்களால்
- இரண்டாம் நிலை தடைக்காப்பு குறைபாடுகள் தோன்ற காரணங்கள் யாவை?
நோய்தொற்றுகள், கதிர் வீச்சு, செல்சிதைக்கும் மற்றும் நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள்.
- ‘பெறப்பட்டநோய்த்தடைகாப்பு குறைவு சிண்ட்ரோம்’ எனப்படுவது?
எய்ட்ஸ் Acquired Immuno Deficiency Syndrome)
- மரபியல்பண்புகள் அடிப்படையிலும், எதிர்பொருள் தூண்டிகளின் வேறுபாட்டின் அடிப்படையிலும், எச்ஐவி வகைப்படுத்தப்பட்டுள்ள இருவகைகள் என்ன?
எச்.ஐ.வி-1, எச்.ஐ.வி-2
- மனிதனின் நோய்தைகப்பு குறைவுவைரஸ் எந்த பேரினத்தைச்சார்ந்தது?
.லென்டிவைரஸ்’
- எச்ஐவி வைரஸின்மேல் உறையில் கிளைக்கோ புரத நுண்முட்கள் (Spikes) யாவை?
gp41 மற்றும்gp120
- எச்ஐவி வைரஸின் மையம் எந்த புரத உறையால் சூழப்பட்டுள்ளது ?
கேப்சிட்
- கேப்சிட் உரையை சுற்றி உள்ள மற்றொரு புரத உறை எது?
மேட்ரிக்ஸ் புரதஉறை
- எச்.ஐ.வி எதிர்ப்பொருட்கள் உள்ளனவாஎன கண்டறியும் முதல் நிலை சோதனை எது?
எலிசா சோதனை (ELISA- Enzyme Linked Immuno Sorbent Assay)
- நம்பகதன்மை வாய்ந்த உறுதிபடுத்தும் எச்ஐவி சோதனை எது?
வெஸ்ட்டர்ன்பிளாட்.
- உடலின்செல்களே அதே உடலில் எதிர்ப்பொருள் தூண்டிகளாக செயல்படுவது எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சுயஎதிர்ப்பொருள் தூண்டிகள் (Auto antigens).
- சுய தடைக்காப்பு நோய்கள் மனிதனில் எத்தனை பெரும்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.?
2- உறுப்பு சார்ந்த மற்றும் உறுப்பு சாரா .
- சுயதடைக்காப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட உறுப்புக்கு எதிராகவே அமைவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உறுப்பு சார்ந்த நோய்தடை காப்பு.
- உறுப்பு சார்ந்த நோய்தடை காப்புக்கு எடுத்துக்காட்டு யாது?
ஹசிமோட்டோ,தைராய்டு வீக்க நோய், கிரேவின் நோய்(தைராய்டு சுரப்பி) மற்றும் அடிசன் நோய் (அட்ரினல் சுரப்பி).
- சுயதடைக்காப்பு நிகழ்வுகள் உடல் முழுவதும் பரவுவது எந்த வகை சுய தடைகாப்பு?
உறுப்பு சாரா.
- உறுப்பு சாரா சுயதடைக்காப்புக்கு எடுத்துக்காட்டுகள் ?
ரூமாட்டிக் மூட்டுவலி மற்றும் தண்டு வட மரப்பு நோய்கள்.
- கட்டுப்படுத்த முடியாமல் பெருகும்செல்களின் கூட்டம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
கட்டி or திசு பெருக்கம் (Neoplasm)
- கட்டி தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இயல்பான திசுக்களையும்ஆக்கிரமிப்பது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
புற்றுநோய்.
- கட்டியில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி இரண்டாம் நிலை கட்டிகளை ஏற்படுத்தும் நிலைக்கு என்ன பெயர்?
வேற்றிட பரவல் அல்லது மெட்டாஸ்டாசிஸ் (Metastasis)
- பண்புகளின் அடிப்படையில் கட்டிகளை எவ்வாறு பிரிக்கலாம்?
பெனைன் (Benign) அல்லது சாதாரண கட்டிகள் மற்றும் மாலிக்னன்ட் (Malignant) அல்லது புற்றுநோய் கட்டிகள்.
- புற்றுநோயில் காணப்படும் நோய்த்தடைக்காப்பு துலங்கல்கள் எவை?
செல்வழி மற்றும் திரவவழி
- தடைக்காப்பு சிகிச்சை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரியல் சிகிச்சை.
12TH ZOOLOGY STUDY NOTES | நோய் தடைகாப்பியல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services