12TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

தமிழாய் எழுதுவோம்

 

  1. எழுதும் போது ஏற்படும் பிழைகள் என்ன வகைப்பாட்டில் பிரிக்கப்படுகிறது?

எழுத்துப்பிழை, சொற்பொருட் பிழை ,சொற்றொடர்பிழை, பொதுவானபிழை சில

  1. உயிர் எழுத்துக்கள் எத்தனை?

 12

  1. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

 இரண்டு: குறில் நெடில்

  1. மெய் எழுத்துக்கள் எத்தனை?

18

  1. மெய் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

 மூன்று: வல்லினம் ,மெல்லினம், இடையினம்

  1. உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை?

 216

  1. உயிர்மெய் குறில் எழுத்துக்கள் எத்தனை?

90

  1. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

 126

  1. எந்த மெய்யோடு சொல் முடியாது ?

வல்லினம்

  1. ஈரொற்றாய் வராத மெய்கள் எது?

வல்லினம்

  1. எந்த மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை?

ட்,ற்

  1. எந்த மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் க,ச,ப எனும் வரிசைகளுமே வரும்?

 ட்,ற்

  1. என் எழுத்துகள் சொல்லின் முதலில் வராது?

 ட,ற

  1. ஆயுத எழுத்து சொல்லின் எந்த இடத்தில் மட்டும் வரும்?

இடையில்

  1. மெல்லின எழுத்துக்களில் எந்த எழுத்துகள் சொல்லின் தொடக்கமாக வராது?

ண,ன

  1. ணகர ஒற்றினை அடுத்து எது வராது?

றகரம்

  1. னகர ஒற்றினை அடுத்து எது வராது?

 டகரம்

  1. எந்த ஒற்றுகள் மட்டுமே ஈரற்றாய் வரும்?

ய,ர,ழ

  1. தனிக்குறில் அடுத்து எந்த ஒற்றுகள் வராது?

ரகர,ழகர

  1. உயிர்வரின் ஒரு, இரு என்ற சொற்கள் முறையே எவ்வாறு மாறும்?

ஓர்,ஈர்

  1. உயிர் வரின் அது, இது, எது முறையை எவ்வாறு மாறும்?

அஃது,இஃது,எஃது

  1. வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?

ற’கரமாக

  1. லகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் என்னவாக திரியும்?

ன’கரமாக

  1. ளகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?

ட’கரமாக

  1. ளகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் என்னவாக திரியும்?

ண’கரமாக

  1. வருமொழி தகரமாயின் லகரம் மற்றும் தகரம் என்னவாக மாறுகிறது?

லகரம் றகரமாகவும் ,தகரம் றகரமாகவும் மாறும்

  1. வருமொழி நகரமாயின் லகரம் மற்றும் தகரம் என்னவாக மாறுகிறது?

லகரம் னகரமாகவும் ,நகரம் னகரமாகவும் மாறும்

  1. அல்வழியில்‌ தனிக்குறில் எடுத்து லகரம் தகரம் வரும்போது என்னவாக மாறும்?

ஆய்தமாக (ஃ)

  1. இயக்கு, ஓட்டு ,அனுப்பு, பெறு முதலான வினைகள் பெயரிடைநிலையான என்ன எழுத்தை பெரும்?

 ந்


நால்வகை பொருத்தங்கள்

 

  1. மொழியின் அடிப்படை பண்புகள் என்னென்ன?

 திணை, பால், எண் ,இடம்

  1. உலக மொழிகள் அனைத்திலும் என்ன சொற்கள் மிகுதியாக காணப்படுகிறது?

பெயர்ச்சொற்கள்

  1. பெயர் சொற்களை திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிப்பர்?

இரண்டு : உயர்திணை ,அஃறிணை

  1. எந்த நூல் மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை என்றும், அவர் அல்லாத பிற அனைத்தும் அஃறிணை என்றும் கூறுகிறது ?

 தொல்காப்பியம்

  1. பொருட் குறிப்பின் அடிப்படையில் யார் என்ற பயனிலை எதைக் குறிக்கிறது?

உயர்திணை

  1. பொருட் குறிப்பின் அடிப்படையில் எது என்று பயனிலை எதனைக் குறிக்கிறது?

அஃறிணை

  1. எதனைப் பொறுத்து பால் அறியப்படுகிறது?

வினைமுற்று

  1. இடம் எத்தனை வகைப்படும்?

மூன்று: தன்மை, முன்னிலை, படர்க்கை

  1. தன்மைப் பன்மை எத்தனை வகைப்படும் ?

இரண்டு : உளப்பாட்டுத் தன்மை பன்மை ,உளப்படுத்தாத தன்மை பன்மை

  1. பேசுபவர் முன்னிலையாரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு பேசுவது என்ன வகை?

உளப்பாட்டுத் தன்மை பன்மை

  1. பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்து தன்மை பன்மையில் பேசுவது என்ன வகை?

உளப்பாடுத்தாதத் தன்மை பன்மை


பொருள் மயக்கம்

 

  1. எழுதும்போதும் பேசும்போதும் தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போருக்கும் கேட்போருக்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

பொருள்மயக்கம்


பா இயற்றப் பழகலாம்

 

  1. நீதி இலக்கியங்கள் பெரும்பாலும் என்ன வடிவத்திலேயே தோன்றியது?
SEE ALSO  6 தமிழ் BOOKBACK QUESTIONS AND ANSWERS| சிறகின் ஓசை

வெண்பா

  1. சொல்லுதலை அடிப்படையாகக்கொண்டு தோன்றியது எது?

வெண்பா

  1. வெண்பா என்ன ஓசை உடையது ?

 செப்பலோசை

  1. ஏனைய பார்க்கபாக்களை விட வரையறுத்த இலக்கண கட்டுக்கோப்பு உடையதால் வெண்பா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வன்பா

  1. வெண்பாவிற்கான தளை எது ?

வெண்டளை

  1. வெண்டளை எத்தனை வகைப்படும் ?

இரண்டு: இயற்சீர் வெண்டளை ,வெண்சீர் வெண்டளை

  1. கலைத்தல் என்பதற்கு பொருள் என்ன?

கட்டுதல், பிணித்தல்

  1. மா முன் நிரை ,விளம் முன் நேர் இது எவற்றிற்கான வாய்ப்பாடு ?

இயற்சீர் வெண்டளை

  1. வெண்சீர் வெண்டளையின் வாய்பாடு என்ன?

காய் முன் நேர்

  1. மா விளம் என்பது எத்தனை அசை சீர்கள் ? 

ஈரசைச் சீர்கள்

  1. காய் என்பது எத்தனை அசை சீர்கள் ?

மூவசைச்சீர்

  1. முதறீசீர் மாச்சீர் என்றால் வரும் சீரின் முதல் ஆசை என்னவாக இருக்க வேண்டும்?

நிரை

  1. முதற்சீர் விளச்சீர் அல்லது காய்ச்சீர் என்றால் வரும் சீரின் முதலசை என்னவாக இருக்க வேண்டும்?

நேர்

  1. ஈற்றுச்சீர் எந்த வாய்ப்பாடு ஒன்றில் முடியவேண்டும்?

 நாள் ,மலர், காசு, பிறப்பு

  1. நாள்,மலர் என்பவை எந்த அசைச் சீர்கள்?

ஓரசைச்சீர்கள்

  1. காசு, பிறப்பு என்பவை என்ன சீர்கள்?

 குற்றியலுகர ஓசையோடு முடியும் சீர்கள்

  1. ஈற்று அயற்சீர் ,மாச்சீர் என்றால் என்ன வரும்?

மலர் அல்லது பிறப்பு

  1. ஈற்று விளச்சீர்,காய்ச்சீர் என்றால் என்ன வரும்?

 நாள் அல்லது காசு

  1. குறள் வெண்பாவின் அடிவரையறை என்ன?

இரண்டடி வெண்பா

  1. நேரிசை, இன்னிசை சிந்தியல் வெண்பாவின் அடிவரையரை என்ன? 

மூன்றடி வெண்பா

  1. நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும் எத்தனை அடி வரையறை கொண்டது ?

 4 அடிக்கு

  1. 4 அடி முதல் 12 அடி வரை உள்ள வெண்பா எது ?

 பஃறொடை வெண்பா

  1. 13 அடி முதல் அதற்கு மேற்பட்ட அடிகள் வரையறை கொண்டது?

கலிவெண்பா

  1. வெண்பா எத்தனை வகைப்படும்?

ஏழு: குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா ,நேரிசைச் சிந்தியல் வெண்பா ,இன்னிசை சிந்தியல் வெண்பா ,பஃறொடை வெண்பா, கலி வெண்பா

  1. நாற்சீர்-முச்சீர்-இடையில் தனிச்சீர் என்பது எதற்குரிய இலக்கணம்?

இன்னிசை வெண்பா

  1. எந்தப் வெண்பா வகையில் இரண்டு நாற்சீர் முச்சீருக்கு இடையில் இரண்டாவது அடியின் ஈற்றுச் சீராக தனியே ஒரு சீர் ஒரு சிறு கோடிட்டு எழுதப்படும் ?

இன்னிசை வெண்பா

  1. நான்கு-மூன்று-தனிச்சீர்-நான்கு-மூன்று சீர்கள் என்கிற முறையில் எந்த வெண்பா எழுதப்படும் ?

 நேரிசை வெண்பா

  1. தனிச்சீரில்லாமல் நான்கு சீரோடு அமைக்கப்படுபவை என்ன வகை வெண்பா?

 இன்னிசை வெண்பா


படிமம்

 

  1. படிமம் என்பதன் பொருள் என்ன ?

காட்சி

  1. விளக்க வந்த ஒரு காட்சியையோ ,கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி எவ்வாறு அழைக்கப்படும்?

 படிமம்

  1. படிமத்தை உருவாக்க எவை பயன்படுகின்றன?

 உவமை, உருவகம் ,சொல்லும் முறை

  1. படிமம் எவற்றின் அடிப்படையில் தோன்றும்?

உவமை, உருவகம் போல படிமமும் வினை ,பயன் ,மெய்( வடிவம்),உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்

  1. தொல்காப்பியர் எந்த ஒன்றை மட்டும் அணியாக கூறினார்?

உவமை


காப்பிய இலக்கணம்

 

  1. காப்பியத்தை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

EPIC

  1. EPIC என்ற ஆங்கில வார்த்தை எந்த மொழியில் இருந்து தோன்றியது?

 கிரேக்க சொல் EPOS

  1. EPOS என்பதன் பொருள் என்ன?

சொல் அல்லது பாடல்

  1. காப்பியம் என்பதன் பொருள் என்ன ?

 காப்பு+இயம் என பிரித்து மரபை காப்பது ,இயம்புவது ,வெளிப்படுத்துவது என்றும் மொழியைச் சிதையாது என்றும் காரணம் கூறுவர்

  1. ஐம்பெருங்காப்பியம் என தன்னுடைய நன்னூல் உரையில் குறிப்பிட்டவர் யார்?

மயிலைநாதர்

  1. பெருங்காப்பியம் ஐந்து எனக் குறிப்பிட்டு அவற்றின் பெயர்களையும் வழங்கியுள்ள நூல்கள் என்னென்ன?

பொருள் தொகை நிகண்டு, திருத்தணிகையுலா

  1. சூளாமணியை பதிப்பித்தவர் யார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -32|களவழி நாற்பது

சி.வை. தாமோதரனார் (1895)

  1. காப்பியத்தை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன?

பொருட்டொடர்நிலைச் செய்யுள் ,கதை செய்யுள் , அகலக்கவி ,தொடர்நிலைச் செய்யுள், விருத்தச் செய்யுள் ,உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், மகாகாவியம்

  1. காப்பிய சிற்றுறுப்புகளாக அமைந்திருப்பவை என்ன?

காதை, சருக்கம், இலம்பகம் ,படலம் போன்றவை

  1. காப்பிய பேருறுப்புகளாக அமைந்திருப்பவை?

காண்டம்

  1. காதை என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?

 சிலப்பதிகாரம் ,மணிமேகலை

  1. சருக்கம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?

சூளாமணி ,பாரதம்

  1. இலம்பகம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?

சீவக சிந்தாமணி

  1. படலம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?

 கந்தபுராணம் ,கம்பராமாயணம்

  1. காண்டம் என்ற காப்பிய அமைப்புமுறை எந்த நூல்களில் காணப்படுகிறது?

சிலப்பதிகாரம் கம்பராமாயணம்

  1. வடமொழியில் எந்த நூலை தழுவி தமிழில் தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் எழுதப்பட்டது?

 காவியதரிசம்

  1. வாழ்த்துதல், தெய்வத்தை வணங்குதல், வருபொருள் உரைத்தல் என்ற மூன்றினில் ஒன்றினை தொடக்கத்தில் பெற்று வருவது எது?

பெருங்காப்பியம்

  1. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பொருள்களும் அமைந்திருப்பது ?

பெருங்காப்பியம்

  1. பெருங் காப்பியத்தில் எத்தனை உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும்?

 18 உறுப்புகள்

  1. பெருங்காப்பிய அமைப்பு முறையில் உட்பிரிவுகள் எந்த பெயர்களில் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்?

 சருக்கம், இலம்பகம் ,பரிச்சேதம்

  1. பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதி பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப் பெற்று விளங்கும் காப்பியமாக எந்த நூலை குறிப்பிடுவர்?

 சீவகசிந்தாமணி

  1. அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கனுள் ஒன்றோ,இரண்டோ குறைந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும் ?

சிறுகாப்பியம்

  1. காப்பியத்தின் பண்பாக பாவிகம் என்பதை எந்த நூல் குறிக்கின்றது?

தண்டியலங்காரம்

  1. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படை கருத்து எவ்வாறு அழைக்கப்படும் ?

பாவிகம்

  1. “பிறனில் விழைவோர் கிளையோடுங் கெடுப்ப” என்பது எந்த நூலினுடைய பாவிகம்?

கம்பராமாயணம்

  1. “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ,உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “என்பது எந்த நூலினுடைய பாவிகம் ?

 சிலப்பதிகாரம்

  1. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையான எந்த நூல் முத்தகம்,குளகம்,தொகைநிலை,தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளை கூறுகிறது?

தண்டியலங்காரம்

  1. தண்டியலங்காரம் கூறும் செய்யுள் வகைகளுள் எது காப்பியத்தை குறிக்கிறது ?

தொடர்நிலை

  1. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகையை குறிக்கும் சொல் எது?

தொடர்நிலை

  1. தொடர்நிலை எத்தனை வகைப்படும்?

 இரண்டு :பொருள் தொடர்நிலை, சொல் தொடர் நிலை

  1. சிலப்பதிகாரம் கம்பராமாயணம் எந்த தொடர் நிலையைக் கொண்டுள்ளது?

பொருள் தொடர்நிலை

  1. அந்தாதி இலக்கியங்கள் என்ன தொடர் நிலையைக் கொண்டுள்ளது?

சொல் தொடர்நிலை

  1. விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த நூல்கள் என்னென்ன?

 சீவகசிந்தாமணி கம்பராமாயணம்

  1. பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகை செய்யுள்களில் அமைந்தது எது?

சிலப்பதிகாரம்

  1. இருபதாம் நூற்றாண்டில் காப்பிய இலக்கணங்கள் சிலவற்றை பின்பற்றி இயற்றப்பட்டது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

குறுங்காப்பியம் அல்லது குறுங்காவியம்

  1. பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு நூல்களை எழுதியவர் யார்?

பாரதியார்

  1. பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, இரண்ட வீடு, எதிர்பாராத முத்தம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,வீரத்தாய், புரட்சிக்கவி ஆகிய நூல்களை எழுதியவர் ?

 பாரதிதாசன்

  1. மருமக்கள் வழி மான்மியம் எனும் நூலை எழுதியவர்?

கவிமணி

  1. ஆட்டனத்தி ஆதிமந்தி மாங்கனி இயேசு காவியம் ஆகிய நூல்களை எழுதியவர் ?

கண்ணதாசன்

  1. பாரத சக்தி மகா காவியம் எனும் நூலை எழுதியவர் யார் ?

கவியோகி சுத்தானந்த பாரதியார்

  1. இராவண காவியம் எனும் நூலை எழுதியவர் யார்?

புலவர் குழந்தை


தொன்மம்

 

  1. தொன்மம் என்பதன் பொருள் என்ன?
SEE ALSO  12TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

பழங்கதை, புராணம்

  1. தொல்காப்பியர் குறிப்பிடும் வனப்புகளில் ஒன்று?

தொன்மை

  1. கடவுளர்கள், தேவர்கள் மக்கள் விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து படித்தால் நம்ப முடியாதது போல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழமையான கதைகள் எவ்வாறு அழைக்கப்படும்?

தொன்மம்

  1. ராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து புதுமைப்பித்தன் என்ன கதையை எழுதினார்?

  சாபவிமோசனம்,அகலிகை

  1. திருவிளையாடற்புராணத்தில் சிவன் நக்கீரனை கொண்டு அழகிரிசாமி என்ன சிறுகதைகளைப் படைத்துள்ளார் ?

விட்டகுறை, வெந்தழலால் வேகாது

  1. தொன்மங்களைக் கொண்டு பத்மவியூகம் எனும் நூலை எழுதியவர் யார் ?

 ஜெயமோகன்

  1. தொன்மங்களைக் கொண்டு அரவாண் எனும் நூலை எழுதியவர் யார் ?

எஸ்.ராமகிருஷ்ணன்


குறியீடு

 

  1. கவிதைத் துறையில் மிகுதியும் வழங்கிவரும் குறியீடு என்ற உத்தி ஆங்கிலத்தில் எவ்வாறு ஆளப்படுகிறது?

Symbol

  1. Symbol என்பதற்கு பொருள் என்ன?

ஒன்று சேர்

  1. குறியீட்டால் பொருளை உணர்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குறியீட்டியம் (Symbolism)

  1. குறியீட்டியம் கோட்பாட்டை விளக்கி வளர்த்தவர்கள் யார்?

பொதலர்,ரைம்போ,வெர்லேன்,மல்லார்மே

  1. சங்க இலக்கியத்தில் அகத்திணை மாந்தர்களில் உள்ளத்து உணர்வுகளை குறிப்பாக உணர்த்தும் குறியீடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

உள்ளுறை உவமம்

  1. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப்பொருள் கோட்பாடு உருவானது என்று குறிப்பிடுபவர் யார்?

ஹார்ட்

  1. குறியீட்டின் அடிப்படை எது?

உவமேயத்தை கேட்போர் ஊகித்துக் கொள்ளுமாறு விட்டு உண்மை மட்டும் கூறுவது உள்ளுறை உவமத்தின் அடிப்படை அதுவே குறியீட்டின் அடிப்படையாகும்

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

12TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: