TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- எந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கு அளித்த உத்தரவில் பள்ளிப் பாடத்திட்டத்தில் திருக்குறளின் 133 அதிகாரங்களில் 108 அதிகாரங்களை சேர்க்கப்பட வேண்டும் என மதுரை கிளை உத்தரவிட்டது?
2017
- பண்டைய காலத்தில் குற்றங்கள் நிகழ்வதை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அளவுக்கு அதிகமான தண்டனை பரிந்துரைத்த கௌடில்யரின் நூல் எது?
அர்த்தசாஸ்திரம்
- திவான்-இ-குவாசா என்பதன் பொருள் என்ன?
நடுவர்
- திவான்-இ-மசலிம் என்பதன் பொருள் என்ன?
அதிகாரத்துவத்தின் தலைவர்
- திவான்-இ-ரியாசத் என்பதன் பொருள் என்ன?
தலைமை தளபதி
- சுல்தானத்தின் தலைநகரில் எத்தனை வகையான நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு இருந்தன?
ஆறுவகை
- சுல்தானத்தின் தலைநகரில் இருந்த நீதிமன்றங்கள் என்னென்ன?
மன்னர் நீதிமன்றம் ,மேல்முறையீட்டு உச்சநீதிமன்றம்(திவான்-அல்-மசாலிம்) ,குடிமையியல் வழக்கு உச்ச நீதிமன்றம்(திவான்-இ-ரிசாலட்), மாநில தலைமை நீதிபதி நீதிமன்றம்(சத்ர ஜகான் நீதிமன்றம்), தலைமை நீதிபதி நீதிமன்றம் ,தேசத்துரோக வழக்குகள் நீதிமன்றம்(திவான்-இ-ரியாசட்)
- சுல்தானுக்கு உதவிய சட்டவல்லுனர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
முப்தி
- சுல்தான் காலத்தில் தேசத்துரோக வழக்குகள் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் எது?
திவான்-அல்-மசாலிம்
- சுல்தான் காலத்தில் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் எது?
திவான்-இ-ரிசாலட்
- நீதி விசாரணையின்போது சுல்தான் இல்லாதபோது யார் தலைமை தாங்கி நடத்துவார்?
குவாசி-உல்-குசாட்
- குவாசி-உல்-குசாட் என்பவர் என்ன அதிகாரி?
அரசின் நீதிமன்ற தலைமை அலுவலர்
- என்ன அலுவலர் பதவி உருவாக்கப்பட்டு நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக சுல்தான் காலத்தில் செயல்பட்டார்?
சத்ரே ஜகான்
- சத்ரே ஜகான் மன்றமும் மற்றும் தலைமை நீதிபதி நீதிமன்றமும் யாருடைய ஆட்சியில் இணைக்கப்பட்டது?
அலாவுதீன் கில்ஜி
- தலைமை நீதிபதியின் நீதிமன்றத்தின் இணைக்கப்பட்டிருந்த அலுவலர்கள் யார்?
முப்தி,பண்டிட்,மொக்டாசிப் (அரசு வழக்கறிஞர் தரப்பு), தாத்பாக் (நிர்வாக அலுவலர்)
- பெரும் தேசத்துரோக வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எது?
திவான்-இ-ரியாசத்
- கிழக்கிந்திய கம்பெனி எந்த ஆண்டு முதலாம் ராணி எலிசபெத்தின் சாசன சட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது?
1600
- மதராஸ் நிர்வாகத்தைப் பொருத்தவரை எந்த ஆண்டு சாசன சட்டம் ஒரு ஆளுநர் அவருடன் தலா ஒரு குடியேற்ற பகுதிக்கு ஒரு உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு குழு நியமிக்க வழிவகுத்தது?
1661
- இங்கிலாந்து அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு எது ?
அசென்டினா வழக்கு
- அசென்டினா வழக்கு எந்த ஆண்டு நடந்தது?
1665
- அசென்டினா வழக்கின் போது ஆளுநராக இருந்தவர் யார்?
பாக்ஸ் க்ராப்ட்
- 1678ம் ஆண்டு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர்
- நீதிமன்ற மொழியாக அறிவிக்கப்பட்டது எது ?
ஆங்கிலம்
- வணிகர்கள் கடலில் மேற்கொள்ளும் குற்றங்களை விசாரிக்க ஒரு கடற்படை நீதிமன்றம் நிறுவ எந்த ஆண்டு சாசன சட்டம் வழிவகுத்தது?
1683
- எந்த ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது?
1687
- பம்பாய் மீது கிழக்கிந்திய கம்பெனி நீதித்துறை அதிகாரம் செலுத்த எந்த ஆண்டு சாசன சட்டம் அதிகாரம் அளித்தது?
1668
- எந்த ஆண்டு பிரகடனம் ஆங்கிலேயே சட்டத்தை பம்பாயில் அறிமுகப்படுத்தியது?
1672
- யாருடைய படையெடுப்பு 1690 ஆம் ஆண்டு பம்பாயில் நீதிமன்றம் கலைக்கப்பட காரணமாகியது?
சித்தியாகூப் பிற முகலாய கடற்படைத் தளபதியின் படையெடுப்பு
- பம்பாய் நீதிமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் எந்த ஆண்டு மீண்டும் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட பொது நீதிமன்ற புதுப்பிக்கப்பட்டது?
1718
- பம்பாய் நீதிமன்றம் வாரத்திற்கு எத்தனை முறை கூடியது?
ஒரு முறை
- கல்கத்தா மாகாணத்தைப் பொறுத்தவரை யாருக்கு நீதித்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன?
ஆளுநருக்கும் அவருடைய ஆட்சி குழுவுக்கும்
- கிழக்கிந்திய கம்பெனியானது யாருடைய நீதித்துறை நிர்வாக முறையை பின்பற்றியது ?
முகலாயர்
- மாவட்ட ஆட்சியரால் மூன்றாம் நடுவர் தீர்ப்பாயத்திற்கு பரிந்துரைக்கப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை எந்த நீதிமன்றம் தலைமையேற்று நடத்தியது?
பாஜ்தாரி
- எந்த ஆண்டு சாசன சட்டம் மூன்று மாகாணங்களிலும் ஒவ்வொரு மேயர் நீதிமன்றங்களை அமைத்தது?
1726
- எந்த ஆண்டு சாசன சட்டம் 1726 ஆம் ஆண்டு சாசனத்தில் நீதி தொடர்பான பகுதிகளை மேலும் சீர்திருத்தம் செய்தது?
1753
- எந்த சாசன சட்டம் ஐந்து நீதிமன்றங்களை நிறுவியது?
1753 ஆம் ஆண்டு சாசன சட்டம்
- 1753 ஆம் ஆண்டு சாசன சட்டம் நிறுவிய ஐந்து நீதிமன்றங்கள் என்னென்ன?
கோரிக்கைகள் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ,குடியரசுத்தலைவர் நீதிமன்றம் ,ஆட்சிக்குழு கொண்ட நீதிமன்றம் மற்றும் அரசர் தலைமையிலான நீதிமன்றம்
- எந்த ஆண்டில் வாரன் ஹேஸ்டிங்ஸ் நீதிமன்றங்களை சீரமைத்தார்?
1780
- காலனி ஆட்சிக் காலத்தில் நீதித்துறையில் ஏற்பட்ட மிக முதன்மையான மேம்பாடு என்பது என்ன ?
உள்ளூர் சட்டங்களை தொகுத்தது
- இந்து சட்டங்கள் தொகுப்பதற்கு காரணமானவர் யார்?
governor-general வாரன் ஹேஸ்டிங்ஸ்
- கல்கத்தாவில் ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு ஒரு உச்சநீதிமன்ற நீதி நிர்வாகம் அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
1773
- எந்த சாசன சட்டம் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விரிவாக்கம் செய்தது?
சாசன சட்டம் 1774
- மதராஸ் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
1801
- பம்பாய் உச்சநீதிமன்றம் எப்போது நிறுவப்பட்டது?
1824
- எந்த ஆண்டில் காரன்வாலிஸ் பிரபு சட்டவிதிகள் தொகுப்பு ஒன்றை தயாரித்தார்?
1793
- எந்த ஆண்டு கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற மின்டோ பிரபு பல்வேறு நீதிமன்றங்களில் அதிகாரங்களையும் அதிகார வரம்பையும் அதிகரித்தார்?
1807
- எந்த ஆண்டு ஹேஸ்டிங்ஸ் பிரபு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்?
1813
- மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களை மூடியவர் யார்?
பெண்டிங்
- மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்களின் பணிகளை பெண்டிங் எங்கு மாற்றினார் ?
மாவட்ட நடுவர் நீதிமன்றங்கள்
- எந்த காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னர் நீதிமன்றமும் இந்தியாவில் கம்பெனி நீதிமன்றமும் தனித்தனி அதிகார வரம்புகளை கொண்ட இரட்டை நீதி அமைப்பை உருவாக்கி இருந்தது?
1834-1861
- எந்த சட்டம் கல்கத்தா,மதராஸ் ,பம்பாய் ஆகிய நகரங்களில் நீதி வழங்கும் அதிகாரம் கொண்ட உயர் நீதிமன்றங்களை அமைக்க மன்னருக்கு அதிகாரம் அளித்தது?
இந்திய உயர் நீதிமன்ற சட்டம் 1861
- இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்கப்பட்ட காலத்தில் எத்தனை உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன ?
7 உயர்நீதிமன்றங்கள்
- இந்தியா விடுதலை அடைந்தபோது எந்தெந்த இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன?
பஞ்சாப் ,அசாம், ஒடிசா, ராஜஸ்தான் ,திருவாங்கூர், மைசூர் மற்றும் ஜம்மு காஷ்மீர்
- எத்தனையாவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் உயர்நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்தது?
42 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம்
- 42 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
1976
- தொடக்க காலத்தில் எத்தனை உயர்நீதி மன்றங்கள் இருந்தன?
மூன்று: கல்கத்தா ,சென்னை ,பம்பாய்
- எந்த ஆண்டு கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது?
1937
- 1937 இல் தொடங்கப்பட்ட நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகளை கொண்டிருந்தது ?
ஒரு தலைமை நீதிபதி மற்றும் 6 நீதிபதிகள்
- எந்த ஆண்டு 1937இல் தொடங்கப்பட்ட நீதிமன்றம் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக ஆனது?
1950
- எந்த ஆண்டுகளுக்கிடையே பிரபுக்களின் நீதி மன்ற மேலவை (privacy council) பங்காற்றியது ?
1726 மற்றும் 1883 ஆம் ஆண்டுகளுக்கு இடையே
- “கோயா கமாண்டோஸ்”என்ற பழங்குடியினர் இளைஞர்களை சிறப்பு காவல் படை அலுவலராக நியமித்த மாநிலம் எது?
சட்டீஸ்கர்(மாவோயிஸ்டுகளுக்கு எதிராக)
- இறுதிகட்ட மேல்முறையீட்டுக்காக பிரிந்து செல்லாமல் இந்தியாவிலேயே மேல்முறையீடு செய்யும் ஒரு அனைத்து இந்திய தலைமை நீதிமன்றத்தின் தேவையை 1921 இல் உணர்ந்தவர் யார்?
சர் ஹரி சிங் கோர்
- பிரபுக்கள் நீதிமன்ற மேலவை ஒழிப்பு, கூட்டாட்சி முறை சார்ந்த நீதிமன்ற அதிகார விரிவாக்க சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1949
- அரசமைப்பின் எந்த உறுப்பு இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழிசெய்தது?
உறுப்பு 124
- இந்திய அரசமைப்பு எத்தனை அடுக்கு நீதித்துறை அமைப்பினை வழங்குகிறது?
மூன்று அடுக்கு : இந்திய உச்சநீதிமன்றம், அரசமைப்புபடி உருவாக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் ,ஒவ்வொரு மாநிலத்திலும் நீதி மாவட்டங்களில் வாரியாக மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றங்கள்
- அரசமைப்பின் காவலன் யார் ?
உச்ச நீதிமன்றம்
- “இந்திய கூட்டாட்சி இரட்டை ஆட்சி அமைப்பு முறை கொண்டிருந்தாலும் இரட்டை நீதித்துறை அமைப்பை கொண்டிருக்கவில்லை. உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசமைப்பின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த நீதித்துறையாகச் செயல்பட்டு அனைத்து குடிமையியல் அல்லது குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண்கிறது. தீர்வு வழங்கும் முறையில் வேறுபாடுகள் களைவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது” என கூறியவர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
- அசல், மேல்முறையீட்டு மற்றும் ஆலோசனை வழங்குதல் என மூன்று அதிகார வரம்புகளை கொண்ட நீதிமன்றம் எது ?
உச்சநீதிமன்றம்
- எந்த அதிகார வரம்பு என்பது உச்ச நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளுக்கும் மூலாதாரமாகிவிடுகிறது என்பது ஆகும்?
அசல் நிதி அதிகார வரம்பு
- இந்தியாவில் உள்ள உச்சபட்ச மேல்முறையீட்டு நீதிமன்றம் எது ?
உச்சநீதிமன்றம்
- நீதித்துறை தகவல் அமைப்பின்படி கீழமை நீதிமன்றங்களில் எத்தனை கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது?
2.91 கோடி வழக்குகள்
- பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக வழக்குகள் அதிகம் தேக்கமடைந்து உள்ள மாநிலங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் மட்டும் 8 கோடி வழக்குகள் நிலுவையில் கொண்டு எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
உத்தர பிரதேசம்
- தேசிய நீதித்துறை தகவல் அமைப்பின்படி பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு?
21.9 லட்சம் வழக்குகள்
- வழக்குகள் அதிகமாக தேக்கமடைந்த மாநிலங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தபடியாக உள்ள மாநிலம் எது?
பீகார்
- மகாராஷ்டிரா மாநிலத்தில் எத்தனை லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன?
2 லட்சம்
- சிக்கிம் மாநிலத்தில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன ?
இரண்டு வழக்குகள்
- எந்த மாநிலத்தில் ஒரு வழக்கு கூட நிலுவையில் இல்லை?
அந்தமான் நிக்கோபார்
- அரசமைப்பின் பாதுகாவலனாக இயங்குகிறது எது?
உச்சநீதிமன்றம்
- அரசமைப்புக்கு விளக்கம் அளிப்பதில் எது இறுதி அதிகாரம் கொண்டுள்ளது?
உச்சநீதிமன்றம்
- உச்ச நீதிமன்றமானது இந்திய அரசமைப்பின் எந்த பகுதி மூலம் நிறுவப்பட்டுள்ளது?
பகுதி 5 அத்தியாயம் 4
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் வடிவம் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து கூறும் அரசமைப்பு உறுப்புகள் என்னென்ன?
அரசமைப்பு உறுப்புகள் 124 முதல் 147 வரை
- இந்திய அரசமைப்பு ஆரம்பத்தில் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகளை அனுமதித்தது?
ஒரு நீதிபதி 7 கீழ்நிலை நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றம்
- உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய அரசமைப்பு யாருக்கு அதிகாரம் வழங்கியிருந்தது ?
நாடாளுமன்றம்
- எந்த ஆண்டில் உச்ச நீதிமன்ற உச்சநீதிமன்றநீதிபதிகள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்தது?
2008
- உச்சமன்ற நீதிபதியை நியமனம் செய்வதற்கு தலைமை நீதிபதி யாருடன் கலந்தாலோசிக்க வேண்டும்?
உச்சநீதிமன்றத்தின் இதர நான்கு மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவுடன்
- உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் அமைச்சரவை மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர் யாரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?
குடியரசுத் தலைவர்
- உச்சநீதிமன்ற நீதிபதி எத்தனை வயது அடையும் வரை பதவியில் இருக்கலாம்?
65 வயது
- ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலக நினைத்தால் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?
குடியரசுத் தலைவர்
- புதிய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட ஒருவர் என்னென்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்?
இந்திய குடியுரிமை பெற்றிருத்தல்,உயர்நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணியாற்றிய அனுபவம், இவற்றுடன் நாடாளுமன்றம் விதித்துள்ள தகுதிகள்
- உச்சநீதிமன்ற நீதிபதியை விசாரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு எந்த பெரும்பான்மையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்?
ஒட்டு மொத்த உறுப்பினர்களில் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு குறையாமல் கலந்து கொண்டு அதே அமர்வில் வாக்கெடுப்பில் ஆதரவு பெரும்பான்மை பெற்றால்
- பட்டியலினத்தவர் சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதல் முறையாக எந்த ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்?
2000
- பட்டியலினத்தவர் சமுதாயத்திலிருந்து முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியானவர் யார்?
கே.ஜி பாலகிருஷ்ணன்
- கே.ஜி பாலகிருஷ்ணன் எந்த ஆண்டு பட்டியலினத்தைச் சார்ந்த முதல் தலைமை நீதிபதியாக உயர்ந்தார்?
2007
- தற்போதுள்ள அரசமைப்பின் கீழ் இந்திய உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது?
ஜனவரி 28 1950
- இந்திய உச்ச நீதிமன்றம் தொடக்கத்தில் எங்கு செயல்பட்டது?
நாடாளுமன்றத்தின் இளவரசர்கள் மாடம்
- எந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தற்போது உள்ள நீதிமன்ற வளாகத்துக்கு மாற்றப்பட்டது?
1958
- இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?
நீதிபதி ஹரிலால் ஜே கனியா
- உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர்கள் யார் ?
நீதிபதி சையத் பாசல் அலி ,பதஞ்சலி சாஸ்திரி, நீதிபதி மெஹர்சந்த் மஹாஜன், நீதிபதி பிஜன் குமார், நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் ஆகியோர்
- மாநிலங்களின் தலைமை நீதித்துறை நிர்வாக அமைப்பு எது?
உயர் நீதிமன்றங்கள்
- இந்திய அரசமைப்பு படி ஒவ்வொரு மாநிலமும் எத்தனை உயர்நீதிமன்றத்தை பெற்றிருக்க வேண்டும்?
ஒரு உயர் நீதிமன்றம்
- ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் எது மட்டுமே தனக்கான உயர்நீதிமன்றத்தினை கொண்டுள்ளது?
டெல்லி
- உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார் ?
குடியரசுத் தலைவர்
- உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை யாருடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்?
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- மாநிலத்தின் ஆளுநர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எத்தனை வயது வரை பதவியில் இருப்பர்?
62 வயது
- உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு ஒருவர் என்ன தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்?
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 10 ஆண்டுகள் நீதித் துறையில் பணிபுரிந்து இருக்க வேண்டும் அல்லது பத்தாண்டுகள் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும்
- நீதிப் பேராணைகள் எத்தனை வகைப்படும்?
5
- உரிமைகள் மீறப்பட்ட நபர்களுக்கு விரைந்து நீதி வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் பார்வையில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டும் என்ன அதிகாரங்களை கொண்டிருக்கின்றன?
நீதிப் பேராணைகள் இடைக்கால உத்தரவு வழங்கும் அதிகாரங்கள்
- ஐந்து வகையான நீதிப் பேராணைகள் என்னென்ன ?
ஆட்கொணர்வு நீதிப் பேராணை ,நெறியுறுத்தும் நீதிப் பேராணை ,தடை நீதிப்பேராணை, தகுதி முறை வினவும் நீதிப்பேராணை, விளக்கம் கோரும் ஆணை
- ஒரு நபரை உயிருடன் கொண்டு வந்து நிறுத்தும் படி கூறும் நீதிப்பேராணை எது?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- எந்த நீதிப்பேராணை ஒவ்வொரு தனிநபரின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கிறது ?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- ஒரு நபர் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு வழக்கிற்கு பொருந்தக்கூடியது எந்த நீதிப்பேராணை?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை
- சட்டப்படி இயங்கும் படியும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் இடப்படும் ஆணை எது?
நெறியுறுத்தும் நீதிப் பேராணை
- பொதுமக்கள் நலன் காக்கும் கடமையை செய்ய மறுக்கும் அதிகாரிகள்,அலுவலர்கள், அரசு என நீதிமன்றம் அமைப்புகளுக்கு எதிராக கூட ஆணையிட கூடிய நீதிப்பேராணை எது?
நெறியுறுத்தும் நீதிப் பேராணை
- எந்த நீதிப்பேராணையானது உயர்மட்ட நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயங்கள் தங்களின் அதிகார வரம்பை மீறி நடப்பதை தடுக்கும் விதமாக வழங்கப்படுகிறது?
தடை நீதிப்பேராணை
- எந்தத் நீதிப்பேராணை நீதித்துறை சார்ந்த அமைப்புகள் அல்லது பகுதி அளவு மட்டுமே நீதித்துறை அமைப்புகளுக்கு எதிராக மட்டுமே வழங்கப்படும் தடை ஆணைகள் ஆகும்?
தடை நீதிப் பேராணை
- எந்த நீதிப்பேராணை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அல்லது பணி சான்றிதழ் ஆணை அடிப்படையில் என வினா எழுப்புவதை குறிப்பிடுகிறது?
தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
- ஒரு நபர் ஒரு அரசு அலுவலக பதவியில் எந்த தகுதியின் அடிப்படையில் அமர்ந்திருக்கிறார் என வினா எழுப்பும்படியான விவகாரத்தில் வழங்கப்படும் நீதிப்பேராணை எது?
தகுதி முறை வினவும் நீதிப்பேராணை
- ஒரு பொது அலுவலில் சட்டப்பூர்வ நிலையை ஒருவர் எதனடிப்படையில் அல்லது எந்த அதிகார அமைப்பின் அடிப்படையில் அதில் அமர்த்தப்பட்டார் என கேள்வி கேட்பது எந்த நீதிப்பேராணை ?
விளக்கம் கோரும் ஆணை
- நீதிப் பேராணைகளோடு உயர் நீதிமன்றமானது எந்த சட்ட உறுப்பின் கீழ் பொதுமக்கள் நலன் கருதி வழிகாட்டுதல்கள், உத்தரவு பிறப்பிக்கும்?
சட்ட உறுப்பு 266
- தனி நபர்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள எந்த அதிகாரம் மிகவும் முக்கியமானது?
நீதிமன்ற சீராய்வு அதிகாரம்
- நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் அரசமைப்பிற்கு அரணாக இருக்குமானால் அச்சட்டம் செல்லாது என்று நீக்கப்படும் இந்த அதிகாரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நீதித்துறை சீராய்வு
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியில்லை என்று நம்புகிறது?
உறுப்பு 13 (2)
- எந்த ஆண்டுக்குப் பின்னர் அரசமைப்பின் 9-வது பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள சட்டங்கள் தொடர்பாக மறு சீராய்வு கோர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது?
24.04.1973
- பொதுமக்கள் நலன் கருதி எந்த ஒரு தனிநபரும் நீதிமன்றத்தை நாடி மனு அளிக்க முடியும் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொதுநலன் மனு
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் கீழ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரமுடியும்?
உறுப்பு 32
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் கீழ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரமுடியும்?
உறுப்பு 226
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் கீழ் நடுவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரமுடியும்?
உறுப்பு 133
- யாருக்கு எதிராக பொதுநல வழக்கு பதிவு செய்ய முடியாது?
தனி நபருக்கு எதிராக
- யார் தொடுத்த பொதுநல வழக்கானது மருத்துவ தொழிலில் உள்ள ஒவ்வொரு நபரும் காயமடைந்த எந்த ஒரு குடிமகனுக்கும் வழக்கமான நடைமுறைகள் காரணங்காட்டி காத்திருக்க வைக்காமல் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது?
பரமானந் கட்டாரா
- மாறிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் நீதித்துறை மேற்கொள்ளும் வீரியமிக்க செயல்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீதித்துறை செயல்பாட்டு முறை
- நீதித்துறை செயல்பாட்டு முறை(judical activism) என்ற சொல்லினை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார் ?
அமெரிக்காவின் ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்
- அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் அல்லாமல் தனிநபர் அல்லது அரசியல் சக்திகளுக்கு சாதகமாக மேற்கொள்ளப்படும் நீதிமன்ற உத்தரவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது எது?
நீதித்துறை செயல்பாட்டு முறை
- இந்திய அரசமைப்பு எந்த ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது?
1950
- இந்திய அரசமைப்பின் நாடாளுமன்ற மக்களாட்சியும் தனித்துவ நீதித்துறையும் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
இங்கிலாந்து
- அடிப்படை உரிமைகள் ,முன்வரைவு ,கூட்டமைவு கூட்டாட்சி எந்த அரசமைப்பில் இருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா
- மாநில கொள்கைகள் நேரடி கட்டுப்பாடுகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது ?
அயர்லாந்து
- எந்த நாட்டில் உயர் நிலை நீதியமைப்பு உயர்நீதிமன்றம் என்றே அழைக்கப்படுகிறது. அங்கு மாநில தலைமை நீதிமன்றங்களே உச்சநீதிமன்றம் என்று அழைக்கப்படுகிறது ?
ஆஸ்திரேலியா
- நாட்டிற்காக சட்டமன்றங்களில் இயற்றப்படும் விதிகள் யாவும் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
சட்டங்கள்
- இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி என்ற ஆங்கிலக் கருத்தை அறிமுகப்படுத்தியது எது?
காலனி ஆட்சி
- சட்டத்தின் ஆட்சியில் எத்தனை முதன்மையான சிறப்புகள் உள்ளன ?
மூன்று : சட்டத்தின் முன் அனைவரும் சமம் ,சட்டத்திற்குமேல் யாருமில்லை ,சட்டம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது
- நிர்வாக செயல்முறைகளை ஆளுகை செய்வதற்கான சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிர்வாக சட்டம்
- நிர்வாக சட்டங்கள் என்பவை நிர்வாகத்துடன் தொடர்புடையவை என விளக்கம் அளித்தவர் யார்?
ஐவர் ஜென்னிங்ஸ்
- எந்த ஆண்டு இந்தியாவில் முதல் சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது?
1834
- இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் எந்த ஆண்டு இந்திய தண்டனை சட்டம் தயாரிக்கப்பட்டது?
1860
- இந்திய தண்டனை சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வந்தது ?
தொடக்ககால பிரிட்டிஷ் இந்திய ஆட்சியில் 1862
- ஒரு குழு செயல்பாட்டில் கலந்து கொண்ட ஒரு நபர் ஆற்றிய பங்களிப்பு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அக்குழுவினர் மேற்கொண்ட செயல்களின் போது நோக்கிற்கும் முழுமையான பொறுப்பானவராகவே கருதப்படுவார்” என இந்திய தண்டனை குறியீட்டின்கீழ் எந்தப் பிரிவு குறிப்பிடுகிறது?
பிரிவு 34
- எந்த சட்டபிபிரிவின்கீழ் விரோதமாகக்கூடிய ஒரு குழுவைச் சேர்ந்த நபர்கள் அனைவரும் அந்த சட்ட விரோத குழுச் செயலின் உள்நோக்கம் அல்லது சட்டவிரோத கூடுதலில் ஏற்படக்கூடிய கெடு விளைவு அடிப்படையில் தண்டனைக்குரியவர்கள் எனக் கூறுகிறது?
சட்டப்பிரிவு 149
- தகவல் தொழில்நுட்ப குற்றவியல் சட்டத்தை இயற்ற இந்திய அரசு எந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்தது?
2000
- தகவல் தொழில்நுட்ப குற்றங்களுக்கான சட்டக் குழு தனது அறிக்கையை எந்த ஆண்டு சமர்ப்பித்தது?
2003
12TH POLITY STUDY NOTES | இந்திய நீதித்துறை | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services