TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஒரு அரசமைப்பின் மிக முக்கிய செயல்பாடு என்பது எது?
அந்த அரசின் குடிமக்கள் அனைவருக்குள்ளும் அதிகபட்சமான ஒருங்கிணைப்பை அனுமதிக்கக் கூடிய அடிப்படை விதிகளை வழங்குவது
- அரசு அமைக்கப்பட்டு அது ஆட்சி செய்வதற்கான தேவையான விதிகளைக் கொண்ட அமைப்பிற்கு பெயரென்ன ?
அரசமைப்பு
- இந்திய அரசமைப்பின் எத்தனையாவது பாகம் இந்திய சமூகத்தில் பரவலாக நிலவும் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சட்டங்களை அரசு உருவாக்கும் வகையில் விதிகளை கொண்டுள்ளது ?
நான்காவது பாகம்
- மதச்சார்பின்மை கோட்பாட்டினை பின்பற்றாத அரசு எவ்வாறு அழைக்கப்படும்?
மதச்சார்பு அரசு
- ஓர் அரசமைப்பு எவ்வாறு நடைமுறைக்கு வந்தது அது யார் உருவாக்கியது அதன் அதிகார அமைப்புகள் என்ன என்பன போன்ற தகவல்கள் என்ன பெயரால் குறிக்கப்படுகிறது?
அரசமைப்பு உருவாக்கம்
- இந்திய அரசமைப்பின் 42 ஆவது திருத்தச் சட்டம் அரசமைப்பின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள “இறையாண்மை கொண்ட குடியரசு” என்பதை என்னவாக விரிவுபடுத்தியது ?
இறையாண்மை, சமதர்ம, மதச் சார்பற்ற ,மக்களாட்சிக் குடியரசு
- எத்தனையாவது இந்திய அரசமைப்பின் சட்டத்திருத்தம் “நாட்டின் ஒற்றுமை” என்ற சொற்றொடரை “நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு” என்று விரிவுபடுத்தியது?
42-வது சட்டத்திருத்தம்
- எப்போது 42-வது சட்டத்திருத்தம் & யாரால் கொண்டுவரப்பட்டது?
1976 இந்திரா காந்தி
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது கூடியது?
9 டிசம்பர் 1946
- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மீதமுள்ள இந்தியாவுக்கான அரசமைப்பு நிர்ணய சபை எப்போது மீண்டும் கூடியது?
14 ஆகஸ்ட் 1947
- அன்றைய மாகாணங்கள் சுதேச அரசுகளில் இருந்த அதன் மக்கள் தொகைக்கு ஏற்றபடி என்ன விகிதத்தில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன?
10 லட்சத்துக்கு ஒருவர்
- மாகாணங்களில் இருந்தும் சுதேச அரசுகளிடமிருந்தும் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ?
292 மாகாண உறுப்பினர்கள் 93 சுதேச அரசு உறுப்பினர்கள்
- அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் எப்போது கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்?
26.11.1949
- அரசியல் நிர்ணய சபையின் எத்தனை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர்?
284
- அரசமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் எப்போது எங்கு கூடியது ?
11:00 மணி,டிசம்பர் 9 1946, புதுடில்லி, அரசமைப்பு அரங்கில்
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடரின் கூட்டப் பொருள் என்ன?
தற்காலிக தலைவரை தேர்வு செய்வதாகும்
- டாக்டர் சச்சிதானந்த சின்காவை தற்காலிக தலைவராக பதவி ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டவர் யார் ?
ஜேபி கிருபாளினி
- அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் இறுதி நிகழ்வான அரசமைப்புக்கு ஒப்புதல் தருவதற்காக அரசியல் நிர்ணய சபை கூடியது
24 01 1950
- 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி 1950 வரை அரசமைப்பு நிர்ணய சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு எத்தனை தொகுதிகளைக் கொண்டது?
12 தொகுதிகள்
- கூட்டாட்சி விதிகள், ஆளுநர் பதவி,நீதித்துறை, பொதுத்தேர்வு ஆணையங்கள், நெருக்கடி கால விதிகள் , நிர்வாக விவரங்கள் ஆகியன எதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன?
இந்திய அரசாங்க சட்டம் 1935
- நாடாளுமன்ற அரசு,ஒற்றைக் குடியுரிமை, சட்டத்தின் ஆட்சி ,நாடாளுமன்ற செயல்முறைகள், இடைக்காலத் தடையாணைகள் ஆகியன எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
பிரிட்டன்
- அடிப்படை உரிமைகள் ,நீதி சீராய்வு, குடியரசுத் தலைவர் மீதான பதவி நீக்கத் தீர்மானம், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் துணைத் தலைவர் போன்றோரை பதவி நீக்கம் செய்யும் முறை ஆகியவை எங்கிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டன?
அயர்லாந்து
- ஒரு வலுவான மத்திய அரசுடன் கூடிய கூட்டாட்சி, மத்திய அரசிடம் இதர அதிகாரங்கள் ,பொதுப்பட்டியல், மத்திய அரசால் மாநில ஆளுநர் நியமனம் , உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை அதிகார வரம்பு முதலியன எங்கிருந்து பெறப்பட்டது?
கனடா
- வணிகம், வர்த்தக சுதந்திரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் முதலியவை எங்கிருந்து பெறப்பட்டது?
ஆஸ்திரேலியா
- நெருக்கடிநிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் பறிப்பு இது எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டது?
ஜெர்மனி வெய்மர் அரசமைப்பு
- அடிப்படை கடமைகள் முகப்புரையில் (சமூக ,பொருளாதார ,அரசியல் ) நீதியின் மாண்புகள் அடிப்படை கடமைகள் முதலியன எங்கிருந்து பெறப்பட்டது ?
சோவியத் யூனியன்
- குடியரசு ,முகப்புரையில் சுதந்திரம், சமத்துவம் ,சகோதரத்துவம் முதலியன எங்கிருந்து பெறப்பட்டது?
பிரான்ஸ்
- அரசமைப்புத் திருத்தச் சட்டம் செயல் முறை, மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு முதலியன எங்கிருந்து பெறப்பட்டன?
தென் ஆப்பிரிக்கா
- உலகின் நீளமான எழுதப்பட்ட அரசமைப்பு எது?
இந்திய அரசமைப்பு
- இந்திய அரசமைப்பில் சமதர்மம் என்ற சொல் எத்தனையாவது சட்ட திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது?
42-வது சட்டத்திருத்தம்
- அமைச்சரவை குழு செயல்பாடுகளை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துவதற்கு என்ன பெயர் ?
நாடாளுமன்ற ஆட்சி முறை
- இந்திய அரசமைப்பின் எத்தனையாவது சட்டத்திருத்தம் 6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக இணைத்தது?
82வது திருத்தம்
- 82வது சட்டத்திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
2002[school book- 82..correct- 86th]
- சிறார் இலவச கட்டாய கல்வி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2009
- எத்தனையாவது திருத்தத்தின் வாயிலாக அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளன?
42வது திருத்தம்
- ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்கு என்ன பெயர்?
குடியுரிமை
- ஒரு நபர் எத்தனை மாதங்கள் அரசு பணியில் இருந்தால் அந்த நபர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்?
12 மாதங்கள்
- எந்த ஆண்டு சொத்து உரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு உறுப்பு 300 (அ) சட்ட உரிமையாக சேர்க்கப்பட்டது?
1978
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தை நாடும் உரிமையை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது?
உறுப்பு 32
- “பாரம்பரிய வழக்கமான முறைப்படி கிராம தலைவர்கள் உறுப்பினர்கள் ஆகியோரை கொண்டு கிராமங்கள் தமக்குத் தாமே ஆட்சி செய்து கொள்ளவேண்டும்” என கூறியவர் யார்?
மகாத்மா காந்தி
- “கிராமம் என்பது வகுப்புவாதம் சாதியமைப்பு போன்ற கொடுமையான எதார்த்தத்தை கொண்டுள்ளன இதனால் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும்” என கூறியவர் யார்?
அம்பேத்கர்
- “இந்தியாவில் வாழும் கடைக்கோடி ஏழைக் கூட இது தனது நாடு என்று உணரும் நிலையை உருவாக்கி அதில் அவரது குரல் வலுவாக உயரும் வகையில் வலிமையான இந்தியாவை உருவாக்க நான் பாடுபடுவேன்” என கூறியவர் யார் ?
மகாத்மா காந்தி
- “மக்களிடம் எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இது மக்களுக்கு சிறந்த பயனளிக்கும் “எனக் பஞ்சாயத்ராஜ் பற்றி கூறியவர் யார்?
காந்தி
- “கிராம சுயராஜ்ஜியம் என்று எனது கருத்து அருகாமையில் வாழ்வோரின் முக்கிய விருப்பங்களுக்கான சுதந்திரம் , மற்றும் இதர சார்பு தேவைப்படுவதால் சார்புத் தன்மையும் கொண்ட முழுமையான குடியரசு கொண்டதாகும்” என கூறியவர் யார் ?
மகாத்மா காந்தி
- “கிராமங்கள் என்பது அறியாமை மற்றும் வகுப்பு வாதத்தின் இருப்பிடம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை” என கூறியவர்?
அம்பேத்கர்
- எந்த அரசியலமைப்பு உறுப்பு கிராம பஞ்சாயத்து அமைப்புகள் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறது?
உறுப்பு 40
- எந்த உறுப்பின் படி இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரும் ஈரவைகளும் கொண்டது ஆகும் எனக் கூறுகிறது?
உறுப்பு 79
- மாநிலங்களவை எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது ?
250
- மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்?
12 உறுப்பினர்கள்
- மாநிலங்களவைக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளின் சட்டமன்றங்கள் மூலம் எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் ?
238
- மக்களவை மொத்தம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட தாகும் ?
545
- குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர்களாக கருதப்படுபவர்கள் யார்?
நாடாளுமன்றத்தின் ஈரவை உறுப்பினர்கள் மற்றும் மாநில /ஒன்றிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதி சட்ட மன்றங்களின் உறுப்பினர்கள்
- மாநிலங்களவை உறுப்பினர்களின் காலம் எவ்வளவு?
ஆறு ஆண்டுகள்
- மாநிலங்களவை மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கிறது?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
- மாநிலங்களவை மேலவை என்று எந்த ஆண்டு முதல் அழைக்கப்படுகிறது?
23 ஆகஸ்ட் 1954
- மாநிலங்கள் குழு எந்த அரசாங்க சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது ?
இந்திய அரசாங்க சட்டம் 1919
- மாநிலங்களவை தலைவராகத் செயல்படுபவர் யார் ?
குடியரசுத் துணைத் தலைவர்
- மாநிலங்களவையின் முதல் கூட்டம் எப்போது தொடங்கியது ?
1952 மே 13
- எந்த அசமைப்பு உறுப்பு ஒன்றிய அரசின் அலுவல்மொழி 1963 க்குப்பின் இந்தி மொழியாகவே இருக்க வேண்டும் எனக் கூறுகிறது?
உறுப்பு 343
- “ஒரு பன்மைத்துவ சமுதாயத்தில் ஒரு கூட்டு அரசமைப்பில் ஒற்றை பொதுமொழி கோரி வாதிடுவது அநீதியை உருவாக்கும். சமுதாயத்தின் ஒரு பிரிவினர் இடையே அறியாமையை உருவாக்கும் என்றே நினைக்கிறேன்” என கூறியவர் யார்?
அண்ணா
- “இந்தியா பல்வேறு மொழி குடும்பங்களை கொண்டுள்ளது எனவே இந்தியா ஒரு துணைக் கண்டம் என்று அழைப்பதே சரியாகும்” எனக் கூறியவர் யார் ?
அறிஞர் அண்ணா
- மாநிலங்களவை ஆண்டுக்கு எத்தனை கூட்டத்தொடரை கூட்டுகிறது?
மூன்று
- நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் என அழைக்கப்படுவது?
முதல் கூட்டத்தொடர்
- முதல் கூட்டத்தொடர் எந்த மாதங்களில் நடைபெறும்
பிப்ரவரி முதல் மே மாதம் வரை
- மழைக்கால கூட்டத்தொடர் எந்த மாதங்களில் நடைபெறும்?
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை
- குளிர்கால கூட்டத்தொடர் எந்த மாதம் நடைபெறும்?
நவம்பர் முதல் டிசம்பர் இறுதி வரை
- எப்போது முதல் தமிழ்நாட்டில் நீதிமன்ற மொழியாக தமிழ் பயன்படுத்தப்படுகிறது?
ஆகஸ்ட் 1 2014
- முதல் மதராஸ் மாகாண சட்டமன்றத்தில் காலம் என்ன?
1952-1957
- யாருடைய ஆட்சியின் போது நிலமற்ற விவசாய தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டம் கொண்டுவரப்பட்டது?
ராஜாஜி
- “இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் எனக் கூறும் இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு எது ?
உறுப்பு 1(1)
- சென்னை மாகாணத் தலைவர் ராஜாஜி தனது முதல் நிதிநிலை அறிக்கை எப்போது மதராஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்?
1937
- யாருடைய ஆட்சியில் வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான கர்ணம் பதவிக்கு முடிவு கட்டப்பட்டது?
எம்,ஜி,ஆர்
- எந்த ஆண்டு மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது?
1992 நவம்பர்
- தமிழ்நாடு மாநில சட்டமன்றம் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டது ?
234
- தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை பொதுத் தொகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
189 உறுப்பினர்கள்
- தமிழ்நாட்டில் எத்தனை தனித் தொகுதியில் இருந்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
45
- தமிழக சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தொடர் எப்போது தொடங்கியது
03.05.1952
- தமிழக சட்டமன்றத்தில் எந்த உறுப்பின் கீழ் ஆங்கிலோ இந்தியப் பிரதிநிதி ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் ?
உறுப்பு 333
- எந்த அவையின் உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பொதுக்கணக்கு குழு தலைவராக மக்களவை தலைவரால் நியமிக்கப்படுகிறார் ?
மக்களவை
- எந்த உறுப்பின் கீழ் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புக்கு அதிகாரங்களை பயன்படுத்தி அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள எந்த ஒரு சட்டத்தையும் சேர்த்தல் நீக்கம் மாறுதல் கொண்டுவர அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது?
இந்திய அரசமைப்பு சட்ட உறுப்பு 368
- அரசமைப்பில் உள்ள ஒரு விதியில் திருத்தம் கோரும் சட்ட முன்வரைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
அரசமைப்புத் திருத்தச் சட்ட முன்வரைவு
- அரசியலமைப்பின் திருத்த சட்ட முன்வரைவை சட்டமன்றத்தின் எந்த அவைகளில் கொண்டு வரலாம்?
இரு அவைகளிலும்
- அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் உறுப்பினராக இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் முன்மொழியப்படும் திருத்தத்திற்கு என்ன பெயர்?
தனிநபர் சட்ட முன்வரைவு
- தனிநபர் சட்ட முன்வரைவு மீதான விவாதம் எப்போது நடைபெறும்?
வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
- தனிநபர் சட்ட முன்வரைவு கொண்டுவர எத்தனை நாட்களுக்கு முன்பாக முன்னறிவிப்பு தரவேண்டும்?
ஒரு மாதம்
- இதுவரை நாடாளுமன்றத்தில் எத்தனை தனிநபர் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளன?
14
- இறுதியாக தனிநபர் சட்ட முன் வரைவு நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
1970
- 45 ஆண்டுகளுக்குப்பின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு என்ன?
மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு
- மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு யாரால் கொண்டுவரப்பட்டது?
திருச்சி சிவா
- ஜம்மு காஷ்மீர் பகுதிக்கு எந்த அரசமைப்பு சட்ட உறுப்பு சிறப்புத் தகுதி வழங்கியிருந்தது?
370
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என தனிக்கொடி அமைத்துக்கொள்ளவும் இரண்டு கொடிகளுக்கும் சம தகுதி வழங்கவும் எந்த ஆண்டு டெல்லி உடன்படிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது?
1952
- எந்த அரசமைப்பு பகுதியின் கீழ் தற்காலிக மற்றும் இடை மாற்றம் வழங்குதல் என்னும் தலைப்பின்கீழ் அரசமைப்பு திருத்தப்பட்டு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் பொறுப்பு சேர்க்கப்பட்டது?
பகுதி XXI
- இந்திய அரசமைப்பின் முதன்மை வரைவாளர் யார் உறுப்பு 370 இன் வரவை எழுத மறுத்தார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
- உறுப்பு 370ன் வரவை எழுதியவர் யார்?
கோபால சுவாமி
- சங்கரலிங்கனார் எங்கு, எப்போது பிறந்தார்?
1895, விருதுநகர் மாவட்டம் மண்மலை மேடு
- சங்கரலிங்கனாரின் பெற்றோர் யார்?
கருப்பசாமி வள்ளியம்மாள்
- சங்கரலிங்கனார் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்?
1917
- தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் யார்?
ஸ்ரீராமுலு
- எந்த ஆண்டு மதராஸ் மாநிலத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் தொடங்கினார்?
1956, ஜுலை 27
12TH POLITY STUDY NOTES | இந்திய அரசமைப்பு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services