12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் நிர்வாக அமைப்பு | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. ஊழல் மற்றும் முறைகேடுகள் காலனி ஆட்சியில் நடைபெற்ற பிரச்சினையை ஆங்கில நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவர் யார் ?

 

எட்மண்ட் பர்க்

  1. எந்த சட்டத்தின் மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய நிர்வாகம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது?

 1773, ஒழுங்குமுறை சட்டம்

  1. இந்தியாவிற்கான ஆங்கில அதிகாரிகளுக்கு எந்த கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது?

 ஹெய்லிபிரி கல்லூரி

  1. எந்த ஆண்டு வரை பாரசீக மொழியை அலுவல் மொழியாக இருந்தது?

 1840

  1. எந்த சட்டத்தின் மூலம் இந்தியர்கள் உயர்ந்த ஆட்சித்துறை பதவியை அடைய வழிவகுத்தது ?

 இந்திய அரசாங்க சட்டம் 1919

  1. இந்திய குடிமைப் பணிக்கு பதிலாக என்ன பணி கொண்டு வரப்பட்டது ?

இந்திய ஆட்சிப் பணி

  1. அரசு வகைமைகளில் பணியாளர் எத்தனை உயர்நிலை நிர்வாகங்களுக்கு கட்டுப்பட்டவர்கள்?

இரண்டு: மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம்

  1. தனியார் துறை மீது அரசு கட்டுப்பாடுகளை குறைப்பது எவ்வாறு அழைக்கப்பட்டது?

 தாராளமயமாக்கல்

  1. இந்தியாவிற்கான கொள்கைகளை உருவாக்கும் முக்கிய அமைப்பு எது?

ஒன்றிய தலைமை செயலகம்

  1. மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் எத்தனை அடுக்குகளை கொண்டது?

 3: அரசியல் தலைமை, செயலகம், நிர்வாக அமைப்பு

  1. அமைச்சகத்தின் அரசியல் தலைமை என அழைக்கப்படுபவர் யாராக இருக்கலாம் ?

கேபினட் அமைச்சர் ,துணை அமைச்சர் அல்லது சில நேரங்களில் தனிப் பொறுப்பு கொண்ட துணை அமைச்சர்

  • செயலகத்தின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

செயலாளர்

  1. நிர்வாக அமைப்பின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

 இயக்குனர் ,தலைமை இயக்குனர் ,தலைமை ஆய்வாளர் ஆணையர் மற்றும் தலைமை கட்டுப்பாட்டாளர்

  1. ஒவ்வொரு அமைச்சகமும் எவ்வாறு பிரிக்கப்படுகிறது ?

துறைகள்

  1. ஒவ்வொரு துறையும் என்னவாக பிரிக்கப்படும்?

தொகுதிகள்

  1. ஒவ்வொரு தொகுதியும் என்னவாக பிரிக்கப்படும் ?

பகுதிகள்

  1. ஒவ்வொரு பகுதியும் என்னவாக பிரிக்கப்படும் ?

 கிளைகள்

  1. ஒவ்வொரு கிளையும் என்னவாக பிரிக்கப்படும் ?

 பிரிவுகள்

  1. எந்த விதிகளின் படி அமைச்சகமும் துறைகளும் பிரிக்கப்பட்டுள்ளது?

இந்திய அரசு அலுவல் விதிகள் 1961

  1. மத்திய ஆட்சியின் அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகளில் ஒட்டு மொத்த தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மத்திய தலைமை செயலகம்

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின்படி குடியரசுத் தலைவர் பல்வேறு அமைச்சகத்திற்கு பணியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளார் ?

உறுப்பு 77

  1. மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகள் என்னென்ன?

1.விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் 2.ஆயுஷ் அமைச்சகம் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் 3.உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் ,நிலக்கரி அமைச்சகம், வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் 4.தொடர்பு அமைச்சகம் 5. நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 6.பொது நிறுவன விவகார அமைச்சகம் கலாச்சார அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகம் 7.வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் புவியியல் அமைச்சகம் 8.உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 9. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ,சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ,வெளிவிவகார அமைச்சகம் ,நிதி அமைச்சகம் 10.கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை அமைச்சகம் 11.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம், சுரங்கங்கள் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் 12.பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ,மின்வலு அமைச்சகம், ரயில்வே அமைச்சகம்,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ,கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் 13. அணுசக்தித் துறை விண்வெளித்துறை 14.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் 15. உள்நாட்டு விவகார அமைச்சகம் நிறுவன கட்டமைப்பு 16.தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் 17.நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 18.கப்பல் அமைச்சகம் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முயற்சி அமைச்சகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 19. புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம், இரும்பு அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ,சுற்றுலா அமைச்சகம் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், நீர்வள ஆதார, நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்வு அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 20.வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

  1. அமைச்சரவை செயலகம் யாருடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது?

 பிரதமர்

  1. அமைச்சரவை செயலகத்தின் நிர்வாக தலைவர் யார்?

அமைச்சரவை செயலாளர்

  1. இந்திய குடிமைப் பணி அலுவலர்களின் தலைவராகக் கருதப்படுபவர் யார்?

அமைச்சரவை செயலாளர்

  1. எந்த சட்டத்தின்படி அமைச்சரவை செயலகத்தின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன?

இந்திய அரசாங்க சட்டம் ,1961

  1. இந்திய அரசாங்கச் சட்டம் 1961 விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்புடையது எது?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES | திட்டமிடலும் வளர்ச்சி அரசியலும் | TNPSC GROUP EXAMS

 தலைமைச் செயலகம்

  1. இந்தியாவில் அமைச்சரவை செயலாளர் அலுவலகம் பதவியானது எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

 1950

  1. இந்தியாவின் முதல் அமைச்சரவை செயலாளர் யார் ?

என் ஆர் பிள்ளை

  1. அமைச்சரவை செயலகத்தின் தலைவர் யார் ?

அமைச்சரவை செயலர்

  1. இந்திய குடிமைப் பணிகளில் எந்த பதவி மிக உயரியது ?

அமைச்சரவை செயலர்

  1. குடிமைப் பணி அலுவலர்கள் மத்தியில் யார் முதன்மையானவர்?

அமைச்சரவை செயலர்

  1. எந்த ஆண்டு வரை பிரதமர் அலுவலகம் பிரதமரின் செயலகம் என்று அழைக்கப்பட்டது?

 1977 வரை

  1. யாருடைய ஆட்சிக்காலத்தில் பிரதமர் அலுவலகம் என பின்னர் பெயர் மாற்றப்பட்டது ?

 மொரார்ஜி தேசாய்

  1. தலைமை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது ?

 நவம்பர் 1999

  1. பிரதமர் அலுவலகம் எந்த பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது?

ஊழல் எதிர்ப்பு பிரிவு மற்றும் பொதுமக்கள் குறை கேட்டல் பிரிவு ஆகியவை

  1. பணியாளர் நிர்வாகத்தின் முக்கிய பணிகள் என்னென்ன ?

மனிதவளத்தை திட்டமிடுதல் ,பணியமர்த்தல் ,பயிற்சி அளித்தல் ,பதவி உயர்வு ,ஊதிய கட்டமைப்பு ,பணியாளர் நலம்

  1. மக்களாட்சியின் அடிப்படை யார்?

குடிமக்கள்

  1. எந்த சட்டத்தின் மூலம் அனைத்து இந்திய பணிகளுக்கான நியமன விதிமுறைகள் மற்றும் பணி நிலைமை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கலாம்?

அனைத்து இந்திய பணிகள் சட்டம் 1951

  1. தற்போது இந்தியாவில் எத்தனை அனைத்திந்திய பணிகள் உள்ளன?

மூன்று: இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி &இந்திய வனப்பணி

  1. எத்தனை வழிமுறைகளில் அகில இந்திய பணிக்கு பணி அமர்த்தப்படுகின்றனர்?

 2 :நேரடி நியமனம் அல்லது பணி உயர்வு

  1. அனைத்திந்திய பணிக்கு நேரடி நியமனம் எதன் மூலம் நடைபெறுகிறது?

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணிகள் தேர்வுகள் மூலம்

  1. இந்திய ஆட்சிப் பணியில் ஊதியம் ஓய்வூதியம் யாரால் வழங்கப்படுகிறது?

மாநில அரசு

  1. இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் ,அபராதம் விதிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ?

 மத்திய அரசு

  1. மூத்த அதிகாரிகளை செயலகத்துக்கு உள்ளும் வெளியிலும் மாற்றம் நடைமுறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அதிகாரப்பூர்வ நிறுத்தம்

  1. இந்திய ஆட்சிப் பணி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பொதுமைபட்ட பணி

  1. இந்திய காவல் பணி அதிகாரிகள் எங்கு சிறப்பு பயிற்சி பெறுகின்றனர் ?

சர்தார் பட்டேல் தேசிய காவல் பயிற்சி நிலையம் ஹைதராபாத்

  1. விடுதலைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட ஒரே அனைத்திந்திய பணி எது?

 இந்திய வனப் பணி

  1. எந்த சட்டத்தின் மூலம் இந்திய வனப் பணி நடைமுறைக்கு வந்தது?

 நாடாளுமன்ற சட்டம் 1961

  1. மத்திய குடிமைப்பணிகளிலேயே மிக உயர்ந்த கௌரவமும் தகுதி நிலையும் ஊதியமும் ஆதாயமும் கொண்டது எது?

 இந்திய வெளியுறவு பணிகள்

  1. இந்தியாவில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாவதற்கான வித்து எப்போது நடப்பட்டது?

 மார்ச்  5, 1915

  1. அரசுப்பணியாளர் தேர்வாணையம் அமைக்க இந்திய அரசாங்க சட்டம் 1919ல் எந்த உறுப்பு வழிவகுத்தது?

உறுப்பு 96 (சி)

  1. தேர்வாணையம் அமைப்பு செயல்பாடுகள் குறித்து தீர்வுகாண என்ன ஆணையம் அமைக்கப்பட்டது?

 ராயல் ஆணையம்

  1. ராயல் ஆணையம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

லீ ஆணையம்

  1. லீஆணையம் தனது அறிக்கையை எப்போது வழங்கியது ?

 1924

  1. இந்தியாவில் முதல்முறையாக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் எப்போது அமைக்கப்பட்டது?

1.10.1926

  1. அரசு பணியாளர் தேர்வாணையம் எத்தனை உறுப்பினர்களை கொண்டு இருந்தது?

 ஒரு தலைவர் நான்கு உறுப்பினர்கள்

  1. இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

 ஐக்கிய ராஜ்யத்தின் உள்துறை குடிமைப்பணிகள் உறுப்பினர் சர்ராஸ் பார்க்கர்

  1. இந்திய அரசாங்க சட்டம் 1919 உறுப்பு 96 ( சி) துணைப்பிரிவு (2) கீழ் வழங்கப்பட்டுள்ள விதிகளின்படி எது உருவாக்கப்பட்டது?

அரசு பணியாளர் தேர்வாணையம் விதிகள் 1926

  1. எந்த சட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு கூட்டாட்சி(மத்திய) மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்கள் உருவாக வழிவகுத்தது?

இந்திய அரசாங்க சட்டம் 1935

  1. அரசு பணியாளர் தேர்வாணையம் கூட்டாட்சி (மத்திய) பணியாளர் தேர்வாணையமாக எப்போது மாறியது?

 1.4.1937

  1. எப்போது கூட்டாட்சி பணியாளர் தேர்வாணையம் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் என பெயர் மாற்றப்பட்டது?

ஜனவரி 26 1950 (இந்திய அரசமைப்பு செயல்முறைக்கு வந்த நாளன்று)

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் கீழ் கூட்டாட்சி பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் உறுப்பினர்கள் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் உறுப்பினர்களாக ஆனார்கள்?

 378(1)

  1. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் எந்த இந்திய அரசமைப்பின் உறுப்பின் படி உருவாக்கப்பட்ட அரசமைப்பு நிறுவனமாகும் ?

உறுப்பு 315

  1. தேர்வாணையம் எத்தனை உறுப்பினர்களை கொண்ட அமைப்பு?

ஒரு தலைவர் மற்றும் 10 உறுப்பினர்கள்

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்புகளின்படி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சட்டப்பூர்வ கடமைகள் வழங்கப்பட்டுள்ளன ?

 320, 321

  1. ஒன்றிய மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 315

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் உறுப்பினர் நியமனம் பதவி கால வரம்பு பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES | சுற்றுச்சூழல் அக்கறைகளும் உலகமயமாதலும் | TNPSC GROUP EXAMS

 உறுப்பு 316

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் உறுப்பினர் நீக்கம் மற்றும் விட நீக்கம்  பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 317

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் உறுப்பினர்கள் ஊழியர்களுக்கான ஒழுங்கு முறைகளை உருவாக்குதல் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 318

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் நடவடிக்கைக்கு உள்ளாகும் உறுப்பினர்கள் பணியில் தொடர்வதை தடுத்தல் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

 உறுப்பு 319

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் பணிகள் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

 உறுப்பு 320

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் பணிகளை விரிவாக்கம் செய்யும் அதிகாரம்  பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 321

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் செலவினங்கள் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

 உறுப்பு 322

  1. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் அறிக்கையில் பற்றி குறிப்பிடும் அரசமைப்பின் உறுப்பு எது?

உறுப்பு 323

  1. மாநில பணியாளர் தேர்வாணையம் அமைய வழி வகுக்கும் அரசமைப்பு உறுப்புகள் என்னென்ன?

உறுப்பு 315 முதல் 323 வரை (ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அமைய வழி வகுத்து அரசமைப்பு உறுப்புகளே இதற்கும் வழிவகுக்கிறது)

  1. ஒரு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் யாரால் நியமிக்கப்பட்ட தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்?

ஆளுநர்

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை யார் நிர்ணயம் செய்து கொள்ள அரசமைப்பு அனுமதிக்கிறது?

அந்தந்த மாநில அரசுகள்

  1. ஆணைய உறுப்பினர்களில் பாதிப்பேர் மத்திய மாநில அரசுகளின் நிர்வாகத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உறுப்பினர்களுக்கு உண்டு?

 பத்து ஆண்டுகள்

  1. மாநில தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணி நிலைகள் குறித்து வரையறையை செய்துகொள்ள யாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது?

 ஆளுநர்

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?

6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை எது முந்தியதோ அது

  1. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளின் வயதுவரம்பு என்ன?

 65 வயது

  1. மாநில அரசின் தேர்வாணைய உறுப்பினர்கள் யாருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலம் பதவி விலகலாம் ?

ஆளுநர்

  1. எந்த சூழ்நிலைகளில் தேர்வாணைய உறுப்பினர்களில் ஒருவரை தற்காலிக உறுப்பினராக ஆளுநர் நியமனம் செய்கிறார் ?

 தலைவர் பதவி காலியாக இருக்கும் பொழுது அல்லது ஏற்கனவே தலைவர் பதவியில் இருப்பவர்கள் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அலுவல்களை நிறைவு செய்ய இயலாத சூழ்நிலை உருவாகும் போது

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் யாரால் பதவி நீக்கம் செய்ய முடியும் ?

குடியரசுத் தலைவர்

  1. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம் சலுகைகள் ஓய்வூதியம் என அனைத்தும் எந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும்?

அரசின் தொகுப்பு நிதி

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாணையத்தில் ஒரு முறை பதவி வகித்த பின்னர் மீண்டும் எத்தனை முறை மறு நியமனம் செய்யப்படலாம்?

மறு நியமனம் செய்யப்பட முடியாது

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் தனது செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை ஆண்டுதோறும் யாரிடம் சமர்ப்பிக்கிறது?

மாநில ஆளுநர்

  1. எந்த விவகாரங்களில் மாநில அரசு தத்தமது தேர்வாணையத்தின் ஆலோசனைகளை பெற வேண்டியதில்லை?

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவிகள் நியமனங்கள் இட ஒதுக்கீடு செய்யப்படும் போது மற்றும் பதவிகள் நியமனங்கள் ஒதுக்கீட்டில் பட்டியலினத்தவர் பழங்குடியினர் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணைய வரம்புக்குள் வராத பதவிகள் பணியிடங்கள் இதர விவகாரங்களை நீக்குபவர் யார்?

ஆளுநர்

  1. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கலந்தாலோசிக்க தேவையில்லை என கருதும் அரசு பணியிடங்கள் பதவிகள் தொடர்பாக ஒழுங்குமுறைகளை உருவாக்கிக்கொள்ள யாருக்கு அரசமைப்பு அனுமதிக்கிறது ?

ஆளுநர்

  1. ஆளுநர் ஒழுங்குமுறைகளை உருவாக்க எத்தனை நாட்களுக்கு முன் மாநில சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்?

14 நாட்கள் முன்பு

  1. எந்த ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பங்களிப்பு பாதிப்புக்குள்ளானது ?

மாநில கண்காணிப்பு ஆணையம்

  1. மாநில கண்காணிப்பு ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

1964

  1. நியாயமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த அரசமைப்பில் நேரடியாக உருவாக்கப்பட்ட அமைப்பு எது?

 தேர்தல் ஆணையம்

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் படி நாடாளுமன்ற இரு அவைகளும் மாநில சட்ட மன்றங்கள் ,குடியரசுத் தலைவர் ,துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலை கண்காணித்தல் ,வழிகாட்டுதல் கட்டுப்படுத்துதல் ஆகிய அதிகாரங்களில் தேர்தல் ஆணையத்துக்கு முழுமையாக வழங்குகிறது?

அரசமைப்பின் உறுப்பு 324

  1. மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்துகள் நகராட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது எது?

மாநில தேர்தல் ஆணையம்

  1. இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு ஒரு சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் அமைக்க வழிவகை வழங்கியுள்ளது?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES | ஆட்சித் துறை | TNPSC GROUP EXAMS

 உறுப்பு 148

  1. இந்திய கணக்கு மற்றும் தணிக்கை துறையின் தலைவர் யார்?

தலைமை கணக்கு தணிக்கையாளர்

  1. அரசு கருவூலத்தின் பாதுகாவலர் என அழைக்கப்படுபவர் யார்?

 தலைமை கணக்கு தணிக்கையாளர்

  1. நிதி நிர்வாகம் தொடர்பில் இந்திய அரசமைப்பு அளித்துள்ள விதிகள் இதனை மேலாதிக்கம் செய்யும் நாடாளுமன்றம் இயற்றியுள்ள சட்டங்கள் ஆகியவற்றை கண்காணிப்பது யாருடைய கடமை?

தலைமை கணக்கு தணிக்கையாளர்

  1. “அரசமைப்புபடி மிக முக்கியத்துவம் கொண்ட அலுவலர் தலைமை கணக்கு தணிக்கையாளர்” என கூறியவர் யார்?

 டாக்டர் பி ஆர் அம்பேத்கார்

  1. இந்திய அரசின் மக்களாட்சி அமைப்பின் அரண்கள் என்னென்ன ?

உச்சநீதிமன்றம் ,தேர்தல் ஆணையம் ,ஒன்றிய அரசுப்பணியாளர் ,தேர்வாணையம் தலைமை கணக்கு தணிக்கையாளர்

  1. இந்திய நிதி நிர்வாக வரலாற்றின் 4 முக்கிய காலகட்டங்கள் என்னென்ன?

கால கட்டம் 1( 1765- 1858 ) அமைப்பு உருவாக்கம் மற்றும் சுத்தப்படுத்துதல்

காலகட்டம் 2( 1860 -1919) முறைமைகள் செயல்பாடுகள் மேம்பாடு காலகட்டம் 3 (1919-1947) மக்களாட்சிப்படுத்துதல் அதிகாரப் பரவலாக்கல்

காலகட்டம் 4 (1950 முதல் இன்று வரை) மக்கள்மயப்படுத்தல்

  1. நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் செயல்முறைகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் காலத்திலிருந்து எத்தனை காலத்திற்கு முன்பாக தொடங்குகிறது?

 6 மாதங்கள்

  1. 1860 இல் முதல் நவீன நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது நிதியாண்டு என்பது என்னவாக இருந்தது?

 மே 1 முதல் ஏப்ரல் 30 வரை

  1. நிதிஆண்டு இங்கிலாந்து அரசின் நடைமுறையை ஒட்டி ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை என எப்போது மாற்றிக் கொள்ளப்பட்டது ?

 1866

  1. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் எந்த பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் தத்துவத்துறைப் பேராசிரியராக உள்ளவர் ?

ஹார்வர்டு பல்கலைக்கழகம்

  1. ஜெகதீஷ் பகவதி எந்த பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர்?

 கொலம்பியா பல்கலைக்கழகம்

  1. இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக கருதப்படுபவர்கள் யார்?

 அமர்த்தியாசென் ,ஜகதீஷ் பகவதி, அவினேஷ் தீட்சித்

  1. “பொருளாதார வளர்ச்சி அதிகரித்தால் மட்டுமே போதும் அதன் மூலம் சமூக திட்டங்கள் தொடங்க தேவையான மூலதனம் கிடைத்துவிடும்” என கூறியவர் யார்?

பகவதி

  1. ” மக்களின் உற்பத்தித் திறனும் வளர்ச்சியும் அதிகரிக்க வேண்டுமானால் இந்தியா தனது சமூக கட்டமைப்பில் அதிக முதலீடு செய்யவேண்டும்” என கூறியவர் யார் ?

அமர்த்தியாசென்

  1. “வளர்ச்சியால் தொடக்கத்தில் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கலாம் ஆனால் தொடர் வளர்ச்சியின் மூலம் அரசுக்கு தேவையான வளங்கள் பெருகும் மறு பகிர்வு மூலம் தொடக்க ஏற்றத்தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும்” என கூறியவர் யார்?

பகவதி

  1. ஜிஎஸ்டி க்குள் வராத பொருட்கள் என்னென்ன ?

 சமையல் எரிவாயு ,பெட்ரோல் ,டீசல்,வான் எரிபொருள் ,இயற்கை எரிவாயு ,மது


12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் நிர்வாக அமைப்பு | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: