TNPSC TAMIL&GK ONELINERS (33,000+) PDF MATERIALS : [WD_Button id=9633]
TNPSC PREVIOUS YEAR QUESTIONS BANK [22,000+ MCQ] : [WD_Button id=9638]
- இங்கிலாந்து பிரதமர் கிளமெண்ட் அட்லி எப்போது வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஜூன் 30 1948 க்குள் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட்டு வெளியேறும் என தெரிவித்தார்?
பிப்ரவரி 20,1947
- மவுண்ட்பேட்டன் பிரபு எப்போது வேவல் பிரபுவிற்க்கு பதிலாக அரச பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்?
மார்ச் 22,1947
- மவுண்ட்பேட்டன் எப்போது அட்லி அறிவித்ததற்கு முன்னதாகவே ஆகஸ்ட் 15 1947 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார் ?
ஜூன் 3 1947
- இந்தியா பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பது யாருடைய திட்டம் ?
மவுண்ட்பேட்டன் திட்டம்
- எங்கு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்திய பிரிவினைகளுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
ஜூன் 14 ,1947 மீரட்
- மகாத்மா காந்தி எப்போது படுகொலை செய்யப்பட்டார் ?
ஜனவரி 30, 1948
- முஸ்லிம் லீக், ஹிந்து முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவை பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை எப்போது முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ?
மார்ச் 1940 லாகூர் மாநாடு
- மவுண்ட்பேட்டன் திட்ட வெளியீடு இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி எத்தனை நாட்கள் மட்டுமே இருந்தது?
72 நாட்கள்
- இந்தியாவை பிரிவினைக்கு ஏற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞர் யார் ?
சர் சிரில் ராட்கிளிஃப்
- எப்போது சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியாவிற்கு வந்தடைந்தார்?
ஜூலை 8,1947
- சர் சிரில் ராட்கிளிஃப் எந்த 2 எல்லை ஆணையங்களுக்கு தலைமை பொறுப்பு வகித்தார் ?
பஞ்சாப்- வங்காளம்
- இந்து மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களில் எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய முன்மொழியப்பட்டது?
1941
- மேற்கு பஞ்சாபில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின் மக்கள் தொகையை பொருட்படுத்தாமல் சீக்கிய குருத்வாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கையின் மூலம் எப்போது வெளியிட்டனர்?
ஆகஸ்ட் 9,1947
- எப்போது சர் சிரில் ராட்கிளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரை பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62 ஆயிரம் சதுர மைல்கள் கொண்ட நிலம் பாக்கிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது?
ஆகஸ்ட் 9 ,1947
- கிழக்கு பாகிஸ்தான் எப்போது பங்களாதேஷ் என சுதந்திரம் பெற்றது?
டிசம்பர் 1971
- ஆகஸ்ட் 15 1947 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு எதிராக தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புதுடில்லிக்கு தொலைவில் உண்ணாவிரதம் இருந்தவர் யார் ?
மகாத்மா காந்தியடிகள்
- ஆகஸ்ட் 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் எவ்வளவு மக்கள் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர்?
4.5 மில்லியன் மக்கள்
- எல்லையை கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை எவ்வாறு அழைக்கப்பட்டது?
கஃபிலா (Kafila)
- எப்போது நேரு மற்றும் லியாகத் அலிகான் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் இருதரப்பிலும் உள்ள சிறுபான்மையினர் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது ?
ஏப்ரல் 8,1950
- இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக எப்போது அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது?
1934
- இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்று அடிப்படைக் கருத்து 1922 லேயே யாரால் முன்வைக்கப்பட்டது?
காந்தியடிகள்
- “தன்னாட்சி என்பது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியர்களுக்கு வழங்கப்படும் கொடையாக இல்லாமல் இந்தியர்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்தியர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் பிரதிநிதிகளிடம் இருந்து உருவாக வேண்டும்” என தெரிவித்தவர் யார்?
காந்தியடிகள்
- இந்திய அரசாங்க சட்டம் 1935 அடிப்படையில் எப்போது மாகாண சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது?
ஆகஸ்ட் 1946
- எப்போது நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது?
1946
- எந்த காங்கிரஸ் கூட்டத்தில் அடிப்படை உரிமைகள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ?
கராச்சி கூட்டம் மார்ச் 1931
- எப்போது ஜவஹர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்?
டிசம்பர் 13 ,1946
- அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?
டிசம்பர் 9 1946
- அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ராஜேந்திர பிரசாத்
- எது இந்திய அரசமைப்பின் உணர்வு மற்றும் உள்ளடக்கத்திற்கு மிக சுருக்கமான அறிமுகமாக அமைந்தது ?
நேருவின் குறிக்கோள் தீர்மானம்
- இந்திய அரசமைப்பு சபை எப்போது குறிக்கோள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது ?
நவம்பர் 26,1949
- ஐக்கிய நாடுகள் சபை எப்போது அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கை வெளியிட்டது?
டிசம்பர் 10 1948
- சுதேச அரசுகள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி எதற்குள் விரைவாக முடிக்கப்பட்டது?
ஆகஸ்ட் 15, 1947
- எந்த சுதேச அரசுகள் தவிர மற்ற அனைத்து அரசுகளும் இணைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு ,வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர் ?
ஹைதராபாத், காஷ்மீர்,ஜூனாகத்
- புன்னப்புரா- வயலார் ஆயுதப்போராட்டம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?
திருவாங்கூர் மாநிலத்தின் பொறுப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவானாகிய சிபி ராமசாமியை எதிர்த்து
- இணைப்புறுதி ஆவணம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது ?
இந்திய அரசாங்க சட்டம், 1935
- எந்த அரசர் மக்கள் விருப்பத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் சேர விரும்பினார்?
ஜுனாகத் அனரசர்
- காஷ்மீரின் இந்து அரசரான யார் காஷ்மீர் சுதந்திர அரசாக இருக்கும் என்று அறிவித்தார் ?
மகாராஜா ஹரிசிங்
- ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு தனி அந்தஸ்து வழங்கியது?
370
- மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கையின் மூலம் ஆந்திர பிரதேசம் எப்போது உருவானது?
1956
- “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களைப் மொழிவாரியாக மறுசீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என்பது யாருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது ?
நேரு அறிக்கை
- நேரு அறிக்கை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
1928
- ஆகஸ்ட் 31,1946 இல் யார் ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன்வைத்தார்?
பட்டாபி சீதாராமையா
- “ஆந்திர மாநிலத்திற்கான கோரிக்கையின் போது இந்த முழு பிரச்சனையை முதல் பிரச்சினையாகவும் முக்கிய பிரச்சினையாகும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை அதற்கு தீர்வு காண வேண்டும் “எனக் கூறியவர் யார் ?
பட்டாபி சீதாராமையா
- எப்போது ராஜேந்திர பிரசாத் மூவர் ஆணையத்தை (மொழிவாரி மாகாணங்கள் ஆணையம்) அமைத்தார்?
1948 ,ஜூலை 17
- மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது?
டிசம்பர் 10,1948
- மொழிவாரி மாகாணம் கோரிக்கையை ஆராய யாரை உள்ளடக்கிய ஜேவிபி குழு அமைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு ,வல்லபாய் பட்டேல், பட்டாபி சீதாராமையா
- ஜேவிபி குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?
ஏப்ரல் 1, 1949
- “மொழியானது பிணைக்கும் ஆற்றலை கொண்டிருப்பதோடு , பிரிக்கும் ஆற்றல் உடையது” என கூறிய குழு எது?
ஜே.வி.பி குழு
- ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்படும் வேண்டும் என வலியுறுத்தி 1952 அக்டோபர் 19 சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் யார்?
பொட்டி ஸ்ரீராமுலு
- பொட்டி ஸ்ரீராமுலு எப்போது காலமானார் ?
டிசம்பர் 15,1952
- யாரை தலைவராகக் கொண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது?
பசல் அலி
- மாநில மறுசீரமைப்பு ஆணையம் எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது?
அக்டோபர் 1955
- மாநில மறுசீரமைப்பு சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1956
- குஜராத் மொழி பேசும் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எப்போது மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது?
மே 1960
- எப்போது பஞ்சாப் மாகாணம் பஞ்சாப் ஹரியானா இமாச்சல் பிரதேசம் என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது?
1966
- சீன மக்கள் குடியரசை ஜனவரி 1 1950 இல் முதன்முதலாக அங்கீகரித்த நாடு எது?
இந்தியா
- 1949 இல் சீனா யாரிடமிருந்து விடுதலை பெற்றது?
ஜப்பானிய காலனி ஆதிக்கம்
- எப்போது சீனா திபெத்தை ஆக்கிரமித்தது?
1950
- எப்போது கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீது இருந்த உரிமை அங்கீகரித்தது?
1954
- இந்திய சீன உறவுக்கான கோட்பாடுகளாக என்ன கொள்கை வகுக்கப்பட்டுள்ளது?
பஞ்சசீலக் கொள்கை
- இந்திய சீனப் போர் எப்போது ஏற்பட்டது?
1962
- எப்போது சீனப் படைகள் தக்கல் பகுதியில் தாக்குதல் நடத்தின?
செப்டம்பர் 8, 1962
- நேரு டெல்லியில் எப்போது ஆசிய உறவுக்கான மாநாட்டை ஏற்பாடு செய்தார்?
மார்ச் 1947
- எப்போது கொழும்புவில் ஆசிய தலைவர்கள் மாநாடு நடைபெற்றது?
1954
- சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் சிற்பி என அழைக்கப்படுபவர் யார்?
ஜவஹர்லால் நேரு
- ஜவஹர்லால் நேரு யாருடன் இணைந்து அனுசக்தி ஆயுதக் குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார் ?
எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ
- எந்த ஆண்டு அனுசக்தி ஆயுத குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது ?
1961
12TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services