TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- வேதங்களின் அடிப்படையில் எந்த காலகட்டத்தில் ஆரியர்களால் வேதபண்பாடு பரவியது?
கி.மு. (பொ.ஆ.மு.) – 1500
- இந்தியாவின் வடமேற்குப்பகுதியில் உள்ள கைபர், போலன் கணவாய்கள் வழியாக ஆரியர்கள் முதன்முதலில் குடியேறிய பகுதி எது?
சப்தசிந்து.
- சப்தசிந்து என்ற சொல்லிற்கு என்ன பொருள்?
‘ஏழு நதிகள் பாயும் பகுதி‘
- எந்த ஏழு நதிகள் பாயும் பகுதியேசப்தசிந்து என்று அழைக்கப்படுகின்றது?
சிந்து, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி.
- ‘வித்‘ என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து எந்த சொல் தோன்றியது?’வேதம்’ 6)வேதம் என்பதன் பொருள் என்ன?
‘அறிவுக்களஞ்சியம்’
- வேதங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் ?அவை யாவை?
நான்கு வகைப்படும். அவை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகும்.
- வேதங்களின் இரு பிரிவுகள் யாவை?
முற்கால வேதம் (ரிக்), பிற்கால வேதங்கள் (யஜுர், சாமம், அதர்வணம்)
- இந்தியாவின் பண்டையகால வரலாற்றை அறிய உதவும் முதன்மையான சான்று,எது?
‘ரிக்’ வேதம்
- ரிக் வேதம் எத்தனை மண்டலங்களையும் எத்தனை பாடல்களையும் கொண்டது.?
10 &1028
- ‘ரிக்’ என்ற சொல்லிற்குத் என்ன பொருள்?
துதித்தல் அல்லது வழிபடல்.
- அக்னி, பிரஜாபதி, ருத்ரன், வருணன், மித்ரன், இந்திரன்தெய்வங்களை முன்வேதகால மக்கள் வழிபட்டதாக எந்த வேதம் கூறுகிறது?
ரிக் வேதம்
- ‘காயத்திரி மந்திரம்‘ எந்த வேதத்தில் இடம்பெற்றுள்ளது?
ரிக் வேதம்.
- ரிக் வேதம் சுமார் கி.மு 1200 – ஆம் ஆண்டில் தோன்றியிருக்கலாம் என்று கூறியவர் யார் ?
மாக்ஸ்முல்லர் மற்றும் ஐரோப்பிய அறிஞர்கள்.
- எந்த சமஸ்கிருதச் சொல்லிருந்து யஜுர் என்ற சொல் தோன்றியது?
‘யாஜ்‘
- யாஜ் என்பதன் பொருள் என்ன?
யாகம்.
- சமஸ்கிருதத்தின் முதல் உரைநடை என்று எந்த வேதம்அழைக்கப்படுகிறது?
யாஜுர் வேதம்(பிணவேத காலம்)
- மிகச் சிறப்பு வாய்ந்த ‘ருத்ரம்’ (செய்யுள்) எதில்இடம் பெற்றுள்ளது?
யாஜுர் வேதம்
- யாஜுர் வேதம் எத்தனை பிரிவிகளை கொண்டுள்ளது?
2–சுக்லயஜுர்வேதம், கிருஷ்ண யஜுர்வேதம்
- யஜூர் வேதம் எத்தனை அத்தியாயங்களை கொண்டுள்ளது?
நாற்பது அத்தியாயங்கள்.
- சமாவேதம் ,எந்த இன்னிசை அடிப்படையில் பாடப்பெற்றதால் இவ்வேதம், சாமவேதம் என்றழைக்கப்படுகிறது?
சாமம்
- இசை வடிவிலான வேதமந்திரங்களைக் கூறுவது எது?
சாமவேதம்.
- ஆரியர்களின் இசையார்வத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, எந்த வேதம் திகழ்கிறது?
சாமவேதம்.
- சமவேதத்தில் எத்தனை பாடல்கள் இடம்பெற்றுள்ளன?
1549பாடல்கள்
- எந்த வேதத்தில் உச்சாடனம், மாந்திரீகம் போன்றவற்றால் தீய சக்திகளை வெல்லலாம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது?
அதர்வண வேதம்
- வேதகால மருத்துவமுறைகள் பற்றிய கருத்துகள் எந்த வேதத்தில் உள்ளன?
அதர்வண வேதம்
- அதர்வண வேதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘பிரம்மவேதம்‘
- அதர்வண வேதம் எத்தனை பகுதிகளையும் பாடல்களையும் கொண்டுள்ளது?
20 பகுதிகளும் 731 பாடல்களும்
- உபவேதங்கள் எத்தனை வகைப்படும்?
நான்கு ஆயுர்வேதம் – இது மருந்து,மூலிகைகளை ப் பற்றி
குறிப்பிடுகிறது.
தனுர்வேதம் – இது போர்க் கலையைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
காந்தர்வவேதம் – இசை, நடனம் ஆகிய நுண்கலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
சில்பவேதம் – இது கட்டடக் கலையைப் பற்றி விவரிக்கிறது.
- வேதங்களுக்கான விளக்க உரைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பிராமணங்கள்.
- ‘ஆரண்யம்’ என்ற சொல்லிற்குக் என்ன பொருள்?
‘காடு‘
- .காடுகளில் இறையருள் தேடித் தவம் செய்த முனிவர்களால் எழுதப்பட்ட இலக்கியங்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டன?
ஆரண்யகங்கள் .
- வேள்வியைவிட அமைதியான தியானமே, மிகவும் மேலானது என்று எவை வலியுறுத்துகின்றன?
ஆரண்யகங்கள்
- வேதங்களின் சாரம் என அழைக்கப்படுவது எது?
‘உபநிடதம்‘
- உபநிடதம் ( உபநிஷத்) என்ற சொல்லிற்குஎன்னபொருள்?
“அருகில் அமர்ந்து கேட்டல்”.
- முகலாய இளவரசர் தாராஷுகோ என்பவர் உபநிடதங்கள் சிலவற்றைப் எந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார்?
பாரசீகமொழி
- இந்தியப்பண்பாட்டு வளர்ச்சியின் உச்சமே உபநிடதங்கள் என்று கூறியவர் யார்?
அமுர்-டி-ரின் கோர்ட்
- ஆதிசங்கரர், இராமானுஜர் ஆகியோரின் தத்துவங்களை இன்றளவும் லட்சக்கணக்கான மக்கள் போற்றுவதற்கு அவை உபநிடதக் கருத்துகளைக் கொண்டிருப்பதே காரணம் என்று புகழ்ந்தவர் யார்?
வின்டர்நீட்ஸ்
- முன் வேத கால இனக்குழுக்களின் தலைவன் யார்?
அரசன்
- முன்வேத காலத்தில் கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டன?
குலங்கள்
- குலங்களின் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
குலா, குலாபதி .
- முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை,எதன் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன?
தொழிலின் அடிப்படையில்.
- முன் வேதகாலத்தில் சமூக நிலையைப் பொருத்தவரை,தொழில் அடிப்படையில் சமுதாய பிரிவுகள் இருந்தன எனரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்திலுள்ள எந்த பாடல் கூறுகிறது?
‘புருஷசூக்தம்’
- முன் வேதகாலத்தில் அரசனுக்கு, நிருவாகத்தில் உதவ, எந்தெந்த சபைகள் இருந்தன?
விதாதா, சபா, சமிதி
- முன் வேதகாலத்தில் எது சமூகத்தின் அடிப்படையாக இருந்தது?
குடும்பம்
- குடும்பத்தின் தலைவனான தந்தை எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?
கிருகபதி
- முன் வேத காலத்தில்கல்வி, கேள்விகளில் சிறப்பான நிலையில் இருந்த பெண்கள் யாவர்?
அபலா, கோசா, விஸ்வவாரா, லோபமுத்ரா
- முன்வேத காலத்தில் இசை கருவிகளாக நிகழ்ந்தவை யாவை?
முரசு, தாரை, மத்தளம், யாழ், புல்லாங்குழல் .
- முன் வேதகாலத்தில் ஆடைகளை எவ்ரெல்லாம் அழைத்தனர்?
வாசஸ், பரிதானா, வஸ்திரம் (மேலாடை ‘அதிவாசஸ்’ எனவும், கீழாடை ‘நிவி’ )
- முன் வேதகால மக்கள் அணிந்த காதணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கர்ணசோபனா.
- முன்வேத காலத்தில்எவற்றை வைத்து அவர்களின்பொருளாதார மதிப்பு நிருணயிக்கப்பட்டது?
கால்நடைகளின் எண்ணிக்கை.
- காவிஸ்தி என்ற சொல் எதனை குறிக்கிறது?
பசுக்களைத் தேடி அலைபவர்களை
- பசுக்களின் உரிமையாளர்எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?
கோமத்
- முன் வேதகாலத்தில் வேளாண்மை செய்யக்கூடிய நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஷேத்ரா
- க்ருஷி (Krishi)என்ற சொல் எதனை குறிக்கிறது?
உழவு.
- விவசாயி எவ்வாறு குறிப்பிடப்பட்டார்?
சார்கனி
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் அயஸ் என்ற சொல்,எது போன்ற உலோகங்களைக் குறிப்பிடுகிறது?
செம்பு
- எந்த சொல் உலோக வேலைப்பாட்டுத் தொழில்களைச் செய்வோரைக் குறிப்பிடுகிறது?
கர்மரா
- மாட்டுவண்டியில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று வாணிகம் செய்யும் வணிகர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?
பாணி
- எந்த இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் முன் வேத காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன?
குஜராத் அருகில் பகவான்புரா.
- முன் வேதகால மக்கள் எத்தனை வகைகளாக கடவுளை வகைப்படுத்தினர்?
மூன்று:விண்ணுலகத் தெய்வங்கள்,வாயுமண்டலத் தெய்வங்கள், மண்ணுலகத் தெய்வங்கள்
- முன்வேதகால மக்கள் யார்யாரை அண்டவெளிக் கடவுளராக வணங்கினர்?
இந்திரன், வாயு, மாருதி, பர்ஜனியன்.
- எந்தெந்த கடவுளை வாயுவெளிக் கடவுளராக வணங்கினர்?
வருணன், அஸ்வினி, சூரியன், சாவித்ரி, மித்ரன், பூஷன்
- எந்தெந்த கடவுளை மண்ணுலகக் கடவுளராக முன்வேதகால மக்கள்வழிபட்டனர்?
பிருத்வி, சோமன், அக்னி
- இந்திரனைப் பற்றி ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
250
- இந்திரனுக்கு அடுத்த நிலையில் முன்வேத கால மக்கள்யாரை வழிபட்டனர்?
அக்னி
- ரிக் வேதத்தில் அக்னி பற்றி எத்தனைபாடல்கள்உள்ளன?
200
- தேவர்களையும் மக்களையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக எந்த கடவுளை மக்கள் வழிபட்டனர்?
அக்னி
- இந்திரனுக்கும், அக்னிக்கும் அடுத்த நிலையில் முன் வேதகால மக்கள் எந்த கடவுளை வழிபட்டனர்?
வருணனை
- அதிதி, உஷஸ் (விடியலின் கடவுள்) போன்ற பெண் கடவுளர்களும் முன்வேதகால மக்கள் வழிபட்டனர் என்று எந்த வேதம் கூறுகிறது?
ரிக்வேதம்
- வலிமையின் கடவுளாக யாரை வழிபடப்பட்டனர்?
மாருதி.
- நம்பிக்கை மற்றும்கோபப்பண்பிற்கு முறையே யாரை வழிப்பட்டனர்?
சாரதா மற்றும் மன்யூ
- எவ்வாறான உருவகப்படுத்தும் வழிபாட்டு முறையும் முன்வேதகால மக்களால் பின்பற்றப்பட்டது?
இந்திரனைக் காளையாகவும், சூரியனைக் குதிரையாகவும் .
- ரிக்வேதத்தில் கூறப்பட்ட இரட்டையர் துதிப்பாடல்கள் எந்தெந்த கடவுளர்கள் பற்றிக் கூறுகின்றன?
தயா, பிருத்வி, வித்ரா, வருணன், அஸ்வினி, தேவதைகள்.
- வேத அங்கங்களான இலக்கியங்கள் எத்தனை?
சிட்சை – எனப்படும் ஒலியியல்
கல்பம்-எனப்படும் சடங்கியல், சமய ஒழுக்கம்
வியாகரண ம் -எனப்படும் இலக்கணம்
நிருக்தம்-எனப்படும் சொல்லாக்க விளக்கம்
ஜோதிடம்-எனப்படும் வானநூல்
சந்தம்-எனப்படும் சீர்
- பின்வேதகால ஆட்சிமுறை காலத்தில் இந்திய நிலப்பரப்பு,எத்தனை பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?
மூன்று:ஆரியவர்த்தம் (கங்கைச் சமவெளிப் பகுதி மற்றும் வட இந்தியா) மத்ய தேசம் (மத்திய இந்தியா) தட்சிணபதம் (தென்னிந்தியா)
- உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள்“ எவை?
ஸ்மிருதிகள்.
- பிரதேசத்தைக் குறிக்கும் ‘இராஷ்டிரம்’ என்ற பகுதியைப் பின் வேதகாலத்தில் மிகச் சிறந்த மன்னர்களான யார்யார் ஆட்சிசெய்தனர்?
பரிஷத், ஜனமேஜயன்
- பாஞ்சாலப் பகுதியை ஆட்சி செய்த யார்ப்பிபின் வேதகாலத்தின் தலைசிறந்த மன்னராகத் திகழ்ந்தார்?
பிரவாஹன ஜெய்வலி,
- ‘அசுவம்’ என்ற வடமொழிச் சொல் எதை குறிக்கும்?
குதிரை
- வாஜபேயம் என்பது, எதனை குறிக்கும்?
தேர்ப்பந்தயம்
- பின் வேதகாலச் சமூகம், எந்த முறைச் சமூகமாகக் காணப்பட்டது?
வர்ணாசிரம
- வர்ணாசிரம முறையின்படி மக்களிடையே பிரிந்திருந்த சமூக குழுக்கள் யாவை?
பிராமணர்,சத்திரர்,வைசியர் ,சூத்திரர் .
- மனிதனின் நிறை வாழ்வு என்பது எத்தனை ஆண்டுகளாகக் கருதப்பட்டது?
100
- பின் வேதகாலத்தில் முக்கியத் தொழிலாக இருந்தது எது?
வேளாண்மை
- பின்வேத காலத்தில் நெல் என்ன பெயரால் குறிக்கப்பட்டது?
விரிஹி
- பின்வேத காலத்தில் பார்லி என்ன பெயரால் குறிக்கப்பட்டது?
யவா .
- எது கர்பசா என்ற சொல்லால் அழைக்கப்பட்டது ?
பருத்தி
- ஆடைகளை நெய்யும் நெசவாளர்கள எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
வர்னா
- யானைகள், மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி எந்த வேதம்பகுறிப்பிடுகிறது?
அதர்வண வேதம்.
- எந்த இடத்திலிருந்த சுரங்கத்திலிருந்து பின் வேதகால மக்கள் தாமிரத்தைப்பெற்றனர்?
ராஜஸ்தானில் கேத்ரி .
- பின் வேதகாலத்தில் எந்த முறையிலான வாணிபம் நடைபெற்றது?
பண்டமாற்று முறை
- பண்டமாற்று முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
பிரபனா
- மக்களின் வரி மூலமே அரசு நடைபெற்றதாக எந்த வேதம் கூறுகிறது?
அதர்வணவேதம்
- பின் வேதகால மக்கள், எந்தெந்த கடவுளை வணங்கினர்?
“பிரம்மா“ “விஷ்ணு“ “சிவன்“.
- ‘ஆன்மாவின் முக்கியகுறிக்கோள்எது?
அழிவற்ற பரப்பிரம்மத்தைஅடைவது‘.
- ராமாயணமும் மகாபாரதமும் கி.மு.500 -க்கும் கி.மு.200-க்கும் இடையில்தோன்றியிருக்கக்கூடும் என எந்த அறிஞர் கூறுகிறார்?
மெக்டொனால்டு என்ற ஐரோப்பிய அறிஞர்
- எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் பணிவு கொள்ளுதல் அவசியம். அதுவே, மேன்மையைத் தரும் என்ற வாழ்வியல் பண்பாட்டு நெறியை எதுஉணர்த்துகிறது?
இராமாயணம்
- தந்தையின் வாக்கிற்கு ஒரு மகன் எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும்? எவ்வாறு மகன் தந்தைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றவாழ்வியல் பண்பாட்டு நெறியைப் எது போதிக்கிறது?
இராமாயணம்
- பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கௌரவர்கள் நூறு பேருக்குமிடையேயான போராட்டத்தை விளக்கும் நூல் எது?
மகாபாரதம்
- எந்த ஐவர் பஞ்ச பாண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்?
தருமன், வீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்
- 18 பருவங்கள் ஒரு லட்சம் செய்யுள்கள் கொண்ட மிகப்பெரிய நூல் எது?
மஹாபாரதம்.
- சமஸ்கிருதமொழியில் எழுதப்பட்ட மஹாபாரத நூலைத் தழுவி வில்லிப்புத்தூரார் என்ன பெயரில் தமிழில் எழுதினார்?
வில்லிபாரதம்.
- ‘பாஞ்சாலி சபதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
- மூதறிஞர் ராஜாஜி இந்தப் நூலை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதினார்?
‘வியாசர் விருந்து’
- வீரம், விவேகம், குரு பக்தி, இறை பக்தியுடையோருக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும் என்ற வாழ்வியல் நெறியை அர்ஜுனன் வாழ்க்கை மூலமாக எந்த நூல் உணர்த்துகிறது?
மகாபாரதம்
- புராணம் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?
சமஸ்கிருத
- புராணம் என்பதன் பொருள் என்ன ?
பழைமை .
- புராணக் காலம் கி.பி.300லிருந்து கி.பி.1000த்திற்கு உட்பட்டது என்று குறிப்பிடுபவர் யார்?
ஆர்.எஸ். சர்மா
- வாயு புராணம் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது?
கிபி நான்காம்.
- புராணங்கள் மொத்தம் எத்தனை?
பதினெட்டு
- சிவபெருமானின் பெருமைகளைக் கூறும் சிவ புராணங்கள் எத்தனை?
10
- பிரம்மாவின் பெருமையை கூறும் பிரம்ம புராணங்கள்எத்தனை?
இரண்டு புராணங்கள்
- அக்னியின் பெருமையைக் கூறும் ஆக்னேயம் எனப்படும் புராணம் எது?
அக்னி புராணம்
- சூரியனின் பெருமையைக் கூறும் பிரமை வர்த்தம் எனப்படும் புராணம் எது?
பிரமை வர்த்த புராணம்.
- பதினெண் புராணங்களை எவ்வாறு அழைப்பர்?
மகாபுராணங்கள்
- 1எந்த புராணத்தில் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவுமில்லை” என்ற உயரிய கருத்துகள் உள்ளது?
அநுபூதிநெறி விஷ்ணு புராணம்
- நாயன்மார்களுள் ஒருவரான திண்ணனார் எவ்வாறு அறியப்பட்டார்?
கண்ணானர்.
- ஆன்மிகத்தையும் மருத்துவத்தையும் இணைக்கிறது?
ஆயுர்வேத மருத்துவம்
12TH ETHICS STUDY NOTES | வேதகாலப் பண்பாடு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services