- நல்வழி அடைய இந்து சமயம் குறிப்பிடும் நெறிகள் யாவை?
1) பக்திநெறி 2) கருமநெறி
3) ஞானநெறி 4) யோக நெறி
- இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ‘ஆழ்ந்த அன்பே‘ எவ்வாறுகுறிப்பிடப்படுகிறது?
பக்தி
- பக்தி என்ற சொல் எந்த சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது?
‘பஜ்’
- பக்தி என்பதன் பொருள் என?
‘வழிபாடு‘
- உள்ளார்ந்த அன்போடு இறைவனை வழிபடுதல் என்ற பொருளைத்தரும்சொல் எது?
பக்தி
- பக்தியின் இருவகை யாவை?
- அபரபக்தி 2) பரபக்தி
- பக்தன் தெளிவில்லாமல் குறுகிய சிந்தனையுடன் குறிப்பிட்ட ஒரு கடவுளை மட்டுமே வழிபாடு செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அபரபக்தி
- எந்த நிலையில் பக்தன்அனைத்துத் தெய்வங்களையும் வழிபடுவதுடன் பக்தியின் உயர்ந்தநிலையில் செயல்படுகிறான்?
பரபக்தி
- உலகம் தழுவிய அன்பு நெறி எது?
பரபக்தி.
- பல்வேறு வடிவங்களில் கடவுளை வணங்கினாலும் அவை அனைத்தும் ‘கடவுள் ஒருவரே‘ என்று எந்த இயக்கம் வெளிக்காட்டியது?
பக்தி இயக்கம்
- 63 சிவனடியார்கள், எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
‘நாயன்மார்கள்‘
- எந்த நால்வர் சமயாச்சாரியார்கள்என்றும் சைவ சமயக் குரவர்கள் என்றும்அழைக்கப்பட்டனர்?
திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர். சுந்தரர், மாணிக்கவாசகர்
- 63 நாயன்மார்களின் வாழ்க்கைவரலாற்றைத் தொகுத்து அருளியவர் யார்?
சேக்கிழார்.
- சேக்கிழார் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர்புராணம் என்றழைக்கப்படுகிறது.
- பன்னிரு திருமுறையில்1, 2,3 திருமுறைகளை பாடியவர் யார்?
திருஞான சம்பந்தர்
- பன்னிரு திருமுறையில்4,5,6 திருமுறைகளை பாடியவர் யார்?
திருநாவுக்கரசர்
- பன்னிரு திருமுறையில் 7-ஆம் திருமுறையை பாடியவர் யார்?
சுந்தரர்
- பன்னிரு திருமுறையில் -8-திருமுறை திருவாசகத்தை இயற்றியவர் யார்?
மாணிக்கவாசகர்
- திருமாளிகைத்தேவர், சேந்தனார் மற்றும்அருளாளர்கள் பாடல்கள்எத்தனையாவது திருமுறையாகும்?
– 9-ஆம் திருமுறை – திருவிசைப்பா, திருப்பல்லாண்டு
- 10-ஆம் திருமுறை – (திருமந்திரம்)யை இயற்றியவர் யார்?
திருமூலர்.திருவாலவாயுடையார், பட்டினத்தடிகள்,காரைக்காலம்மையார், நம்பியாண்டார்
- நம்பிபாடல்கள் எத்தனையாவது திருமுறையாக உள்ளது?
11-ஆம் திருமுறை (தோத்திரப்பாடல்கள்)
- சேக்கிழாரின் பெரிய புராணம் எத்தனையாவது திருமுறை?
12-ஆம் திருமுறை
- சீர்காழியில் சிவபாத இருதயர் என்பாரின் மகனாகத் பிறந்தவர் யார்?
திருஞானசம்பந்தர்
- திருஞானசம்பந்தர் எத்தனையாவதுவயதில், இறைவி உமாதேவியாரால்ஞானப்பால் ஊட்டப்பெற்றார்?
மூன்றாவது
- சமணர்களை வென்று சைவசமயத்தை நிலைநாட்டியவர் யார்?
திருஞானசம்பந்தர்.
- மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் எலும்பை எடுத்து பெண்ணுருவாக்குதல்.-என்ற அற்புதத்தை நிகழ்த்தியவர் யார்?
திருஞானசம்பந்தர்
- மாறவர்மன் அரிகேசரியைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியதுடன் சமணர்களைஅனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றில் வெற்றி பெற செய்தவர் யார்?
திருஞானசம்பந்தர்
- திருஞான சம்பந்தர் ,தம் பக்திமார்க்கத்தைக் கையாண்ட நிகழ்வு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
‘ஞானமார்க்கம்‘
- திருநாவுக்கரசரின்இயற்பெயர் என்ன?
மருள்நீக்கியார்
- திருநாவுக்கரசர் சமண சமயத்தைத் தழுவிய பிறகு எவ்வாறு அழைக்கப்பட்டார்?
தருமசேனர்
- சம்பந்தரால் திருநாவுக்கரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அப்பர்
- திருத்தூங்கானை மாடத்தில் திருநாவுக்கரசர் தமதுதோளில் என்னென்ன முத்திரைகளைப் பொறித்தார்?
ரிஷப, சூல
- திருநாவுகரசரின் பக்தி நெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘தொண்டுநெறி‘
- “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற கருத்தைத் தெரிவித்ததன் மூலம் சைவ சமயத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர் யார்?
திருநாவுக்கரசர்.
- திருநாவுக்கரசர் எங்கு ஒரு சைவ மடத்தை நிறுவினார்?
திருப்பூந்துருத்தி
- வடம் என்ற சொல்லிற்குஎன்ன பொருள்?
ஆலமரத்தடி
- கோயிலின் ஆலமரத்தடியில் ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் நடைபெறும் பூசையே வடதளிபூசை என கூறியவர் யார்?
உ.வே. சாமிநாதர்.
- தாண்டகம் என்ற இலக்கிய வகையைக் கையாண்டதால் ‘தாண்டகவேந்தர்‘ என்றுஅழைக்கப்பட்டவர் யார்?
திருநாவுக்கரசர்.
- தம் பதிகங்களில், பத்து வகைப் பண்களைப் பயன்படுத்தியுள்ளாவர் யார்?
திருநாவுக்கரசர்
- யார் எழுதிய ‘நாமார்க்கும் குடியல்லோம்‘ என்று தொடங்கும் பாடல் பிற்காலத்தில் மகாகவி பாரதியார் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாடல்எழுதக் காரணமாக அமைந்தது?
திருநாவுக்கரசர்
- ஈசன் எந்தை இணையடி நீழலே-என்ற வரிகளை இயற்றியவர் யார்?
திருநாவுக்கரசர்
- பக்தி மார்க்கத்தில் ‘சகமார்க்கம்‘ என்ற நட்பு மார்க்கத்தைப்பின்பற்றியவர் யார்?
சுந்தரர்.
- இறைவனையே தம்தோழராகக் கருதியதால் ‘தம்பிரான் தோழர் என்றழைக்கப்பட்டவர் யார்?
சுந்தரர்.
- திருத்தொண்டத் தொகையை அருளியவர் யார்?
60 தனியடியார்களையும்,
- 9 தொகையடியார்களையும் பற்றிக் குறிப்பிடுவது எது?
திருத்தொண்ட தொகை.
- பித்தாபிறை சூடிபெருமானே அருளாளாஎத்தான்மற வாதேநினைக் கின்றேன்- என்ற வரிகளை இயற்றியவர் யார்?
சுந்தரர்.
- மாணிக்கவாசகர் எந்த ஊரில் பிறந்தார்?
திருவாதவூர்
- மாணிக்கவாசகர் எந்த பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்?
வரகுணப் பாண்டியன்
- திருபெருந்துறையில் குருவருள் பெற்ற மாணிக்கவாசகர் எந்தெந்த நூல்களை இயற்றியுள்ளார்?
திருவாசகம் , திருக்கோவையார்
- ‘வெல்லும மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்‘ என்று மெய்ப்பொருள் நாயனாரை கூறும் நூல் எது?
திருத்தொண்டத்தொகை .
- அதிபத்தர் என்ற சொல்லிற்குச்என்ன பொருள்?
சிறந்த பக்தர்
- கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் என்ன?
திண்ணன்
- காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் என்ன?
புனிதவதி
- தமிழுக்கு ‘அந்தாதி’ என்ற இலக்கியமுறையை அறிமுகம் செய்தவர் யார்?
காரைக்கால் அம்மையார்.
- காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்கள் யாவை?
அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை
- சந்தனாச்சாரியார்கள்என்றழைக்கப்படும் நால்வர் யார்யார்?
மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம்.
- ‘சந்தானம்’ என்றசொல்லிற்கு என்ன பொருள்?வம்சாவழி, பரம்பரை.
- சந்தானத்தின் இரு வகை எவை?
அகச்சந்தானம், புறச்சந்தானம்
- நாயன்மார்களின் சிவ வழிபாட்டைப் பின்பற்றி கர்நாடகாவில் எந்த சமயப் பிரிவைத் தோற்றுவிக்கப்பட்டது?
பசவர் லிங்காயத்
- இறைவனின் அருள் வெள்ளத்தில்ஆழ்ந்து கிடப்பவர்கள், இறைவனின் அன்பிலும் இன்பத்திலும் மூழ்கி இருப்பவர்கள் எவ்வாறு அறியப்பட்டனர்?
ஆழ்வார்கள்
- திருமாலின் புகழையும், தத்துவத்தையும் வாழ்வியலோடு பொருத்தி, நாடு முழுவதும் பரப்பியவர்கள்யாவர்?
ஆழ்வார்கள்
- திராவிட வேதமென போற்றப்பட்ட நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தை அருளியதால் ஆழ்வார்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
திராவிடாச்சாரியார்கள்
- ஆழ்வார்கள் மொத்தம் எத்தனைபேர்?
(12)பன்னிருவராவர்
- முற்கால ஆழ்வார்கள் யாவர்?
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
- இடைக்கால ஆழ்வார்கள் யாவர்?
நம்மாழ்வார்,மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார்,பெரியாழ்வார், ஆண்டாள்
- பிற்கால ஆழ்வார்கள் யாவர்?
தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார்
- காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்ற ஊரில்யதோத்தகாரி என்ற திருமால் கோயிலின்பொற்றாமரைக் குளத்தில் தோன்றியவர் யார்?
பொய்கையாழ்வார்
- பொற்றாமரை குளத்தில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
பொய்கையார்
- திருமாலின் கையிலுள்ள பஞ்சசன்யம் என்ற திருச்சங்கின் அவதாரமாக அவதரித்தவர் யார்?
பொய்கையாழ்வார்
- பொய்கையாழ்வார், திருமாலின் எத்தனை அவதாரங்களைப் பற்றியபாசுரங்களை இயற்றினார்?
10
- பொய்கையாழ்வாரின் பாசுரங்கள் எத்தனையாவது திருவந்தாதி?
முதல் திருவந்தாதி
- மாமல்லபுரத்தில் குருக்கத்தி மலரில் தோன்றியவர் யார்? பூதத்தாழ்வார்
- தமிழை ஞானத்தமிழ் என்று புகழ்ந்து பாடியவர் யார்?
பூதத்தாழ்வார்.
- பூதத்தாழ்வார் ,பாடிய நூறு பாசுரங்கள் நாலாயிரதிவ்யப்பிரபந்தத்தில்எத்தனையாவது திருவந்தாதியாக உள்ளது?
இரண்டாவது திருவந்தாதி.
- திருமாலின் கையிலுள்ள கௌமோதகி என்ற கதையின்(ஆயுதம்) அம்சமாகக் கருதப்படுகிறவர் யார்?
பூதத்தாழ்வார்.
- “அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக-என்று திருமாலை பாடியவர் யார்?
பூதத்தாழ்வார்.
- தொண்டை நாட்டில் திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர் யார்?
திருமழிசையாழ்வார்
- திருமாலின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறவர் யார்?
திருமழிசையாழ்வார்
- திருமிசையாழ்வாரின் வேறு பெயர் என்ன ?
பக்திசாரர், திருமழிசைபிரான், குடமுக்கிற்புலவர்
- திருமிசையாழ்வார் அருளிய நூல்கள்
1) நான்முகன் திருவந்தாதி 2) திருச்சந்த விருத்தம் .
- பாண்டிய நாட்டிலுள்ள ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் பிறந்தவர் யார்?
நம்மாழ்வார்
- நம்மாழ்வார் நான்கு வேதங்களைத் தமிழில் பாடியதால் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
தமிழ் செய்த மாறன்.
- நம்மாழ்வார் இயற்றிய நூல்கள் யாவை??
திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
- நம்மாழ்வாரின் இயற்பெயர் என்ன?
சடகோபன், குடிபெயர்மாறன்
- நம்மாழ்வார்ரின் சிறப்புப்பெயர்கள் என்ன?
குருகூர்நம்பி, வகுளாபரணன், பராங்குசன், காரிமாறன், வழுதிவளநாடன்.
- பாண்டிய நாட்டின் திருக்கோளூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?
மதுரகவியாழ்வார்
- இளம் வயதிலேயே கவிதைபாடும் திறமை பெற்றவராதலால் மதுரகவி எனப் புகழப் பெற்றவர் யார்?
மதுரகவியாழ்வார்
- யோக நிலையில் இருந்த நம்மாழ்வாரைக் கண்ட மதுரகவி “இவர் எல்லாமறிந்த ஞானி” என்பதை உணர்ந்தவர் யார்?
மதுரகவியாழ்வார்
- இறைவனைப் பாடாமல் தம் குருவாகிய நம்மாழ்வாரையே இறைவனாகக் கொண்டு மதுரகவியாழ்வார் எந்த பாசுரத்தைப் பாடியுள்ளார்?
‘கண்ணிநுண் சிறுதாம்பு’
- சேரநாட்டில் ‘திருவஞ்சைக்களம்’ என்னும் இடத்தில் அரச குலத்தில் பிறந்தவர் யார்?
குலசேகர ஆழ்வார்
- இறைத்தொண்டுமே சிறந்தன என்னும் நோக்கில் வைணவ அடியார் ஆனவர் யார்?
குலசேகர ஆழ்வார்
- குலசேகர ஆழ்வார் இயற்றிய பாசுரங்கள்எது?
பெருமாள் திருமொழி .
- திருவில்லிபுத்தூரில் பிறந்தவர் யார்?
பெரியாழ்வார்
- பெரியாழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? விஷ்ணுசித்தன்,பட்டர்பிரான்
- பெரியாழ்வார் இயற்றிய பாசுரங்கள் யாவை?
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி.
- சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனன்அழைக்கப்பட்டவர் யார்?
ஆண்டாள்.
- ஆண்டாள் இயற்றிய பாசுரங்கள் யாவை?
திருப்பாவை, நாச்சியார் திருமொழி
- கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில் பிறந்தவர் யார்?
தொண்டரடிப் பொடியாழ்வார்
- ‘விப்ரநாராயணர்’ என்பதுஇவருடைய இயற்பெயர் கொண்டவர் யார்?
தொண்டரடிப் பொடியாழ்வார்
- தொண்டரடிப் பொடியாழ்வார் இயற்றிய பாசுரங்கள் யாவை?
திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
- ‘திருச்சியை அடுத்துள்ள உறையூரில் பிறந்தவர் யார்?
திருப்பாணாழ்வார்
- திருப்பாணாழ்வார் இயற்றியது பாசுரம் எது?
அமலனாதிபிரான் பாசுரங்கள்
- சோழ நாட்டில் திருவாலிதிருநகரியில் பிறந்தவர் யார்?
திருமங்கையாழ்வார்.
- திருமங்கையாழ்வாரின்என்ன சிறப்புப் பெயர் பெற்றார்?
எமன்
- திருமங்கையாழ்வார் இயற்றியவை எவை?
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல்,பெரிய திருமடல் .
- ஆலயப்பணியே சமூகப்பணிக்குஅடிப்படை என்ற உயரிய தத்துவத்தை ஏற்படுத்தியவர்கள்கள் யார்?
ஆழ்வார்களே திருமங்கையாழ்வார்.
- கடவுள்மீது கொண்ட அன்பின் உணர்வுகளைஅறவழியில் விளக்கியவர்கள் யவர்?
வைணவ ஆச்சாரியர்கள்
- வெண்ணிற முத்துமணியையும், சிவந்த பவளமணியையும் சேர்த்து கோர்த்தார் போல் அமைந்தது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மணிப்பிரவாளம்
- தமிழ்ச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்து எழுதப்பட்ட உரைநடைஎவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மணிப்பிரவாளம்நடை .
- வைணவம் தழைக்கப் பாடுபட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் யாவர்?
நாதமுனிகள், ஆளவந்தார், வேதாந்த தேசிகர், பிள்ளை லோகாச்சாரியார், இராமானுஜர்
- ஆழ்வார்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்தபெருமை யாரை சாரும்?
ஆச்சாரியர்களை.
- காட்டுமன்னார்கோயிலில் பிறந்தவர் யார்?
நாதமுனிகள்
- ஆழ்வார்களின் பிரபந்தங்களுக்கு இசை அமைத்து அளித்தவர் யார்?
நாதமுனிகள்.
- நாலாயிரதிவ்யப்பிரபந்த பாசுரங்களைத் தொகுத்தவர் யார்?
நாதமுனிகள்
- நாதமுனிகள் இயற்றிய நூல்கள் யாவை?
நியாயத்தத்துவம், யோக இரகசியம்
- திருப்பெரும்புதூரில் பிறந்தவர் யார்?
இரமானுஜர்
- பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதியவர் யார்?
இரமானுஜர்
- விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைதோற்றுவித்தவர் யார்?
ராமானுஜர்
- ராமானுஜர் எழுதிய நூல்கள்யாவை?
வேதாந்தசாரம், வேதாந்ததீபம், வேதாந்த சங்கிரகம், ஸ்ரீபாடியம் (ஸ்ரீபாஷ்யம்), கீதாபாடியம் (கீதாபாஷ்யம்), கத்யதிரயம் சரணாகதி கத்தியம், திருவரங்க கத்தியம், வைகுண்ட கத்தியம்
- ‘ஆன்மாவேபரம்பொருளின் சாரம்‘ என்றுகூறியவர் யார்?
இராமானுஜர்,
- கர்நாடகத்தில் உடுப்பி மாவட்டத்தில் கல்யாண்பூர் என்ற இடத்தில் பிறந்தவர் யார்?
மத்துவர்
- மத்துவரால் எழுதப்பட்ட துவைத வேதாந்தநூல்கள்எந்த தலைப்பில் தொகுக்கப்பட்டன?
“சர்வமூலம்
- ஹரி என்ற கடவுளின் உண்மைத்தன்மையை அறிய முயற்சிப்பது ஒவ்வொருவரின் கடமை என்றவர் யார்?
மத்துவார்
- தன் பக்திக் கோட்பாடுகளை மையமாக வைத்து மத்துவர்எத்தனை நூல்களை எழுதியுள்ளார்?
37
- ஜெயதீர்த்தரின் நியாயசுதா என்றநூலிற்கு விளக்கவுரை எழுதியவர் யார்?
இராகவேந்திரர்
- தென்னிந்தியாவையும்வடஇந்தியாவையும் தமது பக்திநெறியின் மூலம் இணைக்கும் பாலமாகத் திகழ்ந்தவர்யார்?
இராமானந்தர்
- வித்யாபதி ,புருஷபக்சா என்ற நீதிபோதனைக் கதைகளை எழுதியவர் யார்?
இராமானந்தர்
- மைதிலி மொழியில் கோரக்ச விஜயா என்ற நாடக நூலையும் எழுதியவர் யார்?
இராமானந்தர்
- மகாராஷ்டிராவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர் யார்?
ஞானேஷ்வர்
- யாருடைய பிபக்திக் கோட்பாடுகள்‘மகாராஷ்டிர தர்மம்‘ எனப்பட்டது?
ஞானேஷ்வர்
- பகவத் கீதையின் விளக்கவுரையாக ஞானேஷ்வர் எந்த நூலை எழுதினார்?
ஞானேஷ்வரி
- அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் ‘அம்ருதானுபவ‘ என்ற நூலை எழுதியவர் யார்?
ஞானேஷ்வர்
- தொடக்கம் முதலே இந்து முஸ்லீம் ஒற்றுமையை வளர்த்தவர் யார்?
கபீர்
- இராமனும் இரஹீமும் ஒன்றே, கிருஷ்ணரும் கரீமும் ஒன்றே‘, அல்லாவும் ஈஸ்வரனும் ஒன்றேஎன்று மக்களுக்குப் போதித்தவர் யார்?
கபீர்.
- இந்துவும் முஸ்லீமும் ஒரே களிமண்ணால் செய்யப்பட்ட இருவேறு பானைகள் போன்றவர்கள்என்றவர் யார்?
கபீர்.
- கபீருடைய பாடல் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோஹாக்கள்.
- கபீரைத் தமது குருவாக ஏற்றுக்கொண்ட யார் கடவுள் ஒருவரே என்று கூறினார்?
குருநானக்.
- லங்கர் என்ற உணவுக் கூடத்தைநிறுவி, சமபந்தி உணவருந்தும் முறையைத்தொடங்கி வைத்தவர் யார்?
குருநானக்.
- சீக்கிய சமயத்தின் முதல் குருவான குருநானகை பின்பற்றி, எத்தனை சீக்கிய சமயகுருமார்கள் இவரது போதனைகளைஉலகறியச் செய்தனர்?
ஒன்பது.
- வல்லபாச்சாரியார் எந்தஆன்மிகக் கோட்பாட்டை உருவாக்கினார்?
‘புஷ்டிமார்க்கம்‘
- வல்லபச்சையாரின் பக்தி மார்க்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுத்த அத்வைதம்
- வல்லபச்சையார் எந்தெந்த மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார்?
வடமொழியிலும், ப்ரிஜ் (Parji) மொழியிலும்.
- வல்லபச்சையார் எழுதிய நூல்கள் யாவை?
சுபோதினி, சித்தாந்த ரகசியா .
- ராதை வழிபாட்டில் ஈடுபட்டுப் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர் யார்?
சூர்தாசர்கிருஷ்ணர்.
- “ஆக்ராவின் பார்வையற்றகவிஞர்” எனப்பட்டவர் யார்?
சூர்தாசர்கிருஷ்ணர்
- சூர்தாசர்கிருஷ்ணர் எந்தெந்த நூல்களை இயற்றினார்?
சூர் சாகர், சாகித்யரத்னா
- கிருஷ்ணர் மீதான ராதையின்காதலை விளக்கிக் கூறும் எந்த பக்திப் பிரிவைத் தோற்றுவித்தார்?
ராதா வல்லபி
- குரு ராம்தாசர் ,சாதாரண மக்களும் வாழ்க்கைத் தத்துவத்தை அறியும் வகையில் எந்த நூலை எழுதினார்?
‘தசபோதா‘
- துக்காராம் விஷ்ணுவை எந்த பெயரில்வழிபட்டுத் தம் கொள்கைகளை வடிவமைத்தார்?
விட்டலா
- அன்பு, ஆழ்ந்தஅறிவு, அறநெறி வழிபாட்டை மட்டுமே கொண்டஇஸ்லாமின் பக்திப் பிரிவு எது ?
சூபியிசம்.
- இறைவனை மனக் கண்ணால் அழகு ஆராதனை வடிவமாகக் காண்பதே சூபியிசம்” என்று கூறியவர் யார்?
கே.டி. பார்கவா.
- சூஃபி என்ற சொல் எந்தசொல்லிலிருந்து வந்தது?
சஃபா( “தூய” என்பது பொருளாகும்).
- சூபியிசத்தில் பக்தியின்அடிப்படையில் உள்ள ஐந்து பிரிவுகள் யாவை?
1) சிஸ்தி 2) சுகவார்தி 3) குவாதிரி 4) நக்சாபந்தி5) ஷாதாரி
- இந்துஸ்தானத்தின் பறவை எனப்பட்டவர் யார்?
அமீர்குஸ்ரு
- அமீறகுஸ்ரு எந்தெந்த மொழிகளில் இசைப்புலமை பெற்றவர்?
பாரசீக, பிரஜ்(Parji)
- அமீர் குஸ்ரு எந்த இசை முறையைஉருவாக்கிப் பயன்படுத்தினார்?
குவாலிஸ்
- சிதார் என்ற இசைச் கருவியை உருவாக்கியவர் யார்?
அமீர் குஸ்ரு.
- இறைவனை வழிபடும்போது, குரல்நாண்களின் மூலம் மந்திரங்களை ஒலியாக எழுப்பி ஆன்மா, உடல், மனம் ஆகிய மூன்றையும் ஒன்றாகஇணைக்கின்ற செயல் எவ்வாறு அழைக்கப்படும்?
நாத யோகா
12TH ETHICS STUDY NOTES | பக்தி இயக்கம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services