- எந்த நூற்றாண்டில் இந்தியாவில் பக்திஇயக்கங்கள் தோன்றின.?
கி.பி.7- 17-ஆம் நூற்றாண்டு
- எந்த இயக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும் சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின?
பக்தி இயக்கம்
- சமூக-சமய விழிப்புணர்வுக் காலம் என எந்த நூற்றாண்டை கூறுகிறோம்?
19 -ம்
- இந்தியாவில் அச்சு இயந்திரம் ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்யப்பட்டதால் எந்தெந்தசெய்தித்தாள்கள் நம் நாட்டின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவியாகஅமைந்தன?
அமிர்தபஜார் பத்திரிக்கா, தி இந்து, சுதேசமித்திரன், இந்தியா, கேசரி, மராத்தா
- கி.பி 1835-ஆம் ஆண்டு யாருடைய முயற்சியால் ஆங்கிலம் இந்தியாவில் பயிற்று மொழியாக்கப்பட்டது?
மெக்காலே பிரபு (Macaulay)
- எந்த ஆண்டின் சார்லஸ் உட்(Charles wood) அறிக்கையின் படி கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன?
கி.பி 1854
- எந்த நூற்றாண்டில், இந்தியா உலகநாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைந்திருந்தது?
19-ஆம் நூற்றாண்டில்
- இந்தியாவின் கடந்த கால பண்பாடுகளை மறு உயிர்பிப்பு செய்தவர்கள் யாவர்?
மாக்ஸ்முல்லர் (Max Muller) வில்லியம் ஜோன்ஸ் (william Jones)
- 15-வது வயதில் ‘உருவ வழிபாடுமறைநூல்களின் கருத்துக்கு எதிரானது, மாறானது ‘என்று வங்கமொழியில் எழுதி வெளியிட்டு, எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்தவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்.
- கி.பி.1820-இல் இயேசுவின்போதனைகளைத் திறனாய்வு செய்து இயேசுவின் கொள்கைகள்,“அமைதிக்கும்ஆனந்தத்திற்கும் வழிகாட்டி” என்ற நூலைவெளியிட்டவர் யார்?
ராஜாராம் மோகன்ராய்.
- ராஜாராம் மோகன்ராய் என்பவருக்கு ‘இராஜா‘ என்ற பட்டம் அளித்தவர் யார்?
முகலாய அரசர் இரண்டாம் அக்பர் ஷா (1806-1835).
- பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்? இராஜாராம்மோகன்ராய்.
- 1815-இல்ராஜாராம் மோகன்ராய் கல்கத்தாவில் எந்த சபாவை தோற்றுவித்தார்?
ஆத்மியசபாவைத்
- ராஜாராம் மோகன்ராயின் ஆதமியாசபா பின்னர் (1828-இல் )என்னவாக மாறியது?
பிரம்மசமாஜமாக
- ஒரே கடவுள்“ என்ற கொள்கையின் அடிப்படையில்பொது சமயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது எது?
பிரம்ம சமாஜம்.
- ‘தூய உள்ளமும் தூய வாழ்வும் உய்யும் வழி‘ என்பது பேந்த அமைப்பின் அடிப்படைதத்துவமாகும்?
பிரம்ம சமாஜம்
- பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
“பிரமோக்கள்” .
- கணவன் இறந்ததும் மனைவி கணவரின் சிதையில் பாய்ந்து இறக்கும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
சதி (அ) உடன்கட்டை ஏறுதல்.
- எந்த ஆண்டு டிசம்பர்4 எண் XVII ன் படி) சதி தண்டனைக்குரிய
குற்றமாகும் என்று அறிவிக்கப்பட்டது?
கி.பி. 1829
- பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொன்று விடும் வழக்கம் இராஜபுத்திர குடும்பத்தில் காணப்பட்டது என கூறியவர் யார்?
வரலாற்றாசிரியர் கர்னல் டாட்(Col Tod) .
- எந்த ஆண்டு வங்காளத்தில்பெண்சிசு கொலைக்கு தடைச் சட்டம் கொண்டு (வங்கம் நெறிமுறைப்படுத்தும் சட்டப்படி 1795 XXI-இன் பிரிவு) வரப்பட்டது?
1795
- இளம்பெண்கள் கைம்மை நோன்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விதவை மறுமணச்சட்டம் (widow Remarriage act )எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
1856
- விதவைத் திருமணத்தை விரிவுபடுத்த, தீவிர இயக்கத்தைத்தோற்றுவித்தவர் யார்?
ஈஸ்வரசந்திர வித்யாசாகர்.
- கேசவசந்திரசென் என்பவர் முயற்சியால் எந்த ஆண்டு சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டது?
கி.பி.1872
- எந்த ஆண்டு பரோடா அரசு குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தை கொண்டுவந்தது?
கி.பி.1901
- எந்த ஆண்டுஇந்திய அரசால் ‘சாரதாச்சட்டம்’ (Saradha Act)கொண்டுவரப்பட்டு பெண்ணின் திருமணவயது, 14-ஆக உயர்த்தப்பட்டது?
கி.பி 1930
- பூனாவில் விதவை பெண்களுக்கெனஇல்லத்தை நிறுவியவர் யார்?
பண்டிதகார்வே
- ராஜாராம் மோகன்ராய் எவ்வாரேல்லம் போற்றப்படுகிறார்?
இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி, இந்திய தேசியத்தின் முன்னோடி, இந்தியாவின் புத்துலகச்சிற்பி
- இந்தியருக்குத் தாய்மொழிப்பற்றும்தன்னம்பிக்கையும் வளர எந்த (கி.பி 1821) வங்கமொழி வாரப்பத்திரிகையொன்றைத் ராஜாராம் தொடங்கினார்?
சம்வாத்கௌமுகி
- ராஜாராம் மோகன் ராய் எங்கு எப்போது மறைந்தார்?
கி.பி 1833-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் நாள் பிரிஸ்டலில் .
- “இவர் (ராஜாராம்)உலகிலேயே நவீன முறையில், முதன்முதலாகச் சமயஒற்றுமைநோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டார்“ என்று கூறியவர் யார்?
வரலாற்றாசிரியர் சர்மோனியர் வில்லியம் .
- உலக மனிதாபிமானத்தை ஆன்மிகம், அரசியல் ஆகியவற்றுடன்இணைத்து “பரந்த மனித சமயத்தைக் கண்டவர் இராஜராம்மோகன்ராய்“ என்று குறிப்பிடுபவர் யார்?
வரலாற்றாசிரியர் சீல் .
- ‘ஆரியா’ என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?,
‘அறிவார்ந்தோர் அமைப்பு‘, (Noble Society) மற்றும் ‘கடவுளின் குழந்தை’ (Arya means son of God) .
- ஆரியசமாஜம்,யாரால் எப்போது தொடங்கப்பட்டது? தயானந்த சரஸ்வதியால்கி . பி 1875-இ ல்
- 3தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
மூல்சங்கர் (Mulsankar).
- தயானந்த சரஸ்வதி எப்போது பிறந்தார்?
கி.பி1824-இல்
- தயானந்த சரஸ்வதி எதனைதலைமை இடமாகக் கொண்டு ஆரிய சமாஜத்தைத் தொடங்கினார்?
பம்பாய்
- “வேதங்களை நோக்கிச் செல்” (Go Back to Vedas)என்பது எந்த அமைப்பின் நோக்கம்?
ஆரிய சமாஜம்.
- “மறை செழித்த நாடே எம்மகேஸ்வரன்வீடு“ இதனை வணங்குதலே இறைவனை வணங்குதல் என்று கூறியவர் யார்?
தயானந்தர்
- ‘இந்தியா இந்தியருக்கே‘ (India for Indians)என்று கூறிச் சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.
- ஆரிய சமாஜம் எந்த இயக்கத்தின் மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது?
சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement)
- இந்தியாவில் 1886-ஆம் ஆண்டு லாகூரில் யாருடைய தலைமையில் தயானந்த ஆங்கிலோ வேதப்பள்ளிகள் தொடங்கப்பட்டன?
ஹன்ஸ்ராஜ்
- எந்தெந்த நாடுகளில் ஆரியசம்ஜம் செயல்பட்டுவருகின்றது?
பிஜி, நேபாளம், மொரீசியஸ், சிங்கப்பூர்
- வேதசமயம், நாகரிகம், பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக கருத்தியவர் யார்?
தயானந்த சரஸ்வதி.
- “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத சொல்லின் பொருள் என்ன?
வாய்மையே வெல்லும்
- வாய்மையே வெல்லும் என்ற வார்த்தை எதிலிருந்து எடுக்கப்பட்டது?
முண்டக உபநிடதத்திலிருந்து
- யார் இந்துசமயத்தின் மார்ட்டின் லூதர் என்று அழைக்கப்பட்டார்?
தயானந்த சரஸ்வதி.
- 19-ஆம் நூற்றாண்டில்தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின்தந்தையென இரவீந்திரநாத் தாகூர் யாரை போற்றுகிறார்?
தயானந்த சரஸ்வதி.
- இராமகிருஷ்ணர் எப்போது பிறந்தார்?
கி.பி. 1836-ஆம் பிப்ரவரி 18
- தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் என்ன?
கடாதரசட்டர்ஜி.
- இராமகிருஷ்ணரை‘இறைவனும் மனிதனும் கலந்த வியத்தகு கலவை‘ என குறிப்பிடுபவர் யார்?
விவேகானந்தர் .
- வேதாந்தத் தத்துவத்தின் செல்வாக்குமிக்க ஆன்மிகத் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவர் யார்?
சுவாமி விவேகானந்தர்
- எவற்றின்மூலம் மோட்சத்தை அடையலாம் என்று தமது யோகநெறிகள் என்ற நூலில்விவேகானந்தர் கூறியுள்ளார்?
இராஜ யோகம் , கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம்
- விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?
நரேந்திரநாத்தத்தா,
- விவேகானந்தர் எந்த ஆண்டு கன்னியாகுமரிக்குச் சென்று பாறையின் மீது அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார்?
1892
- எப்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமய மாநாடு மதகுரு கிப்பன்ஸ் தலைமையில் நடைபெற்றது?
1893-ஆம் செப்டம்பர் 11
- விவேகானந்தர் 1896-இல்அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எந்த சமய மன்றத்தைத் தொடங்கினார்?
வேதாந்த சங்கம் (Vedanta Society)
- கி.பி.1897-இல் வங்காளத்தில் உள்ள பேலூரில் எந்த இயக்கம் விவேகானதரால் தொடங்கப்பட்டது?
இராமகிருஷ்ண இயக்கம்
- துறவறம் மற்றும் மனித சேவையே எதன் முக்கியநோக்கமாகும்?
இராமகிருஷ்ண இயக்கம்
- மேற்கு வங்காளத்திலுள்ளசுந்தரவனப்பகுதியில் சூரிய ஒளியைப்பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் தோன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தது எது?
இராமகிருஷ்ண இயக்கம்
- பெரும் சாதனை செய்வதற்கு கடக்க வேண்டிய மூன்று நிலைகள் யாவை?
ஏளனம், எதிர்ப்பு, அகங்காரம் என்பன
- வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்; தளைகளிலிருந்து விடுபடுங்கள்-என்பது யாருடைய கூற்று?
விவேகானந்தர்.
- (விழுமின், எழுமின் குறிக்கோளை அடையும்வரை நில்லாது உழைமின்-என்பது யாருடைய கூற்று?
விவேகானந்தர்.
- பிரம்மஞான சபை யாரால் 1875-இல் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது?
ஹெலினாபெட்ரோவ்னா பிளாவாட்ஸ்கி, கர்னல் ஆல்காட்
- பிரம்ம ஞான சபை வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?
தியோஸ்சோபி இயக்கம்
- தியோஸ்சோபி என்ற வார்த்தையானதுகிரேக்க வார்த்தைகளான எந்த இரு சொற்களின் தொகுப்பேயாகும்?
தியோஸ், சோபாஸ்
- பிபிரம்ம ஞான சபையின் தலைமையிடம் எப்போது சென்னை அடையாறில் தொடங்கப்பட்டது?
1882
- அன்னிபெசன்ட்எங்கு எப்போது பிறந்தார்?
கி. பி 1847 – அயர்லாந்தில் .
- 1898 – ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்துக் கல்லூரியைத் தொடங்கியவர் யார்?
அன்னிபெசண்ட்.
- உலக சகோதரத்துவத்தை வளர்த்தல் என்பது எந்த சபையின் நோக்கம் ?
பிரம்ம ஞானசபை
- யாருடைய வீரமிக்க உணர்ச்சிமிக்க சொற்பொழிவுகள் ‘இந்தியனே விழித்தெழு’ என்னும் நூலாகவெளியிடப்பட்டது?
அன்னிபெசன்ட்
- 1914-இல் அன்னிபெசன்ட் எந்தவார வெளியீட்ட்டார்?
பொது வாழ்வு’
- ‘நவ இந்தியா’ என்ற நாளிதழையும் தொடங்கியவர் யார்?
அன்னிபெசன்ட்.
- வள்ளலார் எப்போது பிறந்தார்?
1823-அக்டோபர் 5
- வள்ளலார் அருளிய பாடல்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்பட்டது?
திருவருட்பா .
- வள்ளலார் எப்போது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்?
1865
- வள்ளலார் பதிப்பித்தவை யாவை?
சின்மயதீபிகை,ஒழிவிலொடுக்கம் ,தொண்டை மண்டலச் சதகம்
- வள்ளலார் பதிப்பித்த உரைநடைகள் யாவை?
மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம்
- வள்ளலார் பதிப்பித்த செய்யுள் எது?
திருவருட்பா
- மனிதருள்ளும் விலங்குகளினுள்ளும் செடி, கொடிகளினுள்ளும் ஆத்மாவின் ஒளியைக் கண்டவர் யார்?
இராமலிங்கஅடிகளார்.
- கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்குஅருகே செம்பழுந்தி கிராமத்தில் பிறந்தவர் யார்?
ஸ்ரீ நாராயணகுரு
- ஸ்ரீ நாராயணகுரு பொதுவாக எவ்வாறு அழைக்கப்பட்டார்?
நானு ஆசான்
- திருக்குறள், ஈசோ வாஸ்யோ உபநிடதம், ஒளிவில் ஒடுக்கம் ஆகிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்தவர் யார்?
ஸ்ரீ நாராயணகுரு.
- எந்த ஆண்டு நாராயண குரு தர்மபரிபாலன யோகம் என்ற அமைப்பை நிறுவினார்?
1903
- வங்காளத்தில் சமூக-சமயமறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் யார்?
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.
- 1856-இல் கொண்டு வரப்பட்ட விதவைகள்மறுமணச்சட்டத்திற்க்கு காரணமாயிருந்தவர் யார்?
வித்யாசாகர்.
- யாருடைய புகழை போற்றும் விதமாகவங்காளத்தில் ஹீக்ளி பாலத்திற்குஅவர் பெயர் சூடப்பட்டத்துள்ளது?
வித்யாசாகர்
- 1856 ஆண்டு எந்த விதி படிஇந்து விதவைகள்மறுமணச்சட்டம்
கொண்டுவரப்பட்டது?
விதி எண் XV-ன்
- புத்வார் பீத்என்ற இடத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கியவர் யார்?
ஜோதிபா பூலே கி.பி.(1827-1890)
- எந்த ஆண்டு சத்தியசோதக்சமாஜம் என்ற அமைப்பை ஜோதி பாபுலேதோற்றுவித்தார்?
1873
- சத்தியசோதக்சமாஜம் என்பதன் பொருள் என்ன?
உண்மை அறியும் சங்கம் .
- தமிழ் – பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
அயோத்திதாசப் பண்டிதர் கி.பி. ( 1845-1914)
- அயோதிதாசரின் இயற்பெயர் என்ன?
காத்தவராயன்
- எந்த ஆண்டு இராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு அன்றைய காலணா மதிப்பில் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தித்தாளை அயோத்திதாசர் வெளியிட்டார்?
1907
- “தெலுங்கு மறுமலர்ச்சியின் இயக்கத்தின் தந்தை“ என்று அழைக்கப்பட்டவர்யார்?
கந்துகூரி வீரேசலிங்கம் கி.பி. (1848-1919)
- பெண்கல்வியை ஊக்குவிக்க 1876-இல்கந்துகூரி வீரேசலிங்கம் எந்தசெய்திதாளைத் தொடங்கினார்?
‘விவேகவர்த்தினி’
- எந்த ஆண்டு வீரேசலிங்கம் பொதுப்பள்ளியை நிறுவி சமூக முன்னேற்றம் அடையச் செய்தார்?
1874
- வீரேசலிங்கம் எந்த ஆண்டு பி ஹித்காரினி பள்ளியையும் தொடங்கினார்?
1908
- ஆந்திராவில் விதவைகள் திருமணத்தை எந்த ஆண்டு வீரேசலிங்கம்நடத்திவைத்தார்?
1881
- ஈ.வெ. ராமசாமி எங்கு எப்போது பிறந்தார்?
1879-செப்டம்பர் 17-ஈரோடு
- .ல்பெரியார் எந்தெந்த இதழ்கள் மூலம் தமது சுயமரியாதைக் கொள்கைகளை வெளியிட்டார்?
குடியரசு, புரட்சி, விடுதலை
- பெரியாரால் சுயமரியாதை இயக்கம் எந்த ஆண்டு பிதோற்றுவிக்கப்பட்டது?
1925
- பெரியருடைய சமுதாயபங்களிப்பைப் பாராட்டி யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் (1973) பெரியாரை எவ்வாறு பாரட்டி விருது வழங்கியுள்ளது?
‘புத்துலகதொலைநோக்காளர்‘ ,தென்னிந்தியாவின்சாக்ரடிஸ்
12TH ETHICS STUDY NOTES | சமூக – சமய சீர்திருத்த இயக்கங்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services