TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
- “ பண்பாடு என்ற சொல் , எந்த சொல்லில் இருந்து தோன்றியது?
பண்படு என்னும் தமிழ்ச் சொல்லில்
- பண்படுத்துதல் என்பதற்கு என்ன பொருள் ?
செம்மைப்படுத்துதல் அல்லது சீர்படுத்துதல்
- ‘Cultura‘ என்ற இலத்தீன் சொல்லுக்கு என்ன பொருள் ?
சூழலுக்கு ஏற்ற வளர்ச்சி (In conditions suitable for growth)
- ” cultra” என்ற சொல்லின் ஆங்கில திரிபு எவ்வாறு கூறப்படுகிறது?
culture
- 1937இல்‘Culture‘என்னும் சொல்லுக்கு இணையாக பண்பாடு என்னும் தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியவர் யார்?
டி. கே. சிதம்பரநாதனார்
- Culture‘ என்னும் சொல்லுக்கு இணையாகப் ‘பண்பாடு‘ என்னும் தமிழ்ச் சொல்லை டி. கே. சிதம்பரநாதனார் பயன்படுத்தியதாகப் குறிப்பிடவர் யார் ?
எஸ். வையாபுரியார்
- விழுமியங்களின் தொகுதியாக இருப்பது எது?
பண்பாடு
- பண்பாடு என்பதை நம் முன்னோர்கள் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனர் ?
சால்பு, சால்புடைமை, சான்றாண்மை .
- பண்பை ,‘‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்“ என்று கூறும் நூல்?
கலித்தொகை,
- “பண்புடையார்ப் பட்டுண்டு உலகு“ என்று பண்பை குறிப்பிடவர் யார் ?
வள்ளுவர்.
- “மக்கள்தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்ததேபண்பாடு“.- என பண்பாட்டை கூறுவது எது?
வாழ்வியற்களஞ்சியம்.
- “பயிற்சி, அனுபவம் ஆகியவற்றின்மூலம் உடல், உள்ளம், உணர்வு ஆகியன அடையும் வளர்ச்சியே பண்பாடு“- என பண்பாட்டை கூறுவது எது?
ஆங்கில அகராதி.
- “பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பது, சமயம், பாரம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது“.என பண்பாடு பற்றி கூறியவர் யார்?
விவேகானந்தர்
- “பண்படுவது பண்பாடு.பண்படுதல் என்பது சீர்படுதல் அல்லது திருந்துதல். திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்டசெந்தமிழ் என்றும்,திருந்திய உள்ளத்தைப் பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்.“ என பண்பாடு பற்றி கூறியவர் யார் ?
தேவநேயப் பாவாணர்.
- “பண்பாடு என்பது, பொதுவாக நாகரிகத்தில் அடங்கியதாகும். காலப்போக்கில் மக்கள் தம் வளர்ச்சியின் மனநல ஆக்கமே பண்பாடாகப்பெயர்பெறுகின்றது“என பண்பாடு பற்றி கூறியவர் யார்?
செ. வைத்தியலிங்கம்.
- “மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன். இந்நிலையில் அவன்அடைந்துள்ள அறிவு, நம்பிக்கை, கலை ஒழுக்கக் கோட்பாடுகள், சட்டம், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு“.என பண்பாடு பற்றி கூறியவர் யார்?
ஈ. பி. டெய்லர்
- மக்களின் சிந்தனையும்,செயலும், நடவடிக்கையும் ஒவ்வோர் இனத்தவரிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவது பண்பாடாகும் என பண்பாடு பற்றி கூறியவர் யார்?
ரூத் பெனிடிக்ட்.
- “அவரவர் அன்றாடப் பணிகளைநேர்மையான மனநிலையுடனும், நேர்மையான நோக்குடனும், மகிழ்ச்சியுடனும் செய்வதில்தான் பண்பாடு மிளிர்கிறது“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
வால்டேர்.
- “பண்பாடு என்பது,இயற்கையின்மீதும் தன்மீதும்மனிதன்கொண்டிருக்கும் ,கட்டுப்பாடு, மனிதனுடைய உடை, ஆயுதங்கள், கருவிகள், மறைவிடம், ஆன்மிகம், மொழி,இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியது“.என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
எல்வுட் மற்றும் பிரௌன்.
- “மனிதன் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளஉருவாக்கிய கருவி பண்பாடு“.என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
சி. சி. நார்த்
- “ஒருவர் தம்குணநலங்களைநிரப்புவதிலும், தம்மைச் சூழ்ந்த சமுதாயத்தின் நலங்களை பேணுவதிலும், பேரவா கொண்டிருக்கும் நிலை பண்பாடாகும்“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
மேத்யூ ஆர்னால்டு.
- பண்பாடு என்பது, மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. இந்த ஊடகத்தைக்கொண்டே மக்கள் அவர்களின்தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்“. என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
மாலினோசுக்கி.
- “பண்பாடு என்பது மக்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து செயற்படும்போது உண்டாகும் நடத்தை முறைகளின்சேர்மமாகும். இஃது, அந்தந்தச் சமூகத்திற்கு மட்டுமே உரியது; உயிரியல் நிலையில் மரபுரிமையாக வராதது“என பண்பாட்டை பற்றி கூறியவர் யார்?
TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE
12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services