- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐவகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு இவ்வுலகம் தோன்றியது என்ற கருத்தைத் வெளிப்படுத்தியுள்ளவர் யார்?
தொல்காப்பியர்
- “நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம்“என்ற வரிகளை இயற்றியவர் யார்?
தொல்காப்பியர்.
- ஆய்காஸ்‘ என்ற கிரேக்கச் சொல்லிற்கு என்ன பொருள்?
‘வீடு‘ .
- லோகாஸ்‘ என்ற கிரேக்கச் சொல்,என்ன பொருள் படும்?
‘கற்றல்‘
- உயிருள்ளவையும், (Biotic) உயிரற்றவையும் (Abiotic) அடங்கிய இயற்கையின் தொகுப்பிற்கு என்ன பெயர்?
சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத் தொகுப்பு(Ecosystems).
- சுற்றுச்சூழல் கல்வி என்பது எதன் அறிவியல் பிரிவாகும்?
“சூழ்நிலையியல்” (Ecology)
- நமது நாட்டின் இயற்கை பிரிவுகளாக உள்ள மூன்று பிரிவுகள் யாவை?
சிந்துகங்கைச் சமவெளி, தக்காணப் பீடபூமி, கடற்கரைச் சமவெளிகள்
- பழைமையான வட இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்வன யாவை?
சிந்துகங்கைச் சமவெளிகள்,
- சிந்துவெளி நாகரிகம், எந்தெந்த நதிப்பகுதிகளில் தோன்றிப்
பரவியது?
சிந்து மற்றும் அதன் துணைநதிகளான ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், சரஸ்வதி .
- மௌரியர்கள் காலத்தில் கௌடில்யர் எழுதிய எந்த நூல் வனவளம், வனவளத்தின் தேவை, அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் போன்றவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது?
‘அர்த்தசாஸ்திரம்‘
- பொ.ஆ 5-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டஎந்த நூலின் மரங்களைவெட்டுதல், தண்டனைக்குரிய குற்றம் எனக் குறிப்பிட்டுள்ளது?
‘யக்ஞவால்கியஸ்மிருதி‘
- எந்த நதி இமயமலையிலுள்ள கங்கோத்திரியில் பனியாறாக உருவாகிறது?
கங்கைநதி
- கங்கைநதி வங்கதேசத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பத்மாநதி.
- வேதகாலப் பண்பாட்டின் மையமாக விளங்கும் நதி எது?
கங்கை நதி.
- கங்கை நதி சிவபெருமானின் சடாமுடியிலிருந்து தோன்றியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், சிவனைக் எவ்வாறு அழைக்கின்றனர்?
கங்காதரர்
- மலையும் மலைசார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்பட்டது?
குறிஞ்சி
- காடும், காடுசார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
முல்லை
- வயலும்வயல் சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மருதம்
- கடலும் கடல்சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
நெய்தல்
- மணலும் மணல்சார்ந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டன?
பாலை
- குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்த மக்கள்,எந்த கடவுளைவழிபட்டனர்?
முருகப்பெருமான்.
- மலைகள்மீது அமைந்துள்ள கோடை வாழிடங்கள் யாவை?
குலு, டார்ஜிலிங், நைனிடால், முசௌரி, கொடைக்கானல், உதகமண்டலம், ஏற்காடு
- எந்த கோயில் காஷ்மீரிலுள்ள வைஷ்ணவதேவி மலையில் அமைந்துள்ளது. வைஷ்ணவி தேவி கோவில்
- காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் இறைவி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மாதாராணி வைஷ்ணவி
- இந்தியப்பண்பாட்டில் நதிகள் அனைத்தும் எவ்வாறு போற்றுகிறோம்?
இறைவனாகவும், தாயாகவும் .
- ஆசியாவின் பெரியநதிகளில் ஒன்று?
பிரம்மபுத்திரா நதி
- பிரம்மபுத்திரா நதி திபெத்திலுள்ள கயிலை மலையில் எந்த பெயரில் தோன்றுகிறது?
ஸாங் – போ
- பிரம்மபுத்திரா நதி அருணாச்சல பிரதேசத்தில் இந்தப் பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியை அடைகிறது?
சியாங்
- கங்கையும், யமுனையும் இணையும் பகுதி எது?
அலகாபாத்.
- துங்கபத்ரா நதிக்கரையில் ஏற்படுத்தப்பட்ட எந்த பேரரசு தென்னிந்தியப் பண்பாட்டைப் போற்றி வளர்த்தது?
விஜயநகரப் பேரரசு
- எந்த நதி தமிழகத்தின்புனிதமான நதியாகும்?
காவிரிநதி
- கும்பமேளா (கிண்ணத்திருவிழா) இந்து சமயத்தினரால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது?
பன்னிரண்டு
- எந்த மாவட்டத்தில் கள்ளழகர் வைகை ஆற்றிலிறங்குவதும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன?
மதுரை
- கிருஷ்ணாநதி புஷ்கர விழா எத்தனை ஆண்டுகளுக்கொருமுறை 12 நாள்கள் கொண்டாடப்படுகிறது?
12
- கோள்களின் சுழற்சியை மையப்படுத்தி கொண்டாடப்படும் விழா எது?
கிருஷ்ணாநதி புஷ்கர விழா
- இந்தியா என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது?
தருமபூமி, புண்ணியபூமி,ஆன்மிகபூமி
- மனித இனத்திருக்கு வேதங்கள் வழங்கியுள்ள நான்குவகை ஆசிரம தர்மங்கள் யாவை?
பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனபிரஸ்தம், சன்னியாசம்.
- காடுகளில் தவவாழ்க்கை மேற்கொள்ள வேண்டுமென்கிற இறைநிலை எது?
வனபிரஸ்த நிலை
- இந்தியப்பண்பாட்டில் முக்கிய இடம் வகிக்கும் மரம் எது?.
அரசமரம்
- சிந்துவெளி நாகரிக மக்கள் எந்த மரத்தை கடவுளாக வழிபட்டனர்?
அரசமரம்
- புத்தர் எந்த மரத்தின் அடியில் ஞானோதயம் பெற்றார்?
அரசமரம்(போதிமரம்)
- பகலிலும் இரவிலும் மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவை, வெளியிடுவதால், அரசமரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
‘மரங்களின் அரசன்‘
- யாருடைய குறிப்புகளில் விந்திய சாத்பூராக் காடுகளில் வாழ்ந்த “சபார்கள்” என்ற மலைவாழ்மக்கள், மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்என்ற குறிப்பு உள்ளது?
சீனப்பயணி யுவான் சுவாங்
- பூமிக்குக் கிடைத்த வரங்கள் எனப்படுபவை எவை?
மரங்கள்
- இந்தியாவில், காடுகளிலுள்ள மரங்களை வெட்டிச் சாய்க்கும் செயலுக்கு எதிராக முதல் எதிர்ப்புக் குரலெழுப்பிய பெண்மணி யார்?
அம்ரிதாதேவி
- 1972-இல் யாரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிப்கோ இயக்கம்
தொடங்கப்பட்டது?
பகுகுணா
- சிப்கோ என்னும் இந்தி சொல்லுக்குக் என்ன பொருள்?
‘கட்டியணைத்தல்‘ .
- சசிப்கோ இயக்கம் எந்தெந்த மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது?
கர்நாடகம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம்
- காடுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எந்த ஆண்டு இந்திய வனக்கொள்கையை மத்திய அரசு வெளியிடப்பட்டது?
1988
- இந்தியாவிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் உள்ள ஒவ்வொரு மரமும் எவ்வாறு போற்றப்படுகிறது?
ஸ்தலவிருச்சமாகப் (கோயில் மரம்)
- சங்க இலக்கியங்கள் சிவபெருமானை எவ்வாறு குறிப்பிடுகின்றன?
‘ஆல் அமர் செல்வன்‘
- பாண்டிய மன்னர்களின் சின்னம் -மீன்,வேப்பம் பூ
- சோழ மன்னர்களின் சின்னம்-புலி ,ஆத்திப் பூ
- சேர மன்னர்களின் சின்னம். -வில் ,பனம் பூ
- தொண்டை மண்டல மன்னர்களின் சின்னம்-அரசமரம்
- ‘நாளை உலகம் அழிவதாக இருந்தாலும், இன்றைக்கு மரம் நடுவதைவிட்டுவிடாதே‘ என்று மரத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளவர் யார்?
முகமது நபி
- “காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்“ என்றவர் யார்?
பாரதி.
- “சின்னஞ்சிறு குருவிபோலே-நீ திரிந்து பறந்துவா பாப்பா“ – என்று கூறியவர் யார்?
பாரதி
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த பிரிவு படி “காடு, ஏரி, ஆறு போன்ற இயற்கைச் சூழல்களைமேம்படுத்துவதும் பாதுகாப்பதும், பறவை, விலங்கு போன்றவற்றிடம் அன்பு பாராட்டுவதும் அவற்றால் ஏற்படும் நன்மைகளை உணர்வதும் கருணை காட்டுவதும், ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்?
பிரிவு 51-A
- நெய்தல் நில மக்கள் எந்த வழிபட்டனர்?
வருணனை
- நெய்தல் நிலமான பூம்புகார் பகுதியில் நடைபெறும் இந்திரவிழா, சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்ததாகவும், மக்கள் கடலில் நீராடியதாகவும் எந்த நூல்கள் கூறுகின்றன?
சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
- கடலுக்கடியிலுள்ள எவை முக்கியமான இயற்கை வளங்களாகும்?
பவளப்பாறைகள்
- கடலானத்து எந்த பெயரில் கடல் வணங்கப்படுகிறது?
சமுத்திரராஜன்
- பஞ்ச பூதங்கள் என்பவை யாவை?
ஆகாயம், நெருப்பு, நீர், காற்று, நிலம் .
- ஆகாயத்திற்கான கோவில் எது?
சிதம்பரம் நடராஜர் கோயில்
- நெருப்பிற்கான கோவில் எது?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.
- நீருக்கான கோவில் எது?
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
- காற்றுகனா கோவில் எது?
ஸ்ரீகாளஹஸ்தியிலுள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயில்
- நிலத்திற்கனா கோவில் எது?
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்.
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்,”என்று மனம் வருந்தி கூறியவர் யார்?
வள்ளலார்.
- ஐ.நா. சபை எந்த ஆண்டு சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது?
1992
- சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு எவ்வாறான பொதுப் பெயரிடப்பட்டது?
அஜண்டா-21“(Ajantha)
- சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களைச் சுற்றுப்புறத்தில் வெளியிடுவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
மாசு
- எந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘காடுகள்பாதுகாப்புச்சட்டம்‘, வனங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படு வதைத் தடைச்செய்கிறது?
1980
- கேரளாவில் எந்த மருத்துவத் தாவரத்தின் பயனையறிந்து, வெப்பமண்டலத் தாவரவியல் பூங்காஆராய்ச்சி நிறுவனம், இயற்கை வளங்களைப் பாதுகாக்க முயற்சிகள்எடுத்து வருகின்றது?
‘ஆரோக்ய பச்சை‘
- எந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உலகில் பல நாடுகள் தாமாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக்கொண்டன?
ஸ்டாக்ஹோம்
- இ ந் தி ய அரசியலமைப்புச் சட்டம் 1976–ஆம் ஆண்டு எத்தனையாவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசு மற்றும் மக்களின் கடமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது?
42-ஆவது
- எந்த சட்டத்தின் படி, ரியோ–டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையொப்பமிட்டுள்ளது?
(உயிரியல் பல்வகை பாதுகாப்புகாக) உயிரியல் பல்வகை சட்டம் 2002
12TH ETHICS STUDY NOTES | இந்தியப் பண்பாடும் சுற்றுச்சூழலும் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services