TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- பொருளாதார முன்னேற்றம் எத்தனை வகையான அணுகுமுறையை கொண்டு விளக்கப்படுகிறது?
2 :பழமையான அணுகுமுறை மற்றும் நலம் சார்ந்த புதிய அணுகுமுறை
- பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கும் அனுகுமுறை எது?
பழமையான அணுகுமுறை
- பொருளாதார முன்னேற்றம் எப்போது மறுவரையறை செய்யப்பட்டது?
1970 களில்
- “முன்னேற்றத்தை சமூக அமைப்பு பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி வருவாய் ஏற்றத் தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்துமே பொருளாதார முன்னேற்றமாக கருத வேண்டும்” என கூறியவர் யார்?
மைக்கேல் பி.டொடாரோ
- உலக வங்கி தலாவீத மொத்த நாட்டு வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை எவ்வாறு வகைப்படுத்துகிறது?
குறைந்த வருமானம் உடைய நாடுகள் ,நடுத்தர வருமானம் உடைய நாடுகள் & அதிக வருமானம் உடைய நாடுகள்
- தலா வீத மொத்த நாட்டு உற்பத்தி எவ்வளவு இருந்தால் அந்த நாடு குறைந்த வருமானம் உடைய நாடு என அழைக்கப்படும்?
$906 மற்றும் அதற்கும் குறைவாக
- தலா வீத மொத்த நாட்டு உற்பத்தி எவ்வளவு இருந்தால் அந்த நாடு நடுத்தன வருமானம் உடைய நாடு என அழைக்கப்படும்?
$906-$11,115
- தலா வீத மொத்த நாட்டு உற்பத்தி எவ்வளவு இருந்தால் அந்த நாடு குறைந்த வருமானம் உடைய நாடு என அழைக்கப்படும்?
$906தலா வீத மொத்த நாட்டு உற்பத்தி எவ்வளவு இருந்தால் அந்த நாடு அதிக வருமானம் உடைய நாடு என அழைக்கப்படும்? $11,116 க்கு மேல்
- வளர்ச்சி குறைந்த பொருளாதாரம் என்பது எவற்றை உள்ளடக்கியிருக்கும்?
நாட்டின் குறைவான தலா வருமானம் ,பரவலான வறுமை, வருவாய் மற்றும் செல்வ பகிர்வில் கடுமையான ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள்தொகை, குறைவான மூலதன ஆக்கம், அதிக வேலைவாய்ப்பின்மை போன்றவைகள்
- தொடர்ச்சியற்றதாகவும் மற்றும் தன்னிச்சையாகவும் நிகழக் கூடிய மாற்றம் எது?
முன்னேற்றம்
- நீண்ட காலத்திற்கும் படிப்படியாகவும் நிதானமாகவும் நடைபெறும் மாற்றம் எது?
வளர்ச்சி
- GNPன் விரிவாக்கம் என்ன?
Gross-national product
- ஒரு நாட்டின் புவி எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் சந்தை மதிப்புடன் அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் எட்டிய வருமானத்திற்கும் வெளிநாட்டினர் சம்பாதித்து அவர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானத்திற்கும் இடையிலான வேறுபாடு தொகையை கூட்டினால் கிடைக்கும் மதிப்பு என்ன?
மொத்த நாட்டு உற்பத்தி
- ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பை அந்த ஆண்டின் மக்கள் தொகையால் வகுக்க கிடைக்கும் ஈவுத் தொகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தலா வீதம் மொத்த நாட்டு உற்பத்தி
- பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயம் செய்யும் காரணிகள் என்னென்ன ?
நான்கு:பொருளாதாரம் ,சமூகம் ,அரசியல் மற்றும் மதம்
- பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன?
இயற்கை வளங்கள், மூலதன ஆக்கம் ,சந்தையின் அளவு ,கட்டமைப்பு மாற்றம், நிதியியல் அமைப்பு ,சந்தையிடத்தக்க உபரி ,பன்னாட்டு வணிகம் ,பொருளாதாரம் அமைப்ப
- பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகள் என்னென்ன?
மனிதவளம், தொழிநுட்ப அறிவு ,அரசியல் சுதந்திரம், சமூக அமைப்பு, ஊழலற்ற நிர்வாகம் ,முன்னேற்றம் அடைவதற்கான விருப்பம் ,நீதிபோதனை அறநெறி மற்றும் சமூக விழுமியங்கள் ,சூதாட்ட முதலாளித்துவம், பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்
- ஏற்கனவே உள்ள இருப்புடன் தற்போது கூடும் நிகர அளவு மூலதனம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலதன உருவாக்கம்
- “மனித வளம் சமுதாயத்தின் மனப்பான்மை, அரசியல் சூழ்நிலைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள்,பொருளாதார முன்னேற்றத்தின் மிக அதிக அளவு ஆதிக்கம் செய்கின்றன. முன்னேற்றம் அடைவதற்கு மூலதனம் அடிப்படையானதே ஒழிய அது மட்டும் போதுமானதல்ல” என கூறியவர் யார்?
ராகனர் நர்கஸ்
- “புதிய தொழில்நுட்ப முறைகள் உற்பத்தி திறனை அதிகப்படுத்தும். அது பொருளாதார முன்னேற்றத்துக்கு காரணமாகிவிடும்” என்று கூறுபவர் யார்?
ஜோசப் சும்பீட்டர்
- “இந்தியாவின் வறுமைக்கு இந்தியாவின் செல்வம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் எடுத்துச்செல்லப்பட்டதுதான் காரணம்” எனக் கூறுபவர் யார் ?
தாதாபாய் நவரோஜி
- “வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முறையும்(poverty and unbritish rule in India) “என்ற நூலை எழுதியவர் யார் ?
தாதாபாய் நவரோஜி
- “மக்கள் நேர்மையற்றவர்களாக இருந்தால் சந்தை செயல்படாது ” எனக் கூறுபவர் யார்?
டக்லஸ் சி.நார்த்
- “மக்கள் தங்களின் வருமானம் மற்றும் நேரத்தின் பெரும்பகுதியை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ,மது அருந்துவது ,சூதாடுவதில் செலவழித்தால் உற்பத்தி நடவடிக்கை பாதிக்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் தடைப்படும்” என கூறுபவர் யார் ?
தாமஸ் பிக்கெட்டி
- “நிலம் உள்ளிட்ட சொத்து பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு பரம்பரையாக வந்து சேர்ந்தால் குழந்தைகள் கடின உழைப்பை விரும்ப மாட்டார்கள். இது உற்பத்தித் திறனை குறைத்து விடும்” என கூறுபவர் யார்?
தாமஸ் பிக்கெட்டி
- “நச்சு சுழலானது ஒன்றை தொடர்ந்து மற்றொன்று ஏழை நாடுகளை தொடர்ந்து வவறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விகிதத்தில் செயல்படுவதை குறிப்பதாக” கூறுபவர் யார்?
ராகனர் நர்க்ஸ்
- “பொருளாதாரத் திட்டமிடல் என்பது தனியார் உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளை கூட்டாக கட்டுப்படுத்துவது அல்லது ஒடுக்குவதை குறிப்பதாகும்” எனக் கூறுபவர் யார்?
ராபின்ஸ்
- “பொருளாதாரத் திட்டமிடல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை அடைய உரிய பொறுப்பில் உள்ளவர்கள் நிதானமாக சிந்தித்து இருக்கக்கூடிய பொருளாதார வளங்களை அதிக அளவில் பயன்படுத்த சுட்டிக்காட்டும் வழிமுறைகளை ஆகும்” எனக் கூறுபவர் யார்?
டால்டன்
- சோவியத் ஒன்றியம் திட்டமிடலை எப்போது செயல்படுத்த துவங்கியது?
1928
- இந்திய விடுதலைக்குப் பிறகு எப்போது தொழில் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது?
1948
- இந்திய அரசமைப்பு சட்டம் எப்போது நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது?
ஜனவரி 26,1950
- திட்ட குழு எப்போது அமைக்கப்பட்டது?
மார்ச் 15,1950
- திட்டக்காலம் எப்போது முதல் துவங்கியது?
ஏப்ரல் 1 ,1951
- முதல் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1951 முதல் 1956 வரை
- விஸ்வேஸ்வரய்யா இந்தியாவில் திட்டமிடலுக்கான அடித்தளத்தை எப்போது அமைத்தார்?
1934
- விஸ்வேஸ்வரய்யா தனது ஆலோசனையாக பத்தாண்டு திட்டம் ஒன்றை அவர் எழுதிய எந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்?
இந்திய பொருளாதார திட்டமிடல்
- தேசிய திட்டக் குழு ஒன்றை ஜவஹர்லால் நேரு எப்போது அமைத்தார்?
1938
- மும்பையின் முன்னணி தொழிலதிபர்கள் பாம்பே திட்டம் என்ற திட்டத்தை எப்போது முன் மொழிந்தனர்?
1938
- வேளாண்மை மற்றும் கிராமிய பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டமான காந்திய திட்டத்தை 1944 வழங்கியவர் யார்?
என்.அகர்வால்
- மக்கள் திட்டம் என்பதை 1945 இல் வடிவமைத்தவர் யார்?
m.n. ராய்
- சர்வோதயா திட்டமொன்றை 1950ல் முன்மொழிந்தவர் யார்?
ஜெயபிரகாஷ் நாராயணன்
- ஜெயபிரகாஷ் நாராயணன் யாருடைய கருத்துக்களின் ஒத்துழைப்பால் சர்வோதயா திட்டத்தை உருவாக்கினார்?
காந்தி மற்றும் வினோபா பாவே
- இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவர் யார்?
ஜவஹர்லால் நேரு
- “பின்தங்கிய நாடுகளில் தேசிய வருவாயை உயர்த்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் மிகவும் அவசியம் இதற்கு திட்டமிடல் என்பது வழிகளையும் ,வழிமுறையையும் கொண்ட ஒரு சாதனமாக திகழ்கிறது” என கூறியவர் யார்?
ஆர்தர் லூயிஸ்
- “அடிமைத்தனத்திற்கான பாதை” எனும் நூலை எழுதியவர் யார்?
ஹேயக்
- “திட்டமிடல் சிறப்பாக அமைய வேண்டுமானால் கூடுதலான திட்டமிடல் நிபுணர்கள் தேவை” எனக் கூறுபவர் யார்?
லூயிஸ்
- திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துதல்லில் உள்ள அனைத்து நிலைகளிலும் மக்கள் பங்கெடுத்துக் கொள்ளும் திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மக்களாட்சி திட்டமிடல்
- எந்த திட்டமிடுதலில் பொருளாதார நடவடிக்கைகள் மத்திய கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டுதலின் படி ஒரே ஒரு திட்டமாக இருக்கும்?
சர்வாதிகார திட்டமிடல்
- எந்த திட்டமிடலில் அனைத்து நிலைகளிலும் திட்டம் தொடர்புடைய நடவடிக்கைகள் மையத் திட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும்?
மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்
- பரவலாக்கப்பட்ட திட்டமிடுதல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கீழிருந்து திட்டமிடல்
- திட்டக்குழு வழிகாட்டுதலை வழங்கி, திட்டம் தயாரித்து மேலும் திட்டத்தை ஆணையிடுதல் மூலம் செயல்படுத்தினால் அது எவ்வாறு அழைக்கப்படும்?
வழிகாட்டுதல் திட்டமிடல்
- பல்வேறு நிதியியல் மற்றும் பணவியல் வழிமுறைகள் மூலம் ஊக்கங்கள் அளித்து அதன் நடவடிக்கைகள் மக்களால் மேற்கொள்ளப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தூண்டும் திட்டமிடல்
- “மோனட் திட்டம்” என்ற பெயரில் கலப்பின பொருளாதார நாடுகளுக்கு பொருத்தமான திட்டமிடல் முறையை அறிமுகப்படுத்திய நாடு எது?
பிரான்ஸ் (1947 இல் இருந்து 1950 வரை)
- “நமது திட்டம் நமக்கான அறிவுரைகளாகும்” எனக் கூறியவர் யார் ?
ரஷ்யாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஸ்டாலின்
- ஓராண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கட்டுப்படுத்தப்படும் திட்டம்,ஆண்டு திட்டம்
- எத்தனை ஆண்டு காலத்தில் முடிவடையும் திட்டங்கள் நடுத்தர கால திட்டங்கள் என அழைக்கப்படுகிறது ?
மூன்றிலிருந்து 7 ஆண்டுகாலம்
- எத்தனை ஆண்டுகளுக்கு தீட்டப்படும் திட்டங்கள் நீண்ட கால திட்டமிடல் என அழைக்கப்படுகிறது?
30 ஆண்டுகள்
- நீண்டகால திட்டமிடல் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முன்னோக்கு திட்டங்கள்
- திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை பண மதிப்பில் ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிதி திட்டமிடல்
- எந்தத் திட்டமிடல் மனித வளம் இயற்கை வளம் மற்றும் இயந்திரங்கள் போன்ற பொருட்களை ஒதுக்கீடு செய்யும் திட்டமிடல் முறையாகும்?
உருவப்பொருள் திட்டமிடல்
- ஒரு நாடு பெற்றுள்ள பொருளாதார மற்றும் சமூக அமைப்பு முறையை மாற்றாமல் பொருளாதார சீர்கேடுகளை நீக்குவதற்கு வழிகாட்டுதல்கள் மட்டுமே செய்யும் திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பணிகள் திட்டமிடல்
- நாட்டின் அனைத்துப் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டமிடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
விரிவான திட்டமிடல்
- இலக்கு நிர்ணயம் செய்து அதை அடைய தீட்டும் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பகுதி திட்டம்
- NITI Aayog என்பதன் விரிவாக்கம் என்ன?
National institution for transforming India
- திட்டக் குழுவுக்கு பதிலாக நிதி ஆயோக்கை உருவாக்கும் முடிவை இந்திய அரசு எப்போது எடுத்தது?
ஆகஸ்ட் 13,2014
- எப்போது அமைச்சரவைக் குழுவின் தீர்மானத்தின் மூலமாக நிதி ஆயோக் அமைக்கப்பட்டது ?
ஜனவரி 1, 2015
- நிதி ஆயோக்கின் தலைவர் யார்?
இந்திய பிரதமர்
- நிதி ஆயோக்கின் முதலாவது துணைத் தலைவராக செயல்பட்டவர் யார் ?
அரவிந்த் பனகாரியா
12TH ECONOMICS STUDY NOTES | பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services