TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- “பணவீக்கம் சட்டபூர்வமற்ற வரிவிதிப்பு ” என கூறியவர் யார் ?
மில்டன் பிரெடுமேன்
- பொருட்கள் மற்றும் பணிகளை வாங்குவதற்கும் கடன்களை திரும்ப செலுத்துவதற்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டு கருவி எது?
பணம்
- “பணம் எதை செய்கிறதோ அதுதான் பணம்” என கூறியவர் யார் ?
வாக்கர்
- “பரிவர்த்தனைகளில் பொது உயர்த்த தன்மை கொண்ட ஒரு இடையீட்டு கருவியாகவும், மதிப்பளவை மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினைச் செய்யும் ஒன்றாகவும் இருப்பது பணம் ஆகும்” எனக் கூறியவர் யார்?
கிரௌதர்
- பண்டமாற்று முறை முதன்முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது?
மெசபடோமியா பழங்குடியினர்
- யாரால் கடல்கடந்து பல்வேறு நகரங்களில் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது?
போயனீசியர்கள்
- புழக்கத்தில் உள்ள பண அளவினை எது கட்டுப்படுத்துகிறது?
மைய வங்கி
- பணம் மதிப்பிற்கான அரசின் கட்டளையை தாங்கி வருவதால் காகித பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கட்டளைப் பணத்திட்டம்
- மைய வங்கியை சாராமல் பணப்புழக்கத்தை சீர் செய்தல் மற்றும் நிதி மாற்றத்தை சரிபார்த்தல் போன்ற சுதந்திரம் கொண்ட டிஜிட்டல் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மெய்நிகர் பணம்
- பணத்தின் முக்கிய பணிகள் எத்தனை நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன?
நான்கு: முதல் நிலை பணிகள் ,இரண்டாம் பணிகள், துணை பணிகள் &இதர பணிகள்
- பணத்தின் முதன்மை பணிகள் என்னென்ன ?
ஓர் பரிவர்த்தனை கருவியாக ,ஓர் மதிப்பின் அளவுகோலாக
- பணத்தின் இரண்டாம் நிலை பணிகள் என்னென்ன?
ஒரு மதிப்பு நிலைக்களனாக ,வருங்கால செலுத்துதல்களுக்கான ஓர் அடிப்படையாக, வாங்கும் திறனை மாற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக
- பணத்தின் துணை பணிகள் என்னென்ன?
கடனுக்கான அடிப்படை, தேசிய வருவாய் பங்கீட்டிற்கு உதவுவது ,இறுதிநிலை பயன்பாடுகளை ஒப்பிடவும் இறுதிநிலை உற்பத்தி திறன்களை ஒப்பிடவும் பயன்படுவது &மூலதனத்தின் உற்பத்தித்திறனை உயர்த்துவது
- பணத்தின் இதரப் பணிகள் என்னென்ன?
திரும்ப செலுத்தும் திறனை தக்க வைக்க உதவுவது ,பொதுமைப்படுத்தப்பட்ட வாங்கு திறனை குறிக்கிறது, தானத்திற்கு நீர்மை தன்மையை பெறுவது
- ஒரு பொருளாதாரத்தில் உள்ள மொத்த பண அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
பண அளிப்பு
- ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாட்டில் புழக்கத்தில் உள்ள பண அளவைக் குறிப்பது எது?
பண அளிப்பு
- இந்தியாவில் காகித பணங்கள் யாரால் வெளியிடப்படுகிறது?
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
- இந்தியாவில் நாணயங்கள் யாரால் வெளியிடப்படுகிறது ?
மத்திய அரசின் நிதித்துறை
- இந்திய ரிசர்வ் வங்கி பண அளிப்பில் எத்தனை வகையிலான அளவீடுகளை செய்கின்றது ?
4: M1,M2,M3,M4
- M1 என்றால் என்ன?
காகிதப் பணம் ,நாணயங்கள் மற்றும் கேட்பு வைப்புகள்
- M2 என்றால் என்ன?
M1+அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்
- M3 என்றால் என்ன?
M2+அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கால வாய்ப்புகள்
- M4 என்றால் என்ன?
M3+அஞ்சலகத்தில் உள்ள அனைத்து வைப்புகள்
- M1& M2 என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குறுகிய பணம் ,பரந்த நிலை பணம்
- இந்திய பணத்தின் குறியீடு யாரால் உருவாக்கப்பட்டது ?
உதயகுமார்
- புதிய இந்திய பண குறியீடு எப்போது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது?
ஜூலை 15, 2010
- இந்திய பண குறியீடு எழுத்து எதை சார்ந்து உள்ளது?
தேவநாகரி எழுத்து
- பண அளிப்பை தீர்மானிக்கும் காரணிகள் என்னென்ன?
ரொக்க வைப்பு விகிதம், ரொக்க இருப்பு வைப்பு விகிதம், ரொக்க இருப்பு விகிதம், சட்டப்பூர்வ நீர்ம விகிதம்
- CDRன் விரிவாக்கம் என்ன?
Cash-Deposit- ratio
- பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் பணம் அல்லது வங்கி வைப்புகள் உள்ள பணம் என்ற விகிதத்தை குறிப்பது?
ரொக்க வைப்பு விகிதம்
- RDRன் விரிவாக்கம் என்ன?
Reserve deposit ratio
- வங்கி தனது பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருக்கும் இருப்பு மற்றும் மைய வங்கியில் வைத்திருக்கும் ரொக்க வைப்பு /மொத்த வைப்புகள் என்ற விகிதம் எது ?
ரொக்க இருப்பு வைப்பு விகிதம்
- “வங்கியில் வைப்புகளில் குறைந்தபட்சமாக மைய வங்கியில் வைக்க வேண்டிய அளவு/ வங்கிகளில் செலுத்தப்பட்ட மொத்த வைப்புகள்” என்ற வீதம் எது?
ரொக்க இருப்பு விகிதம்
- CRRன் விரிவாக்கம் என்ன?
Cash reserve ratio
- SLRன் விரிவாக்கம் என்ன?
Statuary liquidity ratio
- “வணிக வங்கிகள் வைத்திருக்கும் நீர்மை தன்மையிலான சொத்துக்கள் /வணிக வங்கிகளில் இருக்கும் மொத்த கேட்பு மற்றும் கால வைப்புகள் என்ற விகிதம் ?
சட்டப்பூர்வ நீர்மை விகிதம்
- பண அளவு கோட்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?
டாவன்ஷட்டி என்ற இத்தாலிய பொருளியல் அறிஞர்
- எந்த ஆண்டு பண அளவு கோட்பாடு டாவன்ஷட்டியால் முன்மொழியப்பட்டது?
1588
- பணத்தின் வாங்கும் சக்தி என்ற நூலை எழுதியவர் யார்?
அமெரிக்கப் பொருளியல் அறிஞர் இர்விங் ஃபிஷர்
- இர்விங் ஃபிஷர் தனது கோட்பாட்டினை என்ன கணிதச் சமன்பாட்டின் வாயிலாக வழங்கியுள்ளார்?
பரிவர்த்தனைக்கான சமன்பாடு
- பரிவர்த்தனைக்கான சமன்பாட்டின் பொது வடிவம் என்ன?
MV=PT
- பரிவர்த்தனைக்கான சமன்பாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு
- மார்ஷலின் சமன்பாடு எது?
M=KPY
- சின் சமன்பாடு எது?
n=pk or p=n/k
- “மக்களின் ரொக்க விருப்பத்தினை பணவியல் அமைப்புகள் மாற்ற இயலாது ஆகவே பணத்தின் அளவை நெறிப்படுத்துவதன் மூலம் விலைவாசியை கட்டுப்படுத்த பணத்தின் மதிப்பை நிலைப்படுத்தலாம்” எனக் கூறுபவர் யார்?
கீன்சு
- இரு பெரும் பொருளாதார சிக்கல்கள் என்னென்ன?
பணவீக்கம் & பணவாட்டம்
- தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும்படியான பொது விலைமட்ட அதிகரிப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பணவீக்கம்
- பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்ட அதிகரிப்பு விகிதத்தையும் அதன் விளைவாக பணத்தின் வாங்கும் சக்தி குறைவதையும் காட்டுவது எது?
பணவீக்கம்
- “குறைந்த அளவு பண்டங்களை அதிக அளவு பணம் துரத்தும் நிலை” என பணவீக்கத்தை பற்றி குறிப்பிடுபவர் யார்?
கோல்பர்ன்
- “வாங்கும் சக்திக்கான அளவின் அசாதாரண குறைவு நிலையாகும் ” எனக் கூறுபவர் யார் ?
கிரிகெரி
- பணவீக்கம் வேகத்தின் அடிப்படையில் எவ்வாறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
நான்கு: தவழும் பணவீக்கம் ,நடக்கும் பணவீக்கம் ,ஓடும் பணவீக்கம், தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம்
- மிகக் குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பணவீக்க விகிதம் இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தவழும் பணவீக்கம்
- நீண்டகாலத்தில் விலைவாசி உயர்வு மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் இருப்பது எது ?
தவழும் பணவீக்கம்
- தவழும் பணவீக்கம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மிதமான பணவீக்கம்
- பணவீக்கம் மிதமான வேகத்தில் ஒற்றை இலக்கத்தில் அதாவது மூன்று முதல் ஒன்பது சதவீதத்தில் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நடக்கும் பணவீக்கம்
- நடக்கும் பணவீக்கம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகரும் பணவீக்கம்
- ஆண்டு பணவீக்க விகிதம் 10 முதல் 20 சதவீதத்திற்குள் இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓடும் பணவீக்கம்
- சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவீதத்தில் உள்ள பணவீக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தாவும் பணவீக்கம் அல்லது உயர் பணவீக்கம்
- 21ம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் எந்த நாட்டில் காணப்பட்டது?
ஜிம்பாப்வே நாடு 3714 சதவீதமாக ஏப்ரல் 2007 இறுதியில் இருந்தது
- பணவீக்கத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது எவை?
தேவை மற்றும் அளிப்பு
- அளிப்பு நிலையாக உள்ளநிலையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் பொழுது விலைவாசி உயர்கிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தேவை -இழுப்பு பணவீக்கம்
- உற்பத்தியில் மூலப்பொருட்கள் மற்றும் இதர இடுபொருட்களுக்கான செலவு உயர்கின்றபொழுது உற்பத்தி செலவு கூடி பொருட்களுக்கான விலை அதிகரிக்கிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
செலவு-உந்து பணவீக்கம்
- அளவுக்கதிகமான காகித பணத்தை மைய வங்கி பயன்பாட்டிற்கு விடுவிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காகித பணவீக்கம்
- வணிக வங்கிகள் தாராளமாக கடன் அளிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை குறிப்பது?
கடன் பணவீக்கம்
- வரவு செலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரி செய்யும் நிதியாக்க வழிமுறைகளில் ஒன்றாக மைய வங்கி மூலம் கூடுதல் காகித பணத்தினை அச்சிட்டு பயன்பாட்டிற்கு விடப்படுகிறது. இதன் மூலம் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு என்ன பெயர்?
வரவு செலவு பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்
- அதிக லாபத்தினை பெறும் நோக்கில் பொருட்களின் விலையில் உயர் லாப விகிதத்தை சேர்ப்பதால் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இலாபத் தூண்டல் பணவீக்கம்
- பொருள் பற்றாக்குறையினால் ஏற்படும் விலைவாசி உயர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பொருள் பற்றாக்குறை தூண்டல் பணவீக்கம்
- மறைமுக வரிகளான கலால் வரி ,சுங்க வரி மற்றும் விற்பனை வரி ஆகியவற்றில் ஏற்படும் உயர்வு காரணமாக விலைவாசி உயர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
வரி தூண்டல் பணவீக்கம்
- பணம் வீக்கத்திற்கான காரணங்கள் என்னென்ன?
பண அளிப்பு உயர்வு, செலவிட தகுந்த வருவாய் உயர்வு, உயர்ந்து வரும் பொது செலவுகள், நுகர்வோர் செலவு அதிகரித்தல், மலிவு பணக் கொள்கை, பற்றாக்குறை நிதி ஆக்கம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் நடவடிக்கைகள் மற்றும் கருப்பு பணம், பொதுக் கடனை மீளச் செலுத்துதல், ஏற்றுமதி உயர்வு
- பணவீக்கத்தின் விளைவுகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
இரண்டு: உற்பத்தியின் மீதான விளைவு ,பகிர்வின் மீதான விளைவு
- பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கருத்துக்களின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம் என கூறுபவர்கள் யார்?
கீன்ஸ் மற்றும் மில்டன் பிரீட்மன்
- மூன்று வகையான பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?
பணவியல் முறைகள், நிதியியல் நடவடிக்கைகள், இதர நடவடிக்கைகள்
- “வேலைவாய்ப்பின்மை ஏற்படுத்தாமலும், உற்பத்தி அளவுகள் குறையாமலும் பணவீக்கத்தை திருப்பும் செயல் முறையே “எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மீள் பணவீக்கம்
- பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையும் ,வேலைவாய்ப்பின்மையும்,அதிக அளவிலான பண வீக்கமும் ஒன்றிணைந்த சூழ்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேக்கவீக்கம்
- சீரான கால இடைவெளியில் அமையும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வணிக சுழற்சி அல்லது வியாபார வளர்ச்சி அல்லது தொழில் ஏற்ற இறக்கங்கள்
- “உயர்ந்த விலைகளையும் குறைந்த வேலையற்றோர் சதவீதத்தையும் கொண்ட நல்ல வாணிப காலங்களையும் ; குறைகின்ற விலைகளையும் ,மிகுகின்ற வேலையில்லாத் திண்டாட்ட சதவீதத்தையும் கொண்ட கெட்ட வாணிப காலங்களையும் உள்ளடக்கியது வாணிப சூழல் ஆகும் ” எனக் கூறுபவர் யார்?
ஜே.எம். கீன்ஸ்
- வாணிப சுழற்சியின் நான்கு கட்டங்கள் என்னென்ன?
பூரிப்பு ,பின்னறக்கம் ,பக்கம் மற்றும் மீட்சி
- நீண்டகால இயல்பான வளர்ச்சி நிலைக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலைவாய்ப்பு நிலையை தாண்டுவது வணிகச் சூழலில் எந்த கட்டம்?
பூரிப்பு/வளர்ச்சிக் கட்டம்
- பூரிப்பில் வெடிப்பு நிலை ஏற்பட்டு நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்பும் போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பின்னிறக்கம்
- ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும் சக்தி இல்லாததால் கிடங்குகளில் தேக்கம் அடைய செய்யும்.மந்லத்தின் கீழ் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தொட்டி
12TH ECONOMICS STUDY NOTES | பணவியல் பொருளியல் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services