12TH BOTANY STUDY NOTES | பொருளாதார பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவு தாவரங்களும் | TNPSC GROUP EXAMS

 


 1. பொருளாதார பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவு தாவரங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ள உணவு தாவரங்கள் எண்ணிக்கை எவ்வளவு?

10,000

 1. தானியம் என்ற சொல் எந்த வார்த்தையில் இருந்து உருவானது?

சீரிஸ்(ceres)

 1. ரோமானிய தொன்மையை தொன்மத்தில் வேளாண்மை கடவுளை குறிக்கும் வார்த்தைஎது ?

 சீரிஸ்

 1. தரசம் மிகுந்த உண்ணக்கூடிய விதைகளுக்காக வளர்க்கப்படும் எல்லா தானிய வகைகளும் எந்த குடும்பத்தை சார்ந்தது?

போயேசி என்னும் புல் குடும்பம்.

 1. தானியங்களின் இரண்டு வகைகள் யாவை?

சிறு தானியங்கள் ,பெரு தானியங்கள்

 1. பெரு தானியங்கள் என்பவை எவை?

நெல் ,கோதுமை மக்காச்சோளம்.

 1. சிறு தானியங்கள் என்பவை யாவை?

கம்பு ,கேழ்வரகு, சோளம்.

 1. நெல்லின் தாவரவியல் பெயர் என்ன?

ஓரைசா சடைவா

 1. பயிரிடப்படும் அதிலும் உற்பத்தியிலும் கோதுமைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள தானியம் எது?

நெல்

 1. கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது எது?

அரிசி

 1. நெல்லின் தோற்ற மையம் எது?

தென் கிழக்கு ஆசியா.

 1. நெல் பயிரிடுவதற்கான தொன்மைக்கால சான்றுகள் எங்கெங்கு கண்டறியப்பட்டுள்ளன?

சீனா இந்தியா ,தாய்லாந்து.

 1. பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

பிலிப்பைன்ஸ்தலைநகர் மணிலாவின் லாஸ் பனோஸ்.

 1. நெல் ஆராய்ச்சி களை மட்டுமே மேற்கொள்கின்ற ஒரே நிறுவனம் எது?

IRRI

 1. இதுவரை எத்தனை அரிசி ரகங்களைIRRI வெளியிட்டுள்ளது?

843

 1. IRRI எப்போது IR8 எண்ணம் உயர் விளைச்சல் குட்டை ரக நெல் வகையை உருவாக்கியது?

1960

 1. IR8 பஞ்சத்தைப் போக்கிய தால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அற்புத அரிசி.

 1. அதிக பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட அறை குட்டை நெல் ரகம் எது?

IR36

 1. IRRI-ன் பன்னாட்டு மரபணு வங்கி எத்தனைக்கும் அதிகமான நெல் வகைகளை சேகரித்து வைத்துள்ளது?

1,17,700

 1. கோதுமையின் தாவரவியல் பெயர் என்ன?

டிரிட்டிக்கம் ஏஸ்டிவம்

 1. பொதுவாக பயிரிடப்படும் கோதுமை ரகம்டிரிட்டிக்கம் ஏஸ்டிவம் சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பயிரிடப்பட்டு வருகிறது?

7500

 1. கோதுமை பயிரிடும் மாநிலங்கள்யாவை?

உத்தரபிரதேசம், பஞ்சாப் ,ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் பிஹார்.

 1. கோதுமையில் நார்ச்சத்து அற்ற பதப்படுத்தப்பட்ட கோதுமை மாவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மைதா

 1. மக்காச்சோளத்தின் தாவரவியல் பெயர் என்ன?

ஜியா மேய்ஸ்

 1. இந்தியாவில் மக்காச்சோளம் எங்கெங்கு பயிரிடப்படுகிறது?

மத்திய பிரதேசம் ,இமாச்சல பிரதேசம் ,பஞ்சாப்.

 1. தமிழ்நாட்டின் முக்கிய மக்காச்சோள வளர்ப்பு பகுதிகள் யாவை?

பெரம்பலூர், அரியலூர் ,கடலூர் ,திண்டுக்கல், திருப்பூர்.

 1. பொய் தானியத்திற்கு எடுத்துக்காட்டு ?

கினோபோடியம் கினோவா.

 1. கம்பின் தாவரவியல் பெயர் என்ன ?

பெனிசிட்டம் அமெரிக்கானம்

 1. இந்தியாவில் கம்பு அதிக அளவில் பயிரிடப்படும் மாநிலங்கள் யாவை ?

குஜராத் ,ராஜஸ்தான்.

 1. இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பு வகைகளில் ஒன்று எது?

பெனிசிட்டம் அமெரிக்கானம்

 1. கேழ்வரகின் தாவரவியல் பெயர் என்ன?

எல்லுசின் கோரகனா

 1. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தானியம் எது?

கேழ்வரகு

 1. ராகி மால்ட் எந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?

கேழ்வரகு

 1. சோளத்தின் தாவரவியல் பெயர் என்ன?

சொர்கம் வல்கெர்

 1. சோளம் எங்கிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது?

ஆபிரிக்கா

 1. மிகச் சிறு தானிய வகைகள் யாவை?

சாமை ,தினை ,வரகு.

 1. சாமையின் தாவரவியல் பெயர் என்ன?

பானிக்கம் சுமந்திரன்ஸ்

 1. இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட மிக சிறு தானிய வகை எது?

சாமை.

 1. ரத்தசோகை மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான கோளாறுகளை குணப்படுத்த பயன்படும் சிறுதானியம் எது?

சாமை

 1. திணையின்தாவரவியல் பெயர்என்ன?

சிட்டேரியா இடாலிக்கா

 1. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இணையானது வளர்ப்பு சூழலுக்கு உட்படுத்தப்பட்டது?

6000

 1. இதயத்தைப் பலப்படுத்தவும் கண்பார்வையை மேம்படுத்த பயன்படும் தானியம் எது?

திணை

 1. வரகின் தாவரவியல் பெயர் என்ன?

பாஸ்பலம் ஸ்குரோபோகுலேடம்

 1. வரகு எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

மேற்கு ஆப்பிரிக்கா

 1. சிறுநீர்ப் பெருக்கியாகவும் ,மலச்சிக்கலை குணப்படுத்தும், உடல் பருமனை குறைக்கவும் உதவும் தானியவகை எது?

வரகு(kodo millet)

 1. “பல்சஸ்” என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

“அடர்ந்த சூப்”

 1. பலசஸ் என்பது எம்மொழியில் இருந்து பெறப்பட்டது ?

லத்தீன் வார்த்தைகளான பல்ஸ் (puls) அல்லது பல்டிஸ்(pultis)

 1. ஃபேபேஸி குடும்பங்களிலிருந்து பெறப்படும் விதைகள் எவ்வாறு அழைக்கபடுகிறது?

பருப்புகள்

 1. உளுந்து (Black gram)ன் தாவரவியல் பெயர் என்ன ?

விக்னா முங்கோ

 1. உளுந்து எந்த நாட்டைபிறப்பிடமாககொண்டது?

இந்தியா

 1. தொன்மைதொல்தாவரவியல் சான்றுகள் (Archeobotanical) எந்த ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உளுந்து இருந்ததை உறுதி செய்கின்றன?

3500

 1. இந்தியாவில் உளுந்து உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

உத்திரப் பிரதேசம்,சட்டிஸ்கர், கர்நாடகா.

 1. துவரையின் தாவரவியல் பெயர் என்ன?

 கஜனஸ் கஜன்

 1. தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை எது?

துவரை

 1. இந்தியாவில் அதிக அளவில் துயரை பயிரிட மாநிலங்கள் யாவை?

மகாராஷ்டிரா ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் கர்நாடகா குஜராத்.

 1. பாசிப்பயறு / பாசிப்பருப்பு (Green gram) தாவரவியல் பெயர் என்ன?

விக்னா ரேடியேட்டா

 1. பாசிப்பயறு இந்தியாவில் தோன்றியதற்கான தொல்பொருள் சான்றுகள் எந்த மாநிலத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன?
SEE ALSO  12TH BOTANY STUDY NOTES | சூழல் மண்டலம் | TNPSC GROUP EXAMS

மஹாராஷ்டிரா

 1. இந்தியாவில் பாசிப்பயறு எங்கெங்கு பயிரிடப்படுகிறது?

மத்திய பிரதேசம் ,கர்நாடகா, தமிழ்நாடு

 1. கொண்டைக் கடலையின் தாவரவியல் பெயர் என்ன?

சீசர் ஏரெட்டினம்.

 1. கொண்டைக்கடலை எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

ஆசியா .

 1. இந்தியாவில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பேகொண்டை கடலை பயிரிடப்பட்டது?

4000.

 1. உருளைக்கிழங்கின் தாவரவியல் பெயர் என்ன?

சொலனம் டியுபரோசம்.

 1. உருளைக்கிழங்கு எந்த குடும்பத்தை சார்ந்தது?

சொலானெசி 64)உருளைக்கிழங்கு எந்த பகுதியில் தோன்றியது? பெரு மற்றும் பொலிவியாவின் உயர் மலைகள்

 1. இந்தியாவில் உருளைக்கிழங்கு பயிரிடப்படும் மாநிலங்கள் யாவை?

உத்தரபிரதேசம் ,மேற்கு வங்காளம், பிஹார்.

 1. வெண்டைக்காயின் தாவரவியல் பெயர் என்ன?

எபெல்மாஸ்கஸ் எஸ்குலேண்டஸ்

 1. வெண்டைக்காய் எந்த குடும்பத்தை சார்ந்தது?

மால்வேசி

 1. வெண்டைக்காய் எந்த நாட்டை பூர்விகமாகக்கொண்டது?

வெப்பமண்டல ஆப்பிரிக்கா

 1. இந்தியாவில் வெண்டைக்காய் பயிரிடும் மாநிலங்கள் யாவை?

அசாம் ,மகாராஷ்டிரா.

 1. வெள்ளரியின் தாவரவியல் பெயர் என்ன?

குக்குமிஸ் சட்டிவஸ்

 1. வெள்ளரி எந்த குடும்பத்தை சார்ந்தது?

குக்கர்பிட்டேசி

 1. குக்கர்பிட்டேசி குடும்பத்தை சார்ந்த தாவரங்கள்யாவை?

வெள்ளரி ,பூசணி, மூலாம், 

 1. இந்தியாவில் வெள்ளரி எத்தனை ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது?

3000

 1. மா-வின் தாவரவியல் பெயர் என்ன?

மஞ்சிபேரா இண்டிகா

 1. மா-எந்த குடும்பத்தை சார்ந்தது?

 அனகார்டியேசி

 1. மா-எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

பர்மா,கிழகிந்தியா.

 1. இந்தியாவின் தேசிய பழம் எது?

மாம்பழம்.

 1. இந்தியாவில்மாம்பழம் பயிரிடும் மாநிலங்கள் யாவை?

ஆந்திர பிரதேசம், பீகார் ,குஜராத்.

 1. தமிழ்நாட்டில் மாம்பழம் பயிரிடும் மாவட்டங்கள் யாவை?

சேலம் ,கிருஷ்ணகிரி ,தர்மபுரி.

 1. இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் யாவை ?

அல்போன்சா ,பங்கனப்பள்ளி, நீலம்,மல்கோவா.

 1. பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ள பழம் எது?

மாம்பழம்

 1. வாழையின் தாவரவியல் பெயர் என்ன?

மியூஸா பாரடிசிகா

 1. வாழை எந்த குடும்பத்தை சார்ந்தது?

மியூசேஸி

 1. எந்த நாட்டின் வளர்ப்பு சூழலுக்கு வாழை உட்படுத்தப்பட்டது ?

தென் கிழக்கு ஆசியா.

 1. தமிழ்நாட்டில் வாழை உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் யாவை?

தேனி, திருச்சி, ஈரோடு ,கோயம்புத்தூர் ,கன்னியாகுமரி தஞ்சாவூர்,

 1. இந்தியாவில் வாழை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது ?

தமிழ்நாடு .

 1. வாழையின் வகைகள் யாவை?

செவ்வாழை, கற்பூரவல்லி ,பூவன்  பேயன்.

 1. பலாவின் தாவரவியல் பெயர் என்ன?

அட்ரோகார்பஸ் ஹெதிரொபில்லஸ்

 1. பலா எந்த குடும்பத்தை சார்ந்தது ?

மோரேசி.

 1. பலா இந்தியாவின் எந்த பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது ?

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை

 1. தமிழ்நாட்டின் மாநில பழம் எது ?

பலா

 1. தமிழ்நாட்டில் பலா எங்கெங்கு விளைவிக்கப்படுகிறது ?

கடலூர் ,கன்னியாகுமரி திண்டுக்கல் புதுக்கோட்டை ,நீலகிரி, பண்ருட்டி, கோயம்புத்தூர்.

 1. கடினமான ஓட்டுக்குள் உண்ணக்கூடிய பருப்பை கொண்ட எளிய உலர் கனி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கொட்டைகள்

 1. முந்திரியின் தாவரவியல் பெயர் என்ன ?

அனகார்டியம் ஆக்சிடெண்ட்டேல்.

 1. முந்திரி எந்த குடும்பத்தை சார்ந்தது ?

அனகார்டியம்

 1. முந்திரி எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

பிரேசில்

 1. எந்த நூற்றாண்டில் போர்ச்சுகீசிய மாலுமிகள்மூலமாக முந்திரி இந்தியாவிற்குள் நுழைந்தது?

16ம்

 1. முந்திரி விளைவிக்கும் மாநிலங்கள் யாவை ?

கேரளா ,கர்நாடகா ,கோவா ,மகாராஷ்டிரா ,தமிழ்நாடு ,ஒடிசா

 1. பாதாமின் தாவரவியல் பெயர் என்ன?

ப்ருனஸ் டல்சிஸ்

 1. பாதாம் எந்த குடும்பத்தை சார்ந்தது?

ரோசேஸி

 1. பாதாம் எந்த பகுதியை பிறப்பிடமாகக் கொண்டது?

மத்திய தரைக்கடல் பகுதியின் மத்திய கிழக்கு பகுதி

 1. இந்தியாவில் பாதாம்உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

உத்தரபிரதேசம் ,இமாச்சல பிரதேசம்,

 1. உயர் அடர்வு கொழுப்பு குறைக்க உதவும் கொட்டை வகை எது?

பாதாம்.

 1. கரும்பின் தாவரவியல் பெயர் என்ன?

சக்காரம் அபிசினாரம்

 1. கரும்பு எந்த குடும்பத்தை சேர்ந்தது?

போயேசி

 1. வெள்ளை சர்க்கரை உற்பத்தியில் மூலப்பொருளாக உள்ள தாவரம் எது ?

கரும்பு

 1. சர்க்கரை துளசியின் தாவரவியல் பெயர் என்ன?

ஸ்டீவியா ரிபெட்டியானா

 1. சர்க்கரை துளசி எந்த குடும்பத்தை சார்ந்தது?

அஸ்டிரேஸி

 1. ஸ்டீவியா ரிபெட்டியானா இருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்கு மாற்றான இனிப்பு எது ?

ஸ்டீவியா

 1. சர்க்கரையை விட 200 மடங்கு அதிகம் இனிப்பான பொருள் எது?

ஸ்டீவியா .

 1. ஸ்டீவியவின் இனிப்புக்கு காரணமான வேதிப்பொருள் எது?

ஸ்டீவியோசைட்

 1. 1ஸ்டீவியா எந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

 பிரேசில் ,பராகுவே

 1. இந்தியாவில் சர்க்கரை துளசி எங்கெங்கு பயிரிடப்படுகிறது?

குஜராத் ,தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம்,

 1. பனையின் தாவரவியல் பெயர் என்ன?

பொராசாஸ் பிலாபிளேல்லிபர்

 1. பனை எந்த குடும்பத்தை சார்ந்தது?

அரிகேசி.

 1. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?

பனைமரம் .

 1. பனைமரம் எந்தெந்த நாட்டை பிறப்பிடமாகக் கொண்டது?

ஆப்பிரிக்கா, ஆசியா, நியூகினியா.

 1. எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் யாவை?

நிறைவுற்ற கொழுப்பு அமிலம், நிறைவுறாக் கொழுப்பு அமிலம்

 1. நிறைவுற்ற கொழுப்பு அமிலத்துக்கு எடுத்துக்காட்டு என்ன ?

தேங்காய் எண்ணெய்

 1. நிறைவுறா கொழுப்பு அமிலத்துக்கு எடுத்துக்காட்டு என்ன ?

ஒற்றை செறிவுறா மற்றும் பற்செறிவுறா

 1. கொழுப்பு அமிலங்கள் எதில் கலந்து காணப்படுகிறது?

எள் எண்ணை மற்றும் தவிட்டு எண்ணெய்.

 1. வேர்கடலையின் தாவரவியல் பெயர் என்ன?

அரகிஸ் ஹைபோஜியா.

 1. வேர்க்கடலையின் பிறப்பிடம் எது ?

பிரேசில்

 1. இந்தியாவில் வேர்கடலை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை ?

குஜராத் ,ஆந்திரப் பிரதேசம் ,ராஜஸ்தான்,

 1. நிலக்கடலை எத்தனை சதவீதம் எண்ணெய் கொண்டுள்ளது?
SEE ALSO  12TH BOTANY STUDY NOTES | சுற்றுச்சூழல் பிரச்சனைகள் | TNPSC GROUP EXAMS

45%

 1. தேயிலையின் தாவரவியல் பெயர் என்ன?

கேமெல்லியா சைனேன்ஸிஸ்,

 1. தேயிலை எந்த குடும்பத்தை சார்ந்தது ?

தியேசி

 1. தேயிலையின் பிறப்பிடம் எது?

சீனா .

 1. காபி எந்த குடும்பத்தை சார்ந்தது?

ரூபியேசி

 1. கோகோவின் தாவரவியல் பெயர் என்ன ?

தியோபுரோமா கொகோ

 1. கோக்கோ எந்த குடும்பத்தை சார்ந்தது?

மலவேசி

 1. கோக்கோ எந்த பகுதியை பூர்வீகமாகக் கொண்டது?

வெப்பமண்டல அமெரிக்க பகுதி

 1. இந்தியாவில் கோகோ அதிக அளவு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் எவை ?

கேரளா கர்நாடகா.

 1. ஏலக்காயின் தாவரவியல் பெயர் என்ன?

எலிட்டரியா கார்டோமோமம்

 1. ஏலக்காய் எந்த குடும்பத்தை சார்ந்தது ?

ஜின்ஜிபெரேசி

 1. ஏலக்காய் எந்த பகுதியில் தோன்றியது?

தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

 1. எது“நறுமணப்பொருட்களின் அரசி”அழைக்கப்படுகிறது?

ஏலக்காய்

 1. கரு மிளகு தாவரவியல் பெயர் என்ன?

பைப்பபர் நைக்ரம்

 1. கரு மிளகு எந்த குடும்பத்தை சேர்ந்தது?

பைப்பரேசி

 1. கரு மிளகு எந்த பகுதியை பிறப்பிடமாக கொண்டது?

இந்தியாவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்தது.

 1. நறுமணப்பொருட்களின் அரசன்என்றும் இந்தியாவின் கருந்தங்கம் என்றும் எது அழைக்கப்படுகிறது?

கரு மிளகு.

 1. மஞ்சளின் தாவரப்பெயர் என்ன?

குர்குமா லாங்கா

 1. மஞ்சள் எந்த குடும்பத்தை சேர்த்தது?

ஜிஞ்ஜிபெரேசி

 1. மஞ்சள் எந்த பகுதியை சேர்ந்தது?

தெற்காசியா.

 1. மஞ்சள் நிறத்திற்குக் காரணமான வேதி பொருள் எது?

குர்குமின்

 1. மிளகாய்தாவரப்பெயர் என்ன?

கேப்சிகம் அன்னுவம், கே. ஃப்ருட்டிசென்ஸ்

 1. மிளகாய் எந்த குடும்பத்தை சேர்ந்தது?

சொலானேசி

 1. மிளகாய் எந்த பகுதியை பூவிகமாக கொண்டது?

தென் அமெரிக்கா

 1. மிளகாயின் கார தன்மைக்கு காரணம் என்ன?

கேப்சைசின்

 1. மிளகாய்களின் காரத்தன்மை எந்தஅலகால்அளக்கபடுகிறது?

ஸ்கோவில்லி வெப்ப அலகுகள் (SHU-Scoville Heat Units).

 1. உலகத்தின் மிகக்காரமான மிளகாய் கரோலினா ரீப்பர் எத்தனை SHU கொண்டது?

2,200,000 SHU

 1. இந்தியாவின் மிகக்காரமான நாகா வைப்பர் மிளகாயின் SHU என்ன?

1,349,000 SHU அளவுகள்கொண்டது.

 1. பொதுவாக உபயோகிக்கும் கேய்னிபெப்பர் மிளகாய் எவ்வளவு SHU கொண்டுள்ளது?

30,000-லிருந்து 50,000 வரை SHU

 1. புளி தாவரப்பெயர் என்ன?

டாமெரின்டஸ் இண்டிகா

 1. புளி எந்த குடும்பத்தை சார்ந்தது?

 ஃபேபேசி -சீசல்பனியாய்டியே

 1. புளி எந்த பகுதியை சேர்ந்தது?

வெப்ப மண்டல ஆப்பிரிக்கப்பகுதி.

 1. ‘டாமரிண்டஸ்’ என்ற அரேபியச் சொல்லுக்கு என்ன பொருள்?

‘இந்தியாவின் பேரீச்சை’.

 1. தாவரவியலின்படி எது ஒரு நீண்ட, குறுகிய மற்றும் தடித்த சுவருடைய செல்லாகும்.?

நார்

 1. பருத்தியின் தாவரவியல் பெயர் என்ன?

காஸிபியம் சிற்றினம்

 1. பருத்தி எந்த குடும்பத்தை சேர்ந்தது?

 மால்வேசி

 1. பருத்தி ஏறத்தாழஎத்தனை ஆண்டுகளாகப் புது உலகிலும், பண்டைய உலகிலும்பயிரிடப்பட்டு வந்துள்ளது?

8000

 1. சணலின் தாவரவியல் பெயர் என்ன ?

கார்கோரஸ் சிற்றினம்

 1. சணல் எந்த குடும்பத்தை சேர்ந்தது?

 மால்வேசி

 1. சணல் எந்தெந்த சிற்றினங்களிடம் இருந்து பெறப்படுகிறது?

(1) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் (2) கா.ஒலிடோரியஸ்

 1. தேக்கின் தாவரவியல் பெயர்என்ன ?

டெக்டோனா கிராண்டிஸ்.

 1. தேக்கு எந்த குடும்பத்தை சேர்ந்தது?

லேமியேசி

 1. தேக்கு எந்த பகுதியை பூர்விகமாக கொண்டது?

தென் கிழக்கு ஆசியாவைப்

 1. உலகத்தின் மிகச்சிறந்த கட்டைகளில் ஒன்று எது?

தேக்கு

 1. இரப்பரின் தாவரவியல் பெயர் என்ன?

ஹீவியா பிரேசிலியன்ஸிஸ்

 1. ரப்பர் எந்த குடும்பம்த்தை சேர்ந்தது?

யூஃபோர்பியேசி

 1. ரப்பர் எந்த பகுதியை பூர்விகமாக கொண்டது?

பிரேசில்

 1. உலக ரப்பர் உற்பத்தியில் ஆசியாவின் பங்கு எத்தனை சதவீதம்? 90%.
 2. ரப்பர் உற்பத்தியில் இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்த மாநிலமாக உள்ளது எது?

தமிழ்நாடு

 1. இரப்பர் – வல்கனைசேசன் சார்லஸ் குட் இயர் எப்போது கண்டுபிடித்தார்?

1839

 1. முதன்முறையாக எப்போது திட இரப்பர் டயர்கள் பயன்படுத்தப்பட்டன?

1867

 1. பேப்பர் என்ற சொல் எந்த வார்த்தையில் இருந்து வந்தது?

பேப்பைரஸ் .

 1. சீனர்கள் எப்போது காகித மல்பெரி உள்மரப்பட்டையிலிருந்து காகிதத்தைக் கண்டுபிடித்தனர்?

கிபி150

 1. மருதாணியின் தாவரவியல் பெயர் என்ன?

லாசோனியா இனெர்மிஸ்

 1. மருதாணி எந்த குடும்பத்தை சேர்ந்தது?

லைத்ரேசி

 1. மருதாணியின் பூர்விகம் எது?

வட ஆப்பிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியா

 1. லாசோனியா இனெர்மிஸ் இளம் தண்டுத்தொகுப்பு மற்றும் இலைகளிலிருந்து பெறப்படும் ஆரஞ்சு சாயம் எது?

‘ஹென்னா’

 1. லாசோனியா இனெர்மிஸ் இலைகளின் முக்கிய சாயப்பொருளான எது தீங்கற்றதாகவும்,தோலில் எரிச்சல் கொடுக்காதகவும் உள்ளது?

லாகோசோன்

 1. ‘சோற்றுக்கற்றாழையின் தாவரப்பெயர் என்ன?

அலோ வீரா

 1. சோற்று கற்றாழை எந்த குடும்பத்தை சார்ந்தது?

அஸ்ஃபோடெலேசி (முன்பு லிலியேசி)

 1. சோற்று கற்றாழை எந்த நாட்டை பூர்விகமாக கொண்டது?

சூடான்

 1. அலாயின்’ (குளுக்கோசைடுகளின் கலவை மற்றும் இதன் களிம்புதோலுக்கு ஊட்டமளிக்கக் கூடியது எது?

சோற்று கற்றாழை

 1. பெர்ஃபியூம் (perfumes) என்ற சொல்லின் இரு பொருள்கள் என்ன?

 ’பெர்’ (வழி) மற்றும் ‘ஃபியூம்ஸ்’ (புகை)

 1. பெர்ஃபியூம் என்னும்லத்தீன் வார்த்தைக்கு என்ன பொருள்?

‘புகைவழி’ .

 1. மல்லிகை (Jasmine) தாவரவியல் பெயர் என்ன?

ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம்

 1. மல்லிகை எந்த குடும்பத்தை சேர்ந்தது?

ஓலியேசி

 1. ஆயுர்வேதம்எங்கிருந்து தோன்றியதாகக் கருதப்படுகின்றது?

பிரம்மனிடமிருந்து

 1. யார்யாரால் எழுதப்பட்ட செறிவடக்க ஏடுகளில் (compendium) ஆயுர்வேதத்திற்கான மூல ஆதார அறிவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது?

சரகா, சுஷ்ருதா, வாக்பட்டா

 1. ஆயுர்வேதக் குணப்பாட நூல் (Ayurvedic pharmacopoeia) எத்தனை மூலிகைகளைப் பட்டியிலிடுகின்றது?
SEE ALSO  12TH HISTORY STUDY NOTES | இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம் | TNPSC GROUP EXAMS

சுமார்500

 1. கீழாநெல்லியின் தாவரவியல் பெயர் என்ன?

பில்லாந்தஸ் அமாரஸ்

 1. கீழா நெல்லி எந்த குடும்பத்தை சேர்ந்தது?

 யூஃபோர்பியேசி (தற்போது பில்லாந்தேசி)

 1. கீழா நெல்லி தாவரம் எந்த பகுதியை பிறப்பிடமாக கொண்டது?

வெப்பமண்டல அமெரிக்கா

 1. கீழா நெல்லியின் செயலாக்க மூல மருந்து எது?

ஃபிலாந்தின்

 1. யார் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஃபிலாந்தஸ் அமாரஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சாறு ஹெப்படைடிஸ் பி வைரஸ் தாக்குதலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது ?

டாக்டர் S.P. தியாகராஜன்மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர்.

 1. நிலவேம்பின் தாவரவியல் பெயர் என்ன?

ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா

 1. நில வேம்பு எந்த குடும்பத்தை சார்ந்தது?

அக்காந்தேசி

 1. ‘கசப்புகளின் அரசன்’ (‘த கிங் ஆப் பிட்டர்ஸ்’) என அழைக்கப்படுவது எது?

நிலவேம்பு

 1. சில தாவரங்களிலிருந்து பெறப்படும் வேதிப்பொருட்கள் அல்லது மருந்துகள் ஒருவருடைய புலனுணர்வுக்காட்சிகளில் (perception) மருட்சியை ஏற்படுத்தும் தன்மையுடையதால் அம்மருந்துகள்மருந்துகள் எவ்வாறுஅழைக்கப்படுகின்றன?

புலனுணர்வுமாற்றமருந்துகள்

 1. அபின் / கசகசா (Opium poppy) தாவரவியல் பெயர் என்ன ? பப்பாவர் சாம்னிபெரம்
 2. அபின்/கசகசா எந்த குடும்பத்தைசேர்ந்தது?

பப்பாவரேசி

 1. கஞ்சாசெடி (cannabis)ன் தாவரவியல் பெயர் என்ன?

கன்னாபிஸ் சட்டைவா

 1. கஞ்சா செடி எந்த குடும்பத்தை சேர்ந்தது?

கன்னாபியேசி

 1. கஞ்சாசெடி எந்த நாட்டை பிறப்பிடமாககொண்டது?

சீனா

 1. கஞ்சாசெடியின் செயலாக்க மூல மருந்து எது?

டிரான்ஸ்-டெட்ராஹைட்ரோகெனாபினால் (THC).

 1. தாவர வளங்களைப் பயன்படுத்திப் புதிய தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதனையும், அதற்கான செயல்முறைகளையும் விளக்கும் தாவரவியல் பிரிவு எது?

தொழில் முனைவுத் தாவரவியல் .

 1. பூஞ்சையின் உண்ண கூடிய கனி உறுப்பு எது?

காளான்.

 1. வெள்ளை காய்கறி என அழைக்கப்படுவது எது?

காளான்

 1. மனித உணவகவோ, விலங்கு தீவணமாகவோ பயன்படும் நுண்ணுயிரிகளின் உலர்ந்த செல் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

ஒற்றை செல் புரதம்(SCP)

 1. திரவ கடற்களைகளில் காணப்படும் சத்துக்கள் யாவை?

நுண் சத்து கனிமங்கள் மற்றும் பொட்டாசியம்.

 1. திரவ கடற்களை உரங்கள், தாவரங்கள் பயன்படும் எத்தனை சதவீதம் ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன?

60%

 1. இயற்கை உயிரி பூச்சி விரட்டி எதிலிருந்துதயாரிக்கபடுகிறது?

வேம்பின் உலர்ந்த இலைகளில்

 1. இந்தியா தன்னகத்தே கொண்டுள்ள மூலிகை மற்றும் நறுமண தாவரங்கள் எவ்வளவு?

8000 மூலிகை தாவரங்கள்,2500 நறுமண தாவரங்கள்.

 1. செங்காந்தளின் முக்கிய வேதிய கூறு எது?

கால்சிசின்(0.5-0.7%)

 1. இந்திய அரசு எப்போது, தேசிய மருத்துவ தாவர வாரியத்தை(NMPB) எப்போது அமைத்தது?

24.11.2000

 1. தற்போது தேசிய மருத்துவ தாவர வாரியம் ஏதன் கீழ் இயங்குகின்றது?

 ஆயுஷ்(AYUSH)

 1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நறுமண தாவரங்களின் பயிரிடுத்தல் மற்றும் வணிக பயன்பாட்டின் மூலம் தொழில் முனைவை வளர்க்க உதவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு எது?

இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி கழகம்(CSIR AROMA MISSION OF INDIA)


12TH BOTANY STUDY NOTES | பொருளாதார பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவு தாவரங்களும் | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: