- சூழல்மண்டலம்’ என்ற சொல் யாரால்முன்மொழியபட்டது ?
A.G. டான்ஸ்லி (1935)
- “சுற்றுசசூழலின் அணனத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளை ஒருஙகிணைப்பதன் விளைவாக அமைந்த அமைப்பாகும் என சூழல் மண்டலம் பற்றி கூறியவர் யார்?
A.G. டான்ஸ்லி
- “சூழ்நிலையின் அமைப்பு மற்றும் செயல்பாடு அலகு” என்று சூழ் நிலை மண்டலம் பற்றி கூறியவர் யார் ?
ஓடம்(1962).
- சூழல்மண்டலத்திற்கு இணையான சொற்கள் :
- பையோசீனனோசிஸ் – கார்ல் மோபியஸ்
- மைக்ரோகாஸம் – S.A.ஃபோர்ப்ஸ்
- ஜியயோபையனோசீனனோசிஸ் – V.V. டோக்
- கூச்செவ், G.P. மோரோசோவ்
- ஹோலோசீன் – ஃபிரட்ரிக்ஸ்
- பயோசிஸ்டம் – தியென்மான்
- பயோஎனர்ட்பாடி- வெர்னாட்ஸ்கி.
- சூழல்மண்டலத்தின் இரண்டு முக்கிய கூறுகள் எவை?
உயிரினக் கூறுகள் (Biotic (living) components) ,உயிரற்ற கூறுகள் (Abiotic (non-living) components)
- சூழல்மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் மொத்த கனிமப் பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நிலைத்த தரம் (standing quality) அல்லது நிலைத்த கூறு (standing state)
- சூழல்மண்டலத்தின் ஊட்ட மட்டங்களின் இரண்டு கூறுகள்யாவை?
தற்சார்பு ஊட்டக்கூறுகள் (2) சார்பூட்டக் கூறுகள்
- தற்சார்புஊட்ட உயிரிகள் எந்த நிகழ்வின் மூலம் எளிய கனிமக்கூறுகளிலிருந்து கரிமக்கூறுகளை உற்பத்தி செய்கின்றன?
ஒளிச்சேர்க்கை
- பெரும்பாலான சூழல்மண்டலத்தில், தாவரங்களே தற்சார்புஊட்ட உயிரிகளாக உள்ளதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
உற்பத்தியாளர்கள் (producers)
- தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகள் மற்றும் அனைத்துண்ணிகள் ஆகியவை எவற்றை குறிக்கும் ?
பெருநுகர்வோர்கள் (macroconsumers).
- நுண் நுகர்வோர்கள் (microconsumers) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிதைப்பவைகள் (decomposers).
- ஓர் உயிரினக் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்டக்காலத்தில் காணப்படும் உயிரிகளின் அளவிற்கு என்ன பெயர்?
நிலைத்த உயிரித்தொகுப்பு (standing crop).
- உயிரினத்தின் பசுமை எடை அல்லது உலர் எடைஅல்லது கார்பன் எடையால் அளவிடப்படுவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உயிரித்திரள் (biomass)
- தாவரங்களினால் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் சூரிய ஒளியின் அளவிற்கு எந்த விகிதத்தில் இருக்கும்.?
நேர்விகிதம்.
- மொத்த சூரிய ஒளியில் எத்தனை விழுக்காடு சூரிய ஒளி மட்டுமே தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்காக பயன்படுத்தப்பட்டுமீதமுள்ளபகுதி வெப்பமாக சிதறடிக்கப்படுறது?
2-10%
- எந்த வகை கார்பன் உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பனாகும்?
பசுமைக் கார்பன்
- நிலக்கரி, எண்ணெய் மற்றும் உயிரி வாயுக்களாக பூமிக்கடியில் படிந்திருப்பது எவ்வகை கார்பன் ?
சாம்பல் கார்பன் .
- வளிமண்டலம் மற்றும் கடல்களில்சேமிக்கப்படுவது எவ்வகை கார்பன்?
நீல கார்பன்
- தொழில் ரீதியாக உருவாக்கப்படும் ,காடுகளில் சேமிக்கப்படுவது எவ்வகை கார்பன்?
பழுப்பு கார்பன்
- வாயு, டீசல் என்ஜின், நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுவது எவ்வகை கார்பன்?
கருமைக் கார்பன்
- ஓர் அலகு காலத்தில், ஓர் அலகுப் பரப்பில் ,உற்பத்தி செய்யப்படும் உயிரித்திரள் வீதம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது? உற்பத்தி திறன்
- உற்பத்தி திறன் என்ன அலகால் குறிக்கப்படுகிறது?
(கிராம் / சதுரமீட்டர் / வருடம்) அல்லது கிலோ கலோரி / சதுரமீட்டர் / வருடம் .
- ஒளிச்சேர்க்கை மற்றும் வேதிச்சேர்க்கை செயல்பாட்டின் மூலம் தற்சார்பு ஊட்ட உயிரிகளினால் உற்பத்தி செய்யப்படும் வேதியாற்றல் அல்லது கரிம கூட்டுப்பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதல்நிலை உற்பத்தித்திறன்.
- தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல்விகிதம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
நிகர முதல்நிலைஉற்பத்தித்திறன் (Net primary productivity – NPP)
- மொத்த உயிரிக்கோளத்தின் நிகர முதல்நிலைஉற்பத்தித்திறன் ஒரு வருடத்திற்கு எவ்வளவு என மதிப்பிடப்பட்டுள்ளது?
சுமார் 170 மில்லியன் டன்கள் (உலர் எடை)
- ஒரு வருடத்தில் ஓர் அலகு காலத்தில் கடல்வாழ் உற்பத்தியாளர்களின் நிகர முதல்நிலை உற்பத்தித்திறன் எவ்வளவு?
55மில்லியன் டன்கள்.
- எந்த உற்பத்தி நிலை சார்பூட்ட உயிரிகள் அல்லது நுகர்வோர்களின் திசுக்களில் சேமித்து வைக்கப்படும்ஆற்றலின் அளவாகும் ?
இரண்டாம் நிலை
- தாவர உண்ணிகளால் உட்கொள்ளப்படும் மொத்த தாவரப் பொருட்களில், அவற்றினால் கழிவாக வெளியேற்றப்படும் பொருட்களைக் கழித்து வரும் மதிப்பு எது?
மொத்த இரண்டாம்நிலை உற்பத்தித்திறன் (Gross secondary productivity)
- ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஒரு தாவரக் குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிம பொருட்களின் உயிரித்திரள் விகிதம் எனப்படுவது எது?
குழும உற்பத்தித்திறன்
- ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் சுவாசஇழப்பிற்குப் பிறகு நுகர்வோர்களால் சேமிக்கப்படும் ஆற்றல் அல்லது உயிரித்திரள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
நிகர இரண்டாம்நிலை உற்பத்தித்திறன் (Net secondary productivity)
- கிரேக்க சொல்லான“Trophic” என்பதன் பொருள் என்ன ?
உணவு அல்லது ஊட்டமளித்தல்
- உணவுச்சங்கிலியில் உயிரினங்கள் அமைந்திருக்கும் இடத்தை குறிப்பது எது ?
ஊட்டமட்டமாகும்.
- சூழல்மண்டலத்தில் ஆற்றல் ஊட்ட மட்டங்களுக்கிடையே பரிமாற்றம் அடைவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
ஆற்றல் ஓட்டம்.
- ஆற்றல் வெவ்வேறு வடிவங்களில் ஒரு அமைப்பில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகிறது என்பது என்ன விதி?
வெப்ப இயக்கவியலின் முதல் விதி.
- ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும் என்பது என்ன விதி ?
வெப்ப இயக்கவியலின் முதல் விதி.
- ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுவது எந்த விதிக்கு எடுத்துக்காட்டு ?
வெப்ப இயக்கவியலின் முதல் விதி.
- ஒவ்வொரு ஆற்றல் மாற்றத்தின்போதும் அமைப்பில் உள்ள கட்டிலா ஆற்றல் அளவு குறைக்கப்படுகிறது என்பது என்ன விதி?
வெப்ப இயக்கவியலின் இரண்டாம்
- பத்து விழுக்காடு விதி (Ten percent law) என்பது எந்த விதிக்கு எடுத்துக்காட்டு?
வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி
- பத்து விழுக்காடு விதி (Ten percent law) என்பதை மும்மொழிந்தவர் யார் ?
லின்டிமேன் (1942)
- உற்பத்தியாளர்களிடமிருந்து ஆற்றல் இறுதி உண்ணிகள் வரை கடத்தப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவு சங்கிலி
- மேய்ச்சல் உணவு சங்கிலிக்கு முதன்மை ஆற்றல் மூலமாக இருப்பது எது ?
சூரியன்
- இறந்த கரிம பொருட்களிலிருந்து தொடங்கும் உணவு சங்கிலி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மட்கு பொருள் உணவு சங்கிலி
- உணவுச் சங்கிலிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வலை போல் அமைந்து இருத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உணவு வலை ( food web)
- “ஒரு சூழல் மண்டலத்தில் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் அமைப்பு மற்றும்செயல்பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள் சூழலியல் பிரமிட்கள் என அழைக்கப்படுகின்றது” அறிமுகப்படுத்தியவர் யார் ?
சார்லஸ் எல்டன் (1927)
- சார்லஸ் எல்டனின்சூழியல் பிரமிடுகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எல்டனின்பிரமிட்கள்
- சூழலில் மூன்று வகையான பிரமிடுகள் யாவை?
எண்ணிக்கை பிரமிட், உயிரி திரள் பிரமிட் ஆற்றல் பிரமிட் .
- எண்ணிக்கை பிரமிட்டின்மூன்று வடிவங்கள் யாவை ?
நேரான, கதிரிழை தலைகீழ்.
- புல்வெளி மற்றும் குளசூழல் மண்டலம் எவ்வகையான பிரமிடு வடிவம் கொண்டது?
நேரான
- வன சூழ் மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிடு எந்த வடிவத்தை கொண்டது ?
கதிரிழை
- ஒட்டுண்ணி மண்டலத்தின் எண்ணிக்கை பிரமிடு எப்போதும் என்ன வடிவம் கொண்டது ?
தலைகீழ்
- ஒரு சூழல் மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் காணப்படும் கரிம பொருட்களின் அளவை குறிக்கும் திட்ட வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிரித் திரள் பிரமிட் (pyramid of biomass)
- ஒரு சூழல் மண்டலத்தின் ஒவ்வொரு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் ஓட்டத்தைக் குறிக்கும் திட்ட வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆற்றல் பிரமிட்.
- சிதைவு கூளங்கள் (இறந்த தாவரங்கள் விலங்குகள் மற்றும் அதன் கழிவுகள்) சிதைப்வைகளால் சிறிய கழிவுப் பொருட்களாக உடைக்கப்படும் செயல் முறைக்கு என்ன பெயர்?
சிதைத்தல்.
- நொதிகளின் செயல்பாட்டினால் படிப்படியாக நடைபெறக் கூடிய ஒரு நிலையழிவு செயல் எது ?
சிதைவு
- சிதைபவையாக உள்ள பாக்டீரியாக்கள் ,பூஞ்சைகள் ,மற்றும் மண் புழுக்களினால் சிதைவு கூளங்கள் துண்டுகளாக உடைக்கபடுவதற்கு என்ன பெயர்?
துணுக்காதல்
- சிதைபவைகள் செல்வெளி நொதிகள் சிலவற்றையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் சுரந்து அங்குள்ள சிக்கலான கரிம மற்றும் கனிம சேர்மங்களைஎளிய ஒன்றாக உடைக்க உதவுகின்றன இதுஎவ்வாறுஅழைக்கப்படுகிறது?
சிதை மாற்றம்
- சிதைந்த, நீரில் கரையும் கரிம மற்றும் கனிமப்பொருட்கள் மண்ணின் மேற்பரப்பிலிருந்து கீழ் அடுக்கிற்கு இடப்பெயர்ச்சி அடைதலுக்கு அல்லது நீரினால் எடுத்து செல்லப்படுவதற்கு என்ன பெயர்?
கசிந்தோடுதல் (Leaching) அல்லது வடிதல் (Eluviation)
- எளிமையாக்கப்பட்ட சிதைவுக்கூளங்கள் கருமையான படிக உருவமற்ற பொருளான மட்காக மாற்றமடையும் செயலுக்கு என்ன பெயர்?
மட்காதல் (Humification
- சில நுண்ணுயிரிகள் மண்ணின் கரிம மட்கிலிருந்து கனிம ஊட்டச்சத்துகளை வெளியேற்றுவதில் ஈடுபடுகின்றன. அத்தகைய செயல்முறை எவ்வாறு அழைக்கபடுகிறது ?
கனிமமாக்கம் (Mineralisation)
- சிதைவு செயலை பாதிக்கும் காரணிகள் யாவை ?
வெப்பநிலை, மண் ஈரப்பதம், மண் pH, ஆக்ஸிஜன் சிதைவுக்கூளங்களின் வேதித்தன்மை.
- சூழல்மண்டலம் அல்லது உயிர்கோளத்திற்குள்ளேயான ஊட்டங்களின் சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
‘உயிரி புவி வேதிச்சுழற்சி’ அல்லது ‘பொருட்களின் சுழற்சி
- ‘உயிரி புவி வேதிச்சுழற்சியின் இரெண்டு அடிப்படை வகைகள் யாவை?
வளி சுழற்சி (Gaseous cycle ) ,padima சுழற்சி (sedimentary cycle)
- கழிமுகம் மற்றும் கடலோர சூழ்நிலை மண்டலங்களில் காணப்படும் கடற்புற்கள் மற்றும் சதுப்பு நிலத் தாவரங்கள் அதிக கார்பன் சேகரிக்கும் திறன் கொண்டதால் இவை எவ்வாறு குறிப்பிடபடுகிறது ?
நீல கார்பன் சூழல்மண்டலங்கள்
- சிதைபவைகளுக்கு எடுத்துக்காட்டு என்ன?
பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள்.
- உள்நில நன்னீர் சூழல்மண்டலத்தின் உயிரியல், வேதியியல், உடற்கூறு மற்றும் புவியியல் கூறுகளை பற்றி படிக்கும் பிரிவு எது?
நன்னீரியல் (Limnology)
- கடலின் உயிரியல், வேதியியல், உடற்கூறு மற்றும் புவியியல் கூறுகளை பற்றி படிக்கும் பிரிவு எது?
கடலியல் (Oceanography)
- கரைக்கு அருகிலுள்ள ஆழமற்ற, எளிதில் ஒளிஊடுருவும் பகுதிக்கு என்ன பெயர் ?
கரையோரம்
- நன்றாக ஒளி ஊடுருவும் மற்றும் மிதவைதாவரங்களால் ஆதிக்கம் செய்யும் குளத்தின் திறந்தநீர்ப்பகுதியைக் குறிப்பது எது?
லிம்னெடிக் மண்டலம்
- “நீர், நிலம், தாவரத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழலின் சொத்துக்கள், இன்றியமையாபொருட்கள் மற்றும் சேவைகளாக ஓட்டமடைதல்மூலம் மனிதனுக்கு சூழல்மண்டலத்தின் நன்மைகள் மற்றும் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன” என கூறியவர் யார் ?
ராபர்ட் கான்ஸ்டான்ஸா மற்றும் அவரது குழுவினர் (1927)
- ராபர்ட் கான்ஸ்டான்ஸா மற்றும் அவரது குழுவினர் ஆய்வின்படி 1997ஆம் ஆண்டில், சூழல்மண்டல சேவைகளின் உலகளாவிய சராசரி மதிப்பீடு எவ்வளவாக இருந்தது ?
33 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
- 1997 முதல் 2011 வரை சூழல்மண்டல சேவைகள் எத்தனை மடங்கு அதிகரித்துள்ளது ?
நான்கு
- சூறாவளி, ஆழிப்பேரலை மற்றும் உயர் அலைக்காலங்களில் நீரின் விசையைக் குறைக்க உதவுவது எது?
சதுப்பு நில சூழல் மண்டலம்
- “2025ஆம் ஆண்டளவில், குறைந்தபட்சம் 3.5 பில்லியன் மக்கள்-உலக மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு-நீர் பற்றாக்குறையைச் சந்திப்பர்” என்பது எந்த அமைப்பின் அறிக்கை?
IUCN
- சூழல்மண்டலம் சேத எதிர்ப்பையும், விரைவான மீட்சித் திறனையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சூழல்மண்டலத்தின் இத்திறன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
சூழல்மண்டல மீள்திறன் அல்லது சூழல்மண்டல வீரியம்.
- ஒரு குறிப்பிட்ட வகை தாவர குழுமம் மற்றொரு வகை குழுமத்தை அடுத்துடுத்து அதே இடத்தில் இடம் பெறச் செய்தல் எவ்வாறு குறிப்பிடபடும் ?
தாவர வழிமுறை வளர்ச்சி.
- ஒரு தரிசு நிலத்தில் முதலில் குடிபுகும் தாவரங்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
முன்னோடிகள் .
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும் இடைநிலை வளர்ச்சித் தாவர குழுமங்கள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?
படிநிலை தொடரிக் குழுமங்கள் (seral communities) .
- உச்சநிலை மற்றும் உச்சநிலைத் தாவரக்குழுமம் அமைவது முறையே எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
உச்சம் மற்றும் உச்சக் குழுமம்.
- சுற்றுச்சூழல் வழிமுறை வளர்ச்சிக்கான மூன்று காரணங்கள் யாவை?
துவக்க காரணங்கள், தொடர் காரணங்கள், நிலை காரணங்கள்.
- சுற்றுச்சூழல் வழிமுறை வளர்ச்சிக்கு ,ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தாவர குழுமங்களை நிலைப்படுத்த பல காரணிகள் இருப்பினும் எந்த காரணிமுதன்மையானதாகும்?
காலநிலை.
- எந்தவொரு உயிரின சமுதாயமும் இல்லாத ஒரு வெற்றுப் பகுதியில் தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு என்ன பெயர்?
முதல்நிலை வழிமுறை வளர்ச்சி (Primary succession)
- வெற்றுப் பரப்பில்முதலில் குடியேறும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முன்னோடி சிற்றினங்கள் (pioneer species) அல்லது முதல்நிலை குழுமம் (primary community) அல்லது முதல்நிலை காலனிகள் (primary colonies)
- முதல்நிலை வழிமுறை வளர்ச்சி (Primary succession) -க்கு எடுத்துக்காட்டு தருக?
நுண்ணுயிரிகள், லைக்கன், மாஸ்கள்.
- ஒரு இடத்திலுள்ள ஏற்கனவே வளர்ந்த குழுமம் சில இயற்கை இடையூறுகளால் (தீ, வெள்ளப் பெருக்கு, மனித செயல்கள்), அழிக்கப்பட்டு அதே இடத்தில் ஒரு தாவர குழுமம் வளர்ச்சி அடைவதற்கு என்ன பெயர் ?
இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி(Secondary succession)
- தீ மற்றும் அதிகப்படியான மரங்களை வெட்டுதல் ஆகியவற்றால் அழிக்கப்பட்ட காடுகள், காலப்போக்கில் சிறு செடிகளால் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுதல் என்பது எந்த வழி முறை வளர்ச்சியின் எடுத்துக்காட்டு ஆகும் ?
இரண்டாம்நிலை வழிமுறை வளர்ச்சி (Secondary succession)
- ஒரு வனச் சூழல்மண்டலத்தில், மண்அரிப்பு மற்றும் கசிந்தோடுதல் ஆகியவை மண்ணின் ஊட்டச்சத்து மதிப்பை மாற்றியமைத்து அப்பகுதியின் தாவரத்தொகுப்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பது எந்த வழி முறை வளர்ச்சியின் எடுத்துக்காட்டு ஆகும் ?
வேற்று வழிமுறை வளர்ச்சி (Allogenic succession)
- வழிமுறை வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் தற்சார்பு ஊட்ட உயிரிகளான பசுந்தாவரங்கள் ஆதிக்கம் செலுத்தினால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தற்சார்ப்புஊட்ட வழிமுறை வளர்ச்சி (Autotrophic succession)
- 2 முதல்நிலை தற்சார்பு ஊட்ட வழிமுறை வளர்ச்சியில் உள்ள பல தொடர்ச்சியான செயல்முறைகள் யாவை?
தரிசாதல்,குடிபுகல்,நிலைப்படுதல்,போட்டியிடல்,எதிர்வினை அடைதல், நிலைப்பாடுறுதல்.
- சிற்றினங்கள் வேறு எந்த ஒரு பகுதியில் இருந்தும் தரிசு நிலத்தை வந்தடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குடிபுகல்
- விதைகள் அல்லது தாவர இனப் பெருக்க உறுப்புகள்,காற்று நீர் போன்ற பல்வேறு காரணிகளின் மூலம் தரிசு நிலங்களை அடைவதற்கு என்ன பெயர்?
உள் படைடுப்பு.
- புதிய இடத்தை அடைந்த பிறகு அப்பகுதியில் நிலவும் தன்மைக்கு ஏற்ப சிற்றினங்கள் வெற்றிகரமாக தங்களை சரிசெய்து நிலைக்கு என்ன பெயர்?
நிலைப்பாடுறுதல்
- ஒரு நன்னீர் சூழல்மண்டலத்தில் நடைபெறும் வழிமுறை வளர்ச்சி எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
நீர்நிலை வழிமுறை வளர்ச்சி
- நீருள் மூழ்கிய தாவர நிலைக்கு(Submerged plant stage) எடுத்துகாட்டு தருக?
கேரா, யூட்ரிகுலேரியா, வாலிஸ்நேரியா, ஹைட்ரில்லா
- ஒரு பகுதியில் பரவி இருக்கும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தாவர தொகுப்பு (vegetation)
- தாவர தொகுப்புகள் உருவாக்கம் மற்றும் பரவல்கள் ஆகியவற்றில் மனிதனால் விளையும் தாக்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மனித விளைவுகள்
- இந்தியாவில் எத்தனை புவியியல் மண்டலங்கள் காணப்படுகின்றன?
10
- சாம்பியன் மற்றும் சேத் ஆகியோரால்(1968) இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் எவ்வளவு காடுகள் கண்டறியப்பட்டது ?
16 மற்றும் 9
- வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் மலைச்சரிவுகளில் எத்தனை மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன?
1500 மீட்டர்
- 88) வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகளின் ஆண்டு மழைப்பொழிவு எவ்வளவு?
250 cm
- 89) வெப்ப மண்டல பசுமை மாறா காடுகளில் காணப்படும் தாவரங்கள் யாவை ?
டிரோகார்ப்பஸ்,ஆர்டோகார்பஸ்,எம்பிளிகா,இக்ஸோரோ,மாஞ்சிஃபஎரா,
- வெப்பமண்டலப் பகுதி-பசுமைமாறா காடுகள் மலைச் சரிவுகளை எத்தனை மீட்டர் உயரத்தில் உள்ளன?
1000 மீட்டர்
- வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகள் எத்தனை சென்டிமீட்டர் மழை பொழிவை பெறுகின்றன?
1௦0-200 cm
- வெப்பமண்டல ஈர இலையுதிர் காடுகளில் பொதுவாக காணப்படும் தாவர இனங்கள் யாவை ?
டெர்மினலியா, க்ருவியா,அடைனா,அல்பிஜியா,டால்பெர்ஜியா,
- கடற்கரை காடுகள் பெரும் மழைப்பொழிவு எவ்வளவு ?
75-500cm
- நன்னீர் சதுப்பு நிலக் காடுகளில் காணப்படும் தாவர வகைகள் யாவை ?
சாலிக்ஸ், ஏசர், பைகஸ்
- வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் கடல் மட்டத்திலிருந்து (MSL) எத்தனை மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன ?
400-800 மீட்டர்
- வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகள் பெரும் ஆண்டு மழை பொழிவு எவ்வளவு?
70-100 cm
- வெப்பமண்டல வறண்ட இலையுதிர் காடுகளில் 1௦-15 cm உயரத்தில் வளரும் தாவர வகைகள் யாவை?
டால்பெர்ஜியா, டாயோஸ்பைரஸ், பாஹினியா, ஜூஜிபஸ்
- வெப்பமண்டல காடுகள் சமவெளி பகுதிகளில் இருந்து எத்தனை மீட்டர் உயரம் வரை பரவியுள்ளன?
400m
- 99) வெப்பமண்டல காடுகள் பெரும் ஆண்டு மழை பொழிவு எவ்வளவு ?
20-70cm
- வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் தாவரங்கள் யாவை?
அக்கேஷிய,ஜூஜிபஸ்,கப்பாரிஸ், யூபோர்பியா.
- 101)தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களான திருவள்ளூரில் இருந்து நாகப்பட்டினம் வரை காணப்படுவது எவ்வகை காடுகள்?
வெப்பமண்டல பசுமைமாறா காடுகள்.
- மலையக மித வெப்பமண்டல காடுகள் எவ்வளவு மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது ?
1000-2000மீட்டர்
- மலையக மித வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும் தாவரங்கள் யாவை ?
யூஜினிய, சைசிஜியம், டுனா,
- மிதவெப்ப மண்டல அகன்ற இலைக் காடுகள் எங்கெங்கு காணப்படுகின்றன?
தமிழ்நாடு கேரளா ,கர்நாடகம் ,அசாம்.
- மிதவெப்ப மண்டல ஊசியிலைக் காடுகள் காணப்படும் பகுதிகள் யாவை?
பஞ்சாப் உத்திரப்பிரதேசம் மற்றும் சிக்கிமின் ஒரு பகுதி
- தமிழ்நாட்டின் மலையக குளிர் மண்டல காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சோலைகள் ( sholas)
- துணை பனி மலை காடுகள் எத்தனை மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளன?
2900-3500 மீட்டர்.
- பனிமலை புதர்க்காடுகள் இமயமலையில் எத்தனை மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன ?
3600-4900
- புல்வெளி தாவர தொகுப்புகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து எத்தனை மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன?
150-2000 மீட்டர்.
- தாழ் புல்வெளிகள் எத்தனை மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன ?
1000 m
- கரையோரம் வாழும் தாவர தொகுப்புகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
டெர்மிநேலியா, சலிகாஸ், பைகஸ்
- நீர் மற்றும் நீர்- நிலம் வாழ் தாவர தொகுப்புக்கு எடுத்துக்காட்டு தருக?
நிலம்போ, பாகோபா, நிம்ஃபைய, பாண்டனஸ், அபனோஜிடான்,சைப்ரஸ், டைஃபா,
12TH BOTANY STUDY NOTES | சூழல் மண்டலம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services