- சூரியனிடமிருந்து வரக்கூடிய வெப்பக்கதிர்கள் வளிமண்டல வாயுக்களால் கவரப்பட்டு வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வை எவ்வாறு அழைக்கிறோம்?
பசுமை இல்ல விளைவு
- வெப்பக்கதிர்களைக் கவர்ந்திழுக்கும் வாயுக்களுக்கு என்ன பெயர்?
பசுமைஇல்ல வாயுக்கள் (Green House Gases).
- பசுமைஇல்ல வாயுக்களுக்கு உதாரணம் தருக?
கார்பன்-டை ஆக்ஸைடு (CO2), மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N20)
- பவழப் பாறைகள் வெளிர்தல் (coral bleaching) தமிழ்நாட்டில் எப் பகுதியில்கண்டறியப்பட்டுள்ளது?
மன்னார் வளைகுடா
- பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும்போது புவியின் சராசரி வெப்பநிலையும் உயர்கின்றது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
புவிவெப்பமடைதல் (globalwarming)
- நிலக்கரியைச் சார்ந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தொல்லுயிர் படிம எரிப்பொருட்கள் எரிக்கப்படும் போது வெளியிடப்படும் வாயு எது?
CO2 (கார்பன்-டை-ஆக்ஸைடு)
- வேளாண் நிலங்களில் அறுவடையின்போது எஞ்சி நிற்கும் அடிக்கட்டைப் பயிர்களைஎரிப்பதாலும் எந்த வாயு வெளியேற்றப்படுகின்றது?
CO2 (கார்பன்-டை-ஆக்ஸைடு)
- CO2-வைக் காட்டிலும் 20 மடங்கு வெப்பத்தை வளி மண்டலத்தில் கூட்டும் வாயுன் எது?
மீத்தேன்
- பயிரிடல், கால்நடை வளர்ப்பு, நீர்நிலைகளில் வாழும் பாக்டீரியங்கள் மற்றும் தொல்லுயிர் படிம எரிபொருட்களின்உற்பத்தி,காட்டுத்தீ வாயிலாக எந்த வாயு உருவாகிறது?
மீத்தேன்
- இயற்கையில் பெருங்கடல்களிலிருந்தும், மழைக் காடுகளிலிருந்தும் உருவாகும் வாயு எது ?
N2O (நைட்ரஸ் ஆக்ஸைட்)
- புவியின் மீவளிமண்டல அடுக்கின்(stratosphere) ஒரு பகுதியாக அமைந்துள்ளது எது?
ஓசோன் அடுக்கு
- ஓசோன் அடுக்கின் தடிமண் என்ன அலகால் அளவிடப்படுகின்றன?
டாப்ஸன் அலகுகளால் (Dobson Units)
- சூரிய ஒளியிலிருநது எந்தெந்த தீங்கு வினைவிக்கும் கதிரியக்கத்தை ஓசோன் உட்கிரகிக்கும் தன்மையுடையது?
UV – a மற்றும் UV – b
- சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களைப் பெருமளவில் கவர்ந்து கொள்வதால் ஓசோன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓசோன் கவசம் (Ozone Shield)
- புவிப்பரப்பின் மீது காணப்படும் மொத்த ஓசோன் அடுக்கு எவ்வளவு தடிமன் கொண்டது?
0.3 cm(3 மி.மீ.)
- ஓசோன் அடுக்கின் அடர்வு வெகுவாக குறைந்து காணப்படும் அபாயகரமான பகுதி கண்டறியப்பட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஓசோன் துளை (ozone hole)
- உலக ஓசோன் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
September 16
- 1970-ஆம் ஆணடு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும் எந்த வாயு ஓசோன் மூலக்கூறுகளை அதிக அளவில் சிதைக்கிறது?
குளோரோ புளுளோரோ கார்பன் (CFC)
- 19)1985) வியன்னாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் பிற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
மான்ட்யல் ஒப்பந்தம்.(Montreal )
- தூய்மை மேம்பாடு செயல்திட்டம் (Clean Development Mechanism – CDM) வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
க்யோட்டோ ஒப்பந்தம் (Kyoto Protocol) (2007)
- சல்ஃபர்-டை-ஆக்ஸைடு சுட்டிக்காட்டிகள் யாவை?
லைக்கன்கள், ஃபைகஸ், பீனுஸ், ரோஜா.
- நைட்ரேட் குறிகாட்டி சுட்டிக்காட்டிகள் எவை?
பெட்டூனியா, க்ரைசாந்திமம்
- ஃப்ளூரைட் மாசுபாடு சுட்டிக்காட்டி எது?
க்ளேடியோலஸ்
- கன உலோகத் தூய்மைக்கேட்டைக் சுட்டிக் காட்டி எது?
ரொபீனியா ரொபீனியா, சூடஅகேசியா
- வணிக ரீதியாக வளர்க்கப்படும் வேளாண் காடுகளில் உள்ள சில முக்கியத் தாவரச் சிற்றினங்கள் யாவை?
கேசுரைனா, யூக்களிப்டஸ், மலை வேம்பு, தேக்கு, கடம்பு.
- புற்களுடன் கட்டைத்தன்மையுடைய தாவரங்களை வளர்க்கும் முறை எவ்வாறு குறிக்கப்படுகிறது?
மரப்புல்வெளி (Silvopasture)
- தீவன உற்பத்திக்காகப் பல்நோக்குடைய மரங்களை வேளாண் மற்றும்சுற்றுப்புற நிலங்களின் உள் மற்றும் எல்லாப்பக்கங்களிலும் நடவு செய்து வளர்க்கப்படுவது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
புரத வங்கி (Protein bank)
- புரத வங்கி (Protein bank) க்கு எடுத்துகாட்டு தருக?
அக்கேஷியா நிலோடிகா, அல்பிஜியா லெப்பக், அசாடிராக்டா இண்டிகா, கிளைரிசிடியா சிபியம், செஸ்பேனியாகிராண்டிஃபுளோரா
- உயிரி வேலி மற்றும் காப்பரணாகத் தீவன மரங்கள் (Live fence of fodder trees and hedges)க்கு எடுத்துகாட்டு தருக?
கிளரிசிடியா சிபியம், செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா, எரித்ரைனா சிற்றினம்,அக்கேஷியா சிற்றினம்.
- காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க, எந்த ஆண்டுகளில் மாநிலஅரசால் தனியார் நிலங்களில் மர வளர்ப்பு என்ற முறை செயல்படுத்தப்பட்டது?
2007 – 08 முதல் 2011 – 12 .
- காடுள்ள பகுதிகளைக் காடற்ற பகுதிகளாக மாற்றப்படுவதற்கு என்ன பெயர்?.
காடழிப்பு
- இந்தியாவின் வன மனிதன் என்றழைக்கப்படுபவர் யார்?
ஜாதவ் “மோலாய்” பயேங் (1963)
- ஜாதவ் “மோலாய்” பயேங்க்கு எப்போது பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது?
2015
- தமிழ்நாடு புதிய காடு வளர்ப்பு திட்டம் (Tamilnadu afforestation project – TAP)-ன் இரண்டு செயல் திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்பட்டது?
TAPl(1997-2005),TAPll-(2005-2013)
- உரங்களில் இருந்து வரும் நைட்ரேட் ஹீமோகுலோபுலின் உடன் வினை புரிந்து எதை உருவாக்குகிறது?
மீத்தைல் ஹீமோகுலோபுலின்
- நீரில் மாசுபடுத்திகள், நச்சு பொருட்களின் உயர்அளவு ஒரு உணவு சங்கிலியிருந்து பலவற்றிக்கும் நகர்ந்து இறுதியாக மனிதனிலும் அதிகரிக்கும் இந்த நிகழ்வு அல்லது அளவு பெருக்கமடைவது எவ்வாறு அழைக்கபடுகிறது?
உயிரிபல்பெருக்கம்
- ஐகோர்னியா கிராஸிபஸ் எந்த நாட்டை புகலிடமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு த்தாவரமாகும்?
தென் அமெரிக்கா.
- லேண்டனா கேமரா எந்த நாட்டை புகலிடமாகக் கொண்ட ஆக்கிரமிப்புத்தாவரமாகும்?
வட அமெரிக்கா.
- பார்த்தீனியம்ஹிஸ்டிராபோரஸ் எந்த நாட்டை புகலிடமாகக் கொண்டஆக்கிரமிப்பு த்தாவரமாகும்?
தென் அமெரிக்க
- புரோசாபிஸ் ஜுலிஃப்ளோரா எங்கு இருந்து வந்த ஆக்கிரமிப்புத் தாவரமாகும்?
மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்கா.
- புரோசாபிஸ் ஜுலிஃப்ளோரா எங்கு முதன்முதலாகப் பாலைவனப்பரவலைத் தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது?
குஜராத்
- தமிழ்நாடு முழுவதும் எத்தனை கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன?
448
- எப்ப்பாதுகாப்பு முறையில் சிற்றினங்கள இயற்கைச்சூழலுக்கு வெளியே பாதுகாக்கப்படுகின்றன?
புற வாழிடப் பேணுகை (Ex-situ conservation).
- இயற்க்கை பாதுகாப்பிற்காக பன்னாட்டு ondriyam(IUCN) எந்த ஆண்டு தோற்றுவிக்கபட்டது?
1948
- IUCN – ன் சிவப்பு பட்டியல் வகைப்படுகள் யாவை?
அழிந்தவை (Extinct – EX), இயல் வாழிடத்தில் அழிந்தவை(extinct in the wild-EW, அழி விளிம்பில் உள்ளவை (critically endangered-CR), அழி நிலை தாவரங்கள் (endangered-EN).பாதிப்பிற்கு உட்பட்டவை (vulnerable-VU), அழிவு அன்மை தாவரங்கள் , தகவல்குறைபாடு உடையவை.
- ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில்மட்டும் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
இடவரை சிற்றனங்கள்.
- இடவரைத்தாவரங்களுக்குச் றந்த எடுத்துக்காட்டுகள் யாவை?
ஹார்ட்விக்கியா பைனேட்டா மற்றும் பென்டிக்கியா கொண்டப்பனா..
- இந்தியாவில் எத்தனை இட வரை மையங்கள் மற்றும் எத்தனை நுண்ணிய இட வரை மையங்கள் உள்ளன?
3 &27
- மேற்குத்தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியில் காணப்படும் இடவரைத்தாவரங்கள் யாவை?
பக்காரியா குற்றாலன்சிஸ்
- தீபகற்ப இந்தியாபகுதியில் காணப்படும் இடவரைத்தாவரங்கள் யாவை?
அகஸ்தியமலைய்யா பாசிஃப்ளோரா
- தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதிபகுதியில் காணப்படும் இடவரைத்தாவரங்கள் யாவை?
ஹார்ட்விக்கியா பைனேட்டா
- தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்பகுதியில் காணப்படும் இடவரைத்தாவரங்கள் யாவை?
பென்டிக்கியா கொண்டப்பனா
- காசி மலைகள் மற்றும் மேகாலயா பகுதியில் காணப்படும் இடவரைத்தாவரங்கள் யாவை ?
நெப்பந்தஸ் காசியானா.
- வளிமண்டலக்கரியமில வாயுவைக் குறைக்கும் நோக்கில் வளிக்கார்பனைப் பிரித்தெடுத்துச் சேமிக்கும்ஒருசெயல் முறை எது?
கார்பன் சேகரிப்பு (Carbon sequestration)
- கார்பனைச் சேகரிக்கப் பயன்படும் ஒரு நீண்டகால முறை எது?
உயிரிமரகரிமம்.
- நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுமை இல்ல வாயுப் பொருட்களை மொத்தமாக உருவாக்குதல் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
‘கார்பன் வழித்தடம்’.
- பிரித்தானிய காலத்தில் கட்டப்பட்ட, சோழவரம் எரியின் கொள்ளளவு என்ன?
65.5அடி
- சென்னையில் உள்ள சேரம்பப்பக்கம் ஏரியின் பரப்பளவு என்ன ?
15சதுர கிலோமீட்டர்
- 2908 பரப்பளவில் உத்தம சோழனால் கட்டப்பட்ட ஏரி எது?
மதுராந்தகம் (காஞ்சிபுரம்)
- புவிப்பரப்பின் மீதுள்ள அமைப்பு சார்ந்த தகவல்களை (GIS) படம்பிடிக்க, சேமிக்க, சோதிக்க மற்றும் காட்சிப்படுத்த உதவும் தகவல்சார் கணினிசார் ஓர் அமைப்பு எது ?
புவிசார் தகவல் அமைப்பு(geographic information system).
- எது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புளை கண்டுபிடிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும்?.
தொலைஉணரி (Remote sensing)
- செப்டெம்பர் (2016) காலநிலைமுன்னறிவிப்பு, புயல் கணிப்பு மற்றும் இந்தியாவில் கணிப்பு சேவைகாக ஏவப்பட்ட செயற்கை கோள் எது?
SCATSAT – I
- செப்டெம்பர்(2016)இல் இயற்கைச்சீற்ற மேலாண்மைக்காக எவப்பட்ட செயற்கை கோள் எது?
INSAT-3DR
- சனவரி 2018ல்புவி உற்றுநோக்கலுக்காக ஏவப்பட்ட செயற்கை கோள் எது ?
CARTOSAT-2
- மார்ச் 2018ல்தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட செயற்கை கோள் எது?
GSAT-6A
- சனவரி 2018-ல்எல்லைப்பாதுகாப்பை கண்காணிக்க ஏவப்பட்ட செயற்கை கோள் எது ?
CARTOSAT-2(நூறாவது செயற்கை கோள்)
12TH BOTANY STUDY NOTES | சுற்றுச்சூழல் பிரச்சனைகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services