- இரத்தம் தொடர்பான நோய்களை கண்டறிதல், முன் கணித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான மருத்துவ துறையின் ஒரு பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹெமட்டாலஜி (Haemotology)
- உயிரினங்கள் மேல் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அபாயகரமான பாதிப்புகளையும் அதை கண்டறியும் முறைகளையும் நச்சுப் பொருட்களில் இருந்தும் நஞ்சூட்டிகளிலிருந்தும் ஏற்படும் தாக்கங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளையும் கொண்ட அறிவியல் பிரிவின் பெயர் என்ன?
நச்சு இயல் (Toxicology)
- நோய்க் காரணியை அகற்றி குணமடைய வைக்கும் செயல்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிகிச்சை
- மனித உடலுக்குள் கேட்கும் இதயத் துடிப்பு சுவாசம் போன்றவைகளை கேட்டு உணர பயன்படும் கருவி எது ?
ஸ்டெத்தஸ்கோப்
- குமிழிகளை காதில் வைத்து கேட்கும் போது உள்ளுறுப்புகளின் ஒலி தெளிவாக கேட்கும் ஸ்டெதஸ்கோப் எந்தவகை ?
இருசெவி ஸ்டெதஸ்கோப்
- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன ?
ஸ்பிக்மோமானோமீட்டர்
- ஸ்பிக்மோமானோமீட்டர் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இரத்த அழுத்தமானி அல்லது இரத்த அழுத்த கண்காணிப்பு கருவி அல்லது ரத்த அழுத்த அளவீட்டு கருவி
- ஸ்பிக்மோமானோமீட்டர் அளவுகோலில் காணப்படும் பாதரசம் மட்டும் காட்டும் எண்ணானது நோயாளியின் என்ன அழுத்தமாகும்?
சிஸ்டாலிக் அழுத்தம்
- ஸ்பிக்மோமானோமீட்டர் கருவியில் கைப்பட்டையினுள் காற்றழுத்தத்தை தொடர்ச்சியாக குறைத்துக்கொண்டே வரும்போது எந்த நிலையில் தமனியில் ரத்த ஓட்டம் பாயும் ஒலி கேட்கவில்லையோ அந்த அளவீடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டயஸ்டாலிக் அழுத்தம்
- வென்ட்ரிக்கிள் சுருக்கத்தின் போது ஏற்படும் அதிகப்படியான தமனி அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிஸ்டாலிக் அழுத்தம்
- வென்ட்ரிக்கிள் தளர்வடையும் போது காணப்படும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டயஸ்டோலிக் அழுத்தம்
- இயல்பான ரத்த அழுத்த அளவு எவ்வளவு?
120/80 மி.மீ பாதரசம்
- சிஸ்டோலிக் அழுத்தம் எவ்வளவு?
120 மி.மீ. பாதரசம்
- டயஸ்டோலிக் அழுத்தம் எவ்வளவு?
80 மி.மீ. பாதரசம்
- சில நோயாளிகள் வெள்ளை மேல் சட்டை அணிந்த மருத்துவர்களை காணும் போது பயந்து அதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து காணப்படுவார்கள் இதற்கு என்ன பெயர்?
வெள்ளை மேல் சட்டை விளைவு
- குளுக்கோஸ் அளவை தோராயமாக அளவிட மற்றும் எங்கும் எடுத்துச் செல்லக் கூடிய எளிய மருத்துவக் கருவி எது ?
குளுக்கோமீட்டர்
- குளுக்கோமீட்டர் ரத்த குளுக்கோஸ் அளவை என்ன அலகுடன் காட்டுகிறது?
மி.கி/டெ.லி
- குளுக்கோமீட்டர்கள் எந்தக் கொள்கையின் அடிப்படையில் செயலாற்றுகின்றன?
மின் வேதி வினை தொழில்நுட்பத்திலோ அல்லது நிறப்பிரதிபலிப்பு கொள்கையின் அடிப்படையிலோ செயலாற்றுகின்றன.
- இயல்பான ரத்த சர்க்கரை அளவுகள் என்னென்ன?
70-100 மி.கி/டெ.லி
- தொடர்பின்றி (எப்போதாவது) எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு என்ன?
80-120 மி.கி/டெ.லி
- உணவு உண்ணா நிலையில் சர்க்கரை அளவு என்ன?
70-110 மி.கி/டெ.லி
- உணவு உண்டப்பின்(இரண்டு மணி நேரம் கழித்து) சர்க்கரை அளவு என்ன?
110-140 மி.கி/டெ.லி
- பல்வேறு வகை உயிர் வேதிப் பொருட்களான குளுக்கோஸ் ,யூரியா ,கொலஸ்டிரால் ,நொதிகள் மற்றும் உடல் திரவத்தினுள் காணப்படும் இதர வகை புரதங்கள் ஆகியவற்றை உடனடியாக அளவிட என்ன கருவி பயன்படுத்தப்படுகிறது ?
தானியங்கி பகுப்பாய்வு (Auto analyser)
- மூளையின் மின்னோட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கருவி எது?
இ.இ.ஜி (Electroencephalogram)
- முதன்முதலில் இ.இ.ஜி.யை பகுத்தாய்ந்தவர் யார்?
1929ல் ஹேன்ஸ் பெர்ஜர் , ஜெர்மானிய அறிவியலாளர்
- இ.இ.ஜி யில் காணப்படும் அலை வடிவ பதிவுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பெர்ஜர் அலைகள்
- இ.இ.ஜி யில் எத்தனை வகை அதிர்வெண் அலைகள் காணப்படுகின்றன?
நான்கு: ஆல்ஃபா,பீட்டா,டெல்டா மற்றும் தீட்டா
- நோயாளிகள் மூளைச்சாவு அடைந்துள்ளதை மதிப்பீடு செய்யும் கருவியாக பயன்படுவது எது?
இ.இ.ஜி
- X கதிர்களை கண்டறிந்தவர் யார் ?
1895 – ஜெர்மானிய இயற்பியலாளரான சர் வில்ஹெம் கொனார்டு ரான்ட்ஜென்
- மார்பகதிசுக்களில் சிவப்பு எக்ஸ் கதிர் கொண்டு ஆய்வு செய்து அத்திசுக்களின் நிழலுருக்களைத் தோற்றுவித்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மம்மோகிராஃபி
- திசுக்களின் நேரடி நிழலுருக்களை எதன்மூலம் கண்டறியலாம்?
ஃபுளூரோஸ்கோப்பி
- மனித செவிகளால் கேட்க இயலாத அளவுகளைக் கொண்ட ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?
மீயொலி (ultrasound)
- என்ன இயற்பியல் நிகழ்வுகள் மூலம் மீயொலி அலைகள் உருவாக்கப்படுகின்றன?
பீஸோ-மின்னோட்ட விளைவு
- கம்ப்யூட்டட் டோமோகிராஃபிக் என்பது வேறு எவ்வாறு அழைக்கப்படும்? கம்ப்யூட்டட் ஆக்சியல் டோமோகிராஃபி
- டோமோகிராஃபி இந்த வார்த்தையில் இருந்து பெறப்பட்ட சொல்?
கிரேக்கம் (டோமாஸ் – துண்டங்கள் ,கிராஃபி – எழுதுதல்)
- PET கருவியானது சைக்ளோட்ரானில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பாசிட்ரான் வெளிவிடும் என்ன கதிர்வீச்சை ஐசோடோப்புகளை பயன்படுத்துகிறது?
11C,13N ,15O ,18F
- எந்த கதிர்வீச்சு தடங்காண மூலக்கூறு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது?
18F – ஃப்ளூரோடிஆக்ஸி குளுக்கோஸ்
- MRIன் விரிவாக்கம் என்ன?
Magnetic Resonance imaging
- மின்வாய்கள் வழியாக மின் தூண்டலைச் செலுத்தி இதய த்தசைகளை சுருங்கச் செய்து இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு மருத்துவக் கருவி எது?
பேஸ்மேக்கர்
- சைனு ஏட்ரியல் கணுவானது சரியாக செயல்படாத நிலைக்கு என்ன பெயர்?
சிக் சைனஸ் சின்ட்ரோம்
- இதயத்துடிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டால் அந்த நிலைமைக்கு என்ன பெயர்?
பிராடிகார்டியா (Bradycardia)
- இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100 க்கு மேல் காணப்பட்டால் அதன் பெயர் என்ன?
டேக்கிகார்டியா(Tachycardia)
- இதயத்துடிப்பு உற்பத்தி அமைப்பு நோயாளியின் உடலில் எங்கு பொருத்தப்படுகிறது?
காரை எலும்பின் அடியில்
- பேஸ்மேக்கர் கருவியில் உள்ள மின்கலன்கள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் எவ்வளவு ?
5 முதல் 15 வருடங்கள் வரை (சராசரியாக 6 முதல் 7 வருடங்கள்)
- LASERன் விரிவாக்கம் என்ன?
Light amplification by stimulated emission of radiation
- RBCக்களை நீர்க்கசஅ செய்யும் திரவம் எது?
ஹேயமஸ் திரவம்
- WBCக்களை நீர்க்கசஅ செய்யும் திரவம் எது?
டர்க்ஸ் திரவம்
- நியூட்ரோஃபில் இரத்தத்தில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
60-70%
- இயோசினோஃபிலீ இரத்தத்தில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
0.5-3%
- பேசோஃபில் இரத்தத்தில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
0.1%
- மோனோசைட் இரத்தத்தில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
1-4%
- லிம்ஃபோசைட் இரத்தத்தில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது?
20-30%
- நன்றாக சாயமேற்றப்பட்ட ரத்த பூச்சைக் கொண்ட கண்ணாடி வில்லையில் உள்ள வெள்ளை அணுக்களின் வேறுபட்ட வகைகளை தனித்தனியாக கணக்கிடும் முறைக்கு என்ன பெயர்?
வகைக் கணக்கெடுப்பு
11TH ZOOLOGY STUDY NOTES |அடிப்படை மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services