11TH ZOOLOGY STUDY NOTES |வேதிய ஒருங்கிணைப்பு| TNPSC GROUP EXAMS

 


  1. பரத்தல் பயம் கோபம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்க்கும் அவை தொடர்பான உயிர் வேதி மாற்றங்களுக்கும் காரணமான ஹார்மோன் எது?

அட்ரினலின்

  1. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருளின் பெயர் என்ன?

ஹார்மோன்கள்

  1. ஹார்மோன்கள் என்பதற்கு என்ன பொருள்?

 தூண்டுதல்

  1. ஹார்மோன்கள் நமது உடலில் கரிமவினையூக்கிகளாகவும் , துணை நொதிகளாகவும் குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்வதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வேதித்தூதுவர்கள்

  1. ஹார்மோன்களில் என்ன உள்ளன?

நீரில் கரையும் தன்மை கொண்ட புரதங்கள் அல்லது பெப்டைடுகள் அல்லது அமைன்கள் மற்றும் கொழுப்பில் கரையும் ஸ்டீராய்டுகள் போன்றவை

  1. மனிதனில் எத்தனை சுரப்பு மண்டலங்கள் உள்ளன?

 2: நாளமுள்ள சுரப்புகள் & நாளமில்லா சுரப்பிகள்

  1. நாளமுள்ள சுரப்பிகள் சுரப்பது?

 நொதிகள், உமிழ்நீர்,வியர்வை சுரப்பிகள்

  1. பல்வேறு ஒருங்கிணைப்பு மண்டலங்கள் மூலம் உடலின் உட்புற சூழலை நிலையாக இருக்க செய்வதற்கு பெயரென்ன?

 உடல் சமநிலை பேணுதல் (Homeostasis)

  1. ஹைப்போதலாமஸ் நரம்பு மண்டலப் பணிகளுடன் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்வதால் அதற்கு என்ன பெயர்?

  நரம்புசார் நாளமில்லாச் சுரப்பி

  1. நாளமில்லா சுரப்பி திசுக்களை கொண்டுள்ள மனித உறுப்புகள் என்னென்ன?

குடல் பாதை எபிதீலியம், கணையம், சிறுநீரகம் , இதயம், இனச்செல்சுரப்பிகள் மற்றும் தாய்சேய் இணைப்புத்திசு

  1. மூளையின் கீழ்ப்புற நீட்ச்சியாக பிட்யூட்டரி சுரப்பியின் தண்டுப் பகுதியில் முடியும் ஒரு கூம்பு வடிவ அமைப்பு எது?

ஹைபோதாலமஸ்

  1. நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி தொகுப்பை இணைப்பது எது ?

ஹைபோதாலமஸ்

  1. எந்த சுரப்பி நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது?

 பிட்யூட்டரி சுரப்பி

  1. பிட்யூட்டரி சுரப்பி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

நாளமில்லாச் சுரப்பிகளின் அரசன்

  1. ஹைபோதாலமஸ் எந்த காரணிகள் மூலம் பிட்யூட்டரி சுரப்பியை கட்டுப்படுத்துகின்றது ?

விடுவிப்பு காரணிகள் மற்றும் தடை செய்யும் காரணிகள்

  1. பிற முதுகெலும்பிகளில் பார்ஸ் இன்டர்மீடியாவின் பங்கு என்ன?

 மெலனோசைட் தூண்டும் ஹார்மோனை சுரக்கின்றது(MSH)

  1. மெலனோசைட் தூண்டும் ஹார்மோனின் பணி என்ன ?

 தோலின் நிற மாற்றத்தை தூண்டுவது

  1. மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைபோதலமிக் ஹைப்போஃபைசிஸ் போர்ட்டல் இரத்தக்குழல் எதனை இணைக்கிறது?

ஹைபோதாலமஸையும் முன் பகுதி பிட்டியூட்டரியையும்

  1. ஹைபோதலமிக் ஹைப்போஃபைசிஸ் அச்சு என்ற நரம்பு கற்றை எதனை இணைக்கிறது ?

ஹைபோதாலமஸையும் பின்பக்க பிட்டியூட்டரியையும்

  1. அமைன்கள் வகை ஹார்மோன்களின் வேதிப் பண்புகள் என்னென்ன?

நீரில் கரையும் தன்மை, சிறியது ,டைரோசின் அல்லது டிரிப்டோஃபேனிலிருந்து உருவானவை

  1. அமைன்கள் வகை ஹார்மோன்களுக்கு எடுத்துக்காட்டு எது?

அட்ரினலின்,நார் அட்ரினலின்,மெலடோனின் மற்றும் தைராய்டு ஹார்மோன்

  1. புரதம்/பெப்டைடுகள் வகை ஹார்மோன்களின் வேதிப் பண்புகள் என்னென்ன?

நீரில் கரையும் தன்மை

  1. புரதம்/பெப்டைடுகள் வகை ஹார்மோன்களுக்கு எடுத்துக்காட்டு?

இன்சுலின் , குளுக்ககான் மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்கள்

  1. ஸ்டீராய்டுகள் வகை ஹார்மோன்களின் வேதிப் பண்புகள் என்னென்ன?

கொலஸ்ட்ராலில் இருந்து உருவானவை பெரும்பாலும் கொழுப்பில் கரைவது

  1. ஸ்டீராய்டுகள் வகை ஹார்மோன்களுக்கு எடுத்துக் காட்டு எது?

கார்டிசோல்,ஆல்டோஸ்டீரோன், டெஸ்டோஸ்டிரோன்,ஈஸ்ட்ரோஜன்,புரோஜெஸ்டீரோன்

  1. உடல் சமநிலை, ரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை மற்றும் திரவ மின்பகுபொருளின் சமநிலை போன்றவற்றை கட்டுப்படுத்துவது எது ?

ஹைபோதாலமஸ்

  1. லிம்பிக் மண்டலத்தின் பகுதி எனும் முறையில் பல்வேறு உணர்ச்சிவசத் துலங்கள்களை கட்டுப்படுத்துவது எது?

ஹைபோதாலமஸ்

  1. நீள் கோள வடிவ பிட்யூட்டரி சுரப்பி மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் எந்த பகுதியில் அமைந்துள்ளது?

ஸ்பீனாய்ட் எலும்பில் உள்ள செல்லா டர்சிகா என்னும் குழி

  1. செல்லா டர்சிகா சிறிய காம்பு போன்ற அமைப்பால் மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன பெயர் ?

இன்ஃபன்யுபுலம்

  1. பிட்யூட்டரியின் விட்டம் எவ்வளவு ?

ஒரு சென்டிமீட்டர்

  1. பிட்யூட்டரியின் எடை எவ்வளவு ?

0.5 கிராம்

  1. பிட்யூட்டரி எத்தனை கப்புகள் ஆளானது ?

 2

  1. பிட்யூட்டரியின் முன் கதுப்பு எதனால் ஆனது?

 சுரப்பு திசுக்கள்

  1. பிட்யூட்டரியின் பின் கதுப்பு எதனால் ஆனது?

 நரம்பு  திசுக்கள்

  1. பிட்யூட்டரியின் முன் கதுப்பின் பெயர் என்ன ?

அடினோ ஹைபோபைசிஸ்

  1. பிட்யூட்டரியின் பின் கதுப்பின் பெயர் என்ன ?

 நியூரோஹைபோபைசிஸ்

  1. கரு வளர்ச்சியின் போது தொண்டைக்குழி எபிதீலியத்தின் உட்குழிவடைந்த பகுதியான ராத் கோயின்பையில் இருந்து பிட்யூட்டரியின் எந்த கதுப்பு தோன்றுகிறது?

முன் கதுப்பு

  1. மூளையின் அடிப்பகுதியில் இருந்து ஹைபோதாலமஸின் வெளிநீட்சியாக எந்த பிட்யூட்டரியின் கதுப்பு தோன்றுகிறது ?

பின்கதுப்பு

  1. பிட்யூட்டரியின் முன் கதுப்பு எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?

மூன்று: பார்ஸ் இன்டர்மீடியா,பார்ஸ் டிஸ்டாலிஸ் மற்றும் பார்ஸ் டியூபராலிஸ்

  1. பிட்யூட்டரியின் பின் கதுப்பு எந்தப் பகுதியால் ஆனது?

பார்ஸ் நெர்வோசா

  1. தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோனின் பணிகள் என்னென்ன?

தைராய்டு தூண்டு ஹார்மோன் சுரப்பை தூண்டுகிறது

  1. கொனடோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

நுண்பை செல்களைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது

  1. கார்டிகோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

அட்ரினோ கார்ட்டிகோட்ரோபிக் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது.

  1. வளர்ச்சி ஹார்மோன் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

வளர்ச்சி ஹார்மோனின் சுரப்பைத் தூண்டுகிறது

  1. புரோலாக்டின் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

புரோலாக்டின் சுரப்பைத் தூண்டுகிறது

  1. லூட்டினைசிங் ஹார்மோன் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

 லூட்டினைசிங் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது

  1. மெலனோசைட்டுகளைத்தூண்டும் ஹார்மோன் விடுவிப்பு ஹார்மோனின் பணி என்ன?

மெலனோசைட்டுகளைத்தூண்டும் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகிறது

  1. வளர்ச்சி ஹார்மோனை தடைசெய்யும் ஹார்மோனின் பணி என்ன?

வளர்ச்சி ஹார்மோன் சுரப்பைத் தடைசெய்கின்றது

  1. புரோலாக்டின் தடைசெய்யும் ஹார்மோனின் பணி என்ன?

புரோலாக்டின் சுரப்பைத் தடை செய்கின்றது

  1. மெலனோசைட்டுகளைத்தூண்டும் ஹார்மோனை தடைசெய்யும் ஹார்மோன் எது?

மெலனோசைட்டுகளைத்தூண்டும் ஹார்மோன் சுரப்பை தடைசெய்கின்றது

  1. பிட்யூட்டரியின் முன் கதுப்பு எத்தனை ஹார்மோன்களை சுரக்கிறது?

ஆறு தூண்டும் ஹார்மோன்கள்

  1. பிட்யூட்டரி முன் கதுப்பு சுரக்கும் ஆறு தூண்டும் ஹார்மோன்கள் என்னென்ன ?

வளர்ச்சி ஹார்மோன் ,தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் ,அட்ரினல் கார்டெக்ஸைத் தூண்டும் ஹார்மோன், ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன்,லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் லூட்டியோட்ராபிக் ஹார்மோன்

  1. கீழ்நிலை விலங்குகளில் பிட்யூட்டரியின் முன்கதுப்பு என்ன ஹார்மோனை சுரக்கிறது?

மெலனோசைட்டுகளைத் தூண்டும் ஹார்மோன்கள்

  1. பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பு என்ன இரு ஹார்மோன்களை சேமித்து தேவையானபோது வெளியேற்றுகிறது ?

ஹைபோதாலமஸின் நரம்பு சுரப்பு செல்களில் சுரக்கும் வாசோப்ப்ரஸ்ஸின் மற்றும் ஆக்சிடோசின்

  1. வளர்ச்சி ஹார்மோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சொமட்டோட்ரோபிக் ஹார்மோன் அல்லது சொமட்டோட்ரோப்பின்

  1. வளர்ச்சி ஹார்மோன் என்ன வகை ஹார்மோன்?

 பெப்டைட் ஹார்மோன்

  1. எந்த ஹார்மோன் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் வளர்சிதைமாற்ற செயல்களையும் மேம்படுத்துகின்றது ?

 வளர்ச்சி ஹார்மோன்

  1. எந்த ஹார்மோன் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் செல்களில் புரத உற்பத்தி விகிதத்தை உயர்த்துகின்றது?

வளர்ச்சி ஹார்மோன்

  1. குருத்தெலும்பு உருவாக்கம் (chondrogenesis) மற்றும் எலும்பு உருவாக்கம் ஆகியவற்றைத் தூண்டுவதுடன் நைட்ரஜன் , பொட்டாசியம் ,பாஸ்பரஸ் ,சோடியம் போன்ற தாது உப்புகளை உடலில் நிறுத்திக் கொள்ள செய்ய உதவுவது எது?

வளர்ச்சி ஹார்மோன்

  1. அடிபோஸ் திசுக்களில் உள்ள கொழுப்பு அமிலங்களை விடுவித்து செல்களின் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு வீதத்தை குறைப்பது?

வளர்ச்சி ஹார்மோன்

  • தைராய்டு தூண்டும் ஹார்மோன் அல்லது தைரோடிராபின் என்ன வகை ஹார்மோன்?

கிளைக்கோபுரத ஹார்மோன்

  1. தைராய்டு தூண்டும் ஹார்மோன் தைராய்டு சுரப்பியை தூண்டி எந்த ஹார்மோன்களை சுரக்கிறது ?

டிரை அயோடோதைரோனின்(T3) மற்றும் தைராக்சின்(T4)

  • TSH சிறப்பு என்ன முறையில் நெறிப்படுத்தப்படுகிறது ?

எதிர்மறை பின்னூட்ட முறை

  1. ரத்தத்தில் தைராக்ஸின் அளவு உயரும் போது ஹைபோதாலமஸ் மற்றும் பிட்டியூட்டரி மீது செயல்பட்டு தைரோட்டிராபின் சிறப்பினை தடை செய்வது எது ?

தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன்

  1. அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன் என்ன வகை ஹார்மோன்?

பெப்டைடு ஹார்மோன்

  • அட்ரினல் சுரப்பியின் புறணி பகுதியை தூண்டி குளுக்கோகார்டிகாய்டுகள் கார்டுகள் மற்றும் தாது கலந்த கார்டிகாய்டுகள் உற்பத்தியை தூண்டுவது எது?
SEE ALSO  11TH ZOOLOGY STUDY NOTES | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்| TNPSC GROUP EXAMS

அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன்

  1. மெலனோசைட் செல்களில் மெலனின் உற்பத்தி ,அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு அமில உற்பத்தி மற்றும் இன்சுலின் உற்பத்தி ஆகியவற்றை எந்த ஹார்மோன் தூண்டுகிறது?

அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன்

  1. ACTHன் உற்பத்தி என்ன முறையில் நெறிப்படுத்த படுகிறது?

 எதிர்மறை பின்னூட்ட முறை

  1. எந்த சுரப்பி மண்டையோட்டின் ஸ்பீனோய்டு எலும்பின் குழிவுப்பகுதியில் மூளையின் கீழ் அமைந்துள்ளது?

பிட்யூட்டரி சுரப்பி

  1. பிட்யூட்டரி சுரப்பி மண்டையோட்டின் ஸ்பீனோய்டு எலும்பின் குழிவுப்பகுதியில்  மூளையின் கீழ் அமைந்துள்ளதால் இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஹைபோதாலமஸ் செரிப்ரி

  1. வாசோப்பிரஸ்ஸினும் ஆக்சிடோசினும் எத்தனை அமினோ அமிலங்களால் ஆனவை ?

 ஒன்பது அமினோ அமிலங்கள்

  1. பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோன் என்ன வகை ஹார்மோன்?

கிளைக்கோபுரத  ஹார்மோன்

  1. இன உறுப்புகளான அண்டகம் மற்றும் விந்தகத்தின் பணிகளை நெறிப்படுத்துவது எது?

பாலிக்கிள் செல்களை தூண்டும் ஹார்மோன் (Follicle stimulating harmone)

  1. பெண்களில் எந்த ஹார்மோன் அண்டகத்தின் மீது செயல்பட்டு கிராஃபியன் பாலிக்கிளை வளர்ப்பதுடன் முதிர்ச்சி அடையவும் தூண்டுகிறது?

 FSH

  1. லுட்டினைசிங் ஹார்மோன் என்னவகையான ஹார்மோன் ?

கிளைக்கோ புரதவகை ஹார்மோன்

  1. லுட்டினைசிங் ஹார்மோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

இடையீட்டு செல்களை தூண்டும் ஹார்மோன்

  1. (ICSH) ஆண்களில் விந்தகத்தின் இடையீட்டு செல்களின் மீது செயல்பட்டு எந்த ஆண்பால் ஹார்மோன் உற்பத்தியை தூண்டுகிறது?

 டெஸ்டோஸ்டிரோன்

  1. பெண்களில் FSH உடன் இணைந்து ஃபாலிக்கிள் செல்களை முதிர்ச்சி அடையச் செய்யும் ஹார்மோன் எது?

லுட்டினைசிங் ஹார்மோன்

  1. அண்டம் விடுபடுதல் ,கார்ப்பஸ் லூட்டியம் பராமரித்தல் மற்றும் அண்டக ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தி வெளியேற்றுதல் போன்ற பணிகளை எது மேற்கொள்கிறது?

லுட்டினைசிங் ஹார்மோன்

  1. எந்த இரு ஹார்மோன்களை சேர்த்து இனப்பெருக்க ஹார்மோன்கள் (gonadotropins) என அழைக்கின்றனர்?

FSH மற்றும் LH

  1. லுட்டியோட்ரோபிக் ஹார்மோன் என்ன வகை ஹார்மோன்?

புரத வகை

  1. லுட்டியோட்ரோபிக் ஹார்மோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

லூட்டியோட்ரோபின்,லாக்டோஜெனிக் ஹார்மோன்,புரோலாக்டின்,மம்மோட்ரோபின்

  1. எந்த ஹார்மோன் பெண்களில் குழந்தை பிறப்புக்கு பின் பால் உற்பத்தியை தூண்டுகிறது?

லுட்டியோட்ரோபிக் ஹார்மோன்

  1. தாய்மார்களுக்கு எந்த ஹார்மோனை அதிகரிப்பதால் LH சுரப்பு மற்றும் அணு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது?

லுட்டியோட்ரோபிக் ஹார்மோன்

  1. லூட்டியோட்ரோபின் பெண்களின் அண்டத்தில் கார்ப்பஸ் லூட்டிய வளர்ச்சியை தூண்டுவதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 லூட்டியோட்ரோபிக் ஹார்மோன்

  1. வாஸோப்ரஸ்ஸின் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஆன்ட்டி டையூரிடிக் ஹார்மோன்

  1. வாஸோப்ரஸ்ஸின் என்ன வகை ஹார்மோன்?

பெப்டைடு வகை

  1. நெஃப்ரான்களின் சேய்மை சுருள் நுண்குழல் பகுதியில் நீர் மற்றும் மின்பகு பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதை மேம்படுத்துவது எது?

ஆன்ட்டி டையூரிடிக் ஹார்மோன்

  1. சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?

வாஸோப்ரஸ்ஸின்

  1. எந்த ஹார்மோனின் மிகை உற்பத்தி ரத்தக்குழாய்களை சுருங்க செய்து ரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றது?

ஆன்ட்டி டையூரிடிக் ஹார்மோன்

  1. ஆன்ட்டி டையூரிடிக் ஹார்மோனின் குறை சுரப்பால் என்ன நிலை ஏற்படுகிறது?

டயாபட்டிஸ் இன்சிபிடஸ்

  1. ஆக்ஃசிடோஸின் என்ன வகை ஹார்மோன்?

 பெப்டைட் ஹார்மோன்

  1. எந்த ஹார்மோன் குழந்தை பிறப்பின்போது கருப்பையை தீவிரமாக சுருங்க செய்வதுடன் பால் சுரப்பியில் பால் உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தை தூண்டுகிறது?

ஆக்சிடோசின்

  1. ஆக்சிடோசின் என்பதற்கு என்ன பொருள்?

துரிதப் பிறப்பு

  1. இரவில் சுரக்கும் ஹார்மோன் எது ?

மெலட்டோனின்

  1. கண்ணின் விழித்திரையில் ஒளிப்படும்போது மெலட்டோனின் உற்பத்தி என்னவாகும்?

குறைகின்றது

  • இயற்கையின் ஒளி மற்றும் இருள் சார்ந்த 24 மணி நேர உயிரியல் செயல்கள் தொடர்பான சுழற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 சர்காடிய சுழற்சி

  1. மனிதனில் பீனியல் சுரப்பி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

எபிபைசிஸ் செர்ப்ரை அல்லது கொனேரியம்

  1. பீனியல் சுரப்பி எதனால் ஆனது?

பாரன்கைமா மற்றும் இடையீட்டுச் செல்கள்

  1. பீனியல் சுரப்பி என்ன ஹார்மோனை சுரக்கிறது ?

மெலட்டோனின் மற்றும் செரோடோனின்

  1. உறக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் எது?

 மெலட்டோனின்

  1. விழிப்பை ஏற்படுத்தும் ஹார்மோன் எது?

செரோடோனின்

  1. இன உறுப்புகளின் பால் முதிர்ச்சி கால அளவை நெறிப்படுத்துதல் ,உடலின் வளர்ச்சிதை மாற்றம் ,நிறமியாக்கம் ,மாதவிடாய் சுழற்சி மற்றும் தடைக்காப்பு செயல்கள் ஆகியவற்றிலும் எந்த ஹார்மோன் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது ?

மெலட்டோனின்

  1. தைராய்டு சுரப்பி என்ன வடிவம் உடையது?

வண்ணத்துப்பூச்சி

  1. தைராய்டு சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

ஓரிணைக் கதுப்புகள் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக் குழலைச் சுற்றிக் குரல்வளைக்குக் கீழ் அமைந்துள்ளது

  1. நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி எது?

 தைராய்டு சுரப்பி

  1. தைராய்டு சுரப்பியின் பக்க கதுப்புகள் இரண்டும் என்ன மையத் திசு தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது ?

இஸ்துமஸ்

  1. தைராய்டு சுரப்பியின் கதுப்புகளில் உள்ள நுண் கதுப்புகள் எதனால் ஆனவை?

அசினி எனும் ஃபாலிகிள்கள்

  1. அசினசின் உட்பகுதி எதனால் ஆனது?

தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம, கிளைக்கோபுரத கலவையால் நிரம்பியுள்ளது

  1. தைராக்ஸின் உற்பத்திக்கு அவசியமானது எது?

அயோடின்

  1. இயல்பான அளவு தைராக்ஸின் உற்பத்திக்கு வாரத்திற்கு எவ்வளவு அயோடின் தேவை?

ஒரு மில்லிகிராம்

  1. நாம் பயன்படுத்தும் சாதாரண உப்பான சோடியம் குளோரைடில் எத்தனை பகுதி சோடியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது?

 1,00,000 பகுதிக்கு 1 பகுதி

  1. தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

முதன்மை வளர்சிதைமாற்ற ஹார்மோன்கள்

  1. தைராய்டு சுரப்பியின் ஃபாலிக்கிள் செல்கள் எந்த இரு ஹார்மோன்களை சுரக்கின்றன?

டிரை அயோடோ தைரோனின் (T3)மற்றும் தைராக்ஸின்(T4)

  1. இணை ஃபாலிகுலார் (பாராஃபாலிகுலார்) செல்கள் அல்லது C செல்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?

தைரோகால்சிடோனின்

  1. ஹைபோதாலமஸில் இருந்து உருவாகும் என்ன ஹார்மோன் பிட்யூட்டரியின் முன் கதுப்பான அடினோஹைபோஃபைஸிஸைத் தூண்டி தைரோட்ரோபின் சுரக்கின்றது?

தைரோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன்

  • அடிப்படை வளர்சிதைமாற்ற வீதம் மற்றும் உடல் வெப்ப உற்பத்தியை நெறிப்படுத்துவது எது?

தைராக்ஸின்

  1. எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சி, ரத்த அழுத்த பராமரிப்பு ,ரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல், புரத உற்பத்தியை தூண்டி உடல் வளர்ச்சியை மேம்படுத்துவதில் எது முக்கியமானது ?

 தைராக்சின்

  1. ஸ்போரோடிக் காய்டர் எனும் முன் கழுத்து கழலை என்பது என்ன வகை நோய்?

மரபியல் நோய்

  1. தைரோகால்சிடோனின் என்பது என்ன வகை ஹார்மோன்?

 பாலிபெப்டைடு ஹார்மோன்

  1. ரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவை நெறிப்படுத்துவது எது?

தைரோகால்சிடோனின்

  1. இரத்தத்தின் கால்சியம் அளவை குறைத்து எந்த ஹார்மோனுக்கு எதிராக தைரோகால்சிடோனின் செயல்படுகிறது?

பாராதார்மோன்

  1. மனிதனின் தைராய்டு சுரப்பியின் பின்பக்க சுவரில் எத்தனை சிறிய பாராதைராய்டு சுரப்பிகள் உள்ளன ?

4

  1. பாராதைராய்டு சுரப்பி என்ன செல்களால் ஆனது?

இரண்டு வகை :முதன்மை செல்கள் மற்றும் ஆக்ஸிஃபில் செல்கள்

  1. பாரா தைராய்டு ஹார்மோனை எந்த செல்கள் சுரக்கின்றது?

முதன்மை செல்கள்

  1. ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை உயர்த்தும் ஹார்மோன் எது?

பாரா தைராய்டு ஹார்மோன் அல்லது பாராதார்மோன்

  1. பாராதார்மோன் என்னவகை ஹார்மோன்?

பெப்டைட் ஹார்மோன்

  1. இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் சமநிலையை பேணும் ஹார்மோன் எது?

பாராதார்மோன்

  1. எந்த ஹார்மோன் எலும்பில் கால்சியம் சிதைவைத் தூண்டி(osteoclast) இரத்தத்தில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவை உயர்த்துகின்றது?

பாராதார்மோன்

  1. பாராதோர்மன் சுரப்பை கட்டுப்படுத்துவது எது ?

இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு

  1. சிறுநீரக நுண்குழலிலிருந்து கால்சியம் உறிஞ்சுதலையும், பாஸ்பேட் வெளியேறுதலையும் மேம்படுத்துவது மற்றும் வைட்டமின் D செயல்பாட்டை தூண்டி சிறுகுடல் கோழைப்படலம் வழியாக கால்சியம் உட்கிரகித்தலை உயர்த்துவது எது?

பாராதார்மோன்

  1. எந்த சுரப்பியின் ஒரு பகுதியில் நாளமில்லா சுரப்பியாகவும் மறுபகுதி நிணநீர் உறுப்பாகவும் செயலாற்றக் கூடியது?

தைமஸ் சுரப்பி

  1. தைமஸ் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

 இதயம் மற்றும் பெருந்தமறிக்கு மேல் மார்பெலும்பிற்குப் பின் அமைந்துள்ளது

  1. தைமஸ் சுரப்பியைத் சூழ்ந்துள்ள காப்சூல் உறை எதனால் ஆனது?
SEE ALSO  11TH ZOOLOGY STUDY NOTES |அடிப்படை மருத்துவ கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்| TNPSC GROUP EXAMS

நார்திசு

  1. தைமஸ் சுரப்பியின் உள்ளமைப்பியலீ அடிப்படையில் எத்தனை பகுதிகளைக் கொண்டுள்ளது?

இரண்டு : வெளிப்பகுதி புறணி மற்றும் உட்பகுதி மெடுல்லா

  1. தைமஸ் சுரப்பி எத்தனை ஹார்மோன்களை சுரக்கின்றது?

நான்கு : தைமுலின்,தைமோசின்,தைமோபாயடின் மற்றும் தைமிக் திரவக் காரணி

  1. செல்வழி தடைகாப்பை அளிக்கும் நோய் தடைக்காப்பு திறன் கொண்ட T லிம்போசைட்டுகளை உற்பத்தி செய்வது எதனுடைய முதன்மைப் பணி?

தைமஸ்

  1. அட்ரினல் சுரப்பிகள் எங்கு அமைந்துள்ளன?

சிறுநீரகத்தின் முன்முனைப்பகுதியில்

  1. அட்ரினல் சுரப்பிகள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சிறுநீரக மேற்சுரப்பிகள்

  1. உள்ளமைப்பியலின்படி அட்ரினல் சுரப்பியின் புறப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

புறணி அல்லது கார்டெக்ஸ்

  1. அட்ரீனல் சுரப்பியின் உட்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மெடுல்லா

  1. திசுவியல் அடிப்படையில் காரடெக்ஸ் எத்தனை பகுதிகளைக் கொண்டது ?

மூன்று பகுதிகள்: சோனா குளாமரூலோசா,சோனா ஃபாஸிகுலேட்டா மற்றும் சோனா ரெடிகுலாரிஸ்

  1. கார்டெக்ஸின் வெளிப்பகுதியான மெல்லிய சோனா குளோமரூலோசா (சுமார் 15%) பகுதி என்ன ஹார்மோனை சுரக்கிறது ?

தாது கலந்த கார்டிகாய்டுகள்

  1. கார்டெக்ஸின் அகன்ற நடுப்பகுதி ( சுமார் 75% ) எது ?

சோனா ஃபாஸிகுலேட்டா

  1. சோனா ஃபாஸிகுலேட்டாவில் என்ன ஹார்மோன்களை சுரக்கின்றன?

குளுக்கோகார்டிகாய்டுகளான கார்டிசோல் ,கார்டிகோஸ்டீரோன் ஹார்மோன்களும் மிகக் குறைந்த அளவு அட்ரினல் ஆன்ட்ரோஜன் மற்றும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள்

  1. சுமார் 10% அளவுடைய உட்பகுதியான சோனா ரெட்டிகுலாரிஸ், எவற்றை சுரக்கின்றது?

அட்ரினல் ஆண்ட்ரோஜன், குறைந்தளவு எஸ்ட்ரோஜன் மற்றும் குளுக்கோ கார்டிகாய்டுகள்

  • சிரிப்பு என்ன ஹார்மோன் சுரத்தலை குறைகின்றது?

தகைப்பு ஹார்மோனான அட்ரினலின்

  1. மெடுல்லா பகுதியில் என்ன ஹார்மோன்கள் சுரக்கின்றன ?

இரண்டு: அட்ரினலின்(எபிநெஃப்ரின்) மற்றும் நார்அட்ரீனலின்(நார் எபிநெஃப்ரின்)

  1. மெடுல்லா பகுதியில் சுரக்கும் இரண்டு ஹார்மோன்களும் என்ன வகையைச் சார்ந்தவை ?

 கேட்டகோலமைன்

  1. குளுக்கோஸ் அல்லாத பொருட்களிலிருந்து குளுக்கோஸ் உருவாக்கம் கொழுப்புச் சிதைவு மற்றும் உயிர்காப்பு நிகழ்வான புரதச்சிதைவு ஆகிய செயல்களை செய்வது எது?

குளுக்கோ கார்டிகாய்டுகள்

  1. இரத்த குழாய் மற்றும் சிறுநீரக செயல்களை பராமரிப்பதில் ஈடுபடுகின்றன?

கார்டிசோல்

  1. உடலின் நீர் மற்றும் மின்பகுப்பு பொருட்களின் சமநிலை ஒழுங்குபடுத்துவது எது?

தாதுகலந்த கார்டிகாய்டுகள்

  1. சோடியம் ,நீர் ஆகியவற்றை மீள உறிஞ்சி பாஸ்பேட் அயனிகள் வெளியேற்றப்படுவதற்கும் மின்பகுபொருள், நீர்ம அழுத்தம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை பராமரிக்கவும் எந்த ஹார்மோன் உதவுகின்றது ?

ஆல்டோஸ்டீரோன்

  1. பூப்பெய்தலின்போது முகம் மற்றும் கை கால் இடுப்புப்பகுதி ரோம வளர்ச்சியில் எந்த ஹார்மோன் பங்காற்றுகின்றது ?

 அட்ரீனல் ஆன்ட்ரோஜன்

  1. நார் அட்ரீனலின் ஹார்மோனின் பொதுவான பணி எது?

 மூளை மற்றும் உடலை தூண்டுவது

  1. எந்த ஹார்மோன் விழிப்பு நிலையில் அதிகமாகவும் உறக்க நிலையில் குறைவாகவும் சுரக்கின்றது?

 நார் அட்ரீனலின்

  1. பறத்தல், பயம், சண்டை ஆகியவற்றோடு தொடர்புடைய அட்ரினலின் மற்றும் நார் அட்ரீனலின் ஹார்மோனை சுரப்பது எது?

அட்ரினல் மெடுல்லா

  1. 3F ஹார்மோன் என அழைக்கப்படுவது எது?

அட்ரினலின் மற்றும் நார் அட்ரீனலின்

  1. கல்லீரலில் உள்ள கிளைகோஜன் சிதைத்து குளுக்கோசாக மாற்றுவதுடன் கொழுப்பு சேமிப்பு செல்களில் உள்ள கொழுப்பை, கொழுப்பு அமிலங்களாகச் சிதைத்து வெளியேற்றுதலையும் தூண்டுவது எது?

அட்ரினலின்

  1. கூட்டுச் சுரப்பி எது?

கணையம்

  1. கணையம் எங்கு அமைந்துள்ளது?

இரைப்பை

  1. கணையம் என்ன வடிவத்தில் உள்ளது?

இலை வடிவம்

  1. கணையத்தில் எத்தனை வித திசுக்கள் உள்ளன?

 இரண்டு அசினித்திசு மற்றும் லங்கார்ஹான் திட்டுகள்

  1. அசினிதிசு எதை சுரக்கின்றது ?

செரிப்பு நொதிகள்

  1. லாங்கர்ஹான் திட்டுகள் எந்த ஹார்மோன்களை சுரக்கின்றன ?

இன்சுலின் மற்றும் குளுக்கோகான்

  1. மனித கணையத்தில் எவ்வளவு லாங்கர்ஹான் திட்டுகள் உள்ளன?

ஒன்று முதல் இரண்டு மில்லியன்

  1. லாங்கர்ஹான் திட்டுகளில் எத்தனை சதவீதம் பீட்டா செல்கள் உள்ளன?

 60%

  1. லாங்கர்ஹான் திட்டுகளில் எத்தனை சதவீதம் ஆல்ஃபா செல்கள் உள்ளன?

 10%

  1. லாங்கர்ஹான் திட்டுகளில் எத்தனை சதவீதம் டெல்டா செல்கள் உள்ளன?

10%

  1. ஆல்ஃபா செல்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?

 குளுக்ககான்

  1. பீட்டா செல்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?

இன்சுலின்

  1. டெல்டா செல்கள் என்ன ஹார்மோனை சுரக்கின்றன?

சொமட்டோஸ்டேடின்

  1. இன்சுலின் என்ன வகையான ஹார்மோன்?

பெப்டைடு

  1. உடலின் குளுக்கோஸ் சமநிலை பேணுதலில் முக்கிய பங்காற்றும் ஹார்மோன் எது?

இன்சுலின்

  1. கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுதல் ,அமினோ அமிலம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை குளுக்கோசாக மாற்றுதல் ஆகிய பணிகளின் வேகத்தை தடுப்பது எது?

இன்சுலின்

  1. இன்சுலின் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹைபோகிளைசீமிக் ஹார்மோன் அல்லது இரத்த சர்க்கரை குறைப்பு ஹார்மோன்

  1. பிளாஸ்மாவில் இன்சுலினின் அரை ஆயுட்காலம் எவ்வளவு?

6 நிமிடங்கள்

  1. இரத்தத்தில் இருந்து இன்சுலின் வெளியேற எடுத்துக்கொள்ளும் நேரம்?

 10-15 நிமிடங்கள்

  1. குளுக்ககான் என்ன வகையான ஹார்மோன்?

பாலிபெப்டைடு ஹார்மோன்

  1. கல்லீரலின் மேல் செயல்பட்டு கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றுவது எது?

குளுக்ககான்

  1. குளுக்ககான் ஹார்மோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் அல்லது இரத்தச் சர்க்கரை உயர்த்தும் ஹார்மோன்

  1. விந்தகம் எந்த செல்களால் ஆக்கப்பட்டுள்ளது?

 விந்து நுண்குழல்கள் மற்றும் இடையீட்டுச் செல்கள் (லீடிக் செல்கள்)

  1. இடையீட்டு செல்களில் உற்பத்தியாகும் பல ஆண்பால் ஹார்மோன்கள் ஒட்டுமொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அன்ட்ரோஜன்

  1. FSH மற்றும் LH தூண்டுதலால் ஆண் இன உறுப்புகளின் முதிர்ச்சியை துவக்குவது எது?

டெஸ்டோஸ்டீரோன்

  1. இரண்டாம் நிலை பால் பண்புகளின் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் எது?

டெஸ்டோஸ்டிரோன்

  1. உடலின் ஒட்டுமொத்த எலும்புகளின் எடையைக் கூட்டுவதுடன் விந்தணுவாக்கத்தையும் தூண்டுவது எது ?

டெஸ்டோஸ்டிரோன்

  1. மனித இன்சுலின் DNA மறுசேர்க்கை தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படுவது எது?

ஹியூமுலின் N

  1. அண்டகம் எவற்றைக் கொண்டுள்ளது ?

அண்டக ஃபாலிக்கிள் செல்கள் மற்றும் ஸ்ட்ரோமா

  1. அண்டத்தை உருவாக்குவதுடன் என்ன ஸ்டீராய்டு ஹார்மோன்களையும் அண்டகம் சுரக்கின்றது?

ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டீரோன்

  1. பருவம் எய்தும் போது பெண் இன உறுப்புகளின் முதிர்ச்சி மற்றும் இரண்டாம் நிலை பால் பண்புகள் வளர்ச்சியில் எந்த ஹார்மோன் பங்காற்றுகின்றது ?

ஈஸ்ட்ரோஜன்

  1. ஈஸ்ட்ரோஜன் எந்த ஹார்மோனுடன் இணைந்து மார்பக வளர்ச்சியை மேம்படுத்துவதுடன் மாதவிடாய் சுழற்சியையும் துவக்குகிறது?

புரோஜெஸ்டீரோன்

  1. கருப்பையில் கரு பதிவதற்கு கருப்பையை எந்த ஹார்மோன் தயார்படுத்துகிறது?

புரோஜெஸ்டீரோன்

  1. கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் மாற்றங்களுக்கும் தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ள ஹார்மோன் எது?

 புரோஜெஸ்டீரோன்

  1. சிறுநீர் கற்ப ஆய்வு முறை மூலம் சிறுநீரில் என்ன இருப்பதைக் கண்டறியலாம்?

HCG(human chorionic gonadotropin)

  1. உடலின் எந்த பகுதியில் உள்ள திசுக்கள் பகுதி நாளமில்லா சுரப்பிகளாக செயல்படுகின்றன?

இதயம் ,சிறுநீரகம் மற்றும் இரைப்பை குடல் பாதை

  1. இதயத்தின் ஏட்ரியல் சுவரில் உள்ள கார்டியோடிசைட்டுகள் எனும் சிறப்பு திசுக்கள் எந்த முக்கிய பெப்டைட் ஹார்மோனை சுரக்கிறது?

ஏட்ரியல் பெப்டைடு ஹார்மோன்

  1. சிறுநீரகத்தில் என்ன ஹார்மோன்கள் சுரக்கின்றன?

 ரெனின்,எரித்ரோபாயடின் மற்றும் கால்சிட்ரியால்

  1. ரெனின் எந்த செல்களில் சுரக்கப்படுகிறது?

ஜக்ஸ்டாகிளாமெருலார் செல்கள்

  1. இரத்தத்தில் ஆஞ்சியோடென்சின் உருவாகும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது எது?

 ரெனின்

  1. எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுவது எது?

எரித்ரோபாயடின்

  1. நெஃப்ரானின் அண்மை சுருள்நுண் குழல் பகுதியில் சுரக்கும் எந்த ஹார்மோன் செயல்படும் நிலையில் உள்ள வைட்டமின் D3 ஆகும்?

 கால்சிட்ரியால்

  1. குடலில் இருந்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உட்கிரகித்தலை உயர்த்துவதுடன் எலும்பு உருவாக்கத்தையும் துரிதப்படுத்துவது எது?

கால்சிட்ரியால்

  1. என்ன ஹார்மோன்களை இரப்பை குடல் பாதையில் உள்ள சிறப்பு நாளமில்லா சுரப்பி செல் தொகுப்பு சுரக்கின்றது?

கேஸ்ட்ரின்,கோலிசிஸ்டோகைனின்,செக்ரிட்டின் மற்றும் இரைப்பைத் தடை பெப்டைடு

  1. இரப்பை சுரப்பிகளைத் தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சினோஜனைத் தூண்டுவது எது?

கேஸ்ட்ரின்

  1. உணவில் உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தை பொறுத்து முன் சிறுகுடலில் என்ன ஹார்மோன் சுரக்கிறது?
SEE ALSO  11TH ZOOLOGY STUDY NOTES | சுவாசம் | TNPSC GROUP EXAMS

கோலிசிஸ்டோகைனின்

  1. எந்த ஹார்மோன் பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்தநீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளி வருவதையும் தூண்டுகிறது?

கோலிசிஸ்டோகைனின்

  1. குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் குறைவாக சுரப்பதால் என்ன ஏற்படுகிறது?

குள்ளத்தன்மை

  1. குள்ளத்தன்மை பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சம் எவ்வளவு உயரம் மட்டுமே இருப்பர்?

4 அடி

  1. குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் உபரியாக சுரந்தால் என்ன தன்மை ஏற்படுகின்றது ?

இராட்சச தன்மை

  1. பெரியவர்களுக்கு வளர்ச்சி ஹார்மோன் அதிகரிப்பதால் என்ன நிலை ஏற்படுகின்றது?

அக்ரோமெகாலி

  1. அக்ரோமெகாலியின் அறிகுறிகள் என்னென்ன?

கை எலும்புகள்,கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சி

  1. குழந்தைகளில் குறை தைராய்டு சுரப்பு காரணமாக எந்த நிலை உண்டாகின்றது?

 கிரிடினிசம்

  1. பெரியவர்களுக்கு தைராய்டு சுரப்பு குறைவதனால் என்ன நிலை ஏற்படுகின்றது?

மிக்ஸிடீமா

  1. மிக்ஸிடீமா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கல்லின் நோய்

  1. மிக்ஸிடீமா நோயின் அறிகுறிகள் என்னென்ன?

சொரசொரப்பான தோல் ,தோலில் ஆங்காங்கே மட்டும் உரோமங்கள், உப்பிய முகம் பிறழ்ந்த இன உறுப்பு செயல்பாடுகள், குறைந்த அடிப்படை வளர்ச்சிதை மாற்ற வீதம் ,பசியின்மை போன்றவை

  1. கிரேவின்‌ நோய் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

தைரோடாக்ஸிகோசிஸ் அல்லது எக்ஸாப்தால்மிக் காய்ட்டர்

  1. கிரேவின்‌ நோய் எதனால் ஏற்படுகின்றது?

தைராக்ஸின் மிகை சுரப்பு

  1. முன்கழுத்துகழலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

மண்டலக்கழலை (Endemic goitre)

  1. முன்கழுத்துகழலை எதனால் ஏற்படுகின்றது?

தைராக்ஸின் குறை சுரப்பு

  1. முன்கழுத்துகழலை நோயின் அறிகுறிகள் என்னென்ன?

தைராய்டு சுரப்பி வீங்குதல் ,சீரத்தில் தைராக்சின் அளவு குறைதல், TSH சுரத்தல் அதிகரிப்பு

  1. பாரா தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதால் எந்த நிலை ஏற்படுகின்றது?

டெட்டனி

  1. டெட்டனி நோயின் அறிகுறிகள் என்னென்ன?

வலிப்பு, தாடைகள் கிட்டிப்ப்போதல், மிகை இதயத் துடிப்பு வீதம், உடல் வெப்பநிலை ,தசை இறுக்கம் போன்றவைகள்

  1. PTH அளவு ரத்தத்தில் உயர்வதால் என்ன நிலை தோன்றுகிறது?

ஹைப்பர்பாரா தைராய்டிசம்

  1. எலும்புகளில் தாது உப்புக்கள் குறைதல், முடிச்சு உருவாகுதல் ,எலும்புகள் மென்மையாதல், தசைச்சுருக்க செயலிழப்பு ,பொதுவான பலவீனம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்றவை எதனால் ஏற்படுகின்றன?

ஹைபர்பாரா தைராய்டிசம்

  1. அட்ரினல் கார்டெக்ஸிலிருந்து குளுக்கோ கார்டிகாய்டுகள் மற்றும் தாதுகலந்த கார்டிகாய்டுகள் குறைவாகச் சுரப்பதால் எந்த நிலை ஏற்படுகின்றது?

அடிசனின் நோய்

  1. அடிசனின் நோயின் அறிகுறிகள் என்னென்ன?

தசை பலமின்மை, குறை இரத்த அழுத்தம், பசியின்மை, வாந்தி தோலில் நிறமிகள் அதிகரிப்பு ,குறைந்த வளர்சிதை மாற்றம் ,குறை உடல் வெப்பநிலை ,இரத்த அளவு குறைதல் ,உடல் எடை இழப்பு போன்றவைகள்

  1. எந்த ஹார்மோனின் குறைவான உற்பத்தியினால் நீர் ,சோடியம், குளோரைடு ஆகியவை அதிக அளவில் சிறுநீரோடு வெளியேறுகின்றன?

ஆல்டோஸ்டீரோன்

  1. பிட்யூட்டரியின் மிகைச்சுரப்பு மற்றும் குளுக்கோகார்டிகாய்டு மிகச்சுரப்பு ஆகியவற்றால் எந்த நிலை ஏற்படுகின்றது?

 குஷிங்கின் குறைபாடு

  1. இன்சுலின் சுரப்பு அதிகரிப்பதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைகின்றது இந்த நிலைக்கு என்ன பெயர்?

ஹைபோகிளைசீமியா

  1. இயல்பான ரத்த குளுக்கோஸ் அளவு உணவுக்கு முன் எவ்வளவு இருக்க வேண்டும்?

70-110 மி.கி/டெ.லி (100ml)

  1. இயல்பான ரத்த குளுக்கோஸ் அளவு உணவுக்கு பின் எவ்வளவு இருக்க வேண்டும்?

110-140 மி.கி/டெ.லி (100ml)

  1. ஹைபர்கிளைசீமியா என்பது என்ன சர்க்கரை நோய்?

டையாபெட்டிஸ் மெலிட்டஸ்

  1. இன்சுலின் குறைவாக சுரப்பதால் எந்த நோய் ஏற்படுகின்றது?

டையாபெட்டிஸ் மெலிட்டஸ்

  1. டையாபெட்டிஸ் மெலிட்டஸ் சர்க்கரை நோய் எத்தனை வகைப்படும்?

இரண்டு :முதல் வகை டையாபெட்டிஸ், இரண்டாம் வகை டையாபெட்டிஸ்

  1. முதல் வகை டையாபெட்டிஸ் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?

இன்சுலின் சார்பு வகை

  1. உடலின் நோய் தாக்கம் அல்லது வைரஸ் தாக்கம் காரணமாக இன்சுலின் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எந்த நிலை தோன்றுகிறது?

இன்சுலின் சார்பு வகை

  1. இரண்டாம் வகை டயாபடீஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

இன்சுலின் சாரா வகை

  1. மிகை சிறுநீர்ப் போக்கு எவ்வாறு அழைக்கப்படும் ?

பாலியூரியா

  1. மிகையான உணவு உட்கொள்ளுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

 பாலிஃபேஜியா

  1. அதிக தாகம் காரணமாக மிகையான நீர்மப் பொருட்கள் அருந்துதல் எவ்வாறு அழைக்கப்படும்?

பாலிடிப்சியா

  1. கொழுப்பு சிதைந்து குளுக்கோஸாக மாறுவதால் தோன்றும் கீட்டோன்கள் என்ன பெயர் ?

கீட்டோசிஸ்

  1. கார்போஹைட்ரேட் அல்லாத பொருட்களான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பிலிருந்து குளுகோஸ் தோன்றுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

குளுக்கோ நியோஜெனிசிஸ்

  1. பிட்யூட்டரியின் பின் கதுப்பு ஹார்மோனான வாசோப்ரஸ்ஸின் சுரப்பு குறைவதால் தோன்றும் குறைபாடு என்ன?

டயாபட்டீஸ் இன்சிபிடஸ்

  1. டயாபட்டீஸ் இன்சிபிடஸின் அறிகுறிகள் என்னென்ன ?

 பாலியூரியா மற்றும் பாலிடிப்சியா

  1. வேதி அமைப்பு அடிப்படையில் ஹார்மோன்கள் எத்தனை வகைகளாக உள்ளன?

3: பெப்டைடு ஹார்மோன்கள், ஸ்டீராய்டு ஹார்மோன்கள் மற்றும் அமினோ அமிலம் சார்ந்த ஹார்மோன்கள்

  1. முதலாம் தூதுவர்களாக செயல்படும் ஹார்மோன்கள் எது?

 பெப்டைடு ஹார்மோன்கள்

  1. செல் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் மாற்றத்தினை எந்த நொதி தூண்டுகிறது ?

அடினைலேட் சைக்லேஸ்

  1. cAMPன் செயலை எந்த நொதி முடிவுக்குக் கொண்டு வருகிறது?

 பாஸ்போ டை எஸ்டிரேஸ்

  1. எளிதில் செல் சவ்வைக் கடந்து செல்லின் அக உணர்வுகள் அல்லது உட்கரு அக உணர்வேற்பிகளுடன் இணையும் ஹார்மோன்கள் எது?

ஸ்டீராய்டு ஹார்மோன்கள்

  1. செல்லின் mRNA மற்றும் புரதத்தின் அளவை திருத்தி அமைப்பதால் எந்த ஸ்டீராய்டு ஹார்மோன்களின் விளைவுகள் நீண்ட காலம் உள்ளன?

ஆல்டோஸ்டீரோன்,ஈஸ்ட்ரோஜன், FSH


11TH ZOOLOGY STUDY NOTES |வேதிய ஒருங்கிணைப்பு| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: