- மண்புழுக்களை கொண்டு கரிம கழிவுகளை சிதைவுறச் செய்து, தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரம்பிய பொருட்களாக மாற்றும் முறைக்கு என்ன பெயர்?
மண்புழு வளர்ப்பு (vermiculture)
- மண்புழுக்களைப் பயன்படுத்தி உரம் தயாரித்தல், மண்ணின் உயிரியத் தீர்வாக்கம் மற்றும் பிற செயல்பாடுகளைக் கொண்ட தொழில்நுட்பங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
வெர்மிடெக்
- உழவனின் நண்பர்கள் என அழைக்கப்படுபவை ?
மண்புழுக்கள்
- மண்புழுக்கள் கழிவுப்பொருட்களை சிதைத்த பின்னர் அவற்றின் உடலில் இருந்து வெளியேறும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்புழு கழிவு (Vermicast)
- மண் புழுக்கள் எத்தனை தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
2 : மண்ணின் மேற்பரப்பில் வாழ்பவை & நிலத்தில் துளைகளை ஏற்படுத்தி வாழ்பவை
- இந்தியாவில் காணப்படும் உள்நாட்டு மண்புழு இனங்கள் என்னென்ன?
பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்,லேம்பிட்டோ மாரிட்டீ,ஆக்டோகீடோனா செர்ரேட்டா
- இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெளிநாட்டு மண்புழுக்கள் வகைகள் என்னென்ன?
ஐசீனியா ஃபெட்டிடா,யூடிரிலஸ் யூஜீனியே
- மண்புழுவானது பிற உயிரிகளுடன் சேர்ந்து உரக்குழியினுள் உற்பத்தி செய்யும் உரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்புழு உரம்
- எந்த வகை மண் புழுக்கள் மண்புழு படுக்கையில் மேற்பரப்பில் விடப்படுகிறது?
ஐசீனியா ஃபெட்டிடா, பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
- மண்புழு படுக்கையில் இருந்து வெளியேறும் நீரானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மண்புழுக்குளியல் நீர் (vermiwash)
- வீணாகும் உணவுப் பொருட்கள் இலை, குப்பை மற்றும் உயிர்திரள் போன்றவற்றை மண்புழு மூலம் மறுசுழற்சி செய்து நல்ல தரமான உரத்தைச் சிறுகலன்களில் தயாரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சிறுகலன் புழு வளர்ப்பு அல்லது வாம்பின்
- மல்பெரி சாகுபடியானது எந்த ஆண்டிலிருந்து சீனாவில் இருந்து திபெத் வழியாக இந்தியாவிற்குள் பரவியுள்ளது?
கி.மு.140
- பட்டு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
- பட்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள நாடு எது?
இந்தியா
- முறையான வளர்ப்பு முறைகளைப் பயன்படுத்தி, வணிக நோக்கில் பட்டுப் புழுவிலிருந்து பட்டு உற்பத்தி செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture)
- மல்பெரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டு பூச்சி இனம் எது?
பாம்பிக்ஸ் மோரி
- மல்பெரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் என்னென்ன?
கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு
- மல்பெரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டுப்புழு விற்கான உணவு எது?
மல்பெரி
- முகா பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டு பூச்சி இனம் எது?
ஆந்தரேயியா அஸ்ஸாமென்சிஸ்
- முகா பட்டு வகையை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் என்னென்ன?
அசாம் ,மேகாலயா ,நாகாலாந்து ,அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர்
- முகா பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டுப்புழு விற்கான உணவு எது?
சம்பா
- டஸர் பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டு பூச்சி இனம் எது?
ஆந்தரேயியா மைலிட்டா
- டஸர் பட்டு வகையை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் என்னென்ன?
மேற்கு வங்கம் ,பீகார், ஜார்கண்ட்
- டஸர் பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டுப்புழு விற்கான உணவு எது?
அர்ஜூன்
- எரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டு பூச்சி இனம் எது?
அட்டாகல் ரிசினி
- எரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் என்னென்ன?
அசாம்,மேகாலயா ,நாகாலாந்து ,அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்
- எரி பட்டு வகையை உற்பத்தி செய்யும் பட்டுப்புழுவிற்கான உணவு எது?
ஆமணக்கு
- முதிர்ந்த பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது என்ன நிறத்தில் காணப்படுகிறது ?
வெளிறிய நிறத்துடன் கூடிய வெண்மை நிறம்
- பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியின் வாழ்நாள் எவ்வளவு?
2-3 நாட்கள்
- பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சி எத்தனை வகையான முட்டைகள் இடுகின்றன?
2 மெதுவாக பொரியும் முட்டைகள் மற்றும் விரைவில் பொரியும் முட்டைகள்
- மித வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் பட்டுப்பூச்சிகள் என்ன வகை முட்டைகளை இடுகின்றன ?
மெதுவாக பொரிக்கும் முட்டைகள்
- இந்தியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வாழும் பட்டுப்பூச்சி இனம் என்ன வகையான முட்டைகளை இடுகின்றன?
விரைவில் பொரியும் முட்டைகள்
- முட்டைகள் எத்தனை நாட்கள் அடைகாத்தலுக்குப் பிறகு இளம் உயிரியாக வெளிவருகின்றன?
10 நாட்கள்
- பட்டுப்பூச்சியானது எதன் வழியே ஒட்டும் தன்மையுள்ள திரவத்தை சுரக்கிறது?
கீழ் தொண்டை பகுதியில் உள்ள ஸ்பின்னரெட் என்னும் பின்னும் அமைப்பின் வழியே வெளியேறுகிறது
- கக்கூன் உருவாக்குவதற்காக புழு சுரந்த ஒரு தொடர்ச்சியான இழை எவ்வளவு நீளம் உடையது?
1000 முதல் 1200 மீட்டர்
- கக்கூன் கூட்டைக் கட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகிறது?
மூன்று நாட்கள்
- கூட்டுப்புழு பருவமானது எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது?
10 முதல் 12 நாட்கள்
- லார்வா நிலையில் எத்தனை முறை தோல் உரிக்கிறது என்பதைப் பொருத்து பாம்பிக்ஸ் மோரி பட்டுப்பூச்சியானது எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
மூன்று வகைகள்: மும்முறை தோலுரிப்பவை ,நான்கு முறை தோல் உரிப்பவை மற்றும் ஐந்து முறை தோல் உரிப்பவை
- மல்பெரி வகை பட்டுப்புழுக்கள் ஒரு வருடத்தில் எத்தனை முறை இனப்பெருக்க தலைமுறையை தோற்றுவிக்கின்றன (வோல்டினிசம்) என்பதனை பொறுத்து அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
மூன்று வகைகள்: யூனிவோல்டைன்(ஆண்டுக்கு ஒரு தலைமுறை),பைவோல்டைன் (ஆண்டுக்கு இரு தலைமுறைகள்), மற்றும் மல்டிவோல்டைன் (இரண்டுக்கும் மேற்பட்ட தலைமுறைகள்)
- பாம்பிக்ஸ் மோரி வகை பட்டுப் புழுக்களுக்கு உணவாக விளங்கும் மல்பெரி தாவரத்தைப் பயிரிடும் முறைக்கு என்ன பெயர்?
மோரிகல்சர்
- மல்பெரி வளர்ப்பிற்கு உகந்த காலம் எது ?
ஜூன், ஜூலை, நவம்பர் மற்றும் டிசம்பர்
- இந்தியா எத்தனை வகையான பட்டுகளை உற்பத்தி செய்கின்றது?
நான்கு: மல்பெரி பட்டு ,டஸர்ப்பட்டு,எரி பட்டு, முகா பட்டு
- இந்தியா எந்த வகை பட்டை அதிகமாக உற்பத்தி செய்கின்றது ?
மல்பெரி பட்டு (91.7%)
- இந்தியா எந்த வகை பட்டை குறைவாக உற்பத்தி செய்கின்றது ?
முகா பட்டு (0.5%)
- இந்தியா மொத்த பட்டு உற்பத்தியில் டஸர் பட்டை எவ்வளவு உற்பத்தி செய்கின்றது ?
1.4%
- இந்தியா மொத்த பட்டு உற்பத்தியில் எரி பட்டை எவ்வளவு உற்பத்தி செய்கின்றது ?
6.4%
- பட்டுக்கூட்டிலிருந்து பட்டு இழையை பிரித்து எடுக்கும் செயல்முறைகள் எத்தனை நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது?
2 : ஸ்டிஃப்ளிங் மற்றும் ரீலிங்
- வழக்கமான பட்டுநூல் சாயமேற்றும் நடைமுறைகளுக்கு பதிலாக புதிய வழி முறையை உருவாக்கியது எது?
சிங்கப்பூரில் உள்ள மூலப் பொருள் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனம்
- பட்டுக்கூட்டினுள் இருக்கும் புழுவினை கொள்ளும் செயல்பாடுகளுக்கு என்ன பெயர்?
ஸ்டிஃப்ளிங்
- கொல்லப்பட்ட கக்கூனிலிருந்து பட்டு இலையை பிரித்தெடுத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரீலிங்
- பட்டு உற்பத்தியில் வேகவைத்தல் எனும் செயல்பாடு 10 முதல் 15 நிமிடம் எந்த வெப்பநிலையில் கொதிநீரில் பட்டுக்கூடுகள் ஊற வைக்கப்படுகின்றன?
95°-97° C
- ஸ்பன் பட்டு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
பட்டு கழிவு
- பெப்ரின் என்ற அபாயகரமான நோயை பட்டுப் புழுக்களுக்கு ஏற்படுத்துபவை எவை?
புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த நொசீமா பாம்பிசிஸ்
- முதிர்ந்த லார்வாக்களிள் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மற்றும் ஸ்டெஃபைலோகாக்கஸ் போன்ற பாக்டீரியங்களால் என்ன ஏற்படுகிறது?
ஃப்ளாச்சேரி
- பாம்பிக்ஸ் மோரி நியூக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ் என்ன நோயை ஏற்படுத்துகிறது?
கிராசரி
- பட்டு உற்பத்தியில் பூஞ்சை நோய்களுள் பொதுவாக காணப்படும் நோய் எது ?
வெள்ளை மஸ்கார்டைன்
- வெள்ளை மஸ்கார்டைன் நோய் எதனால் ஏற்படுகிறது?
பெவெரியா பேசியானா
- தேனீக்களைப் பாதுகாத்து வளர்க்கும் முறைக்குப் பெயர் என்ன?
தேனி வளர்ப்பு (Apiculture)
- அதிக தேன்கூடுகளைக் கொண்ட தேன் வளர்ப்பிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஏபியரிகள்
- ஏப்பிகல்ச்சர் எனும் சொல் எந்த சொல்லில் இருந்து வந்தது?
இலத்தீன் (பொருள் – தேனீ)
- தேனீ வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் பொதுவான ஐந்து இனங்கள் என்னென்ன?
ஏபிஸ் டார்சேட்டா,ஏபிஸ் ஃப்ளோரியா,ஏபிஸ் இன்டிகா,ஏபிஸ் மெல்லிபெரா,ஏபிஸ் ஆடம்சோனி
- தேனீக்களில் எத்தனை வகைகள் உள்ளன?
மூன்று: ராணித் தேனீ ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்கள்
- ஒரு கூட்டில் எத்தனை வேலைக்காரத் தேனீக்களும் ஆண் தேனீக்களும் இருக்கும்?
10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வேலைக்காரத் தேனீக்களும், சில நூறு ஆண் தேனீக்களும்
- இராணித்தேனீ சுரக்கும் என்ன வேதிப்பொருட்களால் கவரப்பட்ட ஆண் தேனீயுடன் இனச் சேர்க்கையில் ஈடுபடும்?
பெரமோன்கள்
- ஒரு ராணித்தேனீயானது தனது வாழ்நாளில் எவ்வளவு முட்டைகளை இடுகின்றது?
15 லட்சம் முட்டைகள் (வாழ்நாள் 2 முதல் 4 வருடங்கள்)
- வேலைக்கார தேனீக்கள் முட்டையிலிருந்து முதிர் உயிரியாக மாற எவ்வளவு நாட்கள் தேவைப்படும்?
21 நாட்கள்
- வேலைக்காரத் தேனீயின் வாழ்நாள் எவ்வளவு ?
ஆறு வாரங்கள்
- தேனியானது மலரிலிருந்து பூந்தேனை உறிஞ்சி வயிற்றில் சேகரித்து எந்த நொதியுடன் சேர்த்து தேனை உருவாக்குகின்றது?
இன்வர்டேஸ்
- கருவுறா முட்டையில் இருந்து உருவாகும் ஆண் தேனியானது எவ்வாறு அழைக்கப்படும்?
ட்ரோன்
- ட்ரோன்கள் ராணித் தேனீயை கருவுற செய்வதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
தேன்கூட்டின் அரசன்
- ராணித் தேனீ தேன் கூட்டை உருவாக்குவதற்காக வேலைக்கார தேனீக்களுடன் பழைய கூட்டிலிருந்து பிரிந்து செல்லுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஸ்வார்மிங் அல்லது மொய்த்திரள்
- இந்தியாவில் எத்தனை வகையான தேன்கூடுகள் புழக்கத்தில் உள்ளன?
2: லாங்ஸ்ட்ரோத் வகை மற்றும் நியூட்டன் வகை
- ஒரு தேனீ எவ்வளவு தேனை சேகரிக்க நமது பூமியின் சுற்றளவை போன்று இரண்டு மடங்கு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது?
435.5 மி.லி
- தேனி முக்கிய உட்கூறுகள் என்னென்ன?
லெவுலோஸ்,டெக்ஸ்ட்ரோஸ்,மால்டோஸ் மற்றும் சில சர்க்கரை பொருட்களுடன் நொதிகள் நிறமிகள் சாம்பல் மற்றும் நீர் போன்றவை
- தேன் மெழுகிலுள்ள பிசுபிசுப்பான வேதிப்பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புரபோலிஸ் (propolis)
- புரபோலிஸ் (propolis) வேதிப்பொருள் எதில் இருந்து எடுக்கப்படுகிறது?
மகரந்தத் தூளிலிருந்து
- தேன்மெழுகு என்ன நிறத்தில் காணப்படும் ?
வெண்மை நிறம்
- தேன்மெழுகு கரோட்டினாய்டு நிறமி கொண்டிருந்தால் என்ன நிறத்தில் காணப்படும்?
மஞ்சள் நிறம்
- அரக்கு பூச்சிகளை வளர்த்து அதிக அளவில் அரக்கினை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் எவ்வாறு அழைக்கப்படும்?
அரக்கு வளர்ப்பு
- எந்த பூச்சியிலிருந்து அரக்கு தயாரிக்கப்படுகிறது?
டக்கார்டியா லேக்கா
- டக்கார்டியா லேக்கா பூச்சி முன்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
லேக்சிஃபர் லேக்கா
- அரக்கு பூச்சிகளின் ஓம்புயிரி தாவரங்கள் எது?
கருங்காலி ,கருவேலை, மற்றும் கும்பாதிரி
- அரசின் பொருளாதார முக்கியத்துவம் என்ன?
மின்சாரத்துறை ,முத்திரை மெழுகு தயாரித்தல் ,காலணி தயாரிப்பு தோல்பொருட்களை பளபளப்பாக்க, புகைப்படங்கள் ,செதுக்கி தயாரிக்கும் பொருட்கள் போன்றவைகளில்
- ஒட்டுண்ணியாக வாழும் ஒரு உயிரின் மீது மற்றொரு ஒட்டுண்ணி வாழுதல் அல்லது ஒட்டுண்ணி மேல் ஒட்டுண்ணியாக வாழும் தன்மை எவ்வாறு அழைக்கப்படும்?
ஹைபர் பாராசைட்டிசம்
- நீர் உயிரி பயிர் வளர்ப்பு(aquaponics) தொழில்நுட்பமானது எந்த இரு முறைகள் இணைந்தது?
நீர் வாழ் உயிரி வளர்ப்பு (aquaculture) மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பு (hydroponics)
- நீர் உயிரி பயிர் வளர்ப்பு(aquaponics எத்தனை முறைகள் காணப்படுகிறது?
ஆழ் நீர் உயிரி பயிர் வளர்ப்பு, ஊடக அடிப்படை முறை, ஊட்ட பொருள் படல தொழில்நுட்பம், செங்குத்து நீரோட்ட வளர்ப்பு
- எந்த ஆண்டு தமிழகத்தில் மீன் வளர்ப்பு குறிப்பிடும்படியான கவனத்தைப் பெற்றது?
1911
- ஆதார வளங்கள் அடிப்படையில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு எத்தனை வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது?
மூன்று : நன்னீர் உயிரி வளர்ப்பு ,கழிமுக நீர் உயிரி வளர்ப்பு மற்றும் கடல்நீர் உயிரி வளர்ப்பு
- மீன் வளர்த்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Pisciculture
- எவ்வளவு உப்புத்தன்மை கொண்ட நீரில் விலங்குகளை வளர்த்தல் கழிமுக உயிரிகள் வளர்த்தல் எனப்படும்?
0.5-30 ppt
- கடலில் நடைபெறும் மீன்பிடி செயல்பாடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கடல் மீன் பிடித்தல்
- இந்தியாவில் பிடிக்கப்படும் கடல் மீன்களின் 80% எந்த கடற்கரையிலிருந்து பிடிக்கப்படுகின்றன?
மேற்கு கடற்கரை
- எவ்வளவு உப்புத்தன்மை கொண்ட நீரில் விலங்குகளை வளர்த்தல் கடல்வாழ் உயிரிகள் வளர்த்தல் எனப்படும்?
30-35 ppt
- எவ்வளவு உப்புத்தன்மை கொண்ட நீரில் விலங்குகளை வளர்த்தல் மிகை உப்பு நீர் உயிரிகள் வளர்த்தல் எனப்படும்?
36-40 ppt
- வளர்ப்பு மீன்கள் எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
மூன்று :உள்நாட்டு அல்லது உள்ளூர் நன்னீர் மீன் வகைகள் ,நன்னீரில் வாழும் தன்மை கொண்ட உவர்நீர் மீன்கள் ,வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள்
- எந்த குளத்தில் மீன் குஞ்சுகள் வளர்ந்து விரலிகளாகின்றன?
நாற்றங்கால் குளம்
- கூட்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கும் மீன்கள் என்னென்ன ?
கட்லா கட்லா ,லேபியோ ரோஹிட்டா,சிர்ரைனா மிர்காலா
- எந்த மீன் இனங்கள் அதிக அமினோ அமில செறிவை கொண்டுள்ளன?
சார்டைன் (மத்தி),மாக்கெரல்(கானாங்கெழுத்தி),டூனா(சூறை),ஹெர்ரிங்
- மீன்களில் என்ன சத்துக்கள் நிறைந்துள்ளன ?
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் ,மெக்னீசியம், பாஸ்பரஸ் ,பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, அயோடின் மற்றும் தாமிரம்
- மீன் எண்ணெய் மீனின் எந்த பகுதியில் இருந்து பெறப்படுகிறது?
கல்லீரல் மற்றும் உடல்
- மீன் எண்ணெயில் எது மிகுந்துள்ளது?
வைட்டமின் A மற்றும் D
- மீனின் உடலில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள கழிவுகளிலிருந்து உருவாக்கும் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?
மீன் மாவு
- கெண்டை மற்றும் கெழுத்தி போன்ற மீன்களில் உலர்ந்த ,பதப்படுத்தப்பட்ட காற்றுப் பைகளில் இருந்து பெறப்படும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இசின்கிளாஸ்
- பதப்படுத்தப்பட்ட காற்றுப் பைகளை கொதி நீரில் கரைக்கும் போது என்ன உருவாகின்றது?
ஒட்டும் தன்மை பெற்ற ஜெலாட்டின்
- ஒட்டும் தன்மை பெற்ற ஜெலாட்டின் எதற்கு பயன்படுகிறது?
ஒயின் ,பீர் வினிகர் போன்ற பொருட்களை சுத்திகரிக்க
- நீர்வாழ் கிரஸ்டேஷியன்களில் மிக முக்கியமானது எது?
இறால்
- இறால் பிடிப்பு வகைகள் என்னென்ன?
ஆழம் குறைந்த நீரில் இறால் பிடிப்பு, கழிமுக அல்லது உப்பங்கழிகளில் இறால் படிப்பு, நன்னீர் இறால் படிப்பு, கடல் இறால் பிடிப்பு
- எந்த இறால் வகை பொதுவாக ஆறுகள் வயல்கள் குறை உப்புத்தன்மை கொண்ட கழிமுகம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன?
மேக்ரோபிராக்கியம் ரோஸன்பெர்ஜி
- இறால் பொரிப்பு குளத்தில் எவ்வளவு வெப்பநிலை மற்றும் pah இருக்குமாறு பராமரிக்க வேண்டும்?
24°C மற்றும் 7-8 pH
- நம் நாட்டில் முதன் முதலில் எந்த ஆண்டு எங்கு முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது?
தூத்துக்குடி 1973
- முத்து சிற்பிகள் எந்த பகுதிகளில் கிடைக்கின்றன ?
கன்னியாகுமரியின் கடற்பகுதி மற்றும் கட்ச் வளைகுடா
- எந்த பேரினத்தை சேர்ந்த சிப்பிகள் உயர்தர முத்துக்களை உருவாக்குகின்றன?
பிங்டேடா
- உயர் மதிப்பு முத்துக்களுக்கு என்ன பெயர்?
லிங்கா முத்துக்கள்
- சிப்பியின் ஓட்டிற்குள் வெளிப்பொருள் நுழைந்தால் மேட்டில் எபிதீலியமானது வெளி பொருளின் மீது பை போல் சூழ்ந்து அடர்த்தியான எந்த பொருளை சுரக்கின்றது?
நேக்ரி
- முத்தின் பகுதி பொருட்களில் நீர் எவ்வளவு சதவீதத்தை உடையது?
2-4%
- முத்தின் பகுதி பொருட்களில் கால்சியம் கார்பனேட் எவ்வளவு சதவீதத்தை உடையது?
90%
- முத்தின் பகுதி பொருட்களில் கரிமப் பொருட்கள் எவ்வளவு சதவீதத்தை உடையது?
3.5-5.9%
- முத்தின் பகுதி பொருட்களில் நீர் எவ்வளவு சதவீதத்தை உடையது?
2-4%
- முத்தின் பகுதி பொருட்களில் கசடுகள் எவ்வளவு சதவீதத்தை உடையது?
0.1-0.8%
- நான்கு முதல் ஆறு தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கு இடையே இனக்கலப்பு செய்வது எவ்வாறு அழைக்கப்படும்?
உள்இனக்கலப்பு
- ஒரே இனத்தை சேர்ந்த சந்ததி தொடர்பில்லாத விலங்குகளுக்கு இடையே இனக்கலப்பு செய்வது எவ்வாறு அழைக்கப்படும்?
வெளியினக்கலப்பு
- விந்து நீர்மம் செயற்கை விந்தூட்டத்திற்காக நீண்ட தூரம் எடுத்துச் செல்லவும் நீண்டகாலம் சேமித்து வைக்கவும் உறைந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனை மெதுவாக அறையின் வெப்பநிலைக்கு கொண்டு வருவதலுக்கு என்ன பெயர்?
உருகுதல் (Thawing)
- MOETன் விரிவாக்கம் என்ன?
Multiple ovulation embryo transfer technology
- இந்தியாவில் எத்தனை கால்நடை இனங்களும் எருமை இனங்களும் எத்தனை உள்ளன ?
26 கால்நடை இனங்கள் ,ஆறு எருமை இனங்கள்
- கால்நடைகள் அவற்றின் பயன்கள் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
மூன்று : கறவை இனங்கள், இழுவை இனங்கள் மற்றும் இரு பயன்பாட்டு இனங்கள்
- கறவை இன மாடுகளுக்கு எடுத்துக்காட்டு?
சிந்தி, கிர் ,சாஹிவால், ஜெரிசி, பிரவுன் ஸ்விஸ்,ஹோல்ஸ்டீன்
- இழுவை இன மாடுகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
காங்கேயம் ,மால்வி
- உலக கின்னஸ் பதிவுகளின்படி மிகச்சிறிய பசுவினம் எது?
வெச்சூர் இனம் (சராசரி நீளம் 124 சென்டிமீட்டர் சராசரி உயரம் 87 சென்டிமீட்டர்)
- வெச்சூர் கிராமம் எங்கு உள்ளது?
கோட்டை மாவட்டம் ,கேரளா
- இரு பயன்பாட்டு கால்நடை இனங்கள் எடுத்துக்காட்டு?
ஓங்கோல் ஹரியானா
- ஜமுனாபாரி எனும் நல்ல பால் தரும் பசு இனம் எங்கு உள்ளது ?
கங்கை மற்றும் யமுனை நதிக்கரை பகுதிகள்
- பீடல் எனும் நல்ல பால் தரும் பசு இனம் எங்கு உள்ளது ?
பஞ்சாப்
- பார்-பாரி எனும் நல்ல பால் தரும் பசு இனம் எங்கு உள்ளது ?
உத்திரப் பிரதேசம்
- பாலில் என்ன சத்துக்கள் அடங்கியுள்ளன?
வைட்டமின் A,B1,B2
- கோழிகள் ,வாத்துகள் ,வான்கோழிகள், காடை மற்றும் கினி கோழிகள் போன்றவற்றை வளர்த்தல் மற்றும் எண்ணிக்கையை பெருக்குதல் எனும் பொருளை குறிக்கும் ஆங்கில வார்த்தை எது?
poultry
- கோழிகள் அவற்றின் பயன்பாட்டினைப் பொறுத்து எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
ஐந்து வகைகள்: முட்டையிடுபவை ,கறிக்கோழி அல்லது இறைச்சி வகை ,இரு பயன்பாட்டு வகை,விளையாட்டு வகை மற்றும் அலங்கார வகை
- லெக்ஹார்ன் கோழி எங்கு தோன்றிய கோழி இனமாகும் ?
இத்தாலி
- இந்தியாவில் வணிகரீதியில் புகழ்பெற்ற இனம் எது?
லெக்ஹார்ன்
- லெக்ஹார்ன் கோழி இனம் எத்தனை மாதங்களில் முட்டையிட துவங்குகின்றன?
ஐந்து முதல் ஆறு மாதங்கள்
- மேற்கு வங்கத்தில் முதன்மையாக காணப்படும் கோழி இனம் இது?
சிட்டகாங்
- சிட்டகாங் கோழிகள் என்ன நிறத்தில் காணப்படுகின்றது ?
பொன் நிறம் அல்லது வெளிர் மஞ்சள்
- பிராய்லர் வகைக் கோழிக்கு எடுத்துக்காட்டு எது?
வெள்ளை பிளிமத் ராக்
- வெள்ளை பிளிமத் ராக் எந்த நாட்டைச் சேர்ந்த கறிக்கோழி வகை?
அமெரிக்கா
- இரு பயன்பாட்டு கோழி இனங்களுக்கு எடுத்துக்காட்டு எவை?
பிரம்மா
- விளையாட்டு வகை கோழி இனங்களுக்கு எடுத்துக் காட்டு எவை?
அசீல் கோழி இனம்
- அசீல் கோழி இனம் என்ன நிறத்துடன் காணப்படும்?
வெள்ளை அல்லது கருமை நிறம்
- அலங்கார வகை கோழி இனத்திற்கு எடுத்துக்காட்டு எவை?
சில்க்கி
- கோழிக்குஞ்சின் அடைகாத்தல் காலம் எவ்வளவு?
21 முதல் 22 நாட்கள்
- பொரித்து வெளிவந்த சிறிய கோழிக்குஞ்சுகளை நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு கவனத்துடன் மேலாண்மை செய்யும் முறை எவ்வாறு அழைக்கப்படும்?
பேணிக்காத்தல்
- பறவை எச்சத்தில் என்ன உயிர்சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளன?
நைட்ரஜன் ,பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட்
- பறவைகளை தாக்கும் நோய்கள் என்னென்ன?
ராணிகெட் ,காக்சிடையோசிஸ் மற்றும் கோழி அம்மை
- வாத்து வளர்ப்பு நம் நாட்டுப் பறவைகள் வளர்ப்பின உயிர் தொகையில் எவ்வளவு சதவீதத்தை பெற்றுள்ளது?
6%
- உள்நாட்டு வாத்து இனங்கள் என்னென்ன?
இந்தியன் ரன்னர் மட்டும் சைலட்மெட்டா
- வெளிநாட்டு வாத்து இனங்கள் என்னென்ன?
மஸ்கோரி,பெகின்,அய்ல்ஸ்பெரி மற்றும் கேம்பெல்
- பயன்பாட்டின் அடிப்படையில் வாத்தினங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன ?
மூன்று:கறிக்காக பயன்படும் இனங்கள், முட்டை உற்பத்திக்காக பயன்படும் இனங்கள், இரு பயன்பாட்டு இனங்கள்
11TH ZOOLOGY STUDY NOTES |வணிக விலங்கியலின் போக்குகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services