- நீர் வாழ் விலங்குகளின் சுவாச வீதம் தரை வாழ் விலங்குகளைக்காட்டிலும் வேகம் மிக்கதாக இருப்பதற்கான காரணம் என்ன?
நீரில் கரைந்துள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவு
- எளிய உடல் அமைப்புடைய கடற்பஞ்சுகள் ன,குழியுடலிகள் மற்றும் தட்டைப்புழுக்கள் போன்றவற்றில் வாயுப் பரிமாற்றம் என்ன முறையில் நடைபெறுகிறது?
உடல் பரப்பின் வழியாக எளிய விரவல் முறை
- மண்புழுக்களில் எதன்மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது ?
ஈரப்பதம் உடையதோல்
- பூச்சிகளில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது ?
மூச்சுக் குழல்கள்
- நீர்வாழ் கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகளில் சுவாசித்தல் எதன்மூலம் நிகழ்கிறது ?
செவுள்கள்
- இருவாழ்விகள் ,ஊர்வன பறப்பன மற்றும் பாலூட்டிகளில் எதன் மூலம் சுவாசித்தல் நடைபெறுகிறது ?
ரத்தக் குழாய்கள், நுரையீரல்
- நுரையீரல் ,வாய்க்குழி மற்றும் அவற்றின் ஈரமான தோலை சுவாசத்துக்கு பயன்படுத்துவது எது?
தவளைகள்
- மனித சுவாச மண்டலத்தில் எந்தப் பகுதி கடத்தும் பகுதி ஆகும்?
புறநாசிப்பகுதி முதல் முனை மூச்சுக்கிளை நுண்குழல் வரை
- காற்று நுண்ணறை மற்றும் நாளங்கள் ஆகியவை எவ்வாறு அழைக்கப்படும் ?
சுவாசப்பகுதி
- சுவாச பாதைக்குள் நுழையும் காற்றானது எதன் மூலம் வடிகட்டப்படுகிறது ?
உள் படலத்தில் உள்ள மயிரிழைகள்,கோழைப்படலம்
- மூச்சுக் கிளைக் குழல் மற்றும் மூச்சுக்கிளை நுண்குழல்களின் சுவர்களில் உள்ள குறுயிழை எபிதீலியச் செல்கள் எதனை சுரக்கின்றன ?
கோழைப்பொருள்
- கோழைப் படலத்தில் உள்ள எந்த செல்கள் அதிக கிளைக்கோபுரதங்களை கொண்ட வழுவழுப்பான கோழயை சுரக்கின்றன?
கோப்பை செல்கள்(goblet cells)
- மூச்சுக்குழலில் சுவரில் குருத்தெலும்பினாலான என்ன வடிவ குருத்தெலும்பு அமைந்துள்ளன?
C வடிவம்
- காற்றுப் பைகளில் உள்ள வாயு விரவல்களுக்கான சவ்வு எத்தனை அடுக்குகளால் ஆனது ?
மூன்று அடுக்குகள்
- நுண்காற்றுப் பையின் மேற்புறத்தில் காணப்படும் மெல்லிய செல்களற்ற புரதம் மற்றும் பாஸ்போ லிப்பிடுகள் எவை?
மேற்பரப்பிகள்(Surfactants)
- குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் காற்றுப்பைகள் குறைவான அளவே மேற்பரப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு என்ன நோய் ஏற்படுகிறது?
சிசு மூச்சுத் திணறல் நோய் குறியீடு(newborn respiratory distress syndrome)
- நுரையீரல்களை சுற்றியுள்ள எந்த இரட்டை சவ்வு மீள் தன்மையுடைய பல அடுக்கு இணைப்புத் திசுக்களையும் ரத்த நாளங்களையும் கொண்டது?
புளூரா
- புளூரல் படலங்களுக்கு இடையே என்ன திரவம் நிறைந்துள்ளது?
புளூரல் திரவம்
- நுரையீரல்கள் சுருங்கி விரியும் போது உராய்வை குறைக்க எந்த திரவம் உதவுகிறது?
புளூரல் திரவம்
- வளிமண்டலத்திற்கும் நுரையீரலுக்இஉம் இடையே நடைபெறும் காற்று பரிமாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மூச்சுவிடுதல்
- மூச்சு விடுதல் எத்தனை நிலைகளில் நடைபெறுகிறது ?
இரண்டு உட்சுவாசம் மற்றும் வெளி சுவாசம்
- வளிமண்டலத்தில் உள்ள காற்று நுரையீரலுக்குள் செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
உட்சுவாசம்
- காற்று நுண்ணறைகளில் உள்ள வாயு நுரையீரல்களை விட்டு வெளியேற்றப்படுவது குறிப்பது எது?
வெளிசுவாசம்
- தசைநார்கள் எதில் காணப்படுவதில்லை ?
நுரையீரல்கள்
- எந்த திசுப்படலமானது மார்பறையை வயிற்றறையில் பிரிக்கிறது?
உதரவிதானம்
- இயல்பான நிலையில் உதரவிதானம் என்ன நிலையில் காணப்படுகிறது?
மேல்நோக்கி குவிந்த நிலை
- நுரையீரலில் உள்ள காற்றின் அழுத்தம் வளிமண்டல காற்றழுத்தத்தை விட குறைவதால் என்ன நடைபெறுகிறது ?
உட்சுவாசம்
- நுரையீரலிலுள்ள காற்றழுத்தம் வளிமண்டல காற்றழுத்தத்தை விட அதிகரிப்பதால் என்ன நிகழ்கிறது ?
வெளிசுவாசம்
- ஒரு ஆரோக்கியமான மனிதனின் சராசரி சுவாசம் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு?
12 முதல் 16 முறை
- ஒருவரின் நுரையீரல் செயல்பாட்டை அறிவதற்கான மருத்துவ கணக்கீட்டில் சுவாசத்தின் போது பங்கேற்கும் காற்றின் கொள்ளளவை அளக்க என்ன கருவி பயன்படுகிறது?
ஸ்பைரோமீட்டர் (மூச்சீட்டுமானி)
- இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உள்ளேறும் காற்று அல்லது வெளியேறும் காற்றின் கொள்ளளவு என்ன?
மூச்சுக்காற்று அளவு
- மூச்சுக்காற்று அளவு சுமார் எவ்வளவு?
500 மில்லி லிட்டர்
- ஒரு சாதாரண மனிதனால் ஒவ்வொரு நிமிடமும் சுமார் எவ்வளவு அளவுள்ள காற்றை உள்ளிழுக்கவோ அல்லது வெளியேற்றவோ இயலும்?
6,000 முதல் 8,000 மில்லிலிட்டர்
- உள்மூச்சின்போது போது வலிந்து உள்ளிழுக்கப்படும் கூடுதல் காற்றின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு
- உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு எவ்வளவு?
சுமார் 2500 முதல் 3000 மில்லி லிட்டர்
- விசையுடன் வலிந்து வெளியேற்றப்படும் கூடுதல் காற்றின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வெளிசுவாச சேமிப்புக் கொள்ளளவு
- வெளிசுவாச சேமிப்புக் கொள்ளளவு எவ்வளவு ?
1000 முதல் 1100 மீட்டர் வரை
- விசையுடன் வெளியேற்றப்பட்ட வெளிமூச்சிற்க்கும் பிறகும் நுரையீரல்களில் தங்கிவிடும் காற்றின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எஞ்சிய கொள்ளளவு
- எஞ்சிய கொள்ளளவு எவ்வளவு?
சுமார் 1100 முதல் 1200 மில்லி லிட்டர்
- அதிகபட்சம் ஒரு உட்சுவாசத்திற்கு பிறகு வெளியேற்றப்படும் காற்றின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வாறு அழைக்கப்படும்?
உயிர்ப்பு திறன் அல்லது முக்கிய திறன்
- காற்றை அதிகபட்சமாக உள்ளிழுத்து பின் அதிகபட்சமாக வெளியேற்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?
உயிர்ப்புத்திறன்
- TVன் விரிவாக்கம் என்ன?
Tidal volume
- IRVன் விரிவாக்கம் என்ன?
Inspiratory reserve volume
- ERVன் விரிவாக்கம் என்ன?
Exploratory reserve volume
- RVன் விரிவாக்கம் என்ன?
Residual volume
- VCன் விரிவாக்கம் என்ன?
Vital capacity
- இயல்பான வெளிசுவாசத்தை தொடர்ந்து,ஒரு மனிதன் உள்ளிழுக்கும் காற்றின் மொத்த கொள்ளளவிற்கு என்ன பெயர்?
உட்சுவாசத்திறன்
- இயல்பான உள்சுவாசத்தைத் தொடர்ந்து, ஒரு மனிதன் வெளியிடக்கூடிய காற்றின் மொத்த கொள்ளளவிற்கு என்ன பெயர்?
வெளி சுவாசத் திறன்
- விசையுடன் உள்ளிழுக்கப்பட்ட உள்சுவாசத்தை தொடர்ந்து நுரையீரல் ஏற்றுக்கொள்ளும் காற்றின் மொத்த அளவு எவ்வாறு அழைக்கப்படும்?
மொத்த நுரையீரலின் கொள்ளளவுத் திறன்
- மொத்த நுரையீரலின் கொள்ளளவுத் திறன் அளவு என்ன?
6000 லிட்டர்
- நுரையீரல்களின் மீள் தன்மைக்கு காரணமாக இருப்பது எது?
எலாஸ்டின்
- நுரையீரல் அடைப்பு மற்றும் மார்புச்சளி நோயால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரல்களில் என்ன நொதி சுரந்து எலாஸ்டின் மீது செயல்பட்டு அவற்றை சிதைத்து விடுகின்றன?
எலாஸ்டேஸ்
- ஒரு நிமிடத்தில் சுவாசப் பாதையில் செல்லும் காற்றின் அளவிற்கு என்ன பெயர்?
நிமிட சுவாச கொள்ளளவு
- இயல்பான மூச்சுக்காற்று அளவு எவ்வளவு?
500 மில்லி லிட்டர்
- இயல்பான சுவாச விகிதம் எவ்வளவு?
12 முறை/ நிமிடம்
- நிமிட நுரையீரல் கொள்ளளவு எவ்வளவு?
6 லிட்டர்/நிமிடம்
- காற்று பரிமாற்ற பணியில் ஈடுபடாமல் வெளியேற்றப்படுவது எவ்வாறு அழைக்கப்படும் ?
பயனற்ற இடம்
- பயனற்ற இடத்தின் மொத்த கொள்ளளவு எவ்வளவு?
சுமார் 150 மில்லி லிட்டர்
- வாயு பரிமாற்றத்திற்கான முதன்மை சுவாச பரப்பு எது?
காற்று நுண்ணறைகள்
- ஒவ்வொரு வாயும் தனிப்பட்ட அளவில் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பகுதி அழுத்தம்
- திசுக்களில் கார்பன் டை ஆக்சைடின் கரைதிறன் ஆக்சிஜனை விட எத்தனை மடங்கு அதிகம்?
20 முதல் 25 மடங்கு அதிகம்
- ஹீமோகுளோபின் என்ன புரத வகையைச் சார்ந்தது?
இணைவு புரதவகை
- ஹீமோகுளோபினில் இரும்பு சத்து அடங்கிய நிறமிப்பகுதி எவ்வளவு?
4%
- ஹீமோகுளோபினின் மூலக்கூறு எடை எவ்வளவு?
68,000 டால்டன்
- இரும்பு அணுக்கள் ஒவ்வொன்றும் எத்தனை ஆக்சிஜன் மூலக்கூறு உடன் இணையும் தன்மையுடையது?
ஒரு ஆக்ஸிஜன்
- ஹீம் பகுதி பொருளான இரும்பு இயல்பான ஃபெரஸ் நிலையில் இல்லாமல் ஃபெரிக் நிலையில் இருந்தால் அதற்கு என்ன பெயர்?
மெட்ஹீமோகுளோபின்
- ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை எத்தனை சதவீதத்திற்கும் குறைவாகவே மெட்ஹீமோகுளோபின்கள் உள்ளன?
மெட்ஹீமோகுளோபின்கள்
- எந்த இரு வழிகளில் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இரத்தத்தின் வழியே கடத்தப்படுகின்றன?
ரத்த சிவப்பு அணுவின் ஹீமோகுளோபினோடு இணைந்த நிலை மற்றும் பிளாஸ்மாவில் கரைந்த நிலை
- எத்தனை சதவீத ஆக்ஸிஜன் மட்டுமே கரைந்த நிலையில் கடத்தப்படுகிறது?
3%
- எத்தனை சதவீதம் ஆக்சிஜன் ஹீமோகுளோபினோடு எளிதில் பிரியும் வகையில் பிணைக்கப்பட்டு ஆக்சிஹீமோகுளோபின் வடிவத்தில் கடத்தப்படுகிறது?
97%
- ஒவ்வொரு ஹீமோகுளோபின் மூலக்கூறும் அதிகபட்சம் எத்தனை ஆக்சிஜன் மூலக்கூறுகளை ஏற்கின்றன?
4
- ஆக்சிஹீமோகுளோபின் உருவாவதற்கான சாதக சூழல்கள் என்னென்ன?
ஆக்சிஜன் பகுதி அழுத்தம் ,குறைவான கார்பன்-டை-ஆக்சைடு பகுதி அழுத்தம், குறைவான வெப்பநிலை மற்றும் குறைவான ஹைட்ரஜன் அயனி அடர்த்தி
- ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து ஆக்ஸிஜன் பிரிவதற்கான சாதக சூழல் என்ன?
குறைவான ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம் ,அதிக கார்பன்-டை-ஆக்சைடு பகுதி அழுத்தம் ,அதிக ஹைட்ரஜன் அயனி அடர்த்தி மற்றும் அதிக வெப்பம்
- இயல்பான உடற்செயலியல் நிகழ்வின்போது ஆக்சிஜன் நிறைந்த ஒவ்வொரு 100 மில்லி லிட்டர் ரத்தமும் சுமார் எவ்வளவு அளவு ஆக்சிஜனை திசுக்களுக்கு அளிக்கிறது?
5 மில்லி லிட்டர்
- செல்களில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தினால் வெளிப்படும் கார்பன்டை ஆக்சைடு திசுக்களில் இருந்து நுரையீரலுக்கு எத்தனை வழிகளில் ரத்தம் கடத்துகிறது ?
மூன்று வழிகள்: பிளாஸ்மாவில் கரைந்த நிலை, ஹீமோகுளோபினுடன் இணைந்து நிலை மற்றும் இரத்த பிளாஸ்மாவில் பைகார்பனேட் அயனிகளாக
- உறக்கத்தில் நாம் மூச்சு விடும் போது எந்தப் பகுதி அதிர்வடைவதால் கரகரப்பான ஒலி ஏற்படுகிறது?
மென்அண்ணம்
- எத்தனை சதவீத அளவிலான கார்பன்-டை-ஆக்சைடு பிளாஸ்மாவில் கரைந்த நிலையில் கடத்தப்படுகிறது ?
சுமார் 7 முதல் 10 சதவீதம்
- எத்தனை சதவீத கரைந்த நிலையில் உள்ள கார்பன்டை ஆக்சைடு ரத்த சிவப்பணுக்கள் உடன் இணைந்து அவற்றால் கார்பமைனா ஹீமோகுளோபின் எனும் கூட்டுப் பொருளாக கடத்தப்படுகிறது?
20 முதல் 25 சதவீதம்
- கார்பானிக் அன்ஹைட்ரேஸ் எனும் நொதி எதில் அதிகமாக காணப்படுகிறது?
இரத்த சிவப்பணுக்கள்
- ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் கார்பன்-டை-ஆக்சைடு நுழைந்ததும் அங்கு நீருடன் இணைந்து கார்பானிக் அமிலம் ஆகிறது. இந்த வினைக்கு வினையூக்கியாக செயல்படுவது எது?
கார்பானிக் அன்ஹைட்ரேஸ்
- ஒவ்வொரு 100 மில்லி அசுத்த ரத்தமும் சுமார் எவ்வளவு அளவு கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுவதற்காக காற்று நுண்ணறைகள் விடுவிக்கிறது?
4மி.லி
- ஆக்சிஹீமோகுளோபினின் பிரிகை வளைவின் மீது கார்பன் டை ஆக்சைடின் பகுதி அழுத்தம் மற்றும் pH ஆகியவை ஏற்படுத்தும் விளைவு என்ன பெயர்?
போர் விளைவு
- கார்பன் டை ஆக்சைடின் மீது ஹீமோகுளோபினுக்குள்ள பற்றின் அளவை எவ்வாறு ஆக்சிஜன் அடர்த்தி நிர்ணயிக்கிறது என்பதை விளக்குவது என்ன விளைவு?
ஹால்டேன் விளைவு
- மூச்சொழுங்கு மையம் மூளையின் எந்தப் பகுதியில் உள்ளது?
பான்ஸ் வெரோலி
- உடனடி மலைநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன ?
தலைவலி ,குறை சுவாசம் ,குமட்டல் மற்றும் தலைச்சுற்றல்
- எரித்ரோபாய்டின் ஹார்மோன் அதிகளவு எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?
சிறுநீரகங்கள்
- எந்த ஹார்மோன் எலும்பு மஜ்ஜையை தூண்டி அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது?
எரித்ரோபாய்டின்
- நைட்ரஜன் வாயு அதிக அளவில் ரத்தத்தில் கலப்பதால் என்ன நிலை உருவாகிறது?
நைட்ரஜன் நார்கோஸிஸ்
- கடலின் ஆழத்தில் இருந்து உடனடியாக மேலெழும்பி மேற்பரப்பிற்கு வரும்போது மனிதனுக்கு என்ன நோய் ஏற்படுகிறது ?
அழுத்த மீட்சி நோய் (bends)
- தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் என்ன நோயால் ஏற்படுகிறது?
அழுத்தமீட்சி
- இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு தோல் என்ன நிறமாக காணப்படும்?
கரு நீல நிறம்
- ஆஸ்த்மாவை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமை ஊக்கிகள் என்னென்ன?
தூசு, மருந்து பொருட்கள்,மகரந்தத் துகள்கள் சில வகை உணவுப் பொருட்களான மீன்கள் ,இறால்கள் மற்றும் சில பழங்கள்
- நாள்பட்ட மூச்சு விட திணறும் நிலையை குறிப்பது எது?
எம்ஃபைசீமா
- காற்று நுண்ணறைகள் அகலப்படுதல் எவ்வாறு அழைக்கப்படும்?
எம்ஃபைசீமா
- எம்ஃபைசீமா நோய்க்கான முக்கிய காரணம் எது?
புகைப்பிடித்தல்
- காச நோய் எதனால் மனிதனுக்கு ஏற்படுகிறது?
மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலே எனும் பாக்டீரியாவால்
- காச நோய் எதை பாதிக்கும்?
நுரையீரல்கள் மற்றும் எலும்புகள்
- சிலிக்காவை தொடர்ந்து சுவாசிப்பதால் என்ன சுவாச நோய் தோன்றுகிறது?
சிலிக்கோசிஸ்&அஸ்பெஸ்டோஸிஸ்
- எத்தனை சதவீத நுரையீரல் புற்றுநோய் புகைப் பிடித்தலால் மட்டுமே ஏற்படுகிறது?
80 சதவீதம்
- புகையிலையில் என்னென்ன தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன ?
நிக்கோடின் ,தார் ,கார்பன் மோனாக்சைடு ,அமோனியா, கந்தக டை ஆக்சைடு மற்றும் மிகச்சிறிய அளவில் ஆர்சனிக்
- புகையிலையில் புகைபிடித்தலை தூண்டக்கூடிய போதை பொருள் எது ?
நிக்கோட்டின்
- COLDன் விரிவாக்கம் என்ன?
Chronic obstructive lungs disease
11TH ZOOLOGY STUDY NOTES | சுவாசம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services