- சுவாசம்,உணவூட்டம் மற்றும் கழிவு நீக்கம் உடற்செயலியல் நிகழ்வுகளுக்கு என்ன முறை அடிப்படையாக அமைகிறது?
பெரும் பாய்வு முறை
- ஒரு மில்லி லிட்டர் ரத்தமானது எத்தனை வினாடிகளில் இதயத்தில் இருந்து பாதம் வரை சென்று மீண்டும் இதயத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறது?
60 வினாடிகள்
- உடல் திரவங்களின் சமநிலை பேணுதல் மற்றும் உடல் வெப்பநிலை பராமரித்தல் மற்றும் இலக்கு உறுப்புகளுக்கு ஹார்மோன்களை கடத்தல் போன்ற பணிகளை செய்வது எது ?
சுற்றோட்ட மண்டலம்
- இதயத்திற்கும் மூளைக்குமான இரத்த ஓட்டத்தை நிலைநிறுத்துவது எது?
இரத்த சுற்றோட்ட மண்டலத்தின் சமநிலை ஒழுங்கு பாடு
- இரத்த அழுத்தத்தை திடீரென குறைப்பதால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் குறைந்து என்ன ஏற்படும்?
மயக்கம்(vasovagal syncope)
- உடல் திரவங்கள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு: செல் உள் திரவம் மற்றும் செல் வெளி திரவம்
- செல் வெளி திரவங்கள் மேலும் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
மூன்று : செல் இடைத்லிரவம் அல்லது திசுத்திரவம் ,பிளாஸ்மா மற்றும் நிணநீர்
- பிளாஸ்ம்வைக் காட்டிலும் எதில் புரதங்களின் அடர்த்தி குறைவாக காணப்படுகிறது?
திசுத்திரவம்
- கல்லீரல் எத்தனை வழிகளில் இரத்தத்தை பெறுகிறது ?
இரு வழிகள்
- திரவ நிலையிலுள்ள இணைப்புத் திசு எது ?
இரத்தம்
- இரத்தம் எவற்றை உள்ளடக்கியுள்ளது?
பிளாஸ்மா எனும் திரவ பகுதியையும் அதனுள் மிதக்கும் ஆக்கத்துகள்களையும்
- மொத்த ரத்த கொள்ளளவில் எத்தனை சதவீதம் பிளாஸ்மா உள்ளது ?
55%
- மொத்தக் கொள்ளளவில் ரத்த கொள்ளளவில் எத்தனை சதவீதம் ஆக்இத்துகள்கள உள்ளன ?
45 சதவீதம்
- 70 கிலோ எடையுள்ள மனிதனில் ரத்தத்தின் கொள்ளளவு எவ்வளவு?
ஏறத்தாழ 5 லிட்டர்
- பிளாஸ்மாவில் நீர் எத்தனை சதவீதம் உள்ளடங்கியுள்ளது?
80 முதல் 92%
- பிளாஸ்மாவில் நீரில் கரைந்துள்ள பொருட்களான பிளாஸ்மா புரதங்கள், கனிமப் பொருட்கள் எத்தனை சதவீதம் உள்ளன ?
0.9%
- பிளாஸ்மாவில் நீரில் கரைந்துள்ள பொருட்களான கரிமப் பொருட்கள் எத்தனை சதவீதம் உள்ளன ?
0.1%
- கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் நான்கு முக்கிய பிளாஸ்மா புரதங்கள் என்னென்ன?
அல்புமின் ,குளோபுலின், புரோத்ரோம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன்
- இரத்தத்தின் ஊடுகலப்பு அழுத்தத்தை நிர்வகிக்கும் பிளாஸ்மா புரதம் எது?
அல்புமின்
- அயனிகள், ஹார்மோன்கள் ,கொழுப்பு ஆகியவற்றை கிடைத்தவுடன் நோயெதிர்ப்பு பணியிலும் உதவும் பிளாஸ்மா புரதம் எது?
குளோபுலின்
- எந்த 2 பிளாஸ்மா புரதங்களும் இரத்தம் உறைதலில் பங்கேற்கின்றன?
புரோத்ராம்பின் மற்றும் ஃபைப்ரினோஜன்
- பிளாஸ்மாவில் உள்ள கரிம பொருட்கள் என்னென்ன?
யூரியா ,அமினோ அமிலம், குளுக்கோஸ் ,கொழுப்பு மற்றும் வைட்டமின்கள்
- பிளாஸ்மாவில் உள்ள கனிம பொருட்கள் என்னென்ன?
சோடியம் ,பொட்டாசியம் ,கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவற்றின் குளோரைடுகள் கார்பனேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள்
- உணவு உண்ட பிறகு கல்லீரல் போர்டல் சிறையில் உள்ள குளுக்கோஸின் அளவு என்னவாகிறது ?
அதிகரிக்கும்
- உபரி அமினோ அமிலங்களை சிதைத்து யூரியாவை உற்பத்தி செய்வது எது?
கல்லீரல்
- கல்லீரல் போர்ட்டல் சிரை மற்றும் கல்லீரல் தமனி ஆகியவற்றில் உள்ள இரத்த யூரியாவை காட்டிலும் எதில் உள்ள ரத்தம் அதிக அளவில் யூரியாவைக் கொண்டுள்ளது?
கல்லீரல் சிரை
- ரத்தத்தில் காணப்படும் ரத்த செல்கள் என்னென்ன?
ரத்த சிவப்பணுக்கள் ,இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள்
- ரத்த செல்களில் எது மிக அதிக அளவில் காணப்படுகிறது?
ரத்த சிவப்பு அணுக்கள்
- ஒரு ஆரோக்கியமான ஆணின் ரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டருக்கு ஏறத்தாழ எவ்வளவு சிவப்பணுக்கள் உள்ளன?
5 முதல் 5.5 மில்லியன் சிவப்பணுக்கள்
- பெண்ணின் ரத்தத்தில் ஒரு கன மீட்டருக்கு எவ்வளவு சிவப்பணுக்கள் காணப்படுகின்றன?
4.5 முதல் 5.0 மில்லியன் சிவப்பணுக்கள்
- இரத்த சிவப்பணுக்கள் எவ்வளவு விட்டமுடையவை?
7 மைக்ரோ மீட்டர்
- இரத்த சிவப்பணுக்களின் நிறத்திற்கு காரணம் என்ன ?
சுவாச நிறமி ஹீமோகுளோபின் சைட்டோபிளாசத்தில் கரைந்த நிலையில் காணப்படுவது.
- இரத்தத்தில் சுவாச வாயுக்களை கடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது எது?
ஹீமோகுளோபின்
- இரத்த சிவப்பணுக்களில் எந்த செல் நுண்ணுறுப்புகள் காணப்படுவதில்லை?
உட்கரு ,மைட்டோகாண்ட்ரியா ,ரிபோசோம்கள் மற்றும் அகப்பிளாச வலைப்பின்னல்
- உடல்நலம் உள்ள மனிதனின் சராசரி வாழ்நாள் எவ்வளவு?
120 நாட்கள்
- 120 நாட்களை கடந்த சிவப்பணுக்கள் எங்கு அழிக்கப்படுகின்றன?
மண்ணீரல்
- இரத்த சிவப்பணுக்களின் இடுகாடு அல்லது கல்லறை என அழைக்கப்படுவது எது?
மண்ணீரல்
- ஹீமோகுளோபினின் எந்த பகுதி மறு பயன்பாட்டிற்காக எலும்பு மஜ்ஜைக்குத் திரும்புகின்றன?
ஹீம்
- ஆக்சிஜன் குறையும் வேளையில் ,சிறுநீரகங்களினால் சுரக்கப்படும் என்ன ஹார்மோன் எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் தண்டு செல்களை தூண்டி இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றது?
எரித்ரோபாயட்டின்
- ரத்த சிவப்பு அணுக்களும் ரத்த பிளாஸ்மாவிற்க்கும் இடையே உள்ள விகிதமானது என்ன செல் அடர்த்தி கொள்ளளவில் அளவிடப்படுகிறது?
ஹிமட்டோகிரிட் (Haemotocrit)
- உட்கருக்கள் கொண்ட ன,நிறமற்ற, அமீபாய்டு வடிவம் மற்றும் இயக்கம் உடைய செல்கள் எவை?
இரத்த வெள்ளை அணுக்கள்
- ஒரு சராசரி நலமான மனிதனில் ஒரு கன மில்லி மீட்டர் ரத்தத்தில் எவ்வளவு ரத்த வெள்ளை அணுக்கள் காணப்படுகின்றன?
6000 முதல் 8000
- ரத்த வெள்ளை அணுக்கள் எத்தனை முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது?
இரண்டு:துகள்களுடைய வெள்ளையணுக்கள்(Granulocytes) மற்றும் துகள்களற்ற வெள்ளை அணுக்கள்(agranulocytes)
- துகள்கள் உடைய வெள்ளை அணுக்களில் எங்கு துகள்கள் காணப்படுகின்றன ?
சைட்டோபிளாசம்
- துகள்களுடைய செல்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
மூன்று: நியூட்ரோஃபில்கள், ஈசினோஃபில்கள் மற்றும் பேசோஃபில்கள்
- நியூட்ரோஃபில்கள் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹெட்டிரோஃபில்கள்
- நியூட்ரோஃபில்கள் மெல்லிய இலையால் இணைக்கப்பட்ட மூன்று அல்லது நான்கு கதுப்புகளை கொண்ட உட்கருவை கொண்டிருப்பதால் இவை எவ்வாறு அழைக்கப்படும்?
பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள்
- மொத்த வெள்ளை அணுக்களில் எத்தனை சதவீதம் பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் வகையைச் சார்ந்தவை?
60 முதல் 65 சதவீதம்
- விழுங்கும் தன்மை கொண்ட எந்த செல்கள் கிருமிகளால் பாதிக்கப்பட்ட திசுக்களின் உள்ளும் புறமும் அதிக எண்ணிக்கையில் குழுமிகின்றன?
நியூட்ரோஃபில்கள்
- ஈசினோஃபில்லின் உட்கருக்கள் எத்தனை கதுப்புகளை கொண்டவை?
இரண்டு
- ஈசினோஃபில்கள், வெள்ளையணுக்களில் எத்தனை சதவீதம் உள்ளன?
2-3%
- உடலில் சில ஒட்டுண்ணி தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது எவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது ?
ஈசினோபில்கள்
- வெள்ளையணுக்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளவை எவை ?
பேசோஃபில்கள்
- பேசோஃபில்கள் வெள்ளையணுக்களில் எத்தனை சதவீதம் உள்ளன?
0.5-1.0%
- பேசோஃபில்கள் எவற்றை சுரக்கின்றன?
ஹிப்பாரின்,செரடோனின் மற்றும் ஹிஸ்டமின்கள்
- உடல் திசுவில் வீக்கங்கள் ஏற்படுத்தும் வினைகளிலும் முக்கிய பங்காற்றுபவை எவை?
பேசோஃபில்கள்
- எங்கு உற்பத்தியாகும் துகள்கள் அற்ற வெள்ளை அணுக்களில் சைட்டோபிளாசத் துகள்கள் இருப்பதில்லை?
நிணநீர் சுரப்பிகள் மற்றும் மண்ணீரல்
- துகள்கள் அற்ற வெள்ளை அணுக்கள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
இரண்டு: லிம்போசைட்டுகள் மற்றும் மோனோசைட்கள்
- மொத்த ரத்த வெள்ளை அணுக்களில் எத்தனை சதவீதம் லிம்போசைட்டுகள் ஆகும்?
28%
- லிம்போசைட்டுகள் எத்தனை வகைப்படும் ?
இரண்டு: B லிம்போசைட்டுகள் மற்றும் T லிம்போசைட்டுகள்
- எந்த வகை லிம்போசைட்டுகள் நோய் தடுப்பாற்றலில் பங்கேற்கின்றனர்?
B லிம்போசைட்டுகள் மற்றும் T லிம்போசைட்டுகள்
- எந்த செல்கள் நோய் எதிர் பொருளை உருவாக்கிய அயல் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகளை செயலிழக்கச் செய்கின்றன ?
B லிம்போசைட்டுகள்
- எந்த செல்கள் செல்வழி நோய் தடைக்காப்பில் பங்கேற்கின்றன?
T லிம்போசைட்டுகள்
- மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் என்ன வகை செல்கள்?
விலங்கு செல்கள்
- மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் என்ன வடிவ உட்கருவை கொண்டுள்ளன ?
சிறுநீரக வடிவ
- மொத்த ரத்த வெள்ளை அணுக்களில் எத்தனை சதவீதம் மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் உள்ளன ?
1 முதல் 3 சதவீதம்
- மைய நரம்பு மண்டலத்தில் உள்ள மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
மைக்ரோகிளியா
- மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் கல்லீரலின் பைக்குழிகளின் அடைப்புகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
கப்ஃபர் செல்கள்
- மோனோசைட்கள் அல்லது மேக்ரோஃபேஜ்கள் நுரையீரல் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
காற்று நுண்ணறை மாக்ரோஃபேஜ்கள்
- இரத்தத் தட்டுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
திராம்போசைட்டுகள்
- இரத்தத் தட்டுகள் எலும்பு மஜ்ஜையில் உள்ள எந்த சிறப்பு செல்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன?
மெகாகேரியோசைட்டுகளால்
- ஒரு கன மில்லிமீட்டர் ரத்தத்தில் எவ்வளவு ரத்தத் தட்டுகள் காணப்படுகின்றன?
1,50000 முதல் 3,50000 வரை
- இரத்த உறைதலில் ஈடுபடும் பொருட்களை சுரப்பது எது?
இரத்த தட்டுகள்
- இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைந்தால் உடலில் என்ன ஏற்படும்?
ரத்த உறைதல் கோளாறுகள்
- இதுவரை எத்தனை பொதுவான ரத்த வகைகள் பயன்பாட்டில் உள்ளன ?
இரண்டு: ABO மற்றும் Rh
- ரத்த சிவப்பணுக்களின் மேற்புற படலத்தில் இருக்கும் அல்லது இல்லாத ஆண்டிஜன்களின் அடிப்படையில் ரத்தம் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
4: A,B,AB,O
- எந்த ரத்தப்பிரிவு மனிதர்களின் ரத்தம் பிளாஸ்மாவில் இயற்கையாகவே எதிர்வினை பொருட்கள் உள்ளன?
A,B &O
- சிவப்பு அணுவின் மேற்புற படலத்தில் உள்ள ஆண்டிஜன்களுக்கு என்ன பெயர் ?
அக்ளுட்டினோஜென்கள்
- அக்ளுட்டினோஜென் A மீது செயல்படும் எதிர்வினை பொருட்களுக்கு என்ன பெயர்?
ஆன்டி A எதிர்ப்பொருள்
- அக்ளுட்டினோஜென் B மீது செயல்படும் எதிர்வினை பொருட்களுக்கு என்ன பெயர்?
ஆன்டி B எதிர்ப்பொருள்
- எந்தப் பிரிவு ரத்தத்தில் எந்த ஒரு அக்ளுட்டினோஜென் காணப்படுவதில்லை?
O வகுப்பு
- ABO ரத்த வகுப்பு முறையில் எந்த பிரிவிற்கு அல்லீலிக் ஜீன்கள் உள்ளன?
A,B & O
- அனைத்து வகை அக்ளுட்டினோஜென்களும் என்ன பொருட்களை கொண்டுள்ளன ?
சுக்ரோஸ்,D-காலக்டோஸ், N-அசிட்டைல் குளுக்கோஸமைன் மற்றும் 11 அமினோ அமிலங்கள்
- முனை அமினோ அமிலங்களின் இணைவு வினையில் எந்த நொதி வினையூக்கியாக செயல்படுகிறது?
கிளைக்கோஸில் டிரான்ஸ்பெரேஸ்
- Rh காரணி (D antigen) எனும் மற்றுமொரு புரதம் ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் பெரும்பாலான எத்தனை சதவீத மனிதர்களில் காணப்படுகிறது?
80 சதவீதம்
- ரீசஸ் குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதத்தை ஒத்து காணப்படுவதால் இவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Rh காரணி
- ரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இந்த D ஆண்டிஜன் காணப்பட்டால் அவர்கள் என்ன மனிதர்கள் என அறியப்படுகின்றனர்?
Rh+
- Rh- தாய், Rh+ கருவை சுமக்கும் போது என்ன நிலை ஏற்படுகிறது ?
திசு பொருந்தா நிலை
- முதல் குழந்தை பிறந்து அடுத்த குழந்தைக்காக கரு தரிக்கும் போது Rh- தாயிடமிருந்து Rh+ எதிர்வினை பொருட்கள் கருவின் ரத்த ஓட்டத்தில் கலந்து கருவின் சிவப்பணுக்களை அழிக்கின்றன எனவே கரு இழக்க நேரிடுகிறது மற்றும் ரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற குறைபாடுகள் பாதிக்கப்படுகிறது இதற்கு என்ன பெயர் ?
எரித்ராப்ளாஸ்டோசிஸ் ஃபீடாலிஸ் (erythroblastosis foetalis)
- எரித்ராப்ளாஸ்டோசிஸ் ஃபீடாலிஸ் (erythroblastosis foetalis) தவிர்ப்பதற்காக என்ன மருந்தை முதல் பிரசவம் பிறந்த பின்பு தாய்க்கு செலுத்தப்படுகிறது?
Rhocum
- ஒரு காயம் பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வெளியாவதை தடுக்கும் பொருட்டு ரத்தக்கட்டி உருவாகி அதிகமான இரத்தப் போக்கை நிறுத்தும் நிகழ்வுக்கு பெயர் என்ன?
ரத்தம் உறைதல்
- ரத்தக் குழாய்களில் உள்ள எது சிதைவடைந்து அதன் சுவரில் உள்ள இணைப்பு திசுக்களை ரத்தம் நனைக்கும்போது ரத்த உறைதல் நிகழ்வு ஆரம்பமாகிறது ?
எண்டோதீலியம்
- செயல்படா நிலையில் உள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம் ,எவற்றின் முன்னிலையில் செயல்படும் திராம்பினாக மாற்றமடைகிறது?
கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K
- திராம்பின் ரத்த பிளாஸ்மாவில் கரைந்த நிலையில் உள்ள ஃபைப்ரினோஜனை என்னவாக மாற்றுகின்றன?
கரையாத ஃபைப்ரின் இழைகள்
- ஃபைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி என்ன திரவத்தை வலைப்பின்னல் வழியே வெளியேற்றுகிறது ?
வெளிர் மஞ்சள் நிற சீரம்
- சீரம் என்பது என்ன?
ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மா
- இரத்த உறைதலைத் தடைசெய்யும் ரத்த உறைவு எதிர்ப்பு பொருளான ஹிப்பாரின் ,இணைப்புத் திசுக்களிலுள்ள எந்த செல்களில் உருவாக்கப்படுகிறது?
மாஸ்ட் செல்கள்
- இரத்த நுண்நாளங்களில் இருந்து திசுக்களுக்குள் கசியும் எத்தனை சதவீதம் திரவம் மீண்டும் ரத்த நாளங்களுக்கு உள்ளே நுழைகின்றன?
90 சதவீதம்
- எஞ்சிய 10 சதவீத திரவத்தை ரத்தக் குழாய்களுக்கு கொண்டுசெல்வது எது?
நிணநீர் நாளங்கள்
- நிணநீர் நாளங்களில் உள்ள திரவத்தின் பெயர்?
நிணநீர்
- இரத்த நுண்நாளங்களில் இருந்து உடல் திசுக்களுக்கு தொடர்ந்து ஊடுருவும் திரவங்களை ரத்தத்திற்கு திரும்ப செலுத்தும் குழல்களாக செயல்படுபவை எவை?
நிணநீர் குழல்கள்
- நிணநீரை வடிகட்டும் நிணநீர் முடிச்சுகள் எந்த பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன ?
கழுத்து ,தொடை மற்றும் அக்குள் பகுதி, சுவாச மற்றும் உணவு பாதை போன்ற இடங்கள்
- இரத்தத்தில் நுழையும் நோய்க் கிருமிகளை எதன் உதவியுடன் நிணநீர் முடிச்சுகள் தடுக்கின்றன?
மாக்ரோஃபேஜ்
- நிணநீரில் காணப்படும் செல்களுக்கு என்ன பெயர் ?
லிம்போசைட்டுகள்
- இரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
3: தமனிகள்,சிரைகள் மற்றும் இரத்த நுண்நாளங்கள்
- மனிதனின் இரத்த குழாயின் சுவர் பகுதி எத்தனை அடுக்குகளால் ஆனது?
மூன்று அடுக்குகள்
- மனிதனின் இரத்த குழாயின் சுவர் பகுதியின் உள்ளடுக்கின் பெயர் என்ன?
டியூனிக்கா இன்டிமா
- மனிதனின் இரத்த குழாயின் சுவர் பகுதியின் நடு அடுக்கின் பெயர் என்ன?
டியூனிக்கா மீடியா
- மனிதனின் இரத்த குழாயின் சுவர் பகுதியின் வெளியடுக்கின் பெயர் என்ன?
டியூனிக்கா எக்ஸ்டர்னா
- இரத்தக்குழலின் எண்டோதீலியத்திற்க்கு உறுதுணையாக உள்ளது எது?
உள்ளடுக்கு
- இருவேறு தமனிகள் இணையும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அனாஸ்டோமோசிஸ் அல்லது இணைப்பிடங்கள்
- ஏதேனும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படும்போது எவை மாற்றுப்பாதைகளாகச் செயல்பட்டு ரத்தத்தை கடத்துகிறது?
அனாஸ்டோமோசிஸ்
- எந்தப் பகுதிகளில் எண்ணற்ற அனாஸ்டோமோசிஸ் பகுதிகள் காணப்படுகின்றன?
மூட்டுகளிலுள்ள தமனிகள்
- மனிதனின் ரத்தக்குழாயின் நடு அடுக்கில் என்ன புரதத்தை கொண்ட வெளிச்செல் மேட்ரிக்ஸ் உள்ளது?
எலாஸ்டின்
- டியூனிகா எக்ஸ்டர்னா அல்லது டியூனிகா அட்வென்டிஷியா எனும் வெளியிடுக்கு எதனால் ஆனது ?
கொலாஜன் இழைகள்
- இதயத்திலிருந்து இரத்தத்தை வெளியே எடுத்து செல்லும் இரத்த நாளங்களுக்கு என்ன பெயர்?
தமனிகள்
- எந்த தமனியைத் தவிர மற்ற தமனிகள் அனைத்தும் ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன?
நுரையீரல் தமனி
- இதயத்திலிருந்து இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய பெரிய தமனி எது?
பெருந்தமனி அல்லது அயோர்ட்டா
- அயோர்ட்டா என்ன விட்டம் மற்றும் தடிமனுடையது?
2.5 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 2 மில்லி மீட்டர் தடிமன்
- தமனிகளில் ரத்தம் உறையும் போது அதன் அழுத்தம் எவ்வளவு ?
- மி.மீ பாதரசம்
- ரத்த நாளங்களுக்குள் நுழையும்போது அதன் அழுத்தம் எவ்வளவாக குறைகிறது?
35 மிமீ பாதரசம்
- ஒரு மி.மீ பாதரசம் எவ்வளவிற்கு சமம் ?
0.13 K pa
- பாதரசத்தின் S.I அலகு என்ன?
கிலோ பாஸ்கல்
- நுண் தமனிகளில் ரத்த நாளங்கள் இணையும் இடத்தில் சிறிய சுருக்குத்தசை அமைந்துள்ளது இது என்ன பணியை செய்கிறது?
ரத்த விநியோகத்தை ஒழுங்குபடுத்துகிறது
- இரத்தத்திற்கும் திசுக்களுக்கும் இடையே பொருட்களை பரிமாறிக்கொள்ளும் தளங்களாக செயல்படுபவை எவை?
இரத்த நுண் நாளப்படுகைகள்
- இரத்த நுண் நாளப்படுகைகளின் சுவர்கள் எதனால் பாதுகாக்கப்படுகின்றன ?
அரைச்சந்திர வால்வுகள்
- உடம்பின் எந்தப் பகுதிகளில் ரத்த நாளங்கள் காணப்படுவதில்லை?
கண்ணின் கார்னியா மற்றும் குருத்தெலும்பு
- மெல்லிய சுவராலான அதிக உள்ளீடற்ற உட்பகுதியை கொண்ட ரத்த நாளங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
சிரைகள்
- இரத்த மாதிரிகள் எடுக்க எது சிறந்தவை?
சிரைகள்
- இதய தசைகளுக்கு உணவூட்ட பொருட்களை அளித்து அங்கிருந்து கழிவு பொருட்களை வெளியேற்றும் ரத்த நாளங்கள் எது?
இதய தசை ரத்த நாளங்கள்
- இதய தசைகளுக்கு எத்தனை தமனிகள் ரத்தத்தை அனுப்புகின்றன?
வலது மற்றும் இடது கொரொனரி தமனி
- பெருந்தமனியிலிருந்து பிரியும் முதல் கிளை எது?
கொரொனரி தமனி
- கொரொனரி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
இலத்தீன் மொழி பொருள் மகுடம்
- வலது வென்ட்ரிகிள் மற்றும் இடது வண்டிகளின் கீழ்பகுதிக்கு எந்த தமனி இரத்தத்தை அளிக்கிறது?
வலது இதயத்தசைத்தமனி
- எத்தனை வகை சுற்றோட்ட மண்டலங்கள் உள்ளன?
இரண்டு :திறந்த மற்றும் மூடிய வகை சுற்றோட்ட மண்டலங்கள்
- திறந்த வகை சுற்றோட்ட மண்டலத்தில் சுற்றோட்டத் திரவமாக எதனை கொண்டிருக்கும்?
ஹீமொலிம்ப்
- ரத்தக் குழாயின் வழியாக சுற்றோட்டத் திரவம் இதயத்தால் உந்தி அனுப்பப்படுகிறது இந்த பைக்குழி எவ்வாறு அழைக்கப்படும்?
ஹீமோசில்
- திறந்த வகை சுற்றோட்டம் எதில் காணப்படுகிறது?
கணுக்காலிகள் மற்றும் பெரும்பான்மையான மெல்லுடலிகள்
- மீன்களில் எத்தனை அறைகள் கொண்ட இதயம் உள்ளது ?
2 அறைகள்
- மீன்களில் என்ன வகை சுற்றோட்டம் காணப்படுகின்றது?
ஒற்றை சுற்றோட்டம்
- எது தவிர்த்த ஊர்வனவற்றில் இரண்டு ஆரிக்கிள்களும் ,முழுமையாக பிரிக்கப்படாத ஒரு வென்டிரிக்களும் உள்ளன ?
முதலைகள்
- முதலைகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் இதயமானது எத்தனை அறைகளைக் கொண்டது?
இரு ஆரிக்கிள்கள் மற்றும் இரு வென்ட்ரிக்கிள்கள்
- எந்த விதியின் மூலம் இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் பணிகளைப் புரிந்து கொள்ள முடியும்?
லாப்ளேஸ் விதி
- ரத்த நாள சுவரின் விறைப்புத்தன்மையானது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளத்தின் ஆரம் இவற்றிற்கு நேர்விகிதத்தில் இருக்கும் என்பது என்ன விதி?
லாப்ளேஸ் விதி
- ஆரிக்கிள்கள் இரண்டும் எதனால் பிரிக்கப்பட்டுள்ளன?
ஆரிக்குலார் இடைச்சுவர்
- வென்ட்ரிக்கிள்கள் இரண்டும் எதனால் பிரிக்கப்பட்டுள்ளன?
வென்ட்ரிக்குலார் இடைச்சுவர்
- இதயத்தின் அமைப்பை எப்போது யார் விவரித்தார் ?
ரோமன் டி வீசன்ஸ், 1706
- மனித இதயம் என்ன சிறப்புத் தசையால் ஆக்கப்பட்டுள்ளது?
இதயத் தசை
- பெரியவர்களின் இதயத்தின் எடை எவ்வளவு?
ஏறத்தாழ 300 கிராம்
- மனித இதயம் எத்தனை அறைகளாலானது?
நான்கு அறைகள் (இரு ஆரிக்கிள்,இரு வெண்ட்ரிக்கிள்)
- என்ன தசைகளை கொண்டுள்ளதால் வென்ட்ரிக்கிள்களின் சுவர் ஆரிக்கிள்களின் சுவரை விட தடித்துக் காணப்படுகிறது?
பாப்பில்லரித் தசைகள்
- இதயம் எந்த ஈரடுக்கு உறையால் சூழப்பட்டுள்ளது ?
பெரிகார்டியம்
- பெரிகார்டியம் அடுக்குகளுக்கு இடையில் உள்ள இடைவெளி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பெரிகார்டியல் இடைவெளி
- பெரிகார்டியல் இடைவெளியில் என்ன திரவம் நிறைந்திருக்கிறது?
பெரிகார்டியல் திரவம்
- பெரிகார்டியல் திரவம் எத்தனை அடுக்குகளால் ஆனது ?
மூன்று: வெளிப்புற அடுக்கான எபிகார்டியம், நடுவில் உள்ள மயோகார்டியம் மற்றும் உட்புற எண்டோகார்டியம்
- ஆரிக்கிள்கள் வெண்ட்ரிக்கிள்களுடன் என்ன துளை வழியே தொடர்பு கொள்கிறது ?
ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை
- வலப்புற ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை எதனால் பாதுகாக்கப்படுகிறது?
மூவிதழ் வால்வு
- இடப்புற ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை எதனால் பாதுகாக்கப்படுகிறது?
ஈரிதழ் வால்வு
- ஈரிதழ் வால்வு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மிட்ரல் வால்வு
- நுரையீரல் தமனி க்ஷ வலது வென்ட்ரிகிளிலிருந்து தொடங்கும் இடத்திலும், மகாதமனி இடது வென்டிரிக்கிளிலிருந்து தொடங்குமிடத்திலும் என்ன உள்ளது?
அரைச்சந்திர வால்வுகள்
- ஒவ்வொரு வால்வும் எத்தனை அரைச்சந்திர வடிவ கதுப்புகளை கொண்டிருக்கின்றன?
மூன்று அரைச்சந்திர கதுப்புகள்
- வென்டிரிக்கிளின் மையோ கார்டியல் தசைகள் சீரற்ற தசை மேடுகளை நீட்சிகளாக கொண்டுள்ளன இதற்கு என்ன பெயர்?
ட்ரபெகுலே கார்னியே
- அரைச்சந்திர வாழ்வை மூடவும் திறக்கவும் எது உதவுகிறது?
கார்டே டென்டினே
- கார்டே டென்டினே பாப்பில்லரி தசைகள் மூலம் எங்கு இணைக்கப்பட்டுள்ளன ?
வென்டிரிக்கிளின் அடிப்புற உட்சுவர்
- உடலின் பல பகுதிகளில் இருந்தும் வரும் ஆக்சிஜனற்ற ரத்தத்தை வலது ஆரிக்கிளை நோக்கி செலுத்துபவை எவை?
மேற்பெருஞ்சிரை மற்றும் கீழ்ப்பெருஞ்சிரை
- மனித இதயம் எந்த வகையைச் சார்ந்தது?
மையோ ஜெனிக்
- இதய தசையின் உள்ள எவை முனைப்பியக்க நீக்கம் இயல்பான, சீரான இதயத் துடிப்பை துவங்குகின்றன?
கார்டியோமயோசைட்டுகள்
- விரைவான சீரியக்கம் கொண்ட இதயத்தசைச் செல்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?
இதயத்தூண்டி செல்கள் அல்லது பேஸ்மேக்கர் செல்கள்
- பேஸ்மேக்கர் செல்கள் எங்கு அமைந்துள்ளன?
வலது சைனு ஏட்ரியல் கணு(SA node)
- ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் முடிச்சு எங்குள்ளது?
வலது ஆரிக்கிளின் இடது பகுதி
- ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் முடிச்சிலிருந்து தோன்றும் இரு சிறப்பு இதய தசைகளுக்கு என்ன பெயர்?
ஹிஸ்ஸின் கற்றைகள்
- ஹிஸ்ஸின் கற்றைகள் வென்டிரிக்குலார் இடைச்சுவர் வழியாக கீழ்நோக்கி சென்று வென்ட்ரிகிளின் சுவர்ப் பகுதியில் நுண்ணிழைகளாகப் பரவியுள்ளன இதற்கு என்ன பெயர்?
பர்கின்ஜி நாரிழை
- பேஸ்மேக்கர் செல்கள் எதன்மூலம் செல் சவ்வைக் கிளர்ச்சியடைய செய்கின்றன ?
மின்முனைப்பியக்க நீக்கம்
- இதயம் சீராக சுருங்கி விரிதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இதயத்துடிப்பு
- இதயம் சுருங்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிஸ்டோல்
- இதயம் விரிவடைதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
டயஸ்டோல்
- ஒரு மனிதனின் இதயம் நிமிடத்திற்கு எவ்வளவு முறைகள் துடிக்கும் ?
70 முதல் 72 முறைகள்
- இதய சுழற்சியின் போது வால்வுகளின் இயக்கத்தால் எத்தனை வகை இதய ஒலிகள் உண்டாகின்றன?
இரண்டு வகை
- இரண்டு வகை இதய ஒலிகளை எந்த உதவியுடன் கேட்கலாம்?
ஸ்டெத்தாஸ்கோப்
- வென்ட்ரிக்கிள்கள் சுருங்கும்போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்வதால் என்ன ஒலி தோன்றுகின்றது?
லப்
- வெண்ட்ரிக்குலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் என்ன ஒலி தோன்றுகிறது?
டப்
- இதயத் துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலைக்கு பெயர் என்ன?
டாக்கிகார்டியா அல்லது இதயமிகைத் துடிப்பு
- இதயத் துடிப்பு வீதம் குறையும் நிலைக்கு பெயர் என்ன?
பிராடிகார்டியா அல்லது இதய மந்தத் துடிப்பு
- இதயத்துடிப்பின் தொடக்கம் முதல் அடுத்த துடிப்பின் தொடக்கம் வரை உள்ள நிகழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இதய இயக்க சுழற்சி
- இதய இயக்க சுழற்சி எத்தனை வினாடிகள் வரை நடைபெறுகிறது?
0.8 வினாடிகள்
- நாடித்துடிப்பு அழுத்தம் = சிஸ்டோலிக் அழுத்தம்-டயஸ்டோலிக் அழுத்தம்
- டயஸ்டோலின் போது வென்டிரிக்கிளினுள் செல்லும் இரத்தத்தின் அளவுக்கும் வென்டிரிக்கிள் சுருங்கிய பிறகு அங்கு மீதமுள்ள ரத்தத்தின் அளவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை குறிப்பது எது?
வீச்சுக்கொள்ளளவு
- எந்த விதிப்படி இதயம் சுருங்குவதற்கு சற்று முன்னர் எந்த அளவுக்கு இதய தசை செல்கள் நீட்சி அடைகின்றன என்பதே வீச்சுக்கொள்ளளவை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாகும்?
ஃப்ராங்-ஸ்டார்லிங்
- இதயத்தின் இடது பக்கம் பாதிக்கப் பட்டால் என்ன பாதிப்பு உண்டாகும்?
நுரையீரல் அடைப்பு
- இதயத்தின் வலது பக்கம் பாதிக்கப்பட்டால் என்ன பாதிப்பு ஏற்படும்?
புறப் பகுதிகளில் அடைப்பு
- முக்கிய தமனிகளின் வழியே ரத்தம் பாயும்போது அத்தமனிகளின் பரப்பில் தோன்றும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ரத்த அழுத்தம்
- எத்தனை வகையான இரத்த அழுத்தங்கள் உண்டு?
2: சிஸ்டாலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம்
- தமனிகளில் தோன்றும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படும்?
சிஸ்டாலிக் அழுத்தம்
- இதயத்தின் அறைகள் தளர்ச்சியடையும் வேளையில், தமனிகளின் சுவரில் காணப்படும் அழுத்தம் எவ்வாறு அழைக்கப்படும்?
டயஸ்டாலிக் அழுத்தம்
- இரத்த அழுத்தத்தை எந்த கருவியால் அளவிடலாம் ?
ஸ்பிக்மோமானோமீட்டர்
- உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரின் இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கும்?
120/80 மிமீ பாதரசம்
- இதயத்தில் இருந்து வெளியேறும் ரத்தத்தின் அளவு மற்றும் அச்சமயத்தில் நுண் தமனிகளின் சுவரில் தோன்றும் எதிர்ப்பு ஆகியவற்றால் ஏற்படுவது என்ன?
சராசரி தமனி அழுத்தம்
- சராசரி தமனி அழுத்தத்தை நிலையாக பெறுவதற்கான முதன்மை கட்டுப்பாட்டு வழிமுறை எது?
அழுத்த உணர்வேற்பி எதிர்வினை
- ஈர்ப்பு விசையின் காரணமாக உடலின் கீழ்ப் பகுதிகளில் அதிக ரத்தம் சேர்கிறது இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது இதற்கு என்ன பெயர் ?
ஆர்த்தோஸ்டேட்டிக் குறை அழுத்தம்
- குறிப்பிட்ட காலத்தில் இதயத்தில் ஏற்படும் மின் திறன் மாற்றங்களை பதிவு செய்யும் கருவி எது ?
எலக்ட்ரோகார்டியோகிராம்
- இதய சுழற்சியின் போது இதயத்துடிப்பை துவக்குவது எது?
வலது ஆரிக்கிளில் உள்ள சிறப்பு தசை மடிப்புகள் ஆன சைனு ஆரிக்குலார் கணு
- சாதாரண ஈசிஜி யில் எத்தனை அலைகள் காணப்படும்?
மூன்று: Pஅலை,QRS அலை,Tஅலை
- ஆரிக்கிளில் தோன்றும் மின் முனைப்பியக்க நீக்க நிலையைக் குறிப்பது எந்த அலை?
Pஅலை
- சைனு ஆரிக்குலார் கணுவில் தோன்றிய தூண்டல் ஆரிக்கிள்களில் பரவ எடுத்துக்கொள்ளும் கால அளவை குறிப்பது எது?
Pஅலை
- இரண்டு ஆரிக்கிள்களின் சுருக்கத்திற்கான கால அளவு என்ன?
0.08-0.1 வினாடி
- ஆரிக்கிள்களின் மின்முனைப்பியக்க நீக்க நிலை தொடங்கி வென்ட்ரிக்கிள்களின் மின் முனைப்பு இயக்கம் வரை குறிப்பது எது?
PQ இடைவெளி நிலை
- ஆரிக்கிள்களிலிருந்து வென்ட்ரிக்கிள்களுக்கு தூண்டல் கடத்தப்படும் நேரத்தை(0.12-0.21 வினாடி) குறிப்பது எது?
PQ இடைவெளி நிலை
- QRS கூட்டின் கால அளவு எவ்வளவு?
0.06-0.09 வினாடிகள்
- எந்த அயனி வெளியேற்றம் குறைவதனால் மின் முனைப்பு இயக்க காலம் கூடுகிறது?
பொட்டாசியம் அயனி
- ST பதிவின் கால அளவு என்ன?
0.09 வினாடி
- வெண்ட்ரிக்கிளில் ஏற்படும் மின் முனைப்பியக்க நீக்க நிலையைக் குறிப்பது எது?
T அலை
- T அலையின் கால அளவு என்ன?
0.2-0.4 வினாடிகள்
- இரத்த சுற்றோட்டத்தை முதன் முதலில் விளக்கியவர் யார் ?
வில்லியம் ஹார்வி 1628
- முதுகெலும்புள்ளவகைகளில் எத்தனை வகை சுற்றோட்டங்கள் நடைபெறுகின்றன?
இரண்டு: ஒற்றை சுற்றோட்டம் மற்றும் இரட்டை சுற்றோட்டம்
- அட்ரினர்ஜிக் உணர்வேற்பிகளோடு இணைந்து இதயத்துடிப்பின் விகிதத்தை அதிகரிக்கச் செய்பவை எவை?
பரிவு நரம்பு மண்டலம் நார்-எபிநெஃப்ரின்,அட்ரீனல் மெடுல்லாவின் எபிநெஃப்ரின்
- சிறுநீரக செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் எவை ரத்த நாளத்தை சுருக்குகின்றன?
வாஸோப்பிரஸ்ஸின் மற்றும் ஆஞ்சியோடென்சின்-II
- மிகை ரத்த அழுத்தத்திற்கு சிஸ்டாலிக் அழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கும்?
150 மிமீ பாதரசம்
- மிகை ரத்த அழுத்தத்திற்கு டயஸ்டாலிகா அழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கும்?
90.மிமீ பாதரசம்
- இதயத் தமனிகளின் உட்புறம் படிவுகள் தோன்றி இரத்தக் குழல்கள் குறுகலடையும் நோய்க்கு பெயர் என்ன?
இதய தசை தமனி நோய்
- கொலஸ்ட்ரால் ,நார்ப்பொருட்கள் ,இறந்த தசை செல்கள் மற்றும் ரத்த பிளேட்லெட்டுகள் போன்றவைகளை கொண்ட அதிரோமா உருவாக்குதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அதிரோஸ்கிலெரோசிஸ்
- தமனிகளின் உட்புற சுவரில் பற்று படிவுகள் பெரிதாகி இதய ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவுக் கட்டிகளை உருவாக்கலாம் இதற்கு என்ன பெயர்?
கரோனரி திராம்பஸ்
- கரோனரி திராம்பஸ் எதை ஏற்படுத்துகிறது?
மாரடைப்பு
- மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பதினாலோ அல்லது மூளைக்கு செல்லும் தமனிகளில் ரத்த கட்டி அல்லது பற்று படிவுகள் தோன்றுவதாலோ ஏற்படுவது எது?
பக்கவாதம்
- சிதைவடைந்த தமனிகள் செல்லும் மூளைப் பகுதிக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் அப்பகுதி இறந்துவிடுகிறது இது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பெருமூளை நசிவு நோய்
- தமனிகளில் ஏற்படும் ரத்த உறைவு கட்டி அல்லது திராம்பஸ் காரணமாக ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு இதய தசைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவு குறைகிறது இது இதயத்தை பலவீனப்படுத்துகிறது இந்த நிலைக்கு பெயர் என்ன ?
இஸ்கிமிக் இதயநோய்
- ருமாட்டிக் காய்ச்சல் என்ன வகையான நோய்?
சுய தடைகாப்பு குறைபாட்டு நோய்
- ருமாட்டிக் இதய நோய் எதனால் ஏற்படுகிறது?
ஒருவரின் தொண்டைப் பகுதியில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியங்கள் தாக்குவதால்
- ருமாட்டிக் காய்ச்சலுக்கு எதிராக தோன்றும் நோய் எதிர் வினை பொருள் எதை பாதிக்கின்றது?
மிட்ரல் வால்வில் நார்த்திசுக் முடிச்சுகள் தோன்றுதல், நாரிழை இணைப்புத்திசு அழற்சி மற்றும் பெரிகார்டிய குழியினுள் திரவம் சேர்தல் போன்ற விளைவுகள்
- சிறப்பு சாயத்தினை இதய தசை இரத்தக் குழாயினுள் செலுத்தி அதனுள் ரத்தம் எவ்வாறு பாய்கிறது என்பதை Xகதிர் மூலம் ஆராய்ந்து கண்டறிதலுக்கு பெயரென்ன?
ஆன்ஜியோகிராம்
- அதிரோ ஸ்கெலரோசிஸினால் குறுகலடைந்த இதயத் தசை தமனிகளை விரித்து நீட்சி அடைய செய்தலுக்கு பெயரென்ன?
ஆன்ஜியோபிளாஸ்டி
- சிரை நாளங்கள் அதிகமாக விரிவடைவதால் தளர்ந்து போகின்றன இதற்கு என்ன பெயர் ?
சுருள் ரத்த நாளங்கள் (vericose veins)
- சுருள் ரத்த நாளங்கள் (vericose veins) பொதுவாக எங்கு காணப்படுகின்றன?
கால்கள் ,மலக்குடல்- மலவாய் பகுதிகள் ,உணவுக்குழல் மற்றும் விந்தக நாளங்கள்
- எம்போலிஸ்ம் என்பது என்ன?
ரத்த நாளங்களில் தோன்றும் அடைப்பு
- மிகவும் பலவீனம் அடைந்துள்ள தமனி அல்லது சிரைகளின் சுவர்கள் விரிந்து ஒரு பலூன் போன்ற பையாகிறது . இதற்கு என்ன பெயர் ?
குருதிநாளப்பையாக்கம்(Aneurysm)
- பொதுவாக எந்த பகுதிகளில் இருந்து பெற்ற நல்ல நிலையில் உள்ள ரத்தக்குழாய் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாற்றுவர்?
கால் பகுதிகள்
- வாயோடு வாய் வைத்து உயிர்ப்பித்தல் என்னும் முறையை (CPR) முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார்?
ஜேம்ஸ் எலாம் மற்றும் பீட்டர் சாஃபன் 1956
- CPRன் விரிவாக்கம் என்ன?
Cardio pulmonary Resuscitation
- முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை எப்போது செய்யப்பட்டது?
1959
- முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் யார்?
தென்னாப்பிரிக்காவின் பேராசிரியர் கிறிஸ்டியன் பெர்னார்ட் டிசம்பர் 3, 1967 கேப் டவுனில் உள்ள க்ரூட் ஷீர் மருத்துவமனையில் மனித இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார்
- இந்தியாவில் முதன்முதலில் எந்த ஆண்டு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது ?
1994, ஆகஸ்ட் 3ஆம் தேதி டாக்டர் .அனங்கிப்பள்ளி வேணுகோபால்
- மூளைச் சேதம் அல்லது மரணத்தைத் தவிர்க்க மூச்சு நின்ற எத்தனை நிமிடங்களுக்குள் இதய நுரையீரல் உயிர்பித்தல் முறையை மேற்கொள்ள வேண்டும்?
நான்கு முதல் ஆறு நிமிடங்களுக்குள்
11TH ZOOLOGY STUDY NOTES | உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services