11TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. மனித சமூகத்தின் ஆதிநிலம் எது?
  • மலை
  1. தமிழ் அகத்திணையியல் மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை எவ்வாறு குறிக்கிறது?
  • குறிஞ்சி
  1. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு எனும் உரைநடையை எழுதியவர் யார்?
  • ஆர். பாலகிருஷ்ணன்
  1. திராவிடர்களை மலை நில மனிதர்கள் என அழைத்தவர் யார் ?
  • கமில்சுவலபில்
  1. “சேயோன் மேய மைவரை உலகம்” என உரைக்கும் நூல் எது ?
  • தொல்காப்பியம்
  1. “விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • திருமுருகாற்றுப்படை
  1. மால் பஹாடியா எனும் இனக்குழு எந்த மாநிலத்தில் உள்ளது?
  • ஜார்கண்ட்
  1. மல அரயன் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
  • மேற்கு தொடர்ச்சி மலைகள் கேரளம்
  1. நெடுமங்காடு- கேரள பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
  • மல குறவன்
  1. மல மூத்தன் எனும் இனக்குழு அமைந்துள்ள இடம் எது?
  • எர்நாட்-கேரளம்
  1. மல பணிக்கர் எனும் இனக்குழு எங்கு உள்ளது?
  • வட கேரளம்
  1. மலயன் இனக்குழு காணப்படும் இடம் எது?
  • பாலக்காடு கேரளம்
  1. மல வேடா இனக்குழு உள்ள இடம்?
  • இடுக்கி கேரளம்
  1. தட்சிண கன்னடா மற்றும் கர்நாடக பகுதிகளில் உள்ள இனக்குழுவின் பெயர் என்ன?
  • மலேரு
  1. கோட்டா இனக்குழு உள்ள இடம்?
  • நீலகிரி தமிழ்நாடு
  1. கொண்டா தோரா இனக்குழு காணப்படும் இடம்?
  • ஆந்திர பிரதேசம்
  1. கோண்டு,கொய்ட்டெர் இனக்குழு காணப்படும் இடம்?
  • ஒடிஸா
  1. பால் எருமை கொட்டில்களை புனித இடமாக கருதுபவர்கள் யார்?
  • நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர்
  1. குறும்பர் மொழியில் தாழ்வாரத்தை குறிக்கப் பயன்படும் சொல் எது?
  • மெட்டு
  1. ஜதாப்பு எனப்படும் திராவிட பழங்குடியினரின் குடியிருப்புகள் காணப்படும் இடம் எது?
  • ஆந்திரா மற்றும் ஒரிசா
  1. திராவிட சொல்லான மலை என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
  • மலய
  1. எந்த அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ஒருவன் மலையத்துவஜ என அழைக்கப்பட்டான்?
  • பாண்டிய மன்னன்
  1. வடமொழியில் மலய என்ற சொல் எங்கு உள்ள மலைகளை குறிக்கிறது?
  • மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளை
  1. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரமானது என குறிக்கப் பயன்படும் சொல் எது?
  • மலை
  1. தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் உயரம் குறைவானது என பொருள்படும் சொல் எது?
  • குன்று
  1. வரை என்ற சொல் எந்தெந்த பொருளில் பயன்படுத்தப்படுகிறது?
  • கோடு மலை சிகரம் விளிம்பு கரை எல்லை நுனி
  1. நுனி முதல் அடிவரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் வரை என்ற சொல் எந்த பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
  • விளிம்பு
  1. திராவிட சொற்கள் பயன்படுத்தப்படும் மாநிலத்தில் உள்ள மாவட்டத்தை குறிப்பிடுக:

மலை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் என்னென்ன ?

1.உத்தராஞ்சல்            -1. சமோலி

2.ஜார்கண்ட்     -2. கும்லா

  1. உத்திரப்பிரதேசம்-3. ஜவுன்பூர்
  2. வரை எனும் சொல் பயன்படுத்தப்படும் மாவட்டங்கள் எந்தெந்த மாநிலத்தில் உள்ளன?

1.வல்ஸட்         -1. குஜராத்

2.தாணே         -2. மஹாராஷ்டிரா

3.காங்க்ரா        -3. ஹிமாச்சலப் பிரதேசம்

  1. ஜலந்தர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் ,அஜ்மீர் மாவட்டம் ராஜஸ்தான் மாநிலம் ,உடுப்பி மாவட்டம் கர்நாடக மாநிலம் இவற்றில் பயன்படுத்தப்படும் திராவிட சொல் எது?
  • மலா
  1. தமிழ்நாட்டில் மட்டும் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் முன்னொட்டாக இடம்பெறுகின்றது?
  • 17
  1. தமிழ்நாட்டில் மலை என்ற சொல் எத்தனை இடப்பெயர்கள் பின்னொட்டாக இடம்பெறுகின்றது?
  • 84
  1. எந்த மாநிலத்தில் மல் எனும் வேர்ச் சொல் மலை என்று வழங்கப் படுவதற்கு பதிலாக மலா என வழங்கப்படுகிறது?
  • ஆந்திரா
  1. மலை என்ற வடிவம் தோணி மலை எனும் இடத்தில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படும் மாநிலம் எது?
  • கர்நாடகம்
  1. கர்நாடகத்தில் மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான மலே
SEE ALSO  9TH PHYSICS STUDY NOTES |ஒலி| TNPSC GROUP EXAMS

எத்தனை இடப்பெயர்களில் இடம்பெறுகிறது?

  • 15
  1. கேரள மாநிலத்தில் எத்தனை மலை  விகுதி இடப்பெயர்கள் உள்ளன
  • 10
  1. தமிழ் மொழியில் காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பை குறிக்கும் சொல் எது?
  • கோட்டை
  1. கோட்டை, கோடு ஆகிய தமிழ் சொற்கள் மற்ற மொழிகளில் எவ்வாறு திரிந்து உள்ளன என்பதை குறிப்பிடுக:

1.மலையாளம்             -கோட்ட,கோடு

2.கன்னடம்                  -கோட்டே,கோண்டே

3.தெலுங்கு     -கோட்ட

4.துளு             -கோட்டே

5.தோடா                      -க்வாட்

  1. இந்தியாவில் கோட்டை என்று முடியும் எத்தனை இடப்பெயர்களும் தமிழ்நாட்டில் தான் உள்ளன?
  • 248
  1. கோடு என்ற சொல்லின் பொருள்  என்னென்ன?
  • மலை உச்சி, சிகரம் ,மலை,வல்லரண், கோட்டை
  1. KVT Complex என்பவற்றில் இடம்பெற்றுள்ள பழந்தமிழ் ஊர்கள் என்னென்ன?
  • கொற்கை வஞ்சி தொண்டி
  1. திராவிடர்களின் மலை பெருமிதத்தின் சாட்சியாக வடமேற்கு நாடுகளான எவற்றில் நெடுமலைகளோடு பொருந்திப்போகும் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன?
  • ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான்
  1. ஆர் பாலகிருஷ்ணன் எத்தனை ஆண்டுகளாக இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்?
  • 28 ஆண்டுகள்
  1. வடமேற்கு இந்தியாவில் இன்று வரை வழக்கில் உள்ள கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை ஆய்வு உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்?
  • ஆர்.பாலகிருஷ்ணன்
  1. ஆர் பாலகிருஷ்ணன் எந்த நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்?
  • தினமணி
  1. ஆர் பாலகிருஷ்ணன் எந்த இலக்கிய இதழின் ஆலோசகர் குழுவில் பங்காற்றியிருக்கிறார்?
  • கணையாழி
  1. 1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வை முதல் முதலாக முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார்?
  • ஆர்.பாலகிருஷ்ணன்
  1. மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு என்னும் உரைநடை ஆர் பாலகிருஷ்ணனின் எந்த நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?
  • சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
  1. ” அருணகிரி நாவில் பழக்கம் தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம்”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • காவடிசிந்து
  1. சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடி சிந்து யாருடைய தாக்கத்தால் விளைந்தது?
  • அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால்
  1. முதன்முதலில் வண்ண சிந்து பாடியவர் யார் ?
  • சென்னிகுளம் அண்ணாமலையார்
  1. சென்னிகுளம் அண்ணாமலையார் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
  • காவடி சிந்தின் தந்தை
  1. சென்னிகுளம் அண்ணாமலையார் யாரிடம் அரசவை புலவராக இருந்தார்?
  • ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர்
  1. சென்னிகுளம் அண்ணாமலை யார் எழுதிய வேறு நூல்கள் என்னென்ன?
  • வீரை தலபுராணம் ,வீரை நவநீத கிருஷ்ண சாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக் கோவை, கோமதி அந்தாதி
  1. “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • குறுந்தொகை
  1. “தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்”- இவ்வரிகளை இயற்றியவர் யார்?
  • வெள்ளிவீதியார்
  1. “அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர்”என்னும் குறுந்தொகை பாடல் இயற்றப்பட்ட திணை எது?
  • குறிஞ்சித்திணை
  1. குறுந்தொகை எந்தத் துறை சார்ந்த பாடல்களை உடையது?
  • அகத்திணை
  1. குறுந்தொகை நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன?
  • 401
  1. குறுந்தொகை எவ்வாறு சிறப்பித்து உரைக்கப்படுகிறது?
  • நல்ல குறுந்தொகை
  1. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் எது?
  • குறுந்தொகை
  1. முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படும் நூல் எது?
  • குறுந்தொகை
  1. “உண்டால் அம்ம…”எனத் தொடங்கும் பிறருக்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தை விளக்கும் பாடல் இடம் பெற்ற நூல் எது?
  • புறநானூறு
  1. குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
  • பூரிக்கோ
  1. குறுந்தொகை நூலின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  1. வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்கள் சங்கத் தொகை நூல்களில் எத்தனை உள்ளன?
  • பதிமூன்று பாடல்கள்
  1. தமிழரின் வாழ்வியல் கருவூலம் என அழைக்கப்படும் நூல் எது?
  • புறநானூறு
  1. “..இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே..”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • புறநானூறு
  1. ”தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”- வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • புறநானூறு
  1. “…பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர்.. “-இவ்வரிகளை இயற்றியவர் யார்?
SEE ALSO  11TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

  1. வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகளையும் பொதுவான செய்திகளையும்த் தொகுத்துக் கூறும் திணை?

 பொதுவியல் திணை

  1. மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் எந்தத் துறை?

 பொருண்மொழிக் காஞ்சித் துறை

  1. “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள திணை எது?

 பொதுவியல் திணை

  1. “உண்டால் அம்ம இவ்வுலகம்…” எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடல் பாடப்பட்டுள்ள துறை எது?

 பொருண்மொழிக் காஞ்சித் துறை

  1. புறநானூற்றை the four hundred songs of war and wisdom an anthology of poems from classical Tamil the purananooru என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

 பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்

  1. ஜி யு போப் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எந்த தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்?
  • extracts from purananuru and puraporul venbamalai
  1. புறநானூறு எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?
  • 400 பாடல்கள்
  1. புறநானூற்றுப் பாடல்கள் எந்த பாவகையால் ஆனது?
  • அகவற்பா
  1. புறநானூறு நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் என்னென்ன?
  • புறம், புறப்பாட்டு
  1. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எத்தனை பாடல்களை எழுதியுள்ளார்?
  • புறநானூற்றில் ஒரு பாடலும் பரிபாடலில் ஒரு பாடலும்
  1. வாடிவாசல் எனும் சிறுகதை இயற்றியவர் யார்?
  • சி சு செல்லப்பா
  1. “..கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் ..”-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
  • கலித்தொகை
  1. அளவில் சிறுகதையை விட நீளமாகவும் புதினத்தை விட சிறியதாகவும் இருக்கும் கதை எவ்வாறு அழைக்கப்படும்?
  • குறும்புதினம் அல்லது குறுநாவல்
  1. சி சு செல்லப்பா எந்த இதழ்களில் உதவி ஆசிரியராக பணியாற்றி உள்ளார்?
  • சந்திரோதயம் தினமணி
  1. சி சு செல்லப்பா எந்த இதழைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்?
  • எழுத்து
  1. சி சு செல்லப்பாவின் குறிப்பிடத்தக்க படைப்புகள் என்னென்ன?
  • வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி எஸ் ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ் சிறுகதை பிறக்கிறது
  1. சி சு செல்லப்பாவின் எந்த நூலுக்காக சாகித்ய அகடமி விருது கிடைத்தது?
  • சுதந்திரதாகம் (2001)
  1. தமிழ் பதிப்புலகின் தலைமகன் என போற்றப்படுபவர் யார்?
  • சி.வை தாமோதரனார்
  1. தமிழ் பதிப்புலகின் தலைமகன் எங்கு பிறந்தார்?
  • இலங்கை யாழ்ப்பாணம்
  1. தமிழ் பதிப்புலகின் தலைமகனின் காலம் என்ன?
  • 1832 – 1901
  1. தாமோதரனார் தனது 20வது வயதிலேயே எந்த நூலுக்கு உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்?
  • நீதிநெறிவிளக்கம்
  1. எந்த ஆண்டு தொல்காப்பியர் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் உரையை பதிப்பித்து தாமோதரனார் வெளியிட்டார்?
  • 1868
  1. தாமோதரனார் எழுதிய நூல்கள் என்னென்ன?
  • கட்டளைக்கலித்துறை, நட்சத்திர மாலை ,சூளாமணி வசனம், ஆறாம் வாசகப் புத்தகம்
  1. தினவர்த்தமானி என்னும் இதழினை நடத்தியவர் யார்?
  • பெர்சிவல் பாதிரியார்
  1. தாமோதரனார் எந்த இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்?
  • தினவர்த்தமானி
  1. தாமோதரனார் எந்த கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்?
  • சென்னை மாநிலக் கல்லூரி
  1. தாமோதரனார் பி எல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் எங்கு வழக்கறிஞராக பணியாற்றினார்?
  • கும்பகோணம்
  1. தாமோதரனார் எந்த ஆண்டு புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்?
  • 1884
SEE ALSO  11TH TAMIL IYAL 01 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

11TH TAMIL IYAL 03 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: