11TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS


TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

 

  1. மொழிமுதல் எழுத்துக்கள் எத்தனை?

 22 (உயிர் எழுத்து 12 +மெய்யெழுத்து 10)

  1. உயிரெழுத்துக்கள் எத்தனை சொல்லின் முதலில் வரும்?

 12

  1. தனிமை வடிவில் சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகள்?

 மெய்யெழுத்துக்கள்

  1. மெய்களில் எத்தனை வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாக சொல்லின் முதலில் வரும் ?

 க,ங,ச,ஞ,த,ந,ப,ம,ய,வ எனும் பத்து வரிசைகள்

  1. எந்த சொல்லில் மட்டும் ங முதலில் வரும் ?

 ஙனம்

  1. எந்த எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை?

ட,ண,ர,ல,ள,ற,ன (ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது)

  1. ஙனம் என்பதன் பொருள் என்ன ?

 விதம்

  1. ஙனம் என்னும் சொல் எந்த எழுத்துக்களுடன் இணைந்து வரும்?

அ,இ,உ எழுத்துக்கள் மற்றும் எ,யா எனும் வினா எழுத்துக்கள்

  1. மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?

 24(உயிர் எழுத்து 12 +மெய்யெழுத்து 11 +குற்றியலுகரம் ஒன்று)

  1. உயிரெழுத்துக்களில் எத்தனை சொல்லின் இறுதியில் வரும்?

 12

  1. மெய்களில் எத்தனை எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்?

 ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள் எனும் 11 எழுத்துக்கள்

  1. எந்த எழுத்துகள் சொல்லின் இறுதியில் வருவது இல்லை?

  க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற வல்லினமெய் ஆறும்,ங் எனும் மெல்லினமெய் ஒன்றும்

  1. பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ள எழுத்துக்கள் என்னென்ன?

 ஞ்,ந்,வ்

  1. இரண்டு சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வரும் பொழுது முதலில் நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

நிலைமொழி

  1. இரண்டு சொற்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வரும் பொழுது அடுத்து நிற்கும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?

 வருமொழி

  1. நிலைமொழியும் வருமொழியும் இணைவதற்கு பெயர் என்ன?

புணர்ச்சி

  1. நிலைமொழியிலும் வருமொழியிலும் எந்த எழுத்து புணர்ச்சிக்கு உரியன?

நிலைமொழியின் ஈற்றெழுத்து வருமொழியின் முதலெழுத்து

  1. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது எவ்வாறு அழைக்கப்படும் ?

 உயிரீறு

  1. நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

மெய்யீறு

  1. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

 உயிர்முதல்

  1. வருமொழியின் முதல் எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

மெய்முதல்

  1. சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும், வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துக்கள் சந்திக்கும் முறை எத்தனை வகையாக பிரிக்கப்படுகிறது?

 4

  1. இலக்கண வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும்?

 4

  1. சார்பெழுத்துக்களுள் எந்த எழுத்து சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது?

 ஆயுதம்

  1. சார்பெழுத்துக்களுள் எந்த எழுத்து சொல்லின் முதலில் வராது ?

 குற்றியலுகரம் (நுந்தை தவிர) குற்றியலிகரம்

  1. குற்றியலுகரத்தின் எத்தனை வகைகள் சொல்லின் இறுதியில் வருகின்றன?

 ஆறு: நெடில்தொடர் ,உயிர்த்தொடர் ,வன்தொடர் ,மென்தொடர் ,இடைத்தொடர் ,ஆய்தத் தொடர்

  1. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலை மொழி எவ்வாறு அழைக்கப்படும்?

குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி


மெய்மயக்கம்

 

  1. சொல்லின் இடையில் மெய் எழுத்துக்கள் அடுத்தடுத்து வருவது எவ்வாறு அழைக்கப்படும் ?

மெய்மயக்கம்

  1. மெய்மயக்கம் எத்தனை வகைப்படும்?

இரண்டு: உடனிலை மெய்மயக்கம் , வேற்றுநிலை மெய்மயக்கம்

  1. சொற்களின் இடையில் ஒரே மெய் எழுத்து அடுத்தடுத்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

உடனிலை மெய்மயக்கம்

  1. தமிழில் எந்த மெய்யெழுத்துக்கள் தம் எழுத்துக்களுடன் மட்டும் சேரும் உடனிலை மெய்மயக்கம் எழுத்துக்களாகும்?

க்,ச்,த்,ப்

  1. சொல்லின் இடையில் வெவ்வேறு மெய் எழுத்துக்கள் தொடர்ந்து வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

வேற்றுநிலை மெய்மயக்கம்

  1. எந்த இரண்டு மெய் எழுத்துக்கள் தம் வரிசை எழுத்துக்களுடன் சேர்ந்து வராமல் பிற மெய் எழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்?

 ர்,ழ்

  1. எந்த எழுத்துக்களை தவிர்த்த ஏனைய 12 மெய்களும் உடனிலை மெய்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்மயக்கமாகவும் உள்ளன?

 க்,ச்,த்,ப்,ர்,ழ்

  1. தனிச் சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் என்ன மெய்கள் ஈரொற்றாய் வரும்?

 ய்,ர்,ழ்

  1. தனிச் சொற்களிலோ கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் ய்,ர்,ழ் மெய்கள் வருவது எவ்வாறு அழைக்கப்படும்?

ஈரொற்று மெய்மயக்கம்

  1. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

மூன்று: வல்லினம், மெல்லினம் ,இடையினம்

  1. சொற்களின் இடையில் மெல்லின எழுத்துக்களுக்கு பின் வல்லின மெய்கள் மட்டுமே வருவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இன எழுத்துக்கள் அல்லது நட்பெழுத்துக்கள்

  1. ணகர,நகர,னகர வேறுபாட்டினை அறியாமல் எழுதுவதால் ஏற்படும் பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மயங்கொலிப் பிழை


பகுபத உறுப்புகள்

 

  1. பெயர் சொல்லும் வினைச் சொல்லும் பிரித்து பொருள் தரும் நிலையில் இருந்தால் அவை எவ்வாறு அழைக்கப்படும் ?

பகுபதங்கள்

  1. பகாப்பதத்திற்குரியவை எந்த சொற்கள்?

இடைச்சொற்கள் ,உரிச்சொற்கள்

  1. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

6 :பகுதி, விகுதி ,இடைநிலை ,சந்தி, சாரியை ,விகாரம்

  1. ஒரு வினைப் பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் என்னென்ன ?

பகுதி மற்றும் விகுதி

  1. ஒரு பகுபதத்தில் எது பொருள்தரும் உறுப்புகளாகும் ?

பகுதி, விகுதி ,இடைநிலை

  1. பகுதி என்பது என்ன?
SEE ALSO  12TH HISTORY STUDY NOTES | காலனியத்துக்கு பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு | TNPSC GROUP EXAMS

ஒரு சொல்லின் அடிச்சொல் பகுதி

  1. பகுதி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 முதனிலை

  1. விகுதி பெறாத ஏவல் வினையாக வரும் பகுபத உறுப்பு எது ?

பகுதி

  1. ஒரு வினைமுற்று சொல்லின் இறுதியில் நின்று திணை, பால் ,எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு எது?

விகுதி

  1. வியங்கோள் ,தொழிற்பெயர் ,பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கண பொருண்மைகள உணர்த்த எந்த பகுபத உறுப்பு பயன்படுகிறது?

விகுதி

  1. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு என்ன பெயர்?

இடைநிலை

  1. வினைப் பகுபதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும் ?

இரண்டு: கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை

  1. பெயர்ப் பகுபதத்தில் வரும் இடைநிலை எவ்வாறு அழைக்கப்படும்?

பெயர் இடைநிலை

  1. ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு எவ்வாறு அழைக்கப்படும்?

 கால இடைநிலை அல்லது காலம் காட்டும் இடைநிலை

  1. இறந்த கால இடைநிலைகள் என்னென்ன?

 த்,ட்,ற்,இன்

  1. நிகழ்கால இடைநிலைகள் என்னென்ன?

கிறு,கின்று,ஆநின்று

  1. எதிர்கால இடைநிலைகள் என்னென்ன?

 ப்,வ்

  1. எதிர்மறை இடைநிலைகள் என்னென்ன?

 ஆ,அல்,இல்

  1. எதிர்மறை வினைச் சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறை உணர்த்தும் இடைநிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

எதிர்மறை இடைநிலை

  1. எந்த எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும், உயிர் எழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும் ?

  1. ஒரு ஆக்க பெயர்ச்சொல்லை பெயர் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை எது?

 பெயர் இடைநிலை

  1. என்ன மெய்கள் பெயர் இடைநிலைகளாக வரும்?

ச்,ஞ்,ந்,த்,வ்

  1. சந்தி என்பதற்கு என்ன பெயர் ?

 புணர்ச்சி

  1. பகுதி விகுதி இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும் போது இடையில் தோன்றுவது எது ?

 சந்தி

  1. சந்தி எதற்கு இடையில் வருவது பெருவழக்கு?

 பகுதிக்கும் இடைநிலைக்கும்

  1. புணர்ச்சியின் போது ஏற்படும் விகாரங்களான தோன்றல் ,திரிதல், கெடுதல் ஆகியவை எவ்வாறு அழைக்கப்படும்?

சந்தி

  1. ஓர் எழுத்துத் தோன்றுதல் எவ்வாறு அழைக்கப்படும்?

சந்தி

  1. மற்ற திரிதலையும் கெடுதலையும் எவ்வாறு வழங்குவர்?

விகாரம்

  1. பெரும்பாலும் எந்த மூன்று எழுத்துக்களில் ஒன்று சந்தியா வரும்?

 க்,த்,ப் (உடம்படுமெய்கள் (ய்,வ்) சந்தியாக வருவதும் உண்டு)

  1. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எவ்வாறு அழைக்கப்படும் ?

 எழுத்துப்பேறு

  1. சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடம் அளித்து வந்தால் அது எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?

எழுத்துப்பேறு

  1. விகுதி தனியே வராமல் துணையாக பெற்று வரும் எழுத்து எவ்வாறு அழைக்கப்படும் ?

எழுத்துப்பேறு

  1. எழுத்துப்பேறு என்ன வகை காலத்தை காட்டும்?

 காலம் காட்டாது

  1. பகுதியோடு இடை நிலையும், இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாக சார்ந்து இயைய வரும் உறுப்பு எது?

சாரியை

  1. சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அது எவ்வாறு குறிப்பிடப்பட வேண்டும் ?

 சாரியை

  1. அன் என்பது விகுதியாக வரும்போது எது சாரியையாக வரும்?

அன்

  1. எந்த விகுதிகளைப் பெற்று வரும் பொழுது அன் சாரியையாக வராது?

ஆன்,ஆள்,ஆர்

  1. பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படும்?

விகாரம்

  1. இறந்தகால இடைநிலைகள் என்னென்ன?

த்,ட்,ற்,ன்

  1. நிகழ்கால இடைநிலைகள் என்னென்ன?

கிறு, கின்று ,ஆநின்று

  1. எதிர்கால இடைநிலைகள் என்னென்ன?

 ப்,வ்

  1. எதிர்மறை இடைநிலைகள் என்னென்ன?

 ஆ,அல்,இல்

  1. தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

 என்,ஏன்,அல்,அன்,கு,டு,து,று

  1. தன்மை பன்மை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

எம்,ஏம்,அம்,ஆம்,ஓம்,கும்,டும்,தும்,றும்

  1. முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

 ஐ,ஆய்,இ

  1. முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

இர்,ஈர்,மின்

  1. படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

 அன்,ஆன்

  1. படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

 அள்,ஆள்

  1. படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

அர்,ஆர்,ப,மார்,கள்

  1. படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

து,று,டு

  1. படர்க்கை பலவின்பால் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

அ,ஆ

  1. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் என்னென்ன?

 க,இய,இயர்

  1. தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் என்னென்ன?

 அ,உம்

  1. தெரிநிலை வினையெச்ச விகுதிகள் என்னென்ன?

 உ,இ


புணர்ச்சி விதிகள்

 

  1. நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்து உயிர் எழுத்துக்களாய் இருந்தால் உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும். உடன்படாத அவ்விருமொழிகளையும் சேர்த்து புணர்க்கம வரும் மெய் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

உடம்படுமெய்

  1. உடம்படுமெய்களாக வரும் மெய்கள் எது?

 ய்,வ்

  1. ட்,ற் இன்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் எந்த வகை குற்றியலுகரங்கள் வரும் மொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்து புணரும்?

நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

  1. இயல்பீறாகவோ, விதியீறாகவோ நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர் எழுத்துடன் எந்த வல்லின மெய்கள் முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும் போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்?

 க,ச,த,ப

  1. நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடன் சேரும் புணர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -24|மலைபடுகடாம்

மெய்யீற்றுப் புணர்ச்சி

  1. நிலைமொழி சொல்லின் இறுதி எழுத்தாக மகர மெய் வரும்போது அச்சொல் எத்தனை நிலைகளில் புணரும்?

 3: மகரமெய் கெட்டு புணரும், மகரம் கெட்டு இன மெல்லெழுத்து தோன்றிப் புணரும், வல்லினம் மிக்குப் புணரும்


படைப்பாக்க உத்திகள்

 

  1. ஒன்றை மற்றொன்று ஒப்பிட்டு கூறுவதற்கு பயன் படுததுவது?

 உவமை 

  1. எந்த  நான்கின் அடிப்படையில் உவமைத் தோன்றும் என்று தொல்காப்பியர் கூறுகிறார் ?

வினை(தொழில்),பயன்,வடிவம் (மெய் ) ,உரு ( நிறம்)

  1. சங்கப் பாடல்களில் பெரும்பாலும் என்ன அணி இடம்பெறுகிறது?

உவமையணி

  1. ஒப்பிட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது ஒரு சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

உருவகம்

  1. உவமையையும் ,உவமிக்கப்படும் பொருளையும் வேறு படுத்தாமல் இரண்டும் ஒன்றே எனக் கூறுவது எது ?

உருவகம்

  1. உருவகத் தொடரில் எது முன்னும் பின்னுமாக அமையும்?

உவமேயம் முன்னும் ,உவமை பின்னும்

  1. உவமையின் செறிவார்ந்த வடிவம் எது?

உருவகம்

  1. கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாக கூறாமல் அகமாந்தரின் மன உணர்வுகளைக் கருப்பொருள்கள் மூலம் உவமைப் படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும்?

உள்ளுறை உவமம்

  1. உள்ளுறை எதன் அடிப்படையில் தோன்றும் ?

வினை, பயன் போன்றவைகள்

  1. உரிப்பொருளோடு நேரடி தொடர்பில்லாத குறிப்புப் பொருள் எவ்வாறு அழைக்கப்படும்?

 இறைச்சி

  1. இறைச்சி வட மொழியினர் குறிப்பிடுகின்ற எதற்கு இணையானது?

தொனி

  1. இறைச்சி எந்த வகை பாடலில் மட்டுமே வரும் ?

அகப்பாடல்


பா இயற்றப் பழகலாம்

 

  1. செய்யுளின் உறுப்புகள் என்னென்ன?

எழுத்து, அசை ,சீர் ,தளை ,அடி ,தொடை

  1. பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள் , பாக்கள் இயற்றுவதற்கு உரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது எந்த நூல் ?

யாப்பருங்கலக்காரிகை

  1. வெண்பாவிற்குரிய ஓசை எது ?

செப்பலோசை

  1. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை ?

அகவலோசை

  1. கலிப்பாவிற்குரிய ஓசை எது?

 துள்ளலோசை

  1. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?

தூங்கலோசை

  1. குறளடி எத்தனை சீர்களை உடையது?

 இரண்டு

  1. சிந்தடி எத்தனை சீர்களை உடையது ?

மூன்று

  1. அளவடி அல்லது நேரடி எத்தனை சீர்களை உடையது ?

நான்கு

  1. நெடிலடி எத்தனை சீர்களை உடையது?

 ஐந்து

  1. கழிநெடிலடி எத்தனை சீர்களை உடையது?

 ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவை

  1. அகவலோசை பெற்றிருப்பதால் ஆசிரியப்பா வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

அகவற்பா

  1. எந்தப் பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாகக் உள்ளன ?

ஆசிரியப்பா

  1. நேரசைக்கு உரிய விதிகள் என்னென்ன?

குறில் தனித்து வருதல் , குறில் ஒற்றுடன் வருதல், நெடில் தனித்து வருதல் ,நெடில் ஒற்றுடன் வருதல்

  1. நிரசைக்கு உரிய விதிகள் என்னென்ன?

இரு குறில் இணைந்து வருதல், இரு குறில் இணைந்து ஒற்றுடன்  வருதல், குறில்நெடில் இணைந்து வருதல், குறில் நெடில் இணைந்து  ஒற்றுடன் வருதல்

  1. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் எது ?

இயற்சீர்

  1. இயற்சீர் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?

ஆசிரிய உரிச்சீர்

  1. தேமா புளிமா ஆகிய இரண்டும் என்ன அசை சீர்கள்?

நேரீற்று ஈரசை சீர்கள்

  1. கருவிளம் கூவிளம் ஆகிய இரண்டும் என்ன அசை சீர்களாக வருகிறது?

நிரையீற்று ஈரசைச் சீர்கள்

  1. இறுதிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது என்னவகை ஆசிரியப்பா ?

 நேரிசை ஆசிரியப்பா

  1. முதல் அடியும் இறுதி அடியும் நான்கு சீர்கள் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வருவது என்ன வகை ஆசிரியப்பா?

 இணைக்குறள் ஆசிரியப்பா

  1. எல்லா அடிகளும்  நான்கு சீர்களைப் பெற்று வருவது என்ன வகை ஆசிரியப்பா ?

நிலைமண்டில ஆசிரியப்பா

  1. பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது என்ன வகை ஆசிரியப்பா?

அடிமறி மண்டில ஆசிரியப்பா

  1. ஆசிரியப்பாவின் இனங்கள் என்னென்ன?

ஆசிரியத்தாழிசை ,ஆசிரியத்துறை,ஆசிரிய விருத்தம்

  1. ஆறு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  1. ஏழு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  1. எட்டு சீர்களால் அமைந்த பாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

  1. ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கழிநெடிலடி


ஆக்கப் பெயர்கள்

 

  1. பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச்சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

ஆக்கப்பெயர்கள்

  1. பெயர்ச் சொற்களை ஆக்க பயன்படும் விகுதிகள் எவ்வாறு அழைக்கப்படும் ?

ஆக்கப்பெயர் விகுதிகள்

  1. தமிழிலுள்ள ஆக்கப்பெயர் விகுதிகள் என்னென்ன?

காரன் ,காரர்,காரி, ஆள், ஆளர், ஆளி,தாரர்,மானம்  போன்றவைகள்

  1. ஆக்கப் பெயர்ச் சொற்களை ஈற்றில் நிற்கும் விதிகளைக் கொண்டு எத்தனை வகையாக பிரிக்கலாம் ?

மூன்று: பெயருடன் சேரும் விகுதிகள், வினையுடனும் எச்சத்துடனும் சேரும் விகுதிகள் ,பெயருடனும் வினையுடனும்  சேரும் விகுதிகள்

  1. காரன்,காரி,காரர் ஆகிய ஆக்கப்பெயர் விகுதிகள் என்ன பொருளில் வரும் ?

உடைமை ,உரிமை ,உறவு அல்லது தொடர்பு ,தொழில் அல்லது ஆளுதல்


நிறுத்தக்குறிகள்

 

  1. பொருள்களைத் தனித்தனியாக குறிப்பிடும் இடங்கள், எச்ச சொற்றொடர்கள் ,எடுத்துக்காட்டுகள் ,இணைப்புச்சொற்கள் ,திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும் ?
SEE ALSO  11TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

காற்புள்ளி

  1. தொடர்நிலை தொடர்களிலும் ஒரு சொல்லுக்கு வேறுபட்ட பொருள் கூறும் இடங்களிலும் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும் ?

அரைப்புள்ளி

  1. சிறு தலைப்பு நூற்பகுதி எண், பெரும் கூட்டுத்தொடர் முதலிய இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?

முக்காற்புள்ளி

  1. தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி ,சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும் ?

முற்றுப்புள்ளி

  1. ஒரு வினாத்தொடர் முற்று தொடராகவும், நேர்க்கூற்று தொடராகவும் இருப்பின் இறுதியில் என்ன நிறுத்தற்குறியீடு வரவேண்டும்?

வினாக்குறி

  1. விடை சொல்லுக்கு பின்பும், நேர்கூற்று வியப்பு தொடர் இறுதியிலும் ,அடுக்கு சொற்களின் பின்னும் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?

வியப்புக்குறி

  1. அண்மையில் இருப்பாரை அழைப்பதற்கும், தொலைவில் இருப்பாரை அழைப்பதற்கும் என்ன நிறுத்த குறியீடு பயன்படுத்தவேண்டும்?

விளிக்குறி

  1. எந்த நிறுத்த குறியீடுகள் ஒரே அடையாள குறியை உடையது?

வியப்புக்குறி ,விளிக்குறி

  1. மேற்கோள்குறி எத்தனை வகைப்படும்?

இரண்டு: ஒற்றை மேற்கோள்குறி, இரட்டை மேற்கோள்குறி

  1. ஓர் எழுத்தேனும், சொல்லேனும் சொற்றொடரேனும் தன்னையே குறிக்கும் இடம், கட்டுரை பெயர் ,நூற்பெயர் குறிக்கும் இடம் ,பிறர் கூற்றுப்பகுதிகள் முதலான இடங்களில் என்ன நிறுத்த குறியீடு வரவேண்டும்?

ஒற்றைக்குறி

  1. நேர்கூற்றுகளிலும் மேற்கோள்களிலும் என்ன நிறுத்தற்குறியீடு இடம்பெறவேண்டும்?

 இரட்டை மேற்கோள்குறி


மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

 

  1. பிழைகள் உள்ள அச்சுப்படியை திருத்துவதற்கு கையாளப்படும் திருத்த குறியீடுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்படுகின்றன ?

 ஐந்து: பொதுவானவை ,நிறுத்தற்குறியீடுகள் தொடர்பானவை, இடைவெளி தர வேண்டியவை, இணைக்க வேண்டியவை ,எழுத்துவடிவம்

  1. Dt  என்பது என்ன குறியீடு? 

அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக

  1. ^ என்பது என்ன குறியீடு?

சொல்லையோ எழுத்தையோ இந்த குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க

  1. [ என்பது என்ன குறியீடு?

 புதிய பத்தி தொடங்குக

  1. ,/ என்பது என்ன குறியீடு?

கால் புள்ளியை சேர்க்கவும்

  1. ;/ என்பது என்ன குறியீடு?

அரைப் புள்ளியை சேர்க்கவும்

  1. ./ என்பது என்ன குறியீடு?

முற்றுப்புள்ளியை இடவும்

  1. ?/ என்பது என்ன குறியீடு?

 வினாக்குறி அடையாளம் இடவும்

  1. !/ என்பது என்ன குறியீடு?

வியப்புக்குறியயை சேர்த்துக்கொள்ளவும்

  1. :/ என்பது என்ன குறியீடு?

முக்காற்புள்ளியைச் சேர்க்கவும்

  1. # என்பது என்ன குறியீடு?

பத்திகளுக்கு இடையில் ,வரிகளுக்கு இடையில் ,சொற்களுக்கு இடையில் இடைவெளி தருக

  1. Unbold என்பது என்ன குறியீடு?

வழக்கமான எழுத்தில் மாற்றுக

  1. Bold என்பது என்ன குறியீடு?

 தடித்த எழுத்தில் மாற்றுக

  1. Trs என்பது என்ன குறியீடு?

சொற்கள் எழுத்துக்களை இடம் மாற்றுக

  1. என்பது என்ன குறியீடு?

 எழுத்துருவை சிறியதாக ஆக்குக

TNPSC 40,000+ Q/A PDF NOTES @JUST ₹199/-:CLICK HERE

11TH TAMIL GRAMMAR STUDY NOTES | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

Please disable your adblocker or whitelist this site To Read !

error: