- மக்களாட்சி என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
டெமோஸ் மற்றும் கிரேட்டோஸ் என்ற இரு கிரேக்க சொற்களிலிருந்து
- கிரேக்க மொழியில் டெமோஸ் என்பதன் பொருள் என்ன?
மக்கள்
- கிரேக்க மொழியில் கிரேட்டோஸ் என்பதன் பொருள் என்ன ?
ஆட்சி
- மக்களாட்சி என்பதன் பொருள் என்ன?
மக்களால் ஆளப்படுகின்ற ஆட்சி
- மக்களாட்சியின் தொடக்கம் எங்கு காணப்படுகிறது?
பண்டைய கிரேக்கம்
- தற்போதைய நவீன கால மக்கள் ஆட்சி முறையானது எங்கிருந்து தொடங்கி வந்துள்ளது?
பிரிட்டன்
- மக்களாட்சி என்பது ஒரு மகிழ்ச்சியான அரசாங்க வகையாகும் இவ்வகை அரசில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக நடத்தப்படுவதற்கும் அதன் மூலம் சமத்துவ சமுதாயத்தை வழி உள்ளது” எனக் கூறியவர்?
சாக்ரடீஸ்
- “ஓர் அரசின் மகிமையே அதன் மக்கள் ஆட்சியில் உள்ள சுதந்திரம்தான் எனவே மக்களாட்சியானது இயற்கையாகவே அரசில் சுதந்திரம் இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது ” என கூறியவர் யார் ?
பிளாட்டோ
- ஓர் மக்களாட்சி அரசமைப்பின் அடித்தளமே சுதந்திரம்தான். மக்கள் இதை விரும்ப காரணமே இந்த அரசமைப்பில் தான் அனைவருக்கும் சமமான அளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும்” எனக் கூறியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- மக்களாட்சியின் வகைகள் என்னென்ன ?
அரசியல் மக்களாட்சி, சமூக மக்களாட்சி ,தொழில்சார் மக்களாட்சி ,பொருளாதார மக்களாட்சி ,முற்றதிகார மக்களாட்சி ,தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி ,பொது வாக்கெடுப்பு முறை மக்களாட்சி
- எந்த மக்களாட்சியில் அரசாங்கத்தில் குடிமக்கள் தங்களின் பங்கேற்பின் மூலமாக பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பர் ?
அரசியல் மக்களாட்சி
- மக்களின் நேரடி ஈடுபாட்டின் மூலமோ அல்லது அவர்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களின் மூலமோ மக்களாட்சி செயல்படுகிறது. இது எவ்வாறு அறியப்படுகிறது?
மக்களின் துவக்க முறை
- ஒரு சட்ட முன்வரைவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உருவாக்கும் போது அதற்கு மக்கள் தங்கள் வாக்கின் மூலமாக ஒப்புதல் அளிக்கின்றனர் இது எவ்வாறு அறியப்படுகிறது?
பொதுமக்கள் வாக்கெடுப்பு
- மக்கள் தங்கள் பிரதிநிதிகளை குறிப்பிட்ட சில காலத்திற்கு தேர்ந்தெடுத்து அந்த பிரதிநிதிகள் மக்களின் சார்பாக கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். இந்த முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை
- நேரடி மக்களாட்சி முறை உலகில் எந்த நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது?
சுவிட்சர்லாந்து
- எந்த மக்களாட்சி முறையானது பொருளாதாரத்தையும் மக்களின் பங்களிப்பையும் வெளிப்படுத்தி சமூக நீதியையும் சமூக சமத்துவத்தையும் மேம்படுத்துகிறது ?
சமூக மக்களாட்சி
- அமெரிக்காவின் அரசியல் முறையை சிறந்த மக்களாட்சி முறையில் ஒன்று என புகழ்ந்தவர் யார் ?
புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளர் அலெக்ஸ் டி டக்வில்லி
- சமத்துவ வளர்ச்சியே சுதந்திரத்திற்கும் ,சுதந்திரத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் சிறந்த மக்களாட்சிக்கும் அடிப்படை எனக் வலியுறுத்தும் மக்களாட்சி எது?
சமூக மக்களாட்சி
- தொழிற்சாலைகளில் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் மேம்படுத்தி அவர்களை பொறுப்புடன் செயலாற்ற வைக்கும் மக்களாட்சி முறை எது?
தொழில்சார் மக்களாட்சி
- எந்த மக்களாட்சி முறையை புகழ்பெற்ற இந்திய அரசியல் சிந்தனையாளர் எம்.என். ராய் அவர்கள் சிறந்த மக்களாட்சி முறை என பரிந்துரைத்தார்?
தீவிர முன்னேற்றவாத மக்களாட்சி
- “மக்களாட்சி என்பது சமூக பொருளாதார மற்றும் அரசியல் தளத்தில் வாழும் ஓர் நிதர்சனம்/ மெய்மையாகும்” எனக் கூறியவர் யார்?
ஜி.டி.கோவார்டு கோல்
- “மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் குறிப்பாக பெரும்பான்மை மக்களால் ஆகும்” எனக் கூறியவர் யார்?
தாமஸ் ஜெஃபர்சன்
- மக்களாட்சியின் தொன்மை கோட்பாடானது எங்கு தோன்றியது?
பண்டைய கிரேக்கம்
- அமெரிக்கப் புரட்சியின் காலம் என்ன?
1775- 1783
- பிரெஞ்சு புரட்சியின் காலம் என்ன?
1789- 1799
- தொன்மை மக்களாட்சி முறையானது முதன் முதலில் எங்கு உருவானது?
ஏதென்ஸ்
- தொன்மையான மக்களாட்சி முறை எந்த காலகட்டத்தில் உருவானது ?
கிமு 800 மற்றும் கிமு 500 இடையே
- மக்களாட்சி வெற்றிகரமாக இயங்க உதவும் இரண்டு நிபந்தனைகள் என்னென்ன?
1.குடிமக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் வேண்டும் அப்போதுதான் அவர்கள் விவாதங்களில் பங்கு பெறவும் முக்கிய பிரச்சனைகளில் வாக்களிக்கவும் இயலும்
- அனைத்து குடிமக்களையும் அரசியலில் ஈடுபட வைக்கும் அளவிற்கு தொன்மை மக்களாட்சியின் பொருளாதாரம் இருத்தல் வேண்டும்
- “இயற்கை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை எந்த அளவுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதோ அந்த அளவிற்குத்தான் அவர்களின் சுதந்திரமும் வாக்குரிமையும் இருக்கும்” என கூறியவர் யார்?
லாக்
- “மக்களாட்சியே சமதர்மத்திற்கான பாதை ஆகும் ” எனக் கூறியவர் ?
கார்ல் மார்க்ஸ்
- “மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களாலான அரசாங்க முறையாகும்” என கூறியவர் யார்?
ஆபிரகாம் லிங்கன்
- எளியோருக்கும் வலியோருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் மக்களாட்சியில் மட்டுமே நடைபெறும் என்பதே என் கருத்து.இது வன்முறையற்ற வழியில் மட்டுமே சாத்தியப்பட வேண்டும்” எனக் கூறியவர் யார் ?
மகாத்மா காந்தி
- உயர்குடி மக்களின் ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தவர் யார் ?
ஜோசப் அலாய்ஸ் சம்பீட்டர்
- மக்களாட்சியின் சாராம்சமே குழுவாட்சி எனப்படும் பல்வேறு சிறுபான்மை சமூகத்தினரும் இணைந்து பணியாற்றும் அரசியல் அமைப்பில் தான் சிறப்பாக வெளிப்படும்” என கூறியவர் யார்?
ராபர்ட் பால்
- நேபாள நாட்டில் ஏப்ரல் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
2006
- எந்த பூட்டான் அரசர் பூட்டான் நாடு முடியாட்சியிலிருந்து நாடாளுமன்ற மக்களாட்சி முறைக்கு மாற வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைத்து தனது பதவியை துறந்தார்?
பூட்டானின் நான்காவது அரசர் ஜிக்மே சிங்யோ
- பூட்டான் நாடு எப்போது மக்களாட்சி முறைக்கு மாறியது?
2006
- பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எங்கு தொழிற்புரட்சியின் விளைவாக நவீன மற்றும் சமகால மக்களாட்சியானது தோன்றியது?
மேற்கு ஐரோப்பா
- மக்களாட்சியின் அடிப்படை தேவை எது ?
பேச்சு சுதந்திரம்
- உலகம் முழுவதும் எவ்வளவு பூர்வகுடி இன மக்கள் வசித்து வருகின்றனர்?
37 கோடிக்கும் அதிகமாக
- சர்வதேச பூர்வ குடிமக்கள் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஆகஸ்ட் 9
- ஐநா சபையில் எப்போது பூர்வகுடிகளுக்கான உரிமை பிரகடனம் நிறைவேறியது ?
செப்டம்பர் 2007
- எந்த மக்களாட்சி சமத்துவம் என்ற நிலையிலிருந்து சமூக நீதியின் அடிப்படையிலான பங்கு என்ற நிலை நோக்கி செல்ல ஊக்குவிக்கிறது?
பங்கேற்பு மக்களாட்சி
- “அரசியலில் நமக்குள் சமத்துவம் இருக்கும் ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் சமத்துவமற்ற தன்மையே நிலவும் ” என கூறியவர் யார்?
இந்திய அரசமைப்பின் வரைவுக் குழு தலைவர் முனைவர் பி ஆர் அம்பேத்கார்
- சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடந்தது ?
1951
- சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தனர்?
54
- 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது எத்தனை அரசியல் கட்சிகள் இருந்தது?
264
- சுதந்திர இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்?
17.30 கோடி
- 2014ஆம் ஆண்டு நடந்த 16வது பொதுத்தேர்தலில் இந்தியாவின் மொத்த பொது வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
81.40 கோடி
- எந்த ஆண்டு முதல் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக பதிவு செய்யப்படுகின்றன?
2004
- நம் நாட்டில் எந்த ஆண்டில் இருந்து 18 வயது பூர்த்தியான அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது?
1989
- உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது ?
இந்தியா
- இந்திய அரசமைப்பின் எந்த சட்டத்திருத்தம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கும் பெண்களுக்கும் உள்ளாட்சி அரசாங்க அமைப்புகளில் போட்டியிட இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது ?
73-வது மற்றும் 74-வது சட்டத்திருத்தம்
- இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1951 ஆம் ஆண்டில் எவ்வளவு ஆக இருந்தது?
36 வருடங்கள்
- 2014ஆம் ஆண்டு இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு ?
66 வருடங்கள்
- 1951 இல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு ?
18.3 சதவீதம்
- 2011இல் இந்தியாவின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு ?
73%
- “மக்களாட்சியில் சில சாதக பாதக அம்சங்கள் இருந்தாலும் நமக்கு இதை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. ஆனால் மக்களாட்சியில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று கூறுவது மாபெரும் தவறு பிரச்சினைகள் புத்திக்கூர்மையினாலும் கடின உழைப்பாலும் மட்டுமே தீரும்” என கூறியவர் யார் ?
ஜவஹர்லால் நேரு
- “சமூக மக்களாட்சியை அடிப்படையாகக் கொள்ளாமல் கொண்டுவரப்படுகிற அரசியல் மக்களாட்சி வெகு காலம் நீடிக்காது. சமூக மக்களாட்சி என்றால் என்ன ?
இது ஒரு வாழும் முறை, இது சுதந்திரம் ,சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படை விதிகளை கொண்ட ஒரு வாழ்வு முறையாகும்” என கூறியவர் யார் ? பி ஆர் அம்பேத்கர்
- எந்த ஆண்டு தாராளமயம் மற்றும் சந்தை சார்ந்த மாதிரியிலான உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது?
1991
- இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருவாய் ஆனது 1950- 51 ல் எவ்வளவு ஆக இருந்தது?
2.92 லட்சம் கோடி
- இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருவாய் ஆனது 2014-15ல் எவ்வளவு ஆக இருந்தது?
105.28லட்சம் கோடி
- தனிநபர் வருமானம் 1590-51ல் எவ்வளவு ஆக இருந்தது?
ரூபாய் 274
- தனிநபர் வருமானம் 2014-2015ல் எவ்வளவு ஆக இருந்தது?
ரூபாய் 88,533
- இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 1950-51ல் எவ்வளவாக இருந்தது?
50.8 கோடி டன்கள்
- இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 2014-15ல் எவ்வளவாக இருந்தது?
264.77 கோடி டன்கள்
11TH POLITY STUDY NOTES | மக்களாட்சி | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services