11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS

 


 • ஸ்ட்ராபோ எந்த நாட்டு வரலாற்று அறிஞர் மற்றும் புவியியலாளர்?

 கிரேக்க (கி.மு 63 முதல் கி.பி 24 வரை

 1. பண்டைய காலத்தில் சிறப்பாக செயல்பட்ட சில துறைமுகங்கள் எவை?

 கொற்கை, பூம்புகார், வசவசமுத்திரம் ,அரிக்கமேடு ,அழகன்குளம் ,மாமல்லபுரம்

 1. எட்டுத்தொகை நூல்கள் என்னென்ன ?

நற்றிணை ,குறுந்தொகை ,ஐங்குறுநூறு ,பதிற்றுப்பத்து, பரிபாடல் ,கலித்தொகை ,அகநானூறு ,புறநானூறு

 1. சங்க இலக்கியங்களுக்கு பிறகு சேகரிக்கப்பட்ட பிரபலமான நூல் கோவை/ பாடல் திரட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

கீழ்க்கணக்கு

 1. குறிப்பிட்ட கருத்திலான வரிகளை கொண்டிருப்பது (பொதுவாக அன்பை பற்றியதாகும்) எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கோவை

 1. ஓர் பத்தியின் முடிவு என்பது அடுத்த வரிக்கு ஆரம்பமாக வழி இருப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 கலம்பகம்

 1. தமிழ் பேசும் பகுதிகளில் தமிழரின் நாடு மற்றும் தேசக் கூட்டமைப்பு என்பது இருந்தது குறித்து யாருடைய கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது?

 கலிங்க அரசன் காரவேலன் (கிமு 165 காலம்)

 1. கண்ணகியின் சிறப்புகளை ஆய்வு செய்து வெளியிட்டவர் யார்?

எரிக் மில்லர்

 1. மூல செந்தமிழில் இருந்து  மொழிமாற்றம் செய்யப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்; காற்சிலம்பின் கதை‌(Cilappatikaram of Ilanko Atikal (The Tale of an Anklet): An Epic of South India) எனும் நூலை எழுதியவர் யார் ?

ஆர்.பார்த்தசாரதி

 1. சங்க காலத்தில் தமிழகம் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

 5

 1. மலையும் மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?

 குறிஞ்சி

 1. காடும் காடு சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?

முல்லை

 1. வயலும் வயல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?

மருதம்

 1. கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் ?

நெய்தல்

 1. மணலும் மணல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?

 பாலை

 1. சோழர்களின் தலைநகரமாக இருந்தது?

 உறையூர்

 1. பாண்டியர்களின் தலைநகராக இருந்தது?

 மதுரை

 1. பல்லவர்களின் தலைநகரமாக இருந்தது?

காஞ்சிபுரம்

 1. கடையேழு வள்ளல்கள் யார் ?

 ஆய்,பாரி, ஓரி, காரி, அதியமான் ,பேகன் மற்றும் நல்லி

 1. அரசன் தலைமையேற்று நடத்தும் நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சபை அல்லது மன்றம்

 1. புறநானூறு எந்த அரசனைப் போற்றிப் புகழ்கிறது?

பாண்டிய அரசன்

 1. எந்த சங்க இலக்கியம் பல்வேறு வகையான வரிகளைப் பற்றி கூறுகின்றது?

பட்டினப்பாலை

 1. யாருடைய கல்வெட்டில் முத்துக்குளித்தல் பற்றியும் மற்றும் முதன்மை எழுத்தர்ப் பற்றியும் கூறப்பட்டுள்ளது?

பாண்டியர்  கல்வெட்டு

 1. கலாத்திகர் என்றால் என்ன?

 முத்துக் குளிப்பவர்

 1. கணத்திகன் என்றால் என்ன?

 முதன்மை எழுத்தர்

 1. சோழர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?

புலி சின்னம்

 1. சேரர்களினா கொடியில் என்ன சின்னம்  பொறிக்கப்பட்டிருந்தது ?

வில் சின்னம்

 1. பாண்டியர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?

மீன் சின்னம்

 1. பலலவர்களின் கொடியில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது ?

சிங்கம் சின்னம்

 1. எந்த நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் போன்ற எழுத்துக்கள் தோன்ற ஆரம்பித்தது?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES | இந்தியாவில் நிர்வாக அமைப்பு | TNPSC GROUP EXAMS

கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு

 1. யாருடைய காலத்தில் வட இந்தியாவில் இருந்த ஆரிய கலாச்சாரம் தமிழ்நாட்டில் ஊடுருவியது?

பல்லவர்காலம்

 1. ஔவையார் என்பதன் பொருள் என்ன?

மதிப்பிற்குரிய பெண்

 1. வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த எத்தனை பெண் தமிழ் புலவர்களுக்கு ஔவையார் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டுள்ளது?

  ஆறு பெண் தமிழ்ப் புலவர்கள்

 1. அதியமான் அவையில் இருந்த அவ்வையாரின் காலம் என்ன?

ஒன்றாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு

 1. குழந்தைகளுக்கான நீதிக் கதைகளையும், ஆத்திச்சூடியும், கொன்றைவேந்தனையும் ,மூதுரை மற்றும் நல்வழி எழுதிய அவ்வையார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் ?

சோழர்காலத்தில் பத்தாம் நூற்றாண்டு

 1. “அரசியல் ஐந்து; அமைச்சியல் ஈரைந்து ; உருவவல் இரண்டு; எனத் தொடங்கும் பழைய வெண்பா யார் இயற்றியது ?

 போக்கியார்

 1. போக்கியார் பழைய வெண்பாவின்படி பொருட்பால் எத்தனை பகுதிகளை உடையது ?

 ஏழு பகுதிகள்

 1. திருக்குறளின்படி அரசாங்கம் எத்தனை அங்கங்களை உடையது?

 ஆறு : அமைச்சு,அரண்,கூழ், படை, நட்பு ,குடி

 1. திருவள்ளுவர் இறைமாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரை ‌25 அதிகாரங்களில் ஆட்சித் தலைவனை எத்தனை முறை பல்வேறு பெயர்களால் குறிப்பிட்டு உள்ளார்?

 46 முறை

 1. திருவள்ளுவர் எத்தனை வழிமுறைகளில் அரசின் வருவாயை சேர்த்து பகிர்ந்து திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்வது மன்னனின் தலையாய கடமை எனக் கூறுகிறார் ?

இயற்றல், ஈட்டல் ,காத்தல், வகுத்தல்

 1. மகாகவி என்பதன் பொருள் என்ன?

 மிகப்பெரிய கவிஞர்

 1. பாரதியாரின் மிகச் சிறந்த படைப்புகள் என்னென்ன ?

கண்ணன்பாட்டு, நிலவும் வான்மீனும் காற்றும் ,பாஞ்சாலிசபதம் போன்றவை

 1. பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் எவற்றை திரௌபதியாகவும் ,கௌரவர்களாகவும் ,பாண்டவர்களும் உருவகப்படுத்தி இருந்தார்?

இந்தியாவை திரௌபதியாகவும், ஆங்கிலேயரை கவுரவர்களாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பாண்டவர்களாகவும்

 1. பாரதியார் எந்த ஆண்டு சுதேச கீதங்கள் எனப்படும் உணர்ச்சிமிக்க பாடல் தொகுப்பினை வெளியிட்டார்?

  1908

 1. துணை ஆசிரியராக சுதேசமித்திரன் என்ற பத்திரிக்கையில் எந்த ஆண்டு இணைந்தார் ?

1904

 1. இந்தியா என்ற புதிய நாளிதழ் எப்போது தொடங்கப்பட்டது?

 1906

 1. இந்தியா என்ற புதிய நாளிதழின் குறிக்கோளாக எதை அறிவித்தது ?

சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்

 1. பாரதியார் வார இதழை என்ன நிறத்தில் அச்சிட்டு பிரசுரித்தார் ?

 சிகப்பு நிறம்

 1. அரசியல் கேலிச்சித்திரத்துடன் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நாளேடு எது ?

 இந்தியா

 1. பாரதியார் எந்த இதழின் பதிப்பாசிரியராக இருந்தார் ?

விஜயா- தமிழ் தினசரி

 1. பாரதியார் என்ன பெயரில் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார்?

பாலபாரதா

 1. பாரதியார் பாண்டிச்சேரியில் என்ன பெயரில் உள்நாட்டு வார இதழை வெளியிட்டார் ?

 சூரியோதயம்

 1. பாரதியார், சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக எந்த ஆண்டு சென்னையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் ?

1908

 1. சுப்ரமணிய பாரதியார் எங்கு எப்போது பிறந்தார் ?

திருநெல்வேலி மாவட்டம் ,எட்டயபுரத்தில் டிசம்பர் 11 1882

 1. பாரதியாரின் குழந்தைப்பருவ பெயர் என்ன?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் 2| TNPSC GROUP EXAMS

சுப்பையா

 1. பாரதியாரின் பெற்றோர் யார் ?

 சின்னசாமி- லட்சுமி அம்மாள்

 1. பாரதியார் எத்தனை வயதில் தமிழ் கவிதைகளை எழுத ஆரம்பித்தார்?

ஏழு

 1. எப்போது பாரதியாருக்கு செல்லம்மாளுடன் திருமணம் நடந்தது?

 ஜூன் 1897(15 வயது)

 1. பாரதியார் காசியில் தங்கியிருந்தபொழுது எந்த பல்கலைக்கழக நுழைவு தேர்வில் வெற்றி பெற்றார்?

அலகாபாத் பல்கலைக்கழகம்

 1. பாரதியார் எந்த ஆண்டு பாண்டிச்சேரிக்கு சென்றார்?

1908

 1. பாரதியார் பாண்டிச்சேரியில் எத்தனை வருடம் தங்கியிருந்தார் ?

 10 வருடம்

 1. பாரதியார் எந்த ஆண்டு சென்னையில் ராஜாஜி வீட்டில் மகாத்மா காந்தியைச் சந்தித்தார் ?

 1919

 1. பாரதியார் எந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்?

கடலூருக்கு அருகில் 1918

 1. ” இந்த உலகில் இரண்டு ஜாதிகள் உள்ளன ஒன்று ஆண்சாதி மற்றொன்று பெண் சாதி என்பதனைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை ” எனக் கூறியவர் யார் ?

பாரதியார்

 1. “ஆணும் பெண்ணும் சமமாக கருதப்பட்டால் மட்டுமே இவ்வுலகம் அறிவு மற்றும் புத்திக்கூர்மையில் சிறப்புறும்”எனக் கூறியவர் யார் ?

 சுப்பிரமணிய பாரதியார்

 1. யாருடனான பாரதியாரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றிய சிந்தனையை பாரதியாரிடம் ஏற்படுத்தின?

விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா

 1. பாரதியார் எப்போது இயற்கை எய்தினார் ?

 செப்டம்பர் 11 ,1921

 1. பாரதியாரின் இறுதிசடங்கில் எத்தனை நபர்கள் மட்டும் பங்கேற்றனர்?

14 நபர்கள்

 1. தொழிலாளர் அமைப்பு உருவாக முன்முயற்சிகள் எடுத்து பாடுபட்டவர் யார்? 

ம.சிங்காரவேலர்

 1. ம.சிங்காரவேலர் எந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் குழுவின் கூட்டத்தில் தமிழக பிரதிநிதியாக கலந்து கொண்டு அங்கும் விவாதத்தை உருவாக்கி தமக்கு ஆதரவு திரட்டினார்?

1922

 1. எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றுதிரட்ட தீர்மானம் நிறைவேற்றியதுடன்,இதற்கென ஓர் குழுவையும் அமைத்தது ?

 1922

 1. முதல்முறையாக எந்த ஆண்டு தொழிலாளர் நலன்களை பேணும் சட்டம் இயற்றப்பட்டது?

 1926

 1. பெரியார் பொதுவுடமைவாத கருத்துக்களை தாக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தினை எவ்வாறு் மாற்றினார்?

சுயமரியாதை சமூகநீதி கட்சி

 1. சென்னை நகரில் இந்தியாவின் முதல் உழைப்பாளர் தினத்தை எப்போது சிங்காரவேலர் நடத்திக் காட்டினார் ?

மே முதல் நாள் 1923

 1. எப்போது எங்கு இந்தியாவின் முதல் பொதுவுடமைவாத மாநாடு நடந்தது?

 கான்பூர் 1925

 1. “இந்தியாவுக்கு ஏற்ற மார்க்சிய பாதையை திட்டமிட வேண்டும்” என கூறியவர் யார் ?

 சிங்காரவேலர்

 1. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி என அழைக்கப்படுபவர் யார் ?

 ம. சிங்காரவேலர்

 1. பெரியார் எங்கு எப்போது பிறந்தார்?

 ஈரோடு 1879

 1. “தேசத்தின் பெயரால் ஓர் குழு மக்களை சுரண்ட நினைத்தால் அத்தேசம் போராடி பெற்ற உண்மையான சுதந்திரம் அதுவல்ல” எனக் கூறியவர் யார் ?

பெரியார்

 1. “தேசியவாதம் என்பது மக்களுக்கு ஓர் மயக்கத்தையும் உணர்வுபூர்வமான வெறியையும் குறிக்கும் சொல்லாகி விட்டது” எனக் கூறுபவர் யார்?
SEE ALSO  7TH TAMIL IYAL 08 STUDY NOTES | TNPSC GROUP EXAMS

பெரியார்

 1. “தேசியவாதம் என்பது முதலாளித்துவவாதிகள் தங்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை பலிகடாவாக்குவதற்கு கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்” எனக் கூறியவர் யார்?

 பெரியார்

 1. “தமிழ்நாடு தமிழருக்கே ,திராவிட நாடு திராவிடருக்கே” என்ற தொடர்ச்சியான பரப்புரைகளை வெளியிட்டவர் யார்?

பெரியார்

 1. “திராவிடநாடு பெறாவிட்டாலும் சரி ;சில ஆதிக்க சக்திகளை ஒழிக்க முடியாவிட்டாலும் சரி ;முதலாளித்துவத்தை அழிக்க முடியாது போனாலும் சரி ;சாதியை ஒழிக்கின்ற ஒரே காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்தால் போதும்” எனக் கூறுபவர் யார்?

பெரியார்


11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: