11TH POLITY STUDY NOTES | சமூக நீதி | TNPSC GROUP EXAMS

 


  1. தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்து தங்களுக்கு உரிய உரிமைகளை சமமாக பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

சமூகநீதி

  1. இந்திய அரசமைப்புச் சட்டம் 1949 :பிரிவு 15 (4) எதைக் குறிப்பிடுகிறது?

 சமூக மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்கள் உருவாக்குவதற்கு அரசமைப்பு சட்ட விதி  29(2) தடையாக இருக்காது.

  1. நேர்மையான நீதி என்ற கருத்தியலின் அடிப்படையில் ஓர் நீதி கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?

ஜான் ரால்சன்

  1. ஜான் ரால்சன் எழுதிய நூல்கள் என்னென்ன ?

நீதி கோட்பாடு 1971 ,நேர்மையான நீதி 1985 ,அரசியல்தாராளவியல் 1993 , மக்களின் சட்டம் 1993

  1. “மனிதனை மனிதனாக கருத முடியாமல் அவரது சாதியை மட்டுமே வைத்து எடை போட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது” எனக் கூறியவர் யார் ?

தந்தை பெரியார்

  1. “சாதி மத பாலின பேதமற்ற சமூகமே உயரிய சமூகம்” என அறிவித்தவர் யார்?

தந்தை பெரியார்

  1. “ஒரு சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும்” எனக் கூறியவர்?

சாக்ரடீஸ்

  1. நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டிற்காக முதல் ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

1953

  1. சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் யாருடைய தலைமையில் அமையப்பெற்றது ?

காகா காலேல்கர்

  1. எந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மக்களாட்சிக்கு மாறியது?

1994

  1. அமெரிக்காவின் முதல் உறுதிப்படுத்தும் ஆணை குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி அவர்களால் எப்போது வெளியிடப்பட்டது?

 1961

  1. எந்த ஆண்டு இந்தியா முழுவதும் அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டுமே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டது?

 1835

  1. எந்த ஆங்கிலேய அதிகாரிகள் ரயத்துவாரி முறை மீது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர் ?

 தாமஸ் மன்றோ ,பிரான்சிஸ் எல்லிஸ்

  1. பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவது தடுக்கக் கூடாது என எப்போது நீதிமன்றம் ஆணையிட்டது?

 1854

  1. எப்போது பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவது தடுக்க கூடாது என இங்கிலாந்தில் உள்ள இந்தியாவுக்கான அமைச்சர் ஆணையிட்டார்?

 1865

  1. சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களை எப்போது அறிவித்தது?

 1885

  1. செங்கல்பட்டு மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்தவர் யார்?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரிமென்கீரே

  1. எப்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 12 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆங்கிலேய அரசு பிரித்து வழங்கியது?

 1892

  1. ஆங்கிலேய அரசால் பிரித்து வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 பஞ்சமி நிலங்கள்

  1. பஞ்சமர் பள்ளிகள் என அழைப்பதை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்கப்பட வேண்டும் என கூறியவர்கள் யார்?

 அயோத்திதாச பண்டிதர் ,சிங்காரவேலர்

  1. எந்த ஆண்டு சென்னை மாவட்ட அனைத்து துறைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிடப்பட்டது?

1892

  1. பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி விழிப்புணர்வை மகாராஷ்டிராவில் ஏற்படுத்தியவர்கள் யார்?

ஜோதிராவ் பூலே ,சாவித்திரிபாய் பூலே

  1. அலெக்சாண்டர் கார்டியூ தலைமையிலான ஆணையம் எப்போது வந்தது?

 1913

  1. சர்.பி.தியாகராயர் எழுதி வெளியிட்ட அறிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின்  அடிப்படை கருத்தாக்கங்கள் 1| TNPSC GROUP EXAMS

பிராமணரல்லாதோர் அறிக்கை

  1. எந்த ஆண்டு பிராமணரல்லாதோர் நலன் காக்க சர்.பி. தியாகராயர், டாக்டர் டி எம் நாயர் ஆகியோர் “தென்னிந்திய சுதந்திர சங்கம் ” என்ற இயக்கத்தைத் தொடங்கினர்?

 1916

  1. தென்னிந்திய சுதந்திர சங்கத்தின் சார்பில் என்ன இதழ் வெளியானது?

ஜஸ்டிஸ்

  1. உயர்கல்வியில் ஆங்கிலம் ,சமஸ்கிருதம் மட்டும் அனுமதிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ் உள்ளிட்ட பழமையான மொழிகளையும் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிக்கட்சி சார்பில் எப்போது அரசுக்கு மனு அளிக்கப்பட்டது?

 1915

  1. சென்னை மாகாண சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி அமர்ந்தவுடன் அரசு பணியிடங்களில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அளித்து எப்போது தீர்மானம் நிறைவேறியது?

 1921

  1. இட ஒதிக்கீடு பற்றிய தீர்மானத்தை பற்றி முன்மொழிந்து பேசிய யார் , “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நாம் நிறைவேற்றினால் நம் எதிர்கால சந்ததி நம்மை எல்லாம் நமது நாட்டுக்கு உரிமை வாங்கித் தந்தவர் என்றே கொண்டாடும்” எனக் குறிப்பிட்டார் ?

சர் ஆர் கே சண்முகம்

  1. “எங்கள் மக்களுக்கு வேலைகளில் சரியான பிரதிநிதித்துவம் தரப்படவிட்டால் ,நாங்கள் வரி கொடுக்க மாட்டோம்” என பேசியவர் யார் ?

டாக்டர் சி நடேசனார்

  1. எங்கு எப்போது நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசு கல்வி வேலை வாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரும் தீர்மானத்தை பெரியார் கொண்டுவந்தார்?

 1925 , காஞ்சிபுரம்

  1. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கோரும் தீர்மானத்தை காங்கிரஸ் மறுத்ததை தொடர்ந்து பெரியார் எப்போது காங்கிரஸிலிருந்து வெளியேறினார்?

1925

  1. இரா முத்தையா அவர்களின் தலைமையில் நீதிக்கட்சி செயல்பட்டபோது அரசின் எல்லாத் துறைகளிலும் பணி நியமனங்கள் முறைபடுத்தப்பட்டு அரசாணை மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் எந்த ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டது?

1928

  1. இந்திய அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் சட்டத் திருத்தம் எப்போது நடைபெற்றது ?

1951 (வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீடிக்கும் வகையில்)

  1. அரசமைப்பின் எந்த சட்டப்பிரிவு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியவர்ளுக்கு சில சிறப்பு சட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கலாம் என அரசுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது ?

சட்டப்பிரிவு 15 மற்றும் 16

  1. நேரு கொண்டு வந்த முதலாவது சட்ட திருத்தத்தின்படி அரசமைப்புச் சட்டப் பிரிவில் என்ன உட்பிரிவுகள் இணைக்கப்பட்டன?

15(4) &16(4)

  1. இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது?

 25%

  1. இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு பின் தமிழ்நாட்டில் 1951 ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது?

 16%

  1. மு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து ஆராய்ந்திட யார் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது ?

சட்டநாதன்

  1. சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையின் படி எந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதம் தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம் என இட ஒதுக்கீடு வரம்பு மாற்றியமைக்கப்பட்டது?

 1971

  1. எந்த ஆண்டு தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை வெளியீட்டின் வெளிப்படுத்தப்பட்ட வகுப்பினரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹.9000 என நிர்ணயிக்கப்பட்டது ?
SEE ALSO  11TH POLITY STUDY NOTES | தமிழகத்தில் அரசியல் வளர்ச்சி | TNPSC GROUP EXAMS

 1979

  1. 1979 ஆம் ஆண்டு ஆணையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வரம்பு எவ்வளவாக உயர்த்தப்பட்டது?

31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக

  1. எந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% ,மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% ,தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18% ,பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்க மாற்றியமைக்கப்பட்டு இட ஒதுக்கீடு 69% என நடைமுறைக்கு வந்தது?

 1989

  1. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பிரதம மந்திரி யார்?

 வி.பி.சிங்

  1. மண்டல் ஆணையத்தின் அடிப்படையில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணை பிறப்பித்தது?

 27% சதவீதம்

  1. மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவர் யார் ?

இந்திரா சஹானி

  1. யார் முதலமைச்சராக இருந்தபொழுது தமிழ்நாடு அரசு அரசியல் சட்டப்பிரிவு 31 (C) யினைப் பயன்படுத்தி தனி சட்ட மசோதா ஒன்றினை 30 12 1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக நிறைவேற்றியது ?

ஜெயலலிதா

  1. தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் தனி சட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் எப்போது ஒப்புதல் அளித்தார்?

19.07. 1994

  1. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்தினை எதிர்த்து வழக்கு தொடரும் சூழலை தவிர்ப்பதற்காக இந்திய அரசமைப்பு சட்டத்தின் எந்த அட்டவணையில் தமிழக அரசு இச்சட்டத்தை சேர்த்தது?

 9வது அட்டவணை

  1. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டது?

76 ஆவது அரசியல் சட்டத் திருத்தம்

  1. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் எப்போது முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது?

 1992 நவம்பர் 16

  1. எந்த இந்திய அரசியல் சட்டப்பிரிவு சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் எவை என அடையாளம் கண்டிடவும் மற்றும் அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கவும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்திட குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கிறது?

சட்டப்பிரிவு 340

  1. இந்திய அரசு இதுவரை எத்தனை பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை அமைத்துள்ளது?

 2

  1. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

 காகா கலேல்கர்

  1. காகா கலேல்கர் ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவர் யார்?

 பிரதமர் ஜவகர்லால் நேரு

  1. யார் தலைமையிலான மத்திய அரசு பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் கமிஷன் என்றழைக்கப்படுகிற மண்டல் கமிஷனை அமைத்தது?

மொரார்ஜி தேசாய்

  1. எப்போது மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டது?

 1979

  1. மண்டல் ஆணையத்தின் செயலாளராக செயல்பட்டவர் யார்?

எஸ்.எஸ்.கில்

  1. மண்டல் ஆணையம் 11 காரணங்களை அடிப்படையாகக் கொண்டு சமூக அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் எத்தனை சாதிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களாக உள்ளன என அடையாளம் கண்டது?

3743

  1. “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு மெட்ராஸ் முன்னோடியாக இருப்பதுடன் அம்மாநிலமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது” என கூறியவர் யார்?
SEE ALSO  TNPSC UNIT 8 ONELINER NOTES -23|பட்டினப்பாலை 

  மண்டல் (தன் அறிக்கையின் முன்னுரையில்)

  1. வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்திய அரசு பணிகளில் மட்டும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய எப்போது ஆணை பிறப்பித்தது ?

 13.8.1990

  1. மண்டல ஆணையம் எப்போது அதன் அறிக்கையை உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங்கிடம் சமர்ப்பித்தது?

டிசம்பர் 1980

  1. “இந்த அறிக்கையை தயார் செய்வதில் அதிகமான உழைப்பை கொடுத்துள்ளோம் மிகச்சரியாக கூறினால் நாம் உன்னதமான சடங்கை செய்துள்ளோம்” என மண்டல் அறிக்கையை சமர்ப்பித்துக் கூறியவர் யார்?

 மண்டல்

  1. எப்போது பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஒப்பந்தம் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது?

செப்டம்பர் 8,1993

  1. எந்த ஆண்டுகளில் மண்டல ஆணையம் அறிக்கை மீது விவாதம் நடைபெற்றது?

  1982 மற்றும் 1983


11TH POLITY STUDY NOTES | சமூக நீதி | TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

 

Leave a Comment

error: