- கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் மக்களுக்கான சேவைகள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கும், உள்ளூர் பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு எது?
உள்ளாட்சி அரசாங்கம்
- கிராமப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அரசாங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஊரக உள்ளாட்சி அரசாங்கங்கள்
- நகரப்பகுதிகளில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்
- இந்தியாவில் கிராம உள்ளாட்சி அரசாங்கங்கள் எந்த பொதுப் பெயரில் அழைக்கப்படுகிறது?
பஞ்சாயத்து ராஜ்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வகைகள் என்னென்ன?
மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரங்கள் ,பேரூராட்சிகள், பாளைய வாரியங்கள்
- மாநகராட்சிகள் என்பவை எவ்வளவு மக்கள் தொகையை பெருநகரங்களில் ஏற்படுத்தப்படுகிறது?
10 லட்சத்திற்கும் அதிகமாக
- நகராட்சிகள் என்பவை எவ்வளவு மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிறது?
10 லட்சத்திற்கும் குறைவாக
- நகராட்சிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
வகை 1 & வகை 2
- எந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடிசைப்பகுதிகளுக்கும் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது?
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்
- எந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்படுகிறது ?
ராஜீவ் ஆவாஸ் யோஜனா திட்டம்
- எந்த இலக்கியங்களில் கிராமங்கள் அளவு மற்றும் வாழும் முறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
புத்த மற்றும் ஜைன இலக்கியங்கள்
- கௌடில்யரின் எந்த நூலில் அப்போதைய கிராம நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது ?
அர்த்தசாஸ்திரம்
- மௌரியர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அலகுகளாக இருந்தவை?
கிராமம் ,மாவட்டம்
- எந்த அரசர்கள் காலத்தில் உள்ளாட்சி அரசாங்கங்கள் நன்கு மேம்பட்ட நிலையில் செயல்பட்டு வந்துள்ளன?
சோழர்கள் காலம்
- காஞ்சிபுரம் மாவட்டம் ,உத்தரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட யாருடைய கல்வெட்டு உள்ளாட்சி அரசாங்கங்கள் பற்றி விரிவாக விளக்குகிறது?
முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு
- ஒவ்வொரு ஊரிலும் ஒரு சபை இருந்ததாகவும், அதில் அனைத்து ஆண்களும் உறுப்பினராக இருந்ததாகவும் கூறும் கல்வெட்டு?
முதலாம் பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு
- உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடும் சபைகள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஊர் மற்றும் மகாசபை
- சபைகளில் மூன்றாவது வகையாக இருந்த வியாபார மையங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நகரம்
- சபைகளில் நான்காவது வகையாக இருந்த கிராமங்கள் மற்றும் மற்ற பகுதிகளை உள்ளடக்கிய அமைப்பு என்ன ?
நாடு
- எந்த அமைப்புகள் நிலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் ,கோவில்கள் மற்றும் நீர்ப்பாசனங்களை நிர்வகித்தல் ,வரி வசூலித்தல், பெரிய மூலதனம் தேவைப்படுகின்ற பணிகளுக்கு கடன் வழங்குதல் மற்றும் தொண்டு நிறுவனங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை செய்தன?
நாடு மற்றும் நகரம்
- எந்த அமைப்புகள் அரசனின் கட்டளைகளை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு துணை புரிந்தன?
ஊர் மற்றும் மகாசபை
- எந்த அரசன் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் என்ற ஊரின் மகா சபைக்கு நாட்டுக்கு துரோகம் இழைத்த துரோகிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதை அறியமுடிகிறது ?
முதலாம் ராஜராஜ சோழன்
- எந்தெந்த வரலாற்றாசிரியர்கள் பண்டைய மற்றும் இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கங்கள் வளமையுடன் செயல்பட்டு வந்ததை குறிப்பிடுகின்றனர்?
சர் சர்லஸ் மெட்கேப், சர் ஜார்ஜ் பேர்டு வுட் மற்றும் எல்பின்ஸ்டன்
- முகலாயப் பேரரசில் அதன் பகுதிகள் எவ்வாறாக பிரிக்கப்பட்டிருந்தது?
பர்கானாக்கள் ( மாகாணங்கள்)
- முகலாயப் பேரரசின் மாகாணங்களின் உட்பிரிவுகள் எவ்வாறு அழைக்கப்பட்டது ?
சர்க்கார்
- முகலாயப் பேரரசின் பகுதிக்குட்பட்ட சர்க்கார் பல கிராமங்களை கொண்ட தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தன அதற்கு என்ன பெயர்?
பராக்காஸ்
- எந்த போருக்கு பின் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி வங்காள நவாபிடமிருந்து நிலவரி வசூல் உரிமைகளை பெற்றது?
பிளாசிப் போர்
- பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
கிபி 1757
- எந்த ஆண்டு ரிப்பன் பிரபு ஊரக உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் அதை மேற்பார்வையிட மாவட்ட அளவில் வாரியங்களின் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்?
1882
- மாவட்ட வாரியங்களின் பணிகள் எந்த ஆண்டு வரை காவல், கல்வி மற்றும் கிராம துப்புரவு முதலியவையாக மட்டுமே இருந்தன ?
1909
- எந்த ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் மத்திய அரசிற்கும் மாகாண மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளுக்கும் இடையே நிர்வாக மற்றும் நிதி உறவுகளை பற்றி விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது?
1907
- தமிழ்நாட்டின் கிராம உள்ளாட்சி அமைப்புகள் எத்தனை அடுக்கு உடையது?
மூன்று அடுக்கு : மாவட்ட ,வட்டார மற்றும் கிராம அளவில் உள்ளது
- தமிழ்நாட்டில் எந்த ஆண்டு மாகாணங்களில் இருந்த அலுவலரல்லாத தலைவர்கள் மாற்றப்பட்டு அலுவலர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்?
1923
- இரட்டை ஆட்சி முறை மூலமாக நிர்வாகத்துறைகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டது?
இரண்டு: மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், மாகாண அரசுகளுக்கு மாற்றி தரப்பட்ட துறைகள்
- ஒதுக்கப்பட்ட துறைகள் என அழைக்கப்படுபவை ?
காவல் ,சட்டம் ஒழுங்கு, நிதி போன்றவை
- ஒதுக்கப்பட்ட துறைகள் யாரின் வசம் இருக்கும்?
ஆளுநர்
- மாற்றி தரப்பட்ட துறைகள் என அழைக்கப்படுபவை?
கல்வி மற்றும் பிற துறைகள்
- கிராமப்புற பஞ்சாயத்துக்கு ஆளுகையில் பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும் என கூறியவர்?
மகாத்மா காந்தியடிகள்
- சுதந்திர இந்தியாவுக்கான காந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர் யார் ?
ஷர்மா நாராயணன்
- “அரசு கிராம பஞ்சாயத்துகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவைகள் சுய ஆட்சியின் அலகுகளாக பணிபுரியத் தேவையான அதிகாரங்களையும் திறனையும் வழங்கவேண்டும்” என கூறும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு என்ன ?
பிரிவு 40
- அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் உள்ளது?
பகுதி-4
- இந்திய அரசியலமைப்பு எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது ?
நவம்பர் 26 ,1949
- சமூக மேம்பாட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1952
- சமூக மேம்பாட்டு திட்டத்தின் நோக்கம் என்ன?
மக்களின் கூட்டு முயற்சியின் மூலம் ,கிராமங்களின் சமூக பொருளாதார மாற்றத்தை உறுதி செய்வது
- எந்த ஐந்தாண்டு திட்டத்தில் கிராம பஞ்சாயத்துகள் அமைப்பு ரீதியாக உயர் நிலைகளில் உள்ள மக்கள் நிர்வாக அமைப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது?
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
1956-61
- எந்த ஆண்டு பல்வந்த்ராய் மேத்தா தலைமையில் திட்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது ?
1957
- எத்தனை சதவீத இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்துராஜ் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்?
90%
- பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்பாடுகளை பற்றி ஆராயவும் அதனை செம்மைப் படுத்தவும் இந்திய அரசாங்கம் 1977 ஆம் ஆண்டு யாருடைய தலைமையில் குழு அமைத்தது ?
அசோக் மேத்தா
- பஞ்சாயத்துராஜ் அமைப்பு மக்களாட்சி பண்புகளை கொண்ட ஒரு உள்ளாட்சி அரசாங்க அமைப்பாக மாற வேண்டும் என பரிந்துரைத்த குழு எது?
அசோக் மேத்தா குழு
- அசோக் மேத்தா குழு எந்த ஆண்டு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது?
1978
- உள்ளாட்சி அரசாங்கங்களை வலுப்படுத்த 1978 முதல் 1986 வரை என்னென்ன குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன?
சி.எச் ஹனுமந்த்ராவ், ஜி.வி.கே ராவ் மற்றும் எல். எம் .சிங்வி குழு போன்ற பல குழுக்கள்
- ராஜீவ்காந்தி அரசாங்கத்தால் எந்த ஆண்டு 64வது மற்றும் 65 வது சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்படாமல் போனது?
1989
- எந்த ஆண்டு 73-வது மற்றும் 74-வது சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
1992
- 73-வது மற்றும் 74 ஆவது சட்டத் திருத்த மசோதா எந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேற்றியது?
1993
- 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தம் இந்திய அரசமைப்பின் எந்த இரு பகுதிகளை இணைத்தது?
பகுதி IX மற்றும் IX(A)
- பகுதி IX மற்றும் IX(A) உள்ள சட்டப்பிரிவுகள் எதுவரை உள்ளது?
243 முதல் 243(ZG)
- மக்கள் தொகை 20 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டத்தை கொண்ட மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு என்ன?
பிரிவு 243(B)
- ஒரு கிராம பஞ்சாயத்து நிலையை யார் ஒரு அறிக்கை மூலமாக தீர்மானிக்கலாம்?
மாநில ஆளுநர்
- அரசமைப்பின் எந்த அட்டவணை கட்டாய பணிகள் மற்றும் விருப்ப பணிகளை பஞ்சாயத்தின் மூன்று அடுக்குகளுக்கும் தருகிறது ?
11வது அட்டவணை
- எவ்வளவு மக்கள் தொகையை கொண்ட மாநிலங்களில் கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இடைப்பட்ட அளவில் இடைநிலை பஞ்சாயத்துகள் உள்ளன?
20 லட்சத்துக்கும் மேல்
- ஒரு பஞ்சாயத்தில் உள்ள அனைத்து இடங்களும் என்ன தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் ?
தொகுதி மக்களின் நேரடியான தேர்தல்
- ஒரு கிராமப் பஞ்சாயத்தில் வாக்காளர்களைக் கொண்ட அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கிராமசபை
- பஞ்சாயத்து ராஜ் கான அடிக்கல்லை ஜவஹர்லால் நேரு எங்கு எப்போது நாட்டினார் ?
ராஜஸ்தான் மாநிலம், நகவூர் அக்டோபர் 2 ,1959
- பஞ்சாயத்துராஜ்க்கான பொன்விழா ஆண்டு எப்போது கொண்டாடப்பட்டது?
2009
- பஞ்சாயத்ராஜ்களில் பெண்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது?
மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மிகாமல்
- பஞ்சாயத்துக்களின் பதவிக்காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
- இந்தியாவின் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ எவ்வளவு கிராம பஞ்சாயத்துகள் உள்ளன?
2 லட்சத்து 50 ஆயிரம்
- பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தேவைப்படும் தகுதிகள் என்னென்ன?
மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தகுதிகள்
- பஞ்சாயத்து ராஜ் இன் பொறுப்புகள் எந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது ?
அரசியலமைப்பின் 11வது அட்டவணை
- பொதுவான நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்க வகைகளாக உள்ளவை எவை?
மாநகராட்சிகள் ,நகராட்சிகள், பேரூராட்சிகள் ,நகரியங்கள் மற்றும் பாளைய வாரியங்கள்
- மாநகராட்சிகள் ,நகராட்சிகள், பேரூராட்சிகள் ,நகரியங்கள் முதலியவை எந்த சட்டங்களின் அடிப்படையில் செயல்படுகிறது ?
மாநில நகராட்சி சட்டங்கள்
- பாளைய வாரியங்கள் எந்த சட்டத்தின்படி செயல்படுகின்றன?
பாளையவாரியங்கள் சட்டம் ,1924
- கிராமசபை கூட்டங்கள் ஆண்டிற்கு எத்தனை முறை நடத்தப்படுகிறது?
நான்கு:ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
- ஒரு பகுதி ஊரகப் பகுதியில் இருந்து நகரப்பகுதியாக உயரக்கூடிய நிலையிலிருந்தால் அப்பகுதி எவ்வாறு் அழைக்கப்படும்?
பேரூராட்சி
- பேரூராட்சிகளில் மக்கள்தொகை எவ்வளவு?
5000 முதல் 15 ஆயிரத்துக்கு மிகாமல்
- ஒரு பேரூராட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3-க்கு குறையாமலும் 15 விட மிகாமலும்
- எத்தனை உறுப்பினர்கள் பேரூராட்சியின் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்களாக இருப்பர்?
இரண்டு உறுப்பினர்கள்
- ஒரு பேரூராட்சியின் பதவிக் காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- பேரூராட்சியின் பகுதிகள் பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வார்டுகள்
- ஒட்டுமொத்த வார்டுகள் எண்ணிக்கையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு?
மூன்றில் ஒரு பங்கு
- பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தினை கூட்டுபவர் யார்?
துணை ஆணையர்
- நகராட்சிகள் எவ்வளவு மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஏற்படுத்தப்படுகிறது ?
15 ஆயிரத்துக்கும் மேலும் மூன்று லட்சத்திற்கு கீழ் உள்ள சிறு நகரப்பகுதிகளில்
- நகராட்சியின் வகையினம் அ வின் மக்கள் தொகை எவ்வளவு?
1 லட்சமும் அதற்கு மேலும்
- நகராட்சியின் வகையினம் ஆ வின் மக்கள் தொகை எவ்வளவு?
50,000 முதல் 1 லட்சம் வரை
- நகராட்சியின் வகையினம் இ வின் மக்கள் தொகை எவ்வளவு?
50,000 க்கு கீழ்
- நகராட்சியின் வகையினம் அ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?
20க்கு குறையாமலும் 50 எண்ணிக்கைக்கு மிகாமலும்
- நகராட்சியின் வகையினம் ஆ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?
15 முதல் 30 வரை
- நகராட்சியின் வகையினம் இ வின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எவ்வளவு?
10 முதல் 15 வரை
- எத்தனை உறுப்பினர்கள் வரை அரசாங்கம் நகர சபைக்கு நியமிக்கலாம்?
மூன்று உறுப்பினர்கள்
- நகராட்சி உறுப்பினர்கள் என்ன முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
மக்களால் ரகசிய வாக்கெடுப்பு முறை
- தேர்தல் முடிவுகள் வெளியான எத்தனை நாட்களுக்குள் துணை ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க வகை செய்யவேண்டும்?
14 நாட்கள்
- எத்தனை மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளை இணைத்து வார்டுகுழுக்கள் ஏற்படுத்தப்படும்?
மூன்று லட்சத்திற்கும் குறைவாக
- நகராட்சி நிலை குழுக்களின் பதவி காலம் எவ்வளவு?
இரண்டரை ஆண்டுகள்
- நகராட்சியின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்
- நகர சபை ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட வேண்டும் ?
ஒருமுறையாவது
- நகர சபைக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?
தலைவர் அல்லது துணைத் தலைவர்
- நகரசபை உருவாக்கும் குழுக்கள் எத்தனை வகைப்படும்?
இரண்டு: சட்டப்பூர்வ குழுக்கள் ,சட்டபூர்வமற்ற குழுக்கள்
- நகர்மன்றத் தலைவரின் பதவிக்காலம் எவ்வளவு ?
5 ஆண்டுகள்
- நகர்மன்ற கூட்டங்களை கூட்டுவது,தலைமை வகிப்பது யார்?
நகர்மன்றத் தலைவர்
- நகர் மன்றத்தின் முதன்மை பேச்சாளர் யார்?
நகர்மன்றத் தலைவர்
- நகர்மன்றத்தை ஆளுகின்ற அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நகர்மன்ற குழு
- சட்டம் இயற்றுவது, நகரமன்ற கூட்டங்களின் நேரம், கூட்டத்தை நடத்துவது போன்ற முடிவுகளை யார் மேற்கொள்வார்?
நிர்வாக அலுவலர்
- நகர மன்றத்தின் பணிகள் பொறுப்புகள் இந்திய அரசமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ளது?
12வது அட்டவணை
- எந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒரு மாவட்டம் முழுமைக்கும் ஒரு வளர்ச்சி திட்ட வரைவு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட திட்டக்குழுவை ஏற்படுத்தியது?
74வது அரசியலமைப்பு சட்ட திருத்தம்
- இந்தியாவில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்பின் உச்ச அமைப்பு எது?
மாநகராட்சி
- எதன்மூலம் பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்படுகின்றன ?
பாராளுமன்ற சட்டத்தின் மூலமாகவும், மாநில சட்டமன்ற மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டம் மூலமாகவும்
- ஆரம்பகாலத்தில் மாநகராட்சி அமைப்புகள் எங்கு உருவாக்கப்பட்டது ?
மும்பை ,சென்னை மற்றும் கொல்கத்தா
- மாநகராட்சியின் தலைமை நிர்வாகி யார்?
ஆணையர்
- மாநகராட்சி அமைப்பின் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்
- மாநகராட்சியில் வார்டு குழுக்களை ஏற்படுத்திய சட்டத்திருத்தம்?
74வது சட்டத்திருத்தம்
- 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் முதல் இடத்தை பெற்ற நகரம் எது?
புனே
- 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் கடைசி இடத்தை பெற்ற நகரம் எது?
பெங்களூர்
- 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பில் சென்னை பெற்ற தரம்?
3.3
- மாநகராட்சியில் நிலைக் குழுவின் தலைவர் யார்?
மேயர்
- மாநகராட்சியின் நிலைக் குழுவின் பதவிக்காலம் எவ்வளவு ?
ஓர் ஆண்டுகள்
- இந்திய அரசியலமைப்பின் 12வது அட்டவணை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டிய எத்தனை பணிகளை பட்டியலிட்டுள்ளது ?
18 பணிகள்
- மாநகராட்சி மன்ற கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார் ?
மேயர்
- மாநகராட்சியின் தலைமை நிர்வாகி யார்?
ஆணையர்
- மாநகராட்சி ஆணையர் எதனை சேர்ந்தவராவார்?
இந்திய நிர்வாக பணி (IAS)
- மாநகராட்சி ஆணையரின் பதவி காலம் எவ்வளவு?
மூன்று ஆண்டுகள்
- எந்த சட்ட திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது?
73-வது மற்றும் 74வது சட்ட திருத்தம்
- தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து எண்ணிக்கை எவ்வளவு?
12,564 கிராம பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியம், 31 மாவட்ட பஞ்சாயத்து
- தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் ,1958 மாற்றப்பட்டு என்ன சட்டம் புதிதாக இயற்றப்பட்டது?
தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ,1994
- தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் ,1994 எப்போது திருப்பப்பட்டது ?
1996
- எந்த திருத்தத்தின் மூலம் வளர்ச்சிக்கான திட்டங்களை ஏற்படுத்த மாவட்ட திட்டக்குழு ,மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில நிதி ஆணையம் போன்றவை உருவாக்கப்பட்டன ?
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்திருத்தம், 1996
- தமிழகத்தில் நகர உள்ளாட்சி அமைப்புக்காண தேர்தல் எந்த ஆண்டுகளில் நடைபெற்றது?
1996 ,2001 மற்றும் 2011
- இதுவரை எத்தனை மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளன?
18 மாநிலங்கள்
- தமிழ்நாடு நகர்ப்புற சட்டங்கள் மசோதா 2018 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் மசோதா 2018 இரண்டும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பு அதிகாரங்களின் பதவிக்காலத்தை எவ்வளவு காலத்திற்கு நீட்டித்தது?
ஆறுமாதங்கள்
- தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
12 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)
- தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் எண்ணிக்கை எவ்வளவு ?
148 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)
- தமிழகத்திலுள்ள பேரூராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
561 (தேர்வு காலத்திற்குமுன் தமிழக அரசின் வலைதளத்தில் சரிபார்த்துக் கொள்க)
11TH POLITY STUDY NOTES | உள்ளாட்சி அரசாங்கங்கள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services