- இறையாண்மை என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
சூப்பரானஸ் (Superanus) இலத்தீன் மொழி சொல்
- சூப்பரானஸ் (Superanus) என்ற இலத்தீன் மொழி சொல்லின் பொருள் என்ன?
மிக உயர்ந்த அல்லது மேலான
- ரோமானிய நீதிபதிகளும் மக்களும் இடைக்காலத்தில் இறையாண்மையை என்ன வார்த்தைகளை பயன்படுத்தி அழைத்தனர்?
சம்மா பொடெஸ்டாஸ் (Summa potestas), ப்ளெனிடீயூட்பொடெஸ்டாஸ்(plenitude potestas)
- இறையாண்மை என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
போடின்
- போடின் தனது எந்த நூலில் இறையாண்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்?
குடியரசு
- போடின் எழுதிய குடியரசு எனும் நூல் எந்த ஆண்டு வெளியானது ?
1576
- “இறையாண்மை என்பது ஒட்டுமொத்த மற்றும் தடையில்லாத அரசின் அதிகாரமாகும். மேலும் அதிக கட்டளை தன்மையுடையதாகும் காணப்படுகிறது” எனக் கூறியவர் யார்?
ஜீன் போடின்
- இறையாண்மையின் முக்கிய பண்பாக திகழ்வது எது?
நிரந்தரத் தன்மை
- இறையாண்மையின் இரண்டு அம்சங்கள் என்னென்ன?
உட்புற இறையாண்மை ,வெளிப்புற இறையாண்மை
- “ஓர் மரமானது தான் முளை விடுவதை மாற்ற முடியாததை போன்று இறையாண்மையையும் மாற்றித் தர இயலாது. இது ஒரு மனிதன் தன்னை அழித்துக் கொள்ளாமல் தனது உயிர் அல்லது ஆளுமையை மாற்றித் தர இயலாததை போன்றதாகும் “எனக் கூறியவர் யார் ?
லைபர்
- “மக்கள் இறையாண்மை எனப்படுவது பெரும்பான்மை வாக்காளர்களின் அதிகாரமாகும் .மேலும் இவ்வகை அதிகாரமானது தோராயமாக உலகளாவிய வாக்குரிமை செயல்படக்கூடிய நாட்டில் வாக்காளர்கள் பல்வேறு நிறுவப்பட்ட வழிமுறைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விருப்பமாகும்” என கூறியவர் யார்?
முனைவர் கார்னர்
- எந்த வகை இறையாண்மை சட்டபூர்வமாக இல்லாது உண்மையான அதிகாரத்தை பெற்று சட்டத்தை நிறைவேற்றும் இறையாண்மை என அழைக்கப்படும்?
நடைமுறை இறையான்மை
- எந்த வகை இறையாண்மை உண்மையாக நடைமுறையில் இல்லாது சட்டபூர்வமாக மட்டுமே காணப்படுவதாகும்?
சட்டப்படியான இறையாண்மை
- இறையாண்மையின் வகைகள் என்னென்ன?
பெயரளவு மற்றும் உண்மையான இறையாண்மை ,சட்ட இறையாண்மை, அரசியல் இறையாண்மை, மக்கள் இறையாண்மை
- நெப்போலியன் எந்த வகை இறையாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்?
உண்மையான நடைமுறை இறையான்மை
- எப்போது கருப்பு சட்டை புரட்சி நடைபெற்றது ?
1922
- ஹிட்லர் ஜெர்மனியில் என்ன இறையாண்மையை பெற்று ஆட்சி செய்தார்?
நடைமுறை இறையாண்மை
- போல்ஷிவிக் புரட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது ?
1917
- ஒருமைவாத இறையாண்மை கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கம் எது?
பன்மைவாதம்
- யார் மூலமாக பன்மை வாதக் கோட்பாடு பிரபலமடைந்தது?
ஓட்டோ வ்.கீர்க் அவர்களின் படைப்புகள் மூலமாக
- உச்சநீதிமன்றத்தின் எந்த வழக்குகளின் தீர்ப்புகளில் இறையாண்மை பற்றிய விளக்கம் கூறப்பட்டுள்ளது ?
கோபாலன் vs மதராஸ் அரசு (1950) மற்றும் இந்தியன் யூனியன் vs மதனகோபால் (1954) வழக்குகள்
- “அரசுக்கு எந்த பட்டியலில் வேண்டுமென்றாலும் சட்டமியற்ற கூடிய அதிகாரம் இருப்பதாகவும் ஆனால் அது அரசமைப்பின் வரையறைக்கு உட்பட்டே அமையும்₹ என இறையாண்மையின் பொருள் குறித்து எந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது?
உத்தரபிரதேச அரசு (1990)
- “இந்தியா என்பது இறையாண்மை பொருந்திய மக்களாட்சிக் குடியரசு என்றும் அதுவே அடிப்படைக் கூறாக அரசமைப்பின் வழி காணப்படுகிறது” என்று எந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது ?
இந்திராகாந்தி vs ராஜ்நாராயணன் (1975)
- “பன்மை வாதத்தின் அருமைகளை நீதிபதியான வான் கிரிய்க்கின் காலத்திற்கு உட்பட்ட படைப்புகளில் காணலாம் ” என கூறியவர் யார்?
ஆர்.என்.கில்கிரிஸ்ட்
- ஒரு நாட்டின் மக்களுக்கு உரிமைகள் சரிசமமாக வழங்கப்பட்டாலும் அல்லது ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் அதனை நிர்ணயிக்கும் காரணியாக செயல்படுவது எது?
சமத்துவம்
- சமத்துவம் என்பது எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
இக்குவாலிஸ்
- இக்குவாலிஸ் என்ற வார்த்தையின் பொருள் என்ன?
நியாயமான
- பதினெட்டாம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ ஆட்சியையும் முடியரசையும் எதிர்த்து “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கத்தை முழங்கியவர்கள் யார்?
பிரெஞ்சு புரட்சியாளர்கள்
- “பூமி என்பது அனைவருக்கும் தாய். இதில் வாழும் அனைத்து மக்களுக்கும் அதனிடம் சம உரிமைகள் பெறுவதற்கு உரிமை உண்டு” எனக் கூறியவர் யார்?
சீஃப் ஜோசப்
- “கடந்த காலத்தின் வரலாறு என்பது சமத்துவத்தை மேல்நோக்கிய ஒரு நெடிய போராட்டம் ஆகும்” எனக் கூறியவர் யார்?
எலிசபெத் கார்டி ஷார்டோன்
- “பெருமளவில் இருக்கக்கூடிய ஏழைவர்க்கமும் சிறியளவில் வாழும் பணக்காரவர்க்கமும் உள்ள அரசில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பணக்கார வர்க்கத்தின் உடமைகளை பாதுகாக்கும் பொருட்டே அமையும் ” எனக் கூறியவர் யார்?
ஹெரால்டு லாஸ்கி
- சமத்துவத்தின் வகைகள் என்னென்ன?
குடிமை சமத்துவம் ,அரசியல் சமத்துவம், சமூக சமத்துவம், இயற்கை சமத்துவம் ,பொருளாதார சமத்துவம்
- மல்லிகை புரட்சி எங்கு நடைபெற்றது?
துனீசியா
- துனீசியாவின் தேசிய மலர் எது ?
மல்லிகை
- மல்லிகை புரட்சியில் யாருடைய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது?
பென் அலி
- அமெரிக்காவில் குடிமை உரிமைகள் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
மார்ட்டின் லூதர் கிங்
- “அனைத்து மக்களும் சமமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறுவது எது?
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்
- “மனிதன் சுதந்திரமாக பிறந்தவுடன் எப்பொழுதும் சுதந்திரமான மற்றும் சமமான உரிமைகளை பெற்றிருக்கிறார்கள்” என குறிப்பிடுவது எது ?
பிரான்ஸ் நாட்டின் “மனிதர்கள் மற்றும் குடிமக்களின் உரிமை பிரகடனம்”
- எப்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது?
டிசம்பர் 10, 1948
- சிவில் என்கிற வார்த்தை எதிலிருந்து உருவாக்கப்பட்டது ?
Civils or civis என்ற லத்தீன் மொழிச் சொல்
- Civils or civis என்ற லத்தீன் மொழிச் சொல்லின் பொருள் என்ன?
குடிமக்கள்
- விலங்குகள் பண்ணை என்ற நூலை எழுதியவர் யார்?
ஜார்ஜ் ஆர்வெல்
- அரசின் நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கு எத்தகைய பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் சமமான உரிமைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரசியல் சமத்துவம்
- “செல்வ வளங்களில் உள்ள வேறுபாடுகளை அகற்றி, ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நாட்டின் வளமைகளில் சமமான பங்கு அளிப்பது பொருளாதார சமத்துவமாகும்” எனக் கூறியவர் யார்?
ப்ரைஸ் பிரபு
- “அரசியல் சமத்துவம் என்பது பொருளாதார சுதந்திரம் இன்றி மெய்மையாவதில்லை என்றும் அப்படி இல்லாத நிலையில் வழங்கப்படும் அரசியல் அதிகாரம் என்பது பொருளாதார அதிகாரத்தின் கைப்பாவையாகும் ” எனக் கூறியவர் யார்?
பேராசிரியர் லாஸ்கி
- “பசியோடு வாழும் ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்ன நன்மையை அளிக்க முடியும்? அவனால் அந்த சுதந்திரத்தை சாப்பிடவோ அல்லது குடிக்கவோ முடியாது” எனக் கூறியவர் யார் ?
தாமஸ் ஹாப்ஸ்
- “சமத்துவத்தை நோக்கிய உணர்வுபூர்வமான பயணமானது சுதந்திரத்திற்கான நம்பிக்கையை வீணாகிறது” எனக் கூறியவர் யார்?
ஆக்டன் பிரபு
- “சுதந்திரமும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பது நல்லியல்பு” எனக் கூறியவர் யார் ?
ஹெரால்ட் லாஸ்கி
- “எங்கு பணக்காரவர்க்கம்- ஏழை வர்க்கம், படித்தவர்கள் -படிக்காதவர்கள் என்ற பிரிவினை இருக்கிறதோ அங்கு கண்டிப்பாக முதலாளி பணியாளர் என்ற வகுப்புவாத நிலையினை காணமுடியும்” என கூறியவர் யார்?
ஹெரால்ட் லாஸ்கி
- தனியாருக்கு இடையேயான பரிமாற்றங்களை அரசாங்க தலையீடுகளான கட்டுப்பாடு ,சலுகைகள், வரி, மானியம் போன்றவை இல்லாமல் சுமுகமாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் பொருளாதார
முறைமைக்கு பெயர் என்ன?
தாராளமயக் கொள்கை
- “முதலாளிகளுக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர்களுக்கும் இடையே சுதந்திரமான போட்டி நிலவ வேண்டும்” எனக் கூறியவர் யார் ?
ஆடம்ஸ்மித்
- “அரசியல் லட்சியங்கள்: ஓர் அறிமுகம்” என்ற நூலை எழுதியவர் யார்?
ஹேவுட்,அன்ட்ரு
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்லது அனைவருக்கும் சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது?
இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14
- சட்டத்தின் முன் சமம் மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு ஆகியவை எந்த இந்திய அரசமைப்பின் உறுப்பின் மூலம் வலிமைபடுத்தப்பட்டுள்ளது ?
உறுப்பு 21
- இந்திய அரசாங்கத்தின் உறுப்பு 21 எதை குறிக்கிறது?
எந்த ஒரு தனிநபரும் சட்ட நடைமுறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது
- மத அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு தடைவிதிக்கும் உறுப்பு எது ?
உறுப்பு 15
- பொது வேலை வாய்ப்பில் சம வாய்புரிமை வழங்கும் இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?
உறுப்பு 16
- தீண்டாமை ஒழிப்பு பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?
உறுப்பு 17
- பட்டங்கள் ஒழிப்பு பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?
உறுப்பு 18
- “எனக்கான உரிமைகளும் எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் மற்றவர்களுக்கும் கிடைப்பதையும் ,இவை எவ்வாறு என்னிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு உரிமையோ அவ்வாறு மற்றவர்களுக்கும் அது போன்ற உரிமையாகும் என்பதே சமத்துவமாகும்” எனக் கூறியவர் யார் ?
வால்ட் விட்மன்
- சட்டத்தின் முக்கிய கடமை எது?
தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாப்பது
- இங்கிலாந்தில் எப்போது முடியாட்சியை எதிர்த்து “மகத்தான புரட்சி” அரங்கேறியது?
1688
- பிரெஞ்சுப் புரட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது?
1789
- சுதந்திரம் என்பது எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது ?
லிபர் என்கிற லத்தீன் வார்த்தை
- லிபர் என்கிற லத்தீன் வார்த்தையின் பொருள் என்ன?
கட்டுப்பாடில்லாத / தடையில்லாத
- “ஒழுங்குமுறை அரசில் சுதந்திரம் சாத்தியமாகிறது. இவ்வகை அரசில் இறையாண்மையினுடைய சட்ட மற்றும் அரசியல் அம்சங்கள் ஒன்றியோ, ஏறக்குறையவோ அல்லது முழுவதுமாகவோ காணப்படுகிறது” என கூறியவர் யார் ?
பேராசிரியர் பார்க்கர்
- “வரலாற்று அனுபவங்கள் மக்கள் வசதியாக வாழ்வதற்கும், தகுந்த முன்னேற்றத்திலான வாழ்விற்கான விதிமுறைகளையும் அளித்துள்ளது. கீழ்பணிதலை கட்டாயப்படுத்தும் போது சுதந்திரத்திற்கு உரிய நியாயமான வரையறையாக அது விளங்குகிறது” என கூறியவர் யார்?
லாஸ்கி
- “மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பது சுதந்திரமாகும்” எனக் கூறியவர் யார்?
ஹெரால்ட்
- “சுதந்திரம் என்பது தகுதியான மகிழ்ச்சியையும் மற்றும் வேலையையும் அனுபவிப்பதற்கு உண்டான நேர்மறையான சக்தியாகும்” எனக் கூறியவர் யார்?
கெட்டல்
- “சுதந்திரம் என்பது தனி மனிதர்கள் தங்கள் ஆளுமை தன்மையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களை வெளிப்படுத்துவதாககும்” எனக் கூறியவர் யார்?
ஜி.டி.எச்.கோல்
- “சுதந்திரம் என்பதன் பொருள் தடைகள் இல்லாத நிலை என்பதல்ல மாறாக சுதந்திரத்தை மேம்படுத்துவதில் உள்ளது” எனக் கூறியவர் யார்?
மகாத்மா காந்தி
- “உரிமைகள் இல்லாமல் சுதந்திரம் கிடையாது. ஏனெனில் உரிமைகள் இல்லாத சூழ்நிலையில் குடிமக்கள் அனைவரும் ஆளுமை தன்மையின் தேவைகளுக்கு அவசியமற்ற வெறும் சட்டத்திற்கு உட்பட்ட மக்களாவர்” எனக் கூறியவர் யார்?
ஹெரால்டு ஜே.லாஸ்கி
- சுதந்திரத்தின் இரண்டு கட்டங்கள் என்னென்ன?
நேர்மறை சுதந்திரம் மற்றும் எதிர்மறை சுதந்திரம்
- சிலவற்றை செய்வதற்கான சுதந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர்மறை சுதந்திரம்
- சுதந்திரத்தின் வகைகள் என்னென்ன?
இயற்கை சுதந்திரம் சமூக அல்லது குடிமை சுதந்திரம் நீதிநெறி சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம் ,அரசியல் சுதந்திரம் ,பொருளாதார சுதந்திரம் ,உள்நாட்டு சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ,பன்னாட்டு சுதந்திரம்
- ஒருவர் நினைப்பதை தங்குதடையில்லாமல் நடத்தி முடிப்பதற்கான சுதந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயற்கை சுதந்திரம்
- “இயற்கை நிலையில் மனிதர்கள் வாழ்வுரிமை, சுதந்திர உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை அனுபவித்தார்கள்” எனக் கூறியவர் யார்?
ஜான் லாக்
- மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ஆனால் எங்கெங்கு காணினும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறான்” எனக் கூறியவர் யார் ?
ரூசோ
- அரசியல் சுதந்திரத்தை அரசமைப்பு சுதந்திரம் எனக் கூறுபவர் யார்?
லீலாக்
- எந்த ஒரு அடக்குமுறையோ அல்லது சட்டவிரோதமான கட்டுப்பாடுகளோ இல்லாமல் தனி மனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்களை செயல்படுத்தும் நிலைக்குப் பெயர் என்ன?
தனிப்பட்ட சுதந்திரம்
- “சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாலும் மேலும் சுதந்திரத்தின் மூலம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதாலும் சுதந்திரத்திற்கு ஆபத்தான நிலை உருவாக்கப்படலாம்” எனக் கூறுபவர் யார் ?
ஜேம்ஸ் மாடிசன்
- ஒருவரின் அன்றாட வாழ்வாதாரத்திற்கான உணவைத் தேடிக் கொள்ளும் தனிநபர் சுதந்திரம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பொருளாதார சுதந்திரம்
- “ஓநாய்க்கும் கறுப்பு செம்மறியாட்டிற்க்கும் சுதந்திரம் தொடர்பான ஒத்த கருத்துக்கள் அமைவதில்லை. இதைப்போலவே தான் மனித இனத்திற்கு இடையேயும்
தற்பொழுது சுதந்திரத்தை பற்றிய வேறுபாடுகள் உள்ளன ” என கூறியவர் யார்?
ஆபிரகாம் லிங்கன்
- “அடிப்படை சுதந்திரத்தை சிறிய அளவிலான தற்காலிக பாதுகாப்பிற்காக யாரேனும் துறந்தால் அவர்கள் சுதந்திரமோ அல்லது பாதுகாப்போ கிடைப்பதற்கு தகுதியற்றவர்களாவர்” என கூறியவர் யார் ?
பெஞ்சமின் பிராங்கிளின்
- நாடு அல்லது தேசத்தின் நிலவக்கூடிய சுதந்திர சூழ்நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேசிய சுதந்திரம்
- இந்தியாவின் மீது சீனா எப்போது தாக்குதல் தொடுத்தது?
1962
- பாகிஸ்தான் இந்தியா மீது எப்போது தாக்குதல் தொடுத்தது ?
1965,1971
- சுதந்திர தேவி சிலையின் குறிக்கோள் என்ன ?
விடுதலை பற்றிய உலகளாவிய நினைவூட்டலாகவும் ,அமெரிக்க குடிமக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது
- “சட்டங்கள் இல்லை என்றால் அங்கே சுதந்திரம் இல்லை” எனக் கூறியவர்?
ஜான் லாக்
- “பூமியில் இறைவனின் ஆட்சியே அரசு எனப்படுகிறது மேலும் சமூக நீதிநெறியின் உறுப்பாகவும் நன்னெறி மேலான வெளிப்பாடாகவும் அரசு விளங்குகிறது” என கூறியவர் யார்?
ஹெகல்
- “ஒரு நிலையான ராணுவத்தை விட கல்வி என்பது சுதந்திரத்தின் சிறந்த பாதுகாப்பாகும்” எனக் கூறியவர் யார்?
எட்வர்ட் எவ்ரட்
- சமத்துவ உரிமைகள் பற்றிய இந்திய அரசமைப்பின் உறுப்புகள் எது?
உறுப்பு 14 முதல் 18 வரை
- இந்திய அரசமைப்பின் உறுப்பு 19 முதல் 22 வரை குறிப்பிடுவது எது ?
சுதந்திரத்திற்கான உரிமை
- சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றி இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு குறிப்பிடுகிறது ?
உறுப்பு 23 மற்றும் 24
- சுதந்திரத்திற்கான உரிமை பற்றி குறிப்பிடும் இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?
25 முதல் 28
- பண்பாடு மற்றும் கல்வி உரிமை தொடர்பான உறுப்புகளைக் கொண்ட இந்திய அரசமைப்பின் உறுப்பு எது?
உறுப்பு 29 மற்றும் 30
- அரசமைப்பு பரிகார உரிமைகள் பற்றிய உறுப்பு எது?
உறுப்பு 32 முதல் 35
- சட்டத்தின் ஆட்சி எந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளது?
இங்கிலாந்து ,அமெரிக்கா ,இந்தியா
- “வறுமை என்பது விபத்தல்ல ,அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போன்றவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவையாகும் இவை மனிதர்களின் நடவடிக்கைகள் மூலம் களையப்பட வேண்டியவையாகும் “எனக் கூறியவர் யார்?
நெல்சன் மண்டேலா
- சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்தை பிரபலப் படுத்தியவர் யார்?
இங்கிலாந்து சட்ட நிபுணர் ஏ.வி. டைசி
- “சட்டமே ஆளுகை புரிய வேண்டும்” என கூறியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- “குடிமக்களின் தூய உணர்விலான உத்வேகமானது ,சட்டத்தின் வார்த்தைகளை விட குறைவுபடினும் அதுவே அவர்களுக்கு மிகவும் உண்மையான பாதுகாவல் ஆகும் “எனக் கூறியவர் யார்?
ஹெரால்டு ஜெ.லாஸ்கி
11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் 1| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services