- அரசின் இறையாண்மையால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்ற விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சட்டம்
- யாருடைய கூற்றின்படி இறையாண்மையின் கட்டளையே சட்டம் ஆகிறது?
போடின்
- “சட்டம் செயல்படாத நிலையில் மனிதர்கள் விலங்குகளாக மாறுகிறார்கள்” என கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்
- அரசால் அமலாக்கம் செய்யப்படுகின்ற விதிமுறைகளின் தொகுப்பிற்கு என்ன பெயர்?
சட்டம்
- சட்டத்தின் குறிக்கோள் என்ன ?
சமூகத்தில் நீதியை அடைவது
- சட்டம் என்ற வார்த்தை எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது ?
டியூட்டோனிக் மொழியிலுள்ள லாக் என்ற வேர்ச்சொல்
- டியூட்டோனிக் மொழியிலுள்ள லாக் என்ற வேர்ச்சொல்லின்ஸ பொருள் என்ன?
நிலைத்தன்மை அல்லது ஒரே சீரான
- சட்டம் என்ற சொல் எதனை குறிக்கிறது?
சீரானது
- சட்டத்தை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
இரண்டு: இயற்கை சட்டம் மற்றும் மனித சட்டம்
- மனித நடவடிக்கைகளை வழி நடத்துகிற விதிகளை கொண்ட தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சட்டம்
- “சட்டம் என்பது இறையாண்மையின் கட்டளை” எனக் கூறியவர் யார்?
ஜான் ஆஸ்டின்
- “நீதி நிர்வாகத்தை செயல்படுத்துவதற்காக அரசு அங்கீகரித்த விதிமுறைகளின் தொகுப்பே சட்டம் ஆகின்றது” எனக் கூறியவர் யார்?
சல்மாண்டு
- “சட்டம் என்பது விழுமியங்களை சார்ந்த தீர்ப்புகளின் வெளிப்பாடு ஆகிறது. மனித வர்க்கம் விரும்புகின்ற ஒழுங்கமைவு மற்றும் இயற்கை சார்ந்த நீதிநெறியாகவும் சித்தரிக்கப்படுகிறது” எனக் கூறியவர் யார்?
கிராப்
- “அரசாங்கத்தின் சக்தியாலும் அதிகாரத்தாலும் நிலைப்படுத்தப்பட்ட ஒரே சீரான விதிமுறைகளின் அமைப்பிற்கு சட்டம் என்று பொருள். மேலும் இது நிலைப்படுத்தப்பட்ட எண்ணங்களாகவும், பழக்க வழக்கங்களாகவும் கருதப்படுகிறது₹ எனக் கூறியவர் யார் ?
உட்ரோ வில்சன்
- “மனிதர்களின் புற நடவடிக்கைகளுக்காக இறையாண்மை மிக்க அரசியல் அதிகாரம் மூலம் அமலாக்கம் செய்யப்படும் பொது விதிகளின் தொகுப்பே சட்டமாகும்” என கூறியவர் யார்?
ஹாலந்து
- “அரசின் ஆதரவு இல்லையெனில் ஒரு சட்டம் சட்டமாகவே இருக்கமுடியாது .சட்டத்தின் நோக்கமானது உறுதியான அடித்தளங்களை நிறுவவும், மனிதர்களின் மெய்யுறுதியை வலிமையாக்கி அதன் மூலம் சமூகத்தின் கட்டமைப்பை மேம்படுத்த செய்வதுமாகும்” எனக் கூறியவர் யார்?
மேக்ஐவர்
- “சட்டம் அரசை உருவாக்குவது அல்ல மாறாக அரசின் அழுத்தமே சட்டத்தை உருவாக்குகிறது” என கூறியவர் யார்?
ஹாக்கிங்
- குடிமக்கள் இடையேயான உறவுகளும் ,அவ்வுறவுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் எந்த சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது?
தனியார் சட்டம்
- “தனியார் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தனி நபர்களாகவும் அவர்களுக்கு மேலாகவும் இடையேயும் ஓர் பாரபட்சம் இல்லாத நடுவராக அரசு இருக்கிறது ” என கூறியவர் யார்?
ஹாலந்து
- குடி மக்களுக்கும் அரசுக்கும் இடையேயான உறவுகளை முடிவு செய்வது எது?
பொது சட்டம்
- அரசை வழிநடத்தக் கூடிய அடிப்படை சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரசமைப்பு சட்டங்கள்
- அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரையறுத்து தெளிவுபடுத்தக் கூடிய சட்டங்கள் எது?
அரசமைப்பு சட்டங்கள்
- அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் அதிகாரங்களையும் பற்றியதாக இல்லாமல் குடி மக்களுடைய சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சாதாரண சட்டங்கள்
- மாநில சட்டமன்றத்தின் மூலமாகவும் ,நாடாளுமன்றத்தின் மூலமாக இயற்றப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிரந்தர சட்டங்கள்
- நாடாளுமன்றம் இயங்காத காலங்களிலும் அவசர காலங்களிலும் குடியரசுத் தலைவர் மூலம் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அவசர சட்டம்
- பொது சட்டங்கள் எந்த நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சட்டங்களாகும்?
இங்கிலாந்து
- அரசாங்க பணியாளர்களின் அலுவல் மற்றும் பொறுப்புகளை பற்றி விளக்கம் அளிப்பதுடன் ஆளுகையை முறைப்படுத்துவதற்கான சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நிர்வாக சட்டம்
- நாகரீகமடைந்த நாடுகளுக்கு இடையேயான உறவு முறைகளையும் நடத்தையையும் நிர்ணயிக்கும் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பன்னாட்டு சட்டம்
- ஜல்லிக்கட்டு சட்டம் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
2017
- இந்திய அரசமைப்பின் எந்த சட்ட உறுப்பின் மூலம் கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது?
சட்டப்பிரிவு 29(1)
- “விலங்குகளும் புலன் உணர்வு கொண்டவை ஆதலால் அடிப்படை உரிமை உறுப்பு 29(1)ன்படி வாழும் உரிமையை பெறுகின்றன என்றும் ஆதலால் அவற்றை துன்புறுத்துவதை அனுமதிக்க இயலாது” என்றும் எப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது?
2014
- “சமச்சீராக்கம் என்பது அசல் குடிமை சட்டத்தோடு இருக்கக்கூடிய விதிமுறை தொகுப்பாகும். நீதியின் அடிப்படையிலும் மரபுகளின் அடிப்படையில் உருவானதால் இவ்வுறுப்புகள் குடிமைச் சட்டத்தின் பயன்பாடுகளை மீறுமளவிற்கு தலையாய புனிதத்தன்மையை பெற்று விளங்குகின்றன” எனக் கூறியவர் யார்?
சர் ஹென்றி மெய்ன்
- “அரசியல் புது சட்டத்தை உருவாக்க மட்டுமல்லாது அதனை தெளிவுபடுத்துவதற்காகவும் வழக்காறுகளை செயல்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது” என கூறியவர் யார்?
கெட்டல்
- ஆங்கிலேய பொதுச் சட்ட மரபைப்பின்பற்றும் நாடுகளில் உள்ள சட்ட விதிகளின் தொகுப்பிற்கு என்ன பெயர்?
சமச்சீராக்கம்
- சட்ட நிபுணர்களின் கருத்துக்கள் பெரும்பாலான நேரங்களில் சட்டமாகவே கருதப்படுகிறது உதாரணத்திற்கு இந்தியாவின் விஜ்நானேஸ்வரா மற்றும் அபரார்கா ஆகியோரின் விளக்கவுரைகளைக் கூறலாம் என கூறியவர் யார்?
அ. அப்பாதுரை
- “குடிமக்களின் மனங்களிலிருந்து உருவாவது அரசாகும். அவர்கள் நீதிநெறி முகவர்களாவர் .அதேசமயம் நல்லியல்பு இல்லாத கெட்டகுடி மக்களிடம் இருந்து உருவாவது மோசமான அரசும் மோசமான சட்டங்களுமே ஆகும் ” எனக் கூறியவர் யார்?
கில்கிறிஸ்ட்
- இந்திய அரசமைப்பின் சட்ட உருவாக்க முறைகள், நாடாளுமன்ற அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி, ஒற்றை குடியுரிமை, ஈரவை அரசாங்கம் போன்றவை எந்த அரசமைப்பில் இருந்து பெறப்பட்டது?
பிரிட்டன் அரசமைப்பு
- அடிப்படை உரிமைகள் ,சுதந்திரமான நீதித்துறை ,நீதிப்புனராய்வு, குடியரசுத் தலைவர் பதவி நீக்க நடைமுறை ,உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்ற விசாரணை ,துணை குடியரசுத் தலைவரின் பங்கு முதலியவை எங்கிருந்து பெறப்பட்டது ?
அமெரிக்க அரசமைப்பு
- “தனிமனிதனின் நல்லொழுக்கத்திற்கு சரிசமமாக இயங்கக்கூடியது நல்லரசாகும் .அரசியல் உடற்கூறில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கின்ற போது ஒட்டுமொத்த உடலும் பாதிப்புறும்” என கூறியவர் யார்?
பிளாட்டோ
- “நீதி நெறிகள் என்பவை அரசிற்கு அத்தியாவசியமான நிபந்தனையாக விளங்குகிறது. சட்டமும் அரசும் பொதுமக்கள் கருத்தை உருவாக்கவும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன சட்டமானது பொதுக்கருத்தை பிரதிபலிப்பதோடு நல்லியல்புகளின் மேம்பாட்டிற்கான குறியீடாகவும் விளங்குகிறது” என கூறியவர் யார்?
மேக்ஐவர்
- “அரசின் சட்டங்கள் என்பவை நீதி நெறியிலான சமூகத்தை உருவாக்குவதாகும்” என கூறியவர் யார்?
வில்சன்
- சமூகக் எதிர்மறையான மது, சூது ,திருட்டு ,வழிப்பறி ,கொலை ,கொள்ளை போன்றவைகளை கட்டுப்படுத்தும் சமூக உறுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
நீதிநெறி
- “தற்கால அரசானது நீதிநெறி ,மதம் மற்றும் இயற்கை சட்டத்தின் இலட்சியவாத அடிப்படையில் நீடிக்கிறது எனலாம் .அதேசமயத்தில் அரசு தனது சுய பாதுகாப்பிற்காக மேற்குறிப்பிட்ட ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ மீறுகிறது” எனக் கூறியவர் யார்?
J.M கோட்ஸீ
- “நீதிநெறி கடமைகளை மறுதலிப்பதும் சட்டக் கடமைகளை மறுதலிப்பதும் நீதி நெறிகளை முற்றிலும் நாசமாகிறது. சட்ட மனசாட்சி மற்றும் நீதிநெறி மனசாட்சி என்ற இருவேறு மனசாட்சிகள் ஒன்றோடு ஒன்று எப்போதும் ஒத்துவராதவைகளாகும்” எனக் கூறியவர் யார்?
மேக்ஐவர்
- “சட்டமும் ஒழுங்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக இயங்குகிறது. இதை செய்யத் தவறும் பட்சத்தில் சமூக வளர்ச்சியை தடுக்கும் ஆபத்தான தடுப்பணைகளாக இவை மாறுகின்றன” எனக் கூறியவர் யார்?
மார்ட்டின் லூதர் கிங்
- “குடியுரிமை என்பது பிறப்பிடம் ,குடும்பம் ,பரம்பரை மற்றும் பண்பாட்டை சார்ந்து அமைவதாகும்” என கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்
- லட்சிய அரசு என்பது சட்டத்தின் அடிப்படையிலான, சட்டத்தை மதிக்கும் குடிமக்களாலேயே சாத்தியப்படும்” என கருதியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- “ஒவ்வொரு மனிதனும் அரசியல் விலங்கு என்றும் நகர அரசில் மட்டுமே அவன் முழுமை அடைவான்” எனக் கூறியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- மார்ஷலின் கருத்துப்படி குடியுரிமை எத்தனை வகைப்படுகிறது ?
மூன்று : குடிமை ,அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த குடியுரிமைகள்
- “எவர் ஒருவருக்கு விவாதங்களிலும் அரசின் நீதி நிர்வாக அமைப்பிலும் பங்கேற்க அதிகாரம் இருக்கிறதோ அவரை குடிமகன் ஆவார்” எனக் கூறியவர் யார் ?
அரிஸ்டாட்டில்
- அரசமைப்பிடம் விசுவாசம், கடமைகளில் அதிகபட்ச திறனுன் இருத்தல் ,நல்லியல்பு மற்றும் நீதி வழுவாமல் ஆகிய மூன்று பண்புகளும் அனைத்து வகை மனிதர்களுக்கும் மிகவும் முக்கியம் எனக் கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்
- “கல்வியே நாட்டில் நிலவும் ஊழலுக்கும் நிலை தன்மையற்ற அரசியலுக்குமான தீர்வாக கருதப்படுகிறது” என கூறியவர் யார் ?
பிளாட்டோ
- வயதான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நலன்சார்ந்த சட்டம் எப்போது இயற்றப்பட்டது ?
2007
- வயதான பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நலன் சார்ந்த சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச பராமரிப்பு செலவாக மாதம் எவ்வளவு அளிக்க கட்டாயமாக்கப்பட்டது ?
ரூபாய் 10,000
- முதியோர் நலனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கக்கூடிய யாரேனும் நன்கு அறிந்தே அவர்களை கைவிடும் பட்சத்தில் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகிறது?
5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை அல்லது இரண்டும்
- இந்தியாவில் குடியுரிமையானது எதன் மூலம் பெறப்படுகிறது ?
பிறப்பு, வம்சாவளி, பதிவு, இயல்புரிமை மற்றும் பிரதேச உள்ளடக்கத்தின் மூலம்
- NRIன் விரிவாக்கம் என்ன?
Non resident indian
- OCIன் விரிவாக்கம் என்ன?
Overseas citizen of India
- PIOன் விரிவாக்கம் என்ன?
Person of Indian origin
- பொதுமக்களின் விருப்பக்கோரிக்கைகள் என்பது என்ன?
உரிமை
- “நீதிநெறியிலானவனாக மனிதனின் பணியை நிறைவேற்றுவதற்குத் தகுந்த அதிகாரங்களே உரிமையாகும் “என கூறியவர் யார்?
டி.எச்.கீரின்
- சட்ட உரிமைகள் எத்தனை வகைப்படும்?
மூன்று: குடிமை உரிமைகள் ,அரசியல் உரிமைகள் ,பொருளாதார உரிமைகள்
- உரிமைகளில் மிகவும் உயர்வானது எது?
மனித உரிமைகள்
- உரிமைகள் மசோதா என்பது அமெரிக்காவில் எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
டிசம்பர் 15, 1791
- உரிமைகள் மசோதாவை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜேம்ஸ் மாடிசன்
- அமெரிக்காவின் உரிமைகள் மசோதா எதன் அடிப்படையில் அமைந்தது?
புகழ்பெற்ற வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனம்
- வெர்ஜீனியா மனித உரிமைகள் பிரகடனம் எப்போது வெளியிடப்பட்டது?
1776
- இங்கிலாந்தின் மகாசாசனம் எப்போது வெளியிடப்பட்டது?
1215
- எப்போது அரசியலமைப்பு நிர்ணய சபையானது வரைவு குழுவை உருவாக்கியது?
ஆகஸ்ட் 29 1947
- அரசமைப்பு நிர்ணய சபையானது வரைவுக் குழுவின் தலைவராக யாரை நியமனம் செய்தது?
டாக்டர் அம்பேத்கர்
- அரசியலமைப்பு நிர்ணய சபை வரைவு குழுவின் மூலம் எத்தனை சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்யப்பட்டது?
7635
- தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களில் எத்தனை மசோதாக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன?
2437
- எப்போது 12 ஆவது அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத் தொடர் நடைபெற்றது?
ஜனவரி 24 1950
- 1950 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு நிர்ணய சபையின் கூட்டத்தொடரில் முதலாவது இந்திய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் யார்?
ராஜேந்திர பிரசாத்
- அரசமைப்பு நிர்ணய சபையானது இந்திய அரசமைப்பு சட்டத்தினை வரையறை செய்ய எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது?
2 ஆண்டுகள் ,11 மாதங்கள், 20 நாட்கள்
- இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் அடிப்படை உரிமைகள் உள்ளன?
பகுதி 3
- சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உத்தரவாதத்தை அளிக்கும் உரிமை எது?
சமத்துவ உரிமை
- மக்களாட்சிக்கு தேவையான அடிப்படை உரிமைகள் என்னென்ன?
சுதந்திரம் மற்றும் சமத்துவம்
- “கடமைகள் மற்றும் உரிமைகள் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவை. பின் உள்ள உரிமைகள் வழங்கும் சலுகைகள் தான் தனது கடமைகளை ஒருவர் செய்வதற்கு காரணமாகிறது” என கூறியவர் யார் ?
மகாத்மா காந்தி
- ஒருவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அச்சுறுத்தும் வகையிலும் தேசப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதையும் தடுப்பதற்காக அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எது?
தடுப்புக்காவல்
- இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பின் படி ஒவ்வொருவரும் மதவிவகாரங்களின் அடிப்படையில் சேவை புரிவதற்காக நிறுவனங்களை உருவாக்கி அதற்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உரிமையாக்கி சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கலாம் என கூறுகின்றது?
அரசமைப்பு உறுப்பு 26
- ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் பரிகாரம் செய்ய எந்த அரசமைப்பின் உறுப்பு உதவுகிறது?
உறுப்பு 32
- ஒரு குடிமகன் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்றம் பரிகாரம் செய்ய எந்த அரசமைப்பின் உறுப்பு உதவுகிறது?
உறுப்பு 226
- உச்சநீதிமன்றம் எத்தனை நீதிப்பேராணைகளைப் பிறப்பிக்கிறது?
5
- ஐந்து வகை நீதிப் பேராணைகள் என்னென்ன?
ஆட்கொணர்வு நீதிப்பேராணை, கட்டளை நீதிப் பேராணை, சான்றாய்வு நீதிப்பேராணை, தகுதி வினவும் நீதிப்பேராணை, தடை நீதிப்பேராணை அல்லது தடை உத்தரவு
- தகவல் உரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
2005
- அரசின் நேரடி வழிகாட்டு நெறிமுறைகள் இந்திய அரசமைப்பின் எந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது ?
பகுதி-4
- எத்தனை வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி தற்போது அடிப்படை உரிமைகளில் உள்ளது?
6 வயது முதல் 14 வயது வரை
- “அரசியல் கடப்பாடு என்பது ஓர் ஆளுகைக்கு உட்பட்டோருக்கு இறையாண்மை மிக்க ஆள்வோரிடம் உள்ள கடப்பாடு , குடிமகனுக்கு அரசிடம் உள்ள கடப்பாடு சக மனிதருக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு போன்றவைகள் ஆகும். இதனை அரசியல் உயர் பதவியில் இருப்பவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள்” என கூறியவர் யார்?
டி.எச்.கிரீன்
- அரசியல் கடப்பாடுகள் எத்தனை வகைப்படும்?
4: நீதிநெறி கடப்பாடு, சட்டப்படியான கடப்பாடு, நேர்மறை கடப்பாடு ,எதிர்மறை கடப்பாடு
- குற்றம் செய்தல் என்பது எந்த வகை கடப்பாடு?
எதிர்மறை கடப்பாடு
- மார்க்சின் கோட்பாடு எத்தனை நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது ?
மூன்று:புரட்சிக்கு முந்தைய நிலை, புரட்சிகால நிலை& புரட்சிக்குப் பிந்தைய நிலை
- எந்த ஆண்டு இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம் பெண்களுக்கும் ஆண்களைப் போன்ற பிரிக்கப்படாத குடும்ப பாரம்பரியத்தில் சமமான பங்கு உண்டு என்ற உரிமையை வழங்கியுள்ளது?
1956
- எத்தனையாவது சட்ட திருத்தத்தின் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
44வது அரசமைப்புச் சட்டத்திருத்தம்
- 44வது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் வருடம் என்ன ?
1977
- தற்போது சொத்து உரிமை எந்த விதியின் கீழ் சாதாரண உரிமையாக வழங்கப்பட்டுள்ளது ?
விதி 300 (A)
11TH POLITY STUDY NOTES | அரசியல் அறிவியலின் அடிப்படை கருத்தாக்கங்கள் 2| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services