TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- தேவகிரி முகமது பின் துக்ளக் காலத்தில் என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
தௌலதாபாத்
- சுதந்திரமான மதுரை சுல்தானியம் எப்போது உருவானது?
1333
- வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் எப்போது தன்னை சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார் ?
1345
- ஜாபர் கான் தனது தலைநகரை தேவகிரியிலிருந்து எங்கு மாற்றினார்?
குல்பர்கா
- ஜாபர் கான் என்ன பட்டத்தைச் சூடிக் கொண்டார்?
பாமன் ஷா
- பாமினி அரச வம்சத்தை தோற்றுவித்தவர் யார் ?
ஜாபர்கான் அல்லது பாமன்ஷா
- எந்த ஆண்டு விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது ?
1336
- யாரால் விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்டது?
சங்கம வம்ச சகோதரர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர்
- விஜயநகர பேரரசு எதனை தலைநகராகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்டது?
விஜயநகர்
- விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
துங்கபத்திரா நதிக்கரை
- எந்த இலக்கியங்கள் விஜயநகர அரசின் வம்சாவழி ,அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தகவல்களைத் தருகின்றன?
மனுசரிதம், சாளுவவையுதயம்
- எந்த நூல் கிருஷ்ணதேவராயரின் கீழிருந்த நாயக்க முறை பற்றிய தகவல்களைத் தருகின்றது?
ராயவாசகமு
- ராயவாசகமு எந்த மொழியில் எழுதப்பட்டது ?
தெலுங்கு
- இபன் பதூதா எந்த நாட்டு பயணி?
மொரோக்கோ
- அப்துர் ரசாக் எந்த நாட்டு பயணி ?
பாரசீகம்
- நிகிடின் எந்த நாடு பயணி ?
ரஷ்யா
- டோமிங்கோ பயஸ் எந்த நாட்டு பயணி?
போர்த்துக்கல் நாடு
- நூனிஸ் எந்த நாட்டுப் பயணி ?
இத்தாலி
- விஜயநகர அரசர்கள் என்ன பெயரில் தங்க நாணயங்களை அதிக எண்ணிக்கையில் வெளியிட்டனர்?
வராகன்
- விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
பொன்
- விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
ஹொன்னு
- விஜயநகர அரசர்கள் வெளியிட்ட வராகன் என்ற தங்க நாணயத்தில் என்ன விலங்குகளின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன?
காளை, யானை, கண்டபெருண்டா
- விஜயநகர அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயத்தில் அரசருடைய பெயர் என்ன எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ?
நகரி அல்லது கன்னட எழுத்து வடிவம்
- அலாவுதீன் ஹசன் பாமன்ஷா சுமுகமான நிர்வாகத்திற்காக டெல்லி சுல்தானியர் முறையைப் பின்பற்றி தன் ஆட்சிப் பகுதியை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தார்?
நான்கு
- அலாவுதீன் ஹசன் பாமன் ஷா பிரித்த ஆட்சிப்பகுதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
தராப்ஸ்
- அலாவுதீன் ஹசன் பாமன் ஷா பிரித்த பகுதிகள் என்னென்ன ?
குல்பர்கா, தௌலதாபாத்,பீடார்,பெரார்
- அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை என்னவாக பொறித்துக் கொண்டார்?
இரண்டாம் அலெக்சாண்டர்
- அலாவுதீன் ஹசன் பாமன் ஷாவின் காலம் என்ன?
1347-1358
- முதலாம் முகமதுவின் காலம் என்ன?
1358-1375
- எந்த ஆண்டு முதலாம் முகமது வாராங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்?
1363
- ஆகாய நீல வண்ணத்திலுள்ள ரத்தின கற்களினால் இழைக்கப்பட்ட அரியணை பாரசீக அரசர்களின் ஒரு சிம்மாசனமாக இருந்தது என எந்த நூல் குறிப்பிடுகிறது?
ஷாநாமா
- ஷாநாமா நூலை எழுதியவர் யார்?
பிர்தௌசி
- எட்டு அமைச்சர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தியவர் யார் ?
முதலாம் முகமது
- படைத் தலைவர் மற்றும் அரசருக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
வகில்-உஸ்- சுல்தானா
- மற்ற அமைச்சர்களின் பணிகளை மேற்பார்வையிடுபவர் யார்?
வசீர்-குல்
- நிதியமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
அமீர்-இ-ஜூம்லா
- வெளியுறவு அமைச்சர் ,அரசு விவகாரத்துறை அமைச்சர் ,அரசு விழாக்களை முன்னின்று நடத்தும் பொறுப்பு உடையவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
வசீர்-இ-அஷ்ரப்
- நிதித்துறை இணையமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
நசீர்
- அரச படைகளின் பொறுப்பாளர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
பேஷ்வா
- காவல்துறைத் தலைவர், தலைநகரின் நீதிபதி எவ்வாறு அழைக்கப்படுவார்?
கொத்வால்
- தலைமை நீதிபதி, சமய அறநிலையத்துறை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
சதர்-இ-ஜஹான்
- முதலாம் முகமது காலத்தில் எப்போது தலைநகரம் குல்பர்கா விலிருந்து பீடாருக்கு மாற்றப்பட்டது?
1429
- சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் யாருடைய ஆட்சிக் காலத்தில் அமைச்சராக விளங்கினார் ?
மூன்றாம் முகமது
- முகமது கவான் எங்கு பிறந்தார் ?
பாரசீகம்
- முகமது கவான் எங்கு ஒரு மதரஸாவை நிறுவிய அவர் அதில் ஒரு பெரிய நூலகத்தையும் அமைத்தார்?
பீடார்
- கோல்கொண்டா கோட்டையை கட்டியவர் யார்?
ராஜா கிருஷ்ணதேவ்
- ராஜா கிருஷ்ணதேவ் எந்த அரச வம்சத்தைச் சார்ந்தவர்?
காகத்திய அரச வம்சம்
- 1495-1496 கோல்கொண்டா கோட்டை யாருக்கு ஜாகீராக தரப்பட்டது?
சுல்தான் குலிகுதப்ஷா
- எந்த நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைர சந்தையாக திகழ்ந்தது ?
17ஆம் நூற்றாண்டு
- கோல்கொண்டா கோட்டையின் உயர்ந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பாலா ஹிசார்
- கோல்கொண்டா கோட்டையில் யாருடைய கல்லறை உள்ளது?
குதுப்ஷாகி
- கோல்கொண்டா கோட்டையின் நுழைவு வாயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பதேதர்வாசா அல்லது வெற்றி நுழைவாயில்
- ஔரங்கசீப் எத்தனை மாதங்கள் முற்றுகையிட்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றினார் ?
எட்டு மாதங்கள்
- ஔரங்கசீப் எந்த ஆண்டு கோல்கொண்டா கோட்டையை கைப்பற்றினார் ?
1687
- பாமினி அரசை நிர்வாக வசதிக்காக நாட்டை எட்டு மாகாணங்களாகப் பிரித்தவர் யார் ?
முகமது கவான்
- மூன்றாம் முகமது இறந்தபின் பாமினி பேரரசு எத்தனை அரசுகளாக பிரிந்தது?
ஐந்து பீஜப்பூர், அகமதுநகர் ,கோல்கொண்டா, பீடார்,பெரார்
- ராட்சஷி தங்கடிப் போர் என அழைக்கப்படும் போர் எது ?
தலைக்கோட்டை போர்
- தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1565
- ஹரிஹரர் மற்றும் புக்கர் யாரிடம் சில காலம் பணி செய்தனர்?
ஹொய்சாள அரசர்
- மதுரை சுல்தானால் கொல்லப்பட்ட ஹொய்சாள அரசர் யார் ?
மூன்றாம் பல்லாலர்
- விஜயநகர அரசின் தொடக்க காலத்தில் துங்கபத்ரா நதியின் வடகரையில் எந்த இடத்தின் அருகே தலைநகர் அமைந்திருந்தது?
அனகொண்டி
- அனகொண்டி இடத்திலிருந்து தலைநகரம் எந்த இடத்திற்கு மாற்றப்பட்டது?
ஹொசபட்டனா
- விஜயநகரம் என்பதன் பொருள் என்ன?
வெற்றியின் நகரம்
- விஜயநகர பேரரசு நிறுவியதில் எந்த சமஸ்கிருத அறிஞர் முக்கிய பங்காற்றினார்?
வித்யாரண்யர்
- வித்யாரண்யர் கல்வெட்டு சான்றுகளின்படி எந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்?
14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி
- விஜயநகர அரசு எத்தனை அரச வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டது?
நான்கு: சங்கம வம்சம் ,சாளுவ வம்சம், துளுவ வம்சம் ,ஆரவீடு வம்சம்
- விஜயநகர அரசு நான்கு அரச வம்சத்து அரசர்களால் எத்தனை ஆண்டுகளுக்கு மேலாக ஆளப்பட்டது?
300 ஆண்டுகள்
- முதலாம் புக்கரின் ஆட்சியின் போது தமிழகத்தின் வட மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டல பகுதியை ஆண்டு வந்தவர் யார் ?
சம்புவராயர்
- மதுரை சுல்தானை 1370 இல் கொன்றதன் மூலம் மதுரை சுல்தான் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார் ?
குமார கம்பண்ணா
- மதுரா விஜயம் என்ன மொழியில் எழுதப்பட்ட நூல்?
சமஸ்கிருத மொழி
- மதுரா விஜயம் எனும் நூலை எழுதியவர் யார் ?
கங்காதேவி
- கங்காதேவி யாருடைய மனைவி?
குமார கம்பண்ணா
- ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் அதிகாரத்திற்கான போட்டி விஜயநகருக்கும் ஒரிசாவை சேர்ந்த எந்த அரசுக்கும் இடையே நடைபெற்றது?
கஜபதி அரசு
- சங்கம வம்ச அரசர்கள் மிகச் சிறந்த அரசர் யார் ?
இரண்டாம் தேவராயர்
- இரண்டாம் தேவராயரின் காலத்தில் வந்த பாரசீக நாட்டின் தூதுவர் யார்?
அப்துர் ரசாக்
- எந்த ஆண்டு சாளுவ வம்சத்தின் ஆட்சி தொடங்கியது?
1485
- சாளுவ வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?
தளபதி சாளுவ நரசிம்மர்
- சாளுவ நரசிம்மர் எப்போது மரணம் அடைந்தார்?
1491
- துளுவ வம்சத்தின் ஆட்சி எப்போது தொடங்கியது?
1505
- துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?
வீரநரசிம்மர்
- கிருஷ்ணதேவராயரின் காலம் என்ன?
1509 -1529
- கிருஷ்ணதேவராயர் தனது வெற்றி துணை எங்கு நிறுவினார்?
சிம்மாச்சலம்
- விஜயநகருக்கு ராணுவ உதவிகளை செய்து வந்த வெளிநாட்டவர் யார் ?
போர்ச்சுக்கீசியர்கள்
- போர்ச்சுகீசியர்கள் விஜயநகர அரசு காலத்தில் எந்த இடத்தில் கோட்டை கட்டிக் கொள்ளும் உரிமையைப் பெற்றனர்?
பத்கல்
- கிருஷ்ணதேவராயரின் சம காலத்து வெளிநாட்டு பயணிகள் யார்?
நூனிஸ், டோமிங்கோ பயஸ்
- ஆமுக்தமால்யதா எனும் நூலை எழுதியவர் யார்?
கிருஷ்ணதேவராயர்
- ஆமுக்தமால்யதா என்பதன் பொருள் என்ன?
ஆண்டாளின் கதை
- நாயக் அல்லது நாயக்ங்காரா முறையை மறுசீரமைப்பு செய்து அதற்கு சட்ட அங்கீகாரத்தை கொடுத்தவர் யார்?
கிருஷ்ணதேவராயர்
- கிருஷ்ணதேவராயர் இறந்தபோது அவருடைய மகன் குழந்தையாக இருந்ததால் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார் ?
சகோதரர் அச்சுத தேவராயர்
- சாளுவநாயக் என்றும் அறியப்படுபவர் யார்?
செல்லப்பா
- அச்சுத தேவராயர் எப்போது மரணம் அடைந்தார் ?
1542
- அச்சுத தேவராயர் இறப்பிற்குப்பிறகு உண்மையான அரசு அதிகாரம் யாரிடம் இருந்தது ?
ராமராஜா
- போர்ச்சுக்கீசியரோடு ஒப்பந்தம் மேற்கொண்டதன் மூலம் பீஜப்பூர் அரசுக்கு குதிரைகள் அனுப்பப்படுவதை நிறுத்தியவர் யார் ?
ராமராஜா
- ஆரவீடு வம்ச ஆட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1570
- ஆரவீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார் ?
ராமராஜாவின் சகோதரர்
- விஜயநகர அரசுக் காலத்தில் முதலமைச்சர் இவ்வாறு அழைக்கப்பட்டார்?
மகா பிரதானி
- விஜயநகர அரசுக் காலத்தில் தளபதி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
தளவாய்
- விஜயநகர அரசுக் காலத்தில் அரண்மனை பாதுகாவலர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
வாசல்
- விஜயநகர அரசுக் காலத்தில் செயலர்/ கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
ராயசம்
- விஜயநகர அரசுக் காலத்தில் தனி உதவியாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
அடைப்பம்
- விஜயநகர அரசுக் காலத்தில் செயல் முகவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
காரிய கர்த்தா
- விஜயநகர அரசுக் காலத்தில் நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டது ?
ராஜ்ய எனும் மண்டலங்களாக
- 1400ல் தமிழகப் பகுதிகளில் இருந்த ஐந்து ராஜ்யாக்கள் என்னென்ன?
சந்திரகிரி ,படைவீடு ,வழுதலம்பட்டு ,திருச்சிராப்பள்ளி, திருவாரூர்
- ஒவ்வொரு ராஜ்யாவும் என்னவாகப் பிரிக்கப்பட்டிருந்தது ?
சீமை ,ஸ்தலம், கம்பனா
- நாயக் முறை யாரால் அறிமுகமானது?
துளுவ வம்சத்தைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர்
- நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகு எது?
கிராமம்
- நாயக்க எனும் சொல் தெலுங்கு கன்னட பகுதிகளில் பதிமூன்றாம் நூற்றாண்டில் இருந்து என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது?
ராணுவ தலைவர் அல்லது ராணுவ வீரர்
- இக்தா முறை எந்த அரசர் வம்சத்தில் பின்பற்றப்பட்டது?
டெல்லி சுல்தானியம்
- ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
நாயக்கட்டணம்
- ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் கன்னடத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
நாயக்தானம்
- ராணுவ சேவைக்கு பதிலாக வருவாய் ஈட்டித்தரும் நிலப்பகுதிகளை வழங்கும் முறை விஜயநகர காலத்தில் தமிழில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
நாயன்கரமு
- விஜயநகர அரசு எத்தனை க்கும் மேற்பட்ட நாயக்குகளாக பிரிக்கப்பட்டிருந்தது?
200
- நாயக்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குதிரை காலாட்படை வீரர்கள் பராமரித்து தேவைப்படும் நேரத்தில் அரசுக்கு இராணுவ சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என குறிப்பிடுபவர் யார்?
நூனிஸ்
- வேளாண்மை அல்லாத பிரிவுகளை சார்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
பட்டடை அல்லது காஸயவர்க்கம்
- ராமநாதபுரம் சிற்றரசு யாரால் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துவங்கி வைக்கப்பட்டது?
முத்து கிருஷ்ணப்ப நாயக்கர்
11TH HISTORY STUDY NOTES | பாமினி & விஜயநகர பேரரசு | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services