TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியாவின் எந்த பண்பாட்டுடன் பொருந்துகிறது ?
செம்பு கால பண்பாடு
- பிற்கால வேத பண்பாடு இந்தியாவின் எந்த காலத்தை சேர்ந்த பண்பாட்டோடு பொருந்துகிறது?
இரும்புக் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட சாம்பல் நிறப் பாண்டப் பண்பாடு
- வேதங்கள் எத்தனை வகைப்படும் ?
4: ரிக், யஜுர் ,சாம ,அதர்வணம்
- வேதங்களில் பழமையானது எது?
ரிக் வேதம்
- எந்த நூற்றாண்டுகளில் வேதப் பாடல்கள் முதன்முதலாக எழுத பெற்றதாக அறியப்படுகிறது?
கிபி 10 11ஆம் நூற்றாண்டு
- வேதப் பாடல்களில் முக்கிய தொகுப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
சங்கீதைகள்
- சங்கீதைகளில் மிகப்பழமையானது எது ?
ரிக்வேத சங்கீதை
- ரிக்வேதசங்கீதையின் காலம்?
கிமு 1500- கிமு 1000 இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தது
- ரிக்வேத மொத்தம் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது ?
10
- ரிக் வேதத்தின் எந்த காண்டங்கள் முதலில் எழுதப்பட்டது என கருதப்படுகிறது?
2 முதல் 7 வரை
- ரிக் வேதத்தின் எந்த காண்டங்கள் பிற் காலத்தைச் சேர்ந்தவை என கருதப்படுகிறது ?
1,8,9,10
- ஒவ்வொரு சங்கிதையும் என்ன இணைப்பு குறிப்புகளைக் கொண்டுள்ளன?
பிராமணங்கள்
- பிராமணங்கள் எவற்றை உள்ளடக்கியுள்ளது?
பாடல்கள் மற்றும் சடங்குகள் குறித்த விளக்க உரை
- பிராமணங்கள் எது இயற்றப்பட்ட பின்னர் இயற்றப்பட்டது?
சங்கீதைகள்
- ஒவ்வொரு பிராமணமும் எவற்றை கொண்டுள்ளது?
ஓர் ஆரண்யகம் ,ஓர் உபநிடதம்
- காடுகளில் வாழும் முனிவர்கள் ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய மந்திர சடங்குகள் குறித்த குறிப்புகளை எது கொண்டுள்ளது?
ஆரண்யகம்
- உபநிடதங்கள் எவற்றை உள்ளடக்கியுள்ளது?
தத்துவ கருத்துக்கள், வினாக்கள்
- பிற்காலத்தைச் சேர்ந்த வேதங்கள் எவை ?
யஜுர்,சாம அதர்வணம்
- பிராமணங்கள், ஆரண்யகங்கள் ,உபநிடதங்கள் எந்த காலத்தில் இயற்றப்பட்டவை?
வேத காலத்தின் இறுதி
- இந்திய இசை மரபின் அடித்தளமாக கருதப்படும் வேதும் எது?
சாமவேதம்
- சடங்குகளையும் பாடல்களையும் கொண்டுள்ள வேதம் எது?
யஜுர் வேதம்
- மாய மந்திரங்கள் அடங்கிய வேதம்?
அதர்வண வேதம்
- ஜெண்ட் அவஸ்தா எனப்படும் நூல் எந்த மதத்தைச் சார்ந்தது ?
ஜொராஸ்டிரியா
- ஜெண்ட் அவஸ்தா நூல் எந்த மக்களை குறித்த செய்திகளை கூறுகிறது?
இந்தோ-ஈரானிய மொழிகளை பேசி வந்த மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ,அவர்களின் கடவுள்கள் குறித்து
- Chalco என்பதன் பொருள் என்ன ?
செம்பு
- Lith என்பதன் பொருள் என்ன?
கல்
- பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்ட பண்பாட்டின் காலம் என்ன?
கிமு 2600 முதல் கிமு 1200 வரை
- பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்ட பண்பாடு வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நலிந்த ஹரப்பா பண்பாடு/செம்பு பொருட்குவியல் பண்பாடு
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாடு எந்த காலத்தோடு ஒத்துப்போகிறது?
இரும்பு காலம்
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாட்டின் காலம் என்ன?
கிமு 1100 முதல் கிமு 800 வரை
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாட்டை தொடர்ந்து வட இந்தியாவில் என்ன பண்பாடு தோன்றியது?
மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்ட பண்பாடு
- மெருகேற்றப்பட்ட கருப்பு நிற மட்பாண்ட பண்பாடு யாருடைய காலத்தோடு தொடர்புடையது?
மௌரியர் காலத்து மகாஜனபதங்கள்
- ஓவியம் தீட்டப்பட்ட சாம்பல்நிற மட்பாண்ட பண்பாடு வட இந்தியாவின் எந்த கால பண்பாடாக கணக்கிடப்படுகிறது ?
இரும்பு காலப் பண்பாடு
- தென்னிந்தியாவில் இரும்பு காலம் என்ன பண்பாடாக உள்ளது ?
ஈமச்சின்னங்களுடன் கூடிய பெருங்கற்காலப் பண்பாடு
- ஈமச் சடங்கின் போது பெரிய கற்பாறைகளை பயன்படுத்தி வட்ட வடிவம், குத்துக்கல் என பலவகையான கல்லறைகளை உருவாக்குதல் எந்த கால பண்பாட்டுக் கூறாக அறியப்படுகிறது?
பெருங்கற்காலப் பண்பாடு
- பெருங்கற்காலப் பண்பாட்டின் கூறான தாழியில் புதைக்கும் வழக்கத்திற்கான சான்றுகள் எங்கு கிடைத்துள்ளன?
ஆதிச்சநல்லூர்
- தமிழகத்தில் இறந்தவர்கள் புதைக்கப்பட்ட புதைமேடுகளில் மட்டும் என்ன நிற மட்பாண்டங்கள் அதிகம் கிடைக்கின்றன?
கருப்பு நிற மட்பாண்டங்கள்
- பெருங்கற்கால ஈம நடைமுறைகள் எந்த ஆண்டு வரை தொடர்வதாக மதிப்பிடப்படுகிறது ?
கி.மு இரண்டு- மூன்றாம் நூற்றாண்டுகள் வரை
- எந்த ஆற்றுப்பகுதியில் தமிழகத்தின் பழையகாலத்தைச் சேர்ந்த நான்கு நடுகற்கள் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் காணப்படுகின்றன?
வைகை ஆற்றுப் படுகை
- வைகை ஆற்றுப்படுகையில் காணப்பட்ட நடுகற்கள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை?
கிமு இரண்டாம் நூற்றாண்டு அல்லது முதல் நூற்றாண்டு
- போரில் இறந்த வீரர்களின் நினைவாக நடப்படும் நடுகல் மரபு எந்த மரபின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது?
ஈமக் குத்துக்கல்
- கருப்பு சிவப்பு வண்ண மட்கலன்கள் மனித எலும்பு சான்றுகள் மற்றும் இரும்பு பொருட்களுடன் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி அருகில் உள்ள எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
வடமலைகுண்டா
- உப்பாறு நதிக்கரையில் பண்டைய கால மனிதர்கள் வாழிடங்கள் இருந்ததை சுட்டிக்காட்டும் பழமையான குத்துக்கல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
திருப்பூர் மாவட்டம் சிங்காரிபாளையம் குந்தலம் அருகே
- ஆதிச்சநல்லூரில் ஆண்டிரு சாகர் எப்போது அகழ்வாய்வு மேற்கொண்டார்?
1876
- ஆண்டிரு சாகர் எந்த நாட்டைச் சார்ந்தவர் ?
ஜெர்மனி
- யாருடைய மேற்பார்வையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு களை புகைப்படங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை தயார் செய்து இந்திய தொல்லியல் துறையின் 1902-03 ஆண்டறிக்கையில் வெளியிட்டவர் யார் ?
அலெக்சாண்டர் ரீ
- கால்டுவெல் எந்த இடத்திற்கு வந்திருந்தபோது செம்பிலான வளையல் ஒன்றைக் கண்டெடுத்தார்?
ஆதிச்சநல்லூர்
- பையம்பள்ளி எந்த மாவட்டத்தில் உள்ளது?
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா
- இந்திய தொல்லியல் துறை பையன் பள்ளியில் எந்த ஆண்டு அகழ்வாய்வுப்பணியை நடத்தியது?
1960
- கொடுமணல் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
நொய்யல் ஆறு
- எந்த சங்க நூலில் சேர அரசனுக்கு சொந்தமான கொடுமணம் என்ற ஊர் அங்கு கிடைக்கும் விலைமதிப்புமிக்க கற்களுக்காக புகழப்படுகிறது?
பதிற்றுப்பத்து
- கொடுமணல் பகுதியில் யாருடைய நாணய குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது?
ரோமானிய நாணய குவியல்கள்
- ரிக் வேதம் என்ன மொழியில் எழுதப்பட்டுள்ளது?
சமஸ்கிருதம்
- ரிக் வேதத்தில் எந்த மொழிகளைச் சேர்ந்த 300 சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன ?
முண்டா மற்றும் திராவிட மொழியைச் சேர்ந்தவைகள்
- ஆரியர்கள் பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் பூட்டிய தேரை பயன்படுத்தினார்கள் என்பது எந்த வேதத்தின் மூலம் உறுதியாகிறது ?
ரிக்வேதம்
- ஆரியர்கள் எங்கிருந்து குடிபெயர்ந்து இந்தியாவிற்கு வந்தனர் என அறிஞர்கள் கருதுகின்றனர்?
மத்திய ஆசியா
- பாக்டீரியா மார்ஜினா தொல்லியல் வளாகம் எந்த பண்பாட்டோடு நெருங்கிய தொடர்புடையது?
ஆரியப் பண்பாடு
- பாக்டீரியா மார்ஜினா தொல்லியல் வளாகத்தின் காலம் என்ன?
கிமு 1900 முதல் கிமு 1500 வரை
- இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பற்றிய குறிப்புகள் இன்றைய நவீன ஈராக் பகுதியில் கண்டறியப்பட்ட எந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டில் காணப்படுகிறது ?
கிமு 2200
- வேதகால கடவுள்களின் பெயர்களை போலுள்ள பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
அனதோலியா கல்வெட்டு
- அனதோலியா கல்வெட்டு காலம் என்ன?
கி.மு.1900-1700
- காஸ்சைட் கல்வெட்டு எந்த இடத்தை சார்ந்தது?
ஈராக்
- காஸ்சைட் கல்வெட்டின் காலம் என்ன?
கி.மு. 1600
- மிட்டானி & போகஜ் கல்வெட்டுகள் எந்த இடத்தை சார்ந்தவை?
சிரியா
- இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோர்களிடம் காணப்படுவதாக கூறப்படும் மரபணு எது?
எம்.17(M17)
- ரிக் வேதத்தில் அஸ்வா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
215 முறை
- ரிக் வேதத்தில் ரிஷபா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
170 முறை
- எந்த வெப்ப மண்டல விலங்குகள் ரிக்வேதத்தில் காணப்படவில்லை ?
புலி, காண்டாமிருகம்
- தொடக்க வேதகால பண்பாட்டின் காலம் என்ன?
கிமு 1500- கிமு 1000
- தாசர்,தசயு என்பதன் பொருள் என்ன?
கருமை நிறத் தோல் கொண்டவர்கள்
- ரிக்வேதத்தில் 90 கோட்டைகள் அல்லது குடியிருப்புகளின் தலைவர் எனக் குறிப்பிடப்படுபவர் யார் ?
குலிதாரா என்பவரின் மகனான சம்பரா
- சம்பரா எனும் தலைவன் பரத குலத்தைச் சேர்ந்த யாரால் தோற்கடிக்கப்பட்டதாக இருக்கு வேதம் குறிப்பிடுகிறது?
திவோதசா
- ரிக் வேதத்தில் மக்களின் வாழ்விடங்களும் நிலப்பகுதிகளும் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
ஜனா,விஷ்,கணா,கிராம,குலா
- ரிக் வேதத்தில் இந்திரன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
புரந்தரா
- புரந்தரா என்பதன் பொருள் என்ன?
குடியிருப்புகளை அழிப்பவன்
- ஜனா என்ற சொல்லின் பொருள் என்ன?
பழங்குடி, இனக் குழு
- ரிக்வேதத்தில் முதன்முதலாக குறிப்பிடப்படும் பரத குலத்தின் பெயரை ஒட்டி இந்திய பகுதிகளுக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?
பாரதவர்ஷா
- பத்து அரசர்களின் போர் எந்த ஆற்றங்கரையில் நடைபெற்றது ?
புருசினி ஆற்றங்கரை
- புருசினி ஆறு இன்றைய என்ன ஆறாக அடையாளம் காணப்பட்டுள்ளது?
ராவி ஆறு
- எந்து இரண்டு குலத்தவர் ஒன்றிணைந்து குரு குலத்தை தோற்றுவித்தனர்?
புரு மற்றும் பரத குலம்
- நிறத்தையும் வகையையும் சுட்டிக் காட்டுவதற்காக ஆரியர்கள் என்ன சொல்லை பயன்படுத்தினர்?
வர்ண
- ஆரிய வர்ண ,தச வர்ண எனக் குறிப்பிடும் வேதம் எது?
ரிக் வேதம்
- வர்ணங்கள் தோன்றியுள்ளதை பற்றி குறிப்பிடும் புருஷ சூக்தம் என்னும் பகுதி எந்த வேதத்தில் உள்ளது?
ரிக்வேதம்
- ரிக் வேதத்தில் ஜனா எனும் சொல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
21 முறை
- சாதாரண மக்களை குறிப்பிடக் கூடிய விஷ் என்ற சொல் ரிக் வேதத்தில் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
170 முறை
- கிருஹா என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
குடும்பம்
- ஒரு இனக்குழுவின் முக்கியமான சமூக அலகு எது ?
குடும்பம்
- குடும்பத்திற்கு தலைமை ஏற்றவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
கிருகபதி
- கிருகபதியின் மனைவி எவ்வாறு அழைக்கப்படுவார்?
ஸபத்தினி
- கலப்பையின் கொழு முனை எந்த வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
ரிக் வேதம்
- வேளாண் நிலம் ரிக் வேதத்தில் எவ்வாறு அறியப்பட்டிருந்தது ?
க்ஷேத்ரா
- கிருஷி என்ற சொல் எதைக் குறிக்கிறது?
உழவு
- லங்கலா,சுரா ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கின்றன?
கலப்பை
- சீத்தா என்ற சொல் எதைக் குறிக்கிறது?
கலப்பையின் கொழுமுனை
- ரிக் வேத கால மக்கள் எவற்றை பயிரிட்டனர் ?
பார்லி (யவம்),கோதுமை (கோதுமா)
- ரிக் வேதத்தில் போர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல் எது ?
காவிஸ்தி
- காவிஸ்தி என்ற சொல்லின் பொருள் என்ன ?
பசுக்களை தேடுவது
- ரிக் வேதத்தில் இடம் பெறும் அயஸ் எனும் சொல் எதனைக் குறிக்கிறது?
செம்பு மற்றும் வெண்கலம்
- ரிக் வேதத்தில் உலோக வேலை செய்வோரை குறிக்கும் சொல் எது?
கர்மரா
- ரிக் வேதத்தில் நூலைக் குறிக்கும் சொல் எது?
ஸ்ரி
- ரிக் வேதத்தில் மர வேலை செய்வோரை குறிக்கும் சொல் எது?
தச்சன்
- பான் என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
பண்டமாற்று
- பானி என்போர் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர்?
வணிகர்கள்
- நிஷ்கா என்பதன் பொருள்?
தங்க வெள்ளி அணிகலன்கள்
- தக்ஷிணா என்பதன் பொருள் என்ன?
குறிப்பிட்ட சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணம்
- இனக் குழுவின் தலைவர்களில் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்?
கோபா மற்றும் கோபதி
- ரிக் வேதத்தில் காணப்பட்ட அமைப்புகள் என்னென்ன?
சபா ,சமிதி ,விதாதா ,கணா
- வயதில் மூத்தோர் அல்லது செல்வர்கள் பங்கேற்ற அமைப்பின் பெயர் என்ன?
சபா
- ரிக் வேத காலத்தில் மக்கள் கூடும் இடத்தின் பெயர் என்ன?
சமிதி
- ரிக்வேத காலத்தில் இனக்குழுக்களின் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விததா
- ரிக்வேத காலத்தில் ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு அமைப்பு எது?
விததா
- ரிக்வேத காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
சேனானி
- ரிக்வேத காலத்தில் மக்கள் தாமாகவே அரசனுக்கு வரி செலுத்துவது எவ்வாறு அழைக்கப்பட்டது?
பலி
- ரிக்வேத காலத்தில் நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி யார் ?
விராஜபதி
- படைக் குழுவின் தலைவரான குலேபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு யார் உதவி செய்வார்?
விராஜபதி
- கிராமங்களின் தலைவர் யார் ?
கிராமணி
- ரிக்வேத காலத்தில் முக்கிய கடவுள் யார்?
இந்திரன்
- ரிக்வேத காலத்தில் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையிலான தூதுவன் என கருதப்பட்டது எது?
அக்னி/ நெருப்பு
- விடியலின் கடவுள் யார்?
உஷா எனும் பெண் கடவுள்
- இயற்கையின் விதிகளை உயர்த்திப் பிடிப்பவர் யார்?
வருணா
- தாவரங்களின் கடவுள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
சோமா
- ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் வலிமையின் கடவுள் யார்?
மாருத்
- பிற்கால வேத பண்பாட்டின் காலம் என்ன?
கி.மு.1000 முதல் கிமு 700-600 வரை
- ரிக் வேதத்தில் ஆரியர்களின் தெற்கு எல்லை என குறிக்கப்படும் பகுதிகள் எந்த நூலில் ஆரியர்களின் மத்திய பகுதி என கூறப்பட்டுள்ளது?
ஆத்ரேய பிராமணம்
- பிற்கால வேத நூல்களில் எந்த நதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன?
சரஸ்வதி ,திரிஸ்தவதி
- எந்த இடத்தில் வேதங்கள் முண்டா மொழி சொற்களை பெற்றன?
மேல் கங்கை சமவெளி
- எந்த வேகத்தில் அங்க, மகத (பீகார்) நாடுகளைச் சேர்ந்த மக்கள் எதிரிகளாக பார்க்கப்பட்டனர்?
அதர்வண வேதம்
- இரும்பு பிற்கால வேத பண்பாட்டில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
சியாமா -அயஸ் அல்லது கிருஷ் அயஸ்
- சியாமா -அயஸ் அல்லது கிருஷ் அயஸ் என்பதன் பொருள் என்ன ?
கருப்பு உலோகம்
- இரும்பானது எந்த ஆண்டில் அறிமுகம் ஆனதாக கருதப்படுகிறது?
கிமு 700 அல்லது கி.மு 1200
- பிற்கால வேத நூல்களில் நகர எனும் சொல் எதனைக் குறிக்கிறது ?
வணிகர்கள் தங்கியிருந்த இடங்கள்
- பின் வேதகாலத்தில் செல்வ ஆதாரங்களை கட்டுப்படுத்துவதற்காக என்ன யாகங்கள் நடத்தப்பட்டது?
ஸ்ராதா
- வேதகாலத்தில் மாநிலத்தை குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் எது?
ராஷ்ட்ர
- வேதகாலத்தில் இறையாண்மை உடைய நாட்டினை குறிக்கும் சொல் எது?
ராஜ்ய
- கிமு முதல் 1000 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட நாடுகளின் உருவாக்கமும் மரபுவழி அரசாட்சியையும் உடைய போக்கை “குல உரிமையிலிருந்து அரசுக்கு” எனக் கூறுபவர் யார் ?
ரோமிலா தாபர்
- வேத காலத்தில் நடைபெற்ற தேர்களின் போட்டியை உள்ளடக்கிய சடங்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாஜபேய யாகம்
- எந்த நூல் ஷத்ரியர்களே பிராமணர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என கூறுகிறது?
பஞ்சவம்ச பிராமணம
- எந்த நூல் சத்திரியர்களை விட பிராமணர்களே உயர்ந்தவர்கள் என கூறுகிறது ?
சதபத பிராமணம்
- கோத்திரம் என்ற சொல்லுக்கு பொருளென்ன ?
கிடை
- எந்த நூல் அரசர்கள் மேற்கொண்ட கலப்பையோடு தொடர்புடைய சடங்குகளைப் பற்றி கூறுகிறது?
சதபத பிராமணம்
- வேத சடங்குகளில் கோதுமையைக் காட்டிலும் எந்த தானியம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது?
அரிசி
- பின் வேதகாலத்தில் மட்பாண்டங்கள் செய்வோரைக் குறிக்கும் சொல் எது?
குலாலா
- கம்பளி நெய்வோரைக் குறிக்கும் சொல் ?
உர்னா சூத்ரா
- சடங்குகளின் கடவுள் யார் ?
ருத்ரன்
- ருத்ரனுடைய வேறு பெயர்களான பசுமனம்பதி,சர்வா ,பவா,பகிகா முதலியவற்றை பட்டியலிடும் நூல் எது?
சதபத பிராமணம்
- வேத நூல்களின் இறுதிப் பகுதியாக உபநிடதங்கள் இணைக்கப்பட்டதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வேதாந்தங்கள்
- சத்யமேவ ஜெயதே வாய்மையே வெல்லும் என்ற சொற்றொடர் எந்த நூலில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது ?
முண்டக உபநிஷத்து
- உபநிடதங்களை பாரசீகமொழியில் மொழிப்பெயர்த்த முகலாய இளவரசர் யார்?
தாராசுகோ
- பின் வேதகாலத்தில் என்ன இசைக்கருவிகள் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன?
புல்லாங்குழல் ,மேளம்,வீணை
11TH HISTORY STUDY NOTES | பண்டைய இந்தியா செம்பு கால பெருங்கற்கால இரும்பு கால வேதகால பண்பாடுகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services