11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி| TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

 1. பக்தி இயக்கம் எந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து தோன்றியது ?

கிபி 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை

 1. ரவிகீர்த்தி யாருடைய அவைக்களப்புலவராக இருந்தார் ?

இரண்டாம் புலிகேசி

 1. ஐஹோல் கல்வெட்டை எழுதியவர் யார்?

ரவிகீர்த்தி

 1. கவிராஜ மார்க்கம் என்ன மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூல் ?

 கன்னடம்

 1. தெலுங்கு மொழியில் மகாபாரதம் யாரால் எழுதப்பட்டது ?

நன்னையா

 1. வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் என்னவாக தொகுக்கப்பட்டது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

 1. திருவாசகம் யாரால் இயற்றப்பட்டது?

மாணிக்கவாசகர்

 • பெரிய புராணம் யாரால் எழுதப்பட்டது?

சேக்கிழார்

 1. பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கிய சான்றாக அமைந்திருக்கும் மத்தவிலாசப் பிரகாஙனம் எனும் நூலை எழுதியவர் யார்?

முதலாம் மகேந்திரவர்மன்

 1. நந்திக்கலம்பகம் எந்த மன்னனின் போர் வெற்றிக்கு சான்றாக உள்ளது?

மூன்றாம் நந்திவர்மன்

 1. அலகாபாத் கல்வெட்டு யாருடையது?

சமுத்திரகுப்தர்

 1. ஐஹோல் ல்வெட்டு எந்த அரசருடையது?

சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசி

 1. கூரம் செப்பேடுகள் எந்த மன்னனுடையது?

பரமேஸ்வரவர்மன்

 1. வேலூர்பாளையம் செப்பேடுகள் எந்த மன்னனுடையது?

மூன்றாம் நந்திவர்மன்

 1. கி.பி ஒன்பது பத்தாம் நூற்றாண்டில் அரபு நாடுகளை சேர்ந்த எந்த பயணிகள் மற்றும் புவியியலாளர்கள் போன்றோரின் பயணக்குறிப்புகள் கிபி 6 முதல் 9-ம் நூற்றாண்டு வரை உள்ள கால கட்டத்தை பற்றி கூறுகின்றன?

சுலைமான் அல்மசூதி, இபின் கவ்கா

 1. எத்தனை சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன?

வாதாபி சாளுக்கியர், கல்யாணி சாளுக்கியர்

 1. சாளுக்கியர் அரச வம்சத்தை உருவாக்கியவர் யார்?

முதலாம் புலிகேசி

 1. முதலாம் புலிகேசி யாரின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்து, அவர் தன்னை சுதந்திர அரசனாக பிரகடனப்படுத்திக் கொண்டார் ?

கடம்பர்கள்

 1. தலைநகர் வாதாபி யாரால் நிறுவப்பட்டது?

 கீர்த்திவர்மன்

 1. எந்த அரசர் மங்களேசனை தோற்கடித்தார் ?

முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி

 1. அரசர் மங்களேசனை தோற்கடித்தப் பின்னர் இரண்டாம் புலிகேசி தன்னை அரசராக பிரகடனப்படுத்திக் கொண்டார் என்ற நிகழ்வு எந்த கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது?

ஐஹோல் கல்வெட்டு

 1. இரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது எது?

நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றது

 1. பனவாசியின் கடம்பர்களையும் மைசூர் கங்கர்களையும் வெற்றி கொண்டவர் யார்?

 இரண்டாம் புலிகேசி

 1. இரண்டாம் புலிகேசி காஞ்சிபுரத்தில் மீது மேற்கொண்ட தாக்குதலை முறியடித்த பல்லவ அரசர் யார்?

மகேந்திரவர்மன்

 1. எந்த பல்லவ அரசன் வாதாபியை கைப்பற்றினார் ?

முதலாம் நரசிம்மவர்மன்

 1. வாதாபி கொண்டான் என அழைக்கப்படுபவர் யார்?

முதலாம் நரசிம்மவர்மன்

 1. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர் யாரால் வெற்றி கொள்ளப்பட்டனர் ?

இராஷ்டிரகூடர்கள்

 1. ஒரு அரசர் ஆட்சி புரிகையில் அவருடைய மூத்த மகன் என்னவாக அமர்த்தப்படுவர் ?

யுவராஜன்

 1. தொடக்க காலங்களில் சாளுக்கிய அரசர்கள் என்ன பட்டங்களை சூடிக்கொண்டனர் ?

மகாராஜன்,சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவல்லபன்

 1. ஹர்ஷவர்த்தனரை வென்ற பின்பு இரண்டாம் புலிகேசி என்ன பட்டத்தைச் சூடிக் கொண்டார் ?

பரமேஸ்வரன்

 1. எதிர்காலத்தில் வேறு என்ன பட்டங்களை அரசர்கள் சூடிக்கொண்டனர்?

 பத்ரகாரன், மகராஜாதிராஜன்

 1. பல்லவ அரசர்கள் என்ன பட்டங்களை சூடிக்கொண்டனர் ?

தர்மம் மகராஜாதி ராஜா ,மகராஜாதி ராஜா, தர்ம மகராஜா,மகாராஜா

 1. எந்த செப்புப் பட்டயத்தில் அக்னிஸ்தோம, வாஜபேய ,அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யப்படுகிறார்?

ஹிரகடஹள்ளி செப்பு பட்டயம்

 1. சாளுக்கியரின் அரச முத்திரை எது?

பன்றியின் உருவம்

 1. பன்றியின் உருவம் யாருடைய அவதாரத்தை குறிப்பதாகும்?

விஷ்ணுவின் வராக அவதாரம்

 1. சிவபெருமானின் வாகனமான காலளை யாருடைய அரச முத்திரை?

பல்லவர்கள்

 1. யார் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநராக நியமித்தனர் ?

முதலாம் ஜெயசிம்மன்

 • ஐஹோல் கல்வெட்டு எந்த கோயில் குன்றின் மேல் உள்ளது ?

 மேகுடி கோயில் (கர்நாடகா)

 1. மேகுடி கோயில் எந்த மதத்தைச் சார்ந்தது?

சமணம்

 1. மேகுடி கோயிலின் கிழக்கு சுவரில் 19 வரிகளைக் கொண்ட என்ன மொழியிலான கல்வெட்டு ஒன்று உள்ளது?

சமஸ்கிருத கல்வெட்டு

 1. ஐஹோல் கல்வெட்டு யாரை ‘சத்தியஸ்ராய’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

இரண்டாம் புலிகேசி

 1. ‘சத்தியஸ்ராய’ இங்கு என்பதன் பொருள் என்ன?

உண்மையின் உறைவிடம்

 1. எந்த சாளுக்கு இளவரசி கல்வெட்டாணைககளை பிறப்பித்துள்ளார்?

விஜய பத்திரிகா

 1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜசிம்மனின் அரசியான யாருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?

 ரங்க பதாகா

 1. சாளுக்கிய அரசில் உள்ள கல்வெட்டுகள் எந்த நான்கு அமைச்சர்கள் பற்றி பேசுகின்றன ?

 பிரதான , மகாசந்தி- விக்கிரகா, அமத்யா மற்றும் சமகர்த்தா

 1. சாளுக்கிய அரசில் முதலமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார் ?

பிரதான

 1. சாளுக்கிய அரசில் மகா சந்தி விக்கிரகா என்பவர் என்ன அமைச்சராக இருந்துள்ளார் ?

வெளிவிவகாரத் துறை அமைச்சர்

 1. சாளுக்கிய அரசில் அமத்யா என அழைக்கப்படுபவர் யார்?

வருவாய் துறை அமைச்சர்

 1. சாளுக்கிய அரசில் சமகர்த்தா என அழைக்கப்படும் அதிகாரி யார்?

அரசு கருவூல அமைச்சர்

 1. சாளுக்கியர்கள் நாட்டை என்ன பிரிவுகளாக பிரித்திருந்தனர்?

விஷ்யம் ,ராஷ்ட்ரம், நாடு,கிராமம்

 1. எந்த அதிகாரி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களை கையாண்டார்?

 விஷயபதி

 1. நிலப்பிரபுக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

சமந்தா

 1. கிராம அளவிலான அதிகாரிகள் யார்?

கிராம்போகி,கிராம்புடா

 1. கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

மகாத்ரா

 1. மாகாண ஆளுநர்கள் தங்களை எவ்வாறு அழைத்துக்கொண்டனர் ?

ராஜமார்க்க ராஜன்,ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன்

 1. ஆளுநர்களில் என்ன பட்டம் பெற்றிருந்தவர்கள் படைகளை வைத்து பராமரித்தனர்?

மகா சமந்தா

 1. விஷ்யாவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

விஷ்யாபதி

 1. விஷ்யாக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

 புக்திகள்

 1. புக்தியின் தலைவராக இருந்தவர் யார்?

போகபதி

 1. கிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாக பணியாற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

 நல கவுண்ட

 1. கிராம நிர்வாகத்தின் மையப்புள்ளியாக இருந்த, அரசரால் நியமிக்கப்பட்டவர்கள் யார்?

 கமுண்டர் அல்லது போகிகன்

 1. கிராம கணக்கர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

கரணா

 1. கிராமக் கணக்கர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார் ?

கிராமணி

 1. கிராம அளவில் கிராம மக்களை கொண்ட எந்த குழுவின் கைகளில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் இருந்தது?

மகாஜனம்

 1. எந்த சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியை பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார் ?

மகாபுருஷ்

 1. நகரங்களின் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

நகரபதி,புறபதி

 1. சாளுக்கியர்கள் எந்த மதங்களையும் ஆதரித்தனர் ?

சைவம்,வைணவம்,ஆசீவகம்,சமணம்

 1. பரம-வைஷ்யண, பரம-மகேஸ்வர எனும் பட்டங்களை சூடிக்கொண்ட அரசர்கள் யார் ?

இரண்டாம் புலிகேசி ,மங்களேசன்,கீர்த்திவர்மன்

 1. ரவிகீர்த்தி யாரால் கவிஞர் என புகழ் மாலை சூட்டப்பட்டார்?

இரண்டாம் புலிகேசி

 1. ரவி கீர்த்தி எந்த சமயத்தைச் சார்ந்த அறிஞர்?

சமணசமயம்

 1. இரண்டாம் கீர்த்திவர்மன் ஆட்சியின்போது சமண சமயத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி எந்த இடத்தில் ஒரு சமணக் கோவில் கட்டியுள்ளார்?

அனெகெரி

 1. இளவரசர் கிருஷ்ணா எந்த சமயத்தை சார்ந்தவர்?

சமணத் துறவி

 1. இளவரசர் கிருஷ்ணா யாரை தனது ஆசிரியராக கொண்டிருந்தார்?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | ஹர்ஷர் மற்றும் பிரதேச மக்களின் எழுச்சி| TNPSC GROUP EXAMS

 குண பத்ரா என்ற சமணத்துறவி

 1. ஜெய்னேந்திரிய வியாகரணம் எனும் நூலை இயற்றியவர் யார் ?

பூஷ்யபட்டர்

 1. பூஷ்யபட்டர் எந்த சமயத்தைச் சார்ந்த துறவி?

 சமணத்துறவி

 1. ஐஹோல், மகா கூடம் தூண் கல்வெட்டுகளை சாளுக்கியர் என்ன மொழியில் பொறித்துள்ளனர் ?

சமஸ்கிருதம்

 1. வாதாபியில் உள்ள ஒரு சாளுக்கிய அரசன் ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு கன்னட மொழியை எவ்வாறு கூறுகின்றது?

உள்ளூர் பிராகிருதம்

 1. மக்களின் மொழி என வாதாபியில் உள்ள கல்வெட்டு குறிக்கும் மொழி எது?

கன்னட மொழி

 1. சமஸ்கிருதத்தை என்ன மொழியாக குறிக்கின்றது ?

பண்பாட்டின் மொழி

 1. “சப்வத்ரம்” எனும் இலக்கண நூல் எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது?

 சமஸ்கிருத மொழி

 1. “சப்வத்ரம்” எனும் இலக்கண நூலை எழுதியவர் யார்?

இரண்டாம் புலிகேசியின் படைத்தளபதியில் ஒருவர்

 1. வரலாற்று ரீதியில் தக்காணத்தில் மிருதுவான கற்க்களைப் பயன்படுத்தி கோயில்களை எழுப்பியவர்கள் யார் ?

சாளுக்கியர்கள்

 1. வாதாபியில் எத்தனை விதமான கோவில்கள் காணப்படுகின்றன ?

நான்கு

 1. வாதாபியில் காணப்படும் கோவில்கள் யாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?

இரண்டு கோவில்கள் விஷ்ணுவுக்கும் ஒரு கோவில் சிவனுக்கும் மற்றொன்று சமண தீர்த்தங்கரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

 1. சாளுக்கியரின் கோயில்களை எவ்வாறு பிரிக்கலாம் ?

குடைவரைக் கோயில்கள் கட்டுமானக் கோயில்கள்

 1. குடைவரைக் கோயில்கள் கட்டுமானக் கோயில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர்பெற்ற இடம் எது?

வாதாபி

 1. ஐஹோல்,பட்டடக்கல் ஆகியவை எந்த கோயிலுக்கு பெயர் பெற்றவை?

கட்டுமான கோவில்கள்

 1. ஐஹோல்  எப்போது உருவாக்கப்பட்டது?

634

 1. ஐஹோல் எந்த வணிக குழுமத்தின் தலைமையிடமாகும் ?

ஐயாவோளே

 1. ஐஹோலில் எத்தனை கோயில்கள் உள்ளன?

 70

 1. ஐஹோலில் காலத்தால் முந்திய கோயில் எந்த இடத்தில் உள்ளது ?

லட்கான்

 1. துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட செவ்வக வடிவில் அமைந்துள்ள கோவில் எந்த இடத்தில் உள்ளது?

குசிமல்லிக்குடி

 1. சாளுக்கியர்கள் எந்த இடத்தில் சமணக்கோயில்களை கட்டியுள்ளனர்?

மேகுடி

 1. வாதாபியில் எத்தனை வகுகைகள் உள்ளன?

 4

 1. வாதாபியில் யார் கட்டிய மிகப்பெரிய குகைக் கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது ?

மங்களேசன்

 1. பட்டடக்கல் எங்கு உள்ளது?

பாகல்கோட் மாவட்டம் கர்நாடகம்

 1. பட்டடக்கல் எதற்கான இடமாகும் ?

அரச சடங்குகள் நடத்துவதற்கான இடம்

 1. விருபாக்ஷா கோவில் யாரால் கட்டப்பட்டது?

லோகமாதேவி

 1. லோகமாதேவி எதன் நினைவாக விருபாக்ஷா கோவிலை கட்ட ஆணையிட்டார்?

 இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிபுரத்தை கைப்பற்றியதன் நினைவாக

 1. விருபாக்ஷா கோயில் எந்த கோயிலை தழுவி அமைக்கப்பட்டுள்ளது?

மாமல்லபுரம் கட்டுமானக் கோயில்கள்

 1. மாமல்லபுரத்தில் கட்டுமான கோயில்களை எழுப்பிய அரசன் யார்?

இராஜசிம்மன்

 1. எந்த கோயிலில், கோயிலின் வடிவத்தை திட்டமிட்ட கட்டடக் கலைஞர் அதை உருவாக்கிய நிபுணத்துவம் பெற்ற கலைஞர்கள் ஆகியோரின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது ?

விருபாக்ஷா கோவில்

 1. விருபாக்ஷா கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டில் அதை வடிவமைத்த கட்டிடகலைஞருக்கு என்ன பட்டம் வழங்கப்பட்டுள்ளது?

திரிபுவாசாரியா

 1. திரிபுவாசாரியா என்றால் என்ன பொருள்? 

மூன்று உலகையும் உருவாக்கியவன்

 1. பட்டடக்கல்லின் கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கோயில் எது ?

பாபநாத கோயில்

 1. கோயிலில் உள்ள ஒரு கன்னட கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவர் என எதை குறிப்பிடுகிறது?

பட்டடக்கல்

 1. பட்டடக்கல்லில் சாளுக்கியர்கள் எத்தனை கோயில்களை எழுப்பி உள்ளனர் ?

பத்துக்கும் மேற்பட்ட கோவில்கள்

 1. சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் கட்டப்பட்ட பாணியின் அடிப்படையில் என்னவாக பிரிக்கலாம்?

இரண்டு : இந்தோ-ஆரியன் &  திராவிட கட்டடக்கலை

 1. ஓவியக்கலையில் சாளுக்கியர்கள் யாருடைய பாணியை பின்பற்றி உள்ளனர்?

வாகடகர்கள்

 1. சாளுக்கிய ஓவியங்களில் மிகப் பிரபலமானது எங்கு உள்ளது?

மங்களேசனால் கட்டப்பட்ட அரண்மனை

 1. சாளுக்கிய ஓவியங்களில் மிகப்பிரபலமானது எதைப்பற்றியது?

 நடன நிகழ்ச்சி ஒன்றை அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றவரும் கண்டுக்களிப்பதாக அமைந்திருக்கும்

 1. பல்லவ எனும் பெயர் எந்த சொல்லின் திரிபு எனக் கருதப்படுகிறது?

 பார்த்திய அரச மரபின் மற்றொரு பெயரான பஹல்வ

 1. பல்லவர்கள் எந்த ஆற்றுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவர்களாவர்?

வடபெண்ணை ஆற்றுக்கும் ,வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி

 1. சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து யார் அரியணை ஏறினார்?

முதலாம் மகேந்திரவர்மன்

 1. முதலாம் மகேந்திரவர்மனை சமண சமயத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் யார் ?

 அப்பர்

 1. எந்த பல்லவ அரசர் காலத்தில் இரண்டாம் புலிகேசி காஞ்சிபுரம் வரை முன்னேறினார் ?

 மகேந்திரவர்மன்

 1. பல்லவர்களுக்கும்  மற்றும் சாளுக்கியர்களுக்கும் எதிரான போரில் பல்லவர்களுக்கு உதவிய இலங்கை இளவரசர் யார் ?

மானவர்மன்

 1. இரண்டாம் புலிகேசியை கொன்றவர் யார்?

 முதலாம் நரசிம்மவர்மன்

 1. இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக பல்லவர்களால் எத்தனை முறை கப்பற்படைகள் அனுப்பப்பட்டன?

இரண்டு முறை

 1. எந்த பல்லவ அரசனுடைய ஆட்சியின்போது சாளுக்கிய அரசர் விக்ரமாதித்தியன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார் ?

முதலாம் பரமேஸ்வரவர்மன்

 1. முதலாம் பரமேஸ்வரவர்மன் யாருடன் விக்கிரமாதித்தனை எதிர்த்து போரிட்டார் ?

கங்கர்,பாண்டியர்கள்

 1. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் நந்திவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் யாரால் தாக்குதலுக்கு உள்ளானது ?

ராஷ்டிரகூட அரசரான மூன்றாம் கோவிந்தன் மூன்றாம் நந்திவர்மன்

 1. ஸ்ரீபிரம்பியம் அல்லது திருப்புறம்பியம் போர் யாருக்கிடையே நடைபெற்றது ?

 மூன்றாம் நந்திவர்மன் மற்றும் பாண்டியர்

 1. திருப்புறம்பியம் போரில் மூன்றாம் நந்திவர்மன் யாரின் ஆதரவோடு பாண்டியரை தோற்கடித்தார்?

மேலைக் கங்கர்  சோழர்

 1. மூன்றாம் நந்திவர்மனின் பேரனான யார் தொண்டை மண்டலப் பகுதியின் மீது படையெடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழனுடன் போர்புரிந்து இறந்தார் ?

அபராஜித்தன்

 1. எந்த காலகட்டத்தில் கேரளா சேர பெருமாள் அரசர்களாலும் ஆளபபட்டிருந்தது?

கிபி 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை

 1. பல்லவர் காலத்தில் அமைச்சர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?

மந்திரி மண்டல

 1. பல்லவர் காலத்தில் அரசரின் அந்தரங்க செயலாளர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

ரகஸ்யதிகிரதா

 1. பழங்காலத்தில் கருவூலத்தை பாதுகாக்கும் அதிகாரியின் பெயர் என்ன ?

 மாணிக்கப் பண்டாரம் காப்பான்

 1. பல்லவர் காலத்தில் நன்கொடைகளுக்கான அதிகாரியார் ?

கொடுக்காப்பிள்ளை

 1. மாணிக்கப் பண்டாரம் காப்பாளரை மேற்பார்வை செய்யும் அதிகாரியின் பெயர் என்ன?

கோச-அதீயஷா

 1. பல்லவர் காலத்தில் நீதிமன்றங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

அதிகர்ண மண்டபம்

 1. பல்லவர் காலத்தில் நீதிபதிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

தர்மாதிகாரி

 1. காசாக்குடி செப்பேடுகள் யாருடைய காலத்தவை?

நந்திவர்ம பல்லவன்

 1. எந்த செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன? 

காசாக்குடி செப்பேடுகள்

 1. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

கர்ணதண்டம்

 1. கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

அதிகர்ண தண்டம்

 1. ஒரு பிராமணருக்கு அல்லது சில பிராமணர்களை கொண்ட ஒரு குழுவுக்கும் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் எவ்வாறு அழைக்கப்படும் ?

 பிரம்மதேய கிராமங்கள்

 1. கோயிலுக்குக் கொடையாகக் வழங்கப்பட்ட கிராமங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

தேவதான கிராமங்கள்

 1. எந்த ஆண்டு புதுச்சேரிக்கு அருகில் உருக்காட்டுகோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம் நந்தி ஆகியன பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட 11 செப்புப்பட்டயங்கள் கண்டறியப்பட்டன?
SEE ALSO  12TH POLITY STUDY NOTES |சர்வதேச அமைப்புகள் | TNPSC GROUP EXAMS

 1879

 1. ‌உருக்காட்டுகோட்டம் அருகே கண்டெடுக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் என்ன மொழிகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளது ?

சமஸ்கிருதம், தமிழ்

 1. கிராம அளவிலான அமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர் யார் ?

கிராம தலைவர்

 1. கொடையாக கொடுத்த நிலங்களில் இருந்து பெறப்படும் வரி கிராமத்தின் ஏரிகளை பராமரிப்பதற்காக தனியாக ஒதுக்கி வைக்கப்படும் அந்த வகை நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 ஏரிபட்டி அல்லது ஏரி நிலம்

 1. கிராமங்களின் மீது பல்லவர் காலத்தில் எத்தனை வகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன?

 2 , கிராம அளவில் மற்றும் உள்ளூர் அளவில்

 1. பல்லவர் காலத்தில் வேளாண் மக்கள் விளைச்சலில் எத்தனை பங்கை வரியாக அரசுக்குச் அளித்தனர்?

ஆறில் ஒரு பங்கு தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை

 1. பல்லவர் காலத்தில் இருந்த படைகள் என்னென்ன ?

காலாட்படை, குதிரைப்படை, சிறிய அளவிலான யானைப்படை, கப்பல் படை

 1. பல்லவர்கள் எங்கு கப்பல் தளங்களை கட்டினர்?

மாமல்லபுரம் மற்றும் நாகப்பட்டினம் 

 1. பல்லவர் காலத்தில் முக்கியமான வணிக மையமாக இருந்தது எது?

காஞ்சிபுரம்

 1. பல்லவர்கள் என்ன நாணயங்களை வெளியிட்டனர் ?

தங்கம் மற்றும் வெள்ளி

 1. பல்லவர் காலத்தில் வணிகர்கள் தங்களுக்கென என்ன அமைப்புகளை கொண்டிருந்தனர் ?

 மணிக்கிராமம்

 1. பல்லவர் காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது எது?

 மாமல்லபுரம்

 1. வணிகர்கள் தங்களுக்கென என்னென்ன பெயர்களில் தனி குழுக்களை அமைத்துக் கொண்டனர்?

சுதேசி ,நானாதேசிகர், ஐநூற்றுவர்

 1. வணிகர்களின் முக்கிய அமைப்பு எந்த நகரை மையமாக கொண்டு செயல்பட்டது ?

ஐஹோல்

 1. பல்லவர் காலத்தில் வெளிநாடுகளுடன் வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது ?

 நானாதேசி

 1. நானாதேசி வணிகக்குழு என்ன கொடியை கொண்டிருந்தது?

மையப்பகுதியில் காலையின் வடிவத்தைக் கொண்ட கொடி

 1. நானாதேசியின் செயல்பாடுகள் எந்த நாடுகள் முழுவதும் பரந்திருந்தது?

தென் கிழக்கு ஆசிய நாடுகள்

 1. நானாதேசியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

தண்டநாயகன்

 1. நானாதேசியின் தலைவர் என்ன பெயரில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் ?

 பட்டன்சாமி ,பட்டணக்கிழார் ,தண்டநாயகன்

 1. நானாதேசி வணிகக் குழுவின் உறுப்பினர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?

ஐஹோல் பரமேஸ்வரியார்

 1. கிழக்கு ஆசிய நாடுகளோடு பல்லவர் வணிகத்தில் ஈடுபட்டிருந்த நாடுகள் என்னென்ன ?

கம்போஜா (கம்போடியா ),சம்பா (ஆன்ம்),ஸ்ரீவிஜயா ( மலேசியத் தீபகற்பம் சுமத்ரா)

 1. பல்லவர் காலத்தில் முக்கியம் வாய்ந்த கல்வி மையம் எது?

காஞ்சிபுரம்

 • வேத மதங்களைப் பின்பற்றுவோர் யாரை வழிபட்டனர்?

சிவன்

 1. எந்த அரசன் முதன்முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தை தழுவினார் ?

மகேந்திரவர்மன்

 • காஞ்சிபுரத்தில் ஆயிரம் பௌத்த மடாலயங்களையும், மகாயன பௌத்தத்தை சேர்ந்த பத்தாயிரம் குருமார்களையும் கண்டதாக பதிவுசெய்துள்ளவர் யார்?

யுவான்சுவாங்

 1. நாளந்தா பல்கலை கழகத்துக்கு இணையான புகழ்பெற்றிருந்த பல்கலைக்கழகம் எது ?

காஞ்சி பல்கலைக்கழகம்

 1. பல்லவர் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஊடக மொழியாகவும் அரசவையின் அலுவலக மொழியாகவும் இருந்தது எது?

 சமஸ்கிருதம்

 1. எந்த நூற்றாண்டில் மடங்கள் பிரபலமாயின?

எட்டாம் நூற்றாண்டு

 1. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலை எந்த மொழியில் எழுதினார்?

சமஸ்கிருதம்

 1. கீர்த்தர்ஜுன்யா எனும் நூலை எழுதியவர் யார்?

பாரவி

 1. தசகுமாரசரிதம் எனும் நூலை எழுதியவர் யார்?

தண்டி

 1. தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட எந்த இரு நூல்கள் சமஸ்கிருத இலக்கியத்திற்கான தரவுகளை உருவாக்கின?

 கீர்த்தர்ஜுன்யா,தசகுமாரசரிதம்

 1. மிகச்சிறந்த அணியிலக்கணமாகிய  காவிய தர்சா எனும் நூலை இயற்றியவர் யார்?

தண்டி

 • பல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை யாரைச் சேரும்?

 முதலாம் மகேந்திரவர்மன்

 1. பிரம்ம ஈஸ்வர விஷ்ணுக்களுக்கு கோயில் கட்டுவதற்கு செங்கல்,மரம் ,உலோகம், சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது எந்த கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்?

மண்டகப்பட்டு கல்வெட்டு

 1. அஜந்தா எல்லோரா குகைகள் எங்குள்ளன?

மகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத் மாவட்டம்

 1. எல்லோரா குகைக் கோவில்கள் எதற்காக பெயர் பெற்றவை?

 சிற்பங்கள்

 1. அஜந்தா குகைக் கோயில்கள் எதற்காக புகழ்பெற்றவை ?

 ஓவியங்கள்

 1. அஜந்தா எல்லோரா கோயில்களின் காலம் எவ்வளவு?

கி.பி 500 முதல் 950

 1. அஜந்தா எல்லோரா குகைக் கோயில்களை உருவாக்கும் நடவடிக்கை எந்த ஆண்டு தொடங்கப்பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகிறது?

கிபி 300

 • அஜந்தா எல்லோரா குகை கோயிலில் முதல் குகைக்கோயில் யாருக்காக உருவாக்கப்பட்டது?

ஆசீவகர்கள்

 • எல்லோராவில் உள்ள குடைவரைக் கோயில்கள் எத்தனை குகைகள் சயத்ரி மலையில் அமைந்துள்ளன?

 34 குகைகள்

 1. எல்லோரா குகைக் கோயில் தொகுப்புகளை உருவாக்கியவர்கள் யார் ?

சாளுக்கியரும் ராஷ்டிரக்கூடரும்

 • எல்லோராவில் எத்தனை குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன?

ஐந்து

 1. எல்லோராவில் உள்ள எந்த கோயிலில் உள்ள சுவரோவியங்கள் மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன ?

கைலாசநாதர் கோவில்

 1. எல்லோரா குகைகள் எந்த ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது?

1983

 1. எல்லோராவில் மொத்தம் எத்தனை பௌத்தக் குகைகள் உள்ளன?

 12

 1. எல்லோராவில் உள்ள எந்த குகையில் ஒரு மேசையின் மீது உள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு மனிதன் வாசிப்பதை போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது?

ஆறாவது குகை

 1. எல்லோரா குகைகள் புத்தரின் என்ன மூன்று வகைத் தோற்றங்கள் அடையாளம் காணப்படுகிறது?

தியானம் புத்தர் (தியான முத்ரா), போதனை செய்யும் புத்தர் (வியாக்கியானம் முத்ரா), வலது கை ஆள்காட்டி விரலால் பூமியை தொடும் புத்தர் (பூமி ஸ்பரிச முத்ரா)

 • பௌத்த குகைகளில் எந்த பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன ?

தாரா,கதினவாணிதாரா,சுந்தா,வஜ்ரத்தீஸ்வரி,மகாமயூரி ,சுஜாதா ,பன்தாரா, பிரிகுட்டி

 1. எந்த குகையில் பெரிய உருவம் கொண்ட பெண்மணி இடையில் ஒட்டியாணம் ,நாகப்பாம்பின் தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது ?

பன்னிரண்டாவது குகை

 1. எந்த கையில் கதிரவாணிதாரா எனும் பெண்தெய்வம் கையில் ஒரு நாகப் பாம்பை பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது?

பன்னிரண்டாவது குகை

 1. எல்லோராவில் உள்ள எந்த குகையை தவிர மற்ற அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை?

கைலாசநாதர் கோவில்

 1. கைலாசநாதர் கோவில் எத்தனை அடுக்குகளை கொண்டது?

 2

 1. கைலாசநாதர் கோயிலின் இரண்டு அடுக்குகள் எதைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது ?

 சிவபெருமானின் இருப்பிடமான கைலாயம்

 1. மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள குகைகள் எது?

அஜந்தா

 1. எரிமலை பாறைகளில் இருந்து மொத்தம் எத்தனை குகைகள் குடைந்து எடுக்கப்பட்டுள்ளன?

 30

 1. எந்த மதப் பிரிவினை சேர்ந்தவர்கள் முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்க துவங்கினர் ?

ஹுனயான பௌத்த மதப் பிரிவினர்

 1. அஜந்தாவின் முதற்கட்ட குகைகள் எந்த காலகட்டத்தை சார்ந்தவை?

கிமு 200 முதல் கிபி 200 வரை

 1. அஜந்தாவின் இரண்டாம் கட்ட குகைகள் எந்த காலகட்டத்தை சார்ந்தவை?

 கிமு 200 முதல் கிபி 400 வரை

 • அஜந்தா குகைகளில் முதற்கட்ட ஓவியங்கள் எந்த குகைகளில் காணப்படுகின்றன ?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

9 மற்றும் 10ஆம் குகைகள்

 • 9 மற்றும் 10ஆம் கோவிலில் உள்ள ஓவியங்கள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?

சாதவாகனர்கள்

 1. கட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை எத்தனை குழுக்களாக பிரிக்கலாம்?

 2 ; சைத்தியா மற்றும் விகாரை

 • பல வளைவுகள் ஒருங்கிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது எது ?

 சைத்தியா

 1. அவலோதீஷ்வரா ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளவர் யார் ?

 போதிசத்துவர்

 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் யாருடைய ஆட்சி காலத்தில் எழுப்பப்பட்டது ?

ராஜசிம்மன்

 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் எத்தனை கருவறைகளைக் கொண்டது?

 3

 1. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாறையில் செதுக்கப்பட்ட எத்தனை அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும்?

ஐந்து அடுக்குகள்

 1. மாமல்லபுரத்தில் உள்ள ஒற்றைக் கல் தேர்கள் எவ்வாறு அறியப்படுகின்றன ?

பஞ்ச பாண்டவர் ரதம்

 • பஞ்சபாண்டவர் ரதத்தில் மிக நேர்த்தியானது எது?

தர்மராஜ ரதம்

 1. பக்தி என்பது என்ன பொருளைக் கொண்டுள்ளது? 

சேவை, நம்பிக்கை, வழிபாடு,மதப்பற்று

 1. பக்தி பாடல்கள் எத்தனை முக்கிய கருப்பொருள்கள் கொண்டுள்ளன?

 3 ;கடவுளுடன் பேரன்பு செலுத்துவது ,இரண்டாவது தெய்வீக அமைதியையும் முக்தியையும் அடையும் வழிகள் தங்களுக்கு மட்டுமே என்கிற வைதீக பிராமணிய மனப்பாங்கை எதிர்ப்பது, மூன்றாவது நேரடியாக பௌத்தத்தையும் சமணத்தையும் மதப்பற்று இல்லாதவர்கள் என வன்மையாக கண்டிப்பது

 1. எந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழுக்கு பதிலாக வீணை பயன்பாட்டிற்கு வந்தது ?

கிபி.ஐந்தாம் நூற்றாண்டு

 1. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வைணவ பாடல்களை  திவ்ய பிரபந்தமாக தொகுத்தவர் யார் ?

நாதமுனி

 1. நாதமுனி எந்த கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவர் ?

திருவரங்கம் ரங்கநாதர் கோவில்

 1. ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் ஸ்ரீவல்லபன் ஆட்சிக்காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் யார்?

பெரியாழ்வார்

 1. பெரியாழ்வாரின் பாடல்களின் கருவாக இருந்தது எது?

கண்ணனின் குழந்தை பருவம்

 1. ஆண்டாள் பாடிய பாடல்களின் பாட்டுடைத்தலைவன் யார் ?

கண்ணன்

 1. ஆழ்வார்களில் தலை சிறந்தவராக கருதப்படுபவர் யார் ?

நம்மாழ்வார்

 1. நம்மாழ்வார் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூர் (ஆழ்வார்திருநகரி)

 1. நம்மாழ்வார் என்ன நூல்களை எழுதியுள்ளார் ?

திருவாய் மொழி உள்ளிட்ட நான்கு நூல்கள்

 1. எந்த ஆழ்வார் உடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டது என்பது வைணவர்களின் நம்பிக்கை ?

நம்மாழ்வார்

 1. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோரின் பாடல்களை திருமுறைகளைத் தொகுத்தவர்?

நம்பியாண்டார் நம்பி

 1. சம்பந்தர் பாடிய பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?

 ஒன்று முதல் மூன்று திருமுறைகள்

 1. அப்பர் பாடிய பாடல்கள் எத்தனாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?

4 முதல் ஆறாம் திருமுறை

 1. சுந்தரர் பாடிய பாடல்கள் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன ?

ஏழாவது திருமுறை

 1. எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள பாடல்கள் யாருடையது?

 மாணிக்கவாசகர்

 1. சேக்கிழாரின் பெரிய புராணம் உட்பட 12 நூல்கள் எத்தனையாவது திருமுறையாக போற்றப்படுகின்றன?

பன்னிரு திருமுறை

 1. பெரியபுராணம் யாருடைய காலத்தில் இயற்றப்பட்டது?

சோழர்காலம்

 1. 63 நாயன்மார்களின் வரலாற்றை சொல்லும் நூல் எது?

பெரியபுராணம்

 1. சஙகரர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்?

கேரள மாநிலம் காலடி

 1. அடிப்படையில் யாருடைய அத்வைத கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதங்களில் வேர் கொண்டது?

ஆதிசங்கரர்

 1. புத்த மதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்த மடங்களை நிறுவ யார் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி ,துவாரகை,பத்ரிநாத்,பூரி  ஆகிய இடங்களில் மடங்கள் உருவாக்கப்பட்டது?

ஆதிசங்கரர்

 1. ராமானுஜரின் காலம் என்ன ?

1017-1138

 1. ஸ்ரீ ராமானுஜர் எங்கு பிறந்தார்?

ஸ்ரீபெரும்புதூர்

 1. ஸ்ரீ ராமானுஜர் யாரிடம் தத்துவ பயிற்சி பெற்றார் ?

காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட யாதவபிரகாசர்

 1. இராமானுஜர் யாருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார் ?

யமுனாச்சார்யாரின் திருரங்க தத்துவ பள்ளியின் கருத்துக்கள்

 1. யமுனாச்சாரியாரின் இறப்பிற்குப்பின் திருரங்க மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டவர் யார் ?

ஸ்ரீராமானுஜர்

 1. ஆதிசங்கரரின் அத்வைத கோட்பாட்டை மறுத்தவர் யார்?

 ஸ்ரீ ராமானுஜர

 • அத்வைதத்திற்கு மாற்றாக ஸ்ரீராமானுஜர் முன்வைத்த கோட்பாடு எது?

விசிஷ்டாத்வைதம்

 1. ராமானுஜர் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு யார் தலைமையிலான இரு பிரிவுகள் தோன்றின?

வேதாந்த தேசிகர் மற்றும் மணவாளமாமுனிகள்

 1. “பக்தி எனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதி அமைப்பை கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது “என பக்தி கோட்பாட்டின் முக்கியத்துவத்தை கூறியவர்கள் யார்?

எம் ஜி எஸ் நாராயணன் ,கேசவன் வேலுதாட்


11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

 

Leave a Comment

error: