11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS


TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST99/-:CLICK HERE

  1. தக்காணப் பகுதியில் கிமு முதல் நூற்றாண்டில் இன்றைய தெலங்கானா ,ஆந்திர பிரதேசம் ,கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் பெரும் பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பில் ஒரு வலுவான அரசை நிறுவியவர் யார்?

சாதவாகனர்கள்

  1. சாதவாகனர் யாருடைய சமகாலத்தவர்?

சேர சோழ பாண்டியர்கள்

  1. புதை மேடுகளின் மேல் களி மன்னனால் கட்டப்பட்டது எது?

 ஸ்தூபி

  1. தொடக்கத்தில் புத்தரின் அஸ்தி எத்தனை ஸ்தூபிகளில் வைக்கப்பட்டது ?

8

  1. அரைக் கோள வடிவமுள்ள ஸ்தூபி எதைக் குறிக்கிறது?

 பேரண்டம் மற்றும் புத்தர் ஆன்மீக உலகின் பேரரசர் என்பதையும் குறிக்கின்றது.

  1. கதாசப்தசதி எனும் நூலை எழுதியவர் யார்?

 சாதவாகன அரசர் ஹாலா

  1. எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் என்பது எந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூல்?

 கிபி முதலாம் நூற்றாண்டு

  1. எரித்திரியக் கடலின் பெரிப்ளஸ் என்பது எந்த மொழியில் எழுதப்பட்ட நூல்?

கிரேக்கம்

  1. இயற்கை வரலாறு என்னும் நூலை எழுதியவர் யார்?

மூத்த பிளினி

  1. மூத்த பிளினி இயற்கை வரலாறு என்னும் நூலை எப்போது எழுதினார் ?

கி.பி முதலாம் நூற்றாண்டு

  1. ஜியோகிராபி எனும் நூலை தாலமி எப்போது எழுதினார்?

கிபி இரண்டாம் நூற்றாண்டு

  1. பியூட்டெஞ்செரியன் அட்டவணை என்பது யாருடைய வரைபடம் ?

ரோமானியர்கள்

  1. அசோகரின் எந்த பாறைக் கல்வெட்டில் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அரசர்களான சோழர் பாண்டியர் கேரளபுத்திரர்கள், சத்தியபுத்திரர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?

இரண்டாம் பாறை கல்வெட்டு

  1. சங்ககால பெண்பாற் புலவர்கள் எத்தனை பேர்?

30

  1. தொல்லியல் ஆய்வுகளின் படி சாதவாகனர்கள் எந்த பகுதிகளில் ஆட்சியைத் தொடங்கினார் ?

தெலுங்கானா

  1. சாதவாகனர்கள் எந்த நகரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர்?

பிரதிஸ்தான் ( மகாராஷ்டிராவில் பைத்தன்)

  1. பிரதிஸ்தான் தலைநகர் எந்த நதிக்கரையோத்தில் இருந்தது?

கோதாவரி நதி

  1. யாருடைய நூல் ஆந்திர நாட்டில் இருந்த கோட்டைகளுடன் கூடிய 30 நகரங்கள் ,ஒரு பெரும் படை ,குதிரைப்படை, யானைப்படை ஆகியன குறித்து பேசுகிறது?

 பிளினி

  1. சாதவாகன அரசர்களில் பெரும் அரசர் யார் ?

 கௌதமிபுத்திர சதகர்னி

  1. சாக அரசன் நாகபனாவை வென்ற சாதவாகன அரசர் யார்?

கௌதமிபுத்ர சதகர்னி

  1. நாகபனாவின் நாணயங்களை தன் அரசு முத்திரையோடு மீண்டும் வெளியிட்டவர் யார்?

கௌதம புத்திர சதகர்னி

  1. நாசிக் கல்வெட்டு யாருடையது?

கௌதமிபுத்திர சதகர்னியின் தாயான பாலஸ்ரீ

  1. எந்தக் கல்வெட்டு சாகர்,பகல்வர் ,எவனர்கள் ஆகியோரை கௌதமிபுத்திர சதகர்னி வெற்றி கொண்டதாக கூறுகிறது?

நாசிக் கல்வெட்டு

  1. எந்தக் கல்வெட்டு கௌதமிபுத்திர சதகர்னி அஸ்வமேத யாகத்தை நடத்தியதாகவும் கூறுகிறது ?

நாசிக் கல்வெட்டு

  1. கௌதமிபுத்திர சதகர்னிக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் யார்?

வசிஷ்டபுத்ர புலுமாவி

  1. எந்த சாதவாகன அரசரின் ஆட்சியின்போது வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிப்பிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்?

யக்னஶ்ரீ சதகர்னி

  1. சாதவாகன அரசர்கள் பற்றிய காதா சப்தசதி எத்தனை காதல் பாடல்களை கொண்டது?

 700

  1. காதா சப்தசதி எந்த மொழியில் எழுதப்பட்டது?
SEE ALSO  8TH PHYSICS STUDY NOTES |விசையும் அழுத்தமும்| TNPSC GROUP EXAMS

மகாராஷ்டிரா பிராகிருதம் மொழி

  1. எந்த நூற்றாண்டில் சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்தது?

 கிபி மூன்றாம் நூற்றாண்டு

  1. சாதவாகனர்களை தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?

 இக்ஷ்வாகு

  1. சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வட கர்நாடக பகுதிகளில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?

கடம்பர்கள்

  1. பௌத்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை குறிப்பிடும் கல்வெட்டு எது

 நனிகாட் கல்வெட்டு

  1. பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளும் சங்ககால கால வரையறை எது?

கி.பி முதல் மூன்று நூற்றாண்டுகள்

  1. அசோகர் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் மூவேந்தரோடு இடம்பெற்றுள்ள சத்தியபுத்திர (அதியமான்) என்பது யாரை குறிப்பதாக உள்ளது ?

சங்கப் பாடல்களில் இடம்பெறும் வேளிர்

  1. தமிழகத்தின் மத்திய ,வடப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு இருந்தவர்கள் யார்?

சோழர்கள்

  1. சோழர்களின் தலைநகரம் எது ?

 உறையூர்

  1. சோழர்களின் முக்கியத் துறைமுகமாகவும், அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் திகழ்ந்த இடம் எது?

 புகார் அல்லது காவிரிபூம்பட்டினம்

  1. சோழர்களின் சின்னம் எது?

 புலி

  1. கரிகாலனின் ஆட்சியின்போது காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் குறித்து எந்த நூல் குறிப்பிடுகிறது ?

 பட்டினப்பாலை

  1. பட்டினப்பாலை நூலை எழுதியவர் யார்?

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

  1. கரிகாலன் யாருடைய மகன் ?

இளஞ்செட்சென்னி

  1. கரிகாலன் ஆட்சியை பற்றி விரிவாகக் கூறும் நூல் எது ?

பட்டினப்பாலை

  1. கரிகாலனுடைய தலையாய போர் வெற்றி என்பது எது?

வெண்ணிப் போர்க்களத்தில் சேரரையும் பாண்டியரையும் அவர்களுக்கு உதவிய பல தலைவர்களையும் வெற்றிகொண்டது.

  1. எந்த சோழ அரசன் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தியுள்ளார் ?

 பெருநற்கிள்ளி

  1. மத்திய வடக்கு கேரளா பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆட்சி செய்தவர்கள் யார் ?

சேரர்கள்

  • சேரர்களின் தலைநகரம் எது ?

வஞ்சி

  1. தமிழகத்தின் இன்றைய எந்த ஊராக வஞ்சி அடையாளம் காணப்படுகிறது?

கரூர்

  • கேரளத்தில் எந்த இடம் வஞ்சி என்றும் அடையாளம் காணப்படுகிறது ?

திருவஞ்சைக்களம்

  1. சேர அரசக் குடும்பத்தில் எத்தனை கிளைகள் இருந்ததாக அறியப்படுகிறது?

 இரண்டு

  1. சேர அரச குடும்பத்தின் எந்த கிளை பிரிவினர் தமிழ்நாட்டின் கரூர் நகரிலிருந்து ஆட்சிபுரிந்தனர்?

 பொறையர்

  1. எட்டு சேர அரசர்கள் குறித்தும் அவர்கள் ஆண்ட பகுதிகள், அவர்களது சாதனைகள் குறித்தும் எந்த நூல் பேசுகிறது ?

 பதிற்றுப்பத்து

  1. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்கள் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

கரூர் நகருக்கு அருகே உள்ள புகளூரில் உள்ள கல்வெட்டு

  1. மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த சேர அரசர்களில் தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டவர் யார்?

சேரல் இரும்பொறை

  1. கடற்கொள்ளையர்கள் அடக்கியதன் மூலம் முக்கிய துறைமுகமான முசிறியின் பாதுகாப்பை உறுதிபடுத்தினார் எனக் கூறப்படுபவர் ?

சேரன் செங்குட்டுவன்

  1. சேரன் செங்குட்டுவனின் மாபெரும் வட இந்திய படையெடுப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

சிலப்பதிகாரம்

  1. சேரன் செங்குட்டுவன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததாக குறிப்பிடுகிறது?

56 ஆண்டுகள்

  1. சேரன் செங்குட்டுவன் எந்த மதங்களை ஆதரித்ததாக கூறப்பட்டுள்ளது?

வைதீக ,அவைதீக மதங்கள்

  1. சேர அரசர் என்ன நாணயங்களை வெளியிட்டுள்ளார் ?
SEE ALSO  11TH HISTORY STUDY NOTES | நவீனத்தை நோக்கி | TNPSC GROUP EXAMS

செப்பு,ஈய நாணயங்கள்

  1. சேர அரசர் வெளியிட்ட நாணயத்தில் என்ன குறிப்புகள் காணப்படுகின்றன ?

 தமிழ் பிராமியில் புராணக் குறிப்புகள்

  1. மதுரையை ஆட்சி செய்தவர்கள் யார் ?

 பாண்டியர்கள்

  1. பெரிப்ளசின் குறிப்புகளில் கொல்கோய் என்று குறிப்பிடப்பட்டுள்ள பாண்டியர் துறைமுகம் எது?

கொற்கை

  1. பாண்டியர்களின் சின்னம் எது?

மீன்

  1. பாண்டியர்களின் நாணயங்களில் என்ன சின்னம் பொறிக்கப் பட்டுள்ளன?

ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்

  1. பாண்டியர்கள் போர்தொடுத்து கோட்டைக்கு அருகில் உள்ள எந்த துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்?

நெல்கிண்டா துறைமுகம்

  1. மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எந்த அரசனை குறித்து குறிப்பிடுகின்றது?

கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

  1. மதுரைக்காஞ்சி எந்த பாண்டிய அரசர்களைப் பற்றி குறிப்பிடுகிறது?

முதுகுடுமி பெரு வழுதி , தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

  1. முதுகுடுமிப் பெருவழுதி பிராமணர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினார் என எதில் குறிக்கப்பட்டுள்ளது? 

வேள்விக்குடி செப்பேடுகள்

  1. வேள்விக்குடி செப்பேடுகள் எந்த காலகட்டத்தை சார்ந்தவை ?

எட்டாம் நூற்றாண்டு

  1. தான் செய்த வேத வேள்வி சடங்குகளின் நினைவாக பெருவழுதி என்ற பெயரில் புராணக்கதை குறிப்புகளைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டுள்ள பாண்டிய அரசர் யார் ?

முதுகுடுமிப் பெருவழுதி

  1. நெடுஞ்செழியன் சேரர் சோழர் 5 வேளிர் குல சிற்றரசர்கள் ஆகியோரின் கூட்டுப் படைகளை எந்த போரில் வெற்றி கொண்டதற்காக புகழப்படுகிறார்?

 தலையாலங்கானத்து போர்

  1. மலையும் மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

குறிஞ்சி

  1. காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

முல்லை

  1. வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

மருதம்

  1. கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது ?

நெய்தல்

  1. மணலும் மணல் சார்ந்த பகுதியும் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

 பாலை

  1. திணை சார்ந்த பாகுபாடு சமூகத்தில் ஆட்சியாளர்களின் மூன்று வகைப்பட்ட தலைமைத்துவம் கொண்டவர்களை காணமுடிகிறது அவர்கள் யார் யார்?

திழார்,வேளிர், மற்றும் வேந்தன்

  1. கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து பின்னர் நாடு என்று அறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

கிழார்

  1. எந்த பட்டப் பெயர்களை சூட்டிக் கொண்டதன் மூலம் தொடக்க வரலாற்று கால வேந்தர்கள் தங்களை ஏனைய மக்களிடமிருந்தும் வேளிர் குல தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்?

கடுங்கோ ,இமயவரம்பன், வானவரம்பன், பெருவழுதி

  1. எந்த நூல் பகல் மற்றும் இரவு நேர கடைவீதி களையும் அங்கு விற்பனையாகும் பலவகைப்பட்ட கைவினைப்பொருட்கள் பற்றியும் பேசுகிறது ?

மதுரைக்காஞ்சி

  1. மகத கைவினைஞர்கள், மாளவ உலோக பணியாளர்கள் ,மராத்திய எந்திர பொறியாளர்கள் போன்ற தமிழக கைவினைஞர்களோடு கூட்டுறவு முறையில் இணைந்து பணியாற்றியதாக எந்த நூல் குறிப்பிடுகின்றது?

 மணிமேகலை

  1. தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் வணிகத் தொடர்புடைய எந்த சொற்கள் இடம்பெற்றுள்ளன ?

 வணிகன்,சாத்தன்,நிகம  போன்ற சொற்கள்

  • உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

 உமணர்கள்

  1. எந்த சொல் இடம் விட்டு இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிக்கின்றது?
SEE ALSO  TNSCERT 12TH STD BOOKBACK TESTS |தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் | Rise of Extremism and Swadeshi Movement

சாத்து

  1. ரோமானிய தங்க வெள்ளி நாணயக் குவியல்கள் எந்த பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன?

 கோயம்புத்தூர்

  1. போதி மரத்தை இலங்கைக்கு கொண்டு சென்றதாக கருதப்படுபவர் யார்?

அசோகரின் மகள்

  1. கிபி 300- 600 காலகட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் யார்?

களப்பிரர்கள்

  1. களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் என்னென்ன?

திருக்குறள் ,அதனோடு ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ,சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவைகள்

  1. எங்கு கண்டுபிடிக்கப்பட்ட 5ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியை சேர்ந்த கல்வெட்டுகளில் ஒன்று சேந்தன்,கூற்றன் என்ற இரு அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறது?

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி

  1. எந்த காலகட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி பாண்டியர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது?

 கிபி ஆறாம் நூற்றாண்டில் மூன்றாவது கால் பகுதி


11TH HISTORY STUDY NOTES | தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்| TNPSC GROUP EXAMS

free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services

 

Leave a Comment

error: