TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
[11TH HISTORY AND ETHICS LESSONS ARE COMBINED IN THIS LESSON]
- இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் என அறியப்படுவது எது?
சிந்து நாகரிகம்
- எப்போது இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் சிந்து நாகரிகம் தோன்றியது?
பொ.ஆ.மு.3000
- சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது?
ஹரப்பா
- சிந்து நாகரீகம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹரப்பா நாகரிகம்
- எந்த ஆண்டு முதல், சிந்து பகுதியில்,புதிய கற்கால கிராமங்களின் தொடக்கம் இருந்தது?
பொ .ஆ.மு. 7000
- ஹரப்பா நாகரிகத்தின் காலம், எவ்வாறானபடிநிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
தொடக்க கால ஹரப்பா ( பொ.ஆ.மு. 3000-2600)
முதிர்ச்சி அடைந்த ஹரப்பா (பொ.ஆ.மு. 2600- 1900)
பிற்கால ஹரப்பா( பொ.ஆ.மு. 1900-1700).
- ஹரப்பாவுக்கு முதன்முதலில் (கி.பி) 1826 இல் வருகை தந்தவர் யார்?
சார்லஸ் மேசன் .
- 1831-ல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் யார்?
அலெக்ஸாண்டர் பர்ன்ஸ்
- இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் முதல் அளவையளர்யார்?
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்.
- அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் எந்தெந்த ஆண்டுகளில் ஹரப்பாவைப் பார்வையிட்டார்?
1853,1856,1875
- சிந்து பகுதியில் ஆய்வு நடத்தக் காரணமாக இருந்தவர் யார்?
சர் ஜான் மார்ஷல்
- 1940 -களில் ஹரப்பா பகுதியில் அகழாய்வுகள் மேற்கொண்டவர் யார்?
ஆர்.இ.எம். வீலர்
- எந்த ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப்பயணங்களும் அகழாய்வுகளும், ஹரப்பா நாகரிகத்தையும்அதன் இயல்பையும் புரிந்துகொள்ள உதவின?
1950
- சிந்து நாகரிகம், இந்தியாவிலும் பாகிஸ்தானிலுமாக மொத்தம் எவ்வளவு பரப்பளவில் அமைந்துள்ளன?
- மில்லியன் சதுரகிலோ மீட்டர்.
- சிந்து நாகரீகத்தின் எல்லைகள் யாவை?
*மேற்கில் -பாகிஸ்தான்– ஈரான் எல்லையில் அமைந்துள்ள சட்காஜென்டர்குடியிருப்புகள்,*வடக்கில் -ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான் ),*கிழக்கில் -ஆலம்கிர்புர் (உத்தரப்பிரதேசம்), *தெற்கில் தைமாபாத் (மகாராஷ்டிரம்)
- ஹரப்பாவின் எந்த பண்பாட்டுக் கட்டத்தில் நகர மையங்கள் தோன்றின?
முதிர்ந்த ஹரப்பா (பொ.ஆ.மு. 2600- 1900)
- ஹரப்பா கால முக்கிய நகரங்கள் யாவை?
ஹரப்பா(பஞ்சாப் , பாகிஸ்தான் ), மொகஞ்சதாரோ (சிந்து, பாகிஸ்தான் ),டோலவிரா, லோத்தல்,சுர்கோட்டடா (குஜராத், இந்தியா), காலிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா), பனவாலி, ராக்கிகார்ஹி (ஹரியானா, இந்தியா), சர் கோட்டடா (குஜராத், இந்தியா)
- ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு எவற்றை பயன்படுத்தினர்?
சுட்ட, சுடாத செங்கற்கல் மற்றும் கற்கள்.
- ஹரப்பாவின் நகரங்கள் எவ்வகையான வடிமைப்பைக் கொண்டிருந்தன?
சட்டக வடிவம்.
- ஹரபாவில் கழிவுநீர் வடிகால்கள் எவற்றால் கட்டப்பட்டன?
சுட்ட செங்கற்கள்
- ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம் எது?
மொகஞ்சதாரோ
- மொகஞ்சதாரோவின் இரு வேறுபட்ட பகுதிகள் யாவை? கோட்டைப்பகுதி,தாழ்வானநகரம்
- மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடம் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறது?
சேமிப்புக்கிடங்கு.
- மொகஞ்சத்தாரோவில் உள்ள, முற்றத்துடன் கூடிய ஒரு பெரிய குளம் எது?
பெரும்குளம் (The Great Bath)
- பெரும் குளத்தின் எந்தெந்த பக்கங்களின் படிக்கட்டுகள் அமைந்துள்ளது?
வடக்கு மற்றும் தெற்கு
- பெரும் குளத்தின் சுவர்கள்,எவற்றால் பூசப்பட்டுள்ளன?
ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்து.
- ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு,எந்த தொழில் முக்கிய ஆதாரமாக விளங்கியது?
வேளாண்மை.
- ஹரப்பா மக்கள் எவற்றையெல்லாம் பயிரிட்டனர்?
கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை,எள், தினைவகைகள்
- ஹரப்பா மக்கள் வேளாண்மையில் எந்த முறையைப் பின்பற்றினர்?
இரட்டைப்பயிரிடல்
- உழவு தொழில் நடந்ததற்கான, உழுதநிலங்கள் எங்கு காணப்பட்டது?
காலிபங்கன்
- பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் ,சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவையும் குறித்து ஆய்வு செய்பவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறன்றனர்?
தொல்தாவரவியலாளர்கள் (Archaeobotanist)
- ஹரப்பாவில் எந்த விலங்கு பயன்பாட்டில் இல்லை?
குதிரை
- ஹரப்பாவில், மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
செபு .
- ஹரப்பா மக்கள் எவற்றையெல்லாம் பயன்படுத்தி அணிகலன்கள் செய்தனர்?
கார்னிலியன் (மணி),ஜாஸ்பர், கிரிஸ்டல் (படிகக்கல்), ஸ்டீட்டைட் (நுரைக்கல்)
- ஹரப்பா மக்கள் அணிகலன் செய்ய பயன்படுத்திய உலோகங்கள் யாவை?
செம்பு, வெண்கலம், தங்கம்
- ஹரப்பா மக்கள் அணிலகன் செய்ய பயன்படுத்திய உலோகம் அல்லாத பிற பொருட்கள் யாவை?
சங்கு, பீங்கான் , சுடுமண்
- ஹரப்பாவின் செய்யப்பட்ட அணிகலன்கள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டன?
மெசபடோமியா
- ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களும் அவற்றின் மையங்களும் யாவை?
*சங்கு -நாகேஷ்வர், பாலகோட்*வைடூரியம் -ஷார்டுகை *கார்னிலியன் (மணி)- லோத்தல் *ஸ்டீட்டைட் (நுரைக்கல்) -தெற்கு ராஜஸ்தான்*செம்பு- ராஜஸ்தான், ஓமன்
- ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட மட்பாண்டங்கள் என்ன நிறங்களில் வண்ணம் பூசப்பட்டிருந்தன?
அடர் சிவப்பும் கறுப்பும் கலந்து.
- ஹரப்பாவின் மட்பாண்டங்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் யாவை?
அரச இலைகள், மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல்மாணலான கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள்.
- ஹரப்பா நாகரிகம் எந்த உலோக கால நாகரிகமாகும்?
வெண்கலக் காலம்
- 4எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பாமக்கள் பயன்படுத்தினார்கள்?
ரோரிசெர்ட்
- ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தின் பயனை அறிந்திருக்கவில்லை?
இரும்பு
- ரோரி செர்ட் என்ற படிவுப்பாறை எங்கு காணப்படுகிறது?
பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதி.
- ஹரப்பாவின் பொருளாதாரச் செயல்பாடுகளில் எவை முக்கியப்பங்கு வகித்தன?
வணிகமும் பரிவர்த்தனையும்
- ஹரப்பா மக்ககள் எதனுடன் நெருக்கமான வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர்?
மெசபடோமியா
- சுமேரிய நாகரீகம் நிலவிய எந்தெந்த இடங்களில் ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகளும்பொருள்களும் கிடைத்துள்ளன?
ஓமன், பஹ்ரைன் , ஈராக், ஈரான்
- எந்த கல்வெட்டு குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?
க்யூனிபார்ம் கல்வெட்டு
- க்யூனிபார்ம் கல்வெட்டில் காணப்படும் ‘மெலுகா’ என்னும் சொல் எதனை குறிக்கிறது?
சிந்து பகுதி
- ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
ஓமன்.
- ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள், மணிகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன?
மெசபடோமியா.
- எடைக்கற்கள் கனசதுர வடிவத்தில், எவற்றால் செய்யப்பட்டிருந்தன?
படிகக்கல்
- ஹரப்பா மக்கள் எடையை கணக்கிட எம்முறையை பின்பற்றினார்கள்?
இரும எண்முறை (1,2,4,8,16,32,…..)
- அணிகலன்களையும்உலோகங்களையும் எடை போட எம்முறையை ஹரப்பா மக்கள் பின்பற்றினர்?
இரும எண்முறை
- படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன?
ஹரப்பா
- எடையின் விகிதம் எத்தனை மடங்காக பின்பற்றப்பட்டுள்ளது?
இரு மடங்காக.(1:2:4:8:16:32.)
- 16 –இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடுஇன்றைய அளவீட்டில் எத்தனை கிராமாக உள்ளது?
13.63 கிராம்
- ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இஞ்ச் என்பது எத்தனை செ. மீ ஆகும்?
1.75செ.மீ
- எவற்றால் ஆன முத்திரைகள் ஹரப்பா நாகரிகப் பகுதிகளில் அதிகளவில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன?
ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண்,தந்தம்
- ஹரப்பாவின் எத்தனைக்கு மேற்பட்டஎழுத்துத்தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன?
5000க்கும்மேற்பட்ட
- ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது?
26
- ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த ‘மத குரு’, எந்த பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ளன?
மொகஞ்சதாரோ
- செம்பாலான ‘நடனமாடும் பெண் ’சிலை எங்கு கிடைக்கப்பெற்றுள்ளன?
மொகஞ்சதாரோ
- எந்தெந்த இடங்களில் கிடைத்த கல் சிற்பங்கள் ஹரப்பாவின்முக்கிய கலைப்படைப் புகளாகும்?
ஹரப்பா, மொஹஞ்சதாரோ,டோலாவிரா
- சிந்து மக்கள் எவற்றை வழிபட்டார்கள்?
இயற்க்கை மற்றும் தாய் தெய்வம்
- எந்த மரம் சிந்து மக்களிடையே வழிபாட்டுக்குரியதாக இருந்தது?
அரச மரம்.
- வேள்வி பீடங்கள் எங்கு அடையாளம் காணப்பட்டுள்ளன?
காலிபங்கன்
- இறந்தவர்களை புதைக்கும் புதைகுழிகளில் எவையெல்லாம் கிடைத்துள்ளன?
மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி,மணிகள்.
- நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பா மக்கள் எத்திசை நோக்கி இடம் பெயர்ந்தனர்?
கிழக்கு மற்றும் தெற்கு .
- தென்னிந்தியாவின் எப்பகுதிகள் புதிய கற்காலப் பண்பாடுகளுடன் , மேய்ச்சல் மற்றும் கலப்பை சார்ந்த வேளாண்மையிலும் ஈடுபட்டுவந்தன?
வடபகுதி,(கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்
- புதிய கற்காலப்பண்பாடு வட, மத்திய, மற்றும் கிழக்கு இந்தியாவில் பரவியிருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் என்ன பண்பாடு நிலவியது?
செம்புக்காலப் பண்பாடு
- சிந்து சமவெளி நாகரிகம் எப்போது வீழ்ச்சி அடைந்தது?
பொ.ஆ.மு. 1900.
- சிந்து நாகரீகத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் யாவை?
காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் காய்ந்து வற்றிப்போதல் .
- இந்திய வரலாற்றில் நிகழ்ந்த முதல் நகரமயமாக்கத்தின் வெளிப்பாடு எது?
சிந்து நாகரிகம்
- பழந்தமிழகத்தைச் சேர்ந்த எந்தெந்த ஊர்கள் இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கத்தின் பகுதிகள் ஆகும்?
அரிக்கமேடு, கீழடி, உறையூர் .
ETHICS
- ஹரப்பா நாகரிகம் எந்த ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது?
1921
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எந்த ஆண்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது?
1920
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எந்த ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்டது?
ரவி சட்லஜ்
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
பழைய பஞ்சாப் ,மாண்ட்கொமரி மாவட்டம் (பாகிஸ்தான்)
- எங்கு 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது?
சிந்து மாகாணம் பாகிஸ்தான் லர்க்க்னா மாவட்டம்
- எந்தாண்டு மொகஞ்சதாரோ அகழ்ந்தெடுக்கப்பட்டது?
1922
- ஹரப்பா நாகரிகம் கிமு 3250 முதல் கிமு 2750 வரை என குறிப்பிட்ட தொல்லியலாளர் யார்?
சர் ஜான் மார்ஷல்
- தமிழ்நாட்டில் எந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வுகள் தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன?
ஆதிச்சநல்லூர் ,அரிக்கமேடு
- தமிழ்நாட்டின் ஆரணி, கொற்கை மயிலம் ,மானூர், தொண்டி, கண்டிகை, போன்ற இடப்பெயர்கள் தற்போது எந்த நாட்டில் வழக்கத்தில் உள்ளன ?
பாகிஸ்தான்
- தமிழ்நாட்டில் உள்ள ஆலார், ஆசூர் ,படூர் ,இஞ்சூர், குந்தா, நாகல் ,தானூர் ,செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய எந்த நாட்டில் வழக்கத்தில் உள்ளன?
ஆப்கானிஸ்தான்
- இன்றுவரை பிராகுயி என்ற திராவிட மொழி பேசப்பட்டு வரும் இடம் எது ?
பலுசிஸ்தான்
- ஹரப்பா நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாருடைய கருத்து?
சர் ஜான் மார்ஷல்,ஆர்.டி பானர்ஜீ,ஹீராசு பாதிரியார்
- தமிழ்நாட்டை திரமிளிகே என அழைத்தவர்கள் யார்?
யவனர்கள்
- தமிழ் அரசர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்ட பல்லவ அரசன் யார்?
நந்திவர்ம பல்லவன்
- தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும் தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டவர் யார்?
கங்காதேவி
- கங்காதேவி எழுதிய நூலின் பெயர் என்ன?
மதுரா விஜயம்
- ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர் யார்?
சர் மார்டிமர் வீலர்
- கீழடி தொல்லியல் களம் என்பது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சிவகங்கை
- ஹரப்பா நாகரீகத்தில் தெருக்கள் எந்த திசையில் அமைந்திருந்தன
கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்கு
- சிந்து நாகரிகத்தில் பெரிய தெருக்கள் எத்தனை அடி அகலம் இருந்தன ?
33 அடி
- சிந்து நாகரிகத்தில் சிறிய தெருக்கள் எத்தனை அடி வரை அகலம் கொண்டதாக இருந்தன?
9 அடி முதல் 12 அடி வரை
- சிந்து நாகரிகத்தில் எந்த திசையில் கோட்டை இருந்தது?
மேற்கு திசையில் மேடான நிலத்தில்
- சிந்து நாகரிகத்தில் எந்த திசையில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்தன?
கிழக்கு திசை
- கிணற்று சுவர், சாக்கடை சுவர் போன்ற வளைந்த சுவர்கள் கட்டுவதற்கு என்ன வடிவ செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன?
ஆப்பு வடிவ செங்கற்கள்
- குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக எந்த பசையால் பூசப்பட்டிருந்தது ?
நீலக்கீல்
- நீச்சல் குளத்தின் எந்தப் பகுதியில் நீராவி பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது?
தென்மேற்கு மூலை
- சிந்துவெளி மக்களின் முக்கிய தொழிலாக இருந்தது?
வேளாண்மை
- ஹரப்பாவில் இருக்கும் தானிய களஞ்சியத்தின் நீளம் மற்றும் அகலம் என்ன?
168 அடி நீளம் 135 அடி அகலம்
- ஹரப்பாவில் கட்டப்பட்டிருக்கும் தானியக்களஞ்சியம் இரண்டு வரிசைகளாக கட்டப்பட்டு இருந்தன இவ்விரண்டு வரிசைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு?
23 அடி
- முகம் பார்க்கும் கண்ணாடிகள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன?
வெண்கலம்
- சீப்புகள் எவற்றால் செய்யப்பட்டிருந்தது?
தந்தம்
- சிந்துவெளி மக்கள் கண் காது தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை செய்வதற்கு எந்த வகையான மீனின் எலும்புகளை பயன்படுத்தியுள்ளனர்?
கட்டில்
- சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்வதில் எத்தனை வகையான வழிமுறைகளை பின்பற்றினர்
மூன்று
- தாழிகள் தமிழகத்தில் எந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ,திருக்காம்புலியூர், தாமிரபரணி ஆற்றங்கரை
- இறந்தவர்களை எந்த திசையில் புதைக்கும் வழக்கம் நடைமுறையாக இருந்தது?
வடக்கு தெற்காக
- சிந்துவெளி மக்கள் நீளத்தை அளக்க என்ன முறையை பயன்படுத்தினர் ?
அடிமுறை
- சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க எந்த உலோக அளவுகோலை பயன்படுத்தியுள்ளனர் ?
வெண்கலம்
- சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது ?
தாய் தெய்வ வழிபாடு
- ஹரப்பாவில் கண்டு பிடிக்கப்பட்ட மகாயோகியின் உருவத்தில் வலப்புறமாக உள்ள உருவங்கள் என்னென்ன?
யானை புலி
- ஹரப்பாவில் கண்டு பிடிக்கப்பட்ட மகாயோகியின் உருவத்தில் இடப்புறமாக உள்ள உருவங்கள் என்னென்ன?
காண்டாமிருகம், எருமை
- விலங்குகளின் கடவுள் என அழைக்கப்பட்டவர் யார் ?
பசுபதி
- யோகிகளின் கடவுள் என அழைக்கப்பட்டவர் யார்?
யோகேஸ்வரன்
- சிந்துவெளி மக்களிடம் எந்த மரம் முதன்மையாக மர வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது?
அரசமரம்
- சிந்துவெளி எழுத்துக்களோடு தொடர்புடைய தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
கீழ்வாலை, குளிர்சுனை,புறக்கல்,ஆலம்பாடி, செத்தவாரை, நேகனூர்பட்டி
- ஹரப்பா நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது?
ராவி நதியோரம்
- மொகஞ்சதாரோ எந்த நதியோரம் பரவியிருந்தது?
சிந்து நதி ஓரம்
- ரூபார் நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது?
சட்லஜ் நதியோரம் பஞ்சாப்
- காலிபங்கன் நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது?
காகர் நதி தென் கரையோரம் ,ராஜஸ்தான்
- சாகுந்தாரோ நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது?
சரஸ்வதி நதியோரம் ராஜஸ்தான்
- தோலவிரா சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது?
கபீர் மாவட்டம் குஜராத்
- கோட்டிஜி சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது?
சிந்து மாகாணம்
- பனவாலி சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது?
ஹரியானா
- சுர்கோட்டா சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது?
குஜராத்
- உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது ?
லோத்தல் குஜராத்
- லோத்தல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
எஸ்.ஆர்.ராவ்
11TH HISTORY STUDY NOTES | சிந்து நாகரிகம் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services