TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- எப்போது விஜயநகரப் பேரரசு வீழ்ந்தது?
1565
- ராஜா உடையார் எப்போது அரியணை ஏறினார் ?
1578
- எப்போது தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது?
1610
- ஹைதர் அலி எப்போது தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார்?
1710
- ஹைதர் அலியின் தந்தை யார்?
ஃபதே முகமது
- ஃபதே முகமது என்ன பதவியை வகித்தார்?
கோலார் பகுதியின் கோட்டை காவல் படை தளபதி (பௌஜ்தார்)
- மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்ததால் ஹைதர் என்ன பட்டம் பெற்றார்?
ஃபதே ஹைதர் பகதூர்
- ஃபதே ஹைதர் பகதூர் என்பதன் பொருள் என்ன?
வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்
- எந்த ஆண்டு ஹைதர்அலி ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்கள் உடன் கூட்டு சேர்ந்தார்?
1760
- எந்த ஆண்டு மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டி கொல்லப்பட்டார்?
1770
- ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களை தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை வாரன் ஹாஸ்டிங்ஸ் என்ன கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார்?
சுற்று வேலி கொள்கை
- முதலாம் மைசூர் போரின் காலம் என்ன?
1767-69
- மூன்றாம் கர்நாடகப் போரின்போது வங்காளத்தில் இருந்து படைகளை வழிநடத்திய யார் 1759ல் மசூலிப்பட்டினம் கைப்பற்றினார்?
கர்னல் ஃபோர்டே
- கஞ்சம், விசாகப்பட்டினம் ,கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?
வட சர்க்கார்
- வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசமானதை முகலாய பேரரசர் எந்த உடன்படிக்கையின் மூலம் அங்கீகரித்தார்?
அலகாபாத் உடன்படிக்கை
- அலகாபாத் உடன்படிக்கை எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது ?
1765
- எந்த ஆண்டு ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து கரூரையும்,ஈரோட்டையும் கைப்பற்றினார்?
1768
- ஹைதர் அலி யாரை தோற்கடித்து கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார்?
கேப்டன் நிக்சன்
- ஹைதர் அலியின் எந்த தளபதி மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை நடத்திச் சென்றார்?
ஃபசலுல்லாகான்
- இரண்டாவது மைசூர் போரின் காலகட்டம் என்ன?
1780
- அமெரிக்க சுதந்திரப் போருக்கு பிறகு பிரான்ஸ் அமெரிக்காவுடன் எந்த ஆண்டு நட்பு உடன்படிக்கை செய்து கொண்டது?
1778
- ஹைதர் எந்த ஆண்டு ஆற்காட்டை கைப்பற்றினார்?
1780
- மதராஸை முற்றுகையிட வங்காளத்தில் இருந்து அனுப்பப்பட்டவர் யார்?
அயர்கூட்
- கர்னல் ப்ரெய்த்வெயிட்டை கும்பகோணம் அருகே தோற்கடித்து சிறைப்பிடித்தவர் யார்?
ஹைதரின் மகன் திப்பு சுல்தான்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எப்போது ஹைதர் மரணமடைந்தார்?
1782
- பாரிஸ் உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?
1783
- கரூரையும் திண்டுக்கல்லையும் கைப்பற்றியவர் யார்?
கர்னல் லேங்
- கர்னல் ஃபுல்லர்டன் எந்த இடங்களை கைப்பற்றினார்?
பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர்
- மங்களூர் உடன்படிக்கை எப்போது கையெழுத்தானது?
1784 மார்ச்
- மூன்றாம் மைசூர் போரின் காலம் என்ன?
1790-92
- சால்பை உடன்படிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1782
- திப்பு எப்போது கான்ஸ்டாண்டிநோபிளுக்கும் பாரீஸுக்கும் தூதுக்குழுவை அனுப்பினார்?
1787
- திப்புவின் தூதுக்குழுவை நட்புடன் நடத்தியவர் யார் ?
பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயி
- கர்னல் ஹார்ட்லி திப்புவின் தளபதி ஹூசைன் அலியை எங்கு தோற்கடித்தார்?
கள்ளிக்கோட்டை
- மூன்றாம் மைசூர் போரில் எதனருகே திப்பு தோற்கடிக்கப்பட்டார் ?
ஸ்ரீரங்கப்பட்டணம்
- எந்த உடன்படிக்கையின்படி திப்பு சுல்தான் அவருடைய ஆட்சி பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்கு கொடுக்க வேண்டும்?
ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை
- ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கையின்படி திப்பு சுல்தான் எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் ?
மூன்று கோடி ரூபாய்
- மைசூர் அரசர் ஒன்பதாம் சாமராஜ் எப்போது இறந்தார் ?
1796
- திப்பு சுல்தான் மீண்டும் பாரிசுக்கு தூதர்களை எப்போது அனுப்பினார்?
1796
- பிரான்சில் இருப்பதைப்போல ஜேக்கோபியர் கழகம் மைசூரில் எங்கு தொடங்கப்பட்டது?
ஸ்ரீரங்கப்பட்டணம்
- துணைப்படை திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேய படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தியவர் யார் ?
வெல்லஸ்லி
- நான்காம் மைசூர் போரின் காலகட்டம் என்ன?
1799
- ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்து கைப்பற்றியவர் யார்?
ஜெனரல் டேவிட் பெயர்டு
- திப்புவின் மகன்கள் வேலூர் கிளர்ச்சிக்கு பிறகு எங்கு அனுப்பப்பட்டார்கள்?
கல்கத்தா
- விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசப் பிரதிநிதியாக மதுரைக்கு வந்தவர்கள் யார்?
நாகம நாயக்கர், அவருடைய மகன் விஸ்வநாத நாயக்கர்
- யாருடைய வழிகாட்டுதலின் பெயரில் பாண்டிய பேரரசின் அனைத்து சிற்றரசுகளும் 72 பாளையங்களாக மாற்றப்பட்டது?
தளவாய் அரியநாத முதலியார்
- பாளையக்காரர் முறை எப்போது தோன்றியது?
1530
- முதன்முதலில் பாளையக்காரர் முறை எந்த அரசில் பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது?
வாரங்கல்லை ஆண்டு வந்த காகதீய அரசு
- கான்சாகிப் என அழைக்கப்பட்டவர் யார்?
யூசுப்கான்
- கிழக்கிந்திய கம்பெனியில் இந்திய வீரர்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
யூசுப்கான்
- கர்னல் ஹெரான் உடன் திருநெல்வேலிக்கு படையெடுத்து சென்றவர் யார்?
மாபூஸ்கான்
- நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான யார் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர்?
மியானா ,முடிமய்யா,நபிகான்கட்டக்
- திருவிதாங்கூருக்கு எந்த பகுதி திரும்ப தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாக புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார் ?
களக்காடு
- யூசுப்கான் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு எந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டார் ?
1764
- கேப்டன் கேம்பல் நெற்கட்டும் செவ்வல் கோட்டையை முற்றுகையிட்டு எந்த ஆண்டு கைப்பற்றினார்?
1767
- யூசுப்கானின் இயற்பெயர் என்ன ?
மருதநாயகம்
- யூசுப்கான் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?
இராமநாதபுரம்
- யூசுப்கான் எங்கு இருந்த பொழுது இஸ்லாம் சமயத்தை தழுவினார்?
புதுச்சேரி
- யூசுப்கான் எப்போது கிளைவ் தலைமையிலான கம்பெனிப் படையில் சேர்ந்தார்?
1752
- யூசுப்கான் எப்போது மதுரை ,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆளுநராக பொறுப்பு வகித்தார்?
1756 முதல் 1763 வரை
- யூசுப்கான் ஹைதர்அலியை தோற்கடித்து எந்த பகுதியை கைப்பற்றினார்?
சோழவந்தான்
- வேலுநாச்சியார் யாருடைய மகள் ?
செல்லமுத்து சேதுபதி
- செல்லமுத்து சேதுபதி எந்தப் பகுதியின் அரசர் ஆவார் ?
இராமநாதபுரம்
- வேலுநாச்சியார் யாரை மணந்தார்?
சிவகங்கை அரசர் முத்துவடுகர் பெரிய உடையார்
- வேலு நாச்சியாரின் மகள் பெயர் என்ன ?
வெள்ளச்சி நாச்சியார்
- வேலு நாச்சியார் தன் மகளுடன் தப்பித்து எங்கு அடைக்கலம் புகுந்தார்?
திண்டுக்கல் அருகே விருப்பாட்சி
- திண்டுக்கல் அருகே ஹைதர்அலியின் பாதுகாப்பில் வேலுநாச்சியார் எத்தனை ஆண்டுகாலம் இருந்தார்?
8 ஆண்டுகள்
- வேலு நாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயருடன் போரிட்டு எப்போது வென்றார்?
1780
- வேலு நாச்சியாரின் ஆலோசகராக இருந்தவர் யார் ?
சின்னமருது
- வேலுநாச்சியாரின் படை தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
பெரியமருது
- சிவகங்கை தோல்விக்குப் பின்னர் மீண்டும் ஆங்கிலேயர் சிவகங்கை மீது எப்போது படையெடுத்து வந்தனர்?
1783
- ஆங்கிலேயரின் சமரச உடன்பாட்டின்படி பிற்காலத்தில் சிவகங்கையின் அரசரானவர் யார்?
வேங்கண் பெரிய உடைய தேவர்
- வெள்ளச்சி நாச்சியார் யாருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்?
வேங்கண் பெரிய உடைய தேவர்
- வெள்ளச்சி நாச்சியார் எப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்தார்?
1790
- வேலுநாச்சியார் நோயுற்று எந்த ஆண்டு இறந்தார்?
1796
- வீரபாண்டிய கட்டபொம்மன் எப்போது பிறந்தார்?
1761
- கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய காலத்தில் குறுநில மன்னராக இருந்தார்?
கர்னல் ஹெரான்
- வீரபாண்டிய கட்டபொம்மன் தனது எத்தனையாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு பொறுப்பேற்றார் ?
30 வயது
- பாஞ்சாலங்குறிச்சி பாளையம் கம்பெனிக்கு கட்டாது வைத்திருந்த கப்பத்தொகை எவ்வளவு?
3310 பகோடாக்கள்
- எங்கு அறிமுகமான தங்க நாணயம் பகோடா எனப்பட்டது?
விஜயநகரம்
- ‘பகோடா மரத்தை உலுக்குதல்’என்ற சொலவடை எந்த மக்களிடையே நிலவியது ?
இங்கிலாந்து
- பகோடா தமிழில் எவ்வாறு அழைக்கப்படும்?
வராகன்
- கலெக்டர் ஜாக்சன் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்பு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டவர் யார்?
லூஷிங்டன்
- 1799, செப்டம்பர் 1 அன்று தன்னை கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுத்தவர் யார்?
மேஜர் பானர்மேன்
- எங்கு நடைபெற்ற மோதலில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணிய பிள்ளை பிடித்து வைக்கப்பட்டார்?
கோலார்பட்டி
- வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கு மறைந்திருந்தார்?
களப்பூர் காடுகள்
- களப்பூர் காட்டிலிருந்த கட்டபொம்மனைப் ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்தவர் யார்?
புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமான்
- எப்போது கட்டபொம்மன் கயத்தாறு எனும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
1799 ,அக்டோபர் 16
- ஆற்காடு நவாப் எந்த ஆண்டு உடன்படிக்கை மூலம் ஸ்தலக்காவல், தேசக்காவல் ஆகியவற்றுக்கான உரிமைகளை கம்பெனிக்கு கொடுத்திருந்தார் ?
1772
- சிவகங்கையின் தலைநகர் எது ?
சிறுவயல்
- நவாப் முகம்மது அலி யாரை சிறையிலிருந்து விடுவித்து அவரை இராமநாதபுரத்தின் சேதுபதியாக முடி சூட்டினார் ?
முத்துராமலிங்கத் தேவர்
- ஊமத்துரை தன் ஆதரவாளர்களுடன் மதுரையில் உள்ள எந்த பகுதியை கைப்பற்றினார் ?
பழைய நாடு
- மாங்குடி அருகே செவத்த தம்பியை வென்றவர் யார்?
கேப்டன் வில்லியம் பிளாக்பர்ன்
- தென்னிந்திய கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?
1801
- ஆங்கிலேயர் மருதுபாண்டியரை எந்த இடத்தில் கைது செய்தனர் ?
சிங்கம்புணரி குன்றுகள்
- ஆங்கிலேயர் செவத்தையாவை எந்த பகுதியில் கைது செய்தனர் ?
வத்தலகுண்டு
- மருது சகோதரர்கள் எப்போது தூக்கிலிடப்பட்டனர் ?
அக்டோபர் 24,1801
- ஊமைத்துரையும் செவத்தையாவும் எப்போது தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்?
1801 நவம்பர் 16
- தென்னிந்திய கிளர்ச்சியின் போது பிடிபட்ட 73 கிளர்ச்சியாளர்கள் 1802 ஏப்ரல் மாதத்தில் எந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள்?
மலேசியாவில் உள்ள பினாங்கு
- தீரன் சின்னமலை எந்த எந்த பகுதியை சேர்ந்த பாளையக்காரர் ?
கொங்குநாடு
- தீரன் சின்னமலை யாரால் பயிற்சி அளிக்கப்பட்ட பாளையக்காரர்களில் ஒருவர் ?
பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
- தீரன் சின்னமலை எப்போது தூக்கிலிடப்பட்டார்?
ஜூலை 31, 1805
- தீரன் சின்னமலையின் காவிரிக்கரை போர் எப்போது நடைபெற்றது?
1801
- தீரன் சின்னமலையின் ஓடாநிலைப் போர் எப்போது நடைபெற்றது?
1802
- தீரன் சின்னமலையின் அரச்சலூர் போர் எப்போது நடைபெற்றது?
1804
- தீரன் சின்னமலை எங்கு தூக்கிலிடப்பட்டார்?
சங்ககிரி கோட்டை
- வேலூர் புரட்சியின் கால கட்டம் என்ன ?
1806
- யார் சிப்பாய்களுக்கான ஒரு புதிய தலைப்பாகையை வடிவமைத்தார் ?
துணை ஜெனரல் அக்னியு
- வேலூர் கிளர்ச்சியின் முதல் எதிர்ப்பு எப்போது நிகழ்ந்தது?
மே மாதம் 1806
- வேலூரில் இருந்து எந்த படைப்பிரிவு வீரர்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர் ?
நான்காம் ரெஜிமெண்டின் இரண்டாம் படை பிரிவு வீரர்கள்
- புதிய தலைப்பாகை அணிவதற்கு விருப்பமில்லாத உணர்வு வீரர்களிடையே மிக பலவீனமாக இருப்பதாக நம்பியவர் யார்?
கவர்னர் வில்லியம் பெண்டிங்
- வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின் போது பார்வையிடும் வேலையை செய்த அதிகாரி யார்?
இந்திய அதிகாரி ஜமேதார் ஷேக் காசிம்
- வேலூர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுபவர் யார்?
ஜமாலுதீன்
- வேலூர் கோட்டைக்கு வெளியே பணியில் இருந்த அதிகாரியார்?
மேஜர் கோட்ஸ்
- மேஜர் கோட்ஸ் ஆற்காட்டில் பொறுப்பு வகித்த கில்லஸ்பிக்கு கடிதம் எழுதி அதை யாரிடம் கொடுத்து அனுப்பினார்?
கேப்டன் ஸ்டீவன்சன்
- கர்னல் கில்லஸ்பி யார் தலைமையிலான படைகளுடன் வேலூருக்கு புறப்பட்டார்?
கேப்டன் யங் , லெப்டினன்ட் உட்ஹவுஸ் ,கர்னல் கென்னடி
- யார் தலைமையிலான குதிரைப் படையின் உதவியுடன் கோட்டையின் வெளிக்கதவு தகர்க்கப்பட்டது?
லெப்டினெண்ட் ப்ளாகிஸ்டன்
- கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை எத்தனை நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது?
15 நிமிடங்கள்
- ஜூலை 11ல் வேலூர் படையின் தற்காலிக பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
கர்னல் ஹர்கோர்ட்
- கேரளப் பகுதிகளில் குடியேறி மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மாப்பிள்ளைகள்
- ஆங்கிலேயர் மலபாரை எப்போது தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்?
1792
- ஜன்மம் என்ற உரிமை பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
ஜன்மி
- கனம் என்று உரிமை பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
கனம்தார்
- மலபாரில் மஞ்சேரியில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?
1849 ஆகஸ்ட் மாதம்
- குளத்தூரில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?
1851 ஆகஸ்ட்
- மலபாரில் வடக்கிலுள்ள மட்டனூரில் எப்போது கிளர்ச்சி ஏற்பட்டது?
1852 ஜனவரி மாதம்
- கோல்களின் கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?
1831-32
- கோல் என்ற பழங்குடி இனத்தினர் எந்த பகுதிகளில் வாழ்ந்தனர்?
பீகார், ஒரிசா ,சோட்டா நாக்பூர், சிங்க்பும்
- சோன்பூர் ,தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் யாருக்கு எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்?
திக்காடர்கள்
- திக்காடர்கள் என்பவர்கள் யார்?
வரி வசூலிப்போர்
- கோல் கிளர்ச்சியின் தலைவர் யார்?
புத்தபகத்
- கோல் கிளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் யார்?
பிந்த்ராய் மன்கி
- பிந்த்ராய் மன்கி எப்போது சரண் அடைந்ததும் கோல்களின் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது ?
மார்ச் 19, 1832
- சந்தால்கள் எந்த பகுதிகளிலுள்ள காட்டுப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்?
வங்காளம், பீகார் ,ஒரிசா
- சந்தால்கள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மஞ்சி
- சந்தால் கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?
1855-56
- சந்தால்கள் ராஜ்மகல் குண்றுகளை சுற்றியுள்ள பகுதியை திருத்தி அதை எவ்வாறு அழைத்தனர்?
டாமின்-இ-கோ
- தொடக்கத்தில் சந்தால்களின் தலைவராக இருந்தவர் யார்?
சித்தோ
- சித்தோ கைது செய்யப்பட்ட பின்னர் கிளர்ச்சியை நடத்தியவர் யார்?
கானு
- முண்டா கிளர்ச்சியின் காலகட்டம் என்ன?
1899- 1900
- முண்டாக்கள் எந்தப் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள்?
பீகார்
- முண்டாக்களின் கிளர்ச்சி யாரால் வழிநடத்தப்பட்டது?
பிர்சா முண்டா
- பிர்சா முண்டா எப்போது பிறந்தார் ?
1874
- ஆங்கிலேயரை விரட்டி விட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனித தூதர் என தன்னை அழைத்துக்கொண்டவர்?
யார் பிர்சா முண்டா
- பிர்சா முண்டா எந்தப் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்?
சோட்டா நாக்பூர்
- ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா எப்போது இறந்தார்?
ஜூன் 9 1900
- “வங்காள படையின் உருவாக்கம் (the making of the Bengal army)” என்ற நூலை எழுதியவர் யார் ?
வங்காள படையின் ஆங்கிலத் தளபதி கர்னல் மல்லீசன்
- “ஒரு இராணுவ வீரர்களின் கலகம் விரைவாக தனது குணாதிசியத்தை மாற்றிக் கொண்டு தேசிய எழுச்சியாக மாறியது” என 1857இல் நடைபெற்ற பெரும் கிளர்ச்சியை பற்றி குறிப்பிடுபவர் யார்?
கர்னல் மல்லீசன்
- 1857ல் பெருங் கிளர்ச்சி யை பெருமளவில் உண்மையான விடுதலை போராட்டம் என கூறியவர் யார்?
எட்வர்டு ஜான்சன்
- “இந்திய விடுதலைப் போர் (the war of Indian independence)”என்ற நூலின் ஆசிரியர் யார்?
சவார்க்கர்
- “இந்திய விடுதலைப் போர் (the war of Indian independence) “என்ற நூல் எப்போது வெளியானது?
1909
- எந்த ஆண்டு லெக்ஸ் லோசி என்ற சட்டம் இயற்றப்பட்டது?
1850
- 1857 பெரும் புரட்சி எங்கு தொடங்கியது?
கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பராக்பூர்
- எந்த மாதத்தில் பெருங் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிகளுக்கு பரவியது?
ஜூன் மாதம்
- ரோகில்கண்ட்டின் எந்த ஆட்சியாளர் தன்னை பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக்கொண்டார்?
கான் பகதூர் கான்
- ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் எந்த வயதில் அரியணை ஏற்றப்பட்டார்?
22 வயது
- கான்பூரில் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியவர் யார்?
நானாசாகிப்
- கான்பூர் யாரால் கைப்பற்றப்பட்டது?
கேப்டன் கேம்பல்
- பேகம் ஹஜ்ரத் மஹால் யாரை அவத்தின் அரசராக அறிவித்தார்?
தன் மகன் பிர்ஜிஸ் கத்ரா
- லக்னோ எப்போது ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது?
மார்ச் 1858
- தாந்தியா தோபே கைதுசெய்யப்பட்டு எப்போது கொல்லப்பட்டார்?
ஏப்ரல் 1858
- இரண்டாம் பகதூர் ஷா கைது செய்யப்பட்டு எங்கு நாடு கடத்தப்பட்டார்?
ரங்கூன்
- இரண்டாம் பகதூர்ஷா எப்போது இறந்தார் ?
நவம்பர் 1862
- இரண்டாம் பகதூர் ஷா தனது எத்தனையாவது வயதில் மரணமடைந்தார்?
87
- அலகாபாத்தில் எப்போது அரசு தர்பார் கூட்டப்பட்டது ?
நவம்பர் 1 1858
- விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் யாரால் வாசிக்கப்பட்டது ?
கானிங் பிரபு
- இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கானிங் பிரபு
- இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?
கானிங் பிரபு
11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேய ஆட்சிக்கு தொடக்ககால எதிர்ப்புகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services