TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்ற எந்த போர் முக்கிய காரணமாகும்?
பக்சார் போர்
- அவத்தை ஷா ஆலமிடம் ஒப்படைத்த ஆளுநர் யார்?
வான்சிடார்ட்
- பேரரசர் இரண்டாம் ஷா ஆலம் வங்காளம் பீகார் ஒரிசா பகுதிகளில் வருவாயில் இருந்து ஆண்டுக்கு எவ்வளவு பெறப்போவதாக அறிவிக்கப்பட்டது?
26 லட்சம் ரூபாய்
- வரி வசூலிப்பதும் குடிமக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் யாருடைய கடமை?
திவான்
- இராணுவ செயல்பாடுகளும் ,குற்றவியல் நீதி வழங்குதலும் யாருடைய கடமை?
நசீம்
- வங்காளத்தில் எந்த ஆண்டு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது?
1770
- எந்த ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாக தலைவரே ஆளுநர் ஆவார்?
1772
- எந்த சட்டத்தின் மூலம் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டார்?
ஒழுங்குமுறைச் சட்டம், 1773
- கவர்னர் ஜெனரல் எதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனர் மன்றம்
- எந்த சட்டத்தின் மூலம் கவர்னர் ஜெனரல் பதவி இந்தியாவின் கவர்னர் ஜெனரல் என்ன நிலை ஏற்றம் பெற்றது?
1833 பட்டய சட்டம்
- இந்த ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கு பின் இந்திய அரசின் பொறுப்பை கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து இங்கிலாந்து அரசு நேரடியாக எடுத்துக் கொண்டது?
1857
- எந்த ஆண்டு விக்டோரியா ராணி யாரின் பிரகடனம் வெளியிடப்பட்டது ?
1858
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்ட முதல் வைசிராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்?
கானிங்
- எந்த சட்டத்தின்படி கம்பெனி ஊழியர்களின் வரவு செலவு கணக்கு பற்றி இயக்குனர் குழு பிரிட்டிஷ் கருவூலத்திற்கு தெரியப்படுத்துவது சட்டரீதியாக கடமையாக்கப்பட்டது?
ஒழுங்குமுறை சட்டம் 1773
- வருவாய் வாரியமாக செயல்பட்ட குழுவில் இருந்தவர்கள் யார்?
ஆளுநர்,தலைமைத் தளபதி இரு ஆலோசகர் கொண்ட குழு
- எந்த ஆண்டு சட்டம் ராணுவம் மற்றும் குடிமை அமைப்புகளை தனித்தனியாக பிரித்தது?
பிட் இந்திய சட்டம், 1784
- காரன்வாலிஸ் வங்காளம் ,பீகார் ,ஒரிசா பகுதிகளில் ஜமீன்தார்கள் உடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு முறை எவ்வாறு அறியப்படுகிறது?
நிலையான நிலவரி முறை
- நிலத்தை அளவிட்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜமீன்தாரும் அரசுக்கு வழங்க வேண்டிய வருவாயை நிர்ணயம் செய்வதற்கு பெயர் என்ன?
சாசுவதம்
- சாசுவதம் நிர்ணயம் வங்காளம் ,பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளுக்கு எப்போது நிரந்தரம் ஆக்கப்பட்டது?
1793
- சென்னை மாகாணத்தின் நில வருவாய் வரலாற்றின் தொடக்க காலம் எது ?
19ஆம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு
- செங்கல்பட்டு, சேலம் ,திண்டுக்கல் மாவட்டங்கள் என்னவாக பிரிக்கப்பட்டு அதிக தொகை கேட்போருக்கு வழங்கப்பட்டது?
மிட்டாக்கள்
- யாருடைய காலத்தில் மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது?
வில்லியம் பெண்டிங்
- எப்போது மகல்வாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது?
1833
- எந்த முறைப்படி நில வருவாய்க்கான ஒப்பந்தம் நிலத்தின் உரிமையாளரோடு மேற்கொள்ளப்பட்டது?
மகல்வாரி முறை
- கிராம குத்தகை முறையில் பழைய வரிவசூல் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிராமமும் எத்தனை ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை நிர்ணயம் செய்யப்பட்டது?
3 ஆண்டுகள்
- மிராசுதார் முறை நிலவிவந்த மாவட்டங்களில் நிலவரி வசூலிக்கும் பொறுப்பு யாரிடம் கொடுக்கப்பட்டது?
மிராசுதாரர்கள்
- மிராசுதாரர்கள் இல்லாத பகுதிகளில் யாரிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது?
கிராம தலைவர்கள்
- இரயத்துவாரி முறை யாரால் உருவாக்கப்பட்டது ?
ஆளுநர் தாமஸ் மன்றோ
- ரயத் என்பது எந்த மொழி சொல்?
ரைய்யா என்ற அரபு வார்த்தையின் ஆங்கில திரிபு
- ரைய்யா என்ற அரபு வார்த்தையின் பொருள் என்ன ?
வேளாண் நிலத்தின் உரிமையாளர், அதன் வரிகளை செலுத்துபவர்
- தாமஸ் மன்றோ எப்போது மதராஸ் வந்தடைந்தார்?
1780
- எத்தனை வருடங்கள் தாமஸ் மன்றோ ஒரு படை வீரராக மைசூர் போரில் பங்கேற்றார்?
முதல் 12 வருடங்கள்
- தாமஸ் மன்றோ பாரமஹால் பகுதியில் (சேலம் மாவட்டம்) எந்த காலகட்டத்தில் பணியில் இருந்தார்?
1792-1799
- தாமஸ் மன்றோ கன்னட பகுதிகளில் எந்த காலகட்டத்தில் பணியில் இருந்தார்?
1799-1800
- தாமஸ் மன்றோ எந்த பகுதிகளுக்கு ஆட்சியராக பணிபுரிந்தார்?
கடப்பா,கர்நூல் ,சித்தூர்,அனந்தபூர்
- மன்றோ எந்த ஆண்டு மெட்ராஸ் மாகாணத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றார் ?
1820
- தாமஸ் மன்றோ மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநராக எத்தனை வருடங்கள் பணியாற்றினார் ?
7 வருடங்கள்
- தாமஸ் மன்றோ ரயத்துவாரி முறையை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?
1822
- தாமஸ் மன்றோ எப்போது இறந்தார்?
ஜூலை 1827
- தாமஸ் மன்றோ எங்கு பிறந்தார் ?
கர்னூலில் உள்ள பட்டிக்கொண்டா காலரா நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
- எந்த ஆண்டு தாமஸ் மன்றோ சிலை சென்னையில் நிறுவப்பட்டது?
1839
- ரயத்துவாரி முறையில் வருவாய் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது?
30 வருடங்கள்
- எந்த முறை நிலத்தில் தனி உடமையை அறிமுகப்படுத்தியது?
இரயத்துவாரி முறை
- துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார் ?
வெல்லஸ்லி
- வெல்லஸ்லியின் ஆட்சிக்காலம் என்ன?
1798- 1805
- கிழக்கிந்திய கம்பெனியாரின் தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் அமையப்பெற்றிருக்கும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?
மாகாணம்
- வாரிசுரிமை இழப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
டல்ஹவுசி
- வாரிசுரிமை இழப்பு கொள்கையின் கீழ் முதலில் வீழ்ந்த அரசு எது?
சதாரா
- சதாராவின் மன்னரான ஷாஜி எப்போது இறந்தார்?
1848
- ஜான்சியின் அரசர் கங்காதர் ராவ் எப்போது இறந்தார் ?
நவம்பர் 1853
- ரகுஜி போன்ஸ்லே எப்போது மறைந்தார்?
1853
- மராத்தியர்களின் கடைசி பேஷ்வா எப்போது காலமானார்?
1851
- ஹேஸ்டிங்ஸ் எப்போது கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார்?
1813
- எந்த கவர்னர் ஜெனரல் முகலாய முத்திரையை (மொய்ரா) பரிவர்த்தனைகளில் தவிர்த்தார்?
ஹேஸ்டிங்ஸ்
- கம்பெனியின் உடமைகள் மீது முகலாய மன்னர் இரண்டாம் அக்பர் செலுத்தி வந்த ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரை தான் சந்திக்க முடியாது எனக் கூறியவர் யார்?
ஹேஸ்டிங்ஸ்
- எந்த ஆண்டு மைசூர் அரசின் நிதி நிர்வாக முறைகேட்டில் அரசர் ஈடுபட்டார் என்ற காரணத்தை முன்வைத்து கிளர்ச்சி ஏற்பட்டது?
1830
- கிளர்ச்சிக்குப் பின் மைசூர் அரசின் நிர்வாகப் பொறுப்பை யாரிடம் வில்லியம் பெண்டிங் ஒப்படைத்தார்?
மார்க் கப்பன்
- யாருக்கிடையே மகாராஜ்பூர் போர் ஏற்பட்டது ?
குவாலியர் அரசு &எல்லன்பரோ
- நீதிபதியும் கிழக்கிந்திய சிந்தனை மரபை ஏற்றவருமான வில்லியம் ஜோன்சின் உதவியினைப் பெற்று கம்பெனி நிர்வாகத்தை கட்டமைத்தவர் யார் ?
காரன்வாலிஸ்
- கிளைவ் கொண்டுவந்த இரட்டை ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டு வந்தவர் யார்?
காரன் வாலிஸ்
- சதர் திவானி அதாலத்தும்,சதர் நிஜாமத் அதாலத்தும் எங்கு அமையப்பெற்றது?
கல்கத்தா
- கல்கத்தா நீதிமன்றங்களின் கீழ் எங்கு நான்கு பிராந்திய முறையிட்டு நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டன?
கல்கத்தா ,மூர்ஷிதாபாத்,பாட்னா,தக்காணம்
- குடிமைப் பணிகளின் சீர்திருத்தம் யாருடைய தலையாய பங்களிப்பாகும்?
காரன் வாலிஸ்
- குடிமைப் பணிகளுக்கு இந்தியர்கள் பணியாற்ற தகுதியற்றவர்கள் என்று கருதியதால் அவர்களை பணிக்கு அமர்த்த மறுத்தவர் யார்?
காரன் வாலிஸ்
- ஒவ்வொரு மாவட்டமும் காவல் நிலையமாக பிரிக்கப்பட்டது, அது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தானாக்கள்
- ஒவ்வொரு தானாவும் இந்தியர் ஒருவரால் வகிக்கப்பட்ட எந்த பதவியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது?
தரோகா
- கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் எந்த ஆண்டு கல்லூரி தொடங்கப்பட்டது?
1800
- கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் குடிமை பணியாளர்களுக்கு எத்தனை ஆண்டு கால பயிற்சி வழங்கப்பட்டது ?
மூன்று வருடம்
- கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் துவங்கப்பட்ட கல்லூரி பின்னர் என்னவாக உருவெடுத்தது?
கிழக்கிந்திய பள்ளி
- கிழக்கிந்திய கல்லூரி 1806ல் எங்கு துவங்கப்பட்டது ?
இங்கிலாந்து
- வில்லியம் கோட்டை கல்லூரியின் அடியொற்றி தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்?
எல்லிஸ்
- தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரி சென்னையில் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
1812
- எங்கு தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்தோடு தொடர்பில்லாத சுதந்திரமான தனி மொழி குடும்பத்தைச் சேர்ந்தவை எனும் கருத்தாக்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்டது?
தூய ஜார்ஜ் கோட்டை கல்லூரி
- பிரிட்டிஷார் கல்விக்கு ஆற்றிய முதல் தொண்டு எது?
மௌல்வி ஒருவரின் துணையோடு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு மதராசாவை உருவாக்கியது.
- வாரணாசியில் ஒரு சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர் யார்?
காரன்வாலிஸ்
- காரன்வாலிஸ் எப்போது வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவினார்?
1791
- எந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டய சட்டத்தில் தெளிவான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது?
1813
- யார் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற பின் கிறிஸ்தவ சமய தொண்டாற்றுவோர் மூலமாக தாய்மொழிக் கல்வியின் வளர்ச்சியை ஊக்குவித்தார்?
ஹேஸ்டிங்ஸ்
- எந்த ஆண்டு பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது?
1799
- எந்த ஆண்டு வங்காள வார இதழ் சமாச்சார் தர்பன் துவங்கப்பட்டது? 1818
- இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எந்த ஆண்டு பட்டய சட்டம் வலியுறுத்தியது?
1833
- ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலானவர் யார்?
வில்லியம் பென்டிங்
- சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை அழித்தவர் யார்?
வில்லியம் பென்டிங்
- கல்கத்தா மருத்துவ கல்லூரியை வில்லியம் பென்டிங் எந்த ஆண்டு துவங்கினார்?
1835
- எந்த ஆண்டு பம்பாயில் கிராண்ட் மருத்துவ கல்லூரி நிறுவப்பட்டது ?
1845
- எந்த ஆண்டு தாம்சன் பொறியியல் கல்லூரி நிறுவப்பட்டது?
1847
- தாம்சன் பொறியியல் கல்லூரி 1847 இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது?
ரூர்க்கி
- கல்கத்தாவில் எப்போது பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது?
1849
- எது ஒரு நாட்டின் இறையாண்மை அதிகாரத்தை மையமாகக் கொண்டு சகல அதிகாரங்களும் சலுகைகளும் உள்ள ஒரு வணிக நிறுவனத்தையோ பல்கலைக்கழகத்தையோ நகரத்தையோ உருவாக்க வழங்கப்படும் சட்டமாகும்?
பட்டயம்
- கிழக்கிந்திய கம்பெனி, மகாராணி எலிசபெத் எந்த ஆண்டு வழங்கிய பட்டத்தின் மூலம் துவங்கப்பட்டது?
1600
- எந்த ஆண்டு வழங்கப்பட்ட பட்டய சட்டமே கடைசியானது?
1853
- மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக எந்த ஆண்டு இந்தியாவை வந்தடைந்தார்?
1835
- எந்த ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது?
1857
- மெக்காலேயின் கொள்கையை மாற்றி தாய் மொழியிலும் கல்வி நிலையங்கள் உருவாவதை ஆதரித்தவர் யார்?
டல்ஹௌசி
- பிண்டாரிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1811-1818
- தக்கர்கள் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து எதற்கு இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஆவார்கள் ?
தில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடைப்பட்ட பகுதிகள்
- தக்கர்களை அழிக்க வில்லியம் பெண்டிங் யாரை நியமித்தார் ?
வில்லியம் ஸ்லீமன்
- சதி ஒழிப்பு சட்டத்தை இயற்றியவர் யார்?
வில்லியம் பெண்டிங்
- சதி ஒழிப்பு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1829
- தந்தி போக்குவரத்து இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது?
1854
- பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைந்தது?
1853
- ஹௌராவிற்கும் ராணிகஞ்சிற்கும் இடையே எந்த ஆண்டு இருப்புப்பாதை அமைந்தது?
1854-55
- தென்னிந்தியாவின் முதல் இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1856
- தென்னிந்தியாவில் 1856 இல் எவற்றுக்கு இடையே இருப்பு பாதை அமைக்கப்பட்டது?
மதராஸ் மற்றும் அரக்கோணம்
- எந்த ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது ?
1869
- கொள்ளிடத்தின் குறுக்கே 1836 அணையை கட்டியவர் யார்?
ஆர்தர் காட்டன்
- கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
1853
- யமுனா கால்வாய் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
1830
- கங்கை கால்வாய் எந்த ஆண்டு நீட்டிக்கப்பட்டது?
1857
- எந்த ஆண்டு பஞ்சாப் பகுதியில் பாரி இடைத்துறை கால்வாய் தோன்டும் பணி நடைபெற்றது?
1856
- எந்தப் பழங்குடி இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி இன மக்களாக திகழ்கிறார்கள்?
சந்தால் இன மக்கள்
- எந்த ஆண்டு இந்திய வனசட்டம் பிறப்பிக்கப்பட்டது ?
1865
- எந்த ஆண்டு குற்றப் பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டது?
1871
- “கவலையும் ,இறப்பும் எங்கு எங்கும் நிறைந்து சென்னை மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பசியால் செத்து மடிகிறார்கள்” என கூறியவர் யார் ?
பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் அபே டூபாய்
- “வணிக வரலாற்றில் இதற்கு சமமான ஒரு துயரம் நிகழ்ந்தது இல்லை பருத்தி நெசவாளர்களின் எலும்பு இந்தியாவின் கங்கை சமவெளி பரப்புகளை வெளுக்க செய்கின்றன” என கூறியவர் யார்?
கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங்
- பிரிட்டிஷ் இந்தியாவின் வரவு செலவு கணக்கில் இராணுவ மற்றும் குடிமை நிர்வாக செலவுகள் எத்தனை சதவீதமாக இருந்தது ?
80 சதவீதம்
- சித்ரவதைச் சட்டம் எந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டது?
1858
- தலையிடா கொள்கையை கடைப்பிடிப்பதாக எந்த ஆண்டு பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது?
1833
- தாது வருஷப் பஞ்சத்தின் காலம் என்ன?
1876-78
- கம்பெனி அரசு எந்த ஆண்டு இந்தியாவில் அடிமை முறையை ஒழித்துப் பின் ஒப்பந்தக் கூலி முறையை அறிமுகப்படுத்தியது?
1843
- எந்த ஆண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் முதல்முறையாக தஞ்சாவூர் பகுதியிலிருந்து இலங்கையில் அமையப்பெற்ற பற்றி காப்பி தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்?
1828
- “வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சியும் (poverty and unbritish rule in India)” என்ற நூலை எழுதியவர் யார்?
தாதாபாய் நௌரோஜி
- “கஜினி முகமதுவின் கொள்ளை 18 முறையோடு நின்றுவிட பிரிட்டிஷாரின் கொள்ளையோ முடிவில்லாமல் தொடர்கிறது” என கூறியவர் யார் ?
தாதாபாய் நவரோஜி
11TH HISTORY STUDY NOTES | ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் | TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services