- சங்க காலத்தில் தமிழகம் எத்தனை வகை நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?
5 :குறிஞ்சி, முல்லை ,மருதம், நெய்தல், பாலை
- “மாயோன் மேய காடுறை உலகமும் ,சேயோன் மேய மைவரை உலகமும்..” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
தொல்காப்பியம்
- தொல்காப்பியர் எந்த நிலத்தைத் தவிர மற்ற நால்வகை நிலத்திற்குரிய தெய்வங்களை குறிப்பிட்டுள்ளார்?
பாலை நிலம்
- பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை தெய்வமாக வழிபடுகின்றனர் ?
கொற்றவை
- குறிஞ்சி நிலக் கடவுள் யார் ?
சேயோன்
- சேயோன் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
முருகன் அல்லது வேலன்
- குறிஞ்சி நிலப் பகுதிகளில் வேலன் வெறியாட்டு விழா நடைபெற்ற செய்திகளை எந்த நூல்கள் குறிப்பிடுகின்றன?
திருமுருகாற்றுப்படை ,குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறுநூறு ,பட்டினப்பாலை
- வேலன் வெறியாட்டு விழா நடைபெறும் இடம் எவ்வாறு அழைக்கப்படும்?
வெறியாடுகளம்
- வேலன் வெறியாட்டு விழாவின் போது சேவல் கொடி நடப்பட்டிருக்கும் பல வகையான நறுமண புகைகள் எழுப்பப்படும் ,பலவகையான இசைக்கருவிகள் இசைக்கப்படும் என இவ்விழாவை பற்றி கூறும் நூல் எது?
பரிபாடல்
- வேலன் வெறியாட்டு விழாவின்போது குறிஞ்சி நில மக்கள் என்ன பறை இசைக்க நடனம் ஆடுபவர் ?
தொண்டகப்பறை
- தொண்டகப்பறை இசைக்க நடனமாடுவது பின்னர் எவ்வாறு அழைக்கப்பட்டது?
குன்றக் குரவைக் கூத்து
- மலையும் மலை சார்ந்த பகுதியும் என்ன வகை நிலம் ?
குறிஞ்சி நிலம்
- காடும் காடு சார்ந்த பகுதியும் என்ன வகை நிலம் ?
முல்லை நிலம்
- முல்லை நிலக் கடவுள் யார்?
மாயோன்
- முல்லை நில மக்களின் முக்கிய தொழில் எது?
கால்நடை வளர்ப்பு
- முல்லை நில மக்கள் பால் சுரக்கும் மரமான வேப்ப மரத்தை தாய் தெய்வமாக உருவகித்து வழிபட்டதை எந்த நூல் கூறுகிறது?
அகநானூறு
- முல்லை நில மக்களின் கால்நடைகளை எயினர்களிடமிருந்தும் வேடர்களிடமிருந்தும் வழி தவறாமலும் காப்பவர் யார் ?
கருப்புசாமி
- கருப்பசாமி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மாயோன்,திருமால்
- “மாயோன் மேய காடுறை உலகம் ” என கூறும் நூல் ?
தொல்காப்பியம்
- ஆயர் குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் துன்பம் நேராமல் காக்கும்படி திருமாலை குரவைக் கூத்தாடி வழிபட்டனர் இந்த வழிபாடு எது?
ஆய்ச்சியர் குரவை
- மருத நிலத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய விழா எது?
இந்திர விழா
- இந்திரவிழா வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?
சாந்தி பெருவிழா, தீவகச் சாந்தி
- இந்திரவிழா நடைபெற்றமை பற்றி எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது ?
சிலப்பதிகாரத்தில் இந்திர விழாவூரெடுத்த காதை மற்றும் மணிமேகலையில் விழாவறை காதை, ஐங்குறுநூறு
- இந்திர விழா எத்தனை நாட்கள் நடைபெற்றது ?
28 நாட்கள்
- புகார் நகரில் மட்டுமல்லாமல் மதுரையிலும் இந்திர விழா நடை பெற்றதாக எந்த செப்பேடு தெரிவிக்கின்றது?
சின்னமனூர் செப்பேடு
- தொடிதோட்செம்பியனால் எடுக்கப்பட்ட காமன் விழாவினை இந்திர விழா ,விருந்தாட்டு விழா ஆகிய பெயர்களில் குறிப்பிடும் நூல் எது?
மணிமேகலை
- இந்திர விழாவில் என்ன போர்ப்பறை ஒலிக்க ஆடியும் பாடியும் குரவை நிகழ்த்துவர் ?
தண்ணும்மை
- வயலும் வயல் சார்ந்த பகுதியும் எந்த நிலம் ?
மருதம்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் எந்த திணை ?
நெய்தல்
- நெய்தல் நிலத்திற்குரிய கடவுள் யார்?
வருணன்
- நெய்தல் நில மக்களால் கொண்டாடப்படும் விழா எது?
முந்நீர் விழா ,நாவாய் விழா
- பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டியன் நெய்தல் விழாவை கொண்டாடிய செய்திகளையும், கரிகாலனின் முன்னோர் நாய் திருவிழா கொண்டாடிய செய்தியினையும் கூறும் நூல் எது?
புறநானூற்று உரை
- குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
பாலைநிலம்
- கொற்றம் என்றால் பொருள் என்ன?
வெற்றி
- பாலை நில மக்கள் எந்த தெய்வத்தை வழிபட்டனர் ?
கொற்றவை என்னும் பெண் தெய்வம்
- சிலப்பதிகாரத்தில் எந்த தெய்வம் ஏறப்பட்ட பெண்ணிற்கு கொற்றவையின் கோலம் புனையப்பட்டது?
சாலினி
- “மேலோர் விளையும் நூல்நெறிமாக்கள் பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டம்” எனக் குறிப்பிடும் நூல் எது?
நாடுகாண் காதை சிலப்பதிகாரம்
- மார்கழி மாதத்தில் பெண்கள் பாவை நோன்பு நோற்பது எவ்வாறு அழைக்கப்படும்?
மார்கழி நோன்பு
- திருப்பாவை நூலை இயற்றியவர் யார்?
ஆண்டாள்
- திருவெம்பாவை நூலை இயற்றியவர் யார் ?
மாணிக்கவாசகர்
- உழவர் பெருமக்கள் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக என்ன விழாவை கொண்டாடுவர்?
பொங்கல் விழா
- போகிப் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்கழி மாதத்தின் கடைசி நாள்
- “ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது ” எனக் கூறுபவர் யார்?
வள்ளுவர்
- ஆடி மாதத்தில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும் இது எவ்வாறு அழைக்கப்படும் ?
ஆடிப்பெருக்கு
- மாசி மாதத்தில் குரு சிம்ம ராசியில் இருக்கும்போது மக நட்சத்திரமும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாள் என்ன திருவிழாவாகக் கொண்டாடப்படும்?
மாசிமகம்
- எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசிமகம் மகாமகம் என அழைக்கப்படுகிறது?
12 ஆண்டுகள்
- தென்னகத்தின் கும்பமேளா என அழைக்கப்படுவது எது?
மகாமகம்
- சிவனை முழுமுதற்கடவுளாக வழங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுவர்?
சைவர்கள்
- மகாசிவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் எப்போது கொண்டாடப்படுகிறது?
மாசி மாதம்
- ஆண்டுதோறும் எந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது?
ஆவணி
- தீபத் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?
கார்த்திகை மாதம் முழுநிலவு நாள்
- திருவாதிரை திருவிழா என்பது ஆண்டு தோறும் எப்போது கொண்டாடப்படும் விழாவாகும் ?
மார்கழி மாத முழுநிலவு நாள்
- திருவாதிரை திருவிழா பற்றி பாடியுள்ளவர்கள் யார்?
மாணிக்கவாசகர் திருவாசகத்திலும்,,சம்பந்தர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் பாடியுள்ளனர்.
- திருவாதிரை அன்று சிவபெருமானுக்கு என்ன படைப்பர்?
களி
- சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகள் என்னென்ன?
பொற்சபை, வெள்ளி சபை ,ரத்தின சபை ,தாமிர சபை, சித்திர சபை
- சிவபெருமானுக்குரிய பொற் சபை எங்கு உள்ளது?
நடராஜர் கோயில் சிதம்பரம்
- சிவபெருமானுக்குரிய வெள்ளி சபை எங்கு உள்ளது?
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் -மதுரை
- சிவபெருமானுக்குரிய இரத்தின சபை எங்கு உள்ளது ?
வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடு
- சிவபெருமானுக்குரிய தாமிரசபை உள்ளது ?
நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி
- சிவபெருமானுக்குரிய சித்திரசபை எங்குள்ளது ?
குற்றாலநாதர் கோயில் குற்றாலம்
- திருமாலை முழுமுதல் கடவுளாக வணங்குபவர்கள் யார் ?
வைணவர்கள்
- மார்கழி மாதம் வளர்பிறை பதினோராம் நாள் என்ன விழா கொண்டாடப்படுகிறது ?
வைகுண்ட ஏகாதசி
- திருமாலின் பிறந்தநாளான ஆவணி மாதம் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழா எது?
திருவோணம்
- திருவோண விழாவைப் பற்றிய செய்திகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன?
மதுரைக் காஞ்சியிலும், தேவாரத்திலும் ,நாலாயிர திவ்விய பிரபந்தத்திலும் இடம்பெற்றுள்ளது
- ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை நாளில் அமாவாசைக்கு முதல் நாளில் கொண்டாடப்படும் பண்டிகை எது ?
தீபாவளி
- தீபாவளி என்றால் என்ன பொருள் ?
தீபங்களின் வரிசை
- நரகாசுரனை வதம் செய்தவர் யார்?
திருமால்
- வீரம் ,செல்வம், கல்வி ஆகியவற்றை தரும் முப்பெரும் கடவுளாக முறையே மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகியோரை போற்றி வணங்கும் விழா எது?
நவராத்திரி திருவிழா
- நவராத்திரி திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது?
புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் ஒன்பது நாட்களும்
- நவராத்திரிக்கு உரிய பத்தாம் நாள் விழாவாகக் எது கொண்டாடப்படுகிறது?
விஜயதசமி
- விஜயதசமி என்றால் என்ன பொருள் ?
வெற்றியைத் தருகின்ற நாள்
- மாரியம்மனுக்கானஸதலவிருட்சம் எது?
வேப்பமரம்
- ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பூர திருநாள் எந்த தெய்வத்திற்கு சிறப்புடையது?
அம்மன்
- தமிழ்க்கடவுளான முருகனை வணங்கும் விழா எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கந்த விரத விழா
- கந்த சஷ்டி விழா எப்போது கொண்டாடப்படுகிறது?
ஐப்பசி மாதம் வளர்பிறை ஆறாம் நாள்
- வைகாசி விசாகம் எப்போது கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதம் முழுநிலவு நாள்
- பங்குனி மாதத்தில் முழுநிலவு நாளில் கொண்டாடப்படும் விழா எது?
பங்குனி உத்தரம்
- பங்குனி உத்திரம் என்பது யாருக்குரிய விழா ?
முருகனின் திருமண நாள்
- ஆடி கார்த்திகை திருவிழா எங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது ?
திருத்தணி
- முருகனுக்குரிய அறுபடை வீடுகள் என்ன?
திருப்பரங்குன்றம் ,திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய், திருவாவினன்குடி(எ) பழனி ,திருவேரகம்(எ) சுவாமிமலை ,திருத்தணி அல்லது குன்றுதோறாடல்,பழமுதிர்ச்சோலை
- தேரில் பெரிய கயிறுகள் இணைக்கப்படும் அது எவ்வாறு அழைப்பர்?
வடம்
- வடத்தைப் பற்றி இழுத்து செல்வது எவ்வாறு அழைக்கப்படும்?
வடம் பிடித்தல்
- எங்குள்ள தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமைக்குரியது?
திருவாரூர் தியாகராஜப் பெருமான் கோயில் தேர்
- திருவாரூர் தேரின் உயரம் எவ்வளவு?
தொண்ணூத்தி ஆறு அடி உயரம்
- திருவாரூர் தேர் திருவிழா எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம்
- கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுவது எது?
வேளாங்கண்ணி
- இயேசு பெருமான் எங்கு பிறந்தார்?
இஸ்ரேல் நாட்டில் பெத்தலேகம் என்னும் ஊரில்
- எப்போது கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் மாதம் 25ஆம் நாள்
- இயேசு பெருமான் அடைந்த துன்பங்களையும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்தமையையும் நினைவு கூறும் நிகழ்வு எது?
புனித வெள்ளி
- இயேசு உயிர்த்தெழுந்த நாள் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது?
புனித ஞாயிறு
- இஸ்லாமிய நாட்காட்டியில் மாதங்களில் முதல் மாதம் ?
முஹர்ரம்
- இஸ்லாமிய நாட்காட்டி எதனை அடிப்படையாகக் கொண்டது ?
சந்திரன்
- ரமலான் பண்டிகை வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
ஈகைத் திருநாள், ஈத் பெருநாள்
- ஈத் என்ற அரபிச் சொல்லுக்கு என்ன பொருள்?
தடுத்து விடுவது
- இரமலான் நோன்பின் முதல் பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?
இறையருள் கிடைப்பதற்காக
- இரமலான் நோன்பின் இரண்டாவது பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?
இறைவனிடத்தில் மன்னிப்பை பெறுவதற்காக
- இரமலான் நோன்பின் மூன்றாவது பத்து நாள்கள் எதற்காக நோன்பு கடைப்பிடிக்கின்றனர் ?
நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக
- இஸ்லாமியர்களின் 12வது மாதமான துல்ஹஜ் மாதத்திலிருந்து வரும் பண்டிகை எது?
பக்ரீத் பண்டிகை
- ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
ஹாஜிக்கள்
- மகாவீரர் எப்போது எங்கு பிறந்தார்?
கி.மு 546 வைசாலி நாடு, குண்டாகிராமம்
- யாருடைய பிறந்தநாள் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது?
மகாவீரர்
- மகாவீரர் சமணத்தில் எத்தனையாவது தீர்த்தங்கரர் ?
24வது தீர்த்தங்கரர்
- சமண மதத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு?
இரண்டு: திகம்பரர்,சுவேதாம்பரர்கள்
- திசைகளையே ஆடையாக அணிபவர்கள் யார்?
திகம்பரர்கள்
- வெண்ணிற ஆடை அணிபவர்கள் யார்?
சுவேதாம்பரர்கள்
- புத்த பூர்ணிமா எப்போது கொண்டாடப்படுகிறது?
வைகாசி மாதம் முழுநிலவு நாள்
- புத்தர் எங்கு பிறந்தார் ?
நேபாள நாட்டில் கபிலவஸ்துவிலுள்ள லும்பினி என்னும் கிராமத்தில்
- புத்த பூர்ணிமா பற்றிய செய்தி எந்த சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது ?
மணிமேகலை
- குருநானக் எங்கு பிறந்தார் ?
லாகூர் அருகே உள்ள தால்வண்டி கிராமம்
- குருநானிஅ தனது எத்தனையாவது வயதில் ஞானம் பெற்றார் ?
முப்பதாவது வயது
- குருநானக்கின் அருளுரைகள் அடங்கிய புனித நூல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
ஆதிகிரந்தம்
11TH ETHICS STUDY NOTES |திருவிழாக்கள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services