- எந்த காப்பியம் கலைகளை அறுபத்து நான்கு என குறிப்பிட்டுள்ளது?
மணிமேகலை
- “ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை” எனக் கூறியவர் யார்?
கம்பர்
- மனிதனின் வாழ்விற்கு பயன்படும் கலைகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
இரண்டு: பொதுக் கலைகள் ,அழகுக்கலைகள்
- காட்சி இன்பம் ,கேள்வி இன்பம் தருவன எது?
அழகு கலைகள்
- அழகுக் கலைகள் எத்தனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கட்டடக்கலை, சிற்பக்கலை ,ஓவியக்கலை ,இசைக்கலை ,காவியக்கலை
- அழகுக் கலைகளை ஐந்தாக வகைப்படுத்திய தமிழ் அறிஞர் யார்?
மயிலை சீனி வேங்கடசாமி
- “நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் ” என கூறியவர் யார் ?
இளங்கோவடிகள்
- எந்த நூற்றாண்டிற்கு முற்பட்ட கோயில்கள் எல்லாம் செங்கல் கட்டங்களாக இருந்தன?
கிபி ஆறாம் நூற்றாண்டு
- பெரிய பாறையை குடைந்து உருவாக்கப்பட்டவை எவ்வாறு அழைக்கப்படும்?
குடைவரை கோவில்கள்
- குடவரைக் கோவில்கள் என்ன அமைப்பை கொண்டிருந்தன?
கருவறை,முன் மண்டபம் ,தூண்கள்
- எங்கு எப்போது மகேந்திரவர்ம பல்லவன் முதல் குடைவரை கோவிலை அமைத்தான்?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மண்டகப்பட்டு, கிபி ஏழாம் நூற்றாண்டு
- முற்கால பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரை கோவில் எது?
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில்
- குடவரைக் கோவில்கள் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டன ?
மண்டபக் கோவில்கள் மற்றும் பாறைக் கோயில்கள்
- கருங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு என்ன பெயர் ?
கற்றளி
- கற்றளி அமைக்கும் முறை யாருடைய காலத்தில் ஏற்பட்டது ?
கிபி ஏழாம் நூற்றாண்டு,நரசிம்மவர்மன் காலம்
- எந்த ஊர்களில் காணப்படும் கற்றளிகள் காலத்தால் முந்தியவை ?
மாமல்லபுரம் ,காஞ்சிபுரம் ,பனமலை
- செங்கற்களால் ஆன பழைய கோயில்களை கற்றளிகளாக மாற்றியவர் யார்?
பிற்கால சோழர்கள்
- இந்தியக் கோயில் கட்டடக்கலை எத்தனை வகைப்படும்?
மூன்று : நாகரம் ,வேசரம், திராவிடம்
- சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களைக் கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும்?
நாகரம்
- வட இந்தியக் கட்டடக் கலையின் பெயர் என்ன ?
நாகரம்
- சிகரம் வட்டவடிவமாக இருப்பின் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும்?
வேசரம்
- இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பௌத்த சமய கட்டடக்கலை எது?
வேசரம்
- சிகரமானது எட்டுப்பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் எவ்வாறு அழைக்கப்படும் ?
திராவிடம்
- தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலையின் பெயர் என்ன ?
திராவிடம்
- எங்கு திராவிடக் கலை பரவியுள்ளது?
வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே குமரி வரை
- கோயில்களில் கற்பகிரகம் எனும் கருவறையின் மீது அமைக்கப்படும் பிரமிடு போன்ற கட்டடக்கலை எவ்வாறு அழைக்கப்படும் ?
விமானம்
- விமானத்தை பொதுவாக எவ்வாறு அழைப்பர் ?
ஷடங்க விமானம்
- ஷடங்க விமானம் என்பது எதனைக் குறிக்கும்?
ஆறு உறுப்புகள்
- ஷடங்க விமானம் குறிக்கும் ஆறு உறுப்புக்கள் என்னென்ன?
அதிட்டானம்-பாதம்,பித்தி-கால்,பிரஸ்தரம்-தோள்,கண்டம்-கழுத்து,சிகரம்-தலை,ஸ்தூபி-மகுடம்
- கோயில் உறுப்புகளில் மிக முக்கியமானதும் அழகுடையதுமாக விளங்குவது எது?
கோபுரம்
- கோயில்களில் கோபுரம் அமைத்தல் யாருடைய காலத்தில் தொடங்கியது?
பல்லவர் காலத்தில் தொடங்கி விஜயநகர மன்னர்கள் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது
- யாருடைய காலத்தில் கட்டப்பட்ட காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தான் முதல் முதலாக சிறு கோபுரம் அமைக்கப்பட்டது?
ராஜசிம்மன் காலம்
- யாருடைய காலத்தில் விமானங்களை சிறியனவாகவும் கோபுரங்களை பெரியனவாகவும் அமைத்தனர் ?
விஜயநகர மற்றும் நாயக்கர் காலம்
- யாருடைய ஆட்சிக்காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்களை அமைக்கத் தொடங்கினர்?
கிருஷ்ணதேவராயர்
- பல்லவர்கள் எதனைத் தலைநகராகக் கொண்டு தமிழகத்தை 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்?
காஞ்சிபுரம்
- பழமையான பல்லவர் காலத்து கோயில்கள் எங்கு காணப்படுகின்றன?
மண்டகப்பட்டு, பல்லாவரம் ,மாமண்டூர் ,வல்லம்,மகேந்திரவாடி ,சீயமங்கலம் ,தளவானூர், திருச்சி
- பல்லவர் காலத்து கோயில்களில் யாருடைய காலத்தைச் சேர்ந்த கோயில்கள் மிகவும் தொன்மையானவை ?
மகேந்திரவர்மன்
- எங்கு உள்ள குகைக்கோயிலில் வெளி முகப்பு முழுவதும் யாளியின் முகம் செதுக்கப்பட்டுள்ளது ?
சாளுவன்குப்பம்
- காஞ்சி கைலாசநாதர் கோவில் யாரால் கட்டப்பட்டது?
ராஜசிம்மன்
- எந்த இடங்களில் பாண்டியர்கால குடைவரைக் கோவில்களை காணலாம்?
பிள்ளையார்பட்டி ,மலையடிக்குறிச்சி ,ஆனைமலை ,திருப்பரங்குன்றம், குன்றக்குடி ,திருமயம், குடுமியான்மலை ,சித்தன்னவாசல், மகிபாலன்பட்டி ,பிரான்மலை ,அழகியபாண்டியபுரம், மூவரை வென்றான்
- எங்கு உள்ள வெட்டுவான் கோவில் பாண்டியரது ஒற்றைக் கற்றளிக்கு சான்றாகும்?
கழுகுமலை
- கழுகுமலையின் வெட்டுவான் கோவில் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தென்னகத்து எல்லோரா
- தமிழக கட்டடக் கலை வரலாற்றில் யாருடைய காலம் பொற்காலமாகும்?
பிற்கால சோழர்கள்
- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?
விஜயாலய சோழன்
- காவிரி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஏராளமான கற்கோயிலை கட்டியவர் யார்?
ஆதித்தசோழன்
- பிரம்மபுரீஸ்வரர் கோவில் யாரால் எழுப்பப்பட்டது?
பராந்தக சோழன்
- “தென்னகத்தின் மேரு” என அழைக்கப்படும் கோவில் எது?
தஞ்சை பெரிய கோவில்
- தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியவர் யார்?
ராஜராஜ சோழன்
- தஞ்சை பெரிய கோவிலின் உயரம் எவ்வளவு ?
216 அடி உயரம் 13 அடுக்குகள்
- தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்து அந்த இடத்தை இராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டவர் யார்?
ராஜராஜன்
- பெரிய கோயிலின் முதல் வாசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கேரளாந்தகன் திருவாயில்
- தஞ்சை பெரிய கோயிலின் இரண்டாம் வாசல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ராஜராஜன் திருவாசல்
- தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் உள்ள எண்கோண வடிவிலான சீக்கிரம் எவ்வளவு எடை கொண்டது?
80 டன்
- எந்த ஆண்டு தஞ்சை பெரிய கோவில் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது?
1987
- UNESCO என்பதன் விரிவாக்கம் என்ன?
The United Nations Educational Scientific And Cultural Organisation
- கங்கைகொண்ட சோழபுரத்தின் உயரம் எவ்வளவு?
170 அடி உயரம்
- கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியவர் யார்?
முதலாம் ராஜேந்திர சோழன்
- திருபுவனம் கம்பஹரேஸ்வரர் கோயிலை கட்டியவர் யார் ?
மூன்றாம் குலோத்துங்க சோழன்
- திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவிலின் உயரம் என்ன ?
126 அடி
- ராஜேந்திர சோழன் தனது எந்த படையெடுப்பு வெற்றியின் சின்னமாக கங்கைகொண்டசோழபுரம் கோவிலை கட்டினார்?
கங்கை படையெடுப்பு
- நாயக்கர் கால கட்டடக் கலைகளா எங்கு காணப்படுகின்றன ?
திருமலை நாயக்கர் மஹால் ,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆயிரங்கால் மண்டபம் ,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் ,திருச்சி மலை மீது கட்டப்பட்டுள்ள தாயுமானவர் கோயில் போன்றவை
- தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோயில்கள் என்னென்ன?
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ,திருவரங்கம் அரங்கநாதர் கோயில் ,சிதம்பரம் நடராஜர் கோயில் ,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ,திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ,ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்
- போரில் வீர மரணம் அடைந்த அல்லது மக்களுக்காக உயிர் துறந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி நட்டு வைத்து வழிபடும் கல் எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
நடுகல்
- நடுகல் வேறு எவ்வாறு அழைக்கப்படும்?
வீரக்கல் அல்லது நினைவுக்கல்
- காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சுதைச் சிற்பங்களை இந்திர விழாவில் கூடிய மக்கள் கண்டு மகிழ்ந்தனர் என்ற செய்தியை குறிப்பிடும் காப்பியம் எது ?
மணிமேகலை
- சிற்பக் கலைஞர்களை மண்ணீட்டாளர் என அழைக்கும் வழக்கம் இருந்ததை எந்த நூல் மூலம் அறியலாம்?
மணிமேகலை
- எந்த காலகட்டம் வரை தமிழகத்தில் பவுத்த சமண சமயங்கள் பரவியிருந்தன?
கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி பத்தாம் நூற்றாண்டு வரை
- “சுதை என்பது சுண்ணாம்பை நன்கு அரைத்து கரும்புச்சாறு, வெல்லச் சாறு, நெல்லிக்காய் சாறு முதலியவற்றைக் கலந்து அரைத்து பசை போல் செய்து அதைக்கொண்டு உருவங்கள் செய்வது என குறிப்பிடுபவர் யார் ?
அ.தட்சிணாமூர்த்தி
- இயற்கை உருவங்களையும் கற்பனை உருவங்களையும் வடிப்பது எவ்வாறு அழைக்கப்படும் ?
சிற்பக்கலை
- எவற்றால் சிற்பங்கள் வடிக்கப் படுகின்றன?
சுதை ,மரம், மெழுகு ,அரக்கு, தந்தம், உலோகம்
- சிற்பங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?
புடைப்புச் சிற்பங்கள்,தனிச்சிற்பங்கள்
- மரப்பலகை போன்றவற்றில் புடைப்பாக உருவத்தின் முன்புறம் மட்டும் தெரியும்படி அமைக்கப்படும் சிற்பம் எவ்வாறு அழைக்கப்படும்?
புடைப்புச் சிற்பம்
- ஒரு உருவத்தின் முன்புறமும் பின்புறமும் முழு வடிவமாக வடித்தல் எவ்வாறு அழைக்கப்படும்?
தனிச்சிற்பம்
- தமிழகத்தில் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலையை பயிற்றுவிக்கும் அரசு கல்லூரி எங்கு அமைந்துள்ளது ?
மாமல்லபுரம்
- சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள கடவுள் உருவங்கள் எதனால் செய்யப்பட்டவை?
மரம்
- பார்த்தசாரதி பெருமாள், காஞ்சி பாண்டவதூதப் பெருமாள் முதலிய உருவங்கள் எதனால் செய்யப்பட்டவை?
சுதை
- கல்லினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன?
பல்லவர்காலம்
- உலோகத்தினால் சிற்பம் அமைக்கும் முறை யாருடைய காலத்தில் பின்பற்றப்பட்டன ?
பிற்கால சோழர்
- தனிப்பட்ட ஒருவரின் உருவ அமைப்பை உள்ளது உள்ளவாறே அமைப்பது எவ்வாறு அழைக்கப்படும்?
பிரதிமைகள்
- பிரதிமை உருவங்களில் பழமையானது எது?
பல்லவ அரசர் உருவங்கள்
- உலோகங்களினால் பிரதமைகள் அமைக்கும் வழக்கம் யாருடைய காலத்தில் தோன்றியது?
சோழர் காலம்
- கோயில் சிற்பக் கலையின் தொடக்க காலம் என அழைக்கப்படுவது எது ?
பல்லவர்காலம்
- யாருடைய காலத்து கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காவலர்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன ?
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன்
- தமிழகத்தில் காணப்படும் முதல் கற்சிற்பங்கள் எவை?
பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கோயில்களில் உள்ள துவார பாலகர்கள்
- யாருடைய காலத்தில் கடவுள் போலவே அரசன் அரசி உருவங்களையும் உயரமாக செதுக்கும் வழக்கம் இருந்தது?
பல்லவர்காலம்
- நாமக்கலில் உள்ள மலைக் கோட்டையின் இருபுறமும் யாருடைய காலத்து குடைவரைக் கோவில்கள் காணப்படுகின்றன?
மகேந்திரவர்மன்
- உலகின் மிகப்பெரிய நந்தி எது ?
ஆந்திராவிலுள்ள அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லெபாஷி என்ற ஊரில் உள்ள நந்தி
- எந்த காலத்து சோழர்களின் சிற்பங்களில் அணிகலன்களும் அலங்காரங்களும் மிகுந்து காணப்பட்டன?
பிற்கால சோழர்கள்
- இந்தியாவில் உள்ள நந்தி சிற்பங்களில் இரண்டாவது பெரிய சிற்பம் எங்கு உள்ளது?
தஞ்சை பெரிய கோவில்
- யார் கட்டிய தாராசுரம் கோயிலில் நாயன்மார்களின் வாழ்க்கையை குறிக்கும் 90 சிற்பங்கள் உள்ளன ?
இரண்டாம் இராஜராஜன்
- சங்க காலத்திலும் உலோக சிற்பங்கள் இருந்திருக்கலாம் என்ற செய்தியை எந்த நூல் மூலம் அறியலாம் ?
மதுரைக்காஞ்சி, குறுந்தொகை ,பட்டினப்பாலை
- யாருடைய காலத்தில் செப்புத்திருமேனிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
விஜயாலயன், பராந்தகன், செம்பியன்மாதேவி, முதலாம் ராஜராஜன்
- சோழர்கால செப்புத் திருமேனிகளில் எந்த சிலை உலகப்புகழ் வாய்ந்தது?
நடராஜர் சிலை
- எந்த வினை துளியிலிருந்து “ஓவியம்” தோன்றியது?
ஒவ்வு
- ஒவ்வு என்பதற்கு என்ன பொருள் ?
ஒன்றை பற்று அல்லது ஒன்றைப் போலவே இருத்தல்
- தான் கண்ட காட்சியை அப்படியே வரைவது எது?
காட்சி ஓவியம்
- மனதில் கற்பனை செய்ததை வரைதல் எது ?
கற்பனை ஓவியம்
- ஓவியத்தை இலக்கியங்கள் எவ்வாறு பதிவுசெய்துள்ளன?
வட்டிகைச் செய்தி, சித்திரச் செய்தி
- எவற்றைக்கொண்டு ஓவியங்கள் எழுதப்பட்டன?
வளைந்த கோடு ,கோணக்கோடு, நேர்கோடு
- கோட்டோவியங்களுக்கு என்ன பெயர்?
புனையா ஓவியம்
- புனையா ஓவியம் வேறு எவ்வாறு அழைக்கப்படும் ?
வரிவடிவ ஓவியம்
- மடலேறுதலின்போது பனை ஓலையில் வரைந்த கோடுகளால் ஆன ஓவியம் எவ்வாறு அழைக்கப்படும் ?
வரிவடிவ ஓவியம்
- எந்த நூலில் முதன்முதலாக வரிவடிவ ஓவியம் பற்றிய செய்தி கிடைக்கின்றது?
நெடுநல்வாடை
- புனையா ஓவியத்தில் பலவித வண்ணங்களை புனைந்து அமைக்கும் ஓவியம் எவ்வாறு அழைக்கப்படும் ?
முழு ஓவியம்
- ஓவியம் வரைவோர் எவ்வாறு அழைக்கப்படுபவர்?
ஓவியம் ,கண்ணுள் வினைஞர், கைவினைஞர், ஓவியவல்லோன், ஓவியப்புலவன்
- மக்கள் கூட்டத்தை காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பிரதிமை
- தெய்வ வடிவங்களைக் காட்டும் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
படிமை
- எழுத்து என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
ஓவியம்
- பண்டைய தமிழ் மன்னர்கள் ஓவியம் தீட்டுவதற்காக தங்கள் அரண்மனைகளிலும் கோயில்களிலும் என்ன தனிப்பகுதியை அமைத்தனர் ?
ஓவியமாடம்
- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அரண்மனையில் சித்திர மண்டபம் இருந்தது குறிப்பிடும் நூல் எது?
நெடுநல்வாடை நக்கீரர்
- சித்திரகாரப்புலி என அழைக்கப்பட்டவர் யார் ?
மகேந்திரவர்மன்
- தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை?
கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் காலத்து ஓவியங்கள்
- எந்த மன்னன் தனது சித்திர மாடத்திலிருந்தபொழுது உயிர்துறந்தமையால் அவர் “பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்” என அழைக்கப்பட்டார்?
பாண்டியன் நன்மாறன்
- திருப்பரங்குன்றம் கோயில் மண்டபத்தில் எழுதொழில் அம்பலம் என்ற பெயரில் ஓவியச் சாலை இருந்த செய்தி எந்த நூல் மூலம் அறியப்படுகிறது?
பரிபாடல்
- உதயணனின் பள்ளியறைச் சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்த காட்சி எந்த நூலில் காணப்படுகிறது?
பெருங்கதை
- புத்தக தவச்சாலைகள் மற்றும் கோவலனின் தந்தை மாசாத்துவான் தவமியற்றிய சாலைகளிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த செய்தியை எந்த நூல் கூறுகின்றது?
மணிமேகலை
- படம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து தோன்றியது?
பாடம்
- பாடம் என்பதற்கு என்ன பொருள்?
துணி
- பழங்காலத்தில் துணிகளில் ஓவியங்களை வரைந்தார்கள் அதற்கு என்ன பெயர் ?
சித்திரப்படாம் ,சித்திரத்திரை
- சித்திரம் எழுதும் கோலுக்கு என்ன பெயர் ?
துகிலிகை
- எந்த நூலில் சீத்தலைச்சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்தில் உவவனம் எனும் சோலையின் காட்சி சித்திரப்படாம் போன்று அழகுடன் காணப்பட்டதாக கூறுகிறார்?
மணிமேகலை
- இளங்கோவடிகள் ஓவியம் வரையப்பட்ட துணியை எவ்வாறு அழைக்கின்றார்?
ஓவிய எழினி
- பலகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வட்டிகைப்பலகை
- இசைக்கு அடிப்படையானது எது?
ஓசை
- “ஏழிசையேழ் நரம்பின் ஓசையை” எனக் குறிப்பிடும் நூல் எது?
திருப்பதிகம்
- ஏழு இசைகள் என்னென்ன ?
குரல், துத்தம், கைக்கிளை, உழை ,இளி ,விளரி ,தாரம்
- குரல் இசை எதனால் தோன்றுகிறது?
மிடற்று
- துத்தம் இசை எதனால் தோன்றுகிறது?
நாக்கு
- கைக்கிளை இசை எதனால் தோன்றுகிறது?
அண்ணம்
- உழை இசை எதனால் தோன்றுகிறது?
சிரம்
- இளி இசை எதனால் தோன்றுகிறது?
நெற்றி
- விளரி இசை எதனால் தோன்றுகிறது?
நெஞ்சு
- தாரம் இசை எதனால் தோன்றுகிறது?
மூக்கு
- படிப்படியாக மேலே உயர்ந்து செல்லும் இசைநிரலை ,ஆரோசை எனவும் தாழ்ந்து செல்லும் இசைநிரலை அமரோசை என்றும் கூறுபவர் யார்?
சேக்கிழார்
- ஆரோசை,அமரோசை ஆகியவற்றை இக்காலத்தில் எவ்வாறு அழைப்பர்?
ஆரோகணம்,அவரோகணம்
- இசைக்கலைஞர்கள் துளைக்கருவிகளில் தொன்மையானது எது?
குழல்
- புல் வகையாகிய மூங்கிலில் செய்யப்பட்டதால் குழல் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டது?
வேய்ங்குழல் மற்றும் புல்லாங்குழல்
- வேய்ங்குழல் எந்த நிலத்தவரின் முதன்மை இசைக் கருவியாக விளங்கியது?
முல்லை
- வில் பலவற்றை ஒன்றாக இணைத்து அமைக்கப்பட்ட நரம்புக்கருவியின் பெயர் என்ன?
வில்யாழ்
- ஆநிரைகளை மேய்க்கும் ஒருவன் குமிழமரக் கொம்புகளூ வில்லாக வளைத்து அதில் மரல்நாரினால் கட்டி வில்யாழ் அமைத்து குறிஞ்சி பண்ணை வாசித்தான் என்ற செய்தி எந்த நூலில் குறிப்பிடப்படுகிறது ?
பெரும்பாணாற்றுப்படை
- வில்யாழை அடிப்படையாகக் கொண்டு என்ன அமைக்கப்பெற்றன?
பேரியாழ் ,மகரயாழ், சகோடயாழ் ,செங்கோட்டியாழ் ஆகியவையும் பெருங்கலம் என்னும் ஆதியாழும்
- தொல்காப்பியர் கூறும் தோல் இசைககருவிகளின் ஒன்று எது?
பறை
- தோல் கருவிகள் எத்தனை உள்ளதாக அடியார்க்குநல்லார் உரை கூறுகிறது?
30
- 30 தோல் கருவிகளுள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட தோல் கருவி எது?
மத்தளம்
- மத்தளத்தை வாசிக்கும்போது இடையிடையே வாசிக்க பயன்படுத்தப்படும் இடை கருவி எது?
சலிகை
- எதன் மூலம் முதுநாரை ,முதுகுருகு ஆகிய நூல்கள் இருந்தன என்பதை அறியமுடிகிறது?
இறையனார் களவியல் உரை
- பெருநாரை,பெருங்குருகு,பஞ்சபாரதீயம்,இந்திரகாளியம் முதலான நூல்களைப் பற்றி குறிப்பிடுபவர் யார்?
அடியார்க்கு நல்லார்
- இசை நுணுக்கம் எனும் நூல் எந்த பாண்டிய இளவரசனால் ஏற்றப்பட்டது?
சயந்தன்
- பஞ்சமரபு எனும் இசை தொடர்பான நூலை இயற்றியவர் யார் ?
அறிவனார்
- தமிழகத்தில் எங்கு இசை தூண்கள் காணப்படுகின்றன ?
திருநெல்வேலி ,ஆழ்வார்திருநகரி ,செண்பகநல்லூர் ,மதுரை ,தாடிக்கொம்பு, அழகர்கோயில் ,கிருஷ்ணாபுரம், தென்காசி ,குற்றாலம், சுசீந்தரம், களக்காடு
- ஆண் இசைக்கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
பாணர்
- பெண் இசைக் கலைஞர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
பாடினி
- யாழ்ப்பாணர் பற்றிய செய்திகள் மிகுதியாக எந்த இலக்கியங்களில் உள்ளன ?
சிறுபாணாற்றுப்படை ,பெரும்பாணாற்றுப்படை
- மண்டை எனப்படும் ஓட்டினை கையில் ஏந்தி பாடியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மண்டைப்பாணர்
- குறிஞ்சி நிலத்திற்கு உரிய பண் எது?
குறிஞ்சிப்பண்
- முல்லை நிலத்திற்குரிய பண் எது ?
சாதாரி
- பாலை நிலத்துக்குரிய பண் எது?
பஞ்சுரப்பண்
- நெய்தலுக்கு உரிய பண் எது?
செவ்வழிப்பண்
- மருதத்திற்குரிய பண் எது?
மருதப்பண்
- மலைச்சாரல் பகுதியில் விளைந்திருந்த திணை பயிரை உண்ண வந்த காட்டு யானை அப்பயிரை காவல் காத்த பெண் இசைத்த குறிஞ்சி பண்ணை கேட்டு பயிரை உண்ணாமல் இசையில் மெய்மறந்து நின்றதை கூறும் நூல் எது?
அகநானூறு
- போரில் புண்பட்ட வீரரை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப்பண் பாடப்பட்டதாக எந்த நூல் கூறுகிறது?
புறநானூறு
- யாழ் என்னும் இசைக்கருவி கலைஞர்கள் மருதப்பண்ணைப் பாடிப் பொழுது விடிந்ததாக எந்த நூல் குறிப்பிடுகிறது ?
மதுரைகாஞ்சி
- வண்டின் ஓசை போல் இருப்பது என்ன பண்?
காமரம்
- வெறியாட்டப்பாடல் ,வள்ளைப்பாடல் முதலிய இசை பாடல்கள் எந்த நூலில் உள்ளன ?
பரிபாடல்
- இசையின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இசை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
முதல் நடை, வாரம்,கூடை,திரள்
- மந்த நடையாகத் தாழ்ந்து செல்லும் முறையில் இசைக்கப்படுவது எது ?
முதல் நடை
- முடுகிச் செல்லும் விரைந்த நடை உடையது எது?
திரள்
- முதல்நடைக்கும் திரளுக்கும் இடைப்பட்ட இசை நடையை உடையது எது?
வாரம்
- சொற்செறிவும் இசைச் செறிவும் உடையது எது?
கூடை
- “தம்ம்னையறியாத” என்னும் பதிகத்தைப் பாடியவர் யார்?
சுந்தரர்
- சுந்தரர் “தம்ம்னையறியாத” என்னும் பதிகத்தை எந்த பண்ணில் பாடினார்?
கொல்லிக் கௌவாணம்
- கொல்லிக் கௌவாணம்,கொல்லிப்பண் ஆகிய இவ்விரு பண்களும் நள்ளிரவில் பாடப்பட்டதாக கூறுபவர் யார்?
சேக்கிழார்
- குடுமியான்மலை கல்வெட்டு யாரால் பொறிக்கப்பட்டது?
முதலாம் மகேந்திரவர்மன்
- எந்த கல்வெட்டின் முடிவில் “எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய ” என்ற தொடர் உள்ளது ?
குடுமியான்மலை கல்வெட்டு
- எட்டிற்கும் ஏழிற்கும் இவையுரிய ” என்ற தொடர் எதைக் குறிக்கிறது?
சங்கீரணம்
- தேவாரங்களில் காணப்படாத சாளரப்பாணி என்ற பண் எதில் உள்ளது?
திருவிசைப்பா
- நடனக்கலை வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆடல் கலை ,கூத்துக்கலை
- வேலன் ஆடும் வெறிக் கூத்து ,வீரர்கள் ஆடும் கருங்கூத்து ,பெண்கள் ஆடும் வள்ளிக்கூத்து ,இளைய வீரனின் வெற்றியை பாராட்டி இருபாலரும் ஆடும் கழனிலை கூத்து போன்றவை கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
- சங்ககாலத்தில் கூத்துக் கலையை வளர்ப்பவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கூத்தர்கள்
- கூத்தர் இன பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
விறலி, ஆடுமகள், ஆடுகளமகள்
- கூத்தர் இன ஆண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கூத்தன்,ஆடுமகன்,ஆடுகளமகன்
- நடனம் கற்கும் பெண் தனது எத்தனை வயது வரை ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நடனக்கலை பயிற்சி பெற்றிருக்க வேண்டும் ?
தனது 7 வயது முதல் 12 வயது வரை
- நடனக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ?
தலைக்கோல் ஆசான்
- தலைக்கோல் ஆசான் எந்தக் கூத்துக்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் ?
வேத்தியல் ,பொதுவியல் என இருவகை கூத்துக்களிலும்
- அடியார்க்குநல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?
4 :சொக்கம் ,மெய்க் கூத்து ,அபிநயம், நாடகம்
- இசையுடன் கூடிய தூய நடனம் எது?
சொக்கம்
- இசையுடன் கூடிய அகம் சார்ந்த நடனம் எது ?
மெய்க்கூத்து
- இசையுடன் கலந்த பாடலுக்கு ஏற்ற நடனம் எது?
அபிநயம்
- இசையுடன் கதை தழுவி வரும் பாட்டிற்கான நடனம் எது ?
நாடகம்
- எல்லா வகை கூத்துக்களையும் குறிப்பது என அடியார்க்கு நல்லார் கூறுவது எது?
ஆடல்
- சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை ஆடல்கள் என்னென்ன ?
அல்லியம் ,கொடுகொட்டி, குடைக்கூத்து ,குடக்கூத்து, பாண்டரங்கம்,மல்லியம்,துடி,கடையம்,பேடு,மரக்கால்,பாவை
- சிலப்பதிகாரத்தில் கூறப்படும் 11 ஆடல்களையும் தெய்வங்களால் ஆடப்பெறுவதால் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
தெய்வவிருத்தி
- கூத்து எத்தனை வகைப்படும் இரண்டு?
அகக்கூத்து புறக்கூத்து
- இருவகை கூத்துக்களும் ஆடல் என கூறுபவர் யார் ?
அடியார்க்குநல்லார்
- புறக்கூத்தில் காட்டப்படும் முத்திரைகள் என்னென்ன?
பிண்டி,பிணையல்
- அகக்கூடத்தில் காட்டப்படும் முத்திரைகள் என்னென்ன?
எழிற்கை,தொழிற்கை
- ஒரு கையால் காட்டப்படும் முத்திரை எது?
பிண்டி
- பிண்டி எத்தனை வகையாக அமையும்?
24
- இரண்டு கைகளாலும் காட்டப்படும் முத்திரை எது?
பிணையல்
- பிணையல் முத்திரை எத்தனை வகையாக உள்ளது ?
13
- “நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து”, “வந்த முறையின் வழிமுறை வழாமல்” என கூறும் நூல் எது?
சிலப்பதிகாரம்
- கண்ணன் யானையின் தந்தத்தை ஒடித்ததை காட்டும் ஆடல் எது?
அல்லியம்
- சிவபெருமான் முப்புரத்தை எரித்த பொழுது வெற்றியில் கைகொட்டி ஆடிய ஆடல் எது?
கொடுகொட்டி
- முருகன் அவுணரை வென்றபோது ஆடிய ஆடல் எது?
குடைக்கூத்து
- கண்ணன் தன் பேரனான அநிருத்தனை அசுரனிடம் இருந்து மீட்பதற்காக குடத்தை வைத்துக் கொண்டு ஆடிய ஆடல் எது?
குடக்கூத்து
- சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் எது?
பாண்டரங்கம்
- கண்ணன் வாணன் என்னும் அசுரனுடன் போர் செய்ததை காட்டும் கூத்து எது? மல்லியம்
- சூரபத்மனை வென்ற பிறகு கடலினை மேடையாக கொண்டு முருகன் ஆடியதை கூறும் கூத்து எது?
துடி
- இந்திரன் மனைவி அயிராணி உழத்தி உருவத்தோடு ஆடியது எது?
கடையம்
- கடையம் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உழத்திக்கூத்து
- காமன் தன் மகனான அநிருத்தனை சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ எனும் நகரத்தில் பேடி உருவம் கொண்டு ஆடியது எது?
பேடு
- கொற்றவை தன்னை அழித்து பாம்பு,தேளாக வந்த அசுரனை கொல்வதற்காக ஆடிய ஆடல் எது ?
மரக்கால்
- அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல் எது?
பாவை
- வேத்தியல் கூத்து வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வசைக்கூத்து ,வரிக்கூத்து ,சாந்திக்கூத்து, இயல்புக்கூத்து ,ஆரியம்
- பொதுவியல் கூத்து வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
புகழ்க்கூத்து, வரிச்சாந்திக் கூத்து ,விநோதக்கூத்து ,தேசியக்கூத்து ,தமிழ்க்கூத்து
- பதினோரு வகையான ஆடல்களும் அவற்றின் உறுப்புகளும் பாடல்களும் எந்த நூலின் உரையில் கூறப்பட்டுள்ளன?
யாப்பருங்கலம்
- கூத்து பற்றிய நூல்கள் என்னென்ன?
பரதம், அகத்தியம் ,முறுவல் ,சயந்தம், குணநூல் ,செயிற்றியம் ,இசை நுணுக்கம் ,இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், கூத்தநூல்
- குரவைக் கூத்து யாரால் ஆடப்படுகிறது?
மகளிர்
- குரவைக் கூத்தில் எத்தனை பேர் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடுவர்?
7 முதல் 9 பேர்
- குரவைக் கூத்து எத்தனை வகைப்படும்?
இரண்டு;குன்றக்குரவை ,ஆய்ச்சியர் குரவை
- குறிஞ்சி நிலத்தில் வாழும் மகளிர் முருகனுக்கு ஆடும் ஆடல் எது?
குன்றக்குரவை
- முல்லை நிலத்தில் வாழும் மகளிர் ஆடும் ஆடல் எது?
ஆய்ச்சியர் குரவை
- எந்த நூலில் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி முதலாம் மகேந்திரவர்மன் குறிப்பிட்டுள்ளார் ?
மத்தவிலாசப் பிரகசனம்
- தில்லையில் உள்ள சிவபெருமான் கூத்தப்பெருமான் என யாரால் பாடப்பட்டார் ?
நாயன்மார்கள்
- பல்லவர் காலத்தில் நடன மாதர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
மாணிக்கத்தார்,கணிகையர்
- ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில் ஆடல் நிகழ்த்துவதற்காக எந்த நடனத்தில் சிறந்த பெண்களை நாடுகளிலிருந்து தேர்ந்தெடுத்து வர செய்தான்?
பதியிலார்
- பரதத்தில் ஒரு கை முத்திரை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இணையா வினைக்கை, பிண்டிக்கை
- பரதத்தில் இரு கை முத்திரை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
இணைக்கை, இரட்டைக்கை,பிணைக்கை
- விளையாட்டு என்பதன் பொருள் என்ன?
விரும்பி ஆடும் ஆட்டம்
- கெடவரல்,பண்ணை என இரண்டு வகையான விளையாட்டுகள் பற்றி குறிப்பிடும் நூல் ?
தொல்காப்பியம்
- சிறுமிகளை விலங்குகளிடமிருந்து காப்பது போல நடித்து விளையாடுவது எது?
கெடவரல்
- உழவர்கள் பயிர் செய்வது போல நடித்து விளையாடுவது எது?
விளையாட்டு
- எண்வகை, மெய்ப்பாட்டில் ஒன்றான உவகை நான்கு வழிகளிலும் தோன்றும் எனக் கூறுபவர் யார் ?
தொல்காப்பியர்
- குழந்தைகளுக்கான பத்து பருவங்களைக் கூறும் நூல் எது ?
பிள்ளைத்தமிழ்
- பிள்ளைத்தமிழ் எத்தனையாக வகைப்படுத்தப்படுகிறது?
2 ஆண்பாற் பிள்ளைத்தமிழ் & பெண்பாற் பிள்ளைத்தமிழ்
- ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
ஏழு
- சிற்றில், ஊசல் என்பன யார் விளையாடும் விளையாட்டுக்கள் ?
பெண்கள்
- சிறுமிகள் வட்டமாக அமர்ந்து பாடல் பாடி விளையாடுவது எது ?
அம்மானை
- சிறுமிகள் கல் வைத்து விளையாடும் விளையாட்டு எது ?
கழங்கு
- சிறுமிகள் பாடல் பாடிக்கொண்டு ஊஞ்சல் ஆடுவது எது ?
ஊசல்
- ஏறு தழுவுதல் பற்றிய குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?
முல்லைக்கலி
- ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளப்படும் காளையை எவ்வாறு அழைப்பர்?
சல்லி மாடு
- கம்புகளை அடித்து ஒலி எழுப்பும் விளையாட்டுக் என்ன பெயர்?
சிலம்பு
- எந்த ஓலை பட்டய செய்தியில் சிலம்பாட்டத்தின் தோற்றம் பற்றிய கதையாக கூறப்பட்டுள்ளது ?
நடசாரி
- உடலில் உள்ள வர்ம நாடிகளை நோக்கி அடிக்கும் சுவடு முறைக்கு என்ன பெயர் ?
தட்டுவர்மச் சுவடு
- ஒருவர் இடம் பார்த்து அடிப்பதும் அவ்வடியை இன்னொருவர் தடுப்பதும் என்ன விளையாட்டு முறை ?
அடிச்சுப் பிரிவு
- ஒருவர் கைகொண்டு அடுத்தவரை பூட்டிப் பிடிப்பதும் அப்பூட்டிலிருந்து பிடிபட்டவர் தம்மை விடுவித்துக் கொள்வதும் என்ன வகை விளையாட்டு முறை ?
பூட்டுப்பிரிவு
- சடுகுடு பாண்டிய நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
குட்டி
- சடுகுடு சோழ நாட்டில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பளிச்சப்பிளான்,பலீன் சடுகுடு
- சடுகுடுவில் மூச்சு பிடிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
பாட்டம
- பாடிச் செல்பவர் எவ்வாறு அழைக்கப்படுவர்?
கொம்பு சுற்றிப் பாடுபவன்
- சடுகுடுவில் பிடிபட்டவரின் எண்ணிக்கையை மட்டும் ஆட்ட இறுதியில் கணக்கில் கொள்ளும் ஆட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சஞ்சீவி ஆட்டம்
- சடுகுடுவில் பிடிபட்டவரை கடைசிவரை சேர்க்காமல் ஆட்டத்தை முடித்துக் கொள்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆடாது ஒழியும் ஆட்டம்
- பட்டை உரிக்கப்பட்ட மரம் எவ்வாறு அழைக்கப்படும் ?
உரிமரம்
- உரி ஏறுதல் விளையாட்டில் எந்த மரத்தை பயன்படுத்துவர் ?
கைப்பிடிக்கு அடங்காது படுத்திருக்கும் உதிய மரம்
- கில்லி விளையாட்டின் வேறு பெயர் என்ன?
புல்லுக்குச்சி ,கில்லி தாண்டு ,சில்லாங்குச்சி ,சிறிய குச்சி கில்லி ,பெரிய குச்சி தாண்டல்
11TH ETHICS STUDY NOTES |தமிழர் கலைகள்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services