- சமுதாயத்தில் வாழ்கின்ற மக்களின் ஒருமித்த நடத்தைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது எது?
பண்பாடு
- பண்பாடு எந்த வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது?
பண்படு
- பண்படு என்பதற்கு என்ன பொருள்?
சீர்படுத்துதல் ,செம்மைப்படுத்துதல்
- பண்பாடு என்ற சொல்லை தமிழில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
டி.கே சிதம்பரநாதனார்
- “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே” எனக் கூறும் நூல் எது?
தொல்காப்பியம்
- “பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” எனக் கூறும் நூல் எது ?
கலித்தொகை
- “பண்புடையார் பட்டுண்டு உலகம் ” எனக் கூறுபவர் யார் ?
திருவள்ளுவர்
- பண்பாட்டை வெளிப்படுத்தும் காரணிகளாக திகழ்வது எது ?
மனிதன் பேசும் மொழி, உணவு ,உடை, வாழ்க்கை முறை, செய்யும் தொழில், எண்ணங்கள்
- மாந்தனது அக உணர்வு வளர்ச்சியையும் சீர்மையும் குறிப்பது எது?
பண்பாடு
- மாந்தனது புறத்தோற்ற உணர்வு வளர்ச்சியின் செம்மையைக் குறிப்பது எது?
நாகரிகம்
- “யாதும் ஊரே யாவரும் கேளீர் “என கூறியவர் யார்?
கணியன் பூங்குன்றனார்
- சேர மன்னர்களின் வணிகமுறை ,ஆட்சிச்சிறப்பு, போர்த்திறம் ,கொடைத்திறம் முதலானவற்றை பற்றி விரிவாக விளக்கும் நூல் எது?
பதிற்றுப்பத்து
- பாண்டியர்களின் தலைநகரமாகிய மதுரையின் சிறப்பையும் ,வையை ஆற்றின் சிறப்பையும் திருமால் முருகன் போன்ற தெய்வங்களை வழிபடும் முறைகளையும் பற்றி பாடும் நூல் எது ?
பரிபாடல்
- பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்கள்?
ஐந்து நூல்கள்
- குறிஞ்சிப்பாட்டும் முல்லைப்பாட்டும் எதனை பற்றி பேசுகின்றது?
நிலவளம் ,காதலின் சிறப்பு
- பாண்டியன் நெடுஞ்செழியனின் சிறப்பை பற்றி கூறும் நூல் எது?
மதுரைக்காஞ்சி
- சோழநாட்டு தரைவழி வணிகத்தாலும் கடல்வழி ழடிகத்தாலும் வளம் பெற்றிருந்ததனை “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என குறிப்பிடும் நூல் எது ?
பட்டினப்பாலை
- பல்வேறு குற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதன் மூலமே குற்ற செயல்களை தடுத்து நிறுத்த முடியும் எனக்கும் கூறுவது எந்த நூலின் மையக் கருத்து?
மணிமேகலை
- ரோமாபுரி அரசன் அகஸ்டஸின் சமகாலத்தவரான ஸ்டிராபோ என்ற நூலை எழுதியுள்ளார்?
பூகோள நூல்
- அரிசி எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அரிஸா
- கருவா (இலவங்கம்) எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கார்ப்பியன்
- இஞ்சிவேர் எனும் தமிழ்ச் சொல் கிரேக்கத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சின்ஞிபேராஸ்
- ஹிப்பாகிரேட்டஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க மருத்துவர் வாழ்ந்த காலகட்டம் என்ன?
கிமு ஐந்தாம் நூற்றாண்டு
- ஹிப்பாகிரேட்டஸ் மிளகை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ?
இந்திய மருந்து
- சோழர் கால கிராம ஆட்சி முறையை தெளிவாக எடுத்துக்காட்டும் கல்வெட்டு?
உத்திரமேரூர் கல்வெட்டு
- உத்திரமேரூர் கல்வெட்டு யாருடையது?
பராந்தக சோழன்
- பொன், செம்பு ஆகிய உலோகத் தகடுகளின் மீது எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.அவற்றுக்கு என்ன பெயர் ?
பட்டயங்கள்
- வேள்விக்குடி பட்டயம், தளவாய்புரச்செப்பேடு ,சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடுகள் முதலியவை யாருடைய காலத்தவை?
பாண்டியர்கள்
- திருவாலங்காட்டுப் பட்டயங்கள் ,கரந்தை செப்பேடுகள் ,அன்பில் பட்டயங்கள் ,லெய்டன் பட்டயங்கள் போன்றவை யாருடைய காலத்தவை?
சோழர் காலம்
- பல்லவர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் என்ன சின்னங்கள் காணப்படுகின்றன?
இரட்டை மீன் ,கப்பல் ,நந்தி
- முதலாம் ராஜராஜன் காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் என்ன வடிவங்கள் காணப்படுகின்றன?
புலியும் இரட்டை மீன் வடிவங்களும்
- “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” எனக் குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
- “வினையே ஆடவர்க்கு உயிரே ” என குறிப்பிடும் நூல் எது ?
குறுந்தொகை
- அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளை எந்த நூல் விரிவாக விளக்குகிறது?
தொல்காப்பியப் பொருளதிகாரம்
- குறிஞ்சி என்பது எதைச் சார்ந்த நிலம்?
மலையும் மலை சார்ந்த இடமும்
- குறிஞ்சியின் சிறுபொழுது என்ன?
யாமம்
- குறிஞ்சியின் பெரும்பொழுது என்ன ?
கூதிர் ,முன்பனி
- குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- முல்லை என்பது எதைச் சார்ந்த நிலம்?
காடும் காடு சார்ந்த இடமும்
- முல்லைத் திணையின் சிறுபொழுது என்ன?
மாலை
- முல்லைத் திணையின் பெரும்பொழுது என்ன?
கார்
- முல்லைத் திணையின் உரிப்பொருள் என்ன?
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
- மருதம் என்பது எதை சார்ந்த நிலம் ?
வயலும் வயல் சார்ந்த இடமும்
- மருதத் திணையின் சிறுபொழுது என்ன?
வைகறை
- மருதத் திணையின் பெரும்பொழுது என்ன?
கார் ,கூதிர் ,முன்பனி, பின்பனி ,இளவேனில் ,முதுவேனில்
- மருதத் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?
ஊடலும் ஊடல் நிமித்தமும்
- நெய்தல் திணை எந்த நிலத்தைச் சார்ந்தது?
கடலும் கடல் சார்ந்த இடமும்
- நெய்தல் திணைக்கு உரிய சிறுபொழுது என்ன?
எற்பாடு
- நெய்தல் திணைக்குரிய பெரும்பொழுது என்ன?
கார் ,கூதிர் ,முன்பனி, பின்பனி ,இளவேனில் ,முதுவேனில்
- நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் என்ன?
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
- பாலை திணைக்குரிய சிறுபொழுது என்ன?
மணலும் மணல் சார்ந்த இடமும்
- பாலை திணைக்குரிய சிறுபொழுது என்ன ?
நண்பகல்
- பாலை திணைக்குரிய பெரும்பொழுது என்ன?
இளவேனில், முதுவேனில் ,பின்பனி
- பாலை திணைக்குரிய உரிப்பொருள் என்ன?
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- புறத்தார் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவது ?
புறத்திணை
- தொல்காப்பியம் புறத்திணையை எத்தனையாக பகுத்துள்ளது?
ஏழு
- புறப்பொருள் வெண்பாமாலை புறத்திணையை எத்தனையாக வகுத்துள்ளது?
12
- போருக்கான காரணங்களையும் போர் நடைபெறும் முறைகளையும் பற்றி கூறும் புறத்திணைகள் என்னென்ன?
8 : வெட்சி, கரந்தை, வஞ்சி,காஞ்சி ,உழிஞை, நொச்சி, தும்பை ,வாகை
- மன்னனின் வீரம் ,கொடை, புகழ் முதலானவற்றை சிறப்பித்து பாடுவது என்ன திணை?
பாடாண் திணை
- “விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?
தொல்காப்பியம்
- “தொல்லோர் சிறப்பின்” என்று விருந்துக்கு அடை கொடுத்து கூறியவர் யார்?
இளங்கோவடிகள்
- “இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனரா என பார்ப்பர் அவ்வாறு இருப்பின் வரவேற்று உணவு அளிப்பர்” என்ற செய்தி எந்த பாடலின் மூலம் அறியப்படுகிறது?
நற்றிணை
- பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளை எது குறிப்பிடுகிறது?
மடைநூல்
- பேகன் ஆட்சி செய்த பகுதி எது?
பழனிமலை
- பேகன் எதற்காக புகழப்படுகிறார் ?
மயிலுக்கு போர்வை தந்தவர்
- பாரி ஆட்சி செய்த பகுதி எது ?
பறம்புமலை
- பாரி எதனால் போற்றப்படுகிறார் ?
முல்லைக் கொடி படர்வதற்கு தன் தேரையே தந்ததால்
- திருமுடிக்காரி ஆட்சி செய்த பகுதி எது?
மலையமா நாடு
- திருமுடிக்காரி எதனால் போற்றப்படுகிறார்?
குதிரைகளை பரிசாக வழங்கியதால்
- ஆய் அண்டிரன் ஆட்சி செய்த பகுதி எது ?
பொதியமலை
- ஆய் அண்டிரன் எதனால் போற்றப்படுகிறார்?
நீல நாகத்தின் உடையை இறைவனுக்கு போர்த்தியதால்
- அதியமான் ஆட்சி செய்த பகுதி எது?
தகடூர்
- அதியமான் எதனால் போற்றப்படுகிறார்?
அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர்
- நள்ளி ஆட்சி செய்த பகுதி எது?
கண்டீர மலை
- நள்ளி எதனால் போற்றப்படுகிறார்?
மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருட்களையும் வழங்கியதால்
- வல்வில் ஓரி ஆட்சி செய்த பகுதி எது?
கொல்லிமலை
- வல்வில் ஓரி எதனால் போற்றப்படுகிறார்?
யாழ் மீட்டும் பாணர்களுக்கு பரிசு வழங்கியதால்
- ஆன்மா தான் எதிலிருந்து வந்ததோ அதிலே சேர முயன்று வருதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
லயமாகுதல்
- “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று கூறியவர் யார்?
அவ்வையார்
- ஆடவல்ல நடன மகளிர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
விறலி
- குன்றக்குரவை யாரை வழிபடுவது?
முருகன்
- ஆய்ச்சியர் குரவை யாரை வழிபடுவது?
திருமால்
- சிவன் ஆடுகின்ற கூத்து எவ்வாறு அழைக்கப்படும்?
தாண்டவம்
- தமிழர் பொங்கல் விழா வட இந்தியாவில் என்னவாக கொண்டாடப்படுகிறது ?
மகரசங்கராந்தி
- வேளாண்மை செழிக்க உதவிய எந்த ஆற்றுக்காக ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடுகின்றனர்?
காவிரி ஆறு
- இந்திர விழா சங்க காலத்தில் சிறந்திருந்தது என்பதை எந்த நூல் வாயிலாக அறியலாம்?
சிலப்பதிகாரம்
- பரதநாட்டியத்தில் ஒரு முக்கிய கூறான கை அசைவுகள் சமஸ்கிருதத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹஸ்தம்
- பரத நாட்டியத்தில் அடவு அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது எது?
முத்திரைகள்
11TH ETHICS STUDY NOTES |தமிழக பண்பாடு ஓர் அறிமுகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services