TNPSC MCQ ONLINE TEST BATCH @JUST ₹99/-:CLICK HERE
- சிந்துவெளி நகர நாகரிகம் எப்போது முதன் முதலில் கண்டறியப்பட்டது?
1921
- எந்த ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்பொருள் சின்னம் ஹரப்பா எனப்படுவதாகும்?
ரவி -சட்லெஜ்
- எந்த ஆண்டு சிந்து மாகாணத்தின் லர்க்கானா மாவட்டத்தில் 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது?
1922
- சிந்து மாகாணத்தின் லர்க்கானா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயரமான மண்மேடு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
மொகஞ்சதாரோ
- சிந்து நாகரிகத்தின் காலம் கிமு 3250 முதல் கிமு 2750 வரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டவர் யார்?
சர் ஜான் மார்ஷல்
- தமிழ்நாட்டில் உள்ள எந்த இடப்பெயர்கள் தற்போதைய பாகிஸ்தானிலும் வழக்கத்தில் உள்ளன?
ஆரணி ,கொற்கை, மைலம்,
மானூர்,நாகல், தொண்டி,கண்டிகை
- தமிழ்நாட்டில் உள்ள எந்த இடப்பெயர்கள் தற்போதைய ஆப்கானிஸ்தானிலும் வழக்கத்தில் உள்ளன ?
ஆலூர்,ஆசூர்,படூர்,இஞ்சூர்,குந்தா,நாகல்,தானூர்,செஞ்சி
- பலுசிஸ்தானில் என்ன திராவிட மொழி இன்று வரை பேசப்பட்டு வருகிறது?
பிராகுயி
- பண்டைய காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த யவனர்கள் தமிழ் நாட்டை எவ்வாறு அழைத்தனர்?
திரிமிளிகே
- காஞ்சியை ஆட்சி செய்த எந்த அரசர் தமிழ் அரசர்களை திராவிட மன்னர்கள் என குறிப்பிட்டுள்ளார்?
நந்திவர்ம பல்லவன்
- மதுரா விஜயம் என்ற நூலை எழுதியவர் யார்?
கங்காதேவி
- கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் என்ற நூலில் தமிழ்நாட்டை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார்?
திராவிட தேசம் (தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்)
- யார் சிந்து வெளி நாகரீக தொல்பொருள் ஆய்வை விரிவுபடுத்தி அது நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தார்?
சர்.மார்டிமர் வீலர்
- கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
சிவகங்கை
- சிந்து நாகரிகத்தின் நகரத் தெருக்கள் எவ்வாறு அமைந்திருந்தன?
கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும்
- சிந்து நாகரிகத்தில் பெரிய தெருக்கள் எத்தனை அடி அகலம் கொண்டதாக இருந்தன?
33 அடி
- சிந்து நாகரிகத்தில் சிறிய தெருக்கள் எத்தனை அடி அகலம் கொண்டதாக இருந்தன?
9 அடி முதல் 12 அடி வரை
- சிந்து நாகரீகத்தில் எந்த திசையில் மேடான நிலத்தில் கோட்டை அமையப் பெற்றிருந்தது?
மேற்கு திசை
- சிந்து நாகரீகத்தில் எந்த திசையில் குடியிருப்பு பகுதி பெற்றிருந்தது?
கிழக்கு திசை
- கிணற்றுச்சுவர் , சாக்கடைச்சுவர் போன்ற வளைந்த சுவர்கள் கட்டுவதற்கு என்ன செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன?
ஆப்பு வடிவச் செங்கற்கள்
- சிந்து நாகரிகத்தில் குளத்தின் தரைப்பகுதியில் நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக என்ன பசையால் பூசப்பட்டிருந்தது?
நீலக்கீல்(Bitumen)
- ஹரப்பாவில் இருக்கும் தானிய களஞ்சியத்தின் நீளம் எவ்வளவு ?
168 அடி நீளம் 135 அடி அகலம்
- ஹரப்பாவில் இருக்கும்தானியக் களஞ்சியத்தின் சுவர்கள் இரண்டு வரிசைகளாக கட்டப்பட்டிருந்தன இவ்விரண்டு வரிசைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு ?
23 அடி
- இந்த இரு சுவர்களுக்கு ஒவ்வொரு வரிசையிலும் எத்தனை மண்டபங்கள் இருந்தன?
ஆறு மண்டபங்கள்
- சிந்துவெளி மக்கள் கண், காது ,தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் செய்வதற்கு என்ன மீனின் எலும்புகளை பயன்படுத்தினர்?
கட்டில்
- முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் எந்தப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ?
அத்திரப்பாக்கம்,அரிக்கமேடு ,ஆதிச்சநல்லூர் ,திருக்காம்புலியூர் ,தாமிரபரணி ஆற்றங்கரை
- இறந்தவர்களை எந்த திசையில் புதைக்கும் வழக்கம் சிந்துவெளிக்கும் பண்டைய தமிழகத்திற்கும் பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது ?
வடக்கு தெற்காக புதைப்பது
- சிந்துவெளி மக்களின் முதன்மைத் தொழிலாக எது இருந்தது ?
வேளாண்மை
- சிந்துவெளி மக்கள் என்ன உலோகங்களை பயன்படுத்தினர் ?
தங்கம் ,பித்தளை ,வெள்ளி
- சிந்துவெளி மக்கள் நீளத்தை அளக்க என்ன முறையை பயன்படுத்தினர்?
அடி முறை
- சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க என்ன அளவுகோலைப் பயன்படுத்தினர்?
வெண்கல அளவுகோலை
- சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது?
தாய்த்தெய்வ வழிபாடு
- ஹரப்பாவில் கண்டெடுத்த முத்திரைகளில் ஒன்றான மகா யோகியின் (பசுபதி) முத்திரையில் என்ன உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன ?
யானை ,புலி ஆகியவற்றின் உருவங்கள் வலப்புறமாகவும் காண்டாமிருகம் ,எருமை ஆகியவற்றின் உருவங்கள் இடப்புறமாக அமைந்துள்ளன.
- விலங்குகளின் கடவுள் எவ்வாறு அழைக்கப்படுகிறார் ?
பசுபதி
- யோகிகளின் கடவுள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
யோகேசுவரன்
- சிந்துவெளி மக்கள் என்ன வழிபாடு செய்து வந்துள்ளனர் என முத்திரைகள் மூலம் அறியப்படுகிறது?
ஆற்றுவணக்கம் (அ) ஆற்றுவழிபாடு
- சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை முதன்மையாக வழிபட்டனர்?
அரசமரம்
- சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சித்திர எழுத்துக்கள்
- சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத்தில் எங்கு உள்ள எழுத்துக்களோடு தொடர்புடையதாக காணப்படுகிறது? கீழ்வாலை,குளிர்சுனை,புறக்கல்,ஆலம்பாடி,செத்தவாரை, நேகனூராபட்டி
- சிந்து வெளியில் எவ்வளவு முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன?
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள்
- ஹரப்பா எங்கு அமைந்துள்ளது ?
ராவி நதியோரம் ,மேற்கு வங்காளம் ( தற்போதைய பாகிஸ்தான் )
- மொகஞ்சதாரோ எங்கு அமைந்துள்ளது ?
சிந்து நதியோரம், மேற்கு பஞ்சாப் (தற்போதைய பாகிஸ்தான்)
- ரூபார் எங்கு அமைந்துள்ளது?
சட்லெஜ் நதியோரம் ,பஞ்சாப்
- லோத்தல் எங்கு அமைந்துள்ளது?
சட்லெஜ் நதியோரம், குஜராத்
- காலிபங்கன் எங்கு அமைந்துள்ளது?
காகர் நதி தென் கரையோரம் ,இராஜஸ்தான்
- சாகுந்தாரோ எங்கு அமைந்துள்ளது?
சரஸ்வதி நதியோரம் , இராஜஸ்தான்
- தோல்வீரா எங்கு அமைந்துள்ளது?
கபீர் மாவட்டம், குஜராத்
- கோட்டிஜி எங்கு அமைந்துள்ளது?
சிந்து மாகாணம்
- பனவாலி எங்கு அமைந்துள்ளது?
ஹரியானா
- சுர்கோட்டா எங்கு அமைந்துள்ளது?
குஜராத்
- லோத்தல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
அகமதாபாத் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது S.R ராவ் என்பவரால்
- உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் எது?
லோத்தல்
11TH ETHICS STUDY NOTES |சிந்துவெளி நாகரிகம்| TNPSC GROUP EXAMS
free test,daily current affairs with shortcuts,subjectwise materials,notes,free online test,and other best learning tnpsc ,UPSC,SSC,RAILWAY competitve exams.TNPSC GROUP 1,TNPSC GROUP 2/2A,TNPSC GROUP III,TNPSC GROUP 4,TNPSC GROUP VIII TESTS,ANSWER KEY,Health Officer In Tamil Nadu Public Health Service Exam, Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service, Sub- Inspector Of Fisheries In Fisheries Department In Tamil Nadu Fisheries Subordinate Service,Combined Statistical Subordinate Services In Examination, Combined Civil Services Examination- Iii In Group- Iii.A Services, Jailor (Men) & Jailor (Special Prision For Women) In The Tamil Nadu Jail Service,, English Reporter And Tamil Reporter In Tamil Nadu Legislative Assembly Secretariat Service, Forest Apprentice (Group- Vi Services) In Tamil Nadu Forest Subordinate Service, Field Surveyor, Draftsman And Surveyor-Cum-Assistant Draughtsman In Tamil Nadu Survey And Land Records Subordinate Service & Tamil Nadu Town And Country Planning Subordinate Service, Combined Civil Services Examination- I In Group- I Services, Executive Officer, Grade- Iv (Group- Viii Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Executive Officer, Grade- Iii (Group- Vii- B Services) In Tamil Nadu Hindu Religious And Charitable Endowments Subordinate Service, Combined Engineering Services In Examination, Combined Civil Services Examination-Iv In Group-Iv Services, Combined Civil Services Examination-Ii (Interview Posts And Non-Interview Posts) In Group-Ii And Iia Services